103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
By
ஏராளன்
in ஊர்ப் புதினம்
Share
-
Tell a friend
-
Topics
-
Posts
-
அனுபவத்தில் வேலை பழகலாம் என்பதற்கு சில உதாரணங்கள்: சமீபத்தில் இரண்டு தடவைகள் இது செய்திகளில் வந்து இருந்தது. தமிழ்நாட்டில் மருத்துவமனை துப்பரவு பணியாளர்கள் நோயாளிகளுக்கு ஊசி குத்து ஐவியினூடாக திரவங்கள் ஏற்றியிருந்தார்கள். இப்பொழுது விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது. இன்னொரு நிகழ்வில், மருத்துவரும் தாதிகளும் இல்லாமல், இவர்களே ஒரு பிரசவம் பார்த்தது. இங்கேயும் விசாரணை போய்க் கொண்டிருக்கின்றது. நான் சிறுவயதில் இருந்த போது எங்களூரில் மிகக் கைராசியான 'பரியாரி' ஒரு மருத்துவரே அல்ல. அவர் ஒரு மருத்துவமனை ஊழியர். வீட்டில் வைத்து மருந்து கொடுத்தார், கட்டுப் போட்டர்,................ நானும் போயிருக்கின்றேன். நான் மருத்துவமனையில் வேலை செய்யவும் இல்லை, உயிரியல் படிக்கவும் இல்லை......... ஆனால், கிட்டத்தட்ட எந்த நோய்க்கும் மருந்து சொல்லும் அளவிற்கு தகவல்களை, புத்தகங்களை வாசித்து வைத்திருக்கின்றேன். முதற்கட்டமாக சிலரை தேடிக் கொண்டிருக்கின்றேன்................🤣🤣.
-
இல்லை, தனிப்பட்ட ரீதியில் சட்ட ரீதியான பொறுப்புக்கூறல், அதனால்தான் வேலையில் இருந்து ஓய்வு பெற்றாலும் அதற்கான பொறுப்பு கூறல் இருக்கும் என குறிப்பிட்டேன். நிறுவனங்கள் வெறுமனே ஒவ்வொருவரையும் கை நீட்டி தப்பி விடுவதற்காகவே அனைத்து செயற்பாடுகளும் ஆவணப்படுத்தப்படுகின்றது நீங்கள் கையெழுத்திடும் ( இலத்திரனியல் உள்ளடங்கலாக) ஆவணங்கள் சுகாதார திணைக்களத்தினால் பாதுகாக்கப்படுகின்றது. நான் சும்மா விதண்டாவாதத்திற்காக அவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும் என கூறவில்லை, அவர்கள் தமது பொறுப்புணர்ந்து செயற்படுவார்கள், தவறு செய்தால் அதனால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
-
உங்களின் responsibility கம்பனிக்கு மட்டும் தான், சட்ட responsibility கம்பனிக்கு. பொதுவாக responsibility க்கு சட்ட வலு /பிடி இல்லை, duty என்பதற்கு உள்ள சட்ட பிடி / வலு போல. உங்களுக்கு வந்தால், கம்பனியின் முறையை (instruction) பாவித்து, , assurance level க்கு ஏற்ப, கம்பனி ஏற்றுக்கொள்ளும் இயங்கு அபாய மட்டத்துக்கு (இதை அந்த இயங்கு அபாயத்தை கண்காணிக்கும் பிரிவு உறுதிசெய்யும் ) ஏற்ப எனது முடிவு. உங்களின் முடிவு அந்த மட்டம், அல்லது அதற்குள் இருத்தல் வேண்டும். பொறுப்பு (responsibility) எடுக்காததன் காரணம் பொதுவாக கம்பனிகளில், சிறு தவறுக்கும், வேலை நீக்கம், பணி இறக்குதல், சம்பளத்தை குறைதல். கட்டுப்பாடு நடவடிக்கைகள் (disciplinary action) போன்றவை.
-
நான் படம் இன்று திரையில் பார்த்தேன். ஒரு தலைவரை விட சித்தாந்தம் முக்கியம் என்று சொல்லும் இடம் பிடித்திருந்தது. பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது.. விடுதலை-2 திரைப்பட விமர்சனம் BookDay21/12/2024 விடுதலை-2 திரைப்பட விமர்சனம் அங்குமிங்குமாக சில காட்சிகள் என்றில்லாமல் நேரடியாகவே இடதுசாரி அரசியலை பேசுகிறது விடுதலை.. கைது செய்து கைவிலங்கிட்டு ஒரு இரவு முழுவதும் காட்டில் நடந்து கொண்டே வாத்தியாரும் போலீஸ் டீமூம் பேசும் அரசியல் அடர்த்தியானது, முக்கியமானது.. தப்பிச் செல்லும் போது காவலர்களை பார்த்து ‘நான் நிறைய கேள்விகளை எழுப்பிருக்கேன். பதிலை நீங்க தேடுங்க’ என விஜய் சேதுபதி பேசுவதாக வரும் காட்சி இயக்குநர் பார்வையாளர்களை நோக்கி பேசுவதை குறிக்கிறது.. கீழ்தஞ்சை மாவட்டங்களின் சாணிப்பால், சவுக்கடி அவலம் வயலில் தாய்ப்பாலை பீச்சும் பெண் தொழிலாளிகள் துயரம் ஆண்டைகளின் குரூரம் என அரைநூற்றாண்டுக்கு முன் நிகழ்ந்த கொடுமைகளும் ‘அடித்தால் திருப்பி அடி’ ‘டேய் னு கூப்பிட்டா என்னடான்னு கேளு’ எனும் செங்கொடியின் தீரமும் சமூக ‘விடுதலை’ (Viduthalai)யின் முக்கியத்தை உணர்த்துகிறது.. மக்களுக்காக நாம் ஆயுதம் தாங்கி போராடுவதோடு அவங்களை அரசியல் படுத்திட்டா மக்களே அவங்க போராட்டத்துல அவங்களுக்கான ஆயுதத்தை முடிவு பண்ணிருவாங்க.. ஆட்சில இருப்பவங்க ஒரு Narrative ஐ முடிவு பண்ணிட்டு அப்றம் அதை உண்மையாக்க என்ன வேணும்னாலும் செய்வாங்க.. நீங்க பாட்டுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தி மக்களை கொன்னுட்டு சஸ்பென்ஸ், டிரான்ஃபர் விசாரணை கமிஷன் னு போய்ட்டே இருப்பீங்க, மக்களுக்கு அரசியல்வாதியான நாங்கதான்யா பதில் சொல்லணும்.. பெருமாள் தப்பிச்சு போய்ட்டார்னு ஒரு பொய்யை சொல்லிடலாம், மக்கள் அவரு மீண்டும் வருவாருனு நம்பிட்டே இருக்கட்டும், அப்போதான் அடுத்த தலைவர்களை தேட மாட்டாங்க சார், அதான் நல்லது.. படத்தில் வெடிக்கும் துப்பாக்கி தோட்டாக்களோடு இணைந்து ஆங்காங்கே வெடிக்கிறது வெற்றி மாறனின் வசனங்களும்… ஆலைகளில் நிகழும் சுரண்டல் சங்கம் அமைக்காமல் தடுப்பது அரசு அதிகாரிகளின் தந்திரம் போலீஸ் கையாளும் உத்தி என ஒவ்வொன்றையும் தோலுரிக்கிற காட்சிகள்… அடையாள அரசியலின் தாக்கங்கள் ஆங்காங்கே வசனங்களில் தென்பட்டாலும் வர்க்க அரசியலை அழுத்தமாக முன்வைக்கிறது விடுதலை (Viduthalai Part 2).. ஜனநாயக போராட்டங்களில் மக்களை அணிதிரட்டுவதும் வர்க்கப் பார்வையை விரிவு செய்வதும் முக்கியம் என்கிறது.. திரைப்படத்தை காணும் போது, நீண்ட உரையாடல் காட்சிகளை தவிர்த்திருக்கலாமோ என்று கூட சிலருக்கு தோன்றலாம். ஆனால் அந்த உரையாடல்களால் தான் விடுதலையின் அரசியலை பேசவும் உணர்த்தவும் முடியும். அரசியல் உள்ளடக்கம் கொண்ட திரைப்படத்தை வெகுஜன சினிமாவாக அளித்திருக்கும் இயக்குநர் வெற்றிமாறனும் விஜய் சேதுபதி, மஞ்சுவாரியர் சூரி, ராஜீவ் மேனன், இளையராஜா எனும் அனைத்து கலைஞர்களும் மிகுந்த பாராக்குரியவர்கள்.. https://bookday.in/viduthalai-2-movie-review-by-r-badri/#google_vignette
-
எல்லோரும் என்று நான் குறிப்பிட்டது சகட்டுமேனிக்கு Dr. ல் குறை கூறுபவர்களை மட்டும்தான். யாழ் பல்கலையில் பாதுகாவலர்கள் முதற்கொண்டு சகல துறைகளிலும் டக்கியரின் ஊடுருவல்களைக் க்ண்களால் கண்டவன் என்கிற வகையில் வைத்தியசாலை நிலவரத்தை நன்கு என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. பலருக்கு அது புரிவதில்லை. Dr. சத்தியமூர்த்தி பக்கச சார்பில்லாமல் அல்லது அரசியல்வாதிகளுடன் ஒத்துழைக்காது அங்கே இயங்க முடியுமா? இதற்கு விமர்சிப்பவர்கள் பதில் தர வேண்டும்.
-
-
Our picks
-
"முதுமையில் தனிமை [Senior Isolation]"
kandiah Thillaivinayagalingam posted a topic in வாழும் புலம்,
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
- 4 replies
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
- 4 replies
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts