Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

எதிர்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாயின் எல்லோருடனும் கலந்து பேசி ஒட்டு மொத்தமாக புறகணித்திருக்க வேண்டும். 

அமித் ஷா அழுத்தத்துக்கு பயந்து அதிமுக, நாதக வுக்கு விட்டு கொடுத்ததின் பலன் - சில ஆயிரம் அதிமுக/ நடுநிலை வாக்காளர் நாதகவுக்கு போட்டுள்ளனர்.

ரெய்டுக்கு பயந்து கட்சி நடத்தாமல் ஜெ போல் லேடியா, மோடியா என மோதினால்தான் கட்சியை காப்பாற்றலாம்.

பிஜேபி கூட்டணியை முறித்தமை போல் இதிலும் எடப்பாடி கடும் நிலைப்பாடு எடுத்திருக்க வேண்டும்.

👍..............

அதிமுக போட்டியிட்டு இருக்கவேண்டும். இடைத் தேர்தலை வெல்ல முடியாது, ஆனால் திமுகவிற்கு எதிராக இருக்கும் ஒரேயொரு மாற்று நாங்களே என்று அது தமிழ்நாடு முழுவதற்கும் சொல்லும் ஒரு செய்தியாக அமைந்திருக்கும்.

ஏற்கனவே தேய்ந்து தேய்ந்து போய்க் கொண்டிருக்கும் ஒரு கட்சி இப்பொழுது இன்னும் சிதறிப் போய்விட்டது. இதில் விஜய் வேறு அடுத்த தேர்தலில் புதிதாக உள்ளே வருகின்றார்..............   

  • Replies 113
  • Views 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • இசைக்கலைஞன்
    இசைக்கலைஞன்

    இடைத்தேர்தல் அளவுகோல் அல்ல என்றாலும், பெற்ற வாக்குகள் வியப்பைத் தருகிறது. 2026 தேர்தலில் 20%+ வாக்குகளும் சில இடங்களும் உறுதி !

  • பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை.  இதன்படி பார்ததால்  பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று   அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின்

  • Sasi_varnam
    Sasi_varnam

    சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு  கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

வேறு எந்த முக்கிய எதிர்க்கட்சிகளும் போட்டியிடாமல், வெறுமனே இரண்டு கட்சிகள் மட்டும் போட்டியிட்ட ஒரு இடைத்தேர்தலில் கட்டுப்பணத்தைக் கூட பெற முடியாமல் போனது உங்களுக்கு வியப்பைத் தருகிறதா இசை?

இதில் அதிமுக, பா.ஜ.க போட்டியிட்டு இருந்தால் நாதக எத்தனை சதவீதம் எடுத்து இருக்கும்?

திமுக ஆட்சிக்கு எதிரான மன நிலை உள்ளவர்களில் கணிசமானோர் கூட சீமானுக்கு ஆதரவு கொடுக்கத் தயாரில்லை என்பது தான் யதார்த்தம்.

தமிழ்நாடு தேர்தல் களம் விசித்திரமானது. பணம் இல்லாமல் நூறு வாக்குகள் வாங்குதல் கடினம். உதாரணம் திருமுருகன் காந்தி மற்றும் தமிழா தமிழா பாண்டியன்!

திருமுருகன் காந்தி பரப்புரை செய்த வெண்ணிலாவுக்கு 222 வாக்குகள்

தமிழா தமிழா பாண்டியன்: 129 வாக்குகள்

இதையெல்லாம் தாண்டித்தான் வரவேண்டி இருக்கிறது.

பொதுத்தேர்தல் என வரும்போது, எதிர்க்கட்சிகளின் வாக்கு அதிகரிக்கும். காரணம் பணக்காரக் கட்சிகளால் அனைத்துத் தொகுதிகளிலும் ஆயிரம் கோடிகளில் செலவு செய்ய முடியாது!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, இசைக்கலைஞன் said:

ஒரு பைசா செலவில்லாமல் நோட்டா 5000 க்கு மேல் எடுத்துள்ளது.

கொஞ்சம் கொஞ்சமாக தாண்டி வந்து நோட்டா ஆட்சி அமைக்கும் நாள் தொலைவில் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நானும் பெரியார் மண்ணில் அதிகம் உரசிப்பார்க்கிறார். வாங்கி கட்ட போகிறார்கள் என்று தான் நினைத்தேன். ஆனால் பெரியாரை (அத்தனை திராவிட கட்சிகளையும்) எதிர்த்து இத்தனை இளைஞர்களை சேர்த்திருப்பது சாதனை தான். இனி பெரியாரும் நாம் தமிழர்களுக்கு வாக்கு சேர்ப்பார்.

ஈவெரா மீதான விமர்சனங்கள் மேலும் தொடரும். இதன்மூலம் பாஜக வாக்குகளை பலவீனப் படுத்துகிறார் செந்தமிழன் சீமான் அவர்கள்.

இந்தத் தேர்தலில் பாஜக, அதிமுக வாக்குகளை நாம் தமிழர் பெற்றார்கள் என விமர்சனம் வைக்கின்றார்கள். இதை தவிர்க்கவே ஒரு மூலோபாயத்தை கடைப்பிடித்தோம்!

1) திப்பு சுல்தான், தடா ரகீம், காயிதே மில்லத் என கொண்டுவந்து வாக்கு கேட்கப்பட்டது. பாஜக அகரன் இஸ்லாமிய பெயர்களை கேட்டாலே போடமாட்டான்! அவ்வாறு பாஐக வாக்குகள் தவிர்க்கப்பட்டன. அவர்கள் திமுகவுக்கும், நோட்டாவிக்கும் போட்டார்கள். 🤣

அதேபோல அதிமுக மீதும் விமர்சனங்களை நாம் தமிழர் வைத்தது. கொடநாடு கொலைவழக்கு, தூத்துக்குடி கொலைகள் என அதிமுகவையும் குறிவைத்தார் சீமான். இதனால், அடிப்படை அதிமுக வாக்குகள் விழவில்லை.

கிடைத்த 15% வாக்குகளும், சீமானுக்காகவும், கொள்கைகளுக்காகவும் மட்டுமே கிடைத்தவை. எப்பிடி super தானே விசுகு அண்ணா?! 🤩

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

இப்படி எல்லாம் கச்சிதமாகத் திட்டம் போட்டவர்கள் தேர்தல் நாளன்று “பூத்”களில் ஏஜென்ட்களையும் நிறுத்தி ஆதரவாளர்களை வாக்குப்போட வைத்திருந்தால் கட்டுப்பணமாவது வந்திருக்கும். 😃

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அமித் ஷா அழுத்தத்துக்கு பயந்து அதிமுக, நாதக வுக்கு விட்டு கொடுத்ததின் பலன் - சில ஆயிரம் அதிமுக/ நடுநிலை வாக்காளர் நாதகவுக்கு போட்டுள்ளனர்.

கோஷான் எந்த ஆதாரத்தை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள். சண் நியூசில் செய்தித் தயாரிப்பாளராகுவதற்கு அத்தனை தகுதிகளும் தங்களுக்கு உண்டு.அதிமுக வாக்குகளை திமுக போடுமாறும் அன்றேல் வாக்களிக்காமல் இருப்பதற்கும் பல அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கு. இதற்கு விகடன் உட்பட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.நாதக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார். தெர்மாக்கோல் ராயு ஆகியோர் அதிமுகவினரைக் கேட்டுள்ளனர்/சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்தும் பெரியாரின் ஊரிலேயே அவருடைைய வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இதே தொகுதியில் நடந்த கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில்:

  • நாதக  14000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • திமுக 5000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • நோட்டா 6000 வாக்குகள் அதிகம் பெற்றிருக்கின்றது
  • கடந்த தேர்தலில் வாக்களித்த ஏறக்குறைய 16000 பேர் இந்த தடவை வாக்களிக்கவில்லை.

இது மொத்தமாக 41000 என்று வருகின்றது.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு கிடைத்த வாக்குகள் 44000.

அதிமுக தான் கவலைப்பட வேண்டும். மற்ற எல்லாம் இருந்த இடத்திலேயே இருக்கின்றது.

நாதக பெற்ற வாக்குகளில் கணிசமான பாஜகவின் வாக்குகள் இருக்கிறது, அதே போல் திமுக பெற்ற வாக்குகளில் கணிசமான அதிமுக வாக்குகள் உள்ளன. இடைத் தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் பொது தேர்தலில் எதிரொலிக்காது.

எனக்குள்ள ஒரே சோகம், ஏமாற்றம், ஆதங்கம், கவலை, வருத்தம் எல்லாமே, 2 பேர் போட்டியிட்டப்பக்கூட அண்ணனால் கட்டுத்தொகை பெறமுடியவில்லையே. நாதியற்றா போனார் சங்கி சைமன்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

இப்படி எல்லாம் கச்சிதமாகத் திட்டம் போட்டவர்கள் தேர்தல் நாளன்று “பூத்”களில் ஏஜென்ட்களையும் நிறுத்தி ஆதரவாளர்களை வாக்குப்போட வைத்திருந்தால் கட்டுப்பணமாவது வந்திருக்கும். 😃

மறுபடியும் மறுபடியும் கட்டுப்பணத்தையே நோண்டுறீங்க🤣

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, புலவர் said:

கோஷான் எந்த ஆதாரத்தை வைத்து இப்படிச் சொல்கிறீர்கள். சண் நியூசில் செய்தித் தயாரிப்பாளராகுவதற்கு அத்தனை தகுதிகளும் தங்களுக்கு உண்டு.அதிமுக வாக்குகளை திமுக போடுமாறும் அன்றேல் வாக்களிக்காமல் இருப்பதற்கும் பல அதிமுக நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டிருக்கு. இதற்கு விகடன் உட்பட செய்தி நிறுவனங்கள் வெளியிட்டிருந்தன.நாதக வுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார். தெர்மாக்கோல் ராயு ஆகியோர் அதிமுகவினரைக் கேட்டுள்ளனர்/சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்தும் பெரியாரின் ஊரிலேயே அவருடைைய வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது.

1. அமித் ஷா எனக்கு ஆதாரத்தை இமெயில் பண்ணுவதாக கூறி உள்ளார். வந்ததும் காட்டுகிறேன்🤣.

2. இதெல்லாம் ஒரு உய்துணரல்தான். 

3. சீமா எச் ராஜாவை பேரறிஞர் எனும் போதே - தெரிய வில்லையா? (https://m.dinakaran.com/article/background_seeman_actor_vetrikumaran_interview/1529861/amp).

4. சீமானை மட்டும் ரேசில் ஓட விட்டு 40:60 என வந்து, ஒரு காட்டு காட்டுவது, அதன் மூலம் 2026 கூட்டணிக்கு அச்சாரம் போடுவதுதான் அமித்தின் ஸ்கெட்ச்.

5. ஆனால் அதிமுக காரன் வாக்கை கூட எடுக்க முடியவில்லை என தம்பிகளே மேலே புலம்பும் அளவுக்கு மக்கள் நோஸ் கட் கொடுத்துள்ளார்கள்.

6. அதுவும் அத்தனை திமுக எதிர்வாக்குகளை கூட ஒருங்கிணைக்க முடியாமல் டெபாசிட்டே இழந்து….

நமது ராஜதந்திரங்கள் எல்லாம் வீணாக போய் விட்டதே என அமித்ஷாவை வடிவேலு ரேஞ்சுக்கு புலம்ப விட்டுள்ளனர் ஈரோட்டு மக்கள்.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, புலவர் said:

சீமான் பெரியாரை கடுமையாக விமர்சித்தும் பெரியாரின் ஊரிலேயே அவருடைைய வாக்கு சதவீதம் உயர்ந்திருக்கிறது

ஒவ்வொரு தேர்தலிலும் யாழ்பாணத்தில் டக்கிளசுக்கு 10-15% விழும்.

யாழ்பாணம் தலைவரின் சொந்த மாவட்டம்.

ஒவ்வொரு ஊரிலும் ஒரு 15% குறுக்காலபோவார் இருப்பினம்தானே?

———

கடந்த தேர்தலில் 4 முனை போட்டி…

இந்த தேர்தலில் 2 முனை போட்டி…

இதில் போட்டியிட்ட இரு கடைகளின் வாக்கு வீதம், எண்ணிக்கை கூடும் என்பது அடிப்படை உண்மை.

இதை வைத்து சீமானின் ஆதரவு கூடியதாக சொல்வது - உங்களை நீங்களே தரம் தாழ்த்தி கொள்வதாகும்.

சீமான் குறைந்தது 50,000 வாக்கு எடுத்திருந்தால் இப்படி சொல்ல முகாந்திரம் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

செந்தமிழன் சீமான் அண்ணா நோட்டாவுடன் பேசி கூட்டணி வைத்துக்கொண்டிருந்தால் கட்டுக்காசாவது கிடைத்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் கும்பலை கட்டுப்பணம் இழக்குமளவுக்ககு நடு மண்டையில் போட்ட ஈரோடு மக்ககளுக்கு வாழ்ததுக்கள். மிக தெளிவான செய்தி.  பிரதான எதிர்க்கட்சி தேர்தலில் பங்கெடுக்காத நிலையில் திமுக ஆட்சியின் எதிர்ப்பு வாக்குகளை  தற்காலிகமேனும் பெற்று அதை தமது வாக்குகளாக் காட்டும் சீமான் கும்பலின் வழமையான புருடா வேலையை கூடச் செய்ய முடியவில்லை.  15 வீதம் என்பது சீமான் கட்சி வாக்குகள் அல்ல. பாஜக போன்ற திமுக எதிர்ப்பு உதிரி வாக்குகள் வேறு வழியில்லாமல்  சீமான் கட்சிக்கு போடப்பட்டுள்ளதை சாதாரண அரசியல் அறிவு  உடைய மக்களால் கூட விளங்கி கொள்ள முடியும்.  சற்று அறிவு உள்ள தம்பிகளுக்கும் அது புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்

சற்று அறிவு உடைய தம்பிகள்  கட்டுபணம் கூட கிடைக்காத இந்த  தாழ்ந்த  வாக்கு வீதம் கூட  எமக்கானதல்ல என்பதை  புரிந்து கொண்டாலும்,  சொந்தமாக  சிந்திக்க தெரியாத,  சீமான் சொன்னதை கிளிப்பிள்ளை போல் உளரும் தம்பிகளுக்கு கண்கள் சிவக்க சிவக்க கோபக்கனலில்   சிவப்பாக சிவப்பு சித்திரம் வரைவதும் இயல்பானது தான். 😂😂

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, goshan_che said:

அதுவும் அத்தனை திமுக எதிர்வாக்குகளை கூட ஒருங்கிணைக்க முடியாமல் டெபாசிட்டே இழந்து….

திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கே போய் விட்டதன. நாதகவுக்கு அதிமுக .பாஜக >வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலை விட 15 ஆயிரம் வாக்களிக்க வில்லை. நோட்டாவுக்கு 5000 பேர கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். விஜையஜயப் பகைத்ததனால் விஜை ரசிகர்களும் போட வாய்ப்பில்லை. பெரியார்பிறந்த ஊரில் பெரியாரை சகட்டு மேனிக்கு வேறு விமர்சித்திருக்கிறார். அப்படியிருக்க 23000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இது நாதகவுக்கு விழுந்த வாக்குகள் தான் அடுத்த தேர்தலில் இது மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது. வியைகாந்கட்சி>கமல்கட்சி போல் தேயந்த்து கொண்டு போகாமல் தனித்து நின்று பல கட்சி கூட்டணியை எதிர்த்து பெற்ற வாக்குகள். நாதக தெபடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. அதை தேர்தல் மூலம் நிரூபித்தும் காட்டியிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

2. இதெல்லாம் ஒரு உய்துணரல்தான். 

உய்த்துணரை வைத்துக்கொண்டு சீமானை பாஜகவின் B  ரீம் என்று சொல்வது எப்படி நியாயமாகும் நரேந்திரமோடிளை ஸ்டாலின் சந்தித்தால் முதல்வர் என்ற முறையில் ஏற்றுக்கொள்ளலாம். உதயநிதி எதற்காக சந்தித்தார். இதையெல்லாம் உய்துணர உங்களால் ஏன் முடியாதிருக்கிறது.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஜனநாயகத்தை இகழ்ந்து பணநாயகத்தை போற்றும் தங்கள் கொள்கையில் தொடந்ந்து நில்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

திமுக எதிர்ப்பு வாக்குகள் எங்கே போய் விட்டதன. நாதகவுக்கு அதிமுக .பாஜக >வாக்காளர்களும் வாக்களிக்கவில்லை. கடந்த தேர்தலை விட 15 ஆயிரம் வாக்களிக்க வில்லை. நோட்டாவுக்கு 5000 பேர கடந்த தேர்தலை விட கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். விஜையஜயப் பகைத்ததனால் விஜை ரசிகர்களும் போட வாய்ப்பில்லை. பெரியார்பிறந்த ஊரில் பெரியாரை சகட்டு மேனிக்கு வேறு விமர்சித்திருக்கிறார். அப்படியிருக்க 23000 பேர் வாக்களித்திருக்கிறார்கள். இது நாதகவுக்கு விழுந்த வாக்குகள் தான் அடுத்த தேர்தலில் இது மேலும் உயரவே வாய்ப்பிருக்கிறது. வியைகாந்கட்சி>கமல்கட்சி போல் தேயந்த்து கொண்டு போகாமல் தனித்து நின்று பல கட்சி கூட்டணியை எதிர்த்து பெற்ற வாக்குகள். நாதக தெபடர்ந்து வளர்ந்து கொண்டு வருகிறது. அதை தேர்தல் மூலம் நிரூபித்தும் காட்டியிருக்கிறது.

இப்படி யோசித்து பாருங்கள்.

சரியாக 24 மாதங்கள் முன் இதே தொகுதியில் நடந்த தேர்தலில்.

தேமுதிக - 1432

அதிமுக - 43923

மொத்தம் 45,355

இவை அத்தனையும் திமுக கூட்டணி எதிர் வாக்குகள். 

அந்த தேர்தல் திமுக அரசின் தேனிலவு காலத்தில், நடப்பு இளவயது எம்பி இறப்பின் பின் இருந்த திமுக கூட்டணி  எதிர் வாக்குகள்.

இடைபட்ட இரு வருடத்தில் திமுக மீதான அதிருப்தி கூடி உள்ளது. Incumbency factor கட்டாயம் இருக்கும்.

உண்மையில் இப்போ இந்த தொகுதியில் திமுக கூட்டணி எதிர்வாக்குகள் குறைந்தத்து 55,000 ஆகவாது இருக்கும்.

இத்தோடு போன தேர்தலில் நா த க எடுத்த வாக்கையும் கூட்டினால் - 

65, 000 ஆகிறது.

ஆக இந்த தேர்தலில் ஒற்றை திமுக எதிர் தெரிவாக இருந்த நாதக அடைந்திருக்க கூடிய வாக்குகளின் குறைந்த எண்ணிக்கை (lower best case scenario) 63,000.

Higher best case scenario - தொகுதியை வெல்வது.

நா த கவின் worst case scenario போன தேர்தலில் எடுத்த 10,000 அல்லது அதை விட குறைவது.

1. தொகுதியை வெல்வது

2. 63,000 வாக்குகள் எடுப்பது

3. 24,000 வாக்குகள் எடுப்பது

4. 10,000 வாக்குகள் எடுப்பது

இவைதான் வெற்றியின் வேறு பட்ட benchmarks.

இதில் 24,000 ஆனது, 10,000 க்கு கிட்ட்டவா அல்லது 63,000 க்கு கிட்டவா என்பதை நீங்களே கணித்து கொள்ளுங்கள்.

நா த க அள்ளி இருக்க வேண்டிய மினிமம் வாக்குகளில் 38% ஐ மட்டுமே அள்ளி உள்ளது.

எந்த சோதனையிலும் 40% கீழ் எண்டால் பெயில்தானே.

30 minutes ago, புலவர் said:

உய்த்துணரை வைத்துக்கொண்டு சீமானை பாஜகவின் B  ரீம் என்று சொல்வது எப்படி நியாயமாகும் நரேந்திரமோடிளை ஸ்டாலின் சந்தித்தால் முதல்வர் என்ற முறையில் ஏற்றுக்கொள்ளலாம். உதயநிதி எதற்காக சந்தித்தார். இதையெல்லாம் உய்துணர உங்களால் ஏன் முடியாதிருக்கிறது.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை. ஜனநாயகத்தை இகழ்ந்து பணநாயகத்தை போற்றும் தங்கள் கொள்கையில் தொடந்ந்து நில்லுங்கள்.

கருத்தை எழுதுங்கள் புலவர்.

 அடுக்கு வசனங்களையும், அவதூறுகளையும் அரசியல்வாதிகள் செய்யட்டும்🙏.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

இடைபட்ட இரு வருடத்தில் திமுக மீதான அதிருப்தி கூடி உள்ளது. Incumbency factor கட்டாயம் இருக்கும்.

உண்மையில் இப்போ இந்த தொகுதியில் திமுக கூட்டணி எதிர்வாக்குகள் குறைந்தத்து 55,000 ஆகவாது இருக்கும்.

இந்தப்புள்ளி விபரங்கள் இடைத்தேர்தலுக்குப் பொருந்தாது..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது எழுதப்படாத விதி ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருக்கலாம். (எம்ஜியார் கட்சி துவங்கி வென்ற இடைத்தேர்தல்.தினகரன் வென்ற ஆர்கே நகர்)பணத்தை அள்ளி இறைத்து வென்ற தேர்தல்.சென்ற தேர்தலை விட 15000 பேர் குறைவாக வாக்களித்திருக்கறார்கள்.அதை விட நோட்டாவுக்கு 5000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கசார்கள். நாதகவுக்கு செனற தேர்தலை விட15000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள். மிகுதி பேர் அது அதிமுக வாக்காளர்களாக இருந்தாலும் பாஜக  அதரவாளர்களாக இருந்தாலும் அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள்.ஆக ஆளுங்கட்சி மீதான அதிருப்திவாக்குகள் பணத்தின் மூலம் வாங்கப்பட்டு இருக்கின்றன.நாம் தமிழர்  வாங்கிய 24000 வாக்குகள் தெளிவான பார்வையில் நாதக வுக்கு விழுந்த வாக்குகள்.

Edited by புலவர்

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உண்மையில் இப்போ இந்த தொகுதியில் திமுக கூட்டணி எதிர்வாக்குகள் குறைந்தத்து 55,000 ஆகவாது இருக்கும்.

👍....................... இது தான் கணக்கு.

மற்றவர்கள் எல்லோருக்கும் டிபாசிட் போய் விடும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. திமுகவின் சில சமீபத்திய நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன, உதாரணம்: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், வேங்கைவயல் அறிக்கை,..................

ஈரோடு இனி அதிமுக கூட்டணிக்கு கிடைக்காது போல.................

நாதக நாலாவதாக அல்லது ஐந்தாவதாக ஓடும் அடுத்த பொது தேர்தலில்................  

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு குதிரை ரேஸில் கட்டுப்பணம் இழந்ததை இப்படி தொடர்ச்சியாக ஸ்பின் டொக்ரரிங் செய்தால்தானே அடுத்த தேர்தலில் 234 தொகுதிக்கும் கட்டுப்பணம் செலுத்த பணம் சேகரிக்கமுடியும்😆

எல்லாம் ஏற்றம் சொல்லுவதைக் கேட்கவும் நம்பவும் ஒரு சிறுகூட்டம் இருக்கும். அடுத்த தேர்தலில் இளைஞர்கள் எல்லாம் விஜய் பின்னால் போனால் கூடாரம் காலியாகிவிடும் அல்லவா! அந்தக் கணக்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அடுத்த தேர்தலில் திமுக கூட்டணி எப்படியும் பாஜகவால் உடைக்கப்படும்.  பாஜக பின்னால் நேர்மையாகப் போவது பினாமிகள் பின்னால் ஒளிவதை விட நல்லது. அண்ணாமலையை புலிக்கொடியை ஆட்டவைத்தால் நமக்குத் தீர்வு கட்டாயம் கிடைக்கும் மக்களே😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

இந்தப்புள்ளி விபரங்கள் இடைத்தேர்தலுக்குப் பொருந்தாது..இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெல்லும் என்பது எழுதப்படாத விதி

ஆம்..

ஆனால் இது தொகுதியை வெல்லாமைக்கான விளக்கம்.

Let’s be honest - சீமான் உட்பட எவரும் நா த க தொகுதியை வெல்லும் என நினைக்கவில்லை (அப்படி இருந்தால் தான் போட்டியிடாமல் விட சீமான் என்ன யேசு நாதரா?).

நான் மேலே சொல்லி இருப்பது 65,000 வாக்குகளை கூட நா த க வால் நெருங்க கூட முடியவில்லை என்பதை.

65, 000 அல்ல. 50, 000 அல்ல, 30,000 அல்ல, 25,000 (கட்டுப்பணம் மீட்டல்) கூட இயலவில்லை. 

உண்மையில் இதை “வெற்றி” என சொல்பவர்கள் you are insulting your own intelligence. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

சென்ற தேர்தலை விட 15000 பேர் குறைவாக வாக்களித்திருக்கறார்கள்

யார் இவர்கள்? திமுக எதிர் வாக்காளர். ஆனால் இவர்களை கவர (ஒரு இடைத்தேர்தலில் கூட) நா த க வால் முடியவில்லை.

திமுகவுக்கு போட விருப்பம் இல்லை.

நா த கவுக்கு போடுவதை விட வீட்டில் இருக்கலாம் என 15,000 பேர் முடிவு செய்துள்ளனர்.

1 hour ago, புலவர் said:

நோட்டாவுக்கு 5000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கசார்கள்.

நோட்டா என்றால் என்ன?

இருக்கும் தெரிவுகள் எதிலும் எனக்கு விருப்பம் இல்ல என சொல்லுவது.

அதாவது திமுகவுக்கு போட முடியாத இன்னொரு 5,000 வாக்காளருக்கு சீமானும் அதே அளவு மோசமான தெரிவாக இருக்கிறார்.

1 hour ago, புலவர் said:

நாதகவுக்கு செனற தேர்தலை விட15000 பேர் கூடுதலாக வாக்களித்திருக்கிறார்கள்.

14,000

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

அதிமுக வாக்காளர்களாக இருந்தாலும் பாஜக  அதரவாளர்களாக இருந்தாலும் அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்களித்து இருக்கிறார்கள்.

அதிமுக+பாஜக  வாக்காளர் அநேகர்  திமுக வுக்கு போடவில்லை.

திமுக வாக்குகள் வெறும் 5,000 மட்டுமே கூடியுள்ளது. இதில் கணிசமானது போனமுறை தேமுதிகவுக்கு போன வாக்குகள். காரணம் இந்த முறை திமுக வேட்பாளர், ஒரு காலத்தில் நன்கு உள்ளூரில் பிரபலமான தேமுதிக எம் எல் ஏ.

அதிமுக வாக்காளர் பெருந்தொகையில் திமுக பக்கம் வந்திருந்தால் - திமுக வாக்கு அளவு 15,000 க்கு மேலால் கூடி இருக்கும்.

இந்த தேர்தலில் அவர்கள் தெரிவுகள் முறையே வீட்டில் இருத்தல், நோட்டாவுக்கு போடல், சீமானுக்கு போடல் என இருந்துள்ளன. 

கணிசமான பாஜக வாக்காளர், குறைந்தளவு அதிமுக வாக்காளர், முதலியார் சாதி வோட்டுகள், protest votes, வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு வாக்குகள் சேர்ந்து 14,000 மேலதிக வாக்குகள் ஆகியுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

👍....................... இது தான் கணக்கு.

மற்றவர்கள் எல்லோருக்கும் டிபாசிட் போய் விடும் என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. திமுகவின் சில சமீபத்திய நடவடிக்கைகள் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தன, உதாரணம்: கள்ளக்குறிச்சி விஷசாராய மரணங்கள், அண்ணா பல்கலைக்கழக விவகாரம், வேங்கைவயல் அறிக்கை,..................

ஈரோடு இனி அதிமுக கூட்டணிக்கு கிடைக்காது போல.................

நாதக நாலாவதாக அல்லது ஐந்தாவதாக ஓடும் அடுத்த பொது தேர்தலில்................  

நன்றி.

1. ஓம்….இந்த முறையும் தமக்கு தரவில்லை என கதர் சட்டைகள் ஒரே கதறலாம்.

ஆனால் திமுக காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்குவதும், காங்கிரஸ் தொகுதிகளை கேட்பதும் ஸ்டார் வேட்பாளர்/வாரிசுகளுக்காகவே.

சம்பத்துக்காக, பெரியாரின் உயிரியல்-பேரன், பூட்டன் என்ற செல்வாக்கை மனதில் வைத்து இந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்த முறையும் சம்பந்தின் அடுத்த மகனை இறக்கினால் சீட்டை தரலாம் என அறிவாலயத்தரப்பு சொன்னதாம்.

ஆனால் குடும்பம் விரும்பவில்லையாம்.

2. அடுத்த முறையும் சந்திரகுமாருக்கே வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். 

கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு இருக்கும் “நம்மாளு” இமேஜ், கவுண்டர் சாதி வாக்குகளை சமன் செய்ய, நெசவாளர் சாதியை சேர்ந்தவரும், சாதிய கட்டமைப்பை தாண்டி, விஜயகாந்தின் கொங்கு மண்டல தளபதியாக திறம்பட செயல்பட்டவருமான சந்திரகுமார் ஒரு லோக்கல் திமுக சிற்ரரசராக வரக்கூடும்.

அப்படி வந்தால் மீண்டும் காங்கிரசுக்கு கிடைப்பது மிகவும் கஸ்டம்.

பெரியார்-சம்பத்-சுலோச்ச்சனா வாரிசுகள் இல்லை என்றால் - காங்கிரஸ் மேலிடமும் கேட்காது.

2 hours ago, ரசோதரன் said:

நாதக நாலாவதாக அல்லது ஐந்தாவதாக ஓடும் அடுத்த பொது தேர்தலில்................  

நடந்தால் சந்தோசம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.