Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு(Mahinda Rajapaksa) எதிராக டயஸ்போராக்கள் செயற்பட்டு வருவதாகவும், வெளிநாடுகளில் இருக்கும் பிரிவினைவாத கொள்கையுடையவர்களால் அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களை பழிவாங்கும் வகையில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு முறையற்ற வகையில் குறைக்கப்பட்டுள்ளது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டபய ராஜபக்ச ஆகியோர் கடுமையான தீர்மானங்களை எடுத்தனர்.

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு | Mahinda Rajapaksa S Security

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உறுதியான தீர்மானத்தை எடுத்ததால் தான் இந்த நாட்டில் ஜனநாயகம் இன்றும் நடைமுறையில் உள்ளது என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வெற்றிப் பெற முடிந்தது என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. ராஜபக்சர்களை பழிவாங்கும் நோக்கத்தில் தான் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டு, இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு | Mahinda Rajapaksa S Security

ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் பாதுகாப்பு உறுதிப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை ஒப்பிட முடியாது.

டயஸ்போராக்களும், பிரிவினைவாத கொள்கையுடையவர்களும் இன்றும் ராஜபக்சர்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பை நீக்குவது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்ய வேண்டும். செலவுகளை குறைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பை பலவீனப்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு - தமிழ்வின்

Posted
41 minutes ago, RishiK said:

கொள்கையுடையவர்களும் இன்றும் ராஜபக்சர்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள் என்பதை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த டயஸ்போரா புலுடாவை விடுகிறார்.
கோத்தபயவை துண்டை காணோம் துணியை காணோம் என விட்டு கலைத்தது என மகிந்த இலகுவில் மறக்க பார்க்கிறார்.
 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மகிந்தா: என் கேள்விக்கு என்ன பதில்? 

அனுரா: சம்பவம் நடக்கட்டும் பிறகு பார்க்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
45 minutes ago, RishiK said:

மகிந்தா: என் கேள்விக்கு என்ன பதில்? 

அனுரா: சம்பவம் நடக்கட்டும் பிறகு பார்க்கலாம். 

தங்கள் குடும்பத்தினுள் யாரைப் பலிக்கடா ஆக்கலாம் என்று ஆராய்ந்து முடிவு கண்டபின்பு சம்பவம் நடக்கும் என்று குருவி சொல்லுது.🧐

  • கருத்துக்கள உறவுகள்
Posted
39 minutes ago, Paanch said:

தங்கள் குடும்பத்தினுள் யாரைப் பலிக்கடா ஆக்கலாம் என்று ஆராய்ந்து முடிவு கண்டபின்பு சம்பவம் நடக்கும் என்று குருவி சொல்லுது.🧐

பெரும்பாலும் மகனுக்காக மகிந்த தலையைக்குடுப்பார் என்று தான்நினைக்கிறன் அல்லது தலையைக்குடுக்க வைப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இராசபக்ஸ முட்டையடி கொஸ்ரிகளையிட்டு பயப்படுகிறார் போல,...🤣

2 hours ago, nunavilan said:

பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்த டயஸ்போரா புலுடாவை விடுகிறார்.
கோத்தபயவை துண்டை காணோம் துணியை காணோம் என விட்டு கலைத்தது என மகிந்த இலகுவில் மறக்க பார்க்கிறார்.
 

புலம்பெயர் போலி டமில் தேசிய  வியாபாரிகளால் போராட்டத்தையே அழிக்க முடியுமென்றால்,  ராசபக்ஸ பயப்படுவதில் நியாயம் உண்டு. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, RishiK said:

 

வெளிநாட்டில் உள்ளவர்களால் மகிந்தவுக்கு அச்சுறுத்தல்! ராஜபக்ச தரப்பின் முக்கிய அறிவிப்பு | Mahinda Rajapaksa S Security

எம்மாம் பெரிய கூட்டம் இவ்வளவையும் பாதுகாக்க 300ம் 400மே காணாது. யாரை வணங்கிப் பாதுகாப்பு கேட்கிறார்கள்? ஆண்டவனையா அநுராவையா??



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.