Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, குமாரசாமி said:

புத்த சாம்ராஜ்ஜியங்களுக்கு சென்று மாலை அணிவுப்புகள் பெற்றிருக்கின்றார்.

அதுவும்  மோடி கொடுத்த ஆலோசனைதான். பின்னர், அனுரா நாட்டுக்கு திரும்பி வரவேண்டாமோ? இந்து ஆலயங்களை தரிசிக்கவில்லையா இந்தியாவை (மோடியை) மகிழ்விக்க?

  • Replies 53
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 minutes ago, satan said:

அதுவும்  மோடி கொடுத்த ஆலோசனைதான். பின்னர், அனுரா நாட்டுக்கு திரும்பி வரவேண்டாமோ? இந்து ஆலயங்களை தரிசிக்கவில்லையா இந்தியாவை (மோடியை) மகிழ்விக்க?

அதென்றால் உண்மைதான்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, satan said:

அதுவும்  மோடி கொடுத்த ஆலோசனைதான். பின்னர், அனுரா நாட்டுக்கு திரும்பி வரவேண்டாமோ? இந்து ஆலயங்களை தரிசிக்கவில்லையா இந்தியாவை (மோடியை) மகிழ்விக்க?

மகிந்த மாதிரி திருப்பதிக்குப் போகலையோ?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, ஈழப்பிரியன் said:

மகிந்த மாதிரி திருப்பதிக்குப் போகலையோ?

அய்யா அநுரகுமார திசாநாயக்க கொள்கைவாதியாம் அதனால் அவர்களின் புத்தர் இருக்க பிற தெய்வங்களை வணங்க மாட்டார்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடைநிலை ஆட்டக்காரர்களால் ஃபலோ ஒன்னைத் தவிர்த்தது இந்தியா 17 DEC, 2024 | 04:52 PM    (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை ஆட்டக்காரர்களின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்களால் ஃபலோ ஒன்னை (Follow on) இந்தியா தவிர்த்துக்கொண்டது. பல தடவைகள் மழையினால் பாதிக்கப்பட்ட இப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களிலிருந்து  இந்தியா  தொடர்ந்தது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கே.எல். ராகுல் 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தைரியத்தைக் கொடுத்தார். ராகுல் 84 ஓட்டங்களையும் ஜடேஜா 76 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்த எண்ணிக்கை 213 ஓட்டங்களாக இருந்தபோது ஜடேஜா 9ஆவதாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்தியா பலோன் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், கடைநிலை வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (10 ஆ.இ.), ஆகாஷ் தீப் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் பலோ ஒன்னைத் தவிர்த்தனர். பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவுஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைக் குவித்தது. ட்ரவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 101 ஒட்டங்களையும் அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியில் ஒரு நாள் மாத்திரம் மீதம் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/201530
    • 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/313867
    • டிம் சௌதிக்கு ஆறுதல் வெற்றியுடன் பிரியாவிடை கொடுத்து நியூஸிலாந்து 17 DEC, 2024 | 12:45 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 423 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றியீட்டிய நியூஸிலாந்து, அந்த வெற்றியுடன் தனது சிரேஷ்ட வீரர் டிம் சௌதீக்கு பிரியாவிடை கொடுத்தது. இந்த வெற்றியானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாதின் மிகப் பெரிய வெற்றியை சமன் செய்வதாக அமைந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து 423 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 658 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, போட்டியின் நான்காம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 2 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட  க்ரோ - தோர்ப் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது. நியூஸிலாந்து மண்ணில் 2008க்குப் பின்னர் இங்கிலாந்து ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும். ஜேக்கப் பெத்தெல் (76), ஜோ ரூட் (54) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை தாமதம் அடையச் செய்தனர். பகல போசன இடைவேளைக்கு சற்று பின்னர் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதை காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை. பெத்தெல், ரூட் ஆகியோரைவிட கஸ் அட்கின்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு எவரும் 20 ஓட்டங்களை நெருங்கவில்லை. தனது கடைசி இன்னிங்ஸில் டிம் சௌதீ 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 347 (மிச்செல் சென்ட்னர் 76, டொம் லெதம் 63, கேன் வில்லியம்சன் 44, வில் யங் 42, மெத்யூ பொட்ஸ் 90 - 4 விக்., கஸ் அட்கின்சன் 66 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோ ரூட் 32, பென் ஸ்டோக்ஸ் 27, மெட் ஹென்றி 48 - 4 விக்., மிச்செல் சென்ட்னர் 7 - 3 விக்., வில் ஓ'ப்றூக் 33 - 3 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (கேன் வில்லியம்சன் 156, வில் யங் 60, டெரில் மிச்செல் 60, மிச்செல் சென்ட்னர் 49, டொம் ப்ளன்டெல் 44 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 44, ஜேக்கப் பெத்தெல் 72 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 52 - 2 விக்., ஷொயெப் பஷிர் 170 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 658 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 234 (ஜேக்கப் பெத்தெல் 76, ஜோ ரூட் 54, கஸ் அட்கின்சன் 43, மிச்செல் சென்ட்னர் 85 - 4 விக்., டிம் சௌதீ 34 - 2 விக்., மெட் ஹென்றி 62 - 2 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் சென்டனர். தொடர்நாயகன்: ஹெரி ப்றூக். https://www.virakesari.lk/article/201496
    • தமிழரசு கட்சியை... சல்லி, சல்லியாய் நொருக்கி...   சந்தி சிரிக்க வைத்துக் கொண்டு இருப்பவரும்,   தமிழரசு கட்சியை நீதிமன்றத்தில் நிறுத்தியவரும்...  வெட்கம், ரோசம், மானம், சூடு, சுரணை இல்லாமல்  படத்தில்... பல்லைக் காட்டிக் கொண்டு நிற்கிறார்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.