Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பஷர் அல்-அசாத்தின் ஆட்சியில் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்!

%E0%AE%AA%E0%AE%B7%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+25+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%21

பதவியிலிருந்து விலக்கப்பட்ட சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக் காலத்தில், சுமார் 25 கோடி அமெரிக்க டொலர்கள் ரஷ்யாவிற்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக 'பைனான்சியல் ரைம்ஸ்' விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு பகுதியில் இந்த பரிவர்த்தனை நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன. 

100 டொலர் நாணயங்கள், மற்றும் 500 யூரோ நோட்டுக்களைக் கொண்ட தொகுதியாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் விபரங்கள் தெரிவிக்கின்றன. 

ரஷ்யாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட இந்த பணத்தொகை, மொஸ்க்கோவில் உள்ள வங்கியில் வைப்பிடப்பட்டன.

இந்த நிலையில் ரஷ்யாவில் உள்ள அசாத்தின் உறவினர்கள், ரகசியமாக சொத்துக்களை வாங்கியதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பணபரிமாற்றல்கள் சட்டவிரோதமாக எடுத்துச் செல்லப்பட்டதற்கு இது நல்லதொரு உதாரணம் என 'பைனான்சியல் ரைம்ஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேவேளை,கடந்த 2011 ஆம் ஆண்டு சிரிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் இடம்பெற்றன. 

இந்த போராட்டங்களை அடக்குவதற்கு இராணுவத்தின் பலத்தை அவர் உபயோகித்தார். 

அந்த காலகட்டத்தில் 5 லட்சம் மக்கள் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் இடம்பெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
 
https://www.hirunews.lk/tamil/390949/பஷர்-அல்-அசாத்தின்-ஆட்சியில்-25-கோடி-அமெரிக்க-டொலர்கள்-ரஷ்யாவிற்கு-எடுத்துச்-செல்லப்பட்டுள்ளதாக-தகவல்

  • கருத்துக்கள உறவுகள்

செத்தகிளிக்கு 25 கோடி அமெரிக்க டொலர் லாட்டரி அடிச்சிருக்கு😂 அதைக்கூட ரூபிளில் சொல்லமுடியலை!😂

  • கருத்துக்கள உறவுகள்

25 கோடி அமெரிக்க டாலர்கள் என்பது சிறிய தொகை........... 2000 கோடி இந்திய ரூபாய்கள்.

உதாரணமாக, தமிழ்நாடு டாஸ்மாக்  விற்பனை வரி மற்றும் கலால் வரியாக மட்டும் கடந்த ஒரு வருடத்தில் பெற்ற தொகை: 45855 கோடிகள். புத்தகத்திலேயே இவ்வளவு இருக்கின்றது என்றால், தமிழ்நாட்டிலேயே அரசியல்வாதிகளின் பெட்டகங்களுக்கு எவ்வளவு போகும்..............

அசாத்திற்கு அவரது பங்காக கடைசி வருடத்தில் கூட சில பில்லியன் டாலர்கள் கிடைத்ததாக, அந்த மருந்துப் பொருள் விற்பனை மூலம், தகவல் வெளியாகி இருந்தது.

அசாத்தும் , குடும்பமும் அதை ரஷ்யாவிற்குள் கொண்டு போயிருக்கமாட்டார்கள். பெரும் தொகையை  வேறு எங்கோ அனுப்பி இருக்கின்றார்கள்.................. அவர்களின் உயிர்களுக்கு அதுவேதான் உத்தரவாதம் ஆகக்கூட இருக்கலாம்.................     

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, வாலி said:

செத்தகிளிக்கு 25 கோடி அமெரிக்க டொலர் லாட்டரி அடிச்சிருக்கு😂 அதைக்கூட ரூபிளில் சொல்லமுடியலை!😂

நம்ம டென்மார்க்கு துரையின் செய்தியின்படி 25 டன் தங்கத்தையும் அமுக்கிட்டாராமே...அப்ப புடினுக்கு கொண்டாட்டம்தான்

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

சில சுவாரசியமான தகவல்கள்:

1. அசாத் இலண்டனில் ஒரு கான்சர் டாக்டர் (ஒன்கோலொஜிஸ்ட்) வேலை பார்த்த சமயம் இங்கே பிறந்து வளர்ந்த சிரிய பெண்ணை மணம் முடித்தார். மாமனார் குடும்பமும் இங்கேதான்.

அப்போதெல்லாம் அதிர்ந்து பேசாத, தானுண்டு வேலை உண்டு என இருக்கும் மனிதனாம் அசாத்.

இவரின் சகோதரந்தான் அரசியல்வாரிசாக வளர்க்கப்பட்டார். அவர் கார் விபத்தில் இறக்க இவர் சிரியா போய் அவர் இடத்தை நிரவினார்.

2. அசாத் ரஸ்யாவில் கிட்டதட்ட பணய கைதியாக இருக்கிறாரோ என நான் நினைக்கிறேன். சிரிய அதிபரின் டெலிகிராம் சேனலில் அசாத்தினது என ஒரு அறிக்கை வந்துள்ளதாம் -அதில், தான் எப்போதும் நாட்டை விட்டு ஓட முயலவில்லை, சிரியாவில் உள்ள ரஸ்ய தளத்தை மேற்பார்வை செய்ய சென்ற இடத்தில், ரஸ்யர்கள் எனது பாதுகாப்புக்கு இதுவே சரியான முடிவு என கருதி என்னை மஸ்கோ அனுப்பினர் என எழுதியுள்ளாராம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, goshan_che said:

சில சுவாரசியமான தகவல்கள்:

இதுவும் கண்ணிலை பட்டுடிச்சா.....அசாத் துலைஞ்சான்...😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, goshan_che said:

சில சுவாரசியமான தகவல்கள்:

1. அசாத் இலண்டனில் ஒரு கான்சர் டாக்டர் (ஒன்கோலொஜிஸ்ட்) வேலை பார்த்த சமயம் இங்கே பிறந்து வளர்ந்த சிரிய பெண்ணை மணம் முடித்தார். மாமனார் குடும்பமும் இங்கேதான்.

அப்போதெல்லாம் அதிர்ந்து பேசாத, தானுண்டு வேலை உண்டு என இருக்கும் மனிதனாம் அசாத்.

இவரின் சகோதரந்தான் அரசியல்வாரிசாக வளர்க்கப்பட்டார். அவர் கார் விபத்தில் இறக்க இவர் சிரியா போய் அவர் இடத்தை நிரவினார்.

2. அசாத் ரஸ்யாவில் கிட்டதட்ட பணய கைதியாக இருக்கிறாரோ என நான் நினைக்கிறேன். சிரிய அதிபரின் டெலிகிராம் சேனலில் அசாத்தினது என ஒரு அறிக்கை வந்துள்ளதாம் -அதில், தான் எப்போதும் நாட்டை விட்டு ஓட முயலவில்லை, சிரியாவில் உள்ள ரஸ்ய தளத்தை மேற்பார்வை செய்ய சென்ற இடத்தில், ரஸ்யர்கள் எனது பாதுகாப்புக்கு இதுவே சரியான முடிவு என கருதி என்னை மஸ்கோ அனுப்பினர் என எழுதியுள்ளாராம்.

அசாத் அரபு மண் அரசியல் செய்தவர்.ஐரோப்பிய அரசியல் அரேபியர்களுக்கு சரி வராது. இதுவும்  பல அரேபிய பிரச்சனைகளுக்கு காரணம்.

இணக்க வியாபார அரசியல் சிறந்தது. இதை ஜேர்மனியர்கள் திறம்பட செய்தார்கள். அது அமெரிக்கர்களுக்கு தாங்க முடியவில்லை. அதனால் ஐரோப்பாவிலும் தீ மூட்டி விட்டார்கள்.

கவனித்து பாருங்கள் அரேபியர்கள் ஐரோப்பியர் பக்கம் சார்ந்தால் அமெரிக்கர்களுக்கு துண்டற பிடிக்கவே பிடிக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

அசாத் அரபு மண் அரசியல் செய்தவர்.ஐரோப்பிய அரசியல் அரேபியர்களுக்கு சரி வராது. இதுவும்  பல அரேபிய பிரச்சனைகளுக்கு காரணம்.

இணக்க வியாபார அரசியல் சிறந்தது. இதை ஜேர்மனியர்கள் திறம்பட செய்தார்கள். அது அமெரிக்கர்களுக்கு தாங்க முடியவில்லை. அதனால் ஐரோப்பாவிலும் தீ மூட்டி விட்டார்கள்.

கவனித்து பாருங்கள் அரேபியர்கள் ஐரோப்பியர் பக்கம் சார்ந்தால் அமெரிக்கர்களுக்கு துண்டற பிடிக்கவே பிடிக்காது.

உண்மையில் எனக்கு ஐரோப்பா ஒரு நட்பு சக்தியாக இருக்கும் ரஸ்யாவையும் சேர்த்து கொண்டு அமெரிக்காவுக்கு நிகரான பொருளாதார சக்தியாக வளர்வதில் விருப்பம் உண்டு.

2008 ஆண்டு கிட்டதட்ட சமனாக இருந்த ஈயூ அமேரிக்க பொருளாதாரங்கள் இப்போ 1:3.

ஆனால் புட்டின் இருக்கும் மட்டும் இது சரிவராது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.