Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!

ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“தூய்மையான இலங்கை” திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உட்பட 18 பேர் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள், “தூய்மையான இலங்கை” திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் என்பனவாகும்.

https://athavannews.com/2024/1414438

  • கருத்துக்கள உறவுகள்

தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான  இலங்கை தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை  ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறுகின்றது.

இதேவேளை “க்ளீன் ஶ்ரீலங்கா”  நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய விழாவை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதனைப் பார்க்கும் வசதியை அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கும் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தூய்மையான இலங்கை உறுதிமொழியை வாசிக்க அனைத்து அரச ஊழியர்களும் நேரலையில் இணையுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/314280

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“கிளீன் இந்தியா” எனும் திட்டம் சில வருடங்களுக்கு முன் இந்தியாவில் ஆரம்பிக்கப் பட்ட போது…. டெல்லி அரசியல்வாதிகளில் இருந்து, உள்ளூர் அரசியல்வாதி வரை…. விளக்குமாத்தைப் பிடித்து கூட்டுவது மாதிரி படம் பிடித்து பத்திரிகைகளில் பிரசுரித்து விளம்பரம் தேடிக் கொண்டார்கள்.
தமிழ் நாட்டில்….. உதயநிதி கூட, திடீரென்று பொதுக் கழிப்பிடத்துக்கு சென்று படம் எடுத்துப் போடும் வழக்கம் உடையவர்தான்.

அதே போல்… கேலிக் கூத்துக்களை செய்யாமல்,
சிங்கப்பூர் மாதிரி தெருவில் குப்பை போடுபவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Clean Sri Lanka என்றால் நாட்டிலிலுள்ள குப்பைகளை கூட்டுவதா? அல்லது அரசியல், நிர்வாக ரீதியான குப்பைகளை அகற்றுவதா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 1/1/2025 at 10:09, RishiK said:

Clean Sri Lanka என்றால் நாட்டிலிலுள்ள குப்பைகளை கூட்டுவதா? அல்லது அரசியல், நிர்வாக ரீதியான குப்பைகளை அகற்றுவதா? 

May be an image of text

இதன் உண்மையான அர்த்தம் நிர்வாக சீர்கேடுகளை அகற்றுவதும் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பது தான்.  துடைப்ப கட்டைய தூக்குவதல்ல. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

மலையகத்தில்... தனியார் வாகனம் ஒன்றில் வந்த மீன் வியாபாரி, 
தனது கடையின் மீன் கழிவுகளை வீதியோரத்தில் கொட்டி விட்டு செல்லும் போது, 
அந்த வாகனத்தை மறித்த சிலர் அக்கழிவுகளை அள்ளி 
அவரின் வாகனத்திற்குள் கொட்டி அனுப்பி வைத்துள்ளார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

No photo description available.

மலையகத்தில்... தனியார் வாகனம் ஒன்றில் வந்த மீன் வியாபாரி, 
தனது கடையின் மீன் கழிவுகளை வீதியோரத்தில் கொட்டி விட்டு செல்லும் போது, 
அந்த வாகனத்தை மறித்த சிலர் அக்கழிவுகளை அள்ளி 
அவரின் வாகனத்திற்குள் கொட்டி அனுப்பி வைத்துள்ளார்கள். 

தரமான வேலை.இணைப்புக்கு நன்றி சிறி.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, island said:

இதன் உண்மையான அர்த்தம் நிர்வாக சீர்கேடுகளை அகற்றுவதும் நிர்வாகத்தில் உள்ள ஊழல்களை ஒழிப்பது தான்.  துடைப்ப கட்டைய தூக்குவதல்ல. 

உண்மைதான்..ஆனால் ..இழுக்கிற இழுவையைப் பார்த்தால்...இந்த 5 வருடத்தில் நடக்கிற காரியமில்லை போல் தெரிகிறது

5 hours ago, தமிழ் சிறி said:

No photo description available.

மலையகத்தில்... தனியார் வாகனம் ஒன்றில் வந்த மீன் வியாபாரி, 
தனது கடையின் மீன் கழிவுகளை வீதியோரத்தில் கொட்டி விட்டு செல்லும் போது, 
அந்த வாகனத்தை மறித்த சிலர் அக்கழிவுகளை அள்ளி 
அவரின் வாகனத்திற்குள் கொட்டி அனுப்பி வைத்துள்ளார்கள். 

அந்த நாட்டு அகம்பாக காரருக்கு தரமான பதிலடி..இது நம்மட பகுதி அரச உத்தியோகத்தருக்கும் தொடர வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாஜ இதற்காக ஒர் பொலிஸ்பிரிவை உருவாக்கி வைத்திருந்தார் ...

  • கருத்துக்கள உறவுகள்
On 30/12/2024 at 01:21, தமிழ் சிறி said:

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என். எஸ். குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படை தளபதிகள் உட்பட 18 பேர் இந்த செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும்.

இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் ஏன் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a black-and-white image

May be an image of one or more people and text

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும்.

இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள்.

இந்தத் திட்டத்தில் ஏன் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை?

இந்த திட்டம் நாட்டின் அனைத்து மக்களுக்குமானது எனவே அதை நடைமுறைப்படுத்துவதற்கு உழைக்கவேண்டிய கடமை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம் உட்பட நாட்டின் அனைத்து பொதுமக்களும்தானே. அனைத்து இன மக்களும் இணைந்து  ஒரே கண்ணோட்டத்துடனும்  ஈடுபாட்டுடனும் செயலாற்றுவது தான் முக்கியம்.

https://cleansrilanka.gov.lk

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தத் திட்டத்தில் ஒரு தமிழ் பேசும் மகன் இல்லை என்பது மிகவும் வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும்.

இனமத பேதமின்றி இலங்கையராக வாழ்வோம் என்கிறார்கள்

ஆனால் இந்த அரசின் பிரசார ஒலிபெருக்கிகளாக தமிழர்கள் பலர் இருக்கின்றனர் தானே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்  யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டதின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய,மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது போலீஸ் அதிகாரிகள், போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்தியிடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

https://athavannews.com/2025/1415074

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஆனால் இந்த அரசின் பிரசார ஒலிபெருக்கிகளாக தமிழர்கள் பலர் இருக்கின்றனர் தானே.

எல்லாமே வால்களாகவே இருக்கிறார்கள்.

3 hours ago, தமிழ் சிறி said:

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம்  யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது!

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டதின் மாகாண ஒருங்கிணைப்பு அலுவலகம் இன்று யாழ் போலீஸ் நிலையத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால மற்றும் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய,மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன் போது போலீஸ் அதிகாரிகள், போலீஸ் உத்தியோகத்தர்களுக்கு கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்தியிடம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

https://athavannews.com/2025/1415074

பொலிஸ் நிலையங்களில் இருந்து தான் முதலில் தொடங்க வேண்டும்.

முடிந்தால் அவர்களது கைகளை சுத்தமாக்கட்டும்.

எங்கே அர்ச்சுனாவைக் காணவில்லை?

அவருக்கு ஏன் அறிவிக்கவில்லை?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

May be pop art of child and text

472201343_1008386734659632_1026435459225

May be an illustration of text

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2025 at 14:45, ஈழப்பிரியன் said:

எல்லாமே வால்களாகவே இருக்கிறார்கள்.

பொலிஸ் நிலையங்களில் இருந்து தான் முதலில் தொடங்க வேண்டும்.

முடிந்தால் அவர்களது கைகளை சுத்தமாக்கட்டும்.

எங்கே அர்ச்சுனாவைக் காணவில்லை?

அவருக்கு ஏன் அறிவிக்கவில்லை?

அவரைக் கூப்பிட்டால் சீரியஸ் ஆக எடுத்து விடுவார். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a doodle of elephant, slow loris and text

May be a graphic of text

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

472720174_122139254552390220_810104307651073608_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=JIrlT2RYzbsQ7kNvgHyl5W0&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-1.xx&_nc_gid=AMdoI6v2dTPbTrWpi38iPQ9&oh=00_AYDXDzU6B0I-ORQnJLgpzbqDmlSWYUkX3THZXsuA2Gz9vQ&oe=678439AB

473005239_122139254576390220_8952599395934997455_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=109&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=mr91icoQBI8Q7kNvgGePVkH&_nc_zt=23&_nc_ht=scontent-fra5-2.xx&_nc_gid=AMdoI6v2dTPbTrWpi38iPQ9&oh=00_AYCtRG0KlnNyqC5AnVgsvZWyV6eD0zPpvCsaOhDwwNVbDQ&oe=678451CF

அராலி வீதி குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்த வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு நன்றிகள் 🥱 
இதுதான் கிளீன் ஸ்ரீலங்காவோட பவர்😏

Kunalan Karunagaran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be pop art

May be an illustration of football and text

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் - வௌிப்படுத்திய பதில் ஐஜிபி

கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் - வௌிப்படுத்திய பதில் ஐஜிபி

கிளீன் ஶ்ரீலங்கா திட்டத்துடன் இணைந்ததாக பொலிஸார் முன்னெடுத்துள்ள வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, வாகன விபத்துகளால் ஏற்படும் நாளாந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

'புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களில் பொலிஸின் செயற்பாடுகள் ' என்ற தலைப்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், போக்குவரத்து விபத்துகளால் தினமும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, யுத்தத்தின் போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவித்தார்.

இது கண்ணுக்குத் தெரியாத பயங்கரவாதம் என்றும், வீதி ஒழுக்கத்தைப் பேணுவது மிகவும் முக்கியமானது என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

கடந்த நாட்களில் வீதி விபத்துகளால் தினமும் சுமார் 9 பேர் உயிரிழந்ததாகவும், இந்த எண்ணிக்கை 4 ஆகக் குறைக்கப்பட்டு தற்போது 2 ஆகக் குறைந்துள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

மேலும், வீதி விபத்துகளால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை நிரந்தர மாற்றுத்திறனாளிகளாக ஆவதாகவும், யுத்தத்தின் போது நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 பேர் வரை உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்ட வாகன சோதனை நடவடிக்கைகள் காரணமாக, கடந்த டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று எந்தவொரு வாகன விபத்துகளும் பதிவாகவில்லை என்றும், இது ஒரு சிறப்பு வாய்ந்த நிகழ்வு என்றும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

https://tamil.adaderana.lk/news.php?nid=198904

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

போக்குவரத்துப் பொலிஸ் collection update ஏதாவது? 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.