Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளன்    ..  . ஒன்று

இராசராசசோழன் ......இரண்டு ]

ஸ்ரீ லங்காவை ஆண்ட தமிழ் ஆட்சியர் இராவணன் அதற்கு அடுத்த ஆட்சியர் விபீஷணன்  இவர்களை கந்தையா அண்ணா  மறந்துவிட்டார்  அவர்கள் ஆட்சியில் ஸ்ரீ லங்கா தற்போதைய சிங்கபூர் மாதிரி இருந்தது எல்லோ.

15 hours ago, செவ்வியன் said:

தமிழ்நாடு இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கும்போது அங்கே தமிழ்தேசியம் எப்படி சாத்தியமாகும். அங்கு யாரும் தமிழ் தேசியம் அமைக்க தனிநாடு கேட்டுப் போராடவில்லை,

நல்லதொரு விளக்கம்

  • Replies 544
  • Views 26k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி.

  • விசுகு
    விசுகு

    யாழ் கள உறவுகளே... வணக்கம்  இவர் போன்றவர்கள் இங்கே வருவதே இது போன்ற குப்பைகளை இங்கே கொட்டவும் அதனைக் கொண்டு எம்மிடையே மேலும் மேலும் பிளவுகளையும் ஒருமித்து நிற்க முடியாத அளவுக்கு சிக்கல்களை ஏ

  • சீமான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தையும், நடத்திய இயக்கத்தையும் வைத்து தன் பிழைப்பை நடத்தாமல் இருந்தாலே யாரும் அவரையும், ஆதரவாளர்களையும் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வர். அது தொடரும் வரை இது போன்ற செய்திக

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, விளங்க நினைப்பவன் said:

எல்லாளன்    ..  . ஒன்று

இராசராசசோழன் ......இரண்டு ]

ஸ்ரீ லங்காவை ஆண்ட தமிழ் ஆட்சியர் இராவணன் அதற்கு அடுத்த ஆட்சியர் விபீஷணன்  இவர்களை கந்தையா அண்ணா  மறந்துவிட்டார்  அவர்கள் ஆட்சியில் ஸ்ரீ லங்கா தற்போதைய சிங்கபூர் மாதிரி இருந்தது எல்லோ.

நல்லதொரு விளக்கம்

அவர்கள் 12 மணத்தியால கணக்குக்குள் வரவில்லை என நினைக்கிறேன்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

பெரியார் எமக்கு தேவையில்லை. அவர் முரண்பாடுகளின் மூட்டை.

எமக்கு செயல்வீரன் பிரபாகரன் போதும்! 👍

குழப்பவாதியாக இருக்கிறீர்கள், ஒன்றிலிருந்நது மற்றொனாறாய் தாவி கொண்டே இருக்கிறீர்களா.

இங்கு யாரும் பெரியார் ஈழத்துக்கு தேவை என்றும் கூறவில்லை , பிரபாகரனுக்கு மாற்று என்று கூறவில்லை.ஏன் தமிழ்நாட்டில்  பெரியாருக்கென்று வாக்கு வங்கி இருப்பதாக கருதவில்லை.

இருவரும் போராடிய களங்கள் வேறு, போராட்ட வடிவமும் வேறு. ஆனால் இருவரும் தம் வாழ்நாளின் இறுதி வரை போராடினர்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

இலங்கை திவாலானதன் காரனம் கிச்சன் கபினைற். மணைவி சிராந்தி சொல் கேட்டு குடுமபத்தையே அரசியலுக்கு கொண்டு வந்ததால் மகிந்தா திருடராக பெயர் வாங்கி  நிற்கிறார். இதை அப்படியே தமிழகத்துக்கு பொருத்திப் பார்த்தால், கருணாநிதி திருடராகவும், அண்ணாத்துரை 

போனவருடம் போன போது, மலை இல்லை, அடுக்குமாடி வீடுகள். அதே திமுக: வித்தியாசம் மகனாட்சி: பேரனும், பூட்டனும் ரெடி.

முன்னாள் நிதி அமைச்சர் தியாகராஜன் சொன்ன மச்சான்மார் 30,000கோடி கொள்ளை பொய்யல்ல.

இந்த கொள்ளையர்கள் போடும் முகமூடீ பெரியார். அவர் உண்மையிலேயே பாவம்.

கொள்ளையடித்த பணத்தை, வைத்துக்கொண்டு, கம்யூனீஸ்ட், VCK, இஸ்லாமிய கட்சிகளை வளைத்துப் போட்டுள்ளனர்.

இதற்கு 2 தீர்வு தான் இருக்கமுடியும், ஒன்று அரசியல் ரீதியானது ஆனால் மக்கள் திமுக அல்லது அதிமுக என்றே தேர்ந்தெடுக்கின்றனர், காரணம் அவர்கள் மீது நம்பிக்கை என்பதை விட மாற்றம் என்று வருபவர்கள் எல்லாம் ஏமாற்றாய் இருப்பதால் தான்.

மற்றொரு தீர்வு சட்டரீதியிலானது, அவ்வாறு பெரிதாக எடுக்கவுமில்லை. ஊழல் நடக்கிறது ஆனால் நடவடிக்கை இல்லை என்றால் எல்லாம் கூட்டு களவாணிகள் தான். மக்களுக்கு நல்லதொரு மாற்றம் வந்தால் மட்டுமே இவை மாறும், அது இதுவரை புலப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

தமிழகத்தை யாராவது காப்பாற்ற வேண்டும். அதன் சூழலியல் அழிவு குறித்து பேசும் ஒரு சிலரில், நாதக வும் ஒன்று.

நாதகவின் முக்கிய நிதி கொடையாளி தாது மணல் கொள்ளைக்காரர் விவி மினரல்ஸ் வைகுண்டராஜன் தான். சீமானின் திருமண செலவையே இவர் தான் செய்தார் என்ற பேச்சுண்டு.

இந்த திமுக ஆட்சி அமைந்தபின் ஒரு குவாரி பிரச்சனை சம்பந்தமாக நாதகவின் சுற்றுசூழல் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டார், அது குறித்து சீமான் எதிர்ப்போ, போராட்டமோ எதுவுமில்லை. இன்று அந்த நாதக போராளி பிசிறாக ஒதுக்கப்பட்டுவிட்டார்.

சீமான் நடத்தும் போராட்டங்கள் எல்லாம் இயற்கை வளத்தை காக்க அல்ல, அக்கொள்ளையர்களிடமிருந்து பணம் பெற்று தன்வளத்தை பெருக்கி கொள்ள

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

தலைவர் சீமானை, தேர்வு செய்தது, எமது பிரச்சணையை, அதன் நியாயத்தை தமிழக மக்களுக்கு, ஓர் 5000 பேருக்காவது சொல்வார் என்று.

தலைவர் சீமானை தெரிவு செய்தார் அடிப்படை ஆதாரமில்லாத ஒன்றை சொல்கிறீர்கள். இது புலிகளை குறைத்து மதிப்பிடும் செயல். 

இன்றும் என்றும் தமிழ்நாட்டினர் மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலான தமிழருக்கு ஈழத்தின் மீதான அக்கறையும் கரிசன பார்வையும் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இன்று 36 இலட்சம் பேர், பிரபாகரன் தலைமை கொண்ட கட்சியின் பின்னால். இன்னும் அதிகரிக்கும் என்றே நிணைக்கிறேன்.

இது நமக்கு பெருமைக்குரிய விடயம்.

அவர்கள் எமக்கு எதிர்காலத்தில் உததவுவது அப்புறம். முதலில் தமிழகத்தை, அதன் வளங்களை, அப்பாவிப் பெரியார் முகமூடித் திருட்டுதிராவிடத்திடம் இருந்து காக்கட்டும்.

🙏

தமிழ்நாட்டில் பலருக்கு பிரபாகரன் ஒரு ஆதர்ச நாயகன், மாவீரன், ஆனால் அவரை தூக்கி பிடிப்பதால் மட்டுமே ஓட்டு விழாது. ஈழப்போரில் உச்சக்கட்டத்தில் தேர்தல் நடந்த போது பெரும் எதிர் பரப்புரையையும் மீறி திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.

சீமானுக்கு பிரபாகரன் வெறும் முகமூடிதான் , அதை கழற்றி எறிந்துவிட்டு காசு கொடுக்கும் எசமான் சொல்லும் முகமூடியை மாட்டும் காலம் வெகு தூரமில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, செவ்வியன் said:

அதுவும் அந்த பிரபாகரன் என்ற முக மூடி பெருமளவு ஓட்டுகளை பெற உதவாது. அந்த முகமூடியை வைத்து பிஜேபியிடம் புறோக்கர் வேலை செய்து பணம் உழைக்கலாம் என்பது சீமானுக்கு தெரியும் . சீமானின் குறியும் அது தான். 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, செவ்வியன் said:

இதற்கு ஏற்கனவே இதே திரியில் ஜஸ்டின் பதில் அளித்திருக்கிறார். படித்து பார்க்கவும். இப்போது திராவிடர் கழகம் பதிப்புரிமையை வைத்திருக்கிறது, அரசுடைமையாக்கினால் யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம். அவ்வளவு தான் வேறுபாடு

நான் சொல்லுவது இணையத்தளத்தில் பதிவேற்றுவது பற்றியது( digitization). அப்போது எல்லோரும் நேரடியாக வாசித்து பெரியார் பற்றி அறிந்துகொள்ளலாம். இப்படி புடுங்குப்படத்தேவை இல்லையே. பெரியார் இப்படித்தான் சொன்னார் அது இந்த இதழில் வந்திருக்கிறது என்றுவிட்டு எம்வேலையை பார்க்கலாம்.

13 hours ago, Justin said:

"என்னாது? காப்பி ரைற்றா?? அப்படீல்லாம் கிடையாது, நாம எப்பவும் ரீ தான்😂!

copyright இற்கும்  digitization இற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால் நான் ஒன்றும் செய்யமுடியாது. இதுக்குள்ள நக்கல் வேற. 

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் பெயரின் தமிழ்வேந்தன் என்பவர் அறிக்கை கொடுத்துள்ளார்.  இவர் உண்மையாகவே விடுதலைப்  புலிகளின் அமைப்பைச் சேர்ந்தவரா இல்லையா என்பதை சீமான் தம்பிகள் கட்டாயம் ஆராய்வார்கள், ஆனால் அறிக்கையில் உள்ள கருத்து விடுதலைப் புலிகளின் தமிழ்நாடு பற்றிய கொள்கைகளுடன் ஒத்துப்போகின்றது. 

இப்படியான அறிக்கைகள் 10-15 வருடங்களுக்கு முன்னர் வந்திருக்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/1/2025 at 11:28, செவ்வியன் said:

சங்கி சைமன் என்ற மலையாளி மட்டும் தமிழ் தேசியம் என்ற போர்டை மட்டும் வைத்து இந்து தேசியத்திற்கு தேவையான உருட்டுகளை மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.

ஆசான் ஜெயமோகன், அவரும் மலையாளிதான், இப்படிச் சொல்லியுள்ளார்!

“மலையாளம் என்பதே தமிழ்தான். சொல்லப்போனால் மாற்றுமொழி உச்சரிப்புச் சாயல் வந்து சேராத தொல்தமிழே மலையாளம். தொல்தமிழ்ப் பண்பாடே மலையாளப் பண்பாடு”

“தொல்தமிழின் ‘ராகம்’ கொண்ட உச்சரிப்பு தமிழகக் கடலோர மக்களிடமும், பழங்குடிகளிடமும், ஈழத்து மக்களிடமும் உண்டு. இவர்கள் அனைவருமே மலையாளம் போல் தமிழ் பேசுபவர்கள் என்பார்கள் மையநிலத் தமிழர்கள்.”

சீமான்,மலையாளம், கடிதம்

jeyamohanJanuary 31, 2025

seemaan-1024x614.jpg

அன்புள்ள ஜெயமோகன்,

செந்தமிழன் சீமான் இந்த உரையில் ஆற்றூர் ரவிவர்மா தமிழ் பற்றிச் சொன்னதைச் சொல்கிறார். உலகில் தாய்மொழியிலேயே பேரிலக்கியங்களை வாசிக்கும் வாய்ப்புள்ளவர்கள் சீனர், கிரேக்கர் தமிழர் என்று. அது நீங்கள் ஓர் உரையில் குறிப்பிட்டது. நீங்கள் தமிழரா மலையாளியா?

சிவலை தமிழரசு

அன்புள்ள தமிழரசு,

சீமான் உரை கேட்கவில்லை. நீண்ட உரைகள், அரசியலுரைகள் கேட்கும் நிலையில் நான் இல்லை. அந்த ‘high voltage’ அரசியல் விவாதங்களிலேயே எனக்கு ஆர்வமில்லை. அது வேறு உலகம்.

ஆற்றூர், நித்ய சைதன்ய யதி , ஐயப்பப் பணிக்கர் ஆகிய பலர் சொல்லியிருக்கும் கருத்துத்தான் நீங்கள் சொல்வது. ஐயப்பப் பணிக்கர் தொல்காப்பிய அழகியல் இலக்கணத்தையே மலையாளத்துக்கும் அடிப்படையாக முன்வைத்தவர்.

நான் மலையாளி. அதை மறைப்பதில்லை, மழுப்புவதுமில்லை. ஆனால் மலையாளம் என்பதே தமிழ்தான். சொல்லப்போனால் மாற்றுமொழி உச்சரிப்புச் சாயல் வந்து சேராத தொல்தமிழே மலையாளம். தொல்தமிழ்ப் பண்பாடே மலையாளப் பண்பாடு. குறைந்தது நூறாண்டுகளாக என் குடும்பம் செவ்வியல் தமிழ்- மலையாளம் இரண்டிலும் தேர்ச்சிகொண்டதாக இருந்து வருகிறது.

(தொல்தமிழின் ‘ராகம்’ கொண்ட உச்சரிப்பு தமிழகக் கடலோர மக்களிடமும், பழங்குடிகளிடமும், ஈழத்து மக்களிடமும் உண்டு. இவர்கள் அனைவருமே மலையாளம் போல் தமிழ் பேசுபவர்கள் என்பார்கள் மையநிலத் தமிழர்கள். என்னைப் பற்றியும் அப்படிச் சொல்வதுண்டு. நான் ‘எங்கள் குமரிமாவட்டத்து உச்சரிப்பே சரியான தமிழ்’ என்று பதில் சொல்வது வழக்கம். தொல்லியல்- மொழியியல் ஆய்வாளர் ராமச்சந்திரன் உதவியுடன் செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு அமைத்த தமிழ் உச்சரிப்பு இதே ஒலிகொண்டிருந்தது)

மலையாள அடித்தளப் பண்பாட்டைப் புரிந்துகொள்ளாமல் தொல்தமிழ்ப்பண்பாட்டை புரிந்துகொள்ள முடியாது. சங்ககாலம் முதல் தொடரும் வேலன் வெறியாட்டு முதல் பல்வேறு சடங்குகளும் வழிபாடுகளும் கேரளத்திலேயே உள்ளன. சிலப்பதிகாரப் பண்பாடும் கேரளத்திலேயே உள்ளது.

கேரளம் ஆங்கிலேயர் வந்து மலைகளை தோட்டமாக்குவது வரை மிக வறிய நிலம். அங்கே உபரிச்செல்வம் மிகக்குறைவு. ஆகவே பெருநகரங்கள், பெரிய ஆலயங்கள் மிகக்குறைவு. அதனால் அன்னியர் படையெடுப்பும் ஆக்ரமிப்பும் பெரும்பாலும் நிகழவில்லை. பின்னர் கடலோரப்பகுதிகளில் ஊடுருவல்கள் நிகழ்ந்தன. ஆக்ரமிப்பு நிகழவில்லை. ஆனால் மலைகளில் தொல்தமிழ்ப்பண்பாடு அப்படியே நீடிக்கிறது.

‘மலையாளம் என்பது தொல்தமிழ்தான், தமிழகம் என்னும் பண்பாட்டு நிலத்திலேயே கேரளமும் உள்ளது’என்பது என் தனிப்பட்ட கருத்து அல்ல. இது கேரளத்தில் வலுவாகவே நீடிக்கும் ஒரு சிந்தனைப் பள்ளி. இளம்குளம் குஞ்ஞன்பிள்ளை, ஐயப்பப் பணிக்கர், எம்.கோவிந்தன் என அதற்கு மூன்று தலைமுறைத் தொடர்ச்சி உண்டு. எம்.கோவிந்தனின் மாணவர்தான் ஆற்றூர் ரவிவர்மா. அவர் சொல்வது அதையே. நான் ஆற்றூர் ரவிவர்மாவின் மாணவன்.

அந்தச் சிந்தனைப் பள்ளியில் வந்த நாவல்தான் மனோஜ் குரூர் எழுதி வம்சி பதிப்பகம் வெளியிட்ட ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ சங்ககாலம் பற்றிய மலையாள நாவல் அது. என் முன்னுரையுடன் மலையாளத்தில் வெளிவந்தது. ஆங்கிலத்திலும் இப்போது வெளிவந்துள்ளது. சங்ககாலப் பின்னணியில் ஓர் இலக்கிய நாவல் தமிழில் இன்னும் எழுதப்படவில்லை என்பதை நினைவுகூருங்கள்.

இளங்குளம் குஞ்ஞன்பிள்ளையின் அதேகாலகட்டத்திலேயே நாராயண குரு தமிழின் நீட்சியாக மட்டுமே மலையாளத்தை நோக்கும் அணுகுமுறை கொண்டிருந்தார். திருக்குறளை மொழியாக்கம் செய்தார். அவர் மரபில் வந்தமையால் நித்ய சைதன்ய யதியும் அதே கருத்தைச் சொல்கிறார். நான் நித்யாவின் மாணவன்.

இந்தக் கருத்தை இங்கே மட்டும் சொல்வதில்லை, எந்தக் கேரள அவையிலும் சொல்கிறேன். இன்றைய கேரளச்சூழலில் ஒரு சாராரின் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருக்கும் என எனக்குத் தெரியும், ஆனால் நான் எம்.கோவிந்தனின் மரபு, நாராயணகுருவின் மரபு என இதை அழுத்தமாகவே சொல்கிறேன். 2024 மாத்ருபூமி இலக்கியவிழாவில் அதைச் சொன்னேன். கேரள சம்ஸ்கிருதப் பேரவை, கேரள ஆசிரிய கூட்டமைப்பு போன்றவை கண்டனத்தீர்மானங்கள் நிறைவேற்றி என்னை மன்னிப்பு கேட்கும்படி கோரின.

இந்த இணையதளத்திலேயே நூறு கட்டுரைகளுக்குமேல் இந்தக் களத்தில் உள்ளன. கொற்றவை என்னும் நாவலே இக்கோணத்தில்தான் எழுதியுள்ளேன். சரி, சீமான் உரை வழியாகவேனும் என்னையும், இக்கருத்தையும்  தெரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. என் கட்டுரைகளையும் எதிர்காலத்தில் படிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

ஜெ

https://www.jeyamohan.in/211727/

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, செவ்வியன் said:

இங்கு யாரும் பெரியார் ஈழத்துக்கு தேவை என்றும் கூறவில்லை , பிரபாகரனுக்கு மாற்று என்று கூறவில்லை.ஏன் தமிழ்நாட்டில்  பெரியாருக்கென்று வாக்கு வங்கி இருப்பதாக கருதவில்லை.

இருவரும் போராடிய களங்கள் வேறு, போராட்ட வடிவமும் வேறு. ஆனால் இருவரும் தம் வாழ்நாளின் இறுதி வரை போராடினர்.

பெரியார் எதற்காகவெல்லாம் போராடினார்,யாருக்காக, யாருக்கு எதிராக  போராடினார் என்பதை சற்று விபரமாக எழுதுங்கள் விவாதிக்கலாம். ஏனென்றால் எமக்கு சுதந்திரமே வேண்டாம், தாய்மொழிக்கும் தாய்நாட்டிற்குமாக உயிரையும் கொடுப்பேன் என்றுசொல்பவன் முட்டாள், இந்தியா சுதந்திரம் அடைந்தநாள் கரிநாள் என்று கூறியவர் அவர்.

அண்ணா திகாவில் இருந்து பிரிந்து திமுக தொடங்கியபோது பெரியாரைப்பற்றிய எதையும் சொல்லி அவர் அரசியல் செய்யவில்லை. இருவரும் எலியும் பூனையும் போலவே இருந்தனர். MGR எப்போ ADMKஐ தொடங்கினாரோ அன்றிலிருந்துதான் பெரியார் DMK  ஆல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஆசான் ஜெயமோகன், அவரும் மலையாளிதான், இப்படிச் சொல்லியுள்ளார்!

“மலையாளம் என்பதே தமிழ்தான். சொல்லப்போனால் மாற்றுமொழி உச்சரிப்புச் சாயல் வந்து சேராத தொல்தமிழே மலையாளம். தொல்தமிழ்ப் பண்பாடே மலையாளப் பண்பாடு”

“தொல்தமிழின் ‘ராகம்’ கொண்ட உச்சரிப்பு தமிழகக் கடலோர மக்களிடமும், பழங்குடிகளிடமும், ஈழத்து மக்களிடமும் உண்டு. இவர்கள் அனைவருமே மலையாளம் போல் தமிழ் பேசுபவர்கள் என்பார்கள் 

சீமான் மலையாளியாகவோ இல்லை வேறு எவராகவோ இருப்பது பிரச்சனையில்லை. ஆனால் அவரும் அவரது தம்பிகளும் சாதி வெறியோடு மற்றவர்களை அடையாளபடுத்தும் போது இவ்வாறு சொல்லவேண்டியிருக்கிறது. என்னை போன்ற சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு என் பாட்டனார் வரை தான் வரலாறு தெரியும், அதற்கு முன்னர் என்னவென்றே தெரியாது. இன்று தமிழனாக உணர்கிறேனா, வாழ்கிறேன், அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, Eppothum Thamizhan said:

பெரியார் எதற்காகவெல்லாம் போராடினார்,யாருக்காக, யாருக்கு எதிராக  போராடினார் என்பதை சற்று விபரமாக எழுதுங்கள் விவாதிக்கலாம். ஏனென்றால் எமக்கு சுதந்திரமே வேண்டாம், தாய்மொழிக்கும் தாய்நாட்டிற்குமாக உயிரையும் கொடுப்பேன் என்றுசொல்பவன் முட்டாள், இந்தியா சுதந்திரம் அடைந்தநாள் கரிநாள் என்று கூறியவர் அவர்.

அண்ணா திகாவில் இருந்து பிரிந்து திமுக தொடங்கியபோது பெரியாரைப்பற்றிய எதையும் சொல்லி அவர் அரசியல் செய்யவில்லை. இருவரும் எலியும் பூனையும் போலவே இருந்தனர். MGR எப்போ ADMKஐ தொடங்கினாரோ அன்றிலிருந்துதான் பெரியார் DMK  ஆல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

பல புத்தகங்கள் , கட்டுரைகள் உள்ளது கூகிளாரிடம் கேட்டால் தருவார். உங்களுக்காக ஒன்று https://www.amazon.in/ஈ-வெ-இராமசாமி-பெரியார்-வரலாறு-History-V-Ramasamy-ebook/dp/B07XJGJMC9

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Eppothum Thamizhan said:

எமக்கு சுதந்திரமே வேண்டாம், தாய்மொழிக்கும் தாய்நாட்டிற்குமாக உயிரையும் கொடுப்பேன் என்றுசொல்பவன் முட்டாள், இந்தியா சுதந்திரம் அடைந்தநாள் கரிநாள் என்று கூறியவர் அவ

இதன் பொருள் - இந்தியா வை வெள்ளைகாரரிடம் இருந்து (பிராமணிய) கொள்ளைகாரர்கள் கைப்பற்ற போகிறார்கள் என்ற சரியான எதிர்வுகூறல்.

இன்று வரைக்கும் தமிழர்களாகிய நமக்கு இந்திய, இலங்க சுந்தந்திர நாட்கள் கரி நாட்களாகத்தானே அமைந்து விட்டன?

இதே காரணதுக்காக (பெரியார் திராவிடர் உரிமை, அம்மேத்கர் தலித் உரிமை) அம்பேத்கர் இலண்டன் வட்டமேசை மாநாடு வரை வந்து சுதந்திரத்தை கேள்வி கேட்டுள்ளார்.

இந்திய சுதந்திரம் பல இனவழி தேசிய இனங்களுக்கு அடிமை சாசனம்.

ஆகவேதான் அது ஒரு கரி நாள். இன்றும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இதே காரணதுக்காக (பெரியார் திராவிடர் உரிமை, அம்மேத்கர் தலித் உரிமை) அம்பேத்கர் இலண்டன் வட்டமேசை மாநாடு வரை வந்து சுதந்திரத்தை கேள்வி கேட்டுள்ளார்.

அதாவது குரங்கின் கைகளில் ஏன் பூமாலை கொடுத்தீர்கள் ? என்று கேட்டிருப்பார் போல….🤔🐒

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Paanch said:

அதாவது குரங்கின் கைகளில் ஏன் பூமாலை கொடுத்தீர்கள் ? என்று கேட்டிருப்பார் போல….🤔🐒

அதே.

0.1% ஆங்கிலேயர் கையில் இருந்து 3% பிராமணர்கள் கைக்கு அதிகாரம் மாறிய பொறிமுறைதான் இந்திய சுதந்திரம்.

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, செவ்வியன் said:

பல புத்தகங்கள் , கட்டுரைகள் உள்ளது கூகிளாரிடம் கேட்டால் தருவார். உங்களுக்காக ஒன்று https://www.amazon.in/ஈ-வெ-இராமசாமி-பெரியார்-வரலாறு-History-V-Ramasamy-ebook/dp/B07XJGJMC9

ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனாரின், ”தமிழர் தலைவர்” என்றநூலை வாசித்துப்பாருங்கள். ஏனென்றால் இந்நூல் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவரின் அனுமதியுடன் எழுதப்பட்ட நூல். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

அதே.

0.1% ஆங்கிலேயர் கையில் இருந்து 3% பிராமணர்கள் கைக்கு அதிகாரம் மாறிய பொறிமுறைதான் இந்திய சுதந்திரம்.

குறைந்தது சென்னை மாகாணத்தையாவது பிரிட்டிஷ்  தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியார் கேட்டதாக ஒரு கதையுண்டு. அது உண்மையால் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னை மாகாணத்திற்கு பின்னர் எப்படியும் பிரிட்டிஷ் இடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்கும். மற்றைய மொழிகள் பிரிந்து போக தமிழ் நாடு தனி நாடாக ஆகியிருக்கும். தென்னிந்தியவில் பல சுதந்திர தேசங்கள் இருந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

அதே.

0.1% ஆங்கிலேயர் கையில் இருந்து 3% பிராமணர்கள் கைக்கு அதிகாரம் மாறிய பொறிமுறைதான் இந்திய சுதந்திரம்.

அதுசரி, 3% பிராமணர்களுக்கு எப்படி அடுத்தடுத்த தேர்தல்களிலும் ஆட்சி அதிகாரம் கிடைத்தது?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Paanch said:

அதாவது குரங்கின் கைகளில் ஏன் பூமாலை கொடுத்தீர்கள் ? என்று கேட்டிருப்பார் போல….🤔🐒

இலங்கையில் ஆட்சி அதிகாரம் ஆங்கிலேயர்களிடமிருந்து சிங்களவருக்கு போனது, தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டது. இந்தியாவிலும் இதே நிலை தான்.

இலங்கையிம் இரு பெரும் இன குழுக்கள் தான்,  ஒப்பீட்டளவில் இங்கே இனத்தின் பிரச்சனையை குறித்து புரிய வைக்கமுடியும், ஆனால் இந்தியாவில் பல குழுக்கள், தமிழர்கள் மட்டும் தனியாக போராடி உரிமையை பெறுவது எளிதான காரியமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, Eppothum Thamizhan said:

அதுசரி, 3% பிராமணர்களுக்கு எப்படி அடுத்தடுத்த தேர்தல்களிலும் ஆட்சி அதிகாரம் கிடைத்தது?

காங்கிரஸ்சுக்கு இருந்த அமோக மக்கள் ஆதரவு.

*****, நேரு எல்லாரும் பிராமாண சமூகத்தவரே.

Edited by goshan_che
தரவுப்பிழை நீக்கம்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

குறைந்தது சென்னை மாகாணத்தையாவது பிரிட்டிஷ்  தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியார் கேட்டதாக ஒரு கதையுண்டு. அது உண்மையால் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னை மாகாணத்திற்கு பின்னர் எப்படியும் பிரிட்டிஷ் இடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்கும். மற்றைய மொழிகள் பிரிந்து போக தமிழ் நாடு தனி நாடாக ஆகியிருக்கும். தென்னிந்தியவில் பல சுதந்திர தேசங்கள் இருந்திருக்கும். 

நடந்திருக்க வாய்ப்பு குறைவு, காரணம் அப்போது காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டின் பெரிய கட்சி, ஆகையால் இந்திய தேசியத்தின் உணர்வே மேலோங்கியிருந்திருக்கும். அதை வைத்து இந்தியா ஆக்கிரமத்திற்கும். 

ஹாங்காங் சிங்கப்பூர் போல சிறிய பகுதி, தனியாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் அது மீண்டும் சீனாவின் கீழ் போய்விட்டது.

14 minutes ago, Eppothum Thamizhan said:

ஈ.வே. ராமசாமி நாயக்கர் வரலாற்றை எழுதிய சாமி சிதம்பரனாரின், ”தமிழர் தலைவர்” என்றநூலை வாசித்துப்பாருங்கள். ஏனென்றால் இந்நூல் பெரியார் வாழ்ந்த காலத்திலேயே அவரின் அனுமதியுடன் எழுதப்பட்ட நூல். 

பரிந்துரைக்கு நன்றி🙏 வாசிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, island said:

குறைந்தது சென்னை மாகாணத்தையாவது பிரிட்டிஷ்  தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று பெரியார் கேட்டதாக ஒரு கதையுண்டு. அது உண்மையால் நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். சென்னை மாகாணத்திற்கு பின்னர் எப்படியும் பிரிட்டிஷ் இடம் இருந்து சுதந்திரம் கிடைத்திருக்கும். மற்றைய மொழிகள் பிரிந்து போக தமிழ் நாடு தனி நாடாக ஆகியிருக்கும். தென்னிந்தியவில் பல சுதந்திர தேசங்கள் இருந்திருக்கும். 

ஆனால் தென்னிந்திய மக்களும், அவர்களுக்குள் இருந்த தமிழ் மக்களும் இதற்கு தயாராக இருக்கவில்லை.

இன்றும் இல்லை.

காந்தி நேருவின் இந்திய சுதந்திர மாயையில் சிக்கி இருந்தார்கள்.

இதனால் ஏற்பட்ட கடுப்பில்தான் பெரியார் கரிநாள் என அறிவித்தார் என நினைக்கிறேன்.

2 minutes ago, செவ்வியன் said:

நடந்திருக்க வாய்ப்பு குறைவு, காரணம் அப்போது காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டின் பெரிய கட்சி, ஆகையால் இந்திய தேசியத்தின் உணர்வே மேலோங்கியிருந்திருக்கும். அதை வைத்து இந்தியா ஆக்கிரமத்திற்கும். 

ஹாங்காங் சிங்கப்பூர் போல சிறிய பகுதி, தனியாக ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் அது மீண்டும் சீனாவின் கீழ் போய்விட்டது.

வாய்ப்பே இல்லை.

ஹைதரபாத் நவாப் தனி நாடு பிரகடனம் பண்ணி, இந்திய படைகள் அவரை போரில் தோற்கடித்தன.

இதே போல் மேலும் சில ராஜ்ஜியங்களும் மிரட்டப்பட்டு வலபாய் பட்டேலால் வழிக்கு கொண்டு வரப்பட்டன.

பாகிஸ்தானை சாட்டி காஸ்மீர், அதேபோல் மிரட்டி பணியவைக்கப்பட்ட சிக்கிம்.

மெடிராஸ் மாகாணத்தில் தனிநாடு கோரி மாபெரும் மக்கள் போராட்டம் நடந்திருப்பின் அன்றி அன்றைய இந்தியாவில் இது சாத்திய பட்டிராது.

ஆனால் பெரியாரால் கூட மக்களை இதற்கு திரட்ட முடியவில்லை.

இந்திய தேசியவாதம் அவ்வளவு வலுவாக இருந்தது, இன்னும் இருக்கிறது.

இன்றைய இந்தியாவில் சாத்தியமே இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.