Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சித் தேர்தல்; வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் மார்ச் 17 முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

போட்டியிட விரும்பும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் இந்தக் காலப்பகுதிக்குள் வேட்புமனுக்களை சமர்ப்பிக்க வேண்டும்.

https://thinakkural.lk/article/315540

  • கருத்துக்கள உறவுகள்

imageedit_6_8555511038.jpg?resize=750%2C

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் விசேட அறிவிப்பு!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி, மார்ச் 17, முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

மேலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் மார்ச் 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

https://athavannews.com/2025/1423809

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பிலும் போட்டியிட தமிழரசுக்கட்சி உத்தேசம் ; விண்ணப்பங்களை 7 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு கோரிக்கை

03 MAR, 2025 | 03:13 PM

image

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கொழும்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து இலங்கைத் தமிழரசுக்கட்சி விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலின்போது கொழும்புவாழ் தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழரசுக்கட்சி கொழும்பு மாநகரசபையில் ஆசனங்களைக் கைப்பற்றுவது தொடர்பில் கட்டம் கட்டமாக ஆலோசனை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் கொழும்புக்கிளைத் தலைவர் சி.இரத்தினவடிவேல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய முதற்கட்டமாக எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர்களைத் தெரிவுசெய்யும் பொருட்டு கட்சியின் செயற்பாட்டாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. 

இத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட விரும்புபவர்கள் தமது முழுப்பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், வட்டாரம், அரசியல் செயற்பாடுகளில் கொண்டிருக்கும் அனுபவம் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை எதிர்வரும் 7 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கக்கூடியவகையில் செயலாளர், இலங்கைத் தமிழரசுக்கட்சி, இலக்கம் 40, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியின் ஊடாக கட்சியின் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டிருக்கும் கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தற்போது நாட்டில் தோற்றம் பெற்றிருக்கும் அரசியல் கலாசாரத்துக்கு ஈடுகொடுக்கும் விதமாகவும், கொழும்புவாழ் தமிழ் மக்களால் நீண்டகாலமாக முன்வைக்கப்பட்டுவரும் கோரிக்கைக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையிலும் கட்சியினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/208165

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-42.jpg?resize=750%2C375&ssl=

உள்ளூராட்சி தேர்தல்; தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அப்டேட்!

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில்,

336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலப் பகுதி 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியாகும்.

எவ் விதத்தில் இத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1424005

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-55.jpg?resize=750%2C375&ssl=

உள்ளூராட்சி தேர்தல்; மாவட்ட அதிகாரிகளுக்கு அழைப்பு!

2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் கோரப்பட்டதையடுத்து, முதற்கட்ட பணிகளை ஆரம்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகளை கொழும்புக்கு அழைக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இக்கலந்துரையாடலை எதிர்வரும் சனிக்கிழமை (08) நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் நாளை (06) நடைபெறும் தேர்தல்கள் ஆணைக்குழு கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வேட்புமனுக்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் தேர்தல் ஆணையம் கூடுவது இதுவே முதல் முறை.

தேர்தல் தொடர்பான திட்டமிடல் மற்றும் அது தொடர்பாக எழும் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட மாட்டாது எனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1424097

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள், சுயேச்சை குழுக்களின் விபரங்கள்

05 Mar, 2025 | 03:47 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளல் கடந்த திங்கட்கிழமை (03) முதல் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த திங்கட்கிழமை (03) முதல் நேற்று செவ்வாய்க்கிழமை (04) பிற்பகல் 04.15 மணி வரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களின் விபரங்கள் பின்வருமாறு; 

WhatsApp_Image_2025-03-05_at_15.14.32.jp

https://www.virakesari.lk/article/208356

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 10 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

Published By: Vishnu

07 Mar, 2025 | 07:38 PM

image

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக இதுவரை கட்டுப்பணம் செலுத்திய அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கடந்த 3 ஆம் திகதி ஆரம்பித்த கட்டுப்பணம் பெறும் செயல்முறையின்படி, 6ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 4.15 மணி வரை 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அந்த 88 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக 10 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 38 சுயேச்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/208580

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டாயமாக்கப்படும் நடைமுறை

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையையும் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வேட்புமனு தாக்கல் செய்யப்படும்போது, அதில் 25 சதவீதமானோர் பெண் வேட்பாளர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

ஒவ்வொரு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களும் தங்களது வேட்பாளர்கள் பட்டியலில் வட்டாரத்தில் 10 சதவீதமானோரை பெண்களாகவும், மேலதிக பட்டியலில் 50 சதவீதம் பெண்களையும் உள்ளடக்கியிருத்தல் வேண்டும்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: கட்டாயமாக்கப்படும் நடைமுறை | Election Commisson Sri Lanka

அதேநேரம், வேட்புமனுவில் 25 சதவீதம் இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும். அவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

எனவே, வேட்புமனு தயாரிப்பின்போது, அரசியல் கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார். 

https://tamilwin.com/article/election-commisson-sri-lanka-1741494774

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் ; அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்தல் குறித்து விசேட அறிவித்தல்

11 MAR, 2025 | 05:05 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான  அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமித்தல் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிவித்தலில் குறிப்பிடப்படுவதாவது,

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பெயர் குறித்த நியமனங்கள் வெளியிடப்பட்ட 336 உள்ளூர் அதிகார சபைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் கடிதங்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் அந்தந்த உள்ளூர் அதிகார சபை தெரிவத்தாட்சி அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும். 

சுயேச்சைக் குழுக்களின் தலைவர்களினால் கட்டுப்பணம் பணம் செலுத்தப்படும் போது வேட்பாளர்களில் ஒருவரை அக்குழுவின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராக நியமிக்க முடியும்.

மேலும், எதிர்வரும் 13 ஆம் திகதி அரசாங்க விடுமுறை தினமாக (பௌர்ணமி தினம்) இருந்தாலும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைமை அலுவலகமும் அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களும் திறந்து இருக்கும் என தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

WhatsApp_Image_2025-03-11_at_15.52.22.jp

https://www.virakesari.lk/article/208925

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதிநாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூலம் வாக்குகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலம் புதன்கிழமை (12) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அஞ்சல் வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், சான்றளிக்கும் அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கான மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.

வேட்பு மனு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள 336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளின் நியமனக் கடிதங்களை எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு முன்னர் ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனங்களின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாளை 13ஆம் திகதி போயா தினமாக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களும் திறந்திருக்கும் என்று தேர்தல் ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/315937

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய மக்கள் சக்தி மன்னாாில்  கட்டுப்பணம் செலுத்தியது.

adminMarch 12, 2025

WhatsApp-Image-2025-03-12-at-3.01.45-PM-

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட  தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி)   இன்றைய தினம்  புதன் கிழமை (12)  மதியம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இளைஞர் மற்றும்  விளையாட்டு விவகார அமைச்சின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் முஹமட் சாஜித்  தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

-மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை ,மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய  நான்கு   உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

இதேவேளை பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் அஷேக் சதீக் முப்தி முசலி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ள அமையும் குறிப்பிடத்தக்கது

WhatsApp-Image-2025-03-12-at-3.01.39-PM-WhatsApp-Image-2025-03-12-at-3.01.45-PM-

https://globaltamilnews.net/2025/213298/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: இம்முறை 155,976 பேர் புதிய வாக்காளர்கள் - தேர்தல்கள் ஆணைக்குழு

Published By: VISHNU

14 MAR, 2025 | 03:31 AM

image

(இராஜதுரை ஹஷான்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு இம்முறை 1 கோடியே 72 இலட்சத்து  96,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். இவர்களில் 155,976 பேர் முதல் தடவையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு தேருநர் இடாப்புக்கு அமைவாக கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெற்றன. இவ்விரு தேர்தல்களிலும் 17,440,354 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றிருந்தனர்.

2024 ஆம் ஆண்டு தேருடர் இடாப்பின் பதிவுகளுடன், இம்முறை 155,976 பேர் புதிதாக வாக்களிக்க இம்முறை தகுதிப்பெற்றுள்ளனர். இதற்கமைய இம்முறை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் 17,296,330 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வரும்  திங்கட்கிழமை (17) தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்தலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நிறைவடையவுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்கு குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துகின்ற நிலையில் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் கட்டுப்பணம் செலுத்தல் நிறைவடைகிறது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு தொடர்பான அறிவிப்பை எதிர்வரும் வியாழக்கிழமை (20) ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு  35 நாட்களுக்கு குறையாமல், 49 நாட்களுக்கு அதிகரிக்காமல்  பிரசார காலம் வழங்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. மே  மாதம் முதல் அல்லது இரண்டாம் வாரத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல்  நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/209139

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு சபைகளில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய தமிழரசுக் கட்சி


செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வவுனியா மாநகரசபை உள்ளிட்ட நான்கு சபைகளிலும் போட்டியிட தமிழரசுக் கட்சி இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது. 

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும். 

அதற்கமைவாக, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசு கட்சியானது வீட்டு சின்னத்தில் போட்டியிடவுள்ளது. 

அதற்கான கட்டுப்பணத்தை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.

https://adaderanatamil.lk/news/cm88fl9ew002vnr5tx1r871dq

  • கருத்துக்கள உறவுகள்

election-commission.jpg?resize=600%2C375

வேட்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை.

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை சமர்பிக்கும் வேட்பாளர்கள், க.பொ.த சாதாரண தர பரீட்சார்த்திகளுக்கு இடையூறு ஏற்படுத்தினால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதிகளில் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையும் நடைபெறும் என்பதால், வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும் அனைத்து வேட்பாளர்களும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், எந்தவொரு வேட்பாளரும் இதுபோன்ற இடையூறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு பிறகு வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த திகதிக்குப் பின்னர் எந்தவொரு அணிவகுப்பு, வாகனப் பேரணி அல்லது ஒன்றுகூடல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1425247

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ; வேட்பு மனுக்கள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும்!

17 MAR, 2025 | 09:10 AM

image

(இராஜதுரை ஹஷான்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கு இன்று திங்கட்கிழமை (17) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை (20) வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனுப்பத்திரங்களையும், சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலவகாசம் நாளை  நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

மீண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படமாட்டாது. தேர்தல் பணிகளில் ஈடுபட உத்தேசித்துள்ள அரச உத்தியோகஸ்த்தர்கள் தவறாமல் தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி  அதிகார சபைகள் தேர்தலுக்காக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கு உத்தேசித்துள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 'சரியாகவும், தெளிவாகவும் பூரணப்படுத்தப்பட்ட வேட்புமனு பத்திரத்தில் ஒரு பிரதியை மாத்திரம் அத்துடன் இணைக்கப்பட வேண்டிய அனைத்து இணைப்புக்களுடன் உரிய காலப்பகுதியினுள் உரிய மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்தல் வேண்டும்.

இளம் வேட்பாண்மையை உறுதிப்படுத்துவதற்காக மேலதிக மாவட்டப் பதிவாளரால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிறப்புச் சான்றிதழின் பிரதியை சமர்ப்பித்தல் வேண்டுமென்பதுடன், அவ்வாறில்லையேல் சமாதான அல்லது சத்திய ஆணையாளர் ஒருவரால் அத்தாட்சிப்படுத்தி வயதை உறுதிப்படுத்துகின்ற சத்தியக் கடதாசியொன்றினை வேட்புமனுப்பத்திரத்தில் இணைத்து சமர்ப்பித்தல் வேண்டும்' என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

உள்ளூராட்சி மன்றத்  தேர்தலுக்கான கட்டுப்பணம் வைப்பிலிடல் மற்றும் வேட்புமனுக்களை கையளித்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த 3 ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கமைய கடந்த 3 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்கள் மாவட்டத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகங்களில் கட்டுப்பணத்தை வைப்பிட்டன. கட்டுப்பணம் வைப்பிலிடலுக்காக வழங்கப்பட்ட காலவகாசம் நாளை மறுதினம் புதன்கிழமையுடன் (19) நிறைவடைகிறது.

இன்று திங்கட்கிழமை  (17) முதல் புதன்கிழமை (19), மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை (20) நண்பகல் வரை வேட்புமனுக்களை சமர்ப்பித்தல் அந்தந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர் மற்றும் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெறும்.

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட காலவகாசம் திங்கட்கிழமை (17) நள்ளிரவுடன் நிறைவடையும். ஆகவே சரியான தகவல்களுடன் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அரச உத்தியோகஸ்த்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. விண்ணப்பங்களை கையளிப்பதற்கு இனி காலவகாசம் வழங்கப்படமாட்டாது.

அத்துடன் பூநகரி பிரதேச சபை (கிளிநொச்சி மாவட்டம்) மன்னார் பிரதேச சபை (மன்னார் மாவட்டம்) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபை (அம்பாறை மாவட்டம்) ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தல் கடந்த 10 ஆம் திகதி (திங்கட்கிழமை) முதல் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 26 ஆம் திகதி (புதன்கிழமை) நிறைவடையும். இந்த பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் 2025.03.24 முதல் 2025.03.27 ஆம் திகதி வரை இடம்பெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/209378

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியிடுகின்ற சகல சபைகளிலும் தமிழரசுக் கட்சி வெல்லும்

editorenglishMarch 17, 2025

Sumanthiran-1170x658.jpg

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற சகல உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியைக் கைப்பற்றும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நியமனங்கள் தொடர்பான கலந்துரையாடல், முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (16/03/2025) இடம்பெற்றது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுக்கு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருமான துரைராசா ரவிகரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுமந்திரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடுகின்ற உள்ளூராட்சித் தேர்தல் நியமனம் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது.

சில இடங்களில் வேட்பாளர் நியமனங்களில் இருந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, பெரும்பாலும் வேட்பாளர் நியமனங்கள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. எனவே அடுத்த வாரம் வேட்புமனுக்களை தாக்கல் செய்வோம்.

அந்த வகையில் போட்டியிடுகின்ற அனைத்து உள்ளூராட்சி சபைகளையும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.


https://globaltamilnews.net/2025/213534/

  • கருத்துக்கள உறவுகள்

த.மு.கூ தனித்தும் கூட்டாகவும் போட்டி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய மூன்று அமைப்புகளும் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் போட்டியிடவுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி அதன் ஒற்றுமையை சிதற விடாமல் தனித்தும், ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளன. 2015 இல் உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த 10 ஆண்டுகளாக அசைக்க முடியாத கூட்டணியாக இருந்து வருவதோடு இதுவரை, மூன்று ஜனாதிபதித் தேர்தல்கள், மூன்று பாராளுமன்றத் தேர்தல்கள், ஒரு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சந்தித்து வந்துள்ளதோடு, இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடத் தயாரக உள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தில் தேசியக் கட்சிகள் பாரிய சவால்களை எதிர்கொண்டிருந்தன. அதில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் சவால்களுக்கு மத்தியில் மூன்று கட்சிகளுக்கும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பாராளுமன்றத்தில் அவர்கள் குரல்கொடுத்து வருகின்றார்கள்.

அந்த வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி கொழும்பு, நுவரெலியா, பதுளை, கண்டி, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் சில இடங்களில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னதிலும், சில இடங்களில் ஜனநாயக மக்கள் முன்னணியின் “ஏணி” சின்னத்திலும், சில இடங்களில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் “அரிவாள்” சின்னதிலும், தனித்துப் போட்டியிடவுள்ளதோடு,  சில இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தியின் “டெலிபோன்” சின்னத்தில் இணைந்தும் போட்டியிடவுள்ளன. அதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தேர்தலுக்குப் பிறகு, ஏனைய கட்சிகளுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இது தொடர்பான புரிந்துணர்வு பேச்சுவார்தைகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்து முறை தேர்தலில் போட்டியிடுவதற்கு இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு வட்டாரத்திலும் மக்களோடு மக்களாக இருந்து, சமூகம் சார்ந்த விடயங்களில் முன்வந்து உதவிகள் வழங்கியும், ஒத்தாசை புரிந்தும் மக்களின் அபிமானத்தைப் பெற்றுள்ளவர்களை தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுவரை தம்மோடு சுக துக்கங்களிலும், அரசியல் ரீதிலும், அரசியலுக்கு அப்பாலும் பங்கு கொண்டவர்களையும் எதிர்காலத்தில் மக்களுக்காக செயற்படப் போகின்றவர்களையும் சீர்தூக்கிப் பார்த்து வாக்களித்து தெரிவு செய்ய வேண்டிய கடமை மக்களைச் சேர்ந்ததாகும்.

தேர்தல்களில் அரசியல் கட்சிகளோடு, சுயேச்சைக் குழுக்களும் வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் தயாராக உள்ளன. எனினும், தனி மனித செல்வாக்கே பெரும்பாலும் வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். எது எப்படியோ தமக்கு சேவை செய்யக் கூடியவர்களைத் தெரிவு செய்ய மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றார்.

https://www.samakalam.com/த-மு-கூ-தனித்தும்-கூட்டாக/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி வெளியானது

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்கள் இன்று 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,

ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று பிற்பகல் 1.30 மணியுடன் நிறைவடைந்ததையடுத்து இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/316313

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் ஒரேயொரு வேட்புமனு

25 மாவட்டங்களிலும் 107 கட்சிகள்,49 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. அங்கு சுயேச்சை குழுவொன்று மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. 

image_0c59cd6a61.jpg

https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9/72-354140

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஏராளன் said:

கிளிநொச்சியில் ஒரேயொரு வேட்புமனு

25 மாவட்டங்களிலும் 107 கட்சிகள்,49 சுயேச்சை குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், கிளிநொச்சி மாவட்டத்தில் எந்தவொரு கட்சியும் வேட்பு மனுவை தாக்கல் செய்யவில்லை. அங்கு சுயேச்சை குழுவொன்று மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. 

image_0c59cd6a61.jpg

https://www.tamilmirror.lk/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%92%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%A9/72-354140

கிளி நொச்சியில்… தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்றவை போட்டியிடவில்லையா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

கிளி நொச்சியில்… தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்றவை போட்டியிடவில்லையா.

வேட்பாளருக்கு ஆள் பிடிக்கிறது ரொம்ப கடினம் அண்ணை!

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஏராளன் said:

வேட்பாளருக்கு ஆள் பிடிக்கிறது ரொம்ப கடினம் அண்ணை!

மக்களுக்கு அரசியலே வெறுத்து விட்டது போலுள்ளது ஏராளன்.

  • கருத்துக்கள உறவுகள்

பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.காரணம் என்ன?சிக்கலான விதிமுறைகளா? அல்லது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பிழைகளா? உள்ளூராட்சி என்பது பாமரர்களும் வேட்பாளராகும் தேர்தல் அதற்கு எறு;ற வகையில் விண்ணப்ப விதிகள் இருக்க வேண்டும.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

பல வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.காரணம் என்ன?சிக்கலான விதிமுறைகளா? அல்லது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பிழைகளா? உள்ளூராட்சி என்பது பாமரர்களும் வேட்பாளராகும் தேர்தல் அதற்கு எறு;ற வகையில் விண்ணப்ப விதிகள் இருக்க வேண்டும.

சற்றுமுன் யாழ் மாவட்ட செயலகத்தில் குழப்பம் - கட்சிகளின் வேட்புமனுக்கள் நிராகரிப்பால் பதற்றம்

  • கருத்துக்கள உறவுகள்

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு

21 Mar, 2025 | 10:49 AM

image

(எம்.மனோசித்ரா)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வியாழக்கிழமை (20)  நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இதன் போது கொழும்பு மாநகரசபை, ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை, சீதாவாக்கை, தெஹிவளை - கல்கிசை மற்றும் மொரட்டுவை உள்ளிட்ட உள்ளூராட்சிமன்றங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய கொழும்பு மாநகரசபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களில் 5 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், பொதுஜன ஐக்கிய முன்னணி, ஜனநாயக தேசிய கூட்டணியாக இரு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு மற்றும் 3 சுயாதீன குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளன. 

மேலும், சீதாவாக்கை பிரதேச சபைக்கான ஐக்கிய தேசிய தேசிய கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீஜயவர்தனபுர கோட்டை நகரசபைக்காக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, ஹோமாகம பிரதேசசபைக்காக சுயாதீன குழு சமர்ப்பித்த வேட்புமனு, தெஹிவளை - கல்கிசை மாநாகரசபைக்காக அகி இலங்கை மக்கள் காங்ரஸ் மற்றும் சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதனைத்தொடர்ந்து, மொரட்டுவை மாநாகரசபைக்காக சுயாதீன குழுவொன்றால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனு, கடுவலை நகரசபைக்காக சுயாதீன குழு மற்றும் இரண்டாம் பரப்பரை கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள், மஹரகம நகரசபைக்காக பொதுஜன ஐக்கிய முன்னணி சமர்ப்பித்த வேட்புமனு, கெஸ்பேவ நகரசபைக்காக லங்கா மக்கள் கட்சி சமர்ப்பித்த வேட்புமனு, கொட்டிகாவத்த - முல்லேரியா பிரதேசசபைக்காக இரண்டாம் தலைமுறை சமர்ப்பித்த வேட்புமனு என்பன நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய உள்ளூராட்சிமன்றங்களில் பல வேட்புமனுக்கள் நிராகரிப்பு | Virakesari.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.