Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

தற்போது இந்த விவகாரத்தை தூக்கிபிடிப்பதன் மர்மம் எல்லோருக்கும் தெரியும். கருத்து வெற்றிக்காக இதை பலர் வெளியே சொல்வதில்லை.

இதை கருத்து வெற்றிக்காக எழுதாமல் விடவில்லை. இது மிகவும் வெளிப்படையாக தெரியும் விடயம் என்பதால் இதை எழுதவில்லை.

நிச்சயமாக இதை பாவித்து சீமான் விமர்சிக்கும் அத்தனை பேரும் அரசியல் செய்கிறனர். பிஜேபி அதன் கூட்டணி கட்சியான பாமக ஆதரவு கொடுக்கிறது. அதிமுக விஜை நழுவலில் உள்ளார்கள்

1 hour ago, குமாரசாமி said:

சீமான் - விஜயலட்சுமி சம்பவங்கள் நடந்து நீண்டகாலமாகியும்,புகார் கொடுத்து நீண்ட காலமாகியும்...

இந்த கால தாமததிற்கு அனைவரையும் விட மிக முக்கிய காரணம் சீமான்.

ஒவ்வொரு முறை இந்த வழக்கு மேலே எழும் போதும் தன் அரசியல் சக்தியை பாவித்து அதை முடக்கியவர் சீமான்.

  1. ஜெ - காலத்தில் இந்த வழக்கை அதிமுக கையில் எடுக்கும் என பயம் காட்டியவுடன் - அவருக்கு ஆதரவு வழங்கி வழக்கை முடக்கினார்.

  2. எடப்பாடி காலத்திலும் கனிம மணல், தூத்துகுடி, என பலதில் “சித்தப்பா” எடப்பாடி ஆதரவு நிலையை எடுத்து வழக்கை முடங்க செய்தார்.

  3. திமுக வந்து விஜி அண்ணி திரும்பி வந்ததும், அவருடன் ஜீவனாம்சம் பேச்சு, உதயநிதியிடம் நள்ளிரவில் போன் பேச்சு என வழக்கை முடக்கினார்…

மிக முக்கியமாக நீங்கள் எல்லோரும் கவனிக்க தவறும் விடயம் ஒன்று - இப்போதும் கூட இந்த வழக்கு பொலிஸ் ஸ்டேசனில் முடங்கித்தான் கிடந்தது.

ஆனால் சீமான் தானே ஹைகோர்ட் போய் வழக்கை தள்ளுபடி செய்யும் படி கேட்டார். அவரின் கெட்ட காலம் ஒரு நேர்மையான நீதிபதி முன் வழக்கு போக - அவர் வழக்கை துரிதபடுத்த ஆணையிட்டார்.

இப்போதும் வழக்கை துரிதமாக நடத்த உதவுகிறாரா? இல்லையே.

விசாரணைக்கு போகமாட்டேன் என உதார்விட்டு பின் போனார்.

நாளை டெல்லி சுப்ரீம் கோர்ட்டுக்கு போய், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை தடை செய்ய கோருகிறார் (நிச்சயமாக இது அமித்ஷா ஏற்பாடுதான்).

இப்போ சொல்லுங்கள் - இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமானா இல்லையா?

  • Replies 187
  • Views 8.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • புரட்சிகர தமிழ்தேசியன்
    புரட்சிகர தமிழ்தேசியன்

    உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூ

  • Justin
    Justin

    எனக்கு 2016 இல் ட்ரம்ப் ரீம் தந்த பாடம் தான் நான் சீமான் போன்றோரைத் துகிலுரியக் காரணம். அமெரிக்காவில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்களில் பெரிய காட்சிப் பலகைகளில் காட்டுவார்கள்: "If you see somethin

  • காவல்துறை அழைப்பாணையை கிழித்தெறிந்து மட்டுமல்லாமல், காவல்துறையை துப்பாக்கியால் சுட முற்பட்டுள்ளார், சீமானை போல் அவர்களுடைய தம்பிகளும்/பாதுகாவலரும் தற்குறிகளாக உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ரோ" ஏற்கனவே ஈழ விடயத்தில் செய்ய வேண்டியதை செய்து முடித்து விட்டது.கருணாநிதியின் உண்ணாவிரத நாடகத்தில் நீங்கள் உணரவில்லையாயின்.......?????

ரோவின் ஈழத்தமிழர் விடய தலையீடுக்கு முடிவு திகதி என்று ஒன்றில்லை.

  1. யார் போலிகாவை இறக்கினார்கள் - அப்பட்டமான இந்தியன் டெலி டிராமா அது

  2. இதே யாழ்களத்தில் குசும்பை காட்டவில்லையா?

  3. நான் முன்பே பலதடவை மிக தெளிவாக எழுதிவிட்டேன், சுப முத்துகுமார் கொலை முதல் எப்படி சீமான் மிரட்டலுக்கு பயந்து ரோவின் கைக்கூலி ஆகினார் என்பதை.

  4. நான் இதுவரை எழுதிய அத்தனை சந்தர்ப சாட்சி கோர்வையையும் விட்டு விடுங்கள்.

  5. நேற்று நாம் தமிழர் கட்சியில் Ex-Indian Army Wing என ஒரு விங் இருப்பதும், அவர்கள் சீமானுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்குவதும், இப்படி வழங்க இந்திய சட்டத்தில் இடம் ஏதும் இல்லை என்பதையும் நான் ஆதாரபூர்வமாக எழுதினேன்.

  6. ஒரு தமிழ் தேசிய கட்சியில் ஏன் Ex Indian Army Wing?

  7. அவர்களை பார்த்தால் எவரும் ரிட்டையர் ஆன ஆட்கள் இல்லை. முடி நரைக்காத கட்டுமஸ்தான ஆபீசார்கள்.

  8. இராமதாஸ்களுக்கு, திருமாவுக்கு, இன்னும் எத்தனையோ பேருக்கு இல்லாத இந்த பாதுகாப்பு படை ஏன் சீமானுக்கு மட்டும்?

  9. ஏன் என்றால் சீமான் ரோவின் ஏஜெண்ட்.

  10. ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் கூட சீமான் மீது கைவைக்காமைக்கு இதுவே காரணம்.

  11. இதுமட்டும் அல்ல சுப முத்துகுமார் கொலையை ரோ செய்ய அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சீமானும் அன்றை திமுக அரசும், குறிப்ப்பாக ஜாபர் சேட்.

  12. இதுதான் சீமானின் ரோ பின்ணணி.

large.IMG_2084.jpeg

👆நாதகவின் ex Indian Army wing என்ற பெயரில் சீமான், வீடு, குடும்பத்தை சூழ நிறுத்தபட்டிருக்கும் “ ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்”

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

இந்த வழக்கை இழுத்தடிப்பது சீமானா இல்லையா?

வழக்கை இவ்வளவு காலம் இழுத்தடித்தது சீமான். கடைசியாக கூட பொலிஸ் அனுப்பியுள்ள சம்மனுக்கு போகவேண்டும் என்றால் கூட நான் போக மாட்டேன் என்ன செய்ய முடியுமோ செய்து கொள் என்று வழக்கம் போல முதலில் வாய் சவடால் விட்டவர் பின்பு சென்றவர். தனி மனித ஒழுங்கம் மகான் சீமானின் புகழைக் கெடுப்பதற்காக திட்டமிட்டு வழக்கை இழுத்தடிப்பது திராவிட சதி என்று தம்பிகள் மத்தியில் பிரசாரம் நடைபெறுகினறது.

சீமானின் ஒழுக்கம் உள்ளவர் என்று தமிழர்களுக்கு காட்டுவதற்காக பத்திரிக்கையாளர்கள் கூட்டம் நடைபெறுகின்ற போது பெண்களை இவருக்கு பின்னால் அடுக்கி நிற்கவைத்து படம் காட்டுகிறார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

10 hours ago, goshan_che said:

அப்போ நீங்கள் போலிக்காவை முந்தள்ளி அவர் துவாரகாதான் என சொல்லியது - அருணா ரோவின் கையாள் என்பதை வெளிகொணர?

அதேபோல் இப்போ சீமானை ஆதரிப்பதும் - அவர் ரோவின் ஆள் என இனம் காட்ட?

நாங்கள்தான் அவசரடுகிறோம்

😂?

ஆதாரம் வையுங்கள்

இல்லை என்றால் இத்துடன் உங்களுடன் பேசுவதை நிறுத்தி கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, விசுகு said:

ஆதாரம் வையுங்கள்

இல்லை என்றால் இத்துடன் உங்களுடன் பேசுவதை நிறுத்தி கொள்கிறேன்.

எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள்?

இந்த விடயத்தில் நீங்களும் வைரவனும் கட்டி பிரண்டதுதான் பக்கம் பக்கமாக உள்ளதே?

துவாரகா வீடியோ வந்தபின் அது அவர் என நீங்கள் சொல்லவில்லை.

ஆனால் வரமுதல், அருணாவை நம்பலாம், நல்ல செய்தி வரும், என வரப்போவது துவாரகாதான் என்ற தொனியில் நீங்கள் எழுதவில்லையா?

அதைத்தான் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, goshan_che said:

வழக்கு சீமான் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது. புகார் அந்த பெண் கூறியது.

14 hours ago, goshan_che said:

என்ன கோஷான், ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த உங்கள் விஜி அண்ணி எதற்காக சீமானிடம் இவ்வளவு அன்னியோன்னியமாக இருந்தார். காதலினாலா அல்லது பணத்திற்காகவா? இருவர் சம்மதத்துடன் நடக்கும் உடலுறவு எப்படி பாலியல் வல்லுறவாகும்?

பெரியார் மீதோ வேறு எவர் மீதோ இப்படி ஒரு பெண் புகார் கூறவில்லை.

ஏனென்றால் அவர் இருந்தது விபச்சாரிகளுடன்! காசுகொடுத்து சமாளித்திருப்பார்!!

இதுதான் வித்தியாசம்.

இப்போ சீமான் அவரோடு கணிசமான காலம் கூடி வாழ்ந்த பெண்ணை - பாலியல் தொழிலாளி என்கிறார். அப்போ சீமான் யார்? Pimp ஆ?

ஏனென்றால் சீமானை பிரிந்தபின் அவர் வாழ்ந்த வாழ்க்கை அப்படியானது. அதற்காக சீமான் அதை பொதுவெளியில் கூறுவது அநாகரீகமானது. அவர் விரக்தியில் பேசினாலும் ஒரு கட்சி தலைவனுக்கு நாவடக்கம் வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

ரோவின் ஈழத்தமிழர் விடய தலையீடுக்கு முடிவு திகதி என்று ஒன்றில்லை.

  1. யார் போலிகாவை இறக்கினார்கள் - அப்பட்டமான இந்தியன் டெலி டிராமா அது

  2. இதே யாழ்களத்தில் குசும்பை காட்டவில்லையா?

  3. நான் முன்பே பலதடவை மிக தெளிவாக எழுதிவிட்டேன், சுப முத்துகுமார் கொலை முதல் எப்படி சீமான் மிரட்டலுக்கு பயந்து ரோவின் கைக்கூலி ஆகினார் என்பதை.

  4. நான் இதுவரை எழுதிய அத்தனை சந்தர்ப சாட்சி கோர்வையையும் விட்டு விடுங்கள்.

  5. நேற்று நாம் தமிழர் கட்சியில் Ex-Indian Army Wing என ஒரு விங் இருப்பதும், அவர்கள் சீமானுக்கு துப்பாக்கி பாதுகாப்பு வழங்குவதும், இப்படி வழங்க இந்திய சட்டத்தில் இடம் ஏதும் இல்லை என்பதையும் நான் ஆதாரபூர்வமாக எழுதினேன்.

  6. ஒரு தமிழ் தேசிய கட்சியில் ஏன் Ex Indian Army Wing?

  7. அவர்களை பார்த்தால் எவரும் ரிட்டையர் ஆன ஆட்கள் இல்லை. முடி நரைக்காத கட்டுமஸ்தான ஆபீசார்கள்.

  8. இராமதாஸ்களுக்கு, திருமாவுக்கு, இன்னும் எத்தனையோ பேருக்கு இல்லாத இந்த பாதுகாப்பு படை ஏன் சீமானுக்கு மட்டும்?

  9. ஏன் என்றால் சீமான் ரோவின் ஏஜெண்ட்.

  10. ஒரு அளவுக்கு மேல் ஸ்டாலின் கூட சீமான் மீது கைவைக்காமைக்கு இதுவே காரணம்.

  11. இதுமட்டும் அல்ல சுப முத்துகுமார் கொலையை ரோ செய்ய அதற்கு உடந்தையாக இருந்தவர்கள், சீமானும் அன்றை திமுக அரசும், குறிப்ப்பாக ஜாபர் சேட்.

  12. இதுதான் சீமானின் ரோ பின்ணணி.

large.IMG_2084.jpeg

👆நாதகவின் ex Indian Army wing என்ற பெயரில் சீமான், வீடு, குடும்பத்தை சூழ நிறுத்தபட்டிருக்கும் “ ஆயுதம் தாங்கிய அதிகாரிகள்”

ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது அவரவர் சொந்த விருப்பம். அதற்கு நீங்கள் இப்படி கதை கதையாக எழுதுவது உங்கள் அனுமானங்கள். அங்கே நிறுவினேன் இங்கே நிறுவினேன் என்பதெல்லாம் உங்கள் சொந்தக்கருத்துகள். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இணைக்கப்படுவதில்லை எல்லோரும் அதை நம்பத்தான் வேண்டுமென்பது கொஞ்சம் அதிமேதாவித்தனம் என்பது எனது கருத்து!

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Eppothum Thamizhan said:
  14 hours ago, goshan_che said:

வழக்கு சீமான் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார் என்பது. புகார் அந்த பெண் கூறியது.

  14 hours ago, goshan_che said:

என்ன கோஷான், ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்த உங்கள் விஜி அண்ணி எதற்காக சீமானிடம் இவ்வளவு அன்னியோன்னியமாக இருந்தார். காதலினாலா அல்லது பணத்திற்காகவா? இருவர் சம்மதத்துடன் நடக்கும் உடலுறவு எப்படி பாலியல் வல்லுறவாகும்?

மீண்டும் நீங்கள் திரி நெடுக மட்டும் அல்ல, சில வருடங்கள் முன் நான் எழுதியதை கூட வாசிக்காமல் கேள்வி கேட்பதாக தோன்றுகிறது எப்போ.

நீங்கள் எஞ்சினியர் என்பதால் சூத்திரம் போல எழுதுகிறேன்😃.

பாலியல் வன்கொடுமை = இசைவு (consent) இல்லாமல் உறவு கொள்ளல்.

Obtaining consent through deception, இசைவை ஏமாற்றி பெறுதல் மூலம் உறவுகொள்ளலும் = பாலியல் வல்லுறவு (ரேப்).

இங்கே குற்றசாட்டு இசைவை “திருமணம் செய்வேன்” என்ற ஏமாற்றின் அடிப்படையில் அல்லது கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டேன் என ஏமாற்றி சீமான் பெற்றார் என்பதும், ஆகவே அவர் செய்தது பாலியல் வல்லுறவு என்பதும்.

இதை சாட்சிய அடிப்படையில் கோர்ட் முடிவு செய்ய வேண்டும்.

நிச்சயதார்தம் - இதை நிச்சயம் கோர்ட் கவனத்தில் எடுக்கும்.

ஆனால் ஒருவருக்கு நிச்சயம் ஆனபின், இன்னொருவருடன் காதல் ஏற்பட்டு, அவருடன் திருமணம் செய்யும் நோக்குடன் கூடி வாழ்வது கூட நடக்க கூடியதே. இது நீங்கள் நினைப்பது போல் - ஒரு smoking gun சாட்சி (விஜி அண்ணிக்கு எதிராக) இல்லை.

பெரியார் மீது வழக்கு இல்லை ஏன் என்றால் அவர் போனது பாலியல் தொழிலாளியிடம் என்பதை ஏற்கிறேன்.

ஆனால் சீமான் மீது வழக்கு வந்து விட்டது? ஏன்?

அவர் குடும்பம் நடத்தியது பாலியல் தொழிலாளியிடம் அல்ல. மாறாக காதலியிடம் என்பதுதான் விஜி அண்ணி வாதம்.

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கு நாவடக்கம் வேண்டும் என ஏற்றமைக்கு நன்றி.

மீண்டும் சொல்கிறேன். விஜி அண்ணி சீமானை பிரிந்த பின் பாலியல் தொழில் செய்தே இருந்தாலும் - சீமான் அவரை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றினாரா இல்லையா என்பதை அதை வைத்து தீர்மானிக்க முடியாது.

பாலியல் தொழிலாளியோ இல்லையோ, அது சீமானுடன் வாழ முன்போ, இல்லையோ - சட்டம் சகல பெண்களுக்கும் ஒரே பாதுகாப்பைத்தான் தருகிறது.

ஒரு பாலியல்தொழிளாலியிடம் பெரியார் அவரின் 20 வயதுகளில் போனது போல் போய், பெற்ற சேவைக்கு பணத்தை கொடுத்திருந்தால் அது பாலியல் வன்கொடுமை அல்ல.

ஆனால் ஒரு பாலியல் தொழிலாளியை, உன்னை திருமணம் செய்வேன் என ஏமாற்றி ஓசியில் உறவு கொண்டால் - அது வல்லுறவு.

இதில் சீமான்-விஜி உறவு என்ன வகையானது என்பதையும் சாட்சி அடிப்படையில் கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Eppothum Thamizhan said:

ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது அவரவர் சொந்த விருப்பம். அதற்கு நீங்கள் இப்படி கதை கதையாக எழுதுவது உங்கள் அனுமானங்கள். அங்கே நிறுவினேன் இங்கே நிறுவினேன் என்பதெல்லாம் உங்கள் சொந்தக்கருத்துகள். எந்த ஆதாரங்களும் ஆவணங்களும் இணைக்கப்படுவதில்லை எல்லோரும் அதை நம்பத்தான் வேண்டுமென்பது கொஞ்சம் அதிமேதாவித்தனம் என்பது எனது கருத்து!

இல்லை…

  1. ஆதாரம் 1

மேலே ஏராளன் இந்தியாவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டம் பற்றி இணைப்பை தந்தார்.

அதை விளக்கி நான் எழுதி உள்ளேன்.

எந்த வகையிலும் தனிநபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு ஏற்புடையவர் அல்ல சீமான்.

ஆதாரம் 2

அவர்களே நாதகவில் Ex Indian Army Wing இருப்பதை ஒத்து கொண்டதும். ஒரு தமிழ் தேசிய கட்சிக்கு, தமிழ் நாட்டில் ஏன் இப்படி ஒரு பிரிவு என்ற கேள்வியும்.

இது அதிமேதாவித்தனம் இல்லை.

மிக சாதாரணமாக கண்ணை உறுத்தும் விடயங்கள்.

ஓம் - சீமானுக்கு ரோ பாதுகாப்பு கொடுக்கிறது என்பதை என்னால் - அச்சொட்டாக நிறுவ முடியாதுதான்.

ஆனால், சீமான், றோ, மத்திய அரசு - ஒரு அச்சில் இயங்குகிறன என்பதற்கு - தேவைக்கும் அதிகமாக ஆதாரங்கள் தந்துள்ளேன். கண்களையும், மனசையும் திறந்து வைத்தால் போதும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, goshan_che said:

இல்லை…

  1. ஆதாரம் 1

மேலே ஏராளன் இந்தியாவில் தனிநபர் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டம் பற்றி இணைப்பை தந்தார்.

அதை விளக்கி நான் எழுதி உள்ளேன்.

எந்த வகையிலும் தனிநபர் துப்பாக்கி பாதுகாப்புக்கு ஏற்புடையவர் அல்ல சீமான்.

Yes, according to Indian law, a retired army man can use a licensed pistol if they possess a valid arms license issued by the appropriate authorities, fulfilling the necessary conditions and background checks outlined in the Arms Act, 1959; however, they still need to follow all rules regarding storage, carrying, and usage of the firearm. 

Key points to remember:

  • License requirement:

    A retired army personnel must still obtain a proper arms license to legally possess and use a pistol. 

  • Eligibility criteria:

    The licensing authority will consider factors like the individual's service record, character, and reason for needing a firearm when deciding on issuing a license. 

  • Strict regulations:

    Even with a license, the retired army man must strictly adhere to all rules regarding firearm storage, carrying, and usage as per the Arms Act and Arms Rules. 

23 minutes ago, goshan_che said:

இதில் சீமான்-விஜி உறவு என்ன வகையானது என்பதையும் சாட்சி அடிப்படையில் கோர்ட்தான் முடிவு செய்ய வேண்டும்.

ஏற்கனவே வேறொருவருடன் நிச்சயமான ஒருவர் அதை மறைத்து ஒருவரை ஏமாற்றி உடலுறவு கொள்வது எந்த பிரிவினுள் வரும்??

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Eppothum Thamizhan said:

Yes, according to Indian law, a retired army man can use a licensed pistol if they possess a valid arms license issued by the appropriate authorities, fulfilling the necessary conditions and background checks outlined in the Arms Act, 1959; however, they still need to follow all rules regarding storage, carrying, and usage of the firearm. 

Key points to remember:

  • License requirement:

    A retired army personnel must still obtain a proper arms license to legally possess and use a pistol. 

  • Eligibility criteria:

    The licensing authority will consider factors like the individual's service record, character, and reason for needing a firearm when deciding on issuing a license. 

  • Strict regulations:

    Even with a license, the retired army man must strictly adhere to all rules regarding firearm storage, carrying, and usage as per the Arms Act and Arms Rules. 

இதற்கான விளக்கம் 2ம் பக்கதில் உள்ளது.

பிகு

இன்னும் ஒரு விடயம். இந்த துப்பாக்கியோடு பிடிபட்டவர் கேஸ் என்னாயிற்று?

ஏதாவது செய்தி வந்ததா? நான் காணவில்லை (வந்திருக்கலாம்).

ஒன்றில் அவரில் பிழை என வழக்கு போட வேண்டும் அல்லது, பொலிஸ் பிழை என மன்னிப்பு கேட்டு துப்பாக்கியை மீள கொடுக்க வேண்டும்.

மத்திய, மாநில அரசுகள், சீமான் எல்லோரும் சேர்ந்து அப்படியே இதை அமுக்கிவிட்டார்கள் ?.

இவரை பிடித்த பொலிஸ்காவலர் மீது பழைய வழக்கு ஒன்றை தட்டி எடுத்து சம்மன் அனுப்பி உள்ளார்கள்.

For god’s sake கொஞ்சம் கண்களை திறந்து என்ன நடக்கிறது என்பதை உய்தறியுங்கள்.

இடமும், வலமும் புலானாய்வாளர்கள் மத்தியில் வளர்ந்தவர்கள் நாம் இப்படி கண்ணை மூடி கொண்டா இருப்பது?

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

இதற்கான விளக்கம் 2ம் பக்கதில் உள்ளது.

நான் உங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லைசென்ஸுடன் பிஸ்டல் வைத்திருக்க முடியும் என்பதையே எழுதினேன். கைது செய்த போலீசார் யாரும் அது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி என்று சொல்லவே இல்லையே!! உடனே அவர் றோவின் ஆள் என்ற conspiracy theory உடன் வராதீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Eppothum Thamizhan said:

நான் உங்களிடம் விளக்கம் கேட்கவில்லை. ஒரு ஓய்வுபெற்ற ராணுவ வீரர் லைசென்ஸுடன் பிஸ்டல் வைத்திருக்க முடியும் என்பதையே எழுதினேன். கைது செய்த போலீசார் யாரும் அது லைசென்ஸ் இல்லாத துப்பாக்கி என்று சொல்லவே இல்லையே!! உடனே அவர் றோவின் ஆள் என்ற conspiracy theory உடன் வராதீர்கள்.

நீங்கள் மேலே தந்த ஆங்கில பந்தியே சொல்கிறது இப்படி👇

37 minutes ago, Eppothum Thamizhan said:

they possess a valid arms license issued by the appropriate authorities,

38 minutes ago, Eppothum Thamizhan said:

they still need to follow all rules regarding storage, carrying, and usage of the firearm. 

இதைதான் நான் 2ம் பக்கதில் விளக்கி எழுதினேன். சீமான் வீட்டில் துவக்கோடு பிடிபட்டவருக்கு ஏன் இவை பொருந்தாது என.

நிச்சயமாக பிடிபட்டவர் ரோவின் ஆள்தான்.

உங்களை யோசிக்க வைக்க மேலும் சில விடயங்கள்.

  1. நாம் தமிழர் அதிகார பூர்வ இணையதளத்தில் Ex Army Wing. என்று எதுவுமே இல்லை. இதுவரை அப்படி ஒரு பாசறை வெளிவந்ததும் இல்லை. துப்பாக்கி பிடிபட்டதும் அவசர அவசராம இட்டு கட்டபட்டதுதான் இந்த விங்.

  2. நாதக பாசறைகள் எல்லாம் தமிழில்தான் இருக்கும். இவர்கள் மட்டும் ஆங்கிலத்தில் பெயர்? இதுவும் ரோ அவசர கோலத்தில் அள்ளி தெளித்த கோலம் இது என்பதையே காட்டுகிறது.

  3. இன்னொரு வரலாற்று சான்று. தலைவர் தமிழ் நாட்டில் கைதானபோது துவக்கோடுதான் பிடிபட்டார். ஆனால் மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து இதை அமுக்கினர்.

large.IMG_2101.jpeg9

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சின்ன தன்னிலை விளக்கம்

  1. என்மீதான தனிமனித தாக்குதல்களின் இன்னொரு வடிவமாகவே நான் இந்த சதிகோட்பாடு, conspiracy theorist என்ற அவதூறையும் பார்க்கிறேன்.

  2. சதி கோட்பாடு என்றால் ஒரு சிறு உண்மையை வைத்து ஒரு பொய்யை கட்டுவது. இங்கே அப்படி அல்ல, சுப முத்துகுமார் மரணம், அவர் இடுகல் உடைப்பு, சீமானின் மறுதலிப்பு தொட்டு, 15 வருடமாக, இப்போ army wing வரை சீமான் ரோவின் கையாள் என்பதற்கு நான் ஒரு சந்தர்ப சாட்சியங்களின் கோவையையே யாழில் பதிந்துள்ளேன் (வேறுபட்ட திரிகளில்) (dossier of circumstantial evidence).

  3. ஆனால் கோஷானை தர்க்கத்தில் வென்று விட வேண்டும், அல்லது சீமானை தப்பாக எண்ண முடியாமல் உள்ளது போன்ற காரணங்களால் இவற்றை எப்போ, புலவர், குசா அண்ணை, ஓணாண்டி, ஏராளன் என பலர் ஏற்க மறுக்கின்றனர். விசுகு அண்ணா ஒரு படி மேலே போய் கோஷான் சொல்வதால் சில உண்மையை கூட நான் ஏற்பதில்லை என எழுதுகிறார்.

  4. அதன் தொடர்ச்சிதான் இந்த “சதிக்கோட்பாடு” சேறடிப்பும்.

  5. என்றோ ஒரு நாள், அது சீமான் முதலமைச்சர் ஆன பின்பாக கூட இருக்கலாம், நான் சொன்னது உண்மை என நீங்கள் அனைவரும் உணர்ந்தே ஆவீர்கள். அப்போ, சீமான் என்ற நச்சை வளர நீங்கள் செய்த செயல்கள் இட்டு, ஒரு ஈழத்தமிழனாக உங்கள் மனச்சாட்சிக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும்.

  6. ஆனால் நான் உங்கஊக்காக காத்திருக்க போவதில்லை. சீமான் வெளுப்பு தொடரும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

எதற்கு ஆதாரம் கேட்கிறீர்கள்?

இந்த விடயத்தில் நீங்களும் வைரவனும் கட்டி பிரண்டதுதான் பக்கம் பக்கமாக உள்ளதே?

துவாரகா வீடியோ வந்தபின் அது அவர் என நீங்கள் சொல்லவில்லை.

ஆனால் வரமுதல், அருணாவை நம்பலாம், நல்ல செய்தி வரும், என வரப்போவது துவாரகாதான் என்ற தொனியில் நீங்கள் எழுதவில்லையா?

அதைத்தான் சொன்னேன்.

நாம் இங்கே கட்டிப்புரள்வதெல்லாம் உங்களுக்கு ஆதாரமோ?

ஒரு செய்தி வரப்படுகிறது என்ற செய்தி முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தது. அது வரும்வரை எனது எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.

அது ஏமாற்றமாக ஏமாற்றுவதாக இருந்தபோது இந்த ஏமாற்றல் எனக்கானதல்ல என் இனத்திற்கான து என்றபோது அச்சொல் உங்களுக்கு நெஞ்சில் வலித்ததாக நீங்கள் சொன்னதும் நாடகமா சகோ?

  • கருத்துக்கள உறவுகள்

பழைய நெனப்புடா.. பேராண்டி பழைய நெனப்புடா..👇 உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமோ..?

–——

நடிகைகள் ஆண்ட்ரியா,ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலினை மறைந்திருந்தே தாக்கும் மர்மம் என்ன?...

Muthurama Lingam Published: Nov 14, 2019, 3:55 PM IST

சினிமாவை விட்டு ஓரளவு ஒதுங்கி, பேரளவில் அரசியலும் செய்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பேச மிக விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பதிவில் மிரட்டியுள்ளார்.

திமுகவின் இளைஞரணித் தலைவர் பதவி கிட்டியவுடன் சினிமாவிலிருந்து பெருமளவில் ஒதுங்கிய உதயநிதி ஸ்டாலின் தற்போது கவனம் செலுத்தி வரும் ஒரே படம் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா கூட்டணியுடன் மிஷ்கின் இயக்கியிருக்கும் ‘சைக்கோ’மட்டுமே. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை ஆண்ட்ரியா, உதயநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், ஆனால் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி, அவரை யூகிக்கும் வகையில் ஒரு அவதூறுச் செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார். அவருக்குப் பின்னால் பிஜேபி இருப்பதாகச் சொல்லப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகத் தற்போது களம் இறங்கியிருக்கும் பரபரப்பு நடிகை ஸ்ரீரெட்டி, உதயநிதி ஸ்டாலின் ‘கதிர்வேலனின் காதல்’காலத்து  ஹைதராபாத் ராத்திரி நேரத்து  சம்பவம் ஒன்றை நினைவூட்டி,...அப்ப சொல்லிட்டு இப்ப வரைக்கும் ஒரு படத்துல கூட சான்ஸ் தராம இருக்கீங்க. இது நல்லா இல்லையே பாஸ்’என்கிற தொனியில்,... விரைவில் நான் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியே ஆகவேண்டும். அதற்கான பிரஸ் மீட் நடக்கவிருக்கிறது ...ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்’என்று பகீர் கிளப்பியிருக்கிறார். அந்த ஹைதராபாத் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் விஷால் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

https://tamil.asianetnews.com/amp/cinema/actress-sri-reddy-blames-udhayanidhi-stalin-q0yfmh

—-————————-—

உதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக?

உதயநிதி திரைப்பட நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார். திமுக என்கிற மிகப்பெரிய கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், அவர் குறித்து அவதூறு செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன.

சிலநாட்களுக்கு முன்புவரை, நடிகை ஆண்ட்ரியா, சூசகமாகச் சொன்ன ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு உதயநிதி மேல் குற்றம் சாட்டப்பட்டது.

சிலநாட்கள் பேசப்பட்ட அந்தச் செய்தி ஓய்ந்துபோனது.

இப்போது சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி,உதயநிதி குறித்து ஒரு செய்தியை வெளியிட்டு,அதுகுறித்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவேன் என்று சொல்லியிருக்கிறார்.

உதயநிதி நடிகராகவும் தொடர்வதால் நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டால் அது உண்மை போலவே இருக்கும் என்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதிரி செய்திகள் வருகிறதோ? என்கிற ஐயம் ஏற்படுகிறது.

அதேசமயம், இதுபோன்ற செய்திகளை அன்றாடம் வெளியிட்டு இதை வெகுசன விவாதப் பொருளாக மாற்றிவிட்டால், பொருளாதார சீரழிவு போன்ற அடிப்படைச் சிக்கல்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடலாம் என்கிற ஆளூம்கட்சியின் கருத்தின்படி இவை நடக்கின்றன என்கிறார்கள்.

இக்கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜகதான் இப்படி நடிகைகளை விலைக்கு வாங்கி உதயநிதி மேல் அவதூறு பரப்ப வைக்கிறது, நீங்கள் நன்றாகக் கவனியுங்கள் ஆளும் பாஜக மேலோ அதிமுக மேலோ சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளை விட திமுக மேல்தான் அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வருகின்றன என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர்.

இந்த வியூகங்களை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

https://www.tamizhvalai.com/archives/23750

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நாம் இங்கே கட்டிப்புரள்வதெல்லாம் உங்களுக்கு ஆதாரமோ?

ஒரு செய்தி வரப்படுகிறது என்ற செய்தி முதலிலேயே எனக்கு தெரிந்திருந்தது. அது வரும்வரை எனது எதிர்பார்ப்பு வேறாக இருந்தது.

அது ஏமாற்றமாக ஏமாற்றுவதாக இருந்தபோது இந்த ஏமாற்றல் எனக்கானதல்ல என் இனத்திற்கான து என்றபோது அச்சொல் உங்களுக்கு நெஞ்சில் வலித்ததாக நீங்கள் சொன்னதும் நாடகமா சகோ?

ஆதாரம் கட்டி பிரள்வதல்ல - நீங்கள் அருணாவை நம்புகிறேன் என எழுதியது.

அருணா சொன்னது என்ன? போலிக்காதான் துவாரகா என.

நீங்கள் அதை வஞ்சகம் இல்லாமல் நம்பியதை நான் அப்போதே குறிப்பிட்டேன்.

அதன்பால் உங்கள் மீது கல்லெறிந்த போது மனம் வருந்தியதையும் எழுதினேன்.

இப்போதும் அதைத்தான் சொல்கிறேன்.

போலிகா விடயம் போலவே சீமான் விடயத்திலும்,

உங்கள் வஞ்சகமில்லாத நம்பிக்கை, மிக ஆபத்தானது.

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஒரு சின்ன தன்னிலை விளக்கம்

ஆனால் கோஷானை தர்க்கத்தில் வென்று விட வேண்டும், அல்லது சீமானை தப்பாக எண்ண முடியாமல் உள்ளது போன்ற காரணங்களால் இவற்றை எப்போ, புலவர், குசா அண்ணை, ஓணாண்டி, ஏராளன் என பலர் ஏற்க மறுக்கின்றனர். விசுகு அண்ணா ஒரு படி மேலே போய் கோஷான் சொல்வதால் சில உண்மையை கூட நான் ஏற்பதில்லை என எழுதுகிறார்.

உ்ங்களை தர்க்கத்தில் வெல்லும் நோக்கம் எனக்கில்லை அண்ணை. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்களில் தவறு இருக்கலாம் என கருதியே கைத்துப்பாக்கி அனுமதி தொடர்பான விபரங்களை பகிர்ந்தேன். கைத்துப்பாக்கி அனுமதி உள்ள பாதுகாவலர்களுக்கு சம்பளம் அதிகமாம் என குறிப்பிடுகிறார்கள்.

சீமானுடைய பேச்சு, முன்னைய செயற்பாடுகளால் அவர் மீது உங்களுக்கு கடும் கோபமும் வெறுப்பும் ஏற்பட்டுள்ளது என எனக்கு புரிகிறது, ஆனால் எல்லோருக்கும் அந்த புரிதல் வருகையில் உங்கள் நிலைக்கு எல்லோரும் வருவார்கள். சில வேளைகளில் அவரை திட்டமிட்டு வீழ்த்த செய்கிறார்களோ என்ற எண்ணமும் வருகிறது.

எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஏராளன் said:

.

எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.

நன்றி சகோ.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

large.IMG_2101.jpeg9

இனி நா.த.க "Sex Offenders Wing" என்றும் ஒன்று ஆரம்பிக்கலாமென நினைக்கிறேன்! நம் ஆட்கள் கண்ணைக் கூட சிமிட்டாமல் "என்ன தவறு அதில்?" என்று இங்கே கொண்டு வந்து வீடியோ ஒட்டுவர்😂!

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஏராளன் said:

எல்லாவற்றையும் விட யாழ் இணையமும் இங்குள்ள ஒவ்வொருவரும் ஒற்றுமையோடு இருக்கவேண்டும். அதற்கு பாதகமாக எந்த ஒரு எழுத்தையும் எழுத விரும்பவில்லை. அளவுக்கு அதிகமாக சிதறிவிட்டோம்.

ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்ற தேவைக்காக மட்டும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் -unity for the sake of unity என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

சீமான் என்ற தமிழக அரசியல்வாதி- அவரது தொடர் பொய்கள், எங்கள் ஈழமக்களின் துன்பங்கள், புலிகளின் தலைமையின் பிரபலம்- ஆகிய எல்லாவற்றையும் கூட்டிக் கலந்து தனது வாக்கரசியலுக்குப் பயன்படுத்துகிறார். இவர் தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளை விட திறமான ஒருவரல்ல என்பதை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் நடந்து விட்டன. எனவே, ஏனைய தமிழக அரசியல் வாதிகளைப் போலவே அவரையும் நடத்துவதே முறை.

அதை விட்டு விட்டு, அவரைத் தலையில் தூக்கி வைப்பது, அவர் செய்யும்/பேசும் ஈனத்தனமான செயல்களையும் வெள்ளையடிப்பது என யாழில் சில ஆதரவாளர்கள் நடந்து கொள்ளும் போது, அவர்களது செயல்களை சவாலுக்குட்படுத்த வேண்டும். "ஒற்றுமை" என்ற பெயரில், இத்தகைய நச்சு விதைகளைக் காவித் திரிவோரை நாம் அணைத்துக் கொள்ள முடியாதென நான் நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Justin said:

உண்மை அண்ணை. கருத்து மோதல்கள் என்றால் மட்டும் ஏற்றுக்கொள்ளலாம். கருத்தாளர்களை சீண்டாமல் அவர்களின் கருத்துகள்/எழுத்துகளின் தவறை அவர்கள் விளங்கிக் கொள்ளும் வண்ணம் பதில் எழுதும் போது அவர்களே ஏற்றுக்கொள்ளும் நிலையை உருவாக்கலாம்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல கருத்துகளை சொல்லலாம்.

இவ்வளவு காலமும் இங்கு வாசித்து புரிந்துகொண்டதின் அடிப்படையில் தலைவர் போல சீமான் அவர்கள் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறோமோ?! ஒரு நாளும் அது சாத்தியமில்லை.

நாம் எமது மக்களுக்கான பணிகள், சேவைகளில் ஒன்றுபட்டே ஆகவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

றோ விசர் முத்தீட்டுது இது கடைசி நிலை(நிர்வாகம் துக்கியதை மறுபடியும் எழுதி இருக்க மாட்டான் ஆனால் கோசான் குவோட் பண்ணினதில் அது இருப்பதால் எழுதுகிறேன்) என்று நான் எழுதியதை தூக்குவதில் காட்டிய அவசரத்தை கோசான் குவோட் பண்ணி எனக்கு பதில் எழுதி இருப்பதிலும் என் வசனம் இடம்பெற்றிருப்பதை கவனித்தும் எடிற்பண்ணாமல் விட்டதில் இல்லை..🤣🤣🤣

அநேகமாக கோசான் இருக்காது ஏனெனில் அவரே அதை குவோட் பண்ணி இருப்பதால்.. சீமான் விடயத்தில் அவருக்கு பின்னால் அணிவகுத்து நிற்கும் போராளிகள்🤣🤣 றிப்போட் அடிச்சிருக்கவேண்டும் எண்டு நினைக்கிறன்..

ஒரு பகிடியையே தாங்க முடியாத போராளிகள்😂🤣.. என்னத்தை போராடி கிளிக்க..🤣💪

பகிடியாகத் தான் நீங்கள் எழுதியிருப்பீர்கள் (பதில் சொல்ல இயலாமல் மூலைக்குள் அம்பிட்டால் வேறெப்படி சமாளிப்பதாம்😂?). நாங்களும் பகிடியாகத் தான் எடுத்துக் கொண்டோம்.

ஆனால், களவிதி ஒருவரை மனநோயாளி என்று குறிக்கும் பதங்களைப் பாவிப்பதைத் தடுக்கிறதென நினைக்கிறேன்.

எனவே, பகிடியை விட்டு விட்டு, ஏன் சீமான் பஞ்சாயத்து கோர்ட்டில் இருந்து டில்லி உச்ச கோர்ட் வர ஓட வேண்டிய தேவை வந்திருக்கிறதென எழுதுங்கள், கேட்கிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Justin said:

இவர் தமிழகத்தின் ஏனைய அரசியல்வாதிகளை விட திறமான ஒருவரல்ல என்பதை வெளிக்காட்டும் பல சம்பவங்கள் நடந்து விட்டன. எனவே, ஏனைய தமிழக அரசியல் வாதிகளைப் போலவே அவரையும் நடத்துவதே முறை.

மிகச்சரியான கருத்து.. இதுதான் என் கருத்தும்.. ஆனால் யாழில் சீமான் அப்படி நடத்தப்படவில்லை என்பதால் தான் நான் எதிர்த்து எழுதுகிறான்( சீமானுக்கு ஆதரவாக எழுதும் மற்றவர்கள் பற்றி தெரியாது).. மற்ற அரசியல்வாதிகள் என்னமோ புனிதர்கள் போலும் சீமான் மட்டும் மிகக்கேவலமானவர் என்பது போலும் பலர் எழுதுகிறார்கள்.. அந்த இடங்களில் அவர்கள் தலையில் குட்டி இல்லை சீமானும் மற்ற அரசியல்வாதிகள் போலத்தான் என்று எழுதவேண்டி இருக்கிறது( கோசான் மட்டும் சற்று விதிவிலக்காக மற்றவர்கள் போலத்தான் என்று அவ்வப்போது எழுதுபவர் என்று நினைக்கிறன்..) உதாரணத்துக்கு உதயநிதி நடிகை அண்டிரியாவை கர்ப்பமாக்கி கருவைக்கலைத்தது மட்டுமன்றி ஆண்டிரியா தன்னை ஏமாற்றியவரின் பெயர் தான் எழுதிய புத்தகத்தில் உள்ளது வெளியிடும்போது எல்லோருக்கும் தெரியவரும் என்று கூறிய நிலையில் உதயநிதியின் பெயர் குறிப்பிட்டு எழுதிய சுயசரிதையை வெளியிடும் தேதியும் சொன்னபின் அதை பயமுறுத்தி தடுத்து சிகரெட்டினால் சுட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இன்றுவரை அந்த நூல் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது..

ஆக மொத்தம் எல்லோரும் ஒன்றுதான் அவர்களுக்குள் யாரை நமக்கு ஓகேயோ அவரை ஆதரிக்கவேண்டியதுதான்..

ஏதோ சீமான் மட்டும்தான் கேவலம்கெட்ட அரசியல்வாதி என்று எழுதப்படுவதுதான் தவறு..

அதை எழுதுபவர்களில் 90வீதமானவர்களுக்கு சீமான் மீது அல்ல பிரச்சினை அவர்பேசும் தமிழ்தேசியம் மீதுதான் கடுப்பு.. ஏற்கனவே இவர்கள் புலிகள் பற்றி புறங்கூறிய பலர்தான்..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.