Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kandiah57 said:

இவருக்கு வாக்கு போட்ட மக்களுக்கு இது அல்லது இவரைப் பற்றி முன்பே தெரியும் தானே ????   

அக்கா  கமலாவை   வீட்டில் இருத்தி.  விட்டார்கள்     

சோதிடம்.  சொல்கிறது ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் சனிப்பெயர்ச்சி பணக்காரர்கள். ஆக்கும் என்று அதை தான்  டரம்ப்மும். சொல்கிறார்  🤣

6 hours ago, நீர்வேலியான் said:

எனக்கென்னவோ சனியன் தலைக்குமேல் நின்று ஆடப்போவது போல் உள்ளது

5 hours ago, Paanch said:

யார்? அமெரிக்காமேல் நின்று ஆடும் டிரம்பைச் சொல்கிறீர்களா??😳

ரம்புக்கு வாக்குப் போட்டு பதவியில் உட்கார மக்களே வெறும் ஒரு மாதம் முடிவதற்கிடையில்

தவறான தலைவரை தெரிவு செய்து விட்டோமோ என்று பிகிரங்கமாகவே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

தனது ஆட்சிக்குத் தேவையானவர்களை ஆசிய பாணியிலேயே தெரிவு செய்கிறார்.

புளோரிடா மாநிலத்தவரையும் தேர்தல் காலங்களில் பெரும்தொகை பணங்களை அன்பளிப்பு செய்தவர்கள் தனக்காக முழக்கமிட்டவர்கள் என்று கூட்டி வைத்திருக்கிறார்.

காலப் போக்கில் பைடன் பரவாயில்லை என்று சிகப்பு கட்சியினரே சொல்வார்கள் போல உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

ரம்புக்கு வாக்குப் போட்டு பதவியில் உட்கார மக்களே வெறும் ஒரு மாதம் முடிவதற்கிடையில்

தவறான தலைவரை தெரிவு செய்து விட்டோமோ என்று பிகிரங்கமாகவே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

KFC இற்கு வாக்குப் போட்ட கோழிகள் கொஞ்சம் தவிக்கட்டும்😂, இதனாலாவது புத்தி வந்தால் பயன் இருக்கும்.

"பொம்பிளை எங்களை ஆள்வதா, நெவர்!" என்று ட்ரம்புக்கு வாக்களித்த கறுப்பின ஆண் சிங்கங்கள் இனி DEI இன் பாதுகாப்பைப் பெற முடியாது. இருக்கும் நிறுவனங்களில் கொஞ்சம் உருப்படியாக இருக்கும் நிறுவனங்களே சம வேலைவாய்ப்பு விதிகளைத் தளர்த்திக் கொண்டிருக்கின்றன (உதாரணம் Target Inc.). இவர்கள் இனி வேலையில்லாமல் அரச உதவியைப் பெற்றுக் கொண்டு, அதையும் பவுடர் அடிக்கப் பாவிக்கிறார்களா என்று மாதாமாதம் drug test செய்த படி குட்டிச் சுவரில் குந்தியிருக்க வேண்டியது தான்!

மறுபக்கம், "ட்ரம்ப் வந்தால் மெக்சிக்கோக் காரனை நாடுகடத்துவார்" என்று வாக்களித்த இந்திய, இலங்கை அமெரிக்கர்களுக்கும் இருக்கிறது ஆப்பு. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Justin said:

இவர்கள் இனி வேலையில்லாமல் அரச உதவியைப் பெற்றுக் கொண்டு, அதையும் பவுடர் அடிக்கப் பாவிக்கிறார்களா என்று மாதாமாதம் drug test செய்த படி குட்டிச் சுவரில் குந்தியிருக்க வேண்டியது தான்!

இதிலும் கை வைக்கப் போகிறார்கள் போல.இது எலானின் விருப்பம்.

4 minutes ago, Justin said:

மறுபக்கம், "ட்ரம்ப் வந்தால் மெக்சிக்கோக் காரனை நாடுகடத்துவார்" என்று வாக்களித்த இந்திய, இலங்கை அமெரிக்கர்களுக்கும் இருக்கிறது ஆப்பு. 

அமெரிக்க புத்தகம்கள் வைத்திருப்பவர்களே ரொம்பவும் ஆடினார்கள்.
 
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, vasee said:

பயணிகள் விமான நிலையத்தில் எதற்கு விமான படையினர் பயிற்சியில் ஈடுபடுகிறார்கள்? 

இரண்டு விதமான பயிற்சிகளிலும் இவர்கள் ஈடுபடுகின்றார்கள். இராணுவ விமான நிலையங்கள் மற்றும் தளங்களிலும், சில பயணிகள் விமான நிலையங்களிலும்.

யுத்த விமானங்களின் பயிற்சிகளையோ அல்லது யுத்த விமானங்களைக் கூட நாங்கள் வருடத்தில் ஓரிரு நாட்கள் தவிர்த்து இங்கே பார்ப்பது கிடையாது. வருடத்தில் ஒன்றோ இரண்டோ நாட்கள் ஒரு 'Air Show' நடத்துவார்கள், அதுவும் நகரை விட்டுத் தள்ளி இருக்கும் இராணுவ விமான தளத்திற்கு அருகில். அங்கே தான் இந்த வகையான விமானங்களை நாங்கள் பார்க்கக் கூடியதாக இருக்கும்.

என்னுடைய முதலாவது வேலை இப்படியான ஒரு தளத்திற்கு வெளியே இருந்தது. அப்பொழுது நான் குடியுரிமை பெற்றிருக்கவில்லை, ஆதலால் ஒரு எல்லை தாண்டி நான் போகவே முடியாது. அந்த எல்லைக்கு பின்னல், பல மைல்கள் தள்ளி, ஓடுபாதைகள் இருக்கின்றன.

ஆனால், சில பயிற்சிகள் பயணிகள் விமான நிலையங்களின் அருகில், அந்த சூழ்நிலையில், மிகத் தாழ்வான உயரங்களில் நடத்தப்பட வேண்டியிருக்கின்றது. Real life conditions...........

மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்ட விதிகளும், வெளிகளும் இருக்கின்றன என்கின்றனர். மீறும் போது விபத்துகள் நடந்துவிடுகின்றன.

சமீபத்திய லாஸ் ஏஞ்சலீஸ் நெருப்பின் போது இதையொட்டிய ஒரு சிக்கல் வந்தது. விமானங்கள் மூலம் தீயணைக்கும் நடவடிக்கைக்கு லாஸ் ஏஞ்சலீஸில் இருக்கும் ஐந்து விமான நிலையங்களுக்கும் வந்து போகும் பயணிகள் விமானங்கள், இராணுவ விமானங்கள், தனியார் விமானங்கள், ட்ரோன்கள் என்று பல வகையானவர்களுடன் தீயணைக்கும் விமானங்கள் அனுசரித்துப் போகவேண்டி இருந்தது. அப்படி இருந்தும் ஒரு ட்ரோன் ஒரு தீயணைக்கும் விமானத்தின் இறக்கையுடன் மோதி, அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

ரம்புக்கு வாக்குப் போட்டு பதவியில் உட்கார மக்களே வெறும் ஒரு மாதம் முடிவதற்கிடையில்

தவறான தலைவரை தெரிவு செய்து விட்டோமோ என்று பிகிரங்கமாகவே சொல்லத் தொடங்கிவிட்டார்கள்.

தனது ஆட்சிக்குத் தேவையானவர்களை ஆசிய பாணியிலேயே தெரிவு செய்கிறார்.

புளோரிடா மாநிலத்தவரையும் தேர்தல் காலங்களில் பெரும்தொகை பணங்களை அன்பளிப்பு செய்தவர்கள் தனக்காக முழக்கமிட்டவர்கள் என்று கூட்டி வைத்திருக்கிறார்.

காலப் போக்கில் பைடன் பரவாயில்லை என்று சிகப்பு கட்சியினரே சொல்வார்கள் போல உள்ளது.

இவர் இந்த குறூப் உடன், முதல் பிளான்இன்படிஅட்டர்னி ஜெனரல் ஆக Matt Gaetzயும் சேர்ந்திருந்தால், ஒரு அட்டகாசமான, dream cabinet ஒன்று எமக்கு கிடைத்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

KFC இற்கு வாக்குப் போட்ட கோழிகள் கொஞ்சம் தவிக்கட்டும்😂, இதனாலாவது புத்தி வந்தால் பயன் இருக்கும்.

"பொம்பிளை எங்களை ஆள்வதா, நெவர்!" என்று ட்ரம்புக்கு வாக்களித்த கறுப்பின ஆண் சிங்கங்கள் இனி DEI இன் பாதுகாப்பைப் பெற முடியாது. இருக்கும் நிறுவனங்களில் கொஞ்சம் உருப்படியாக இருக்கும் நிறுவனங்களே சம வேலைவாய்ப்பு விதிகளைத் தளர்த்திக் கொண்டிருக்கின்றன (உதாரணம் Target Inc.). இவர்கள் இனி வேலையில்லாமல் அரச உதவியைப் பெற்றுக் கொண்டு, அதையும் பவுடர் அடிக்கப் பாவிக்கிறார்களா என்று மாதாமாதம் drug test செய்த படி குட்டிச் சுவரில் குந்தியிருக்க வேண்டியது தான்!

மறுபக்கம், "ட்ரம்ப் வந்தால் மெக்சிக்கோக் காரனை நாடுகடத்துவார்" என்று வாக்களித்த இந்திய, இலங்கை அமெரிக்கர்களுக்கும் இருக்கிறது ஆப்பு. 

இவ்வளவுக்கும், ஒரு சந்தோசமான விடயம், இவருக்கு வோட்டுப்போட்ட  நிறைய இந்தியர்களின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறார். இங்கிருக்கும் இந்தியர்கள் போல ஒரு hypocrites ஐ காண முடியாது. பல இந்தியர்கள் புதிதாக இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு வேலை விசாவை கட்டுப்படுத்தவேண்டும் என்பதில் ஆதரவாக உள்ளார்கள். தனது வேலை போய்விடக்கூடாது என்ற சுயநலம் தவிரவேறு ஒன்றும் இல்லை. 

Medicare, social security cut பண்ணப்போவதாக ஒரு செய்தி உலவுகிறது, இவரின் ஆதரவுத்தளமான வயது போன வெள்ளையர்களுக்கும் ஆப்பு இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, நீர்வேலியான் said:

இவர் இந்த குறூப் உடன், முதல் பிளான்இன்படிஅட்டர்னி ஜெனரல் ஆக Matt Gaetzயும் சேர்ந்திருந்தால், ஒரு அட்டகாசமான, dream cabinet ஒன்று எமக்கு கிடைத்திருக்கும்

அடுத்து காஸ் பட்டேல் களமிறங்குகிறார்.

யார்யாரை தூக்கப் போகிறாரோ?

வெள்ளைவான் அமெரிக்காவிலும் ஓடும் போல.

25 minutes ago, நீர்வேலியான் said:

Medicare, social security cut பண்ணப்போவதாக ஒரு செய்தி உலவுகிறது, இவரின் ஆதரவுத்தளமான வயது போன வெள்ளையர்களுக்கும் ஆப்பு இருக்கு

நம்ம வண்டி இதுலதான் ஓடுது.

ஏற்கனவே இந்த கொடுப்பனவு போதாது என்று குறை.
 
  • கருத்துக்கள உறவுகள்
On 4/2/2025 at 06:07, ரசோதரன் said:

இராணுவ விமானங்களும், சாதாரண விமானங்களும் ஒரே அலைவரிசையில் தொடர்பு கொள்வதில்லை. ஒன்று VHF, மற்றையது UHF. இது எப்போதும், எங்கேயும் உள்ள நடைமுறைதான். ஆகவே அவர்கள் இருவரும் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியவில்லை................ 

நான் இணைத்த காணொளியில் தரையிறங்கும் போது விமானிகள் (இரண்டு விமானிகளும்) தமது தொடர்பாடலை கட்டுப்பாட்டு கோபுரத்துடன் மாற்றிகொண்டார்கள் என கூறப்படுகிறது.

விமானிகள் இரண்டு அலைவரிசைகளை விமானிகள் பயன்படுத்துகிறார்கள்.

1. கட்டு கோபுர அலைவரிசை ( Tower frequency - தரையிறங்கும் போது பயன்படுத்தப்படுவது)
2. கட்டுப்பாட்டறை அலைவரிசை  (Approach frequency - மற்றைய விமானிகளின் உரையாடல் )

கட்டுப்பாட்டறை அலைவரிசை விமான தளத்தில் உள்ள விமானங்கள் பற்றியதான விபரம் அடங்கியது என கூறப்படுகிறது, பொதுவாக இந்த அலைவரிசையில் துணை விமானி இணைந்திருப்பார் என கூறப்படுகிறது, ஆனால் குறித்த காணொளியில் உள்ள சம்பவத்தின் போது இரு விமானிகளும் கட்டுப்பாட்டு கோபுர அலைவரிசையில் இணைந்திருந்தார்கள் எனக்கூறப்படுகிறது.

13 minutes ago, ஈழப்பிரியன் said:

நம்ம வண்டி இதுலதான் ஓடுது.

ஏற்கனவே இந்த கொடுப்பனவு போதாது என்று குறை.
 
https://moneysmart.gov.au/retirement-income/downsizing-in-retirement

ஓய்வின் பின்னர் பெரும்பாலானவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, நீர்வேலியான் said:

Medicare, social security cut பண்ணப்போவதாக ஒரு செய்தி உலவுகிறது, இவரின் ஆதரவுத்தளமான வயது போன வெள்ளையர்களுக்கும் ஆப்பு இருக்கு

நாட்டின் வருவாயை விட நாட்டின் கடன் அதிகம் இது இலங்கையினை விட அதிகம், பொதுச்செலவு நாட்டின் வருவாயில் 23% உள்ளது, அரசிற்கு வேறு தெரிவில்லை என கருதுகிறேன், கடனை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நிலமை கை மீறி போய்விட்ம் என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, vasee said:

நான் இணைத்த காணொளியில் தரையிறங்கும் போது விமானிகள் (இரண்டு விமானிகளும்) தமது தொடர்பாடலை கட்டுப்பாட்டு கோபுரத்துடன் மாற்றிகொண்டார்கள் என கூறப்படுகிறது.

விமானிகள் இரண்டு அலைவரிசைகளை விமானிகள் பயன்படுத்துகிறார்கள்.

1. கட்டு கோபுர அலைவரிசை ( Tower frequency - தரையிறங்கும் போது பயன்படுத்தப்படுவது)
2. கட்டுப்பாட்டறை அலைவரிசை  (Approach frequency - மற்றைய விமானிகளின் உரையாடல் )

கட்டுப்பாட்டறை அலைவரிசை விமான தளத்தில் உள்ள விமானங்கள் பற்றியதான விபரம் அடங்கியது என கூறப்படுகிறது, பொதுவாக இந்த அலைவரிசையில் துணை விமானி இணைந்திருப்பார் என கூறப்படுகிறது, ஆனால் குறித்த காணொளியில் உள்ள சம்பவத்தின் போது இரு விமானிகளும் கட்டுப்பாட்டு கோபுர அலைவரிசையில் இணைந்திருந்தார்கள் எனக்கூறப்படுகிறது.

இராணுவ விமானங்கள் இன்னொரு அலைவரிசையை உபயோகிக்கின்றார்கள். சக இராணுவ விமானங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரங்கள் மட்டுமே இராணுவ விமானங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும். பயணிகள் விமானமும், இராணுவ விமானமும் நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை என்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

இராணுவ விமானங்கள் இன்னொரு அலைவரிசையை உபயோகிக்கின்றார்கள். சக இராணுவ விமானங்கள் மற்றும் கட்டுப்பாட்டு கோபுரங்கள் மட்டுமே இராணுவ விமானங்களுடன் தொடர்பு கொள்ளமுடியும். பயணிகள் விமானமும், இராணுவ விமானமும் நேரடியாக தொடர்பு கொள்வது இல்லை என்கின்றார்கள்.

பொதுவாக அதற்கான தேவையும் இருப்பதில்லைதானே.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

நாட்டின் வருவாயை விட நாட்டின் கடன் அதிகம் இது இலங்கையினை விட அதிகம், பொதுச்செலவு நாட்டின் வருவாயில் 23% உள்ளது, அரசிற்கு வேறு தெரிவில்லை என கருதுகிறேன், கடனை கட்டுப்படுத்த முயற்சிக்காவிட்டால் நிலமை கை மீறி போய்விட்ம் என கருதுகிறேன்.

இலங்கையின் பொருளாதார அளவை அமெரிக்காவுடன் ஒருபொதுமே ஒப்பிட முடியாது. அமெரிக்கா அரச வருமானத்தில் கிட்டத்தட்ட 19% வட்டி கட்டுகிறார்கள், இது அதிகம் என்றாலும், மோசமான நிலை அல்ல, செலவை குறைக்க வேண்டும் என்பது உண்மை, அனால் குறைப்பதுக்கு வேறு நிறைய வழிகள் உள்ளன, மக்களின் social security யில் கை வைக்கக்கூடாது, அது மக்கள் வேலை செய்யும்போது அவர்களிடம் இருந்து எடுத்த பணம். 

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நீர்வேலியான் said:

அமெரிக்காவிற்கு கடன் வாங்கும் செலவு குறைவாக உள்ளது என்பது உண்மைதான், இலங்கையின் கடன் மதிப்பீட்டு சரிவு அதற்கு காரணம்.

ஆனால் இலங்கையின் பாதீட்டின் அளவு நாட்டின் வருமானத்தில் 10% உள்ளது, அமெரிக்காவின் பாதீட்டின் அளவு நாட்டின் வருமானத்தில் 36% உள்ளது.

இலங்கையின் பொதுச்செலவில் கடன் வட்டி சுமை அமெரிக்காவினை விட அதிகம் ஆனால் பாதீட்டின் அளவினை கணித்தால் இரண்டு நாடும் கிட்டதட்ட மிக சிறைய வித்தியாசமே இரண்டு நாடுக்களுக்கிடையே யுள்ளது.

இலங்கை social security 11% , அமெரிக்காவின் social security 21% உள்ளது கடனுக்கான வட்டி செலுத்துவதனைவிட இது அமெரிக்காவிற்கு அதிகம் இலங்கை பாதீட்டுடன் ஒப்பிடும் 63% ஆகும்.

பொதுவாக பாதீடு GDP இல் 10% மேல் இருந்தால் அந்த நாட்டின் பொருளாதாரம் உறுதியற்ற பொருளாதாரம் என கூறுகிறார்கள் இலங்கையின் 10.2% இலும் அமெரிக்கா 36.2% உள்ளது.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமுள்ள வித்தியாசம் டொலர் இருப்பு  நாணயம்.

https://www.pgpf.org/article/what-is-the-national-debt-costing-us/

குறித்த இணைப்பில் மருத்துவம், சமூக செலவு மற்றும் வட்டி முதல் 3 இடத்தில் உள்ளது. சமூக செலவே முதல்நிலையில் உள்ளது 2.6 ரில்லியன், வட்டி 1.7 ரில்லியன், மருத்துவம் 1.7 ரில்லியன்.

ஆனால் இயலாதவர்களின் கொடுப்பனவில் கைவைப்பது பாவமான செயல்தான்.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 4/2/2025 at 06:57, Kandiah57 said:

ஆமாம் சரி தான்    உங்களுடைய வாக்கு     எந்த கட்சிக்கு  ????  

எந்த கட்சி ஆட்சி அமைக்கும்   ??   

நான் இது வரைக்கும் SPD கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறேன். உள்ளூர் தேர்தல்களில் GRÜNE கட்சிக்கு வாக்களித்திருக்கின்றேன். ஏனெனில் யுத்தமே வேண்டாம் என சொல்லி ஆட்சி அமைத்த கட்சிகள்.ஆயுத உற்பத்தியை கூட கட்டுப்படுத்திய கட்சிகள்.என்று உக்ரேனுக்கு போர்தான் முடிவு என இரு கட்சிகளும் முடிவெடுத்தார்களோ அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்பி பார்ப்பதில்லை.

நான் இன்று வாக்களித்ததுDie Linke என்ற கட்சிக்கு..😎

இருப்பினும் CDU-SPD என்ற இரு பெரும் கட்சிகள் கூட்டாட்சி அமைக்கும் என நினைக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் AfD அமரக்கூடும் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் பேத்தி காட்டிய கட்சிக்கு வாக்களித்தோம். சாமியார் எப்படி மோப்பம் பிடித்தார்??.🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, Paanch said:

எங்கள் பேத்தி காட்டிய கட்சிக்கு வாக்களித்தோம். சாமியார் எப்படி மோப்பம் பிடித்தார்??.🤔

வளர்ந்து வரும் சமுதாயம் நாளைய நல்லது கெட்டதுகளை இன்றே முகர்ந்து பிடிக்கின்றார்கள்.

எம்மைப் போன்றவர்கள் கிழிந்த ரெக்கோர்ட் தட்டு மாதிரி ஒரே இடத்தில் நின்று வாழ்க வாழ்க என கோஷம் போடத்தான் லாயக்கு. 🤣

ஆனால் அவர்கள் எம்மைப்போல் வாழையடி வாழை அரசியல் செய்பவர்கள் அல்ல. நாளைய உலகை பற்றி நன்கு சிந்திக்கின்றார்கள்.💪

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

நான் இது வரைக்கும் SPD கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறேன். உள்ளூர் தேர்தல்களில் GRÜNE கட்சிக்கு வாக்களித்திருக்கின்றேன். ஏனெனில் யுத்தமே வேண்டாம் என சொல்லி ஆட்சி அமைத்த கட்சிகள்.ஆயுத உற்பத்தியை கூட கட்டுப்படுத்திய கட்சிகள்.என்று உக்ரேனுக்கு போர்தான் முடிவு என இரு கட்சிகளும் முடிவெடுத்தார்களோ அன்றிலிருந்து இவர்கள் பக்கம் திரும்பி பார்ப்பதில்லை.

நான் இன்று வாக்களித்ததுDie Linke என்ற கட்சிக்கு..😎

இருப்பினும் CDU-SPD என்ற இரு பெரும் கட்சிகள் கூட்டாட்சி அமைக்கும் என நினைக்கிறேன். எதிர்க்கட்சி வரிசையில் AfD அமரக்கூடும் 🤣

பதிலுக்கு நன்றி அண்ணை ...நானும் மகனும் SPD. வாக்கு போட்டோம்.

நீங்கள் சொன்னபடியே நடக்கலாம் எனது விருப்பம் AFD. ஆட்சியில் இடம்பெற வேண்டும்

அப்படியென்றால் அடுத்த முறை அவர்கள் 20% க்கு கீழே எடுப்பார்கள் எதிர்கட்சியில். அமர்ந்தால். அடுத்த முறை. 20% மேலும் வாக்குகள் பெறுவார்கள் பெறும்பாலன. எனது உறவுகள் இளைஞர்கள் CDU. தான் போட்டார்கள் அது நல்லது என்றார்கள் ஏன் என்று கேட்க பதில்கள் இல்லை உங்களுக்கு விருப்பமானவர். கன்சாலராக வருகிறார் பார்ப்போம் என்ன செய்கிறார். என்று இது மிகவும் சவாலான காலம் அமெரிக்காவும். ரஷ்யாவும். சேர்த்து ஐரோப்பாவை சுக்குநூறாய் உடைக்க விரும்புகிறார்கள் நாலு வருடம் கடினம் தான்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.