Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!

‘மெக்ஸிகோ வளைகுடா’ என்பதை ‘அமெரிக்க வளைகுடா’ என்று பெயர் மாற்றம்!

பிப்ரவரி 9 ஆம் தேதியை “அமெரிக்க வளைகுடா தினம்” என்று ஒரு நிர்வாக உத்தரவு மூலம் நியமித்துள்ளார்.மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மெக்சிகோ வளைகுடாவை “அமெரிக்க வளைகுடா” என்று அதிகாரப்பூர்வமாக மறுபெயரிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பின் போது வளைகுடாவின் பெயரை மாற்றுமாறு டிரம்ப் முதலில் பரிந்துரைத்தார், புதிய பெயர் அமெரிக்காவின் வரலாற்று மற்றும் பிராந்திய மரபை சிறப்பாக பிரதிபலிக்கிறது என்றும் . “மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா என்று மறுபெயரிடுவோம் – அது ஒரு பெரிய வளையத்தைக் கொண்டுள்ளது என்றும், மேலும் அது ஒரு பரந்த பகுதியை உள்ளடக்கியது” என்று அவர் அப்போது கூறினார்.

வெள்ளை மாளிகையின் அறிக்கையின்படி, நிர்வாக ஆணை புதிதாக பெயரிடப்பட்ட வளைகுடாவை “டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, அலபாமா மற்றும் புளோரிடாவால் வடகிழக்கு, வடக்கு மற்றும் வடமேற்கில் எல்லையாக உள்ள அமெரிக்க கண்ட அடுக்குப் பகுதியை உள்ளடக்கியது, இது மெக்சிகோ மற்றும் கியூபாவுடனான கடல் எல்லை வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கின்றது.

தனது முடிவை கூறிய டிரம்ப், ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “முன்னர் மெக்சிகோ வளைகுடா என்று அழைக்கப்பட்ட நீர்நிலை நீண்ட காலமாக நமது செழிப்பான தேசத்திற்கு ஒரு முக்கிய வளமாக இருந்து வருகிறது, மேலும் அமெரிக்காவின் நீடித்த பகுதியாக உள்ளது, ஏனெனில் உத்தரவில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி இந்த நடவடிக்கையை நான் எடுத்துள்ளேன்” என்று கூறினார்.

Fox5 DC இன் படி புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து நியூ ஆர்லியன்ஸுக்கு சூப்பர் பவுல் LIX க்காக ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் பறந்தபோது, வளைகுடாவைக் கடந்து செல்லும்போது மறுபெயரிடல் முக்கியத்துவத்தை டிரம்ப் எடுத்துரைத்தார். “எங்கள் நாட்டின் வரலாறு மற்றும் சாதனைகளில் அமெரிக்காவின் பெருமையை எனது நிர்வாகம் மீண்டும் நிலைநிறுத்துவதால், இந்த வரலாற்று தருணத்தையும் அமெரிக்க வளைகுடாவின் மறுபெயரிடுதலையும் நாம் அங்கீகரிப்பது மட்டுமே சரியானது” என்று அவர் கூறினார்.

டிரம்ப்இன் உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்க கடலோர பொலிஸார் ஏற்கனவே “அமெரிக்க வளைகுடா” என்ற பெயரைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது, மேலும் மாற்றத்தை இறுதி செய்ய உள்துறை செயலாளர் டக் பர்கம் 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளார். இந்த அறிவிப்பு பொது அதிகாரிகள் மற்றும் குடிமக்களை “பொருத்தமான திட்டங்கள், விழாக்கள் மற்றும் செயல்பாடுகளுடன்” அமெரிக்க வளைகுடா தினத்தை அனுசரிக்க ஊக்குவிக்கிறது என்றும் கூறபடுகின்றது.

சமீபத்தில், மெக்சிகன் இறக்குமதிகளுக்கு 25 சதவீத வரிகளை விதிப்பதாக டிரம்ப் மிரட்டினார், ஆனால் பின்னர் மெக்சிகோ எல்லையில் 10,000 தேசிய காவல்படை வீரர்களை அனுப்ப ஒப்புக்கொண்டதை அடுத்து அந்த நடவடிக்கையை நிறுத்தி வைத்த நிலையில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் மெக்சிகோவிற்கும் இடையே நடந்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் இந்த மறுபெயரிடுதல் வருகிறது.

https://athavannews.com/2025/1420749

  • கருத்துக்கள உறவுகள்

சொன்னபடி பெயரை மாற்றும் உத்தரவில் ட்ரம்ப் கையெழுத்து

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். இவர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். பதவியேற்பதற்கு முன்னதாக, ”மெக்சிகோ வளைகுடாவின் பெயரை, ‘அமெரிக்க வளைகுடா’ என்று மாற்றப் போகிறேன். இது நிறைய பிரதேசங்களை உள்ளடக்கியது. அமெரிக்க வளைகுடா என்பது எவ்வளவு அழகான பெயர்? அது மிகவும் பொருத்தமானது” என்று கூறியிருந்தார்.

இது விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், ”மெக்சிகோ நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டெக்ஸாஸ், அரிசோனா, நெவாடா, நியூ மெக்சிகோ, கலிபோர்னியா மாநிலங்கள் இப்போது அமெரிக்காவிடம் இருக்கின்றன. அதனால் அந்தப் பகுதிகளை, ’மெக்சிகன் அமெரிக்கா’ என்று பெயர் மாற்றலாம். அந்தப் பெயரும் நன்றாக இருக்கிறது.

உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா அதிபராக பதவியேற்ற பிறகு தனது முதல் உரையில், மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என மாற்றம் செய்யப்படுமென அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, கூகுள் மேப்பில், அமெரிக்காவில் உள்ள பயனாளர்களுக்கு மட்டும் இந்த மாற்றம் செய்யப்படுமென கூகுள் நிறுவனமும் தெரிவித்திருந்தது.

அதாவது மெக்சிகோ வளைகுடாவின் பெயர் அமெரிக்கா வளைகுடா என்று தெரியும் என அது அறிவுறுத்தியுருந்தது. இந்த நிலையில், மெக்சிகோ பெயர் மாற்றம் தொடர்பான அதிகாரப்பூர்வ ஆவணத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். அதிபரின் அதிகாரப்பூர்வ விமானமான ஏர் ஒன் விமானத்தில் நியூ ஆர்லியன்ஸ் நகருக்குப் பயணித்தபோது, இதற்கான ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்ட வீடியோ வெளியாகி அனைவரையும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

https://thinakkural.lk/article/315192

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலிருந்து பார்த்தால் கூகிள்  Gulf of America என்று காட்டுகின்றது.

மெக்சிக்கோவிலிருந்து பார்த்தால் Gulf of Mexico என்று காட்டுதாம்.

மற்ற இடங்களில் இருந்து பார்த்தால், இரண்டையும் காட்டுதாம்.

இந்த விளக்கம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நேற்று காருக்கு பெட்ரோல் அடிக்க போயிருந்தேன். ஒரு கலன் நான்கு டாலர்கள்...................... ஒரு கலன் இரண்டு டாலருக்கு தருவேன் என்று சொல்லிவிட்டு, முன்பு இருந்ததை விட இன்னும் மேலே போயிருக்குது விலை..............🤣.

'கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும் ...................'

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ரசோதரன் said:

உங்க ஊரில் முட்டை கிடைக்குதோ?

விலையையும் ஏத்திவிட்டு முட்டையை கண்ணிலும் காட்டுறாங்கள் இல்லை.

1 hour ago, ஏராளன் said:

உண்மை என்னவென்றால் மெக்சிகோ வளைகுடா என்ற பெயர், 17ஆம் நூற்றாண்டில் இருந்து அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மெக்சிகோ வளைகுடா பெயரை மாற்றுவதாக, ட்ரம்ப் கூறுவதை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் ஒரு நல்ல உறவு இருக்கும் என்று நான் விரும்புகிறேன்” என தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

சரித்திரத்தில் தனது பெயர் பொறிக்கப்கடணும் என்று ரம் துடியா துடிக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ஈழப்பிரியன் said:

உங்க ஊரில் முட்டை கிடைக்குதோ?

விலையையும் ஏத்திவிட்டு முட்டையை கண்ணிலும் காட்டுறாங்கள் இல்லை.

சரித்திரத்தில் தனது பெயர் பொறிக்கப்கடணும் என்று ரம் துடியா துடிக்கிறார்.

காஸ்ட்கோவில் முட்டை இல்லை, அண்ணா, ஆனால் வேறு இடங்களில் கிடைக்கின்றது என்று போன வாரம் சொன்னார்கள்.

அந்த அதிபர் மலையில், Mount Rushmore, இருக்கிற எல்லா முகங்களையும் தட்டிப் போட்டுவிட்டு, தன்னுடைய முகத்தை மட்டும் செதுக்கிறது............. அல்லது புதிதாக இன்னுமொரு மலையை பிடித்து செய்யிறது...................  Mount Trump என்று பெயரையும்வைத்துக் கொண்டால், அப்படியே வரலாற்றில் நின்று விடலாம்தானே.......................😜.

  • கருத்துக்கள உறவுகள்

Trader Joe's, other retailers limiting how many eggs people can buy amid shortage

Trader Joe's and other retailers have recently moved to enact a purchase limit on eggs as a result of ongoing pricing and availability issues brought on by the H5N1 bird flu.

"Due to ongoing issues with the supply of eggs, we are currently limiting egg purchases to one dozen per customer, per day, in all Trader Joe’s stores across the country,” the grocery chain confirmed in a Monday statement to USA TODAY.

About 600 Trader Joe locations across the country will be impacted by the change. The hope is that "limits will help to ensure that as many of our customers who need eggs are able to purchase them when they visit Trader Joe’s," the statement reads.

Other grocery retailers, including Costco are following suit, CNN reported. Because of the purchase limit, Costco customers are only allowed to purchase a maximum of three egg packages, typically sold in two-dozen or four-dozen cartons.

Costco, Aldi, and Whole Foods did not immediately respond to USA TODAY's request for comment regarding possible egg limits for customers.

https://www.usatoday.com/story/money/food/2025/02/10/trader-joes-costco-egg-limit/78391310007/

4 hours ago, ரசோதரன் said:

காஸ்ட்கோவில் முட்டை இல்லை, அண்ணா, ஆனால் வேறு இடங்களில் கிடைக்கின்றது என்று போன வாரம் சொன்னார்கள்.

A sign for customers shopping for eggs at Trader Joe's hangs by cartons of eggs in Merrick, New York on Feb. 10, 2025.
4 hours ago, ரசோதரன் said:

அந்த அதிபர் மலையில், Mount Rushmore, இருக்கிற எல்லா முகங்களையும் தட்டிப் போட்டுவிட்டு, தன்னுடைய முகத்தை மட்டும் செதுக்கிறது

தலைவர் ஒருபாதையில் விலாசம் காட்ட

எலான் ஒருபாதையால் பணம் சேர்க்க

ஒரே போட்டியாகவே இருக்கிறது.

சாதாரண மக்கள் நாளாந்தம் குடிக்கும் பியரின் விலையும் அலுமினியம் வரியால் கூடிவிட்டதாமே?

நீங்கள் பியர் அருந்துவதில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் பியர் அருந்துவதில்லையோ?

இல்லை, அண்ணா, நான் இப்ப எதுவும் குடிப்பது இல்லை.

ஆனால் பின்னுக்கு போய்ப் பார்த்தால், ஒரு பாட்ஷா இருந்தார், பம்பாயில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று ஒரு வரலாறும் இருக்கின்றது................🤣.

'நான் வேறு ஒன்றுமே கேட்கவில்லை. இதை மட்டும் தானே உங்களிடம் கேட்கின்றேன்.................' என்பது ஒரு தமிழ் வசனம் அல்ல, இது அவர்களின் ஒரு ஆயுதம்..........................🤣.  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

நீங்கள் பியர் அருந்துவதில்லையோ?

நல்லது  வரவேற்கிறேன்,......பச்சை தண்ணீரை குடியுங்கள் உடம்புக்கு நல்லது  ஆயுளும் கூடும்   🤣

6 hours ago, ரசோதரன் said:

இந்த விளக்கம் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நேற்று காருக்கு பெட்ரோல் அடிக்க போயிருந்தேன். ஒரு கலன் நான்கு டாலர்கள்...................... ஒரு கலன் இரண்டு டாலருக்கு தருவேன் என்று சொல்லிவிட்டு, முன்பு இருந்ததை விட இன்னும் மேலே போயிருக்குது விலை..............🤣.

இந்த பெற்றோல்.  எல்லா நாடுகளிலும்   விலை கூடிக்கொண்டே போகுது    அமெரிக்காவில் மட்டும் எப்படி குறையும்??   😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

இந்த பெற்றோல்.  எல்லா நாடுகளிலும்   விலை கூடிக்கொண்டே போகுது    அமெரிக்காவில் மட்டும் எப்படி குறையும்??   😂

எல்லா நாடுகளிலும் விலை குறையும் போது தான் இங்கேயும், அமெரிக்காவிலும், விலை குறையும் என்றால், நாங்கள் ஏன் ட்ரம்பை அதிபர் ஆக்கவேண்டும்............. கமலா ஹாரீஸ்ஸை அதிபராக ஆகியிருப்பம் தானே.................. ஓபெக் நாடுகளின் சில எண்ணெய் கிணறுகளை எப்படி அமெரிக்காவிற்கு கைமாற்றி, அப்படியே பெயரும் மாற்றுவது என்ற அறிக்கை இந்த வாரம் வரும் தலையிடமிருந்து...................😜

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

கடினம் தம்பி ......😂.  மெக்சிகோ அதிபர்      ஒரு பெண்    ஒரு அறிக்கை விட்டுள்ளார்   பார்க்கவில்லையா???  உங்கள் பொருள்கள் அனைத்தும் மெக்சிகோ   புறக்கணிக்கும்.   

கட்டும் மதிலை  உடைக்கும்படி  நீங்கள் கோருவீர்கள்.    நாங்கள் உடைக்கப்போவதில்லை என்று     அவமானம்   ட்ரம்ப்புக்கு    

இவரின்  விளையாட்டு எல்லா நாடுகளிடமும். சரி வராது”  இந்தியா சீனா  சவுதிஅரேபியா      ஜேர்மனி மெக்சிகோ    கொலாம்பியா   பிரேசில்  ........இப்படி எல்லா நாடுகளுடனும்.   பிரச்சனை       ஏதேனும் பிரச்சனை வந்தால் இலங்கை தான் உதவி 🤣

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, Kandiah57 said:

🤣.....................

அந்தப் பெண்மணி இப்படியே அறிக்கை விட்டுக் கொண்டிருந்தால், மெக்சிக்கோவின் பெயரையும் மாற்றும் ஒரு திட்டம் இருக்கின்றதாம்............

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Kandiah57 said:

கடினம் தம்பி ......😂.  மெக்சிகோ அதிபர்      ஒரு பெண்    ஒரு அறிக்கை விட்டுள்ளார்   பார்க்கவில்லையா???  உங்கள் பொருள்கள் அனைத்தும் மெக்சிகோ   புறக்கணிக்கும்.   

ரம்புக்கு வயது போட்டுது.இல்லாவிட்டால் இவவையும் வடிவாக கையாண்டிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

ரம்புக்கு வயது போட்டுது.இல்லாவிட்டால் இவவையும் வடிவாக கையாண்டிருப்பார்.

இப்பவும் பிரச்சனை இல்லை   மெக்சிகோ உடன்   அமெரிக்காவை   இணைக்க   ட்ரம்ப். இணங்கினால்.    அவாவை    ட்ரம்புடன். இணைக்க முடியும்     🤣. ஒரு பியரை  அடித்து கொண்டு வடிவாக. யோசித்துப் பாருங்கள்   🤣

  • கருத்துக்கள உறவுகள்

டிரம்ப் க்கு தனது வாழ்நாளின் இறுதிக் காலம் நெருங்கி விட்டது என்று நன்கு தெரிந்து விட்டது போலும். எப்படியும் தன்னை யாரவது ஏதாவது செய்து விடுவார்கள் என்று நினைக்கின்றார். அதனால்த் தான் இப்படி ஒரே சட புடல் தடலாடி அறிவிப்புகள் . போறதுக்கு முதல் புடுங்குவதை எல்லாம் புடுங்கி விட்டு போவம் என்று 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of map and text

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.