Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் இருந்து கொழும்மு போகும்போது அடிக்கொரு ரக் பணல் அள்ளிக் கொண்டு போகிறது.காற்றுக்குப் பறக்காமலோ பாரத்துக்காகவோ தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது.

கேட்டால் எல்லாமே மந்திரிகளின் ரக் என்றார்கள்.

இது பற்றி @MEERA    க்கு மேலதிக தகவல்கள் தெரிந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 4/1/2025 at 16:01, RishiK said:

இவர்களின் சட்டப்பிரச்சனையைத் தீர்க்க சுமந்திரன் ஐயா தான் முன் வரவேண்டும். 

சட்டப்பிரச்சினை என்றால்  பயிற்றப்பட்ட தமிழாசிரியரா கையாளை முடியும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் தானே கையாளமுடியும்!😄

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ஒழித்தே தீருவோம் - அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை!

Published By: Digital Desk 7

06 Jan, 2025 | 10:01 AM
image
 

சுண்ணக்கல் ஏற்றி வந்த பார ஊர்தி விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் செயல்பட்டது பரவாயில்லை அல்லது நல்லது. கல் அகழ்வு விடயத்தில் அதிகாரிகளின் அசமந்த போக்கு காணப்படுவதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  (05) யாழ்ப்பாணம் சரசாலை பகுதியில் கல் அகழ்ந்த பகுதிகளை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு லொறியில் சுண்ணக்கல் ஏற்றி சென்றபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வழிமறித்து அந்த லொறியை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்த விடயமானது கடந்த சில தினங்களாக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் நீங்கள் செய்தது தவறு, குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.

ஆனால் தற்போது பார்க்கும் பொழுது இளங்குமரன் செய்தது பரவாயில்லை அல்லது நல்லது என்று தோன்றுகிறது. இளங்குமரனின் இந்த வேலையால் அனைவரும் கலக்கமடைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வெட்ட வெட்ட பூதம் கிளம்பியது போல இன்று பல பிரச்சினைகள் வெளிவருகின்றன.

சரசாலை பகுதியில் சட்டரீதியான வேலைகள், சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன. தனியார் காணிகளில் அகழ்வுகள் இடம்பெறுகின்றன, அதற்கு அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கு அருகாமையில் அரச காணிகள் உள்ளன அதில் அனுமதி பெறப்படாமல் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இவற்றையெல்லாம் பார்க்கும் வேளையில் சட்ட விரோதமான செயற்பாடுகள் இடம்பெறுகின்றது என்பதை ஊகித்துக் கொள்ள முடிகின்றது.

இந்த விடயத்தில் பொறுப்பு கூற வேண்டியவர்கள் இந்த தொழிலை புரிகின்ற வியாபாரிகளோ, தொழில்புரிகின்ற ஊழியர்களோ அல்ல. மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம செயலர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

அரசு அதிகாரிகள் சரியாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். அத்துடன் இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் விளைகிறேன்.

சரசாலையில் உள்ள சுண்ணக்கல்லுக்கும் இளங்குமரன் எம்.பி மறித்த லொறியில் இருந்த சுண்ணக்கல்லுக்கும் இடையே வித்தியாசம் இருக்கின்றது. அப்படியாயின் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் இந்த திருட்டுத் தொழில் இடம்பெறுகின்றதா என்று கேள்வி எழுகின்றது.

ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள். ஆனால் இவ்வாறான அகழ்வுகள் மூலமாக ஏற்படுகின்ற அனர்த்தங்களுக்கு பல பரம்பரைகள் பலியாகும் என்ற விடயத்தை நாங்கள் மறந்து விடக்கூடாது.

ஒரு சில வியாபாரிகளின் பணப் பசியை போக்கும் தேவைக்காக இந்த செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் எமது அரசாங்கத்தில் இது தடுத்து நிறுத்தப்படும் என மேலும் தெரிவித்தார்.

 

யாழ்ப்பாணத்தில் திருட்டு தொழிலா? ஒழித்தே தீருவோம் - அமைச்சர் சந்திரசேகரன் சூளுரை! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2025 at 10:34, RishiK said:

ஒரு பெரும் தமிழ் தேசிய சட்டவாளர் லொறியை வெளியே எடுத்துத்தல்லாம் என்று சொல்லி இருக்கிறாராம். 

ம், கட்சியை உடைத்து இரண்டு துண்டாக்கி, இருக்கிறதையும் முடக்கி வைத்துக்கொண்டு, வேறு என்ன வேலை இருக்கிறது செய்யிறதுக்கு? தொழிலதிபர், பத்திரிகை சந்திப்பு நடத்தேக்கையே நினச்சேன், அவர் சொந்தபுத்தியில் செய்யேல்லை என்று. அவர் ஊடகங்களை சந்திக்கும்போது, ஏதோ அந்த அனுமதி, இந்த அனுமதி, அவரை சந்தித்தேன், இவரை சந்தித்தேன் என்று பழைய நிகழ்ச்சித்திட்டம் போல் நினைத்து அடுக்கிக்கொண்டே போனார். ஆனால் அவர் பார்வை நேர்கொண்டதாய் இருக்கவில்லை. இனிமேல் லஞ்சம், ஊழல் வேலை செய்யாது. காலாவதியான அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு காலம் பூராவும் உப்பிடியான சட்ட விரோத தொழில் செய்வோர், பாதைகளை மாற்றி, உரிய இடங்களை மாற்றி செய்வது சாதாரண மக்களுக்கும் தெரியும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியாது போல் நடிப்பர், அவர்களே சொல்லியும் கொடுப்பர். அவர்களுக்கு வேண்டியது தட்ஷனை.

12 hours ago, பிழம்பு said:

குற்றச்செயல்கள் இடம்பெறும்போது அவற்றினை பொலிஸாருக்கு தெரியப்படுத்தி, அவர்கள் மூலமாக வைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் இளங்குமரனுக்கு அறிவுறுத்தினேன்.

குற்றச்செயல்களின் சூத்திரதாரிகளே போலீசார்தானே! போலீசார் தங்கள் கடமையை சரிவர செய்திருந்தால், எப்படி இத்தனை சட்ட ரீதியற்ற வேலைகள் இடம்பெறுகின்றன? இளங்குமரன் ஏன் தலையிடப்போகிறார்? மக்கள், எங்கேயும் தங்களுக்கு நீதி கிடைக்காததாலும்  தங்கள் குரல் கேட்கப்படாததாலுமே இளங்குமரனை நாடியிருக்கிறார்கள்.

12 hours ago, பிழம்பு said:

மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர், கிராம செயலர், புவிசரிதவியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரே இதற்கு பொறுப்பு கூற வேண்டும்.

அதை சொல்லுங்கோ.

 

12 hours ago, பிழம்பு said:

ஒரு சிலர் வந்து, இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதால் தொழில் இல்லாமல் போகின்றது, வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றார்கள்.

அதெல்லாம் சும்மா. தங்கள் பிழைப்புக்கு, மக்களை சொல்லும் காரணங்கள். வளங்களை சுரண்டுவது, பின் தங்களையும் தொழிலையும் காப்பாற்றுவதற்கு பூசப்படும் முலாம். அதிகாரிகளையும் பொலிஸாரையும் மிகத்தீவிரமாக கண்காணியுங்கள். இவர்கள்தான் முழு திருடர். நல்லவேளை நீங்கள் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். இல்லையேல், இளங்குமரனை வெளியேற்றி இருப்பார்கள் எல்லோரும் சேர்ந்து.             

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, வாலி said:

சட்டப்பிரச்சினை என்றால்  பயிற்றப்பட்ட தமிழாசிரியரா கையாளை முடியும் புகழ்பெற்ற சட்டத்தரணிகள் தானே கையாளமுடியும்!😄

சுமாவை ஒரு சட்டத்தரணி என்று மட்டும் சொல்லக்கூடாது ..... அவர் ஒரு .......பை ....

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழன்பன் said:

சுமாவை ஒரு சட்டத்தரணி என்று மட்டும் சொல்லக்கூடாது ..... அவர் ஒரு .......பை ....

ஒரு சட்டத்தரணிக்கு கட்சியின் யாப்பை கடைப்பிடிக்க தெரியவில்லை, எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் என்கிறார், தனக்காக பதவிகளை உருவாக்கி வலுக்கட்டாயமாக கையகப்படுத்தி மற்றவர்களின் உரிமையை பறிக்கிறார். நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு  எடுத்தால்; ஒரு சட்டத்தரணி என்று சொல்லிக்கொள்பவர், கட்சியின் யாப்புக்கு கட்டுப்படாமல், காலத்தை விரையமாக்கி, உறுப்பினர்களுக்கு மன உளைச்சலையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்தி, கட்சிக்கு இடையூறு விளைவிப்பதற்காக இவரை எச்சரிக்கை செய்ய வேண்டும். இதுதான் இவரது சட்ட அறிவா எனக்கேட்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2025 at 13:54, ஈழப்பிரியன் said:

திருகோணமலையில் இருந்து கொழும்மு போகும்போது அடிக்கொரு ரக் பணல் அள்ளிக் கொண்டு போகிறது.காற்றுக்குப் பறக்காமலோ பாரத்துக்காகவோ தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கிறது.

கேட்டால் எல்லாமே மந்திரிகளின் ரக் என்றார்கள்.

இது பற்றி @MEERA    க்கு மேலதிக தகவல்கள் தெரிந்திருக்கும்.

ஓம் அண்ணா , கேட்டால் அந்த Minister இன்ர என்பார்கள். ஆனால் எனக்கு தெரிந்து திருமலையைச் சேர்ந்தவர் எதிர்க் கட்சித் தலைவராகவே இருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2025 at 10:34, RishiK said:

ஒரு பெரும் தமிழ் தேசிய சட்டவாளர் லொறியை வெளியே எடுத்துத்தல்லாம் என்று சொல்லி இருக்கிறாராம். 

ஆமா, இப்படியான சட்ட விரோதமான தொழில் செய்பவர்களுக்கு உதவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது பரீட்சயந்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, satan said:

ஆமா, இப்படியான சட்ட விரோதமான தொழில் செய்பவர்களுக்கு உதவுவதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அது பரீட்சயந்தான்.

அவரின் கருத்து என்னவென்றால் தனது client நேரடியாக கல்லைத் தோண்டவில்லையாம். 
அவர் ஒரு logistics provider ஆம். அத்துடன் சம்பந்தப்பட்ட சட்டத்தில் பெரிய ஓட்டை உள்ளதாம். 

இளங்குமரன் இதை அதனது தலைவர்களுக்கு எடுத்து சொல்லி ஓட்டையை அடைக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, RishiK said:

அவரின் கருத்து என்னவென்றால் தனது client நேரடியாக கல்லைத் தோண்டவில்லையாம். 
அவர் ஒரு logistics provider ஆம். அத்துடன் சம்பந்தப்பட்ட சட்டத்தில் பெரிய ஓட்டை உள்ளதாம். 

இளங்குமரன் இதை அதனது தலைவர்களுக்கு எடுத்து சொல்லி ஓட்டையை அடைக்க வேண்டும். 

சட்ட விரோதமானவரிடம் பொருளை வாங்குவதும், விநியோகிப்பதும் குற்றம் என்பது சட்டத்தரணிக்கு தெரியவில்லையோ? அப்போ, தான் பொருள் யாரிடம் பெறுகிறேன் அவர்கள் எப்படிப்பெறுகிறார்கள் என்று அழைத்து வந்து கருத்து தெரிவித்தாரே, அது எப்படி? அப்படியென்றால், போதைப்பொருள் கடத்துபவரையல்லவா கைது செய்ய வேண்டும், ஏன் வியாபாரிகளை கைது செய்கிறார்கள்?   

  • கருத்துக்கள உறவுகள்

பா.உ இளங்குமரன் நடந்துகொண்டவிதம் முற்றிலும் சரியானதே. மக்களின் பிரதிநிதியாக   திருடர்களை தப்பிக்கவிடாமல் உடனடியாக செயல்பட்டு கனிமம் கடத்திய லாரிகளை கைப்பற்றி பொலிசாரிடம் அவற்றை ஒப்படைத்தார். பொது மக்களே திரண்டுவந்து இதே போல் செயற்பட்டிருந்தால் அதை எப்படி நாம் ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அதேபோலத்தான் இதுவும். அவசர நேரத்தில் குற்றச்செயலை தடுப்பதற்கு அவர் நடந்துகொண்டவிதம் பாராட்டுக்குரியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.