Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பாடலை கர்ணன் படத்தில் வந்த “கண்டா வரச்சொல்லுங்க” மெட்டில் பாட/வாசிக்கவும்.

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க

வல்லையிலே பிறந்த புள்ள

இனம் வாழவென வந்த புள்ள…

வல்லையிலே பிறந்த புள்ள

இனம் வாழவென வந்த புள்ள…

வேலுப்பிள்ளை பெத்த புள்ள..

விடுதலைய தந்த புள்ள…

கண்டா வரச்சொல்லுங்க….

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

அவர கண்டா வரச்சொல்லுங்க

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

*******

ஊரெங்கும் ரத்தவாசம்

ஒடுங்கி போச்சு நம்ம இனம்…ஊரெங்கும் ரத்தவாசம்

ஒடுங்கி போச்சு நம்ம இனம்…

வீர்கொண்டெழுந்தார் பாரு

விரிந்ததங்கு தமிழர் தேசம்…

கண்டா வரச்சொல்லுங்க….

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

அவர கண்டா வரச்சொல்லுங்க

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

*********

ஊரு நம்ம ஊரு அப்பா..

துண்டுபட்டு போனதப்பா..

ஊரு நம்ம ஊரு அப்பா..

துண்டுபட்டு போனதப்பா..

வேங்கையவர் வந்த பின்னே

எங்கள் வேற்றுமைகள் ஒழிந்ததப்பா…

கண்டா வரச்சொல்லுங்க….

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

அவர கண்டா வரச்சொல்லுங்க

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

*******

ஆட்சியிலும் அமரவில்லை

எந்த அதிகாரமும் சுவைக்கவில்லை…

தேசம் எனும் பெருங்கனவை

என்றும் விலகி அவர் நடந்ததில்லை…

தேசம் எனும் பெருங்கனவை

என்றும் விலகி அவர் நடந்ததில்லை…

கண்டா வரச்சொல்லுங்க….

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

அவர கண்டா வரச்சொல்லுங்க

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

-கோஷான் சே-

large.IMG_2195.jpeg

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

வரிகளை மாற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

இன்று எல்லோரும் வணங்கும் எந்தக் கடவுள் என்றாலும் வீரதீரங்கள் நிறைந்தவர்களாகவே இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்த ரீதியில் எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை

உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன்

தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை

உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன்

தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன்.

இந்த வரிகளைவிட ..எனக்கு எழுத வேரெதெவும் தோன்றவில்லை

அருமையக புகுத்தி ,அமர்த்தி...எழுதுயுள்ளிர்கள்... பாராட்டுக்கள்.

அது சரி பாட்டைப்பாட கில்மிசாவை கூப்பிடவா...

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய போரிடும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்னும் பெருமை எமக்குண்டு ..........!

நறுக்கென்ற வரிகள் நல்லா இருக்கு . ..........! 👍

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

வேங்கையவர் வந்த பின்னே

எங்கள் வேற்றுமைகள் ஒழிந்ததப்பா…

கண்டா வரச்சொல்லுங்க….

தலைவரை கையோட கூட்டி வாருங்க…

large.IMG_8218.jpeg.0a2f3cfe11d134f5704c

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2025 at 23:17, ஈழப்பிரியன் said:

வரிகளை மாற்றி அருமையாக எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

இன்று எல்லோரும் வணங்கும் எந்தக் கடவுள் என்றாலும் வீரதீரங்கள் நிறைந்தவர்களாகவே இருந்ததாக சொல்கிறார்கள்.

இந்த ரீதியில் எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை

உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன்

தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன்.

நன்றி

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

On 17/3/2025 at 01:35, alvayan said:

எம் கண்முன்னே தமிழினத்தின் வீரத்தை

உலகிற்கு பறைசாற்றிய வீரன் உலக தமிழினத்தின் தலைவன்

தேசியத் தலைவரை ஒரு கடவுளாகவே பார்க்கிறேன்.

இந்த வரிகளைவிட ..எனக்கு எழுத வேரெதெவும் தோன்றவில்லை

அருமையக புகுத்தி ,அமர்த்தி...எழுதுயுள்ளிர்கள்... பாராட்டுக்கள்.

அது சரி பாட்டைப்பாட கில்மிசாவை கூப்பிடவா...

நன்றி - அதுக்கென்ன கில்மிசாவும் எங்கட பிள்ளைதானே❤️.

நன்றி🙏.

On 17/3/2025 at 09:11, suvy said:

அவருடைய போரிடும் காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்னும் பெருமை எமக்குண்டு ..........!

நறுக்கென்ற வரிகள் நல்லா இருக்கு . ..........! 👍

நன்றி🙏.

On 17/3/2025 at 10:18, Kavi arunasalam said:

large.IMG_8218.jpeg.0a2f3cfe11d134f5704c

அருமையான கருத்யோவியம் ஐயா. நன்றி🙏.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பு

எவராவது, அல்லது உங்கள் பிள்ளைகள் பாடும், இசையமைக்கும் இயலுமை உடையவர்கள் எனில் - இந்த வரிகளை கர்ணன் பட பாடல் மெட்டில் பாடி வெளியிட விரும்பின் - எனது முழு அனுமதியை அளிக்கிறேன்.

பிகு

நம்மபாட்டும் தாயக பாடல் வரிசையில் சேராதா என்ற ஒரு நப்பாசைதான்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தலைவரை கண்டா வரச்சொல்லுங்க....அருமையான வரிகள். 👍

அந்த பாடல் வெளி வந்த போதே தலைவரை மனதில் வைத்துத்தான் பாடல் வரிகள் எழுதியிருப்பார்கள் என நினைத்ததுண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

மேலே உள்ள காணொளியில் உள்ளவர் வவுனியாவைச் சேர்ந்தவர்.

பாடல்களை இயற்றி இசையமைத்து பாடுகிறார்.

விரும்பினால் அவருடன் தொடர்பு கொள்ளலாம் என எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che தமிழ்சூரியன் என்ற பெயரில் நெதர்லாந்தில் இருந்து தமிழ்தேசியத்தை காதலிக்கும் ஒருவர் யாழில் இருந்தார்.

தனிப்பட்ட பிரச்சனைகளால் ஒதுங்கிவிட்டார்.

இரா சேகர் என்ற பெயரில் முகநூலில் இருக்கிறார்.

இவர் ஒரு பாட்டுக்குழுவை வைத்து நடாத்துகிறார்.

இவருடைய தொடர்பு இலக்கம் பலரிடமும் இருக்லாம்.

இல்லாவிட்டால் முகநுhலில் தொடர்பு கொண்டு கேட்கலாம்.

உங்கள் முடிவை சொல்லவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அவர் பிரச்சனைபட்டு கொண்டு யாழை விட்டு போனதில் நானும் சம்பந்தபட்டுள்ளேன்.

பின்னர் பல வருடங்களின் பின் சேகர் என்ற பெயரில் மீளவந்தார். வணக்கம் வைத்தேன். பதில் சொல்லவில்லை.

ஆகவே சம்மதிப்பாரோ தெரியாது.

சம்மதித்து செய்வாராயின் எனக்கு முழு சம்மதமே.

உங்கள் முயற்சிக்கு நன்றி🙏.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அவர் பிரச்சனைபட்டு கொண்டு யாழை விட்டு போனதில் நானும் சம்பந்தபட்டுள்ளேன்.

பின்னர் பல வருடங்களின் பின் சேகர் என்ற பெயரில் மீளவந்தார். வணக்கம் வைத்தேன். பதில் சொல்லவில்லை.

ஆகவே சம்மதிப்பாரோ தெரியாது.

சம்மதித்து செய்வாராயின் எனக்கு முழு சம்மதமே.

உங்கள் முயற்சிக்கு நன்றி🙏.

கோசான் கொஞ்சம் முதல்த் தான் சேகருடன் பேசினேன்.

வரிகளைப் பார்த்துவிட்டு நன்றாக இருக்கிறது.

எனக்கு யாருடனும் கோபம் இல்லை அண்ணா செய்யலாம்

ஆனால் இதே மெலோடியில் செய்ய விருப்பமில்லை என்றார்.

இரவு வேலைக்கு வேளிக்கிட்டுக் கொண்டிருந்ததால் அதிகம் இதைப்பற்றி பேசவில்லை.

அத்தோடு இசைபற்றி எனக்கு எதுவுமே தெரியாது.

இருவருக்கும் பாலமாக இருப்பதில் எதுவும் பிரச்சனை இல்லை.

உங்களுக்கு என்ன எப்படி வேண்டும் என்பதை விபரமாக எழுதி அனுப்புங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி அண்ணை.

சேகருக்கும் என் அன்பையும், நன்றியையும் சொல்லவும்.

அவர் சினிமா பாடல் மெட்டில் தலைவர் பற்றிய பாடலுக்கு இசையமைக்க விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.

மிக நியாயமான தயக்கம்தான்.

ஆனால்…

எனது வரிகள் மிகச் சாதாரணமானவை.

எழுதபட்ட மனிதர், பாடகியின் (அதை ஒத்த) குரல், அந்த இசை கட்டுத்தான் அதற்கு பலம் சேர்ப்பன என நான் நினைக்கிறேன்.

இது எனது அபிப்பிராயம் மட்டுமே.

அவர் வேறு முறையில் இசையமைப்பதே நல்லது என கருதினால் - அப்படி செய்யட்டும்.

எனக்கு எதுவும் சம்மதமே.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

கட்டாயம் சேகர் இந்தத் திரியையும் வாசித்துக் கொண்டு தான் இருப்பார்

அவரால் நிச்சயமாக இந்தப்பாடலை ஒழுங்கான, திறமையான, மக்கள் ரசிக்கும்படியான , இசையில் வெளிக்கொண்டுவர முடியும்

இரு முறை அவரின் இசை நிகழ்ச்சிகளை நேரில் ரசித்துள்ளேன்

கோஷான் இப்படியும் பாடல் எழுதுவார் என்று நான் நினைக்கவில்லை

வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

நன்றி அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

Engineering செலவு 150 யூரோவரை வரும் என்றார்.

கிழமை முடிவில் விபரமாக கதைப்பதாக சொன்னார்.

கோசான் எனும் பெயரிலேயே முகநூலில் இணைந்தால் நேரடியாக பேசலாம்.

நீங்கள் எண்ணுவது போல இல்லை.உங்களுடன் நேரடியாக உரையாட ஆவலாக உள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

@goshan_che

Engineering செலவு 150 யூரோவரை வரும் என்றார்.

கிழமை முடிவில் விபரமாக கதைப்பதாக சொன்னார்.

கோசான் எனும் பெயரிலேயே முகநூலில் இணைந்தால் நேரடியாக பேசலாம்.

நீங்கள் எண்ணுவது போல இல்லை.உங்களுடன் நேரடியாக உரையாட ஆவலாக உள்ளார்.

நன்றி அண்ணா. செலவை நான் ஏற்கிறேன்.

இந்த பெயரில் ஒரு முகபுத்தக கணக்கு உள்ளது. உயிர்பித்து விட்டு அறிவிக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.