Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சனத் கமகே மூலம்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள அம்பலாந்தோட்டை வர்த்தகர் சங்கம், சிவப்பு அரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.220 என்ற கட்டுப்பாட்டு விலையில் விநியோகிக்க எடுத்த நடவடிக்கையால், நகரில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெரும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

கட்டுப்பாட்டு விலைக்கு ஒவ்வொரு நுகர்வோருக்கும் ஐந்து கிலோ அரிசியை வர்த்தகர் சங்கம் வழங்கியது. இருப்பினும், கையிருப்பு முடிந்ததும், நூற்றுக்கணக்கான நுகர்வோர் ஏமாற்றத்துடன் வெளியேறினர்.

image_fecc07f509.jpg

image_02a8f02022.jpg

https://www.dailymirror.lk/breaking-news/Queues-back-people-jostle-for-rice-purchases/108-299561

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முள்ளி வாய்க்கால் கஞ்சி வரிசை நினைவில் வந்து போகுது .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கையில் மக்கள்  அரிசி,பருப்பு,கூப்பன்மாவுக்காக வரிசையில் நிற்பது ஒன்றும் புதிதல்ல.

அன்றைய காலங்களில் மக்கள் உணவுக்கு வரிசையில் நிற்கும் போது  அரசுகள் விவசாய அபிவிருத்திகளை பற்றி சிந்தித்தது.


இன்று எதை எப்படி டிஜிட்டல் முறையில் இறக்குமதி செய்யலாம் என சிந்திக்கின்றார்கள்.😂

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான செய்திகளை வாசிக்கும் போதே பொறுப்பற்ற நிர்வாகத்துறையினரின் மேல் கோபம் ஏற்படுகிறது, எவ்வாறு இலங்கை மக்கள் இதனை தொடர்ந்து எதிர்கொள்கிறார்கள்?

இலங்கையினை ஆபிரிக்க நாடு மாதிரி மாற்றாமல் ஓயமாட்டார்கள் இலங்கை அரசியல்வாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

 

இலங்கையினை ஆபிரிக்க நாடு மாதிரி மாற்றாமல் ஓயமாட்டார்கள் இலங்கை அரசியல்வாதிகள்.

பொறுங்கோ ...பொறுங்கோ....இனிப் போறநாடு...அள்ளிக்குடுக்குமோ தெரியவில்லை...உணவு பழக்கத்துக்கு மாற்றும்...நாய்... குரங்கு..கண்ட கண்ட பூச்சி வறுவல்..தவளை ,பாம்பு...இவை உணவாகினாலே டொலர் மிச்சம் ...கடன் முடிந்தது..😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் பொறுங்க சண்டே டைம்ஸ் இலிருந்து மொழி மாற்றி போட்டேன் ஆங்கிலஇலக்கணம் இலக்கியம் தெரியாத கூட்டம் வந்து கேத களிக்கும் அதையும் தாண்டனும் வெயிர் அண்ட் சீ .😄

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, alvayan said:

பொறுங்கோ ...பொறுங்கோ....இனிப் போறநாடு...அள்ளிக்குடுக்குமோ தெரியவில்லை...உணவு பழக்கத்துக்கு மாற்றும்...நாய்... குரங்கு..கண்ட கண்ட பூச்சி வறுவல்..தவளை ,பாம்பு...இவை உணவாகினாலே டொலர் மிச்சம் ...கடன் முடிந்தது..😁

இது வருத்தமான விடயம், இலங்கை மட்டுமல்ல உலகில் பல நாடுகள் இந்த பாதையிலேயே பயணிக்கின்றன, பூனைக்கு மணி கட்டுவது யார் என்பதுதான் பிரச்சினை, ஆட்சிக்கு வருகின்ற ஆரசுகள் சரியான ஒரு அரசியல் அமைப்பினையோ சட்டவாக்கத்தினையோ செய்வதில்லை ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அனைத்தும் வாக்குறுதியில் இருக்கும்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

சிவப்பு, வெள்ளை, நாட்டு அரிசிகளுக்கு சந்தையில் கடும் தட்டுப்பாடு!

நாடளாவிய ரீதியில் சந்தைகளில் உருவாக்கப்பட்டுள்ள உள்நாட்டு சிவப்பு அரிசி, வெள்ளை பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது.

நுகர்வோர் பச்சையரிசியை தேடி கடைகளுக்கு சென்றாலும் கட்டுப்பாட்டு விலைக்கு பச்சையரிசியை பெற்றுக் கொள்வதில் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

அனைத்து பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை கடைகளில் பச்சையரிசி தொட்டிகள் காலியாகக் கிடப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

ஒரு சில கடைகளில் பச்சையரிசி காணப்பட்ட போதிலும், அந்த அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாகியுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஒரு கிலோ உள்ளூர் பச்சையரிசியின் கட்டுப்பாட்டு விலை 220 ரூபாய் என்ற போதிலும் கடைகளில் 240 ரூபாய் தொடக்கம் 300 ரூபாய் வரையில் ஒவ்வொரு விலைகளில் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, தற்போது எந்தவொரு நிலையிலும் அரிசியை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு சூழல் எழுந்துள்ளது.

சில தினங்களுக்கு முன் பல்பொருள் அங்காடிகளில் பச்சையரிசி தொட்டிகளில் 220 ரூபாய் என விலை குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் தற்போது 240 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை, அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல் தற்போது அரிசி நெருக்கடியை தீர்க்க முடியாத வெறும் காகிதமாக மாறியுள்ளதாக தேசிய விவசாய சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார்.

மொத்த விற்பனையாளர்களுக்கு விதிக்கப்பட்ட நடைமுறைப்படுத்தப்படாத அரிசி வர்த்தமானி அறிவித்தலின் மூலம், சில்லறை விற்பனையாளர்கள் தற்போது உள்ளூர் பச்சையரிசி மற்றும் நாட்டு அரிசி விற்பனையில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான கையிருப்பு ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் காணப்படுவதாகவும் நுகர்வோர் அதிகார சபைக்கு குறித்த நெல் கையிருப்பை கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அரசாங்கம் மற்றும் நுகர்வோர் அதிகார சபை கூறுவது பொய் எனவும் அவர் கூறினார்.

பச்சை மற்றும் நாட்டு அரிசிக்கு தேவையான நெல் கையிருப்பு அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இன்னும் இருப்பதாக அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் சொல்வது பொய் என்றும், அந்த நெல் கையிருப்பை அரசாங்கமும், நுகர்வோர் அதிகார சபையும் கண்டு கொள்ளவில்லை என்றும் அவர் கூறினார்.

நுகர்வோரை தவறாக வழிநடத்தி அரிசி வர்த்தகர்கள் தேவையற்ற இலாபம் ஈட்ட அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அரிசி நெருக்கடியை தீர்ப்பதில் அரசாங்கமும் நுகர்வோர் அதிகார சபையும் ஒழுங்காக ஈடுபடவில்லை எனவும் தேசிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
 

https://oruvan.com/there-is-a-severe-shortage-of-red-white-and-local-rice-in-the-market/

 

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் - அரசாங்கம்

07 Jan, 2025 | 06:15 PM
image
 

(எம்.மனோசித்ரா)

அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம். எவ்வாறிருப்பினும் ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன்னும் அதிக உள்நாட்டு அரிசியும் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டிலுள்ள தரவுகள் தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. தகவல்களுக்கிடையில் பரஸ்பர தன்மை காணப்படுகிறது. அவை சரியானவையாகவும் இல்லை. தற்போது வரை ஒரு இலட்சத்து 6000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாயக்கிழமை (7) மேலும் 10 000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட 60 000 மெட்ரிக் தொன் நாட்டரிசியும் காணப்படுகிறது.

அது மாத்திரமின்றி தேசிய அரிசி ஆலை உரிமையாளர்களாலும் தற்போது அரிசி விநியோகிக்கப்படுகிறது. இனியும் அரிசியை மறைத்து வைத்திருப்பதால் எவ்வித பயனும் இல்லை. எவ்வாறிருப்பினும் சில பிரதேசங்களில் எதிர்பார்க்குமளவுக்கு அரிசி விநியோகிப்படுவதில்லை என்ற தகவலும் கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே அரிசி விநியோ கட்டமைப்பை பலப்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.

இம்மாதம் மூன்றாம் வாரமளவில் உள்நாட்டில் உற்பத்தியான அரிசி சந்தைகளுக்கு விநியோகிக்கப்படும். சுமார் இரண்டரை இலட்சம் மெட்ரிக் தொன் முதல் 4 இலட்சம் மெட்ரிக் தொன் வரை அரிசியை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நாமும் தீர்வினைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

தட்டுப்பாடு நிலவுகிறது என்று கூறப்படுவது எவ்வாறு தவறான தகவல் இல்லையோ, அதேபோன்று அரிசி மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலும் தவறானதல்ல. உள்நாட்டில் அரிசி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நம்பிக்கை வைத்து தான் கடன் வழங்கப்படுகிறது. அமைச்சரவை அங்கீகாரத்துடன் வங்கிகள் ஊடாக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இவர்கள் கடன் பெறும் போது இணங்கியுள்ள நிபந்தனைகளை மீறினால் கருப்பு பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள். மீண்டும் எந்தவொரு கடனும் வழங்கப்பட மாட்டாது. இதற்கு முன்னர் இருந்தவர்களுடன் செயற்பட்டதைப் போன்று எம்முடன் விளையாட முடியாது என்றார்.

அரிசி பிரச்சினைக்கான தீர்வினையே நாமும் தேடிக் கொண்டிருக்கின்றோம் - அரசாங்கம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அரிசி தட்டுப்பாட்டுக்கு 3 வாரங்களில் முற்றுப்புள்ளி - விவசாய பிரதி அமைச்சர்

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+3+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF+-+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D

ஆலைகளிலிருந்து அரிசியை கட்டுப்பாட்டு விலையில் கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக புறக்கோட்டை மொத்த அரிசி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். 

நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு சில தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தாலும், ஆலை உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்பனை செய்வதில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதேநேரம் நாட்டின் பல பகுதிகளில் மீண்டும் சிவப்பு அரிசி உள்ளிட்ட பல அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர். 

இந்தநிலையில், கட்டுப்பாட்டு விலைக்கு அப்பால் அரிசியை விற்பனை செய்ய முடியாதமையினால் அரிசி வர்த்தகத்தில் இருந்து விலக நேர்ந்துள்ளதாக சில்லறை வர்த்தகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இதேவேளை, இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசியை 150 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கான இயலுமை உள்ள போதிலும் அரசாங்கம் வரி விதிப்பதன் மூலம் அதிக வருமானத்தை ஈட்டுவதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன குற்றம் சுமத்தியுள்ளார். 

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் அரிசிக்கு 65 ரூபாயினை அரசாங்கம் வரியாக அறவிடுகிறது. 

நேற்று வரையில் 88 ,000 மெற்றிக் டன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதனூடாக 5.7 பில்லியன் ரூபாயினை அரசாங்கம் வருமானமாக ஈட்டியுள்ளதாக விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கே.பி. குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரிசி தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். 

அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் நெல்லில் மூன்றில் ஒரு பகுதியை அரசாங்கம் கொள்வனவு செய்யும் அதேவேளை, நெல்லுக்கான நியாயமான விலையொன்றும் நிர்ணயிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். 

அதற்கமைய, அரிசி தட்டுப்பாடு என்ற பேச்சுக்களுக்கு 3 வாரங்களில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
 

https://www.hirunews.lk/tamil/393012/அரிசி-தட்டுப்பாட்டுக்கு-3-வாரங்களில்-முற்றுப்புள்ளி-விவசாய-பிரதி-அமைச்சர்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டு மாநில அரசு போல் ஒரு இலவச பொங்கல் package சங்கக்கடையின் ஊடாகக் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் IMF க்கு மட்டும் தெரியாமல் இருக்க வேண்டும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.