Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3   15 JAN, 2025 | 10:39 AM

image

தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு, "வல்வை பட்டத் திருவிழா - 2025" வல்வை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் நேற்று செவ்வாய்க்கிழமை (14) நடைபெற்றது.

வல்வை விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் விமலதாஸ் கவிச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும், சிறப்பு விருந்தினராக  வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் சிவபாதசுந்தரம் சத்தியசீலனும் கௌரவ விருந்தினராக வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற செயலாளர் சத்தியநாதன் கிசோக்குமாரும் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த பட்ட போட்டியில் சுமார் 130 பட்டங்களை அதனை வடிவமைத்தவர்கள் விண்ணில் பறக்க விட்டிருந்தனர். அவற்றில் "உயிர்த்தெழும் ராகன்" பட்டம் முதலாமிடத்தையும், "மின் பிறப்பாக்கி பட்டம்" இரண்டாம் இடத்தினையும் , "ஹெலிகாப்டர் மூலம் தூக்கி செல்லும் திரையரங்கு" பட்டம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.

அத்துடன் இந்த நிகழ்வில் கல்விச் சாதனையாளர்களையும் ஆளுநர் கௌரவித்தார்.

இங்கு பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர், யாழ். மாவட்டச் செயலராக 2018ஆம் ஆண்டு இருந்தபோது இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டதை நினைவுகூர்ந்ததுடன் இந்த நிகழ்வு தொடர்ச்சியாக சிறப்பாக இடம்பெறுவதாகவும் குறிப்பிட்டார்.

எமது மண்ணின் பெருமைகளை பறைசாற்றும் வகையில் இந்தப் போட்டிகள் அமைந்துள்ளதாகத் தெரிவித்த ஆளுநர், இது பாராட்டப்படவேண்டிய விடயம் எனவும் குறிப்பிட்டார். 

ஒவ்வொருவரதும் தனித்துவமான திறமைகளை வெளிக்கொணர்வதற்கான சந்தர்ப்பமாக இந்தப் பட்டப்போட்டி அமைந்துள்ளதுடன், ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக சிந்தித்து பட்டங்களை உருவாக்குவது சிறப்பானது என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். 

WipeOut39_14_2025_093937.253000.jpg

__________________________2_.jpg

________________________________________

_____________________2_.jpg

2__4_.jpg

WipeOut42_14_2025_094229.493000.jpg

2__2_.jpg

WipeOut43_14_2025_094315.330000.jpg

IMG-20250114-WA0208.jpg

IMG-20250114-WA0203.jpg

IMG-20250114-WA0204.jpg

https://www.virakesari.lk/article/203835

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பட்டத் திருவிழா

சர்வதேச பட்டத் திருவிழா

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் வினோத விசித்திர சர்வதேச பட்டத் திருவிழா நேற்று (14) மிகச் சிறப்பான விழாவாக இடம்பெற்றது.

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் பட்டத் திருவிழா இடம்பெற்றது. இதனைக் கண்டுகழிக்க பல்லாயிரக் கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். குறிப்பாக வெளிநாட்டவர்களும் பட்டத் திருவிழாவை பார்வையிட வந்திருந்தனர்.

இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது.

வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்டத்திருவிழாவில் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://tamil.adaderana.lk/news.php?nid=198790

  • கருத்துக்கள உறவுகள்

பட்டங்கள் செய்வதிலும் அவற்றைப் பறக்க விடுவதிலும் வல்வெட்டித்துறை தேசத்தின் ஒரு பொக்கிஷம் என்றுதான் சொல்லவேண்டும் . ....... அனைவருக்கும் பாராட்டுக்கள் . .......!  👍

  • கருத்துக்கள உறவுகள்

இதன் போது இலங்கை அரசின் Clean Srilanka என்ற பெயரைப் பொறித்து இலங்கை ஜனாதிபதி மற்றும் இளைய தளபதி விஜய் அவர்களது உருவப் படம் பொறித்த ஒரு நூலில் இரட்டைப் பட்டங்கள் மூன்றாமிடத்தைப் பிடித்துக் கொண்டது.

 

அனுரகுமர...வல்வெட்டித்துறையையும் கிளீன் பண்ணிவிடுவார் போல...

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு ஊருக்கும், பிரதேசத்திற்கும் என்று சில சிறப்புகள் இருக்கும். சிறு வயதுகளில் இருந்தே ஊருடன் அல்லது பிரதேசத்துடன் சேர்ந்து தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்பவர்கள் ஒரு மீன் குஞ்சு நீந்துவது போல அங்கிருப்பவற்றில் தேர்ந்தவர்கள் ஆகின்றனர்.

வல்வையில் கடல் நீச்சல், உதைபந்தாட்டம், பட்டம் கட்டுதல், புகைக்குண்டு செய்தல் போன்றன அந்த ஊரின் சிறப்புகள்.

நான் பதின்ம வயதுகளில் அங்கு இருக்கும் போது, 80ம் ஆண்டுகளில், ஊரில் பெரிய பெரிய படலங்களை கட்டுவது, படலங்களை ஒன்றன் பின் ஒன்றாக தொடுத்து விடுவது, 'லைட் படலம்' ஏற்றுவது என்பன தான் பெரிய முயற்சிகள். இன்று இந்த இளைஞர்கள், அவர்கள் கட்டி ஏற்றும் பட்டங்கள் போன்றே, வேறு ஒரு உயரத்திற்குப் போய்விட்டார்கள்............................❤️.

சில பழைய நினைவுகள். என் வீட்டுக்கு பக்கத்து ஒழுங்கையில், தெணியம்பை ஒழுங்கை, இருந்த ஒரு குடும்பம் 25 பட்டங்களை தொடுத்துவிடுவார்கள். முதலில் ஏறும் பட்டம் மிகக் குட்டியாக இருக்கும். அடுத்தது கொஞ்சம் பெரிதாக இருக்கும். இப்படியே 25 பட்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வானத்தில் வரிசையாக நிற்கும். இன்னும் அது கண்களை விட்டு மறையவில்லை. கடைசியாக ஏறும் பட்டம் கயிறு போன்ற ஒரு நூலில் தான் ஏற்றப்படும். அதுவே நைலோனாக இருந்தால், கொஞ்சம் அசந்தாலே கையை துண்டாக்கி விட்டுவிடும். குர்லோன் வகை என்றால் கையை வெட்டாது, ஆனாலும் ஒருவராலோ அல்லது இருவராலோ 25 பட்டங்களையும் இழுத்து வைத்துக்கொள்ள முடியாது. அது ஆட்களை இழுத்துக் கொண்டு போய் அடுத்த அடுத்த ஊர்களில் போட்டுவிடும்.

கப்பி கட்டி, அதனூடு நூலை/கயிற்றை விட்டு, பட்டங்களை பிடிப்பதும் உண்டு.

நான் ஒருமுறை எட்டுப் படலங்களை தொடுத்து விட்டுவிட்டு, வீட்டுக் கூரையின் வளை ஒன்றில் துணிகளை சுற்றிவிட்டு, பட்டங்களைக் கட்டி வைத்திருந்தேன். மிகவும் தடித்த நைலோன் நூல். திடீரென்று மேல் காற்று குழம்ப, பட்டங்கள் அதிகமாக அசைய, வீட்டு வளை தூக்கப்பட்டது. அப்படியே பல ஓடுகள் பொலபொலவென்று விழுந்தன. விழுந்த ஓடுகளை விட முதுகில் விழுந்த அடிகள் கூட. மாரிகாலம் வேற.

முன்னோடிகளுக்கு முதுகில் அடி விழும் என்பதை அனுபவமாக அறிந்துகொண்ட தருணம் அது.

பெரிய பட்டங்களை கமுகம் சலாகையில் கட்டுவோம். ஓரளவான பட்டங்களை மூங்கிலில் கட்டுவோம். ஆகச் சிறியவற்றை ஈர்க்கிலில் கட்டுவோம்.

மூங்கிலில் கல் மூங்கில், தோல் மூங்கில் என்று இரண்டு வகைகள் அந்த நாட்களில் இருந்தன. ஊரில் வளர்வது கல் மூங்கில். தோல் மூங்கில் கடலில் மிதந்து வந்து கொண்டிருந்தது. அதன் விலை அதிகம். விடிய முன்னரே கடற்கரைக்கு ஓடிப் போய் ஏதாவது மூங்கில் மிதந்து வருகின்றதா என்று கடலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை துலாவிய நாட்களும் உண்டு. 

இதை எழுத ஆரம்பித்தால் எழுதி முடியாது போலிருக்கின்றது..................❤️.     

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையிலையும் இப்பிடித்தான், ஆனாலும் வல்வெட்டித்துறையை அடிக்க முடியாது. தொடுத்து விடுறதிலை வேற லெவல். வடமராட்சியிலை பொதுவாவே பட்டப் பைத்தியங்கள் தான் 😁.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
25 minutes ago, villavan said:

பருத்தித்துறையிலையும் இப்பிடித்தான், ஆனாலும் வல்வெட்டித்துறையை அடிக்க முடியாது. தொடுத்து விடுறதிலை வேற லெவல். வடமராட்சியிலை பொதுவாவே பட்டப் பைத்தியங்கள் தான் 😁.

வட மாகாணத்திலை வடமராட்சி கொஞ்சம் வித்தியாசமானது.படிப்பிலும் சரி...வீரத்திலும் சரி...
அதிலும் வல்வெட்டித்துறை 60,70களிலையே கோலோச்சியது. இதைத்தான் சொல்வது மண்ணின் மகிமை என.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

😀

 

அனுரகுமர...வல்வெட்டித்துறையையும் கிளீன் பண்ணிவிடுவார் போல...😀

ஆனால் பாருங்கோ அவையள் இளைய தளபதியை பெரிய தியட்டரிலயும் ,தோழரை சின்ன தியட்டரிலயும் ஓட விட்டிருக்கினம் .(என்க்கு மீசையில் மண் படவில்லை )

..ஒரு காலத்தில் தோழரின்ட அப்பா ,தாத்தாமார் கடற்படையில் கடமை செய்யும் பொழுது உழைப்பு  காட்டிய  கிராம‌ம் அல்லவோ ...

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

அனுரகுமர...வல்வெட்டித்துறையையும் கிளீன் பண்ணிவிடுவார் போல...

பொறுங்க இப்பதானே வாகன இறக்குமதி என்ற புலி வாலை பிடித்து இருக்கினம் ஒரு கட்டத்தில் சீட்டு கட்டு சரிவதை போல் சரியும் மீண்டும் அரிசிக்கு வரிசை தென்னிலன்கையில் தொடங்கி விட்டது .

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, villavan said:

வடமராட்சியிலை பொதுவாவே பட்டப் பைத்தியங்கள் தான் 😁.

அந்தப் பெருமை எனக்கும் இருக்கு😊

ஆனால் விசித்திரமான பட்டங்கள் செய்யும் திறமை இருக்கவில்லை! சாதாரண பிராந்துப் பட்டத்திற்கு பலன்ஸ் செய்வதே கஷ்டம். இவர்கள் எப்படித்தான் இந்த விசித்திரமான பட்டங்களைக் கட்டுகின்றார்களோ தெரியவில்லை.  aeronautical அறிவு கூடியவர்களாக இருக்கின்றார்கள்! 

முன்னர் யாழில் எழுதிய பதிவு. தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை!

எனது புளக்கில் உள்ளது:

https://kirubans.blogspot.com/2017/04/blog-post_1.html?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR3_e0D_c98EKwMBvSfBLI2s0wS6QqBaRJHr4O217e10-4Hj7wwBToOfLCo_aem_OxVa7NUruS_c3ye3Ii9SGQ&m=1

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

அருமை @கிருபன் .

நாங்கள் பாசல்நாரைநல்லாச் சீவி தேக்கு விசை போட்டும் ஏத்திறனாங்கள், சத்தம் கமறும்.
விண் பூட்டிறதிலை அப்பா ஒரு கதை சொல்லுறவர், முந்தி செப்புக்கம்பியைச் சப்பளிச்சும் விண் பூட்டிறதாம், அதைப் போட்டால் றேடியோ எல்லாம் கறகறக்கத் துவங்கிடுமாம் அதாலை அதைத் தடை செய்து போட்டாங்களாம் எண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, villavan said:

அருமை @கிருபன் .

நாங்கள் பாசல்நாரைநல்லாச் சீவி தேக்கு விசை போட்டும் ஏத்திறனாங்கள், சத்தம் கமறும்.
விண் பூட்டிறதிலை அப்பா ஒரு கதை சொல்லுறவர், முந்தி செப்புக்கம்பியைச் சப்பளிச்சும் விண் பூட்டிறதாம், அதைப் போட்டால் றேடியோ எல்லாம் கறகறக்கத் துவங்கிடுமாம் அதாலை அதைத் தடை செய்து போட்டாங்களாம் எண்டு.

இங்கு வந்த பின்தான் தெரியுது சண்டே சவுண்டே கொடுக்க கூடாது என்று ஊரில் சவுண்டு கொடுத்தால் தான் மரியாதையே 😀

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.