Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு எதிராக திமுக காழ்ப்புணர்வுடன் அவதூறைகளை பேசிக்கொண்டிருக்க இன்றைய திருமாவின் பேட்டி கருத்தியல் ரீதியான பேச்சாக மிகவும் கவனிக்ககூடியதாக நியாயமான கேள்விகளுடன் அமைந்தது.. பார்க்கலாம் நாளை சீமானின் பதிலை.. திருமா பேசியது 👇

சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.. ஒரு கருத்தியல் விவாதம்னா நம்ம வரவேற்கலாம்.. பெரியாரை வந்து விமர்சிக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. பெரியாரே சொல்லி இருக்கிறாரு என் கருத்தை ஒருத்தன் வந்து மறுத்து பேசினான்னா அது முற்போக்கானதா இருந்தா அதை நான் வரவேற்கிறேன்னு சொல்லி இருக்கிறாரு..என்னுடைய கருத்தை நான் சொன்னேங்குறதுக்காக யாரும் ஏத்துக்க கூடாது அதுல எது சரின்னா ஏத்துக்கோ அப்படிங்கிறதுதான்… அது பெரியாரே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் அது.. அதனால பெரியார் வந்து விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. அம்பேத்கரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது..

ஆனா சீமான் பேச்சு பெரியாரை கொச்சைப்படுத்துவதாகவும் அவதூறுபரப்புவதாகவும் தான் இருக்கு.. அவர் வந்து கருத்தியல் ரீதியா கடவுள் இல்லைன்னு ஏன் சொன்னாரு கடவுள் இருக்கிறார் அப்படின்னு பேசுங்க.. பார்ப்பன எதிர்ப்பு ஏன் வைத்தார்.. பார்ப்பன எதிர்ப்பு தப்பு.. அவங்க சிறுபான்மையினர்.. சிறுபான்மை துவேஷம் கூடாது.. பார்ப்பனர்கள் என்ன ஆதிக்கம் பண்ணிட்டாங்க இவர் வந்து பார்ப்பனர்களை எதிர்க்கிறார்.. இது ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியல் தானே.. அப்ப பெரியார் பேசுறது ஒரு துவேஷ அரசியல்.. அதனால நான் எதிர்க்கிறேன் அப்படின்னு பேசுங்க நம்ம விவாதிப்போம்..

ஆனா பெரியார் பேசின அரசியல்தான் தமிழ் தேசியத்திற்கு எதிராய் இருக்கு அப்படின்னு சொல்றதும் பிறமொழி வெறுப்பை வந்து விதைப்பதும் எல்லாம் டோட்டலா அவர் வந்து தமிழ் தேசியம் பேசல.. அவர் வந்து ஒரு வெறுப்பு அரசியலை பார்ப்பன அரசியலுக்கு அல்லது இந்த சனாதன அரசியலுக்கு துணை போகக்கூடிய ஒரு அஜெண்டாதான் அவர்கிட்ட இருக்குது..

அவர் பேசுறது தமிழ் தேசியமே கிடையாது..தேசியம்ங்கிற சொல்லே முதல்ல தமிழ் சொல் கிடையாது.. அப்படி பார்த்தா தூய தமிழ் வரணும்னா தேசியம்ங்கிற சொல்லே தமிழ் சொல் கிடையாது.. தமிழ் தேசம் அப்படிங்கறது தமிழரசன் பேசின அரசியல்.. அது தமிழ் தேசியம்..

எங்களுக்கு தனி தமிழ்நாடு வேணும்.. நாங்க இந்திய பேராதிக்கத்தின் கீழ இருக்க மாட்டோம்.. எங்களுக்கு இந்திய தேசியம் வேண்டாம்.. நாங்க வந்து தனி தமிழ்நாடு கோறுகிறோம் என்பதுதான் தமிழ்நாடு தமிழரசன் பேசின அரசியல்.. தனி தமிழ்நாடு கோரிக்கை தான் தமிழ் தேசியமா இருக்க முடியும்..

இப்ப நாம பேசுறது வந்து மொழி உரிமையும் இன உரிமையும் உள்ளடங்கிய இந்திய தேசத்திற்குள் கட்டுப்பட்ட ஒரு அரசியல்…

இப்ப இவர் வந்து தேர்தல்ல நிக்கிறார்…அப்படின்னா இந்த எலக்டோரல் சிஸ்டத்தை ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த இந்தியாவையும் ஏத்துக்கிறாரு.. அப்ப இந்தியாவை ஏத்துக்கிட்டாருன்னா இந்திய தேசியத்தை ஏத்துக்கிட்டாருன்னா தமிழ் தேசியம் எங்க இருக்கும்..?

தமிழ்தேசியம்ங்கிறது சிங்கள பேரினவாதத்தை மட்டுமே எதிர்க்கல.. எங்களுக்கு வெறும் எங்க தமிழ் மொழியையும் ஆட்சி மொழியா வச்சு அவங்க கோரிக்கை வைக்கல.. எங்களையும் ஒரு தேசிய இனமா அங்கீகரிச்சு எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு அவரு கேக்கல..முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கேக்கல..

முதலமைச்சர் தரேன்னு சொல்லவே வேணான்ட்டாருல.. அவரு அதை வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒரே ப்ராவின்ஸா மாற்றி அந்த ப்ராவின்ஸ்க்கு அவரை முதலமைச்சர் ஆக்குறோம்னு தானே சொன்னாங்க.. அதுதானே 13 அமெண்ட்மென்ட்.. அதை அவர் ஏத்துக்கல.. அப்ப அவருடைய கோரிக்கை என்ன..? நாங்க வேற நீங்க வேற.. எங்களுக்கு தனியா எங்க தாயகத்தை பிரிச்சு கொடுங்க.. அதான் தாயகம் தேசியம் தன்னுரிமைங்கிறது.. தன்னாட்சிங்கிறது.. தாயகம் தேசியம் தன்னாட்சி.. எங்கள் நிலப்பரப்பை எங்கள் தாயகமா ஏத்துக்குங்க.. எங்களுடைய அரசியல் எங்களை வந்து ஒரு தேசியமாகவும் தேசிய இனமாகவும் ஏத்துக்குங்க.. அதனால எங்களை நாங்களே ஆண்டுகொள்வதற்கான இறையாண்மையை எங்கள்ட்ட ஒப்படைங்க.. இதுதான் வந்து தமிழ் அரசியல்.. தமிழ் தேசிய அரசியல்.. இப்ப இவங்க அதை வைக்கிறாங்களா..?

தாயகம் தேசியம் தன்னாட்சிங்கிறதை வைக்கிறாங்களா..? வெறும் மொழி உணர்வையும் இன உணர்வையும் பேசிட்டு இருக்காங்க.. தெலுங்கு எதிர்ப்பை முன் வைக்கிறாங்க தெலுங்கர்களால் தான் இங்க எல்லாமே போச்சுன்றாங்க.. அந்த வரிசையில பார்க்கும்போது பெரியார் வந்து ஒரு கன்னடர்.. அவரு அந்த கட்சியில இருந்தவங்க எல்லாம் தெலுங்கர்கள்.. அதனால இங்க தெலுங்கர்களால்தான் நாங்க அழிஞ்சு போயிட்டோம் அப்படிங்கிறார்கள்.. இது வந்து கருத்தியல் ரீதியாவே வரலாற்று தவறு.. வரலாற்றுப் பிழை இந்திய தேசியம் தான் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியும்.. தெலுங்கு தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியாது..

டெல்லியில் இருக்கிறது ஹிந்தி பேசக்கூடிய ஆட்சியாளர்கள் தான் இருக்குறாங்க.. தெலுங்கு பேசக்கூடிய ஆட்சியாளர்கள் அங்க இல்லை.. எந்த வகையில வந்து தமிழ் தேசியத்திற்கு வந்து பெரியார் முட்டுக்கட்டையா இருந்துட்டாரு..? தமிழ்ங்கிற உணர்வையும் தமிழன் என்கிற உணர்வையும் அவர் சைமல்டேனியஸா சமகாலத்துல முன் வச்சிருக்கிறாரு..

தமிழை ஏன் பழிச்சாருன்னா தமிழ்ல வந்து அறிவார்ந்த செய்திகள் இல்லை.. எல்லாம் புராண குப்பைகள் இருக்குன்றதுனால ஆத்திரப்பட்டாரு..காட்டுமிராண்டி காலத்துல இருந்த அதே மொழியாதான் இது வளர்ச்சி இன்னும் வளர்ச்சி அடையல.. ஒரு நவீனமா அப்டேட் ஆகல சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதுக்குள்ள வரல.. அதுக்கான டெர்மினாலஜி அதுக்கான சொல்லகராதிகள் இதுல இல்ல அப்படிங்கிற ஆத்திரத்துல அவர் சொன்னாரு.. ஒரு விரக்தியின் விளிம்புல இருந்து அதை சொன்னாரே தவிர கன்னட பற்று வைத்துக்கொண்டு தமிழை வந்து அவர் பழிக்கல..

சீமான் என்ன தோற்றத்தை உருவாக்குறாருன்னா அவர் கன்னடரா இருந்ததுனாலதான் தமிழர்களை கொச்சைப்படுத்தி இருக்கிறாருன்றாரு::

தமிழ் அறிஞர்கள் பங்களிப்புங்கிறது வேற..ஒரு அரசியல் களத்தில் நின்னு ஒருத்தர்செய்யக்கூடிய பங்களிப்புங்கிறது வேற..

அண்ணா பேசுனது எல்லாரும் தமிழறிஞர்கள் பேசி இருக்காங்க.. ஆனா அண்ணா ஏன் நம்ம ஒரு ஐக்கனா பார்க்கிறோம்னா அவர் அரசியல் களத்தில் நின்னு பேசினார்.. அதே மாதிரி அம்பேத்கர் பேசின அரசியலை அதுக்கு முன்னாடி எவ்வளவு பேர் பேசி இருக்காங்க.. ஆனா அம்பேத்கர் அரசியல் களத்தில் நின்று செஞ்சதுனால நம்ம வந்து தூக்கி பிடிக்கிறோம்.. அரசியல் களத்தில் நின்னு செய்யறவங்களுடைய பங்களிப்பையை நம்ம இலக்கிய தளத்தில் நின்னவங்கள கூட வந்து ஒப்பிடக்கூடாது..

மாபோசி காலத்துல பேசின அரசியல் வந்து அவங்களும் அன்னைக்கு வந்து திராவிட வெறுப்புங்கிறதை முன்னிறுத்தி தான் பேசுனாங்களே தவிர தனித்தமிழ்நாடு கோரிக்கை யாரும் வைக்கலையே..

மாபோசி தனி தமிழ்நாடு கோரிக்கை வச்சாரா அல்லது வேற யாராவது தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா இப்ப இவங்களே தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா..? வைக்க முடியாது இல்லையா..?

அப்ப முடியாதுன்னா நீ பேசுறது தமிழ் தேசியம் கிடையாது.. அது மொழி உரிமை.. இன உரிமை.. அவ்வளவுதான் நீங்க

கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிட்டு எலக்சன்ல நிக்கிறீங்கன்னு சொன்னா நீங்க பேசுறது போலி.. அது தமிழ் தேசியமா இருக்க முடியாது..

நீங்க தமிழ் தேசியம் பேசுறதுனா இந்த கான்ஸ்டிடியூஷன் நான் ஏத்துக்கல இந்த எலக்சன்ல நான் நிக்க மாட்டேன் எங்க தமிழ்நாடு தனி நாடு.. எங்களை இந்த இந்தியாவுக்குள்ள வச்சிருக்காதீங்க நாங்க தனி தமிழ்நாடு வென்றெடுப்போம்னு சொல்லுங்க..

யாரும் சொல்ல முடியாது.. அப்படி வெளிப்படையா சொல்ல முடியாது அப்ப எதுக்காக நீங்க பெரியாரை கொச்சைப்படுத்துறீங்க..? பெரியார் எப்படி தமிழ் தேசத்துக்கு முட்டுக்கட்டையா இருக்க முடியும்..?

பெரியாருடைய அரசியல் முழுக்க முழுக்க பார்ப்பனிய எதிர்ப்பு,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு.. அதனாலதான் திராவிடம் என்கிற சொல்லாடலே வருது..

திராவிடத்தை பெரியார் கண்டுபிடிக்கல திராவிடம் என்கிற சொல் வந்து பண்டிதர் அயோத்தியதாசரால தான் இங்க முழக்கத்துக்கே வருது..அவர்தான் திராவிடம் என்கிற சொல்லை முதல்ல கையாளுறாரு அதுக்கு முன்னாடி எத்தனையோ பேர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனா ஆரியத்திற்கு எதிரான ஒரு சொல்லாடலா திராவிடத்தை கையாண்டவர் பண்டிதர் அயோத்தியதாசர்.. அப்படி துணிச்சல் இருந்தா நீங்க பண்டிதர் அயோத்திதாசர் விமர்சனம் பண்ணுங்க.. திராவிடத்தை அவர்தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்..

ஆதி திராவிடம் என்கிற சொல்லை இவர் இரட்டமலை சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்.. ரெவரன் ஜான் ரத்தினம் திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் 1880களில் அல்லது 82, 83… அவர் இந்த அமைப்பை உருவாக்கும் போது பெரியாருக்கு மூணு வயசு நாலு வயசு.. திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் அப்ப அவங்க எல்லாம் வந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக இருந்தாங்களா..?

அன்னைக்கு மதராஸ் மாகாணத்துல எல்லா மொழியும் பேசக்கூடியவங்களா இருந்தாங்க அந்த காலத்துல நாம பிறந்திருந்தாலும் அப்படித்தான் இயக்கத்தை உருவாக்கி இருப்போம்..

இன்னைக்கு திராவிடர் என்கிற சொல்லு தேவையில்லை தமிழன்னு சொன்னா போதும் தமிழர் தேசியத்தை பேசினா போதும்னா அது ரைட்.. நமக்கு திராவிடம் என்கிற சொல் தேவையில்லைன்னா அத சொல்லலாம்.. ஆனா அதுதான் தமிழ் தேசிய தேசியத்தையே வந்து முட்டுக்கட்டையா இருந்துச்சு.. பெரியாரால தான் அங்க தமிழர்களே எழுச்சி பெறாமல் போனாங்க.. பெரியாரை ஒழிச்சாதான் தமிழ் தேசியத்தை கொண்டு வர முடியும்ங்கிறது தவறு..

மேலும் அவர் பேசியது 👇

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • பாலபத்ர ஓணாண்டி changed the title to தேர்தலை புறக்கணித்து தனிநாடு கேட்பதுதான் உண்மையான தமிழ்தேசியம்.. சீமான் பேசுவது தமிழ் தேசியமே அல்ல..
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.

அது மட்டுமல்ல இல்லாத கட்டு பொய்களை உருவாக்கி பெரியார் தாயிடமோ இல்லை தங்கையிடமோ மோசமாக நடந்து கொள் அவர்களும் பெண்கள் தானே என்று சொன்னதாக பிரசாரம் செய்கின்றார்.

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

தனி தமிழ்நாடு கோரிக்கை தான் தமிழ் தேசியமா இருக்க முடியும்..

👌

சிறப்பான விளக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தனி நாட்டுக்குள்தான் இனவழி தேசியம் அமைய வேண்டும் என்பதல்ல.

ஆனால் இறுதி கோரிக்கையாக தனிநாடு இருக்க வேண்டும்.

உதாரணம் Scottish National Party யும் அவர்கள் யூகேயில் இருந்த படி முன்னெடுக்கும் ஸ்காட்லாந்து தேசியமும்.

அவர்கள் தேர்தலில் பங்கெடுப்பார்கள், ஸ்கொட்லாந்தில் ஆட்சியும் அமைப்பார்கள்.

ஆனால் அதே உத்வேகத்தோடு தனிநாட்ட கோருவார்கள். சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வைப்பார்கள்.

இதை இந்தியாவில் சீமான் அல்ல, யார் செய்தாலும் டின்னு கட்டி விடுவார்கள்.

தனி நாடு கோராத தேசியம் பொம்பிளை இல்லாத கல்யாணம் போன்றது.

பிகு

பிரபாகரன், தமிழரசன், முத்துகுமார் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதிகள்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

இந்தக் காணொளியின் விரிவான பதிவு கீழுள்ள யுரியூப்பில் உள்ளது.

அடித்து நொறுக்கிய தமிழ்த்தேசியப் பேராளுமைகள் | ஈவெரா எனும் போலி பிம்பம் - பாகம் 1

*ஈவெரா எனும் போலி பிம்பம்* | சிறப்பு கருத்தரங்கம் - பாகம் 1 இந்தக் கருத்தரங்கில் தமிழ்த்தேசிய அரசியலின் முக்கியமான ஆளுமைகள் ஒன்றிணைந்து ஈவெராவின் போலி பிம்பத்தை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். 🎙 *சிறப்புக் கருத்துரையாளர்கள்:* *பெ.மணியரசன்* - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் *அரு.கோபாலன்* - ஆசிரியர், எழுகதிர் இதழ் *பா.குப்பன்* - வழக்குரைஞர், திருத்தணிகை *க.சக்திவேல்* - தலைவர், தமிழக முற்போக்கு மக்கள் கட்சி 🔴 இந்த பகுதியில்:

  • ஈவெரா எதிர்ப்பு ஏன்?

  • ஈவெரா பற்றிய பொதுவான புரிதல்கள்

  • வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள்

  • அவருடைய கருத்துகளின் பின்னணி

📌 முக்கியமான அரசியல், சமூக மற்றும் வரலாற்றுத் தரவுகளுடன் தெளிவான பார்வையை வழங்கும் இந்த நிகழ்வைத் தவறவிடாமல் பாருங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

தனி நாட்டுக்குள்தான் இனவழி தேசியம் அமைய வேண்டும் என்பதல்ல.

ஆனால் இறுதி கோரிக்கையாக தனிநாடு இருக்க வேண்டும்.

உதாரணம் Scottish National Party யும் அவர்கள் யூகேயில் இருந்த படி முன்னெடுக்கும் ஸ்காட்லாந்து தேசியமும்.

அவர்கள் தேர்தலில் பங்கெடுப்பார்கள், ஸ்கொட்லாந்தில் ஆட்சியும் அமைப்பார்கள்.

ஆனால் அதே உத்வேகத்தோடு தனிநாட்ட கோருவார்கள். சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வைப்பார்கள்.

இதை இந்தியாவில் சீமான் அல்ல, யார் செய்தாலும் டின்னு கட்டி விடுவார்கள்.

தனி நாடு கோராத தேசியம் பொம்பிளை இல்லாத கல்யாணம் போன்றது.

பிகு

பிரபாகரன், தமிழரசன், முத்துகுமார் மட்டுமே உண்மையான தமிழ் தேசியவாதிகள்.

சில சமயம் இப்போது தனி நாடு கோர வாய்ப்பு இல்லாத காரணத்தால் அதற்கான காரணங்களை மட்டுமே அரசியல் ஆக்கி இவர்கள் அரசியல் செய்வது தனி நாட்டுக்கான கோரிக்கைகளை நீறு பூத்த நெருப்பாக வைக்க உதவும். சீமான் அப்படி ஒருவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ தனிநட்டுக்கான காரணங்களை மட்டும் வைத்து அரசியல் செய்து தனி நாட்டுக் கனவை நீறு பூத்த நெருப்பாக வைத்திருக்கும் மற்றவர்களில் அல்லவா கை வைக்கின்றார்?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பகிடி said:

சில சமயம் இப்போது தனி நாடு கோர வாய்ப்பு இல்லாத காரணத்தால் அதற்கான காரணங்களை மட்டுமே அரசியல் ஆக்கி இவர்கள் அரசியல் செய்வது தனி நாட்டுக்கான கோரிக்கைகளை நீறு பூத்த நெருப்பாக வைக்க உதவும். சீமான் அப்படி ஒருவராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரோ தனிநட்டுக்கான காரணங்களை மட்டும் வைத்து அரசியல் செய்து தனி நாட்டுக் கனவை நீறு பூத்த நெருப்பாக வைத்திருக்கும் மற்றவர்களில் அல்லவா கை வைக்கின்றார்?

அதே

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.