Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற விவாத தொடக்கத்தில் சிறப்பு அறிக்கையை வெளியிட்டபோது பிமல் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் வழக்கறிஞர் ஸ்வஸ்திகா அருள்லிங்கம் மீது அவதூறான கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தகுந்த நடவடிக்கை

அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக ஸ்வஸ்திகா அருள்லிங்கமும் அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும் அது குறித்து முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அர்ச்சுனா எம்பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை! | Request Filed In Parliament Against Mp Archuna

இதன்படி, குறித்த விடயத்தை விசாரணை செய்து இந்த நாடாளுமன்ற உறுப்பினரின் நடத்தைக்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். 

https://ibctamil.com/article/request-filed-in-parliament-against-mp-archuna-1742221471   

  • கருத்துக்கள உறவுகள்

முகநூலில் இருந்து..

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் மக்கள் பிரதிநிதி என்ற பொறுப்பு வாய்ந்த பதவியை வகிக்கிறேன் என்பதை கவனத்தில் வைத்திருக்க வேண்டும். சக பா.உ சந்திரசேகரன் அவர்களை சீண்டி மலையக மக்களை இழிவுபடுத்தினார் டாக்குத்தர் அர்ச்சுனா. படிச்சவன் எல்லாம் அறிவுஜீவி என்ற கணக்கில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீ என்ன படிச்சனி? பல்கலைக்கழகம் போனனியா? உன்ரை கல்வித் தகைமை என்ன? என அசல் யாழ்ப்பாண கல்விப் பவுசு மனநிலையின் கைதியாக உழல்கிறார் அவர்.

இப்போ பெண் அரசியல் செயற்பாட்டாளரை "விபச்சாரி" என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது.

நமது இயக்கங்கள் ஒழுக்கவாதங்களை கேள்விக்கு உட்படுத்தி முன்னேறாமல் அதற்குள் சுழன்று திரிந்தவர்கள். வறுமை துரத்தி பால்வினைத் தொழிலுக்குள் தள்ளிய பெண்களை 'சமூக விரோதி' என மின்கம்ப தண்டனை வழங்கியவர்கள். அந்த நிலைக்கு தள்ளிய அரசியல் பொருளாதார சமூக காரணிகளை கட்டவிழ்த்து செயற்பட வக்கில்லாமல் தேங்கிய அறிவுடன் இருந்தது மட்டுமன்றி, பால்வினை செயற்பாட்டை நுகரும் ஆண் பட்டாளமின்றி பால்வினைத் தொழில் எவ்வாறு இயங்குநிலையில் இருக்கும் என்ற தர்க்க அறிவுகூட இல்லாமல் இருந்தனர்.

அதிகாரத்தாலும் ஆயுதத்தாலும் சட்டத்தாலும் பெண்கள் மீதான வன்முறையை கட்டுப்படுத்தியதற்கு அப்பால் பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான கருத்தியல் போராட்டம் புலிகளின் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காத்திரமாக இருந்ததில்லை. வளர்ச்சி அடையவுமில்லை. அதனாலேயே தப்பிப் பிழைத்த புலிப் பெண் போராளிகளை இயக்கத்தவர் மட்டுமல்ல சமூகமும் கீழ்நிலைக்கு தள்ளி வாழ்வாதாரத்துக்கு வழியற்றவர்களாக ஆக்கியது.

ஆணாதிக்க கற்பிதங்களை நொருக்கிக் காட்டிய அவர்களை பெருமையாக கொண்டாட வேண்டிய சமூகம், போரின் பின் அதே போர்க்குணத்தை 'பெண்மை'க்கு எதிரானதாக நிறுத்திய அவலம் நடந்தது. அவர்களை திருமணம் செய்ய சமூக ஆண்கள் உட்பட ஆண் போராளிகள்கூட பின்னின்றனர். இதன்வழி வந்த இன்றைய கலாச்சார காவலர்கள் யூரியூப் தொடக்கம் பாராளுமன்றம் வரை பேசுகிற பேச்சுகளில் அறிவு கிழிந்து தொங்குகிறது.

'பாலியல் வல்லுறவு' என்ற வார்த்தையை பாலியல் வன்புணர்வு, பாலியல் வல்லுறவு எனவும் 'விபச்சாரம்' என்பதை பாலியல் தொழில், பால்வினைத் தொழில் எனவும் இலங்கையின் தமிழ் செய்திப் பத்திரிகைகள்கூட எழுதத் தொடங்கி மூன்று தசாப்தங்களுக்கு மேலாகிவிட்டது. புகலிட மாக்சியர்கள் ஒருசிலர் கூட இப்போதும் 'பாலியல் வல்லுறவு', 'விபச்சாரம்' (அரசியல் விபச்சாரம்) என எழுதிக்கொண்டிருக்கிறார்கள். ஆணாதிக்க மொழி, ஆணாதிக்க ஒழுக்கவாதம் என்பவற்றை தாண்ட முடியாமல் அவதிப்படுகிற நிலை அவர்களது.

சக மனிதரை உடல் அவமதிப்பு அல்லது அறிவு அவமதிப்பு செய்கிற நிலை இன்னொருபுறம் பெரும்பாலானவர்களிடமும் இருக்கிறது. மிருகங்களை உருவகப்படுத்தி பேசுகிற நிலை காணப்படுகிறது. ஒருவேளை நாயோ குரங்கோ பேசும் வல்லமை கொண்டிருந்தால் மனிதர்களுக்கு அவை -தமது தனித்துவம் குறித்து- வகுப்பெடுக்க வேண்டி வந்திருக்கும்.

இந்த எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது.

Ravindran Pa நன்றி

https://www.facebook.com/share/p/15vnSeGRsx/?

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை – அர்ச்சுனா எம்.பி!

611863162.jpg

சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

மேலும், சமூகப் பொறுப்பின் அடிப்படையிலேயே ஒருபெண்ணின் நடத்தை குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனின் நாடாளுமன்ற உரையின் போது பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சொல்லாடல் குறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், இந்த விவகாரம் தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

இந்த விடயம் சம்பந்தமாக அவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். ஒரு இளம் சமுதாயம் அழியும் வகையிலான ஓர் ஆதரன் என்னிடம் வந்த காரணத்தினால் ஒரு சமூகப் பொறுப்புடனேயே இதனை நாடாளுமன்றில் பேசினேன் எனத் தெரிவித்தார்.

மேலும் சட்டத்தரணி சுவஸ்திகாவை விமர்சித்தமை தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, நான் சுவஸ்திகா குறித்து இதுவரை எந்தக் கருத்தும் நாடாளுமன்றில் தெரிவிக்கவில்லை.

இது தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க, குறித்த விடயத்தை ஹன்சாட்டில் இருந்து நீக்குமாறு பேசியுள்ளார். நான் குறித்த நபர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசவில்லை.

எனவே நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வேறு யாரேனும் நாடாளுமன்றில் அவர் குறித்து பேசியிருக்கலாம் என நினைக்கிறேன். தவிர சட்டத்தரணி சுவஸ்திகா மீது தனிப்பட்ட எந்தக் கோபமும் இல்லை எனத் தெரிவித்தார்.

https://newuthayan.com/article/சட்டத்தரணி_சுவஸ்திகா_மீது_தனிப்பட்ட_கோபம்_எதுவும்_இல்லை_–_அர்ச்சுனா_எம்.பி!

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்வஸ்திகா அருள்லிங்கம் -- பெண் அரசியல் செயற்பாட்டாளரை விபச்சாரி என விளித்து ஒரு ஆணாதிக்க ஒழுக்கவாதியாகி தாக்குதல் தொடுக்கிறார். அந்த பெண் செயற்பாட்டாளரின் அரசியல் அறிவுக்கும் தத்துவார்த்த அறிவுக்கும் ஈடுகொடுக்க அவரது டாக்குத்தர் சான்றிதழினதும் மும்மொழி அறிவினதும் போதாமையானது மனித இழிவுபடுத்தலை அவரிடமிருந்து முன்தள்ளுகிறது. ]

எல்லாவித அழுக்குளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டுள்ள டாக்குத்தர் அர்ச்சுனாவின் உண்மை நிலை இது தான்

  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பாராளுமன்றம் நடவடிக்கை!

பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் வௌியிடும் கருத்துக்களை ஓடியோ, வீடியோ வடிவில் சமூக வலைத்தளங்களில் நேரடியாக ஒளிபரப்புவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அவ்வப்போது தெரிவிக்கும் அவமதிக்கும், அநாகரீகமான மற்றும் இழிவான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

அதன்படி, நாளை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை நடைபெறும் பாராளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனா தெரிவிக்கும் கருத்துக்கள் ஔிபரப்பப்படமாட்டாது.

குறித்த காலகட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் நடத்தையின் அடிப்படையில் இந்தத் தற்காலிக தடை, நீக்கம் நீக்கப்படுமா? இல்லையா? என்பது பரிசீலிக்கப்படும் எனவும் சபாநாயகர் மேலும் தெரிவித்தார்.

https://www.samakalam.com/அர்ச்சுனா-எம்-பிக்கு-எதி/

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-14-5.jpg?resize=750%2C375&ss

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் தடை விதிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரைகள் காரணமாக நாளை (20) முதல் மே 8 வரை நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளில் அர்ச்சுனாவின் உரைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கு தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர்  அறிவித்துள்ளார்.

மேலும், அவர் அவ்வப்போது தெரிவிக்கும்  நாடாளுமன்றத்தை அவமதிக்கும், அநாகரீகமான கருத்துக்கள் ஹன்சாட் பதிவுகளிலிருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1425719

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவிக்கு எதிரான மனு - இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வலுவற்றதாக்கி உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உறுதி செய்ய ஜூன் மாதம் 26 ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த மனு இன்று (14) நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது குறித்த மனுவின் சமர்ப்பணங்களை உறுதிப்படுத்த, அதனை எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு நீதியரசர்கள் அமர்வு உத்தரவிட்டது. 

இந்த மனு சமூக செயற்பாட்டாளர் ஓஷலா ஹெராத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmanjjdr700e9qpbsgsmy6u9m

  • கருத்துக்கள உறவுகள்
On 18/3/2025 at 08:21, கிருபன் said:

எல்லா கசடுகளையும் மூளைக்குள் வைத்துக்கொண்டு மக்கள் பிரதிநிதியாக பாராளுமன்றம் போய்வருவதற்கு டாக்குத்தருக்கும் வேறு பலருக்கும் கோட்டும் சூட்டும் வெள்ளை வேட்டியும் பவுசும் வேறு தேவைப்படுகிறது.

large.IMG_8336.jpeg.958f01ff4dd1a6a57abd

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-14-5.jpg?resize=750%2C375&ss

இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பான முக்கிய உத்தரவு!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை இரத்து செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும்  ஜூன் மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று(14) நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன் விசாரிக்கப்பட்டுள்ளது.

அமர்வின் பின்னர் இந்த மனுவை ஜூன் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த மனுவை சமூக ஆர்வலர் ஓஷலா ஹெராத் தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1431810

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

large.IMG_8336.jpeg.958f01ff4dd1a6a57abd

ஓவராய் போகேல்லை. சொல்ல வேண்டியதை சொல்லவேண்டிய விதத்திலை சொல்ல தெரியேல்லை ☹️

  • கருத்துக்கள உறவுகள்

497552107_1138339368308920_2085837953081

வழக்கு தொடுத்துள்ள ஒசல ஹேரத் இதேபோல கடந்த ஆண்டு டயானா கமகேவை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் வென்றிருந்ததுடன், டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

வழக்கு தொடுத்துள்ள ஒசல ஹேரத் இதேபோல கடந்த ஆண்டு டயானா கமகேவை தகுதி நீக்கம் செய்யும் வழக்கில் வென்றிருந்ததுடன், டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா போனால் அவரின் தங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்ப சட்டங்கள் அனுமதிக்குமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, குமாரசாமி said:

அர்ச்சுனா போனால் அவரின் தங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்ப சட்டங்கள் அனுமதிக்குமா? 😎

அர்ச்சுனாவிற்கு அடுத்து தங்கம்தான் அதிக வாக்குகளை எடுத்ததாக நினைக்கின்றேன். ஆனபடியால்…. தங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராகக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

தங்கம் விரும்பாவிடில் மூன்றாவது மயூரன். அதற்கு அந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில் அர்ச்சுனா சம்மதிப்பாரோ தெரியாது. இவர்களுக்குள் நிறைய பிரச்சினை உள்ளது. எல்லாம் வெட்டி ஆடுவதற்குள்… அடுத்த தேர்தல் வந்து விடும். 😂

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
14 minutes ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனாவிற்கு அடுத்து தங்கம்தான் அதிக வாக்குகளை எடுத்ததாக நினைக்கின்றேன். ஆனபடியால்…. தங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராகக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

தங்கம் விரும்பாவிடில் மூன்றாவது மயூரன். அதற்கு அந்தக் குழுவின் தலைவர் என்ற முறையில் அர்ச்சுனா சம்மதிப்பாரோ தெரியாது. இவர்களுக்குள் நிறைய பிரச்சினை உள்ளது. எல்லாம் வெட்டி ஆடுவதற்குள்… அடுத்த தேர்தல் வந்து விடும். 😂

அர்ச்சுனா தான் செய்த குறளி வித்தைகளை மக்கள் மறக்கவாவது தங்கத்த பாராளுமன்றம் அனுப்பட்டும். 😁

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, தமிழ் சிறி said:

அர்ச்சுனா போனால் அவரின் தங்கம் அந்த வெற்றிடத்தை நிரப்ப சட்டங்கள் அனுமதிக்குமா? 😎

அர்ச்சுனாவிற்கு அடுத்து தங்கம்தான் அதிக வாக்குகளை எடுத்ததாக நினைக்கின்றேன். ஆனபடியால்…. தங்கத்துக்கு பாராளுமன்ற உறுப்பினராகக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

சுமந்திரனை விட கூடுதலான வாக்குகள் பெற்றிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வழக்கை ஒரு சமூக ஆர்வலர் தாக்கல் செய்துள்ளார்

அடுத்து தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுக்கலாமா இல்லை அதை அப்படியே கைவிடலாமா என்பதே கேள்வியாக இருக்கும்.

அதை ஆராய்ந்த நீதிபதிகள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளலாம் எனவும் அந்த விசாரணை நடைபெறும் திகதியையும்

அதற்கான ஆயத்தங்களை செய்யுமாறும் பணித்துள்ளது

விசாரணை வரும் பொது தான் தெரியும் அடுத்த நடவடிக்கைகள்

அதுவரை இடைவேளை,,,,,,

வைத்தியர் அர்ச்சுனா வென்று கனகாலம்......

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.