Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (ந.த.க) மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. சில முக்கியமானவை:

1. நீட் தேர்வு எதிர்ப்பு:

• தேதி: செப்டம்பர் 17, 2017

• இடம்: சென்னை

• விவரம்: நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு அநீதி எனக் கருதி, சீமான் தலைமையில் ந.த.க சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டம் நடத்தியது.

• மூலச்செய்திகள்:

16/09/2020 போராட்டம் -

2. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து:

• தேதி: ஏப்ரல் 11, 2018

• இடம்: திருச்சி

• விவரம்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, ந.த.க திருச்சியில் போராட்டம் நடத்தியது.

• மூலச்செய்தி:

3. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு:

• தேதி: மே 20, 2021

• இடம்: சென்னை

• விவரம்: இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து, ந.த.க சென்னை அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம் நடத்தியது.

• மூலச்செய்தி: The Hindu - Naam Tamilar Katchi protests in support of Palestine

  1. மத்திய அரசின் கல்வி கொள்கைகள்:

• மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகள் மாநிலங்களின் கல்வி துறையின் சுயாதீனத்தை பாதிக்கின்றன என்று கருதி, ந.த.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது…

  1. பஞ்சாப் உழவர்கள் மேல் மத்திய அரசு செய்த ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை திரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 19/12/2020 சனிக்கிழமை போராட்டம்

மூலம்

  1. மக்களை திரட்டி நாம் தமிழரால் நடத்தப்பட்ட இந்தி இந்தி எதிர்ப்புபோராட்டம்

மூலம்

இந்த போராட்டங்கள், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டவை..

இதைப்போல் எண்ணற்ற போராட்டங்கள்… இணையம் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன தகவல்கள்..

தலையை சுடுமணலில் புதைத்திருக்கும் வான்கோழிகள் மறுபடியும் குறுக்கால ஒடிவருங்கள் இன்னும் புதுப் புது குற்றச்சாட்டுகளுடன்.. வான்கோழிகளுக்கு பிரச்சினை சீமான் அல்ல.. அவன் பேசும் தமிழ்த்தேசியம்தான்..அதனால் இந்த வேதாளங்கள் தமிழ்தேசியம் ஒழியும் வரை முருங்கை மரத்தை விட்டு இறங்கப்போவதில்லை…

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • Replies 63
  • Views 2.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • ரசோதரன்
    ரசோதரன்

    நான் ஒரு சாத்வீகியாகத்தான் இருந்தேன்............. என்னை சரியாக நான்கு தடவைகள் மைனஸ் துப்பாக்கியால் சுட்டார்கள்................... 'நீங்கள் என்ன கிழித்தீர்கள்........ மூடிக் கொண்டு போங்கள்.........' எ

  • goshan_che
    goshan_che

    சீமான்: 3 மாத விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்- 2 மாதத்தில் இழப்பீடு தர ஆர்டர் போட்ட சுப்ரீம் கோர்ட்! Mathivanan MaranUpdated: Monday, March 3, 2025, 16:30 [IST] சென்னை: நடிகையின் பலாத்கார புகாரை ரத்து

  • Justin
    Justin

    Arbitration வழி தீர்க்கும் படி சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கட்டளையின் எழுத்து வடிவத்தை தேடிப் பார்த்தேன், காணவில்லை! ட்ரம்பிற்கும் சீமானுக்கும் பல ஒற்றுமைகள். அவற்றுள் ஒன்று இவ்வாறு வழக்குகளை இழுத்

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி பார்ததால் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் இவ்வாறான போராட்டங்களை நடத்தின. தமது கட்சி அரசியலுக்காக பத்தோடு பதினொன்றாக இவ்வாறு நடத்தப்படும் இவ்வாறான போராட்டங்களை எடுத்து விடக் கூடாது. இணையத்தில் தேடினால் அனைத்து கட்சிகளும் நடத்திய போராட்டங்கள் வரும்.

எல்லா கட்சிகளும் தமிழரின் எதிரிகள் போலவும் தான் மட்டுமே சத்தியத்தின் பிள்ளை எனவும் ஊடகங்கள் முன் ஆவேசமாக குரைக்கும் சீமானின் வீரம் தமிழ் நாட்டை பத்திரிகையாளர்கள் முன்பு மட்டும் தான். தமிழ் தேசியத்தின் முக்கிய எதிரியே இந்திய தேசியம் பேசுபவர்கள் தான். தமிழ் தேசியத்தை நிராகரித்து இந்திய தேசியத்தை பேசிய அனைத்து இந்திய தேசியவாதிகளையும் தனது வழி காட்டிகளாக கொண்டடிக்கொண்டு இந்திய அரசுக்கு எதிராக மென் போராட்டங்களை நடத்துக் கொண்டு பணவேட்டையீடும் தரகு அரசியல்வாதியே சீமான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

வான்கோழிகளுக்கு பிரச்சினை சீமான் அல்ல.. அவன் பேசும் தமிழ்த்தேசியம்தான்

அவன் பேசுவது தமிழ் தேசியமே அல்ல. இனவெறுப்பு அரசியல். தேசியம் என்பது ஒரு நிலப்பகுதியில் வாழும் அனைத்து மக்களையும் அரவணைத்து சமூக, பொருளாதார, அரசியல் பலத்தை கட்டியெழுப்புவதே உண்மையான தேசியம்.

தனக்கு பிடிக்காத கருத்தை ஒருவர் தேரிவித்தாலே அதற்கு பதில் கூறும் அறிவு இன்றி அவரை கன்னட வந்தேறி, வடுக வந்தேறி என்று பேசும் இனவெறி தம்பிகளை உருவாக்கியது தான் சீமானின் சாதனை. சற்று அறிவு வளர்ந்தால் போதும் அவர்கள் சீமானின் சுயரூபத்தை கண்டு விலகி வருவதும் நடக்கிறது.

சிங்கள இனவாதத்தால் பாதிக்கப்படதாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழரில் அடிப்படை அறிவு கூட வளராத சிலரிடம் தனது நச்சுக்கருத்துகளைத் திணித்து சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவெறியர்களாக மாற்றியதும் சீமான் என்ற நச்சு விதையின் கைங்கரியம் தான். இந்த நச்சு விதைகளை கட்டுகாசு கூட எடுக்க விடாமல் வைத்திருக்கும் தமிழக மக்களின் செயல் பாராட்டுக்குரியது.

  • கருத்துக்கள உறவுகள்

4 hours ago, island said:

தமிழ் நாட்டு தேசிய அரசியலின் முக்கிய இருப்பே டெல்லி அதிகார பீடத்தை எதிர்ப்பதில் தான் தங்கியுள்ள நிலையில், இதுவரை டெல்லி அதிகார பீடத்தை எதிர்தது மக்களை திரட்டி எந்த போராட்டதையும் சீமான் என்ற அயோக்கிய அரசியல்வாதி செய்ய வில்லை.

இதற்கு ஆதாரங்களுடன் மேலே நான் சொன்ன பதிலில் இருந்து ஒரு துண்டு..👇

3 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதைப்போல் எண்ணற்ற போராட்டங்கள்… தலையை சுடுமணலில் புதைத்திருக்கும் வான்கோழிகள் மறுபடியும் குறுக்கால ஒடிவருங்கள் இன்னும் புதுப் புது குற்றச்சாட்டுகளுடன்.. வான்கோழிகளுக்கு பிரச்சினை சீமான் அல்ல.. அவன் பேசும் தமிழ்த்தேசியம்தான்..அதனால் இந்த வேதாளங்கள் தமிழ்தேசியம் ஒழியும் வரை முருங்கை மரத்தை விட்டு இறங்கப்போவதில்லை…

நான் சொன்னது மாதிரியே வான்கோழி முருக்க மரத்தில் ஏறியபோது..👇🤣🤣

2 hours ago, island said:

இப்படி பார்ததால் தமிழ் நாட்டில் உள்ள அத்தனை கட்சிகளும் இவ்வாறான போராட்டங்களை நடத்தின. தமது கட்சி அரசியலுக்காக பத்தோடு பதினொன்றாக இவ்வாறு நடத்தப்படும் இவ்வாறான போராட்டங்களை எடுத்து விடக் கூடாது. இணையத்தில் தேடினால் அனைத்து கட்சிகளும் நடத்திய போராட்டங்கள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, island said:

எல்லா கட்சிகளும் தமிழரின் எதிரிகள் போலவும் தான் மட்டுமே சத்தியத்தின் பிள்ளை எனவும் ஊடகங்கள் முன் ஆவேசமாக குரைக்கும் சீமானின் வீரம் தமிழ் நாட்டை பத்திரிகையாளர்கள் முன்பு மட்டும் தான்.

தமிழ் நாட்டை பத்திரிகையாளர்கள் முன்பு எவ்வளவு அசிங்கமாக தனது பாலியல் வன்கொடுமை வெற்றியை தெரிவிக்கின்றார் என்பதை பார்த்திருப்பீர்கள்.இவரின் கட்சி தமிழ்நாட்டிற்கு அவமானம்

21 hours ago, island said:

சிங்கள இனவாதத்தால் பாதிக்கப்படதாக புலம் பெயர்ந்த ஈழத்தமிழரில் அடிப்படை அறிவு கூட வளராத சிலரிடம் தனது நச்சுக்கருத்துகளைத் திணித்து சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவெறியர்களாக மாற்றியதும் சீமான் என்ற நச்சு விதையின் கைங்கரியம் தான். இந்த நச்சு விதைகளை கட்டுகாசு கூட எடுக்க விடாமல் வைத்திருக்கும் தமிழக மக்களின் செயல் பாராட்டுக்குரியது.

💯

Edited by விளங்க நினைப்பவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று, மத்திய பிஜேபி அரசால் தமிழ்நாட்டின் மக்களவை பிரதிநிதிதுவம் குறைக்கபடக்கூடாது என திமுக, அதிமுக, பாமக, விசிக என எதிரும் புதுருமான சகல கட்சிகளும் ஒரே அணியில் திரண்ட சமயம்👇.

யார் ஆப்செண்ட் என மட்டும் கேட்க்ககூடாது 🤣. அப்படி கேட்டால் நீங்கள் வான்கோழி🤣

முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபுல் சப்போர்ட்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த தலைவர்கள்!

Vignesh SelvarajUpdated: Wednesday, March 5, 2025, 14:27 [IST]

All Party Meeting Chennai MK Stalin

மக்கள் தொகை அடிப்படையில் நாடு முழுவதும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்படும் என மத்திய பாஜக அரசு அறிவித்தது. இப்படிச் செய்தால், மாநிலத்தின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும் எனவும், மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் அபாயம் உள்ளது எனவும் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு மாநில உரிமையை காக்க அனைத்து கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். பாஜக, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகள் பங்கேற்கவில்லை.

Indian Stock Market | Trump போட்ட சொடக்கு! ரத்தக்களரியாகும் Indian Stock Market

தலைவர்கள் கருத்து

இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் கூறிய முக்கிய கருத்துகள் பின்வருமாறு:

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானத்திற்கு அ.தி.மு.க முழு ஆதரவு அளிக்கிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் விகிதாச்சாரம் 7.2% என்ற எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள தொகுதியின் சராசரி மக்கள் தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு இருக்காது.

- அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

கொள்கை முரண்களை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக கூடியிருக்கிறோம். கலந்துகொண்டுள்ள கட்சிகளுக்கு பாராட்டுகள். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள். ஜனநாயகம், கூட்டாட்சி இரண்டும் நம் இரண்டு கண்கள். இவை தேசிய அளவில் நிலைபெற்று இருக்க தற்போதைய எம்.பி.க்கள் எண்ணிக்கையே போதுமானது. எனவே, தொகுதி மறுசீரமைப்பு முயற்சி தேவையற்றது. தேர்தல் வரும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை வழங்காதது, மும்மொழிக் கொள்கை அமல்படுத்துவது இதையெல்லாம் பார்த்தால் எதேச்சதிகார போக்குதான் தெரிகிறது.

- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன்

தமிழ்நாடு தொகுதி வரையறைக்கு எதிராக இல்லை; தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநிலமும் பாதிப்படையாமல் மறுவரையறையை நேர்மையாக, வெளிப்படையாகச் செய்ய வேண்டும்

- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

தொகுதி மறுசீரமைப்பில் தலித் வாக்குகளை சிதறடிக்கும் நடவடிக்கை இருக்கக்கூடாது. ஏற்கனவே சிறுபான்மையினர் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் சீரமைப்பு நடந்துள்ளது.

Also Read

Kalpana: யார் இந்த பாடகி கல்பனா ராகவேந்திரா? அழகு மலராட அபிநயங்கள் கூட பாடலை பாடியவரின் மகளா இவர்?

- விசிக தலைவர் திருமாவளவன்.

தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் அனைத்து தென் மாநில முதல்வர்களையும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேச வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்கி ஒரு கூட்டமைப்பாக சென்று நாம் வலியுறுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது, அப்போதுதான் இந்த பிரச்சனைக்கு உறுதியான தீர்வு கிடைக்கும்.

- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்

"தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாகும். இது தேவையற்றது. தற்போது உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையே தொடர வேண்டும்."

- தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்

"தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தை கூட்டியுள்ளது. மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது"

- தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன்

தொகுதி மறுவரையறையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதலமைச்சர் நடத்த வேண்டும். ஒரு நாள் பொது வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்

- தமிமுன் அன்சாரி

"தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழ்நாடு மக்களை அடக்க நினைத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் இணைந்து அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் ஆதரவு அளிக்கும்.

- தமமுக நிறுவனர் ஜான் பாண்டியன்

"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இந்தியாவிலேயே முதன்முறையாக திமுக தலைமையிலான அரசு குரல் கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும் அரசுக்கு ஆதரவாக திரண்டுள்ளனர்."

- கொங்கு இளைஞர் கட்சி தலைவர் உ.தனியரசு

"நிதானமும் தெளிவும் கொண்ட முதலமைச்சர் அவர்களால் மட்டும்தான் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். எனவே நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் எங்கள் ஆதரவு உண்டு."

- ஸ்ரீதர் வாண்டையார்

https://tamil.oneindia.com/news/chennai/all-party-meeting-led-by-cm-stalin-insists-on-retaining-tamil-nadu-s-parliamentary-representation-685157.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

Just now, goshan_che said:

இந்த அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் உள்ளிட்ட 63 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், 58 கட்சிகள் மட்டுமே பங்கேற்றனர். பாஜக, புதிய தமிழகம் கட்சி, புதிய நீதிக் கட்சி, நாதக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய 5 கட்சிகள் பங்கேற்கவில்லை.

👆குரூப்பில…டூப்பு🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

முதல்வர் ஸ்டாலினுக்கு ஃபுல் சப்போர்ட்! அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆதரவு தெரிவித்த தலைவர்கள்!

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளின். கருத்துகள் என்ன??? ஆதரிக்கிறார்கள???? தொகுதி மாறுசீரமைப்பை அல்லது எதிர்க்கிறார்களா. ?? கலந்து கொள்ளவில்லை என்றால் எதிர்ப்பு என்று எப்படி கருத முடியும்??? அல்லது ஆதரவு என்று எப்படி எடுக்கலாம்???

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

நாதக எதிர்ப்பு என்றுதான் தெரிவித்து உள்ளார்கள் அத்துடன் தனியாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.. தமிழக அரசு மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு எதிரான எல்லாதிட்டங்களையும் மத்திய அரசுக்கு கையெழுத்து வைத்து நிறைவேற 39 உறுப்பினர்கள் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டு இங்கு தேர்தல் நாடகத்துக்கு கூட்டங்கள் நடத்துவதால் தனியாக போராட உள்ளதாக சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவுத்துள்ளார்..

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழக அரசு மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு எதிரான எல்லாதிட்டங்களையும் மத்திய அரசுக்கு கையெழுத்து வைத்து நிறைவேற 39 உறுப்பினர்கள் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டு இங்கு தேர்தல் நாடகத்துக்கு கூட்டங்கள் நடத்துவதால் தனியாக போராட உள்ளதாக சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவுத்துள்ளார்..

பாராளுமன்றத்தில் மறைமுகமால்லாம் ஆதரவு தெரிவிக்கமுடியாது, வெளிப்படையாகத் தான் பண்ணனும். இன்னைக்கு நடந்த கூட்டத்துக்கு பாஜக அடிவருடிகள் மட்டும் தான் போகல, மத்தபடி நேரெதிர் அரசியல் செய்கிறவர்கள் கூட அவர்கள் மாநில நலன் கருதி ஒன்றுகூடியிருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாத கட்சிகளின். கருத்துகள் என்ன??? ஆதரிக்கிறார்கள???? தொகுதி மாறுசீரமைப்பை அல்லது எதிர்க்கிறார்களா. ?? கலந்து கொள்ளவில்லை என்றால் எதிர்ப்பு என்று எப்படி கருத முடியும்??? அல்லது ஆதரவு என்று எப்படி எடுக்கலாம்???

சீமான் மத்திய அரசு செய்வதை எல்லாம் எதிர்பதாக வாயால் வடை சுடுவார்….

ஆனால் செயல் என்று வந்தால் பாஜக அதன் கூட்டணி கட்சிகளோடுதான் அவர் நிற்பார்.

உரக்க கத்தும் - கள்ள மெளனி அவர்.

மேலே புறக்கணித்த கட்சிகள் எல்லாம் பாஜக சார்பு நிலை எடுப்பன, அதுதான் குரூப்பில டூப்பு என்றேன்.

இது தமிழக நலன் சார்ந்த விடயம், பாஜக கூட்டணியில் ராஜ்யசபா சீட் எடுத்த பாமக, திமுகவை மிக கடுமையாக சாடும் அதிமுக, தவெக கூட இதில் பங்கெடுத்துள்ளன.

நாதக கூட பங்கெடுத்து தம் கருத்தை சொல்லி விட்டு, திமுக நாடகம் அடுகிறது என்ற கருத்தையும் சொல்லி விட்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

இதற்கு ஆதாரங்களுடன் மேலே நான் சொன்ன பதிலில் இருந்து ஒரு துண்டு

அண்ணே நான் சொன்னது இந்த போராட்டங்களை அல்ல. தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் குறித்து இதை போன்ற பல போராட்டங்களை நடத்தி இருக்கு.

அவை எல்லாம் அரசியல் கட்சிகளாக இயங்கின. ஆகவே அவர்கள் இப்படிபட்ட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் உங்க நொண்ணன்னைப் போல நான் நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள். வீட்டை திருத்த நாம் வரவில்லை இடித்து புதிதாக கட்ட வந்த பிள்ளைகள் என று பீலா விடவில்லை.

பிரபாகரன் பிள்ளைகள் நாம் என்று கூறிய வாயால் “எனது போராட்டம்” என்ற நூலை ஹிட்லர் எனக்காக தான்டா எழுதி வைத்துவிட்டு சென்றான் என்றும், முசோலினி இப்படி கூறினான் அப்படி கூறினான் என்று நரம்பு முறுக்கேற சீமானைப் போல் மற்றைய கட்சிகள் காட்டுக்கத்து கத்தவில்லை.

நாங்கள் மாபெரும் புரட்சியை உருவாக்க வந்தவர்கள் என்று 15 வருடங்களாக மேடை மேடையாக காட்டுக்கத்திக்கொண்டிருப்பவர் சீமான். அதை நிலை நாட்டவேண்டுமானால் இந்திய தேசியத்தை எதிர்தது பல தொடர் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும். அதை செய்தாரா என்பது தான் எனது கேள்வி.

மற்றப்படி அவரை யாரும் போராட சொல்லவில்லை. அப்படி போராடி தனது சுகவாழ்வை அவர் இழக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர் தான் தன்னை மாபெரும் புரட்சியாளர் என்றும், ஒரு நாள் என் கையில் இந்த நிலம் சிக்கினா பாரு நீ செத்தாய் என்று காட்டு கத்து கத்துபவர். அப்படியாக தன்னை அரசியல் கட்சியாக இலாமல் மாபெரும் புரட்சிய நடத்த வந்த புரட்சியாளராக மேடைகளில் மட்டும் காட்டிக் கொண்டவர் அந்த புரட்சியை உருவாக்கக 15 வருடங்களில் செய்த போராட்டம் என்ன என்பதே கேள்வி. தமிழ் தேசியத்தை எதிர்தத இந்திய தேசிய தேசியத்திற்கு விசுவாசமாக இருந்த அனைவரையும் தனது வழிகாட்டிகளாக கொண்டாடுவது ஏன்?

நீங்கள் மாற்றத்திற்கானவர்கள் என று நரம்பு முறுக்கேற கத்தினால் மட்டும் போதாது அதற்கான தொடர் போராட்டங்களையும் நடத்தி இருக்க வேண்டும். அதை நடத்தவில்லை என்றால் நானும் மற்றயவர்களை போல பத்தோடு பதினொன்றான அரசியல் கட்சி தான் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். சும்மா இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு ஆளும் தரப்போடு டீல் செய்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதியே இந்த சீமான் என்ற வெத்து வேட்டு ஆசாமி.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

நாதக எதிர்ப்பு என்றுதான் தெரிவித்து உள்ளார்கள் அத்துடன் தனியாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.. தமிழக அரசு மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு எதிரான எல்லாதிட்டங்களையும் மத்திய அரசுக்கு கையெழுத்து வைத்து நிறைவேற 39 உறுப்பினர்கள் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டு இங்கு தேர்தல் நாடகத்துக்கு கூட்டங்கள் நடத்துவதால் தனியாக போராட உள்ளதாக சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவுத்துள்ளார்..

என்னப்பா இது?

சீமான் தான் கட்டுக்காசே எடுக்காத ஆளாச்சே. அதெல்லாம் ஒரு கட்சி என்று கணக்கிலையே இல்லையே. அந்தக்கட்சி போனால் என்ன போகாமல் விட்டால் தான் என்ன??

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீமான் மத்திய அரசு செய்வதை எல்லாம் எதிர்பதாக வாயால் வடை சுடுவார்….

ஆனால் செயல் என்று வந்தால் பாஜக அதன் கூட்டணி கட்சிகளோடுதான் அவர் நிற்பார்.

உரக்க கத்தும் - கள்ள மெளனி அவர்.

மேலே புறக்கணித்த கட்சிகள் எல்லாம் பாஜக சார்பு நிலை எடுப்பன, அதுதான் குரூப்பில டூப்பு என்றேன்.

இது தமிழக நலன் சார்ந்த விடயம், பாஜக கூட்டணியில் ராஜ்யசபா சீட் எடுத்த பாமக, திமுகவை மிக கடுமையாக சாடும் அதிமுக, தவெக கூட இதில் பங்கெடுத்துள்ளன.

நாதக கூட பங்கெடுத்து தம் கருத்தை சொல்லி விட்டு, திமுக நாடகம் அடுகிறது என்ற கருத்தையும் சொல்லி விட்டு வந்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை.

தொகுதி பங்கீட்டில். எப்படி தொகுதிகள். குறையும் தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதா.?? நாடு முழுவதும் ஒரே மாதிரி தானே தொகுதி பங்கீடு நடக்கும் அல்லது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் தானே ?? தமிழ்நாட்டு தமிழர்களின் குழந்தை பெறும் வீதம் குறைத்து விட்டாதா??? எனவே… எதிர்ப்புகள் நியாயம் அற்றது மக்கள் தொகை கூடினால். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 விட கூட உதாரணமாக 45 கிடைக்குமென்றால். எதிர்க்க மாட்டார்கள் இல்லையா?? இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம்

3 minutes ago, விசுகு said:

என்னப்பா இது?

சீமான் தான் கட்டுக்காசே எடுக்காத ஆளாச்சே. அதெல்லாம் ஒரு கட்சி என்று கணக்கிலையே இல்லையே. அந்தக்கட்சி போனால் என்ன போகாமல் விட்டால் தான் என்ன??

ஆமாம் சரி தான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலிருங்கள். 🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

என்னப்பா இது?

சீமான் தான் கட்டுக்காசே எடுக்காத ஆளாச்சே. அதெல்லாம் ஒரு கட்சி என்று கணக்கிலையே இல்லையே. அந்தக்கட்சி போனால் என்ன போகாமல் விட்டால் தான் என்ன??

என்னப்பா இது…

அண்ணை ஒருவர் தமிழ்நாட்டில் “வள்ர்கிறேனே மம்மி” கட்சி, 3வது(2வது?) பெரிய கட்சி, 2026 இல் தனித்து நின்று சரித்திரம் படைக்க போகும் கட்சி (ஆனால் பெட் கட்ட கேட்டேன், மொள்ள மாறி விட்டார்🤣) என்றாரே?

அத்தாட்டி பெரிய கட்சி போய் இருக்க வேண்டும் அல்லவா?

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

என்னப்பா இது…

அண்ணை ஒருவர் தமிழ்நாட்டில் “வள்ர்கிறேனே மம்மி” கட்சி, 3வது(2வது?) பெரிய கட்சி, 2026 இல் தனித்து நின்று சரித்திரம் படைக்க போகும் கட்சி (ஆனால் பெட் கட்ட கேட்டேன், மொள்ள மாறி விட்டார்🤣) என்றாரே?

அத்தாட்டி பெரிய கட்சி போய் இருக்க வேண்டும் அல்லவா?

கொஞ்சம் பொறுத்திருங்கள்: போன கட்சிகள் எல்லாம் ஒத்துக் கொண்ட நிலைப்பாட்டை மத்திய அரசு நிராகரித்து அறிக்கை விட்டால், சீமான் முகாம் விடும் யூ ரியூப் காணொலியின் தலைப்பு: "பகிஷ்கரித்த நாதக, பிசுபிசுத்துப் போன தமிழக கட்சிகள் தீர்மானம்"😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

தொகுதி பங்கீட்டில். எப்படி தொகுதிகள். குறையும் தமிழ்நாட்டில் மக்களின் எண்ணிக்கை குறைத்து விட்டதா.?? நாடு முழுவதும் ஒரே மாதிரி தானே தொகுதி பங்கீடு நடக்கும் அல்லது செய்யப்படும் மக்களின் எண்ணிக்கை குறைந்தால் தொகுதி எண்ணிக்கை குறையும் தானே ?? தமிழ்நாட்டு தமிழர்களின் குழந்தை பெறும் வீதம் குறைத்து விட்டாதா??? எனவே… எதிர்ப்புகள் நியாயம் அற்றது மக்கள் தொகை கூடினால். பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 39 விட கூட உதாரணமாக 45 கிடைக்குமென்றால். எதிர்க்க மாட்டார்கள் இல்லையா?? இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம்

  1. ஏற்கனவே தமிழ்நாடும் ஏனைய தென்னிந்திய+மஹாராட்ஸிடிரா+குஜராத் இணைந்து வழங்கும் நிதியில்தான் ஒண்டும் உதவாத ஹிந்தி பெல்ட் மாநிலங்கள் ஓடுகிறன.

  2. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இராமர் கோவிலில் மினகெடாமல், வத வத என பெத்து போட்டு விட்டு சோம்பேறிகளாய் மக்களை இருக்க விடாமல், அளவான குடும்பம், பெண்ணுக்கு கல்வி, அதிக இட ஒதுக்கீடு என முற்போக்காக நகர்வன. ஹிந்தி பெல்ட் பிள்ளை பெற்று நாட்டுக்கு சுமை ஏத்த மட்டுமே இலாயக்கு.

  3. கூட்டாட்சியில் நிதி பங்களிப்பும் ஒரு முக்கிய அம்சம். மக்கள் தொகை ஒப்பீட்டளவில் கட்டுக்குள் இருப்பதே தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் மத்திய அரசுக்கு அதிக நிதி அளிக்க காரணம்.

  4. எனவே இதையே காரணமாக வைத்து எம்பி சீட்டை குறைப்பது அநீதியானது.

  5. உழைப்பவனுக்கு குறைய சீட், ஓசியில் பிள்ளை பெறுபவனுக்கு கூட சீட் என்பது கூட்டாட்ச்சி தத்துவத்தை மீறும் செயல். மாநிலங்களின் வகிபாகத்தை கணக்கிடும் போது தனியே சனத்தொகையை மட்டும் கருத கூடாது. எந்த மாநிலங்களால் இந்தியா முன்னோக்கி போகிறது என்பதும் முக்கியம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kandiah57 said:

இந்த நேரத்தில் அயல் மாநிலத்தில் உள்ள தமிழ் கிராமங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும்படி கோரலாம். கோரிக்கை வைக்கலாம்

இது இனி நடவாத காரியம்.

தமிழ்நாட்டின் விடிவெள்ளி…அப்படி…இப்படி…என புகழப்படும் காமராஜர் அடித்த ஆப்பு அது.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

Tamil Nadu’s Gross State Domestic Product grew 8.23% in 2023-24

The State’s average economic growth rate was 5.80% in real terms from 2012-13 to 2020-21. The growth rates for 2021-22, 2022-23, and 2023-24 were 7.89%, 8.13%, and 8.23% respectively at constant prices.

The Hindu
No image preview

Tamil Nadu’s Gross State Domestic Product grew 8.23% in 2...

Tamil Nadu's economic growth, per capita income, and sector-wise contributions compared to national averages from 2012-24.

"திராவிட மாடல்" காரணமாக தமிழ்நாடு பொருளாதாரத்தில் ஏறுமுகமாகத் தான் இருக்கிறது.

NB: இத்தகைய ஒரு தகவலை சில ஆண்டுகள் முன்பு இங்கே யாரோ பகிர்ந்த போது "இந்த காலாண்டுகளின் வளர்ச்சி வீதங்களைக் கூட்டி, 12 ஆல் பிரித்து வரும் இலக்கத்தைத் தான் நான் ஏற்றுக் கொள்வேன்!" என்று அடம் பிடித்த எந்திரிமாரும் இருக்கீனம்!

கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பு, கற்ற பிரயோக கணிதத்தை தூக்கிச் சாப்பிட்ட கணம் அது😂!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

அண்ணே நான் சொன்னது இந்த போராட்டங்களை அல்ல. தமிழ் நாட்டில் அரசியல் செய்யும் அனைத்து அரசியல் கட்சிகளும் மக்களின் இவ்வாறான பிரச்சனைகள் குறித்து இதை போன்ற பல போராட்டங்களை நடத்தி இருக்கு.

அவை எல்லாம் அரசியல் கட்சிகளாக இயங்கின. ஆகவே அவர்கள் இப்படிபட்ட பல போராட்டங்களை நடத்தினர். ஆனால் உங்க நொண்ணன்னைப் போல நான் நாங்கள் பிரபாகரன் பிள்ளைகள். வீட்டை திருத்த நாம் வரவில்லை இடித்து புதிதாக கட்ட வந்த பிள்ளைகள் என று பீலா விடவில்லை.

பிரபாகரன் பிள்ளைகள் நாம் என்று கூறிய வாயால் “எனது போராட்டம்” என்ற நூலை ஹிட்லர் எனக்காக தான்டா எழுதி வைத்துவிட்டு சென்றான் என்றும், முசோலினி இப்படி கூறினான் அப்படி கூறினான் என்று நரம்பு முறுக்கேற சீமானைப் போல் மற்றைய கட்சிகள் காட்டுக்கத்து கத்தவில்லை.

நாங்கள் மாபெரும் புரட்சியை உருவாக்க வந்தவர்கள் என்று 15 வருடங்களாக மேடை மேடையாக காட்டுக்கத்திக்கொண்டிருப்பவர் சீமான். அதை நிலை நாட்டவேண்டுமானால் இந்திய தேசியத்தை எதிர்தது பல தொடர் போராட்டங்களை நடத்தி இருக்க வேண்டும். அதை செய்தாரா என்பது தான் எனது கேள்வி.

மற்றப்படி அவரை யாரும் போராட சொல்லவில்லை. அப்படி போராடி தனது சுகவாழ்வை அவர் இழக்கமாட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமே. அவர் தான் தன்னை மாபெரும் புரட்சியாளர் என்றும், ஒரு நாள் என் கையில் இந்த நிலம் சிக்கினா பாரு நீ செத்தாய் என்று காட்டு கத்து கத்துபவர். அப்படியாக தன்னை அரசியல் கட்சியாக இலாமல் மாபெரும் புரட்சிய நடத்த வந்த புரட்சியாளராக மேடைகளில் மட்டும் காட்டிக் கொண்டவர் அந்த புரட்சியை உருவாக்கக 15 வருடங்களில் செய்த போராட்டம் என்ன என்பதே கேள்வி. தமிழ் தேசியத்தை எதிர்தத இந்திய தேசிய தேசியத்திற்கு விசுவாசமாக இருந்த அனைவரையும் தனது வழிகாட்டிகளாக கொண்டாடுவது ஏன்?

நீங்கள் மாற்றத்திற்கானவர்கள் என று நரம்பு முறுக்கேற கத்தினால் மட்டும் போதாது அதற்கான தொடர் போராட்டங்களையும் நடத்தி இருக்க வேண்டும். அதை நடத்தவில்லை என்றால் நானும் மற்றயவர்களை போல பத்தோடு பதினொன்றான அரசியல் கட்சி தான் என்பதை ஏற்று கொள்ள வேண்டும். சும்மா இளைஞர்களை உசுப்பேற்றி விட்டு ஆளும் தரப்போடு டீல் செய்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதியே இந்த சீமான் என்ற வெத்து வேட்டு ஆசாமி.

சீமான் ஒரு வெத்து வேட்டு ஆசாமி என நீங்கள் சொல்ல, அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறதா..?

இருந்தால் ஆதாரங்களை கொடுங்கள்…

அதுவுமில்லாமல் வெறும் உணர்ச்சி வெறி மற்றூம் காழ்ப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் எதற்கும் பயன்படாது…

மற்ற கட்சிகள் போராட்டம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்...

அவர்களின் போராட்டங்கள் எங்கே?

கூடவே மத்திய அரசை நேரடியாக எதிர்த்த எந்த கட்சி உண்மையாக போராடியது…?

பாஜகவுடன் மறைமுக உடன்படிக்கையில், திமுக, அதிமுக, பாமக, விசிக உட்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயல்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா..?

தொடர் போராட்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு கட்சி தனது அடிப்படை நிலைப்பாட்டை நிலைநாட்ட முடியும்..?

நீங்கள் கூறும் லாஜிக்கால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியும் போராடவில்லை என்பது தான் முடிவு ஆகும்...

அப்படி இருந்தால், அவர்கள் அனைவரும் வெத்து வேட்டு ஆசாமிகள் தான் அல்லவா…?

சீமான் தான் ஒரு வெத்து வேட்டு அரசியல்வாதி என்றால், மத்திய அரசை நேரடியாக எதிர்த்த மற்ற கட்சிகள் யார்..?

அவர்கள் எப்படி போராடினார்கள்..?

அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக எந்த அளவுக்கு செயல்பட்டார்கள்..?

உண்மையில் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டு போடுவது, ஒரு அரசியல் ஆய்வை விட, ஒரு உணர்ச்சி வசப்பட்ட விமர்சனமாகவே தெரிகிறது…

நீங்கள் சொன்னதற்கான ஆதாரங்களை கொடுங்கள்...

அல்லது, ஒரு வெற்று விமர்சனமாக நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்ளுங்கள்…

அத்துடன் உங்கள் நாட்டில் ஒரு அஞ்சாறு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள்.. சீமான் போல் தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.. அவர்கள் எதற்கு அரசியலில் இருக்கிறார்கள்..எத்ற்கு உங்கள் மக்கள் வாக்குப்போடுகிறார்கள் 95வீதத்துக்கும் அதிகமாக..

அரசியலில் சில நெளிவு சுழிவுகள் இருக்கத்தான் வேண்டும்.. அப்பத்தான் கொஞ்சமாவது இன அக்கறை உள்ள கட்சிகள் தன் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்.. இல்லை என்றால் இனத்தை அடைவைக்கும் கட்சிகள் வந்து கோவணத்தையும் உருவி விடுவார்கள்..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

Tamil Nadu’s Gross State Domestic Product grew 8.23% in 2023-24

The State’s average economic growth rate was 5.80% in real terms from 2012-13 to 2020-21. The growth rates for 2021-22, 2022-23, and 2023-24 were 7.89%, 8.13%, and 8.23% respectively at constant prices.

The Hindu
No image preview

Tamil Nadu’s Gross State Domestic Product grew 8.23% in 2...

Tamil Nadu's economic growth, per capita income, and sector-wise contributions compared to national averages from 2012-24.

"திராவிட மாடல்" காரணமாக தமிழ்நாடு பொருளாதாரத்தில் ஏறுமுகமாகத் தான் இருக்கிறது.

NB: இத்தகைய ஒரு தகவலை சில ஆண்டுகள் முன்பு இங்கே யாரோ பகிர்ந்த போது "இந்த காலாண்டுகளின் வளர்ச்சி வீதங்களைக் கூட்டி, 12 ஆல் பிரித்து வரும் இலக்கத்தைத் தான் நான் ஏற்றுக் கொள்வேன்!" என்று அடம் பிடித்த எந்திரிமாரும் இருக்கீனம்!

கண்மூடித்தனமான திராவிட எதிர்ப்பு, கற்ற பிரயோக கணிதத்தை தூக்கிச் சாப்பிட்ட கணம் அது😂!

தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு தயாரிப்பு (GSDP) 2023-24ஆம் ஆண்டில் 8.23% வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உண்மை.. இந்த வளர்ச்சியின் காரணமாக “திராவிட மாடல்” மட்டும்தான் என்று குறிப்பிடுவது சரி அல்ல…

பொருளாதார வளர்ச்சி என்பது பல காரணிகளின் அடிப்படையில் அமைகிறது, அதில் முன்னைய அரசின் கொள்கைகள், மத்திய அரசின் திட்டங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், முதலீடுகள், தொழில்துறை வளர்சசி, விவசாயம், சேவைத் துறை வளர்ச்சி போன்றவை அடங்கும்…

எனவே, பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட மாடலுக்கு மட்டுமே ஒதுக்கி விடுவது சரியான அணுகுமுறை அல்ல... அதனால், “திராவிட மாடல்” மட்டுமே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்வது தவறாகும்…

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

திராவிட மாடல்:

மதச்சார்பின்மை (பிரான்ஸ் போல தடை இல்லை, ஆனால் அரச ஆதரவில்லை)

பெண்கள் கல்வி, உரிமைகள் ஊக்குவிப்பு, இதனால் பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பு

சாதிக்கெதிரான அரச கொள்கைகள் - இதனால் அந்த மக்களினதும் பங்களிப்பு.

மிகப் பெரிய காரணி..இந்தியாவுக்கு வெளியே இருந்து முதலீடு செய்ய எந்த மாநிலம் சிறந்தது என்றால், கம்பனிகள் தமிழ்நாடு உட்பட்ட, தென்னக மாநிலங்கள் 3 இனைத் தான் விரும்புகின்றன (போன ஆண்டே ஒரு கட்டுரை வந்திருந்தது, இங்கே இணைக்கப் பட்டது).

இதெல்லாம் திராவிட கொள்கைகளால் வந்த ஸ்திரத்தன்மை-stability, அதனால் வந்த முதலீடும், இலாபங்களும்.

இதை 2023 2024 இற்குள் சுருக்கி விடாதீர்கள், கட்டுரையை முழுவதும் வாசித்து அறிந்து கொண்ட பின் எழுதுங்கள். கருணா நிதி, ஜெயலலிதா, எடப்பாடி இருந்த காலங்களிலும் இதே கொள்கை, இதே போன்ற வளர்ச்சி.

மத்திய அரசின் போக்கைச் சொல்கிறீர்கள். அது பொதுக்காரணி-common denominator, அப்படியானால் ஏனைய மாநிலங்களும் தான் வளர்ந்திருக்க வேண்டும். நிதி முகாமையில் இருக்கும் உங்களுக்கு இது புரியாமல் இருக்காது.

ஆனால், சில ஆண்டுகள் முன்பு இதே போன்ற உரையாடலில், எந்திரிமார் அடிப்படைக் கணக்கையே தூக்கிக் கடாசி விட்ட மாதிரி, நீங்களும் உங்கள் பொருளியல் அறிவை மடக்கி வைத்து விட்டு வந்திருக்கிறீர்களென நினைக்கிறேன்😂.

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, Justin said:

முதலில், திராவிட மாடல் குறிப்பிடும் சில முக்கிய அம்சங்களை நீங்கள் பட்டியலிட்டுள்ளீர்கள், அவை தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றியிருப்பது உண்மைதான்... மதச்சார்பின்மை, பெண்கள் கல்வி, சாதி எதிர்ப்பு கொள்கைகள், முதலீட்டு நட்பு சூழல் ஆகியவை நிச்சயமாக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்றன…. ஆனால், இவற்றை மட்டுமே காரணமாகக் காட்டுவது பொருளாதார வளர்ச்சியின் முழுமையான விளக்கமாகாது…

உங்கள் கூற்றின் அடிப்படையில், திராவிட கொள்கைகள் நிலைத்த வளர்ச்சியை (stability) உருவாக்கியதால் முதலீடுகள் அதிகரித்தது என்பது உண்மையாக இருக்கலாம்... ஆனால், அதே நேரத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைகள், உலகளாவிய சந்தை நிலைமை, தமிழகத்திற்கேற்ப உள்ள தொழில்துறை சுற்றுச்சூழல், ஏற்றுமதி சந்தையின் நிலை போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்...

எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் ஒரு தனிப்பட்ட முறைமையின் விளைவாக மட்டுமே அமையாது... உங்கள் கண்ணோட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை “பொதுக்காரணி” (common denominator) என குறிப்பிடுகிறீர்கள், ஆனால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான விளைவை எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்தாது... இதற்கு மாநிலத்தின் கொள்கைகள் மட்டுமல்ல, அதன் நிலை, வளம், மக்கள் உழைப்பு, முதலீட்டு சுதந்திரம் போன்றவை இணைந்து செயல்படுகின்றன...

இதைப் பார்க்கும் வழிகள்:

1. சென்னையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் என்பதற்கான காரணம் திராவிட கொள்கைகள் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் தென்னக மாநிலங்களை முதலீட்டுக்கு ஏற்ற இடமாக பார்க்கும் காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்...

2. பெண்கள் கல்வி வளர்ச்சி, அவர்களது தொழில் பங்கேற்பு என்பவை தமிழகத்தில் சிறப்பாக உள்ளன, ஆனால் இது திராவிட மாடலுக்கும், சமகாலத்தில் தொழில் வாய்ப்புகளுக்கும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மாற்று அரசியல் சிந்தனைகளுக்கும் இணைந்த ஒரு விளைவு...

உங்களுடைய வாதம் ஒரு முக்கியமான அம்சத்தை காட்டுகிறது – தமிழகத்தின் வளர்ச்சி திராவிட கொள்கைகள் மூலமாக நிலைத்தன்மை அடைந்திருக்கலாம்... ஆனால், அதை மட்டும் காரணமாக காட்டி மற்ற சக்திகளை புறக்கணிக்க முடியாது...

கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் வெவ்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது – அப்போது கூட பெரிய மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி தொடர்ந்து நடந்திருக்கிறது... இது ஒரே ஒரு கொள்கை மட்டுமே காரணம் அல்ல, பல காரணிகளின் கூட்டு விளைவாகும்...

எனவே, வளர்ச்சி என்பது ஒரே ஒரு காரணத்தால் அமையாது... திராவிட மாடல் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கலாம், ஆனால் அதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருக்கின்றன என்பதை ஏற்க வேண்டும்...

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

உறவே, ஏன் இந்த குத்தி முறியும் சால்ஜாப்பு😂? "திராவிட மொடல் மட்டும் தான் தமிழ்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஒற்றைக் காரணம் - the only factor" என்று சொன்னால் ஒரு ஐந்தாம் வகுப்பு சமூகக் கல்வி படித்த பிள்ளை கூட ஏற்றுக் கொள்ளாது, நான் எப்படி அதைச் சொல்வேன்?

ஆனால், முக்கியமான ஒரு காரணம் - critical factor அது. எப்படி?

நீங்கள் சொல்லும் ஏனைய காரணிகளையும் வைத்துக் கொண்டு, திராவிடத்தை அகற்றி பீகார், உத்தர பிரதேசம் போல பிஜேபி பாணி ஆட்சி இருந்தால், தமிழ்நாடு வளர்ந்திருக்காது. எனவே, தான் திராவிடக் கொள்கைள் முக்கியமான காரணி - critical factor என்கிறேன்.

திராவிடக் கொள்கைகள் சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய சமூகச் சூழல், அரசியல் சூழல் என்பவை ஸ்திரத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஸ்திரத்தன்மை தான் திராவிடக் கொள்கையின் ஒட்டு மொத்த நல்ல விளைவு. இதில் இருந்து தான் திராவிடக் கொள்கையின் பொருளாதாரம் மீதான முக்கிய செல்வாக்கு உருவாகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

ஆமாம் சரி தான் தொடர்ந்தும் இந்த நிலைப்பாட்டிலிருங்கள். 🤣

🤣

அவர் சீமான் கட்சியின் உண்மை நிலையை உணர்ந்துள்ளார்

3 hours ago, goshan_che said:

இது இனி நடவாத காரியம்.

தமிழ்நாட்டின் விடிவெள்ளி…அப்படி…இப்படி…என புகழப்படும் காமராஜர் அடித்த ஆப்பு அது.

சீமான் போற்றுகின்ற இந்திய ஒருமைபாட்டு தலைவர்கள் எல்லாமே ஆப்பு அடிப்பவர்களாக இருக்கின்றனர் இன்னொரு சீமானின் தலைவர் இருக்கின்றார் ஹெச்.ராஜா என்று சீமானும் அவர் மாதிரியே நெற்றியில் வர்ணம்அடித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Justin said:

உறவே, ஏன் இந்த குத்தி முறியும் சால்ஜாப்பு😂? "திராவிட மொடல் மட்டும் தான் தமிழ்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு ஒற்றைக் காரணம் - the only factor" என்று சொன்னால் ஒரு ஐந்தாம் வகுப்பு சமூகக் கல்வி படித்த பிள்ளை கூட ஏற்றுக் கொள்ளாது, நான் எப்படி அதைச் சொல்வேன்?

ஆனால், முக்கியமான ஒரு காரணம் - critical factor அது. எப்படி?

நீங்கள் சொல்லும் ஏனைய காரணிகளையும் வைத்துக் கொண்டு, திராவிடத்தை அகற்றி பீகார், உத்தர பிரதேசம் போல பிஜேபி பாணி ஆட்சி இருந்தால், தமிழ்நாடு வளர்ந்திருக்காது. எனவே, தான் திராவிடக் கொள்கைள் முக்கியமான காரணி - critical factor என்கிறேன்.

திராவிடக் கொள்கைகள் சிறுகச் சிறுக கட்டியெழுப்பிய சமூகச் சூழல், அரசியல் சூழல் என்பவை ஸ்திரத்தன்மைக்கு காரணமாக இருக்கலாம் என நீங்களே ஒத்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்த ஸ்திரத்தன்மை தான் திராவிடக் கொள்கையின் ஒட்டு மொத்த நல்ல விளைவு. இதில் இருந்து தான் திராவிடக் கொள்கையின் பொருளாதாரம் மீதான முக்கிய செல்வாக்கு உருவாகிறது.

உங்கள் பதிலைப் பார்க்கும்போது, “திராவிட மாடல் மட்டும் தான் வளர்ச்சிக்கு காரணம்” என்று நான் வாதிட்டேன் என்று நினைத்துவிட்டீர்கள் போல... ஆனால், என் வாதம் இதுதான்: திராவிட மாடல் ஒரு பங்கு வகிக்கிறது, ஆனால் வளர்ச்சி பல காரணிகளின் விளைவு..

நீங்கள் சொல்வது சரி – திராவிட கொள்கைகள் தமிழ்நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை (stability) உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஆனால, இது மட்டும்தான் வளர்ச்சிக்கான “critical factor” என்று சொல்ல முடியாது.

நீங்கள் “பீகார், உத்தரப் பிரதேசம் போல பிஜேபி ஆட்சி இருந்தால் தமிழ்நாடு வளர்ந்திருக்காது” என்று கூறுகிறீர்கள். சரி, ஆனால் அதே நேரத்தில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தமிழகத்திற்குப் போன்றவே வளர்ச்சியடைந்துள்ளன, ஆனால் அங்கு “திராவிட மாடல்” இல்லை…

என் கேள்வி இதுதான்:

1. திராவிட மாடல் இல்லாத மாநிலங்களில் வளர்ச்சி நடந்துள்ளது – அவை எப்படி?

• மகாராஷ்டிரா (மும்பை, புனே)

• கர்நாடகா (பெங்களூரு – இந்தியாவின் முன்னணி IT நகரம்)

• கேரளா (அதிக மனித வள மேம்பாடு, நல்ல மருத்துவம், கல்வி)

இவை “திராவிட மாடல்” இல்லாமல் வளர்ந்துள்ளன, இதன் பொருள் என்ன..?

2. மத்திய அரசு, உலகளாவிய முதலீடு, தொழில்துறை வளர்ச்சி – இவை புறந்தள்ள முடியாத காரணிகள் அல்லவா?

• மத்திய அரசின் GST, Make in India, Foreign Direct Investment (FDI) போன்ற திட்டங்கள் இந்தியாவிலேயே தொழில்களை வளர்த்துள்ளன…

• உலகளாவிய சந்தையில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளின் எதிர்கால தொழில்துறை தீர்மானங்களும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றன.,.

3. சமூக முன்னேற்றத்தால் மட்டும் பொருளாதார வளர்ச்சி நடக்குமா..?

• தமிழகத்தில் அதிகபட்ச தொழில் வளர்ச்சி இருக்கிறது, ஆனால் இது மட்டும் திராவிட மாடலால் தான் வந்தது என்று சொன்னால, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா வளர்ந்ததற்கு என்ன காரணம்..?

பெண்கள் கல்வி, சாதி எதிர்ப்பு போன்றவை சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஆனால, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தொழில், முதலீடு, தொழிலாளர் திறன் ஆகியவை இதில் எப்படி இணைக்கப்படுகின்றன?

இறுதியாக:

நீங்கள் சொல்வது தவறானது என நான் வாதிக்கவில்லை... திராவிட மாடல் ஒரு பங்கு வகிக்கிறது, ஆனால் அது மேலே நீங்கள் சிலாகித்து புளங்காகிதம் அடைந்திருப்பதுபோல் பொருளாதார முன்னேற்றத்துக்கான பெரிய ஒரு காரணம் அல்ல என்பதே என் வாதம்…

உங்கள் லாஜிக்கை நீட்டித்துப் பாருங்கள்:

• திராவிட மாடல் இல்லாத மாநிலங்களில் வளர்ச்சி எப்படி நடந்தது..?

• திராவிட மாடல் இருந்தாலே வளர்ச்சி நடந்துவிடுமா..? (அந்தக் காலத்தில் தமிழகத்தில் தொழில்துறை ஊக்குவிக்கப்படாதிருந்தால், தற்போது இருக்கும் வளர்ச்சி ஏற்பட்டிருக்குமா?)

• பொலிற்றிக்கல் ஸ்திரத்தன்மை இருந்தாலே வளர்ச்சி வந்துவிடுமா? (அதற்கு தென்னிந்திய மாநிலங்களில் எல்லாம் ஒரே மாதிரி வளர்ச்சி காணப்படவேண்டும் அல்லவா..?)

எனவே, வளர்ச்சி ஒரு தனி கொள்கையின் விளைவு அல்ல – பல காரணிகளின் கூட்டு. திராவிட மாடலும் ஒரு சிறு காரணியாக இருந்திருக்கலாம், ஆனால் அது மட்டுமே வளர்ச்சிக்கு காரணம் இல்ல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.