Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காதலர் தினக் கதை

------------------------------
large.TwoValentineBirds.jpg.de21a81c3f0c0331d6bcfec9c62b452f.jpg
 
என் நண்பன் சொன்ன அவனின் கதை இது
 
ஆள் அப்படி ஒன்றும் கண்டவுடன் காதலிக்க தோன்றும் புற அழகு என்றில்லை
 
ஆனால் அவனின் அகம் நல்ல அழகு என்று அவனே சொல்லிக் கொள்வான்
 
சொந்த இடம் பீஜிங் சோகக் கதை நடந்ததும் அங்கே தான்
 
அங்கே ஒரு பெண் நல்ல அழகு அவர்
 
ஊரில் பலரும் அவர் பின்னால் திரிய அவரோ  நம்மாளை எப்படியோ காதலிக்க ஆரம்பித்தார்
 
கனவா நிஜமா என்று காற்றிலே மிதந்து கொண்டிருந்தான் நம்மாள்
 
அடுத்து வந்த காதலர் தினத்தில் நம்மாள்  ஒரு பூங்கொத்து கொடுத்தார்
 
எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு
 
நானே செய்தேன் என்றார் நம்மாள்
 
பூ......... என்று இழுத்தாள் ஊரில் அழகான அந்தப் பெண்
 
வீட்டுக்கு முன் இருந்தது என்றான் அப்பாவியாக
 
அன்று போன அந்த அழகுப் பெண் பின்னர் திரும்பிப் பார்க்கவே இல்லை
 
இப்ப இருப்பது இரண்டாவது காதலா என்றேன்
 
ஆமாம் என்று அவசரமாக தலையாட்டினான் இப்ப அவர் அவனின் மனைவியும் கூட
 
பூ............ என்று நான் இழுத்தேன்
 
கடையில் வாங்கிக் கொடுத்தேன் என்றான் சோகமாக
 
இதில் ஏன் சோகம் என்று நான் முழிக்க
 
இவருக்கும் அப்பவே தெருவில் புடுங்கி கொடுத்திருக்க வேண்டும் என்றான்...................
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

நல்லதொரு பூக்கதை...அட பூவிலை இவ்வளவு விசயமிருக்கா....இப்ப நாம முன்னால் வீட்டுப் பூவை புடுங்கிக் கொடுக்கலாமா /

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, alvayan said:

நல்லதொரு பூக்கதை...அட பூவிலை இவ்வளவு விசயமிருக்கா....இப்ப நாம முன்னால் வீட்டுப் பூவை புடுங்கிக் கொடுக்கலாமா /

'பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லாம்......................' என்பது போல, கட்டிய பின் கடையில் வாங்கிக் கொடுத்தாலும், தெருவில் புடுங்கிக் கொடுத்தாலும், அங்கிருந்து வரும் எஃபக்ட்டில், ரியாக்‌ஷனில் ஏதாவது குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை..................🤣

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ரசோதரன் said:
எங்கே வாங்கிய பூங்கொத்து என்ற கேள்விக்கு
 
நானே செய்தேன் என்றார் நம்மாள்
 
பூ......... என்று இழுத்தாள் ஊரில் அழகான அந்தப் பெண்
 
வீட்டுக்கு முன் இருந்தது என்றான் அப்பாவியாக

கஞ்சன் என்று எண்ணியிருப்பாளோ?🤔

  • கருத்துக்கள உறவுகள்

சீன பெண்கள் சுய பொருளாதாரத்தில் மிக் திறமையானவர்கள், என்னுடன் ஒரு பெண்மணி வேலை செய்தார் அவர் பதின்ம வயதின் இறுதிப்பகுதியில் வேலையினை ஆரம்பித்தார் 20 களின் இறுதிப்பகுதிக்குள்ளே வேலையினை விட்டு விட்டு தனது சொந்த முயற்சியில் இறங்கி விட்டார், அவர் கூறுவார் முதலாவது மில்லியன் டாலர் உழைப்பதுதான் கடினம் அதன் பின்னர் அனைத்தும் இலகுவாகிவிடும் என கூறுவார்.

Think & grow rich, 7 steps to wealth என இரண்டு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார், இது வரை வாசிக்கவில்லை கிட்டதட்ட 10 ஆண்டுகளாகின்றன.

real estate இல் முதலிட்டிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, vasee said:

அப்போது அதில் ஒன்றை வாசித்திருந்தாலும் இப்ப அரை மில்லியன் டாலர் கைவசம் இருந்திருக்கும் ....... அது சரி இப்ப அந்தப்பெண் எத்தனை மில்லியன் வைத்திருக்கிறாராம் . .........!  😁

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, suvy said:

அப்போது அதில் ஒன்றை வாசித்திருந்தாலும் இப்ப அரை மில்லியன் டாலர் கைவசம் இருந்திருக்கும் ....... அது சரி இப்ப அந்தப்பெண் எத்தனை மில்லியன் வைத்திருக்கிறாராம் . .........!  😁

ஓய்வு பெற்று விட்டார் வேலையிலிருந்து, ஆனால் பல கட்டங்கள் கட்டி விற்றுக்கொண்டிருந்தார் கடைசியாக அவரை சந்தித்த போது சிட்னியில் ஒரு முக்கிய பகுதியில் இரண்டு வீடு கட்டி விற்பனைக்கு தயாராகி இருந்தார், அவரது வருமானத்தினை கேக்கவில்லை ஆனால் அவரிடம் பல திட்டங்கள் இருந்தது குறைந்தது 10 மில்லியன் வைத்திருப்பார் என கருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Paanch said:

கஞ்சன் என்று எண்ணியிருப்பாளோ?🤔

அப்படித்தான் அந்த நண்பன் சொன்னான், பாஞ்ச் ஐயா. அந்தப் பெண் கொஞ்சம் பகட்டாக வாழ விரும்பியிருந்தது போல. இந்தப் பயல் நம்ம ஜாதி................ கையில் அகப்படுகின்ற சட்டையையோ அல்லது ரீ-சேர்ட்டையோ போட்டுக் கொண்டு, அது என்ன கோலத்தில் இருந்தாலும், வேலைக்கு வந்து போய்க் கொண்டிருந்தான்.

3 hours ago, vasee said:

Think & grow rich, 7 steps to wealth என இரண்டு புத்தகங்களை எனக்கு அன்பளிப்பாக கொடுத்தார், இது வரை வாசிக்கவில்லை கிட்டதட்ட 10 ஆண்டுகளாகின்றன.

real estate இல் முதலிட்டிருந்தார்.

இந்திய, இலங்கைப் பெண்களும் இப்படி இருக்கின்றார்கள். புதுக் கார் வாங்குவதே சுத்த வேஸ்ட் என்று சொல்லி, பழைய காரை வாங்கி ஓடிக் கொண்டு, ஆனால் பல வீடுகள் வாங்கியிருக்கும் ஒரு ஈழப் பெண் இங்கிருக்கின்றார்.

ஆனாலும், சீனர்கள் ஒரு லெவல் கூடத்தான். என்னுடன் வேலை செய்த இன்னொருவர், அவர் மெயின்லாண்டிலிருந்து, சீனா, இங்கே வந்திருந்தார். பல காலமாக தனியாளாக இருந்த அவர், பின்னர் ஒரு இணையைப் பிடித்தார். இருவரும் சேர்ந்து முதன்முதலாக காஸ்ட்கோவிற்கு சாப்பிடப் போனார்கள்....................🙃. இங்கு காஸ்ட்கோ உணவகத்தில் ஒரு டாலருக்கும், இரண்டு டாலருக்கும் மட்டும் சில சாப்பாடுகளை விற்பார்கள்............

இன்னும் ஒரு இடத்தில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்கன் ஒருவர், 'I am working on my second million...............' என்று சொல்வார். அவரே தொடர்ந்து சொல்லுவார், 'the first million didn't work out..................' என்று ................🤣.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சைனாவில் வட சைனாவில் இருப்போருக்கும், தென் சைனாவில் இருப்போருக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. அவர்களுடன் பழகிய பின்பு அவை தெளிவாக ஆரம்பிக்கும். உருவம் மட்டும் அல்ல, உணவுப் பழக்கவழக்கங்கள் கூட வேறுபட்டவை. இரு பிரிவுகளுமே சீன மொழியின் மண்டாரின் மொழிப் பிரிவையே உபயோகித்தாலும், அவர்களில் ஒருவர் சிலவேளைகளில் இன்னொருவரை திக்குமுக்காட வைப்பார். நான் ஒரு நாள் வீட்டிலிருந்து கொய்யாப்பழம் எடுத்துப் போயிருந்தேன். தென் சைனாக்காரர் அதன் பெயர் என்னவென்று எழுதிக் காட்டினார். வடசைனாக்காரர் தான் தன் வாழ்க்கையில் அப்படி ஒன்றை கேள்விப்பட்டதேயில்லை என்றார்...........

கொய்யாப்பழத்திற்கான அவர்களின் சொல்லை அப்படியே மொழிபெயர்த்தால், அதன் அர்த்தம் 'கற்பழம்' என்று வரும் - கல் போன்ற ஒரு பழம். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் எழுத்து உரு ஒரு தடியின் மேல் கல் ஒன்றை வைத்தது போலவே எனக்குத் தெரிந்தது.............

ஹாங்காங்கில் சீன மொழியின் இன்னொரு மொழிப் பிரிவை பயன்படுத்துகின்றார்கள் - காண்டோனீஸ். இரண்டு பிரிவுக்கும் எழுத்து உருக்கள் ஒன்று என்றாலும், பேச்சு வழக்கு வேறுபட்டவை. வட சைனா, தென் சைனா, ஹாங்காங், இதைவிடவும் பல உட்பிரிவுகள் உள்ளது என்று சொன்னார்கள். எல்லாவற்றையும் சொல்லி விட்டு, அவர்கள் என்னைக் கேட்ட கேள்வி, 'அது சரி, ஆனால் நீங்கள் ஏன் எல்லா இந்தியர்களும் ஒரே மாதிரியான தோற்றத்தில் இருக்கின்றீர்கள்................. ஒருவரை ஒருவர் எப்படி வித்தியாசம் கண்டுபிடிக்கின்றீர்கள்.....................'....................🫢.

வட சைனாவில் மாங்கோலிய நாட்டு எல்லையுடன் இருக்கும் சீனர்கள் இன்னும் வித்தியாசமானவர்கள். கொஞ்சம் அகண்ட உருவமும், உடற் பாகங்களும் கொண்டவர்கள். ஒரு காலத்தில் சைனாவை கலங்கடித்த ஜெங்கிஸ்கான் பரம்பரை அவர்கள்............

என்னுடைய நண்பனின் மனைவியும் அந்த இடமும், பரம்பரையும் தான்.......... அதனாலே ஆள் அடக்கமாகவே இருந்தான்..............

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 11:19, ரசோதரன் said:

நல்லதொரு பூக்கதை...அட பூவிலை இவ்வளவு விசயமிருக்கா....இப்ப நாம முன்னால் வீட்டுப் பூவை புடுங்கிக் கொடுக்கலாமா /

'பூ என்றும் சொல்லலாம், புஷ்பம் என்றும் சொல்லாம்......................' என்பது போல, கட்டிய பின் கடையில் வாங்கிக் கொடுத்தாலும், தெருவில் புடுங்கிக் கொடுத்தாலும், அங்கிருந்து வரும் எஃபக்ட்டில், ரியாக்‌ஷனில் ஏதாவது குறிப்பிடத்தக்க வித்தியாசம் இருக்குமா என்று தெரியவில்லை..

அல்வாயன் கேட்பது என்னவென்றால்

வேறொரு பெண்ணுக்கு கொடுக்கலாமா என்பதே?

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2025 at 07:49, alvayan said:

நல்லதொரு பூக்கதை...அட பூவிலை இவ்வளவு விசயமிருக்கா....இப்ப நாம முன்னால் வீட்டுப் பூவை புடுங்கிக் கொடுக்கலாமா /

முன்னால் வீட்டுப் பூ வேலைக்காகது அண்ணை! அது காசுக்கு வாங்கி இருந்தால் தானாம்.....

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

இந்திய, இலங்கைப் பெண்களும் இப்படி இருக்கின்றார்கள். புதுக் கார் வாங்குவதே சுத்த வேஸ்ட் என்று சொல்லி, பழைய காரை வாங்கி ஓடிக் கொண்டு, ஆனால் பல வீடுகள் வாங்கியிருக்கும் ஒரு ஈழப் பெண் இங்கிருக்கின்றார்.

ஆனாலும், சீனர்கள் ஒரு லெவல் கூடத்தான். என்னுடன் வேலை செய்த இன்னொருவர், அவர் மெயின்லாண்டிலிருந்து, சீனா, இங்கே வந்திருந்தார். பல காலமாக தனியாளாக இருந்த அவர், பின்னர் ஒரு இணையைப் பிடித்தார். இருவரும் சேர்ந்து முதன்முதலாக காஸ்ட்கோவிற்கு சாப்பிடப் போனார்கள்....................🙃. இங்கு காஸ்ட்கோ உணவகத்தில் ஒரு டாலருக்கும், இரண்டு டாலருக்கும் மட்டும் சில சாப்பாடுகளை விற்பார்கள்............

இன்னும் ஒரு இடத்தில், அங்கு வேலை செய்து கொண்டிருந்த அமெரிக்கன் ஒருவர், 'I am working on my second million...............' என்று சொல்வார். அவரே தொடர்ந்து சொல்லுவார், 'the first million didn't work out..................' என்று ................🤣.

இவரும் ஒரு பழைய டொயோட்டா கார் வைத்திருந்தார், இவரும் தனியாளாகவே இருந்தார்,

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

அல்வாயன் கேட்பது என்னவென்றால்

வேறொரு பெண்ணுக்கு கொடுக்கலாமா என்பதே?

அவ்வளவு தூரம் வந்த பின், ஏன் அண்ணா தெருவில் புடுங்கிக் கொடுப்பான்............... அல்வாயன் கடையில் வாங்கியே கொடுக்கலாம்.................

2 hours ago, vasee said:

இவரும் ஒரு பழைய டொயோட்டா கார் வைத்திருந்தார், இவரும் தனியாளாகவே இருந்தார்,

ஆகவே இது மரபணு தான், சில மனிதர்களுக்கு மட்டுமே வந்து சேர்கின்றது போல.................🤣

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல படிப்பினைக் கதை அண்ணை, பொதுவா சீனர்களிடையில் எதையும் மலிவா வாங்கினாத் தான் பெருமை, ஆனா அந்த அழகி வேற மாதிரிப் போல😁.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரசோதரன் said:

ஆகவே இது மரபணு தான், சில மனிதர்களுக்கு மட்டுமே வந்து சேர்கின்றது போல.................🤣

சில முயற்சிகள் செய்தவர், ஆனால் அவரது எதிர்பார்ப்பிற்கு ஏற்றவர்களாக அவர்கள் இருக்கவில்லை என கருதுகிறேன், அவர் மற்றவர்களின் நம்பிக்கை உணர்வுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கிறார் என உணர்ந்தேன், அந்த அடிப்படையிலேயே தனது சமூக உறவுகளை கட்டமைத்திருந்தார் என்பதனை அவருடான அனுபவத்தில் உணர முடிந்தது, அதற்கு மிகையான பணத்தின் மீதான பாதுகாப்பு உணர்வினால் ஏற்பட்ட பாதிப்பாக இருக்கலாம்.

ஆனால் ஒரு வித்தியாசமான பார்வை கொண்ட புத்திசாலி பெண்மணி, ஆளுமையான ஆனால் அவரிடம் வெட்டிபந்தா கர்வம் எதுவும் இருக்காது, பொது உலகில் கரட்டை துரத்து கழுதை அல்ல அவர்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/2/2025 at 10:09, ரசோதரன் said:

கொய்யாப்பழத்திற்கான அவர்களின் சொல்லை அப்படியே மொழிபெயர்த்தால், அதன் அர்த்தம் 'கற்பழம்' என்று வரும் - கல் போன்ற ஒரு பழம். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் எழுத்து உரு ஒரு தடியின் மேல் கல் ஒன்றை வைத்தது போலவே எனக்குத் தெரிந்தது.............

ரசோதரன், சீன மொழி மிகவும் நன்ராக இருக்கும் போல உள்ளது.

நான் எனக்குத் தெரிந்த வட சீனனிடம் கேட்டேன்.

மீன் என்பதை எவ்வாறு எழுதுவீர்கள் என்று..!

ஒரு சதுரம் கீறி அதற்குள் ஒரு சின்ன வட்டம் போட்டார்.

அதாவது அந்த நாட்களில் வயல்களில் தான் வெள்ளத்துக்குள் மீன் பிடித்தார்களாம்..!

Too easy Chinese.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:
  On 15/2/2025 at 15:09, ரசோதரன் said:

கொய்யாப்பழத்திற்கான அவர்களின் சொல்லை அப்படியே மொழிபெயர்த்தால், அதன் அர்த்தம் 'கற்பழம்' என்று வரும் - கல் போன்ற ஒரு பழம். அதற்கு அவர்கள் வைத்திருக்கும் எழுத்து உரு ஒரு தடியின் மேல் கல் ஒன்றை வைத்தது போலவே எனக்குத் தெரிந்தது.............

எனக்கும் இப்படித்தான் அவர்களின் எழுத்து உருக்களை பார்த்த பின் தோன்றியது. இது என்ன எல்லாவற்றையும் சின்ன சின்ன சித்திரங்களாக கீறி வைத்திருக்கின்றார்களே என்று.

இதே நண்பனுடன் சில காலம் ஒன்றாக வேலை செய்ததில் அவன் பல தகவல்களை சொல்லியிருந்தான். இன்று புழக்கத்தில் இருக்கும்புதிய சீனமொழி மிகவும் வேறுபட்டது என்றான். தன்னால் பழைய சீன மொழியை வாசிக்கவே முடியாது என்றும் சொல்லியிருந்தான். அவர்களிடம் 5000 வருடங்களிற்கு முற்பட்ட எழுத்துகள் இருக்கின்றன.

ஓரளவு பழகிய பின், சில சூழ்நிலைகளால் ஏற்பட்ட வித்தியாசங்கள் அன்றி, அவர்களும் நாங்களும் அடிப்படையில் பல ஒற்றுமை கொண்டவர்களாவே இருப்பது போலத் தோன்றியது. எங்களுக்கு மற்ற சமூகங்கள் மீது இருக்கும் அவநம்பிக்கை அவர்களுக்கும் இருக்கின்றது, அதுவே ஒரு பெரிய தடை................ அடுத்ததாக அவர்களின் ஆங்கில உச்சரிப்பு. இலங்கையர்களின், எங்களின் தலைமுறையின், ஆங்கில உச்சரிப்பும் அவ்வளவு நல்லதில்லை தான், ஆனால் சீன மொழி ஆங்கிலத்தை வெளியே வரவே விடுவதில்லை...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.