Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

வாழ்த்துகள் செம்பாட்டான். இனி செம்பாட்டானை நெருங்க முடியாது. செம்பாட்டான் துல்லியமான கணிப்புக்ளைச் செய்திருக்கிறார்.துணைமுதல்வர் சுவி ஐயாவுக்கும் வாழ்த்துகள்.நம்ம அன்புத்தம்பி பையனை நினைத்தால் ரொம்ப பரிதாபக இருக்கிறது. அவரைப்பார்த்து கொப்பியடித்து இடைக்கிடை மாற்றங்களைச் செயதவர்கள் நான் உட்பட பாஸ்மார்க் எடுக்கப் பையன் பெயில் மார்க் எடுத்திருப்பது மிகவும் சோகம். இந்த நிலைமையிலும் களத்தைக் கலகலப்பாக வைத்திருக்க எங்கள் பையனால்தான் முடியும்.

நான் தெரிவு செய்த‌ அணியின் இர‌ண்டு மூன்று தோல்விக்கு அணிக‌ளின் க‌ப்ட‌ன் மார் விட்ட‌ பிழை , ல‌க்னோ விளையாடின‌ முத‌லாவ‌து விளையாட்டில் ல‌க்னோ க‌ப்ட‌ன் 10வ‌து விக்கேட்ட‌ வ‌டிவாய் அவுட் ஆக்கி இருந்தால் 5ர‌ன்ஸ்சில் ல‌க்னோ வென்று இருக்கும்

இன்று சென்னை விளையாட்டில்

க‌ப்டன் தொட்டு தொட‌க்க‌ வீர‌ர்க‌ள் வ‌ரை ச‌ரியாக‌ விளையாட‌ வில்லை

நியுசிலாந் வீர‌ர் ம‌ற்றும் அப்கானிஸ்தான் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் த‌ங்க‌ட‌ க‌ட‌மையை சரியா செய்த‌வை..............ம‌ற்ற‌வை ப‌டு சுத‌ப்ப‌ல் அண்ணா..............

என‌க்கு இந்த‌ ஜ‌பிஎல் தொட‌க்க‌ம் ந‌ல்ல‌ மாதிரி அமைய‌ வில்லை

பாப்போம் போட்டி முடிவில் எத்த‌னையாவ‌து இட‌த்துக்கு வ‌ருகிறேன் என்று.........................

  • Replies 3.3k
  • Views 98.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

@வாத்தியார் சொன்னது போல நடக்கப் போகுதோ?

18 முட்டைக் கோப்பியா?

நடந்ததா இல்லையோ

😆

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

குரு...........அந்த‌ சிறுவ‌ன் போலி சாத்திரியார் இது தெரியாம‌ நீங்க‌ள் எப்ப‌டி என் ம‌ன‌சில் குரு என்ற‌ இட‌ம் பிடிச்சிங்க‌ள் என்று ச‌த்திய‌மாய் என‌க்கு தெரியாது

அவ‌ர் உண்மை சாத்திரி என்றால் இன் நேர‌ம் ப‌ல‌ர் கோடி ப‌ண‌த்தோட‌ இருந்து இருப்பின‌ம்

நான் என்ன‌ சொல்ல‌ வ‌ருகிறேன் என்று உங்க‌ளுக்கு புரிந்து இருக்கும்....................இன்னும் இர‌ண்டு கிழ‌மையில் NBA ஆர‌ம்ப‌ சுற்று முடிந்து விடும்...............போர‌ போக்கை பார்த்தால் Oklahoma City Thunder 2025 ச‌ம்பிய‌ன் ஆக‌ கூடும்

நீங்க‌ள் எந்த‌ அணி ச‌ம்பிய‌ன் ஆகும் என‌ நினைக்கிறீங்க‌ள்...............................

எல்லா சாத்திரங்களும், சாத்திரிமார்களும் பொய், புளுகு மூட்டைகள் என்ற அணி தான் என்னுடையது, பையன் சார்............... இவை ஒன்றிலும் அறவே எனக்கு நம்பிக்கை கிடையாது...... சும்மா பகிடிக்காக செம்பாட்டுச் சாத்திரியார் என்று எழுதியிருந்தேன், செம்பாட்டான் முன்னுக்கு நிற்கின்றபடியால்.........

Oklahoma City Thunder நல்ல அணி தான், இப்ப முன்னுக்கும் நிற்கின்றார்கள். ஆனால் அனுபவம் குறைந்தவர்கள். Lakers, Nuggets and Celtics நல்ல அனுபவம் உள்ள அணிகள். Lakers வென்றால் அதிக சந்தோசம்................. Oklahoma City Thunder வென்றால் சந்தோசம்...........🤣.

** உங்களால் நான் இப்பொழுது ஐபிஎல் பார்க்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.......❤️.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, வாத்தியார் said:

நீங்கள் கூறும் இந்த வீரர் சிறிலங்காவைச் சேர்ந்தவர் தானே

எனக்குப் பிடிக்கவில்லை 😅

அதுக்கை வேறை குட்டி மலிங்கா எண்டு ஒரு பெயர் 😇

ஓம் வாத்தி அண்ணா

அவ‌ர் இல‌ங்கை வீர‌ர் தான்

அவ‌ரை எல்லாரும் குட்டி ம‌லிங்கா என்று தான் அழைப்பின‌ம் அது என‌க்கும் ப‌ழ‌கி போச்சு , ல‌சித் ம‌லிங்கா போல் இவ‌ர் கிரிக்கேட்டில் சாதிக்க‌ மாட்டார் , ம‌லிங்காவின் இள‌மைக் கால‌ ப‌ந்து வீச்சை ம‌ற‌க்க‌ முடியாது..............2007உல‌க‌ கோப்பையில் 4ப‌ந்தில் 4தெப் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளை தொட‌ர்ந்து அவுட் ஆக்கின‌வ‌ர்...............அந்த‌ விளையாட்டில் இல‌ங்கை தோத்தாலும் , பின‌லில் அவுஸ்ரேலியா எதிர் இல‌ங்கை தான் பின‌லில் விளையாடினாவை

இல‌ங்கை விளையாடும் போது ம‌ழை வ‌ர‌ , ந‌டுவ‌ர் மார் ர‌ன்ஸ் அடிப்ப‌டையில் அவுஸ்ரேலியா வென்ற‌து என அறிவிச்ச‌வை

அப்ப‌ ஒன்றும் இன‌ அழிப்பு ந‌ட‌க்க‌ வில்லை தானே , முர‌ளித‌ர‌ன் அருன‌ல்ட் டில்சான் , போன்ர‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌வை....................

2009க்கு பிற‌க்கு இல‌ங்கை விளையாடின‌ ப‌ல‌ விளையாட்டு நான் பார்த்த‌து கிடையாது...............ஸ்கோரை ம‌ட்டும் பார்ப்ப‌தோடு ச‌ரி...................................

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

வாத்தியார் நானும் பக்கத்திலதான் நிக்கிறன் பார்க்கேல்லையோ .........

எங்கள் தலைவர் தங்கத் தலைவர் தானைத் தலைவர் 😂

யாழ் களத்தின் முடி சூடா மன்னர் சுவி மகா பாண்டிய குலோத்துங்கன் ❤️

சில காலம் துணை முதல்வர் பதவியை

தானே கேட்டு வாங்கியுள்ளார்.

இன்றைய முதல்வர் செம்பாட்டான் மக்களின் நலன்களுக்கு மதிப்பளிக்கின்றாரா என ஒட்டுப் பார்க்கும் வேலையில் இறங்கியுள்ளார் 😅

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரசோதரன் said:

எல்லா சாத்திரங்களும், சாத்திரிமார்களும் பொய், புளுகு மூட்டைகள் என்ற அணி தான் என்னுடையது, பையன் சார்............... இவை ஒன்றிலும் அறவே எனக்கு நம்பிக்கை கிடையாது...... சும்மா பகிடிக்காக செம்பாட்டுச் சாத்திரியார் என்று எழுதியிருந்தேன், செம்பாட்டான் முன்னுக்கு நிற்கின்றபடியால்.........

Oklahoma City Thunder நல்ல அணி தான், இப்ப முன்னுக்கும் நிற்கின்றார்கள். ஆனால் அனுபவம் குறைந்தவர்கள். Lakers, Nuggets and Celtics நல்ல அனுபவம் உள்ள அணிகள். Lakers வென்றால் அதிக சந்தோசம்................. Oklahoma City Thunder வென்றால் சந்தோசம்...........🤣.

** உங்களால் நான் இப்பொழுது ஐபிஎல் பார்க்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.......❤️.

Lakers வ‌ந்து Luka Doncic வாங்கி விட்டின‌ம் , நீங்க‌ள் போன‌ வ‌ருட‌ம் இவ‌ரின் விளையாட்டை பார்த்து விய‌ந்த‌தாக‌ எழுதி இருந்தீங்க‌ள்..............என‌க்கும் Lakers வெல்ல‌னும் என்று விருப்ப‌ம் , கார‌ண‌ம் Lebron Jamesக்கு இது தான் க‌ட‌சி NBA விளையாட்டு அடுத்த‌ சீச‌னில் விளையாட‌ வாய்ப்பு மிக‌ குறைவு

வெற்றியுட‌ன் ஓய்வு பெற‌ட்டும்

ஆனால் வெற்றிக்காக‌ க‌டின‌மாய் இவ‌ர்க‌ள் ஒருங்கினைந்து விளையாட‌னும்🙏👍💪....................................................

Edited by வீரப் பையன்26

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, வீரப் பையன்26 said:

ஓம் வாத்தி அண்ணா

அவ‌ர் இல‌ங்கை வீர‌ர் தான்

அவ‌ரை எல்லாரும் குட்டி ம‌லிங்கா என்று தான் அழைப்பின‌ம் அது என‌க்கும் ப‌ழ‌கி போச்சு

தகவலுக்கு நன்றி வீரப்பையன்

எதுவாக இருந்தாலும் சென்னை இன்று வேண்டும் என்றே தோல்வியை ஏற்றுக் கொண்டதா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை

சிலர் இதை நாடி பிடித்துப் பார்ப்பது என்று சொல்வார்கள்.

டோனி கோலி டீல் ஏதும் இருக்கவும் வாய்ப்புள்ளது 😉

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, வாத்தியார் said:

தகவலுக்கு நன்றி வீரப்பையன்

எதுவாக இருந்தாலும் சென்னை இன்று வேண்டும் என்றே தோல்வியை ஏற்றுக் கொண்டதா என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை

சிலர் இதை நாடி பிடித்துப் பார்ப்பது என்று சொல்வார்கள்.

டோனி கோலி டீல் ஏதும் இருக்கவும் வாய்ப்புள்ளது 😉

உவ‌ங்க‌ளை ந‌ம்ப‌ முடியாது ஏற்க்க‌ன‌வே சூதாட்ட‌த்தால் இர‌ண்டு வ‌ருட‌ம் சென்னை அணிக்கு த‌டை விதிச்ச‌வை................சென்னையின் இன்றையான் தோல்விக்கு இந்திய‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் ,

( தீப‌க் கோடா ) என்ர‌ வ‌ட‌ நாட்டு வீர‌ர் போன‌ ஜ‌பிஎல்ல‌ ல‌க்னோ அணிக்காக‌ ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌ வீர‌ரை , சென்னை ஏல‌த்தில் எடுத்து அவ‌ரை விளையாட‌ விட‌ , விளையாடின‌ இர‌ண்டு மைச்சிலும் அவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் வெறும் 7ர‌ன்ஸ்☹️...................

இந்த‌ தீப‌க் கோடாவை விட‌ த‌மிழ் நாட்டில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் வேண்டாம‌☹️ , வ‌ட‌ நாட்டானை வேண்டி தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ சுத‌ப்ப‌ விளையாட‌ விடுகின‌ம் ஜ‌பிஎல்ல‌😁

அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தெரியும் த‌மிழ் நாட்டில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் என்று..................ஆண்ட‌வ‌ரின் ம‌ன‌ சாட்சிக்கே இதை விட்டு விடுகிறேன் வாத்தி அண்ணா..................................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு வும்ரா விளையாடினால் மும்பை அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்

வும்ரா நாளை விளையாடாம‌ விட்டால் அது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமையும்.................

முத‌ல் விளையாட்டில் வும்ரா விளையாட‌ வில்லை.........................................

நாளைய விளையாட்டில் alvayan எனக்கு எதிர் அணியிலும்😅

செம்பாட்டான் என்னுடைய அணியிலும் இருப்பதால்.....😂

முடிவு யாரும் எதிர்பார்க்காத முடிவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனப் பரவலாகப் பேசப்படுகின்றது😁

நோ ரிசல்ட் என்கின்றார்களே

அதுவும் ஒரு ரிசல்ட் தானே 😇

இது மட்டும் எனக்கு இன்னும் புரியவில்லை 😛

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

வாத்தியார் அய்யா ...ஆளைவிட்டுடுங்க சாமி இனி இந்த விளையாட்டு திரிப்பக்கமே வரமாட்டேன்...உங்க கூட்டணி எப்பவும் தொடரட்டும்..😁

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாத்தியார் said:

நான் அங்கேயெல்லாம் செல்லவில்லை

செம்பாட்டானின் சாத்திரம் இப்போது உச்ச நிலையில் இருப்பதாக நினைத்தேன் 😂 எல்லாமே இதுவரை சரியான கணிப்பாக இருந்தது

மீண்டும் நடந்து விட்டது

நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் என் கண்முன்னே அப்பிடியே தெரிகிறது. ஏற்றி விட்டு தலைகீழாக விழுவது. பயம்மா இருக்கு.

6 hours ago, alvayan said:

செம்பாட்டான் முதல்வர் ...கருணாநிதிபோல் அசையாமல் இருக்கிறார்...அவருக்கும்

சுவி சார்.பிரதிமுதல்வர்...ரணில்போல் அதிர்ஸ்டத்தில் வந்தவர் (கோபம் வேண்டாமே ) அவருக்கும் எனது வாழ்த்துக்கள்

நீங்க வேற. உண்ணாவிரதம் இருக்காதது மட்டும்தான் குறை இல்லையா.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

வாழ்த்துகள் செம்பாட்டான். இனி செம்பாட்டானை நெருங்க முடியாது. செம்பாட்டான் துல்லியமான கணிப்புக்ளைச் செய்திருக்கிறார்.துணைமுதல்வர் சுவி ஐயாவுக்கும் வாழ்த்துகள்.நம்ம அன்புத்தம்பி பையனை நினைத்தால் ரொம்ப பரிதாபக இருக்கிறது. அவரைப்பார்த்து கொப்பியடித்து இடைக்கிடை மாற்றங்களைச் செயதவர்கள் நான் உட்பட பாஸ்மார்க் எடுக்கப் பையன் பெயில் மார்க் எடுத்திருப்பது மிகவும் சோகம். இந்த நிலைமையிலும் களத்தைக் கலகலப்பாக வைத்திருக்க எங்கள் பையனால்தான் முடியும்.

பார்ப்போம் இன்னும் எத்தனை நாட்களுக்கென்று. புவியீர்ப்பத் தத்துவத்தின் படி, மேலே போன எல்லாம் கீழே வந்துதான் ஆகவேண்டும். என்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வாத்தியார் said:

நாளைய விளையாட்டில் alvayan எனக்கு எதிர் அணியிலும்😅

செம்பாட்டான் என்னுடைய அணியிலும் இருப்பதால்.....😂

முடிவு யாரும் எதிர்பார்க்காத முடிவாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனப் பரவலாகப் பேசப்படுகின்றது😁

நோ ரிசல்ட் என்கின்றார்களே

அதுவும் ஒரு ரிசல்ட் தானே 😇

இது மட்டும் எனக்கு இன்னும் புரியவில்லை 😛

வாங்க சேர்ந்தே போவம். மழையால் குழம்பினால் No Result. களத்தில் ஒருவரும் அதைத் தெரிவுசெய்யவில்லை. நம்நிலையில் மாற்றம் வராது.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, வீரப் பையன்26 said:

நாளைக்கு வும்ரா விளையாடினால் மும்பை அணிக்கு கூடுத‌ல் ப‌ல‌ம்

வும்ரா நாளை விளையாடாம‌ விட்டால் அது குஜ‌ராத்துக்கு சாத‌க‌மாய் அமையும்.................

முத‌ல் விளையாட்டில் வும்ரா விளையாட‌ வில்லை.........................................

Bumarah இன்னும் சில போட்டிகளில் விளையாடமாட்டார். மும்பாய் இன்னும் சிலவேளை 2,3 போட்டிகளாவது பூம்ரா இல்லாமல் விளையாடவேண்டும். ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் முன்பு இணையம் ஒன்றில் ,பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் விளையாடுவார் என வாசித்திருந்தேன்

ஆனால் Hardik Pandiya தடை நீங்கி இன்று விளையாடுவார். அவர்தான் அணித்தலைவர்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

ஓம் வாத்தி அண்ணா

அவ‌ர் இல‌ங்கை வீர‌ர் தான்

அவ‌ரை எல்லாரும் குட்டி ம‌லிங்கா என்று தான் அழைப்பின‌ம் அது என‌க்கும் ப‌ழ‌கி போச்சு , ல‌சித் ம‌லிங்கா போல் இவ‌ர் கிரிக்கேட்டில் சாதிக்க‌ மாட்டார் , ம‌லிங்காவின் இள‌மைக் கால‌ ப‌ந்து வீச்சை ம‌ற‌க்க‌ முடியாது..............2007உல‌க‌ கோப்பையில் 4ப‌ந்தில் 4தெப் ஆபிரிக்கா வீர‌ர்க‌ளை தொட‌ர்ந்து அவுட் ஆக்கின‌வ‌ர்...............அந்த‌ விளையாட்டில் இல‌ங்கை தோத்தாலும் , பின‌லில் அவுஸ்ரேலியா எதிர் இல‌ங்கை தான் பின‌லில் விளையாடினாவை

இல‌ங்கை விளையாடும் போது ம‌ழை வ‌ர‌ , ந‌டுவ‌ர் மார் ர‌ன்ஸ் அடிப்ப‌டையில் அவுஸ்ரேலியா வென்ற‌து என அறிவிச்ச‌வை

2007 இறுதிபோட்டி நடைபெறும் போதுதான் விடுதலைப்புலிகள் கொழும்பில் வான் வெளித் தாக்குதல் நடத்தினார்கள்.

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, வீரப் பையன்26 said:

அப்ப‌ ஒன்றும் இன‌ அழிப்பு ந‌ட‌க்க‌ வில்லை தானே , முர‌ளித‌ர‌ன் அருன‌ல்ட் டில்சான் , போன்ர‌ த‌மிழ‌ர்க‌ள் அந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாடின‌வை....................

என்ன சொல்கிறீர்கள் 1957, 1977,1981, 1983 கறுப்பு யூலை என இன அழிப்பு செய்யவில்லையா?.

35 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சத்துருக்கொண்டான் இனப்படுகொலை கேட்டாலே உடல் நடுங்கும். செம்மணி புதைகுழி மறந்து விட்டீர்களா?

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்

செம்பாட்டானின் சாத்திஅக்தினை பற்றி கூர்பவர்கள் எனக்கு அதில் பாதி கிரெடிட் குடுக்கவேணும். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

( தீப‌க் கோடா ) என்ர‌ வ‌ட‌ நாட்டு வீர‌ர் போன‌ ஜ‌பிஎல்ல‌ ல‌க்னோ அணிக்காக‌ ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌ வீர‌ரை , சென்னை ஏல‌த்தில் எடுத்து அவ‌ரை விளையாட‌ விட‌ , விளையாடின‌ இர‌ண்டு மைச்சிலும் அவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் வெறும் 7ர‌ன்ஸ்☹️...................

தமிழ் நாட்டுக்காரர் விஜய் சுந்தர் இம்முறை சென்னை அணியில் இருக்கிறார் . அவர் திலக் கோடாவைவுக்கு பதிலாக விளையாடலாம்.

இதைவிட நியூசிலாந்து டெவன் கொன்வே சாம்கரனுக்கு பதிலாக விளையாடலாம். திலக் கோடாவுக்கு பதிலாக இந்தியா வேகப்பந்து வீச்சாளார்களில் ( முகேஷ் சவுத்திரி, குர்ஜாப்நீத் சிங், கமலேஷ் நாகர்கோடி) ஒருவரை விளையாடச்செய்யலாம். ஆனால் இதனால் ஒரு துடுப்பாட்டவீரர் குறையும் என்பது பிரச்சனை.

நேற்றைய போட்டியில் தோற்றதற்கு ஒழுங்காக 2,3 hatchகள் பிடிக்காததும் ஒரு காரணம். நாளை ராஜஸ்தானுடன் சென்னை விளையாடுகிறது. இந்த மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு மொயின் அலியும், வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாக விளையாடினார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

எல்லா சாத்திரங்களும், சாத்திரிமார்களும் பொய், புளுகு மூட்டைகள் என்ற அணி தான் என்னுடையது, பையன் சார்............... இவை ஒன்றிலும் அறவே எனக்கு நம்பிக்கை கிடையாது...... சும்மா பகிடிக்காக செம்பாட்டுச் சாத்திரியார் என்று எழுதியிருந்தேன், செம்பாட்டான் முன்னுக்கு நிற்கின்றபடியால்.........

Oklahoma City Thunder நல்ல அணி தான், இப்ப முன்னுக்கும் நிற்கின்றார்கள். ஆனால் அனுபவம் குறைந்தவர்கள். Lakers, Nuggets and Celtics நல்ல அனுபவம் உள்ள அணிகள். Lakers வென்றால் அதிக சந்தோசம்................. Oklahoma City Thunder வென்றால் சந்தோசம்...........🤣.

** உங்களால் நான் இப்பொழுது ஐபிஎல் பார்க்க ஆரம்பித்துள்ளேன். மிக்க நன்றி.......❤️.

குருட்டு சாத்திரி மாதிரிதான். எட்டுப் போட்டிகள்தான் முடிஞ்சிருக்கு. இன்னும் 62 போட்டி இருக்கு. இந்த குருட்டு சாத்திரம் எவ்வளவு காலத்துக்குப் போகும் என்று பார்ப்பம்.

இந்தக் களத்தினாற்தான், நானும் இப்போது ஆர்வமாக ஜபில் பார்க்கிறேன்.

58 minutes ago, vasee said:

செம்பாட்டானின் சாத்திஅக்தினை பற்றி கூர்பவர்கள் எனக்கு அதில் பாதி கிரெடிட் குடுக்கவேணும். 🤣

உங்களுக்கு இல்லாததா வசி. எடுத்துக்கங்க. எல்லாம் நமதே.

4 minutes ago, கந்தப்பு said:

தமிழ் நாட்டுக்காரர் விஜய் சுந்தர் இம்முறை சென்னை அணியில் இருக்கிறார் . அவர் திலக் கோடாவைவுக்கு பதிலாக விளையாடலாம்.

இதைவிட நியூசிலாந்து டெவன் கொன்வே சாம்கரனுக்கு பதிலாக விளையாடலாம். திலக் கோடாவுக்கு பதிலாக இந்தியா வேகப்பந்து வீச்சாளார்களில் ( முகேஷ் சவுத்திரி, குர்ஜாப்நீத் சிங், கமலேஷ் நாகர்கோடி) ஒருவரை விளையாடச்செய்யலாம். ஆனால் இதனால் ஒரு துடுப்பாட்டவீரர் குறையும் என்பது பிரச்சனை.

நேற்றைய போட்டியில் தோற்றதற்கு ஒழுங்காக 2,3 hatchகள் பிடிக்காததும் ஒரு காரணம். நாளை ராஜஸ்தானுடன் சென்னை விளையாடுகிறது. இந்த மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு மொயின் அலியும், வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாக விளையாடினார்கள்

அதுதான் உண்மையாக நாம் பார்த்தது. சென்னை எப்போதும் தளக்கடுப்பிலும் பந்தை ஏந்துவதிலும் சிறப்பாகச் செயல்படுவர். நேற்று அதில் கோட்டைவிட்டதால் RCB அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். தனிப்பட்ட வீரர்களைக் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, வீரப் பையன்26 said:

உவ‌ங்க‌ளை ந‌ம்ப‌ முடியாது ஏற்க்க‌ன‌வே சூதாட்ட‌த்தால் இர‌ண்டு வ‌ருட‌ம் சென்னை அணிக்கு த‌டை விதிச்ச‌வை................சென்னையின் இன்றையான் தோல்விக்கு இந்திய‌ வீர‌ர்க‌ள் தான் கார‌ண‌ம் ,

( தீப‌க் கோடா ) என்ர‌ வ‌ட‌ நாட்டு வீர‌ர் போன‌ ஜ‌பிஎல்ல‌ ல‌க்னோ அணிக்காக‌ ப‌டு கேவ‌ல‌மாய் விளையாடின‌ வீர‌ரை , சென்னை ஏல‌த்தில் எடுத்து அவ‌ரை விளையாட‌ விட‌ , விளையாடின‌ இர‌ண்டு மைச்சிலும் அவ‌ர் அடிச்ச‌ ர‌ன்ஸ் வெறும் 7ர‌ன்ஸ்☹️...................

இந்த‌ தீப‌க் கோடாவை விட‌ த‌மிழ் நாட்டில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ளை ஏல‌த்தில் வேண்டாம‌☹️ , வ‌ட‌ நாட்டானை வேண்டி தொட‌ர்ந்து சுத‌ப்ப‌ சுத‌ப்ப‌ விளையாட‌ விடுகின‌ம் ஜ‌பிஎல்ல‌😁

அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தெரியும் த‌மிழ் நாட்டில் எத்த‌னையோ திற‌மையான‌ வீர‌ர்க‌ள் இருக்கின‌ம் என்று..................ஆண்ட‌வ‌ரின் ம‌ன‌ சாட்சிக்கே இதை விட்டு விடுகிறேன் வாத்தி அண்ணா..................................

அப்பிடிச் சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. விளையாட்டில் எல்லாரும் வீரர்களே. அவர்களின் திறமையால்த்தான் அவர்கள் அணியில் இருக்கிறார்கள். ஏலத்தில் எடுக்கும்போது அவர்களின் திறமை மற்றும் பெறுமதியை வைத்து, அவர்கள் எப்படி அணியில் பொருந்திப் போவார்கள் என்றுதான் பார்ப்பார்கள்.

வடக்கன் என்ற சொற்பதம் என்னைப் பொறுத்தவரை மிகவும் தவறானது. இவ்வாறு சொல்வதிலும், இவ்வாறு சொல்லப்படும் இடத்தில் இருப்பதற்கும், எனக்கு உடன்பாடில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, செம்பாட்டான் said:

அதுதான் உண்மையாக நாம் பார்த்தது. சென்னை எப்போதும் தளக்கடுப்பிலும் பந்தை ஏந்துவதிலும் சிறப்பாகச் செயல்படுவர். நேற்று அதில் கோட்டைவிட்டதால் RCB அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். தனிப்பட்ட வீரர்களைக் குறை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

நீங்கள் சொல்வது சரி

வாழ்த்துகள் செம்பாட்டன். தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறீர்கள்.

நானும் ஒரு செம்பாட்டான்தான். யாழ் மாவட்டத்தில் வலிகாமத்தில் சில ஊர்களில் செம்பாட்டு மண்தான் இருக்கும். அப்படியான ஒரு ஊரை பிறப்பிடமாக கொண்டவன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

2007 இறுதிபோட்டி நடைபெறும் போதுதான் விடுதலைப்புலிகள் கொழும்பில் வான் வெளித் தாக்குதல் நடத்தினார்கள்.

பின‌ல் முடிந்து அடுத்த‌ நாள் வான் புலிக‌ள் கொழும்பு க‌ட்டுநாய‌க்கா விமானத் த‌ள‌ம் மீது குண்டு போட்டவை , அத‌னால் இல‌ங்கை வீர‌ர்க‌ள் நாடு திரும்புவ‌தில் சிக்க‌ல் ஏற்ப‌ட்ட‌து..........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கந்தப்பு said:

என்ன சொல்கிறீர்கள் 1957, 1977,1981, 1983 கறுப்பு யூலை என இன அழிப்பு செய்யவில்லையா?.

35 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற சத்துருக்கொண்டான் இனப்படுகொலை கேட்டாலே உடல் நடுங்கும். செம்மணி புதைகுழி மறந்து விட்டீர்களா?

1983 க‌ருப்பு யூலை ப‌ற்றி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன் , ம‌ற்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நீங்க‌ள் எழுதி தான் தெரிந்து கொண்டேன் க‌ந்த‌ப்பு அண்ண‌.................................

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, கந்தப்பு said:

தமிழ் நாட்டுக்காரர் விஜய் சுந்தர் இம்முறை சென்னை அணியில் இருக்கிறார் . அவர் திலக் கோடாவைவுக்கு பதிலாக விளையாடலாம்.

இதைவிட நியூசிலாந்து டெவன் கொன்வே சாம்கரனுக்கு பதிலாக விளையாடலாம். திலக் கோடாவுக்கு பதிலாக இந்தியா வேகப்பந்து வீச்சாளார்களில் ( முகேஷ் சவுத்திரி, குர்ஜாப்நீத் சிங், கமலேஷ் நாகர்கோடி) ஒருவரை விளையாடச்செய்யலாம். ஆனால் இதனால் ஒரு துடுப்பாட்டவீரர் குறையும் என்பது பிரச்சனை.

நேற்றைய போட்டியில் தோற்றதற்கு ஒழுங்காக 2,3 hatchகள் பிடிக்காததும் ஒரு காரணம். நாளை ராஜஸ்தானுடன் சென்னை விளையாடுகிறது. இந்த மைதானத்தில்தான் சில நாட்களுக்கு முன்பு மொயின் அலியும், வருண் சக்கரவர்த்தியும் சிறப்பாக விளையாடினார்கள்

தீப‌க் கோடா , ல‌க்னோ அணியில் சுத‌ப்ப‌ அவ‌ரை சில‌ விளையாட்டு விளையாட‌ விட்டுவிட்டு கூப்பில‌ உக்கார‌ வைச்ச‌வை

அப்ப‌டி ப‌ட்ட‌ வீர‌ரை சென்னை ஏல‌த்தில் எடுத்த‌து ஆச்ச‌ரிய‌ம்

த‌மிழ‌க‌ வீர‌ரை ஏல‌த்தில் எடுத்தின‌ம் , அஸ்வினை தவிற‌ ம‌ற்ற‌ வீர‌ருக்கு இன்னும் விளையாடும் வாய்ப்பு கொடுக்க‌ப் ப‌ட‌ வில்லை....................அடுத்த‌ விளையாட்டிலும் தீப‌க் கோடாவை விளையாட‌ விட்டால் , ஏதோ உள் குத்து இருக்கு என்று அர்த்த‌ம்......................

ல‌க்னோ அணி நிக்ல‌ஸ் பூரான‌ த‌க்க‌ வைக்க‌ கார‌ன‌ம் , பூரான் 20ஓவ‌ர் விளையாட்டில் ச‌ச்திக்க‌ கூடிய‌வ‌ர் , தீப‌க் கோடாவை க‌ல‌ட்டி விட‌க் கார‌ண‌ம் இவ‌ர் அணிக்கு தேவை இல்லா ஆணி...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, கந்தப்பு said:

நீங்கள் சொல்வது சரி

வாழ்த்துகள் செம்பாட்டன். தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறீர்கள்.

நானும் ஒரு செம்பாட்டான்தான். யாழ் மாவட்டத்தில் வலிகாமத்தில் சில ஊர்களில் செம்பாட்டு மண்தான் இருக்கும். அப்படியான ஒரு ஊரை பிறப்பிடமாக கொண்டவன்

என்னுடைய அட்ரஸே செம்பாடுதான்! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.