Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!

கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!

சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ (Peace Ark) என்ற மருத்துவக் கப்பல் நேற்றைய தினம் சம்பிரதாய பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.

‘பீஸ் ஆர்க்’ என்பது 178 மீட்டர் நீளமுள்ள மருத்துவ வசதிக் கப்பல், கேப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.

8.JPG?resize=630%2C417&ssl=1

உத்தியோகபூர்வ விஜயத்தின் ஒரு பகுதியாக, குறித்த கப்பல், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் ஏற்பாடு செய்யும்.

அவை ‘பீஸ் ஆர்க்’ மற்றும் இலங்கை கடற்படை மருத்துவ திணைக்களத்தின் மருத்துவ பணியாளர்களால் நடத்தப்படும்.

கூடுதலாக, கப்பலின் பணியாளர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் போது, நாட்டின் சில சுற்றுலாத் தலங்களை ஆராய்வார்கள்.

இரு கடற்படைகளுக்கும் இடையிலான நட்புறவை மேலும் மேம்படுத்தும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் சில நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்பார்கள்.

மேலும், இலங்கை கடற்படை வீரர்கள் மற்றும் கடற்படை மற்றும் கடல்சார் கல்விக்கூடம் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர்களின் கீழ் உள்ள அதிகாரிகளும் கப்பல்களின் செயல்பாட்டு செயல்பாடுகள் பற்றிய விளக்கக்காட்சிகளில் பங்கேற்க வாய்ப்பைப் பெறுவார்கள்.

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் ‘பீஸ் ஆர்க்’ கப்பல் டிசம்பர் 28 அன்று நாட்டை விட்டுப் புறப்படும்.

https://athavannews.com/2024/1413406

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் சீனாவின் மிதக்கும் மருத்துவமனை கப்பல்

china-4.jpg

‘மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

மேலும், ‘பீஸ் ஆர்க்’ என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதும் சிறப்பு. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட .ராணுவ மருத்துவமனைக் கப்பலாக இதைக் கருதலாம்.

கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் Zhoushan இல் அமைந்துள்ள இராணுவ துறைமுகத்தில் இருந்து ஜூன் 16 அன்று கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது.

உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும். இந்த கப்பல் சீன மக்கள் குடியரசால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்த கப்பல் 2008 முதல் மருத்துவ உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

178 மீட்டர் நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 106 பேர் மருத்துவர்கள். கப்பலில் சிறிய படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. கப்பலில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளன.

கொழும்பு துறைமுகத்தில் ஒருவாரம் தங்கியிருக்கும் கப்பல் சிங்கப்பூர் வழியாக சீனா திரும்பும்.

கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஒரு வாரத்தில் இலங்கை மக்களுக்கும், சீன நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட சீன பிரஜைகளுக்கும் இலவச நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/313997

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் சீன குடியரசின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பல்; 27 ஆம் திகதி வரை இலங்கையர்களுக்கு மருத்துவ சேவை

peace-ark.jpg

சீன மக்கள் குடியரசின் இராணுவ கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான  ‘பீஸ் ஆர்க்’ இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் அதேவேளை,இலங்கையர்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது.

முற்றுமுழுதாக மருத்துவ சேவையை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும் இந்த கப்பல், கடந்த 22 ஆம் திகதி முதல் இலங்கை மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் நடத்திவருகிறது. இச்சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.

178 மீ நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில் கப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது.

பீஸ் ஆர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சீன மருத்துவ கப்பல் வட கிழக்கு மக்களை ஏன் புறக்கணிக்கின்றது?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

சீன மருத்துவ கப்பல் வட கிழக்கு மக்களை ஏன் புறக்கணிக்கின்றது?

இந்தியனை தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

சீன மருத்துவ கப்பல் வட கிழக்கு மக்களை ஏன் புறக்கணிக்கின்றது?

வடக்கில் சீன மக்கள் தொகை குறைவு. 

  • கருத்துக்கள உறவுகள்

சீனாவின் 'பீஸ் ஆர்க்' கப்பலை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி

25 DEC, 2024 | 12:01 PM
image

(நமது நிருபர்)

சீன அரசாங்கத்தின் மிஷன் ஹார்மணி - 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார்.

பீஸ் ஆர்க்  என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்கும்.

இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார். கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொமடோர் மேஜர் ஜெனரல் ஹீ யோங்மிங், கொமடோர் மேஜர் ஜெனரல் யிங் ஹொங்போ, கப்டன் டெங் கியாங் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

IMG-20241225-WA0015__2_.jpg

IMG-20241225-WA0017__2_.jpg

IMG-20241225-WA0023__1_.jpg

IMG-20241225-WA0018__1_.jpg

https://www.virakesari.lk/article/202105

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2024 at 05:57, vasee said:

சீன மருத்துவ கப்பல் வட கிழக்கு மக்களை ஏன் புறக்கணிக்கின்றது?

வடக்கு கிழக்கில் வசிப்பவர்கள் இந்தியர்கள் என்று நினைக்கிறது. 

உண்மையும் அதுதானே.........🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2024 at 10:57, vasee said:

சீன மருத்துவ கப்பல் வட கிழக்கு மக்களை ஏன் புறக்கணிக்கின்றது?

என் வடகிழக்கு மக்கள் சீனாவை வித்தியாசமாக நடத்துவது?

சீன எந்த உதவி செய்ததாலும், கிந்தியாவுக்கு எதிராக ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது எமது அரசியல் வாதிகள், பெரும்பகுதி மக்களும் 

எல்லா நாடுகலும் அதன் நலனை முன்னிறுத்தாமல் ஒருபோதும் எதுவும் செய்யாது, எம்மவர்கள் சொல்வது கிந்தியா அப்படி  செய்வது சரி, அனால் சீனா  பிழை.  

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடமும் இந்த போக்கு இருக்கிறது.

உலகில், ஏன் சிங்கள இடங்களில் கூட,  எமது (மக்களின்) தேவை உள்ளது போல, அல்லது அதற்கு அதிகமாக தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் இப்படி இருந்தால், ஏன் சீன எம்மை கணக்கில் எடுக்க வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
On 24/12/2024 at 22:15, MEERA said:

இந்தியனை தவிர வேறு வழியில்லை.

இந்தியா ஒரு பலவீனமான பிராந்திய வல்லரசு, அதன் பூகோள நலனை பேணுவதற்காக இரந்து பிச்சை கேதும் நிலையில் நானும் ரவுடிதான் வல்லரசு, முதலில் அயல்நாடுகளுடன் வடிவேலு மாதிரி முண்டுவது பின்னர் காலில் விழுவது இந்த மாதிரியினையே தந்து அண்டை நாடுகளுடன் பேணுகிறது அதற்கு அண்மைய உதாரணங்களாக மாலைதீவு, நேபாளம், பங்களாதேஸ்.

On 25/12/2024 at 07:01, RishiK said:

வடக்கில் சீன மக்கள் தொகை குறைவு. 

வட கிழக்கு அபிவிருத்தி திட்டங்களில் சீன, இந்திய தரப்பிற்கு சரிசம பங்களிக்கப்படவேண்டும்.

On 26/12/2024 at 00:11, Kapithan said:

வடக்கு கிழக்கில் வசிப்பவர்கள் இந்தியர்கள் என்று நினைக்கிறது. 

உண்மையும் அதுதானே.........🤣

அவ்வாறு சீனா நினைத்தால் அதிக அனுகூலம், அதிகமாக சீனா அக்கறை கொள்ளும், ஆனால் சீனா அவ்வாறு நினைக்கவில்லை.

On 26/12/2024 at 02:33, Kadancha said:

என் வடகிழக்கு மக்கள் சீனாவை வித்தியாசமாக நடத்துவது?

சீன எந்த உதவி செய்ததாலும், கிந்தியாவுக்கு எதிராக ஏதோ ஓர் உள்நோக்கம் இருக்கிறது என்பது எமது அரசியல் வாதிகள், பெரும்பகுதி மக்களும் 

எல்லா நாடுகலும் அதன் நலனை முன்னிறுத்தாமல் ஒருபோதும் எதுவும் செய்யாது, எம்மவர்கள் சொல்வது கிந்தியா அப்படி  செய்வது சரி, அனால் சீனா  பிழை.  

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திடமும் இந்த போக்கு இருக்கிறது.

உலகில், ஏன் சிங்கள இடங்களில் கூட,  எமது (மக்களின்) தேவை உள்ளது போல, அல்லது அதற்கு அதிகமாக தேவை உள்ளவர்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் இப்படி இருந்தால், ஏன் சீன எம்மை கணக்கில் எடுக்க வேண்டும்?

எம்மை பொறுத்தவரை எமக்கு இந்தியாவும் அயல் நாடு, சீனாவும் அயல் நாடு அதே போல் இலங்கையும் அயல்நாடுதான், எமக்கு முதலில் எமது நலன் முக்கியம், அதனை முன்னிறுத்தும் தரப்புடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கவேண்டும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா, இரஸ்சியாவிடம் கூட இல்லாத ஆறாம் தலைமுறை சண்டை விமானத்தினை சீனா தயாரித்துள்ளதாக கூறுகிறார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, vasee said:

அமெரிக்கா, இரஸ்சியாவிடம் கூட இல்லாத ஆறாம் தலைமுறை சண்டை விமானத்தினை சீனா தயாரித்துள்ளதாக கூறுகிறார்கள்.

 

அமெரிக்காவைத் தான் விடுங்கள். 1950 களில் டெல்ரா வடிவ இறக்கையைக் கொண்ட மிக் (MIG) மிகையொலி விமானத்தை பாவிக்க ஆரம்பித்த சோவியத் ரஷ்யாவையும் மறந்து விட்டு சீனாவின் டெல்ரா இறக்கையை "புதிதாக" விற்கிறார் யூ ரியூப் வியாபாரி😂

  • கருத்துக்கள உறவுகள்

🤣....................

சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு.........

ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே...............

அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்..............

பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்......... 

 

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Justin said:

அமெரிக்காவைத் தான் விடுங்கள். 1950 களில் டெல்ரா வடிவ இறக்கையைக் கொண்ட மிக் (MIG) மிகையொலி விமானத்தை பாவிக்க ஆரம்பித்த சோவியத் ரஷ்யாவையும் மறந்து விட்டு சீனாவின் டெல்ரா இறக்கையை "புதிதாக" விற்கிறார் யூ ரியூப் வியாபாரி😂

 

2 hours ago, ரசோதரன் said:

🤣....................

சைனா ஒரு கெட்டபயல்............... எல்லாவற்றையும் செய்து தானே வைத்துக்கொள்ளும் ஒரு நாடு.........

ஈரானுக்கு நாலு, ரஷ்யாவிற்கு நாலு, சிரியாவிற்கு நாலு என்று கொடுத்தால், இஸ்ரேலையும் உக்ரேனையும் தூள்தூளாக்கியிருக்கலாமே...............

அமெரிக்கா தன் அணுகுண்டையே இஸ்ரேலிற்கு கொடுக்க, அதை இஸ்ரேல் சிரியாவில் போட்டிருக்கின்றார்களாம்..............

பாலகிருஷ்ணா ஓடுகின்ற புகைவண்டியை ஒற்றைக் கையால் நிற்பாட்டியது, பறக்கிற விமானத்தை கைதட்டியே விழுத்தினது எல்லாம் ஒன்றுமே இல்லை இன்றைய சில ஊடகங்களுடன் ஒப்பிடுகையில்......... 

 

ஆம் திடமான ஆதாரமில்லை, இன்றும் பல நாடுகளிடம் தம்மிடம் அணுகுண்டு உள்ளதென அவர்களே கூறுகிறார்கள், ஆனால் அமெரிகா போல் அதனை பயன்படுத்தி அணுகுண்டு உள்ளதென இதில் எந்த நாடும் உறுதிப்படுத்தவில்லை (அதற்காக அந்த மிலேச்சதனமான அணுகுண்டு வீச்சை நியாயப்படுத்தவில்லை), நீங்கள் கூறுவது போல இது சீன பட்டாசாக இருக்கலாம். 

சிறு வயதில் எனது ஆராய்ச்சி ஒன்று தவறுதலாக போய் பக்கத்து வீட்டு கூரை தீ பற்றி எரிந்தது (தீ பெரிதாக சேதம் ஏற்படுத்தவில்லை மிக சிறியளவில் நெருப்பு ஏற்பட்ட போதே அதனை எனது தந்தை அணைத்து விட்டார் பக்கத்து வீட்டு ஓலை கூரை சிறிதாக சேதம் ஏற்பட்டதாக் நினைவுள்ளது) அதனால் எனது தந்தையிடம் முறையாக வாங்கியுள்ளேன்.

அணுகுண்டை வீசி நாட்டை அழித்துவிட்டு,  ஜப்பான் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்றும் கேட்டார்களாம், ஆனால் ஆராய்ச்சி செய்த எனக்கு அடி கிடைத்தது , எனக்கு எந்த நட்ட ஈடும் எனது அயல்வீட்டிலிருந்து கிடைக்கவில்லை.😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.