Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

அது என்ன மாயமோ தெரியவில்லை.நான் எந்த குழிவைத் தெரிவு செய்கிறோனோ நந்தனும் வந்து கும்மி அடிக்கிறார்.

சரி சரி. புரியுது. பார்ப்போம் எவ்வளவு நாளைக்கு என்று. கொஞ்சநாள் சுவி நந்தன். இனி நந்தன் புலவர்.

தொடர்ந்து பயணிப்போம்.

Edited by செம்பாட்டான்

  • Replies 3.3k
  • Views 98.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • வாத்தியார்
    வாத்தியார்

    பிஸ்கட் தருவார்கள் என்று பள்ளிக்குச் சென்றோம் 😅 பலகாரம் தருவார்கள் எனது திருமண வீடு செல்வோம் 🤣 கோவிலுக்குச் சென்றால் சுண்டல் கிடைக்கும் 😂 இந்தத் திரியில் புள்ளி கிடைக்கும் என வந்தோம் 😛 ஆனால் இப்போது

  • கிருபன்
    கிருபன்

    யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2025 இறுதி நிலைகள்: தொடர்ந்து பல போட்டிகளிலும் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @நந்தன் க்கு வாழ்த்துக்கள்! இரண்டாவது இடத்தில் நிற்கும் @ரசோதரன் க்கும், மூன்றாவது

  • கிருபன்
    கிருபன்

    நேற்றுவரை நடந்து முடிந்த மூன்று போட்டிகளினதும் யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள்: 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதி

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கிழமை "Revenge Week" என்று star sports உருட்டிக் கொண்டு இருக்கிறான். அனேகமான அணிகள் இரண்டாவது தடவையாக மோதுகின்றன. தோற்றவர் வெல்வாரா என்று உருட்டல்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, செம்பாட்டான் said:

இந்தக் கிழமை "Recnge Week" என்று star sports உருட்டிக் கொண்டு இருக்கிறான். அனேகமான அணிகள் இரண்டாவது தடவையாக மோதுகின்றன. தோற்றவர் வெல்லுவாரா என்று உருட்டல்.

சென்னை அணி, கொல்கொத்தா அணி என இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் தெரிவு செய்திருந்தேன் சென்னை அணி நேற்றோடு போயாச்சு இன்று கொல்கத்தா.

காணொளி

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

சென்னை அணி, கொல்கொத்தா அணி என இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் தெரிவு செய்திருந்தேன் சென்னை அணி நேற்றோடு போயாச்சு இன்று கொல்கத்தா.

காணொளி

அட அது வேறையா. கொல்கத்தா நாளையோட சரி என்றுதான் நானும் நினைக்கிறேன்.

போய்வா பாட்டை திரும்பவும் ஒலிக்கவிடுவம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

சென்னை அணி, கொல்கொத்தா அணி என இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் தெரிவு செய்திருந்தேன் சென்னை அணி நேற்றோடு போயாச்சு இன்று கொல்கத்தா.

காணொளி

நான் KKR கப் அடிக்கும் என்று கணித்திருந்தேன்😫

ஆனால் CSK கப் தூக்கும் என்று ஒரு படையே கணித்திருக்கின்றது😝

  • கருத்துக்கள உறவுகள்
Just now, கிருபன் said:

நான் KKR கப் அடிக்கும் என்று கணித்திருந்தேன்😫

ஆனால் CSK கப் தூக்கும் என்று ஒரு படையே கணித்திருக்கின்றது😝

சென்னை என்ற பெயரக்கேட்டாலே சும்மா அதிருமில்ல. நம்ம பாசம் அப்பிடி. ஆனா, இப்போ இங்கே சொல்லப்படும் விடயங்களைக் கேட்டால்! இதுதான் அணி என்று தெரிந்துகொண்டு தெரிவு செய்யவில்லை போல்தான் தெரியுது. அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பாடம் எடுக்கிறம். பிறகு....

பொட்டு வைச்ச தங்க குடம்

ஊருக்கு நீ மகுடம்

நாங்க தொட்டுத்தொட்டு

இழுத்து வரும் ஜோரான தங்கரதம்

அட நீ தங்கக்கட்டி

சிங்கக்குட்டி

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, கிருபன் said:

நான் KKR கப் அடிக்கும் என்று கணித்திருந்தேன்😫

ஆனால் CSK கப் தூக்கும் என்று ஒரு படையே கணித்திருக்கின்றது😝

அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி.🤣

46 minutes ago, செம்பாட்டான் said:

அட அது வேறையா. கொல்கத்தா நாளையோட சரி என்றுதான் நானும் நினைக்கிறேன்.

போய்வா பாட்டை திரும்பவும் ஒலிக்கவிடுவம்.

Pitch and conditions: The Eden Gardens mystery

It is going to be hot and humid in Kolkata, where teams winning the toss have elected to chase in all three games this season with mixed results. Royal Challengers Bengaluru (RCB) restricted KKR to 174 and won, but the other two games featured successful defences of 200 totals.

இந்த ஆடுகளம் கொல்கத்தாவின் ஆடுகளம், சுழல் பந்து வீச்சிற்கு சாதகமான ஆடுகளம், குறைந்தது 200 ஓட்டங்களாவது எடுத்தாக வேண்டும் என கூறப்படுகிறது, இந்த ஆடுகளம் கொல்கத்தாவிற்கு சாதகம் அதிகம் என கூறப்பட்டாலும் ஏற்கனேவே வெளியே போவதற்கு துண்டு போட்டு வைத்திருக்கும் அணியுடன் இன்று கொல்கத்தாவும் இணைந்து கொள்ளும் என கருதுகிறேன்.

இந்த போட்டியில் கொல்கத்தாவே வெல்லும் என கிரிக்கட் வல்லுனர்கள் கணித்திருக்கிறார்கள், ஆனால் கொல்கத்தா அணியின் துடுப்பாட்டம் அதன் பலவீனமாக தொடர்கிறது, மறு வளமாக குஜராத் அணி ஒரு சமநிலையான அணியாக காணப்படுகிறது, குஜராத் அணியே வெல்லுமென கருதுகிறேன், இன்றைய போட்டியில் கொல்கத்தா தோற்றால் அதன் அரையிறுதி வாய்ப்பு ஓரளவிற்கு முடிவிற்குள் வந்துவிடும் என கருதுகிறேன்.

இந்த போட்டி கொல்கத்தாவிற்கான வழியனுப்பும் போட்டி என்பதால் போட்டி முடிவில் பாட்டை ஒலிக்கவிடலாம் (சென்னை அணி போலில்லாமல் ஒரு சின்ன நம்பிக்கை கொல்கத்தாவில் இருக்கிறது இன்றைய போட்டியினை வெல்வார்கள் என).

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, நந்தன் said:

புலவர் பின்தொடர்வதால் கவலையில்லை 😅

ஓகோ! அப்ப நாங்க பின்தொடரலயோ அண்ணை?!

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஏராளன் said:

ஓகோ! அப்ப நாங்க பின்தொடரலயோ அண்ணை?!

சபாஸ்... சரியான கேள்வி. விடக்கூடாது. பிடிக்கிறம் சீக்கிரம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி

அடியேனும் அதில் ஒருவன்.சென்னையின் திறமைக்காக தெரிவு செய்யவில்லை.சென்னை அணி நம்ம தமிழ்நாட்டு அணி என்ற பாசம் தான்.ஆனால் சென்னை அணியில் அஸ்வினைத் தவிர வேறு தமிழக வீரர்கள் இல்லை.சென்னை அணியை முற்றாக மாற்றவேண்டும் .குறிப்பாக தோனியைத் துரத்த வேண்டும்.சென்னை ரசிகர்களுக்கு வெற்றி முக்கியமல்ல.தோனி வந்து 4 சிக்ஸர் விளாசவேண்டும்.இது கிரிக்கட் சூதாட்டம் போல் இருக்கிறது.அவருக்கு சிக்ஸர் அடிப்பதற்கு ஏற்ற மாதிரி இலகுவான பந்துகளைப் போடுகிறாரகள்.இந்திய கிரிக்கட் வாரியத்திற்கு ரசிகர்கள் பெருமளவில் ரிக்கற் வாங்கி வந்து மைதானத்தில் விளையாட்டைப் பார்க்க வேண்டும்.அதற்கு தோனி வேண்டும்.தமிழக முட்டாள் ரசிகர்களும் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, புலவர் said:

விஜய் சங்கர் திருநெல்வேலிகாரர். ஆண்ட்ரே சித்தார்த்தும் தமிழ் நாட்டுக்காரர்.

3 hours ago, கிருபன் said:

நான் KKR கப் அடிக்கும் என்று கணித்திருந்தேன்😫

ஆனால் CSK கப் தூக்கும் என்று ஒரு படையே கணித்திருக்கின்றது😝

சென்னை, கொல்கத்தா என்று தெரிவு செய்திருக்கிறீர்கள். SRH இனை தெரிவு செய்து மோசம் போனேன் 😄

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, vasee said:

சென்னை அணி, கொல்கொத்தா அணி என இரண்டு அணிகள் அரை இறுதிக்கு தெரிவாகும் அணிகளில் தெரிவு செய்திருந்தேன் சென்னை அணி நேற்றோடு போயாச்சு இன்று கொல்கத்தா.

காணொளி

இன்னும் முற்று முழுதாக போகவில்லை. மிகுதி 6 போட்டியில் வென்றால் சென்னை 8 போட்டிகளில் வென்றதாகி விடும். சென்ற வருடம் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு சென்று விட்டது . சென்ற வருடம் முதல் 8 போட்டியில் பெங்களூரு அணி ஒன்று மட்டுமே வென்றது. மிகுதி 6 போட்டிகளும் வென்று அடுத்த சுற்றுக்கு சென்றது

ஆனால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 8 போட்டிகளில் இம்முறை 2 போட்டிகளில் வென்றன . கொல்கத்தா 7 போட்டியில் 3 வென்று இருக்கிறது. இன்னும் ஒரு அணியும் இதுவரை அடுத்த சுற்றுக்கோ செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

492144913_577516052026321_18941074775781

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ஆர் . சி .பி யின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறதைப் பார்த்தால் புரியும் ........ ! 😍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, vasee said:

நான் KKR கப் அடிக்கும் என்று கணித்திருந்தேன்😫

ஆனால் CSK கப் தூக்கும் என்று ஒரு படையே கணித்திருக்கின்றது😝

அந்த பெரும் படையில் நானும் ஒரு துளி.🤣

  7 hours ago, செம்பாட்டான் said:

அட அது வேறையா. கொல்கத்தா நாளையோட சரி என்றுதான் நானும் நினைக்கிறேன்.

போய்வா பாட்டை திரும்பவும் ஒலிக்கவிடுவம்.

துளி துளியாக கடலே உள்ளது.

5 hours ago, புலவர் said:

ஆனால் சென்னை அணியில் அஸ்வினைத் தவிர வேறு தமிழக வீரர்கள் இல்லை

விஜய் சங்கர் ஆடுகிறாரே?

5 hours ago, செம்பாட்டான் said:

ஓகோ! அப்ப நாங்க பின்தொடரலயோ அண்ணை?!

சபாஸ்... சரியான கேள்வி. விடக்கூடாது. பிடிக்கிறம் சீக்கிரம்.

ஒரு கையால வாழ்த்தினால்

மறு கையால இழுத்து விழுத்தும் அலுவலைப் பார்க்க வேண்டும்.

தமிழேன்டா.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

492144913_577516052026321_18941074775781

இனிய காலை வணக்கம் அனைவருக்கும் . ......... ஆர் . சி .பி யின் எதிர்காலம் சிறப்பாக இருக்கிறதைப் பார்த்தால் புரியும் ........ ! 😍

பிரித்தி ஜிந்தாவுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் சுவியாரே, வணக்கம். உங்கள் படங்கள் சொல்லும் கதை.

31 minutes ago, ஈழப்பிரியன் said:

ஒரு கையால வாழ்த்தினால்

மறு கையால இழுத்து விழுத்தும் அலுவலைப் பார்க்க வேண்டும்.

தமிழேன்டா.

ஓ..... 😁

4 hours ago, கந்தப்பு said:

இன்னும் முற்று முழுதாக போகவில்லை. மிகுதி 6 போட்டியில் வென்றால் சென்னை 8 போட்டிகளில் வென்றதாகி விடும். சென்ற வருடம் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு சென்று விட்டது . சென்ற வருடம் முதல் 8 போட்டியில் பெங்களூரு அணி ஒன்று மட்டுமே வென்றது. மிகுதி 6 போட்டிகளும் வென்று அடுத்த சுற்றுக்கு சென்றது

ஆனால் சென்னை, ராஜஸ்தான் அணிகள் 8 போட்டிகளில் இம்முறை 2 போட்டிகளில் வென்றன . கொல்கத்தா 7 போட்டியில் 3 வென்று இருக்கிறது. இன்னும் ஒரு அணியும் இதுவரை அடுத்த சுற்றுக்கோ செல்வது உறுதிப்படுத்தப்படவில்லை.

நீங்கள் எப்பிடித்தான் கணக்குப் போட்டாலும்.... வாய்ப்பில்லை இம்முறை. அடுத்த ஏலம் எப்போ.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கந்தப்பு said:

சென்னை, கொல்கத்தா என்று தெரிவு செய்திருக்கிறீர்கள். SRH இனை தெரிவு செய்து மோசம் போனேன் 😄

அட... நீங்களுமா. எல்லாப் பெரிய கையும் கீழையா. ஜபிலில் பழம் தின்று கொட்டை போட்ட எல்லாரும் இப்பிடி தெரிவு செய்திருக்கினம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கந்தப்பு said:

இன்னும் முற்று முழுதாக போகவில்லை. மிகுதி 6 போட்டியில் வென்றால் சென்னை 8 போட்டிகளில் வென்றதாகி விடும். சென்ற வருடம் பெங்களூர் அணி 7 போட்டிகளில் வென்று அடுத்த சுற்றுக்கு சென்று விட்டது . சென்ற வருடம் முதல் 8 போட்டியில் பெங்களூரு அணி ஒன்று மட்டுமே வென்றது. மிகுதி 6 போட்டிகளும் வென்று அடுத்த சுற்றுக்கு சென்றது

கந்தப்பு இன்னுமா சென்னையை நம்புறீங்க?

அடக்கிற அலுவலை கதையுங்கப்பு.

2 minutes ago, செம்பாட்டான் said:

அட... நீங்களுமா. எல்லாப் பெரிய கையும் கீழையா. ஜபிலில் பழம் தின்று கொட்டை போட்ட எல்லாரும் இப்பிடி தெரிவு செய்திருக்கினம்.

கோசான் மேலவரத் தொடங்கி விட்டார்.

ஒரேயடியா மேல வாறாரோ தெரியாது.

ஜ மீன் முதல்வர்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

கந்தப்பு இன்னுமா சென்னையை நம்புறீங்க?

அடக்கிற அலுவலை கதையுங்கப்பு.

நான் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இன்னும் முற்று முழுதாக நீங்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, செம்பாட்டான் said:

பிரித்தி ஜிந்தாவுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் சுவியாரே, வணக்கம். உங்கள் படங்கள் சொல்லும் கதை.

ஓ..... 😁

நீங்கள் எப்பிடித்தான் கணக்குப் போட்டாலும்.... வாய்ப்பில்லை இம்முறை. அடுத்த ஏலம் எப்போ.

அடுத்த இரண்டு ஏலமும்( 2026,2027 )மினி ஏலம்தான், முற்று முழுதாக அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தீபக் கோடா உட்பட சில இந்திய வீரர்களும், 2,3 வெளிநாடு வீரர்களும் நீக்கப்படுவார்கள்.

2022 இல் நடைபெற்ற மெகா ஏலத்தில் பிறகு நடைபெற்ற போட்டியில் சென்னை விளையாடிய 14 போட்டியில் 4 மட்டும் வென்று 9 ம் இடம் பிடித்தது. அடுத்து வந்த மினி ஏலத்தில் ஒரு சில மாற்றங்களுடன் சென்னை அணி 2023 இல் முதலிடத்தை பிடித்தது

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கந்தப்பு said:

நான் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இன்னும் முற்று முழுதாக நீங்கவில்லை

உண்மைதான். Cricinfo தளத்தில, போட்டிகள் நடக்கும் போது, வெற்றி சதவிகிதம் போடுவினம். நான் ஒருநாளும் 100% என்று ஒரு அணிக்கும் பாரத்ததில்லை. கணித ரீதியாகவோ புள்ளி விபர ரீதியாகவோ 100% என்று ஒன்றையும் சொல்ல முடியாது. முடிந்த முடிவு என்ற ஒன்று இல்லவே இல்லை.

அதுக்காக, சென்னைக்கு ..... 😉

5 minutes ago, கந்தப்பு said:

அடுத்த இரண்டு ஏலமும்( 2026,2027 )மினி ஏலம்தான், முற்று முழுதாக அணியில் பெரிய மாற்றங்கள் இருக்காது. தீபக் கோடா உட்பட சில இந்திய வீரர்களும், 2,3 வெளிநாடு வீரர்களும் நீக்கப்படுவார்கள்.

2022 இல் நடைபெற்ற மெகா ஏலத்தில் பிறகு நடைபெற்ற போட்டியில் சென்னை விளையாடிய 14 போட்டியில் 4 மட்டும் வென்று 9 ம் இடம் பிடித்தது. அடுத்து வந்த மினி ஏலத்தில் ஒரு சில மாற்றங்களுடன் சென்னை அணி 2023 இல் முதலிடத்தை பிடித்தது

ஓ அப்பிடி வேற நடக்கிறதா. உதைபந்து கழகங்களுக்கிடையே வீரர்களை மாற்றுவார்கள். அப்படி ஏதேன் செயல்பாடு இங்கே இல்லையா. ஜபில் championleagueஅ தழுவித்தானே வடிவமைக்கப் பட்டது.

சென்னைக்கு அப்படி நடந்திருக்கலாம். நடக்கலாம். எனக்கென்றால், தங்கக்குடம் இருக்கும் வரையும், பெரிய மாற்றம் வரும் என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கொல்கத்தா அணியில் மொயின் அலி, குர்பாஸ் விளையாடுகிறார்கள்

குயின்டன் டி காக் , nortje இன்று விளையாடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, கந்தப்பு said:

கொல்கத்தா அணியில் மொயின் அலி, குர்பாஸ் விளையாடுகிறார்கள்

குயின்டன் டி காக் , nortje இன்று விளையாடவில்லை

அங்கால வாசிங்டன் சுந்தரும் இருக்கிறார். அதோட, அவையின் நடுவாந்திர துடுப்பர்களுக்கு பெரிதாக சந்தர்ப்பங்கள் கிடைக்கவில்லை. முதல் மூவரில் ஒருவர் எப்போதும் சிறப்பாக செயல்படுகின்றார். முதல் மூன்று விக்கட்டும் 10 பந்துப் பரிமாற்றங்களுக்குள் வீழ்ந்தால், அவர்களின் நிலை தடுமாறக்கூடும். வாசிங்டனின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

11வது பரிமாற்றத்தில் 100 ஓட்டங்களைக் கடந்து விட்டனர். முக்கியமாக, விக்கட் எதுவும் இழக்கவில்லை. அடுத்த 9 பரிமாற்றங்களும், வானவேடிக்கைதான் போல.

  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்த்தது போல் அடி விழவில்லை. அடுத்த 5 பரிமாற்றங்களில் எத்தினை. 200 தாண்டுவார்களா.

  • கருத்துக்கள உறவுகள்

90 அடித்து கில் வெளியேறினார். சிறப்பான ஆட்டம்.

12 பந்துகள் உள்ளன. 200 தாண்டுவார்களா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.