Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

19 DEC, 2024 | 02:19 PM

image
 

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் புதன்கிழமை (18) தெரிவித்தனர். 

ஆழியவளை பகுதியில் மணல் சட்டவிரோதமாக அகழப்படுவதாக பொலிஸாருக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டபோதும் அவர்களால் அந்த மணல் கொள்ளையை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது.

நள்ளிரவு நேரம் காவலாளர்கள் நிறுத்தப்பட்டு, JCB இயந்திரம் கொண்டு  டிப்பர்கள் மூலம் மணல் கடத்தல்காரர்களினால் மணல் கொள்ளையிடப்படும் சம்பவம் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாதைகளை அழித்து வீதிக்கு அருகில் வைத்தே பெருமளவான மணல் வளம் சூறையாடப்பட்டு, மணல் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சீரற்று காணப்படும் அந்த பாதைகளில் தற்போது பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

மணல் மேடுகளை அழிப்பதால் கடல் நீர் குடிமனைகளுக்குள் புகும்  அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கிராம அலுவலர் ஊடாக மருதங்கேணி பிரதேச செயலர் மற்றும்  மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவித்தும் இதுவரை மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும் பொலிஸார் யாரையும் இதுவரை கைது செய்யவில்லை என்றும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து  ஆழியவளை கிராமத்தில் தொடர்ச்சியாக இடம்பெறும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி, தமது கிராமத்தை பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1000466760.jpg

1000466755.jpg

https://www.virakesari.lk/article/201647

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருச்சுனாவின் கவனத்திற்கு கொண்டு போக வேண்டும் போல இருக்கின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, ஆழியவளை பகுதியில் இரவோடு இரவாக சட்டவிரோதமாக மணல் அகழப்படுவதாக அப்பகுதி மக்கள் புதன்கிழமை (18) தெரிவித்தனர். 

இரவோடு இரவாக அகழப்படும் மணலை ஒளித்து வைக்கவா முடியும்?

புலனாய்வுப் பிரிவுகள் பொலிசார் ராணுவம் என்று மூலை முடுகடகெல்லாம் நிற்கும் போது அவர்களின் உதவிகள் இல்லாமல் மணலைக் கடத்த முடியுமா?

இப்போதும் லஸ்சம் தலைவிரித்தாடுகிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

EPDP யினரின் கட்டுப்பாட்டில் வடமராட்சி கிழக்கு மணல் கொள்ளை என்று நம்பப்படுகிறது. 

  • Like 1
Posted

ஜேசிபி (JCB)பாவிக்கும் அளவு எனும் போது பெருய கைகள் தான். காவல் துறையும் கை கட்டி விடுப்பு பார்க்கிறார்கள். பெரிய மணல் கள்ளர் எனும் போது டக்சசின் பெயரை தவிர்க்க முடியாமல் உள்ளது.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.