Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளா காலமும் தமிழ்நாட்டு அரசியல் செய்திகளைதான் பார்ப்பம்.. இப்பதான் இலங்கை அரசியலை பார்க்க பிடிக்கிறது.. இவ்வளவுகாலமும் தமிழ் அரசியல்வாதிகள் அதே பழையகதை தீர்வுத்திட்டம் பற்றித்தான் கதைப்பாங்கள்.. மக்கள் பிரச்சினையை எவனும் கதைப்பதில்லை.. அதை பாக்கிறத விட பேசாம கண்ணமூடி நித்திரை கொள்ளலாம்..

டொக்ரர் ராமநாதன் அர்ச்சுனாவின் வருகையின் பின் இலங்கை தமிழ் அரசியலில் பொறிபறக்குது.. எங்களுக்கும் எம்பி இருக்கெண்டு ஞாபகம் வருது..👏👏

  • கருத்துக்கள உறவுகள்

நற்செயல்....

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை. ஒவ்வொரு அரச அதிகாரிகளும், திணைக்களங்களும், சர்வாதிகாரிகள் போலவே நடந்து கொண்டனர் .யாரும் சட்டம் ஒழுங்கு சேவை என்று செய்யவில்லை. கேள்வி கேட்டவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், ஒதுக்கப்பட்டார்கள், பழிவாங்கப்பட்டார்கள். அடிதடி காரர் நிஞாயமற்ற  வகையில் எல்லா சலுகைகளையும் சேவைகளையும் பெற்றுக்கொண்டார்கள், மரியாதை செலுத்தப்பட்டார்கள். போலீஸ் தனக்குரிய கடமையை செய்யாது மற்ற துறைகளில் மூக்கை நுழைத்து செயற்பட்டது. தாடியர் அவரது அமைச்சு கடற்தொழில். ஆனால் அதை விட்டு மற்ற எல்லாத்துறைகளையும் பற்றி கருத்துச்சொல்வார். இனிமேல் இவர்களுக்கெல்லாம் இருக்கு ஆப்பு. முடியா விட்டால் பணியில் இருந்து ஒதுங்கி செய்யக்கூடியவர்களிடம் கையளியுங்கள் பணியை.    

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அவர் பைத்தியம் இல்லையா?

இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?

  • கருத்துக்கள உறவுகள்

நான் மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவின் தகவல்களை பார்த்து வருகின்றேன். இப்போது தனது யூரியூப் ஊடாக காணொளிகள் பிரசுரம் செய்கின்றார். பல பொழுது போக்கு அம்சங்களுடன் நாட்டில் உள்ள பல பிரச்சனைகளையும் பற்றி உரையாடுகின்றார்.

அரசியல் களத்தில் பல புதிய விடயங்களை புகுத்தி வருகின்றார். இனிவரும் தேர்தல்களில் இவை அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

இவரை ஓரம் கட்டுவதாக நினைத்து செய்யப்பட்ட விடயங்கள் அவரை வளர்த்துவிடுகின்றன. 

தொடர்ந்து அவதானிப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, நியாயம் said:

தனது பேச்சிலும் செயலிலும் உள்ள பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களைச் சிறிது சிறிதாகக் களைவாரானால் மற்றைய டமில் அரசியல்வாதிகளுக்குப் பெரிய தலையிடியாக மாறலாம். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, Kapithan said:

தனது பேச்சிலும் செயலிலும் உள்ள பொறுப்பற்ற சிறுபிள்ளைத்தனமான செயல்களைச் சிறிது சிறிதாகக் களைவாரானால் மற்றைய டமில் அரசியல்வாதிகளுக்குப் பெரிய தலையிடியாக மாறலாம். 

எமது பழம்பெரும் தமிழ் அரசியல்வாதிகள்  இதுவரை காலமாகவும்  பொறுப்பாக பேசி செய்த நடவடிக்கைகள் என்று எதுவுமே இல்லை.

வடிவேலு போல் துள்ளினாலும் காரியத்தில் கண்ணாக இருக்கிறார் என்பது என் கணிப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

அப்ப அவர் பைத்தியம் இல்லையா?

இங்கு பலருக்கும் பைத்தியமாகவே தெரிந்தாரே?

 இவரது செயற்பாடு, கேள்வி கேட்க்கும் தன்மை, பலரின் வயிற்றில் புளியை கரைக்கிறது. ஊழல், லஞ்சம், பந்தா, அதிகாரம் என்று ராஜ போக வாழ்க்கை வாழ்ந்தவர்கள், அது பாதிக்கப்படப்போகிறது என்பதால் அவரை பைத்தியம் என்று விமர்ச்சித்தார்கள், இவரை யார் உள்ளே விட்டது என்று கேள்விகேட்டார்கள். வழக்கம்போல் வந்து கூடி, உண்டு, கதை பேசி போக முடியவில்லையே எனும் ஆதங்கத்தால். இவர்களை யாரும் இதுவரையில் யாரும் கேள்வி கேட்கவில்லை, அதற்கு இவர்கள் விட்டதுமில்லை. இப்படி ஒரு நிலை தங்களுக்கு வருமென்று இவர்கள் நினைத்ததுமில்லை. அரசியல் வாதிகள் கூட்டங்களில் போய் ஆசுவாதமாய் இருந்து, கண்ணை மூடி அயர்ந்துவிட்டு கூட்டம் முடிய பத்திரிகை கூட்டங்களை நடத்திவிட்டு பெரிய சாதனை நடத்தியவர்கள்போல் ராஜ நடை நடந்தவர்கள் இப்போ முழிக்கிறார்கள். ஏதாவது செய்ய வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும்.  விலகக  அல்லது விலக்க வைக்கப்படுவார்கள். அதனால் தமது இருப்பை காக்க வெறுப்பை அவர்மேல் கக்குகிறார்கள், அவர் அனுராவுக்கு பின்னால் ஒளிகிறாராம். அவர் யார் பின்னால் ஒளிந்தால் இவர்களுக்கென்ன? அது அவருடைய பிரச்சினை. கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாவிடில் இப்படி சேறு பூசுவது வழமை. சிங்களவனிடம் போராடுகிறோம். முதலில் நாம் நம்மிடம் போராட வேண்டிப்பெற வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன. இவரை ஒழித்துக்கட்ட வேண்டிய நிலையில் பலர் உள்ளனர். அதே போல் அனுராவை பதவியில் இருந்து ஒழிக்கவும் ஒரு கூட்டம், தமிழர் பகுதியில் தங்கள் பழைய காரியங்களை தொடர்கிறார்கள். மொத்தத்தில் பாதிக்கப்படுவது ஏழை அப்பாவி தமிழர். ஆனால், பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் அர்ச்சுனாவுக்கு. நிதானம், பொறுமை, மற்றவர் சொல்வதை பொறுமையுடன் கேட்டு ஆராய்ந்து அவர்கள் வாயாலேயே உண்மையை வரவழைக்கலாம், அவர்களை பேச விட்டு பொறுமையுடன் கேட்டால்.  இல்லையென்றால் கோசம் போட்டு அவரது நிதானத்தை கலைத்து கோபமூட்டி அவரை அரசியலில் இருந்து ஓரங்கட்டுவார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

பாராளுமன்றம் இல்லாத நாளில் தனது தொகுதியில் மக்களோடு மக்களாக நிற்கிறார்.

நீண்ட காலத்திற்குப் பின் இப்படி ஒருவரைப் பார்க்க வியப்பாக உள்ளது. 

பிரச்சனைகள் இருந்தால் மக்களே தொடர்பு கொள்ளுங்கள் என்று கைபேசி இலக்கத்தை கொடுத்து எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளுங்கோ என்கிறார்.

அதிசயப் பிறவி.

  • கருத்துக்கள உறவுகள்

இவரை ஆளுநர் மூலமாக அனுரா தன் வடக்கில் ஊழல், லஞ்சம் ஒழிப்புதிட்டங்களுக்கு பாவிக்கக்கூடும். அதனாலேயே சிலர் கூறுகின்றனர் அர்ச்சுனா அனுரா அரசுக்கு பின்னால் ஒளிகிறாராம். அவர் எங்கே, ஏன் ஒளிய வேண்டும் என்பதையும் விளக்க வேண்டும் குற்றம் சாட்டுபவர்கள். சிலர் தாம் தேர்தலில் வெல்ல முன், அல்லது ஒரு ஆட்சி மாறியவுடன் போய் இருக்கைகளை தேடுகிறார்கள். தம் ஊழலை நடப்பு ரீதியாக மறைப்பதற்கு. இவர் மக்களோடு நின்று மக்களுக்கான கேள்வியை மக்களுக்காக கேட்க்கிறார். இதை போய் அனுராவுக்கு பின்னால் ஒளிகிறார் என்றால் சொல்பவர்களை என்ன சொல்வது? இதில வேற தாங்கள் எந்தக்கட்சியையும் சாராதவர்கள் என தம்பட்டம். அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து  குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும்.     

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவுக்கு நிதானம், பொறுமை அவசியம். குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம், சாட்சி போன்றவற்றை சேகரித்து நிதானமாக, முறையாக விசாரணையின் பின் குற்றங்களை நிரூபித்து  குற்றவாளிகளை வெளியேற்ற வேண்டும். அதோடு அவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு படித்த, துடிப்புள்ள இளையவரை பயிற்ற வேண்டும்.   

இதுவே உண்மையான,  நேர்மையான ,தமிழ் மக்களுடைய  ஆசையும் கூட  உங்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் தெரிவிக்கிறேன்.   

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

பாராளுமன்றம் இல்லாத நாளில் தனது தொகுதியில் மக்களோடு மக்களாக நிற்கிறார்.

நீண்ட காலத்திற்குப் பின் இப்படி ஒருவரைப் பார்க்க வியப்பாக உள்ளது. 

பிரச்சனைகள் இருந்தால் மக்களே தொடர்பு கொள்ளுங்கள் என்று கைபேசி இலக்கத்தை கொடுத்து எந்த நேரமானாலும் தொடர்பு கொள்ளுங்கோ என்கிறார்.

அதிசயப் பிறவி.

உண்மையையும் நியாயத்தையும் நீண்ட காலம் வாழ விட மாட்டார்கள்.
பொய்யர்களுக்கு மத்தியில் ஒரு உண்மை நிலைத்து நிற்க முடியாது.இதுதான் இன்றைய உலக நடப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

உண்மையையும் நியாயத்தையும் நீண்ட காலம் வாழ விட மாட்டார்கள்.
பொய்யர்களுக்கு மத்தியில் ஒரு உண்மை நிலைத்து நிற்க முடியாது.இதுதான் இன்றைய உலக நடப்பு.

டாக்ரரை கையுக்குள் போட மணிவண்ணன் குழு தீயாக வேலை செய்கிறார்கள்.

அகப்பட்டால் உரமாகப் பாவிப்பார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

டாக்ரரை கையுக்குள் போட மணிவண்ணன் குழு தீயாக வேலை செய்கிறார்கள்.

அகப்பட்டால் உரமாகப் பாவிப்பார்கள்.

உவையளின்ரை சேட்டையளை பார்த்துத்தானே அர்ச்சுனா அரசியலுக்கு வந்தவர்.
கூட்டு அரசியலை விட தனி மனித அரசியல் நிறைய பலன்களை தரும். ஆனால் கூட்டு அரசியல்வாதிகள் விடமாட்டார்கள்.😀

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் நிலைக்க வேண்டுமாயின்; மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். போற்றல் தூற்றல்களை கடந்து அமைதியாக. இறுதியில் யார் தூற்றினாலும், அவர் மனது சொல்லும்; என்னால் இயன்றதை, நன்றே செய்தேன் என்று மனது அமைதியடையும். இதுவே உண்மையான சேவை. மக்கள் பணி, மகேசன் பணி. ஒன்று, யாராவது ஒரு நல்லது செய்தால்; அதை பொறுக்காதவர்கள் சேறடிப்பார்கள் அல்லது அவரை தொடர்ந்து தாமும் ஏதும் செய்யவேண்டுமென்று செய்வார்கள். மணி, நல்ல துடிப்புள்ள இளையவர். மக்களுக்கு இன்று நிறைய சட்ட உதவிகள் தேவை, ஊழலை அடாவடியை அகற்ற. ஆகவே இவர் நல்ல மனதோடு மக்களுக்கு சேவை செய்ய முன்வருவாரானால் இணைந்து செய்யலாம். நாளடைவில், தமிழரசுக்கட்சியை சிதைக்க, சொந்தமாக்க நினைப்பவர்கள் வீட்டில் இருந்து கனவு காணவேண்டியது. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.