Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு… உள்துறை அமைச்சகம் உத்தரவு!

14 Feb 2025, 9:56 AM
Screenshot-2025-02-14-095304.jpg

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

விஜய் கட்சி ஆரம்பித்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். சமீபத்தில் தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோருடன் விஜய் ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் விஜய் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இதனால் அவரது பாதுகாப்பு கருதி, மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. 

இந்த Y பிரிவு பாதுகாப்பில் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு அதிகாரிகள், ஆயுதமேந்திய காவலர்கள் என மொத்தம் 8 பேர் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். இந்த பாதுகாப்பானது தமிழகத்திற்குள் மட்டும் வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

https://minnambalam.com/political-news/union-ministry-grants-y-category-protection-to-vijay/

  • கருத்துக்கள உறவுகள்

நடிகர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு!

நடிகர் விஜய்க்கு ‘Y’ பிரிவு பாதுகாப்பு!

தென்னிந்திய சினிமா நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான ஜோசப் விஜய்க்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் ‘Y’ அளவிலான பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் அவருக்கு CRPF பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஆயுதம் ஏந்திய வீரர்கள் உட்பட 8 முதல் 11 காவலர்கள் 24 மணிநேரமும் பாதுகாப்பில் இருப்பார்கள்.

‘தளபதி’ என்று தனது ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) ஒரு வருடத்திற்கு முன்பு நிறுவி, 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகி வருகிறார்.

விஜய் தனது கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதுடன், தேர்தல் வியூகங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அவர் ஒரு பொதுக்குழு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.

மேலும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முயற்சிகளைப் போலவே மாநிலம் முழுவதும் ரோட்ஷோ நடத்தவும் அவர் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

சரியான திகதிகள் மற்றும் விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இந்த ஆண்டு நிகழ்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதுள்ள அச்சுறுத்தல் நிலைகள், உளவுத்துறை அறிக்கைகள் மற்றும் விஜய்யின் வளர்ந்து வரும் அரசியல் முக்கியத்துவத்தின் அடிப்படையில் ‘Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அளவிலான பாதுகாப்பு தற்போதைக்கு போதுமானதாகக் கருதப்பட்டாலும், தமிழகத்தில் அரசியல்வாதியாக அவரது உயரும் சுயவிவரத்தை இது பிரதிபலிக்கிறது.

இந்த பாதுகாப்பு ஏற்பாட்டிற்கான உத்தரவை இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

https://athavannews.com/2025/1421387

  • கருத்துக்கள உறவுகள்

பிஸ்கோத்து வை பிரிவு…

நெய்தல் படையணி எண்டால் இலங்கை நேவியையே பந்தாடும்.

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says "mt எங்கையுமே போகாதவனுக்கு எதுக்குடா Y செக்யூரிட்டி! mt mt mcaй TAMIL TAMIL_MEMES MEMES"

  • கருத்துக்கள உறவுகள்

முட்டைய‌ சாட்டி த‌ன்னை பெரிய‌ ஆள் போல் காட்டிக் கொள்ள‌ போட்ட‌ நாட‌க‌ம்............
த‌ன்ட‌ ர‌சிகர்க‌ளை ந‌ம்பாத‌ இந்த‌ முட்டை எப்ப‌டி தான் அர‌சிய‌ல் குதிச்ச‌து..................இவ‌ரின் மெய்பாதுகாவ‌ல‌ர்க‌ள் இவ‌ரின் ர‌சிக‌ர்க‌ளை தூக்கி போட்டு மிதிப்ப‌து உறுதி ஹா ஹா................

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போய்ட்டான்.

#கதறல் தொடரும்🤣

  • கருத்துக்கள உறவுகள்

செலவு அதிகம் என்று ராகுல் காந்தியின் பாதுகாப்பை நீக்கிய மத்திய அரசு விஜய்க்கு பாதுகாப்புக்கு செலவு செய்கிறது என்றால்....?

இந்த துப்பாக்கி மற்றும் துப்புரவு ரசிகர்களிடம் இருந்து பாதுகாக்கவா? பிரித்து எடுக்கவா? எது நடந்தாலும் கோடு போட்டவனுக்கு லாபமே.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, goshan_che said:

காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கொண்டு போய்ட்டான்.

#கதறல் தொடரும்🤣

உப்ப‌டித் தான் மைய‌ம் என்று ஒருத‌ர் க‌ட்சி ஆர‌ம்பிச்சார்

இர‌ண்டு தேர்த‌லோட‌ அவ‌ரின் அர‌சிய‌ல் வாழ்க்கை முடிந்து விட்ட‌து............யாரை எதிர்த்து தொலைக் காட்சிய‌ உடைத்தாரோ அவ‌ர்க‌ளிட‌ம் ச‌ர‌ன் அடைந்து விட்டார்.................அதே நிலை தான் ப‌ய‌ந்தான் பீச்சாங் கோழி விஜேய்க்கும் ந‌ட‌க்கும் ஹா ஹா................ர‌சிக‌னாய் இருப்ப‌வ‌ன் அவ‌ன்ட‌ ஜாதி கார‌னுக்கு ஓட்டு போடுவான்

இப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ள் சொல்லிட்டு போக‌லாம்...............இவ‌ர் காங்கிர‌ஸ் கூட‌ கூட்ட‌னி வைச்சா 2029ம் ஆண்டு இவ‌ரை வ‌டிவாய் வைச்சு செய்ய‌லாம் அத‌ற்க்கு இப்ப‌வே ப‌ல‌ர் த‌யார் ஆகிட்டின‌ம்............ஈழ‌த்து ம‌ரும‌க‌னின் முக‌ம் கிழித்து தொங்க‌ விட‌ப் ப‌டும்......................

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, வீரப் பையன்26 said:

டிரம்ப் 2015இல் எதற்காக அரசியலுக்கு வந்து தேர்தலில் நின்றாரோ அதே கரணுத்துக்காவே விஜய்யும் கடசி தொடங்கி இருக்கிறார். டிரம்ப் வரி மோசடி செய்யவே வந்தார் அப்போது அவரே தனக்கு வாக்கு போட ஒரு கூடடம் இருக்கும் என்று நம்பி இருக்கவில்லை.

விஜய் தொடங்கியது கருப்பு பணத்தை வெள்ளையடிக்க இவர்களிடம் நிறைய பணம் சுவிஸ் வங்கியில் எந்த வட்டி கூட இல்லாமல் கிடக்கிறது அதை நகர்த்துவது என்றால் முதலில் வெள்ளையாக்க வேண்டும் ... அதற்க்கு அரசியல் கடசி சிறப்பான வழி. தேர்தலில் வென்றாலும் வெற்றி தோற்றாலும் வெற்றி ........ அதை புரிந்துகொண்டுதான் அவரை கண்காணிக்கவே இந்த பாதுகாப்பு நாடகத்தை இந்திய அரசு ஆடுகிறது என்று எண்ணுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Maruthankerny said:

300 கோடிக்கு ஆலோசனை மட்டும் என்றபோதே எவ்வளவு வியாபாரம் என்பது தெரிந்தது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணன் மைன்ட்வாய்ஸ்:

அவனுக்கு சுவிஸ் பாங்க் கணக்குத்தான் இருக்கு.

நான் ஒரு லெட்டர் குடுத்தா சுவிஸ் அரசே வீசா கொடுக்கும் தெரியுமா🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அண்ணன் மைன்ட்வாய்ஸ்:

அவனுக்கு சுவிஸ் பாங்க் கணக்குத்தான் இருக்கு.

நான் ஒரு லெட்டர் குடுத்தா சுவிஸ் அரசே வீசா கொடுக்கும் தெரியுமா🤣

நீங்க‌ள் செல‌ன்சிக்கு முட்டு கொடுத்து

எந்த‌ அமெரிக்கா புட்டினை எதிர்த்த‌தோ அதே அமெரிக்கா புட்டினுட‌ன் இன்னும் ஒரு கிழ‌மையில் ர‌ம்பும் புட்டினும் முக‌ம் பார்த்து க‌தைக்க‌ போகின‌ம் , போர் குற்ற‌வாளி புட்டின் என்று கூவின‌ ஆட்க‌ள் எல்லாம் வெக்கி த‌லை குனிய‌னும்................அப்ப‌வே மான்புமிகு புட்டின் என்று சொல்ல‌ நிர்வாக‌த்தில் இருக்கும் ஒருவ‌ருக்கு ப‌ட‌க்கென‌ கோவ‌ம் வ‌ந்த‌து................அவ‌ர் கூட‌ சேர்ந்து நின்று அமெரிக்காவுக்கு செல‌ன்ஸ்கிக்கு சிங்சாங் போட்ட‌ கூட்ட‌ம் தானே நீங்க‌ள்..................

உங்க‌ட‌ க‌ட‌மை ப‌ல‌ பொய்த்து போய் விட்ட‌து

அன்மைக் கால‌மாய் யாழில் அவ‌தூறு ப‌ர‌ப்புவ‌தில் முத‌ல் இட‌த்தில் இருப்ப‌து நீங்க‌ள் தான்

ஏன் தொட‌ர்ந்து இந்த‌ வெக்க‌ம் கெட்ட‌ செய‌லை செய்யிறீங்க‌ள் என்று புரிய‌ வில்லை..............................

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வீரப் பையன்26 said:

தம்பி நான் ரஸ்யா உக்ரேன் திரிகளில் எழுதியதை மீளவும் போய் எழுத்து கூட்டி வாசிக்கவும்.

அல்லது உங்கள் தாத்தாவிடம் கேட்டால் விளங்கப்படுத்துவார். அவரும் நானும் இதை பற்றி கனக்க கதைத்துள்ளோம்.

ரஸ்ய-உக்ரேன் போர் ஆரம்பத்திலேயே நான் பின் வருவதை எழுதி விட்டேன்.

  1. டிரம்ப் புட்டினின் கைக்கூலி.

  2. டிரம்ப், மஸ்க் உடைய சிறுவர் துஸ்பிரயோக வீடியோ ஜெப்ரி எப்ஸ்டைன் மூலமாக புட்டினிடம் உள்ளது.

  3. இதை வைத்து புட்டின் தன் சொல்படி டிரம்பை ஆட்டுவார்.

  4. டிரம்ப் வென்றால் உக்ரேன்/செலன்ஸ்கி கதை அதோ கதிதான்.

ஆகவே இப்போ நடப்பவை எவையும் நான் எதிர்பாராதவை அல்ல. எழுதாதவையும் அல்ல.

இது மட்டும் அல்ல Russia is playing for time, யுத்த அரங்கில் டிரம்பின் வெற்றிக்காக காத்து, காலம் கடத்துகிறார்கள் எனவும் எழுதியுள்ளேன்.

ஆனால் உக்ரேனிய தேசிய இனத்தின் சுயநிர்ணய போருக்கு நான் என்றுமே ஆதரவுதான்.

அவர்கள் தோற்றாலும் வென்றாலும் என்னை போல் ஒரு ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் பிள்ளைகள் அவர்கள். ஆகவே அவர்களை ஆதரிப்பது என் கடமை அது தொடரும்.

சீமானை அடிப்பது அதை இட அவசியமான என் சொந்த இன நலம் சார்ந்த கடமை.

என் குடும்பத்தை பாதுகாப்பது, அதற்கு அடுத்து எனக்குள்ள பெரிய கடமை எண்டால் அது சீமானை வெளுப்பதுதான்.

சீமான் தமிழக முதலவர், இந்திய பிரதமர், உலக ஜனாதிபதி ஆனாலும் அது தொடரும்.

ஒண்டில் சீமான் அரசியலை விட்டு போகணும் அல்லது நம்மில் ஒருவர் சாகணும்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, goshan_che said:

உங்க‌ளை மாதிரி திராவிட‌த்துக்கு சொப்பு தூக்கி கொண்டு சீமானை விம‌ர்சிப்ப‌து ரைம்வேஸ்ட்😉

40 எம்பி மார் திமுக்காவில் இருக்கின‌ம் டெல்லிக்கு போய் இதுவ‌ரை ஈழ‌ம் சார்ந்து வாய் திற‌ந்து இருக்கின‌மா................ஈழ‌ விடைய‌த்தில் திமுக்காவின் நிலைப் பாடு என்ன‌

நீங்க‌ள் சீமானை அடிக்க‌ ச‌க‌ ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளே உங்க‌ளை அடிப்பின‌ம் இது தான் க‌ள‌ உண்மை................என‌க்கு சுட‌லையையோ அவ‌ரின் அப்பாவையோ பிடிக்காது கார‌ன‌ம் அவ‌ர்க‌ள் செய்த‌ துரோக‌ன்.............அத‌ற்காக‌ ஸ்டாலின் க‌ருணாநிதி என‌ யாழில் நானோ அல்ல‌து சீமான் ஆதார‌வாள‌க‌ள் புல‌ம்புகிறோமா

காளிய‌ம்மாள் ப‌ற்றி போன‌ வ‌ருட‌த்தில் இருந்து ப‌ல‌ அவ‌தூறுக‌ளை யாழில் குப்பை கொட்டுவ‌து போல் கொட்டி நீங்க‌ள் , அதில் ஏதாவ‌து ஒன்று த‌ன்னும் உண்மை ஆகி இருக்கா

ச‌ரி ர‌ஸ்சியா அமெரிக்கா உக்கிரேன் நேட்டோ அமைப்பு

நீங்க‌ள் அதிக‌ம் சிங்சாங் போட்ட‌து யாருக்கு...............

மான்பு மிகு புட்டின் என்று எழுத‌

த‌மிழ் சிறி அண்ணா

குமார‌சாமி தாத்தா

க‌பித‌ன்

பெருமாள் அண்ணா

என்னை

எங்க‌ எல்லாரையும் நிர்வாக‌ம் யாழில் த‌டை செய்த‌வை..............

மோக‌ன் அண்ணாவின் வ‌ருகைக்கு பிற‌க்கு தான் அந்த‌ த‌டை நீக்க‌ப் ப‌ட்டு ப‌ழைய‌ ப‌டி எங்க‌ளால் யாழில் மீண்டும் எழுத‌ முடிந்த‌து................

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, வீரப் பையன்26 said:

உங்களுக்கு நான் எழுதுவது அநேகம் புரிவதில்லை போலும் என்பதால் மீண்டும் எழுதுகிறேன்.

  1. நான் எந்த கட்சிக்கும். திராவிட கட்சிக்கும் ஆதரவு இல்லை. நான் சீமானின் சத்துரு அவ்வளவு மட்டும்தான். ஆகவே திமுக வை யார் என்ன ஏசினாலும் அதில் எனக்கு பூரண உடன்பாடே.

    எனக்கு பெரியாரின் சில (அனைத்தும் அல்ல) கொள்கைகள் பிடிக்கும். அந்த கொள்கைகள் எப்படி தமிழ் நாட்டை வளப்படுத்தின என்பது தெரியும். சீமான் ஆதாரமில்லாத பாலியல் வக்கிரங்களை கூறும் போது அது பொய் என தெரியும். இவ்வளவுதான் என் அறிவு மட்டம்.

  2. நீங்கள் மிக அடிப்படையான சீமான் எதிரி = திமுக அனுதாபி என ஒரு பொய் சமன்பாட்டை போட்டு நான் அதுதான் என உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்.

  3. காளியம்மாள் - நான் இப்போதும் சொல்கிறேன். காளியம்மாள், ஒரு தங்க காப்பு. அது சீமான் என்ற வட்டிகடை காரனிடம் இருக்காது நல்ல தலைமையிடம் போய், இன்னும் மேலே வர வேண்டியவர். காலம் இருக்கிறது. சீமானின் நரி புத்தி அவரை துரத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

  4. ரஸ்யா-உக்ரேன் போரில் நான் அன்றும் இன்றும் உக்ரேனுக்கும் அதன் தலைவருக்கும்தான் ஆதரவு. உங்கள் அவதூறு பாசையில் சொல்வதானால் சிங்சாங்.

  5. இதையும் ஈழ தமிழர்களை மேற்கில் இருந்து அந்நியபடுத்தும் சதியை நான் அம்பலபடுத்துபதையும் உங்களால் வேறு படுத்தி பார்க்க கஸ்டமாய் இருப்பது போல் படுகிறது.

    என்னால் எழுதத்தான் முடியும் பையா, வாசித்து, கிரகித்து, விளங்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

  1. புட்டின் - நான் அவரை மாண்புமிகு என அழைப்பதை தடை செய்யுமாறு எங்கும் கோரவில்லை.

    ஆனால் அந்த விளிப்பு எவருக்கும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

    அதற்கான என் எதிர் வினை புட்லர் என அழைப்பதும் இதர கிண்டல்களும்தான்.

  2. ஆனால் நிர்வாகம் அதை தடை செய்த போது, “செத்த பாம்பை அடிப்பது” ஆண்மை அல்ல என்பதால் - நானும் புட்லர் என அழைக்கமாட்டேன் என அறிவித்தேன். நீங்கள் மறுபடியும் என்ன நடந்தது என்பதை சரிவர விளங்கி கொள்ள தவறியுள்ளீர்கள் என்பது என் ஐயம்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

விஜய்க்கு வை பிரிவு பாதுகாப்பு தான் கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஷாருக், சல்மான், கங்கணா இவர்களுக்கு வை பிளஸ் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்துடன் அவர்களுக்கு இந்தியா முழுவதும் இது கொடுக்கப்பட்டிருக்கின்றது. விஜய்க்கு இந்தப் பாதுகாப்பு தமிழ்நாட்டில் மட்டுமே. ஷாருக்குக்கு அடுத்ததாக ஒழுங்காக வரி கட்டும் பிரபலம் விஜய், அவருக்கும் ஒரு வை பிளஸ் கொடுத்திருக்கலாம் தானே............. தமிழ்நாடு என்றால் ஒன்றிய அரசுக்கு ஒரு இளக்கம் தான்....................🤣.

சீமானிடம் இந்த வை பிரிவுப் பாதுகாப்பைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: எனக்கு எதற்கு பாதுகாப்பு...................... நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு..................😜.

விடிந்தால் பொழுது சாயும் வரை உலகம் முழுக்க தனித்தனியே சிரிக்க வைக்கின்றனர் பலர்.....

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

உங்களுக்கு நான் எழுதுவது அநேகம் புரிவதில்லை போலும் என்பதால் மீண்டும் எழுதுகிறேன்.

  1. நான் எந்த கட்சிக்கும். திராவிட கட்சிக்கும் ஆதரவு இல்லை. நான் சீமானின் சத்துரு அவ்வளவு மட்டும்தான். ஆகவே திமுக வை யார் என்ன ஏசினாலும் அதில் எனக்கு பூரண உடன்பாடே.

    எனக்கு பெரியாரின் சில (அனைத்தும் அல்ல) கொள்கைகள் பிடிக்கும். அந்த கொள்கைகள் எப்படி தமிழ் நாட்டை வளப்படுத்தின என்பது தெரியும். சீமான் ஆதாரமில்லாத பாலியல் வக்கிரங்களை கூறும் போது அது பொய் என தெரியும். இவ்வளவுதான் என் அறிவு மட்டம்.

  2. நீங்கள் மிக அடிப்படையான சீமான் எதிரி = திமுக அனுதாபி என ஒரு பொய் சமன்பாட்டை போட்டு நான் அதுதான் என உங்களை நீங்களே ஏமாற்றி கொள்கிறீர்கள்.

  3. காளியம்மாள் - நான் இப்போதும் சொல்கிறேன். காளியம்மாள், ஒரு தங்க காப்பு. அது சீமான் என்ற வட்டிகடை காரனிடம் இருக்காது நல்ல தலைமையிடம் போய், இன்னும் மேலே வர வேண்டியவர். காலம் இருக்கிறது. சீமானின் நரி புத்தி அவரை துரத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

  4. ரஸ்யா-உக்ரேன் போரில் நான் அன்றும் இன்றும் உக்ரேனுக்கும் அதன் தலைவருக்கும்தான் ஆதரவு. உங்கள் அவதூறு பாசையில் சொல்வதானால் சிங்சாங்.

  5. இதையும் ஈழ தமிழர்களை மேற்கில் இருந்து அந்நியபடுத்தும் சதியை நான் அம்பலபடுத்துபதையும் உங்களால் வேறு படுத்தி பார்க்க கஸ்டமாய் இருப்பது போல் படுகிறது.

    என்னால் எழுதத்தான் முடியும் பையா, வாசித்து, கிரகித்து, விளங்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

  1. புட்டின் - நான் அவரை மாண்புமிகு என அழைப்பதை தடை செய்யுமாறு எங்கும் கோரவில்லை.

    ஆனால் அந்த விளிப்பு எவருக்கும் தேவையில்லை என்பதே என் நிலைப்பாடு.

    அதற்கான என் எதிர் வினை புட்லர் என அழைப்பதும் இதர கிண்டல்களும்தான்.

  2. ஆனால் நிர்வாகம் அதை தடை செய்த போது, “செத்த பாம்பை அடிப்பது” ஆண்மை அல்ல என்பதால் - நானும் புட்லர் என அழைக்கமாட்டேன் என அறிவித்தேன். நீங்கள் மறுபடியும் என்ன நடந்தது என்பதை சரிவர விளங்கி கொள்ள தவறியுள்ளீர்கள் என்பது என் ஐயம்.

நீங்கள் சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்ற‌ மாதிரி எழுதுவதில் நீங்க‌ள் வல்லவர்...................திராவிட‌த்தை தூக்கி பிடிப்ப‌தே திருட்டு திமுக்கா தான்................திருட‌னை பிடிக்காது திருட‌ன் தூக்கி பிடிக்கும் திராவிட‌த்தை பிடிக்கும் இது தான் உங்க‌ள் நிலைப்பாடு..............

எழுத்துக் கூட்டி த‌மிழ் வாசித்த‌து ம‌ல‌ழை ப‌ருவ‌த்தில்😁...............

நீங்க‌கே சீமான் ப‌ற்றி அவ‌தூறு திரிய‌ திற‌ப்பிங்க‌ள் அத‌ற்க்கு ப‌திலும் நீங்க‌ளே எழுதுவிங்க‌ள் யாரும் உங்க‌ளுட‌ன் க‌ருத்தாட‌ விரும்பாம‌ ஒதுங்கி விட்டின‌ம்.............சீமான் ஆதர‌வாள‌ர்க‌ள் இப்போது இதுக்கை எழுதுவ‌து மிக‌ மிக‌ குறைவு.............கார‌ண‌ம் ச‌லிப்பு த‌ன்மை , ஏன் தேவை இல்லா அவ‌தூறுக்கு ந‌ம்ம‌ நேர‌த்தை வீன் அடிப்பான் என ஒதுங்கி விட்டின‌ம் ...................

இனி சீமான் ப‌ற்றி செய்தி நீங்க‌ளே இணைத்து உங்க‌ளுட‌ன் விவாதிக்க‌ போவ‌து , வாலி , ஜ‌ஸ்ரின் , அல்ல‌து இன்னும் ஒரு சில‌ர் ம‌ட்டுமே...............

சீமான் ப‌ற்றிய‌ திரிக்குள் நான் இனி மூக்கை நுழைக்க‌ மாட்டேன் ப‌ல‌ர் என‌க்கு த‌னிப்ப‌ட்ட‌ முறையில் சொல்லி விட்டின‌ம் வில‌கி இருக்க‌ சொல்லி ,

ஆனால் யாழில் சீமான் காளிய‌ம்மாள் ப‌ற்றி அவதூறு பரப்பினால் உங்க‌ளின் முகத்திரையை கிழிப்பேன்.................

இனி இதுக்கை எழுத‌ மாட்டேன் நீங்க‌ள் ப‌தில் எழுதினாலும் அத‌ற்க்கு ப‌தில் அளிக்க‌வுன் மாட்டேன் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம்....................

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வீரப் பையன்26 said:

நீங்கள் சந்தர்ப்ப சூழ் நிலைக்கு ஏற்ற‌ மாதிரி எழுதுவதில் நீங்க‌ள் வல்லவர்..................

நன்றி

1 hour ago, வீரப் பையன்26 said:

திராவிட‌த்தை தூக்கி பிடிப்ப‌தே திருட்டு திமுக்கா தான்................திருட‌னை பிடிக்காது திருட‌ன் தூக்கி பிடிக்கும் திராவிட‌த்தை பிடிக்கும் இது தான் உங்க‌ள் நிலைப்பாடு..............

எனக்கு மகிந்தவை பிடிக்காது….ஆனால் பெளத்தத்தை பிடிக்கும்.

சீமானை பிடிக்காது ஆனால் தமிழ் தேசியத்தை பிடிக்கும்.

1 hour ago, வீரப் பையன்26 said:

எழுத்துக் கூட்டி த‌மிழ் வாசித்த‌து ம‌ல‌ழை ப‌ருவ‌த்தில்😁...............

தமிழுக்கு ழ அழகு

1 hour ago, வீரப் பையன்26 said:

நீங்க‌கே சீமான் ப‌ற்றி அவ‌தூறு திரிய‌ திற‌ப்பிங்க‌ள் அத‌ற்க்கு ப‌திலும் நீங்க‌ளே எழுதுவிங்க‌ள் யாரும் உங்க‌ளுட‌ன் க‌ருத்தாட‌ விரும்பாம‌ ஒதுங்கி விட்டின‌ம்.............சீமான் ஆதர‌வாள‌ர்க‌ள் இப்போது இதுக்கை எழுதுவ‌து மிக‌ மிக‌ குறைவு.............கார‌ண‌ம் ச‌லிப்பு த‌ன்மை , ஏன் தேவை இல்லா அவ‌தூறுக்கு ந‌ம்ம‌ நேர‌த்தை வீன் அடிப்பான் என ஒதுங்கி விட்டின‌ம் ...................

இப்படி நடந்து விசம் பரவுவது தடுக்கப்பட்டது எனில் - எனக்கு அதில் மகிழ்ச்சியே.

ஆனால் சலிப்பு என்னில் அல்ல -15 வருடமா தேங்கி கிடக்கும்

சீமானில், அவரின் கோக்குமாக்கு அரசியலில்தான்.

வெட்கம் இல்லாதவர்களால் மட்டுமே இனியும் சீமானுக்கு முட்டு கொடுக்க முடியும் என்ற நிலையை அவர் உருவாக்கிவிட்டார். கொஞ்சநஞ்சம் சூடு சுரணை உள்ளவர்கள் ஒதுங்கிவிட்டார்கள்.

1 hour ago, வீரப் பையன்26 said:

ஆனால் யாழில் சீமான் காளிய‌ம்மாள் ப‌ற்றி அவதூறு பரப்பினால் உங்க‌ளின் முகத்திரையை கிழிப்பேன்.................

தம்பி கிழிச்சுட்டாலும்….

1 hour ago, வீரப் பையன்26 said:

இனி இதுக்கை எழுத‌ மாட்டேன் நீங்க‌ள் ப‌தில் எழுதினாலும் அத‌ற்க்கு ப‌தில் அளிக்க‌வுன் மாட்டேன்

போன பந்தியில் கிழிப்பேன் என வெத்து உதார்….

இந்த பந்தியில் வழமை போல் “ வேலி பாய்ந்து” ஓடுகிறீர்கள்🤣.

யாழில் 5 பக்கம் தாண்டிய அத்தனை சீமான் திரியிலும் நீங்கள் இப்படி புறமுதுகிட்டு ஓடுவதும்…

பின்னர் ஒழிந்து நிண்டு -1 இடுவதும் கிட்டதட்ட ஒரு சம்பிரதாயம் ஆகி விட்டது🤣.

7 hours ago, ரசோதரன் said:

சீமானிடம் இந்த வை பிரிவுப் பாதுகாப்பைப் பற்றிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார்: எனக்கு எதற்கு பாதுகாப்பு...................... நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு..................😜.

சம்போ மஹாதேவா….

சர்வேஸ்வரா…..

இந்த அண்டசராசரமே உன் கண்ணசைவில்தானே இயங்குகிறது தேவோ🤣

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

விடிந்தால் பொழுது சாயும் வரை உலகம் முழுக்க தனித்தனியே சிரிக்க வைக்கின்றனர் பலர்.....

உங்களுக்கு ஒபாமாவின் White House Correspondents Dinner பேச்சு நினைவிருக்கலாம். டிரம்ப்பை விருந்தாளியாக அழைத்து அவர் முன்பே அவரை நக்கல் அடித்து, எல்லோரும் நகைக்கும் படி செய்வார் ஒபாமா.

இப்படியான narcissist களை சிரித்து தோற்கடிக்கும் உத்தி பிழைக்க வாய்புண்டு என்பதற்கு டிரம்பின் எழுச்சியே நல்ல உதாரணம்.

இவர்களின் கோமாளித்தனத்தை பார்த்து சிரிக்கலாம்…ஆனால் அதன் பின்னால் உள்ள நரித்தனத்தையும் கண்டு கொண்டு நடு மண்டையிலேயே போட வேண்டும்.

இதே போல் இன்னொருவர் சுப்ரமணியசுவாமி.

#ஆபத்தான கோமாளிகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

உங்களுக்கு ஒபாமாவின் White House Correspondents Dinner பேச்சு நினைவிருக்கலாம். டிரம்ப்பை விருந்தாளியாக அழைத்து அவர் முன்பே அவரை நக்கல் அடித்து, எல்லோரும் நகைக்கும் படி செய்வார் ஒபாமா.

இப்படியான narcissist களை சிரித்து தோற்கடிக்கும் உத்தி பிழைக்க வாய்புண்டு என்பதற்கு டிரம்பின் எழுச்சியே நல்ல உதாரணம்.

இவர்களின் கோமாளித்தனத்தை பார்த்து சிரிக்கலாம்…ஆனால் அதன் பின்னால் உள்ள நரித்தனத்தையும் கண்டு கொண்டு நடு மண்டையிலேயே போட வேண்டும்.

இதே போல் இன்னொருவர் சுப்ரமணியசுவாமி.

#ஆபத்தான கோமாளிகள்.

இன்றைய 'The Conversation' பதிப்பில் ஒரு கட்டுரை வந்திருக்கின்றது. கட்டுரையின் தலைப்பு: Must the president be a moral leader?

இரண்டு பக்கங்களையும் கட்டுரை சுருக்கமாக அலசுகின்றது. மிக நல்லதொரு கட்டுரை. இந்த தளம் மிகவும் தரமான ஒரு தளம். இந்த தளத்தில் பல துறைகளிலும் கட்டுரைகள் தகுதிகளும், அனுபவங்களும் உள்ளவர்களால் எழுதப்படுகின்றன.

ஆமாம், இவர்கள் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். கிணற்றை கலக்கி சேற்றை மேலே கொண்டு வந்து, இது தான் நிஜம் என்பார்கள். தாங்களே பாதிக்கப்பட்டவர்கள் என்னும் மனப்பான்மை பொதுவாகவே இன்று பெரும்பானமை சமூகங்களிடம் இருக்கின்றன. அவர்கள் மிக இலகுவில் இதை நம்பியும் விடுகின்றனர்.

The Conversation
No image preview

Must the president be a moral leader?

Presidents Day celebrates the American president – not only as a political leader, but as a moral leader. But can a president be a person of strong moral character, as well as a strong leader?

  • கருத்துக்கள உறவுகள்
On 17/2/2025 at 01:18, goshan_che said:

காளியம்மாள் - நான் இப்போதும் சொல்கிறேன். காளியம்மாள், ஒரு தங்க காப்பு. அது சீமான் என்ற வட்டிகடை காரனிடம் இருக்காது நல்ல தலைமையிடம் போய், இன்னும் மேலே வர வேண்டியவர். காலம் இருக்கிறது. சீமானின் நரி புத்தி அவரை துரத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

மீள்பிரசுரம்.

5 நாளைக்கு முன் எழுதியது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.