Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

20 Mar, 2025 | 02:37 PM

image

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என  யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பதின்ம வயதுப் பெண் சரியாக முதிர்ச்சி அடையாமல், தனது தேவைகளை சரியா அறிந்துகொள்ளாமல்,  கல்வியறிவு போதியளவு இல்லாமலும் இருக்கலாம். இவ்வாறான சூழ்நிலையில் கர்ப்பத்தை சுமக்கும் போது உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் ஆயத்தப்படுத்தும் தன்மை போதாமல் இருக்கிறது. இது குறித்த பெண்ணுக்கு உடலியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பதின்ம வயதுடைய தாய்க்கு குருதிச்சோகை, உயர் குருதி அழுத்தம், நீரிழிவு போன்றன ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. குழந்தையை சரியான விதத்தில் கவனிக்காத பட்சத்தில் அந்த குழந்தை நிறை குறைவாக பிறக்கின்ற சந்தர்ப்பங்கள் உள்ளதுடன் அந்த குழந்தைக்கு பின்னாளில் சில சில பிரச்சினைகளும் ஏற்படலாம்.

சமூகத்திலே 16,17,18 வயதுகளை கொண்ட பெண்கள் கர்ப்பமடையும்போது வித்தியாசமாவும், வரவேற்கப்படாத விடயமாகவும்தான் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்கள் சரியான பராமரிப்புகளையோ, சேவைகளையே குடும்பத்திடமிருந்தோ, நண்பர்களிடமிருந்தோ, சமூகத்திடமிருந்தோ எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறாக காணப்படும் போது அவர்களுக்கு ஒரு உளவியல் தாக்கம் ஏற்படும்.

இன்னும் ஒரு விடயம் என்னவென்றால் பதின்ம வயதுப் பெண்கள் திருமணம் ஆவதற்கு முன்னர் கர்ப்பமடைகின்றனர். திருமணம் ஆவதற்கு முன்பு கர்ப்பமடையும்போது அந்த கர்ப்பத்தை அழித்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். இலங்கையை பொறுத்தவரை கர்ப்பம் அழித்தல் என்பது சட்டவிரோதமானது. இவ்வாறான சட்டவிரோத செயல்களகல் ஈடுபடும்போது அதுவும் அவர்களிடத்தில் உடல், உள் தாக்கத்தை ஏற்படுத்தும்.

பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அதற்கான குடும்ப கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும்.

இப்போது இலங்கையை பொறுத்தவரையில் குடும்ப சுகாதார நல மாது என்பவர் எல்லா இடங்களிலும் காணப்படுகின்றார். அவர்களை அணுகுவது மிகவும் இலகுவானது. இப்போது ஒவ்வொரு இடங்களிலும் உள்ள வைத்தியசாலைகளில் பெண் நோயியல் மகப்பேற்று வைத்திய நிபுணர்களும் தாராளமாக உள்ளனர். அவர்களிடம் ஆலோசனைகளை பெற முடியும். தங்களுக்கு ஏற்றவாறான கர்ப்பத்தடை முறைகளை பாவிக்க முடியும்.

கர்ப்பத்தடை முறைகளை பாவிப்பது குறித்து நிறைய பிரச்சனைகளும், சந்தேகங்களும் மக்களிடையே காணப்படுகின்றன. கர்ப்பத்தடை முறைகள் மிகவும் பாதுகாப்பானதும், மிகவும் பயனுள்ளதுமான விடயமும் ஆகும். கர்ப்பத்தடை முறைகளை பயன்படுத்தி நிறுத்திய பின்னர் அவர்கள் கர்ப்பமடைவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் கர்ப்பமடைவார்கள்.

பதின்ம வயது பெண்ணொருவர் கர்ப்பமடைந்தால் அதனை அழிக்கவோ, சட்டவிரோத செயல்களில் ஈடுபடவோ கூடாது. இலங்கையை பொறுத்தவரையில் தாய் - சேயுடன் இருக்கின்றபோது கருக்கலைப்பு செய்கின்ற நிலைகள் இருக்கின்றது. இது சட்டவிரோதமானது. இதனால் கிருமிகள் பாதிப்பு ஏற்படலாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அருகில் உள்ள அரச வைத்தியசாலையை நாடும்பேது அங்கு சகலவிதமான சேவைகளும் வழங்கப்படும். அந்தரங்கத்தன்மை பேணப்பட்டு, காத்திரமான சேவை வழங்கப்படும். சரியான முறையில் அவர்கள் இந்த சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

ஆகவே இந்த பதின்ம வயது கர்ப்பம் என்பது தாய்மார்களிடத்தும், பெண்களிடத்தும், சமூகத்திலும் பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே நாங்கள் இதுகுறித்து சரியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

பதின்ம வயது கர்ப்பம் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும் - மகப்பேற்று வைத்திய நிபுணர் ரகுராம் ! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

டீன்ஏஜ் வயசுலேயே கர்ப்பமா.. அச்சச்சோ.. என்னெல்லாம் சிக்கல் வரும் தெரியுமா!

கர்ப்பகால அசெளகரியங்கள் பொதுவானவை. ஆனால் கர்ப்பிணி பெண்ணின் வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு வயதில் கர்ப்பம் அடையும் போது இந்த பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும். அது என்ன என்பதை பார்க்கலாம்.

டீனேஜ் கர்ப்பம் என்றால் என்ன?

டீனேஜ் கர்ப்பம் என்பது 20 வயதுக்கு உட்பட்ட பெண் கர்ப்பம் தரிப்பதை குறிப்பது. பொதுவாக 15-19 வயதுக்கு இடைப்பட்ட வயதினரை குறிக்கிறது. வெகு அரிதாக இதைவிட குறைந்த வயது பெண்கள் அதாவது பெண் குழந்தைகள் என்று கூட சொல்லலாம். அவர்கள் இளமை பருவ கர்ப்பம் கொண்டவர்கள் என்றும் அழைக்கப்படுகிறது.

முந்தைய காலங்களில் பெண்கள் பூப்படைவதற்கு முன்பு திருமணம் செய்யும் வழக்கம் இருந்தது. நாளடைவில் பெண்ணின் திருமண வயது 18 பிறகு 21 வரை சட்டம் இயற்றப்பட்டுள்ளது. எனினும் சில இடங்களில் பெண் குழந்தைகளுக்கு இளவயதில் திருமணமும் உடன் கர்ப்பமும் நிகழ்ந்துவிடுகிறது. இளவயதில் கர்ப்பமடைவதால் உண்டாகும் சிக்கல்கள் என்ன என்பதை அறியலாம்.

டீனேஜ் கர்ப்ப சிக்கல்கள் - மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு இல்லாமை

கர்ப்பிணி பெண் பதின்ம வயதை கொண்டிருந்தால் சரியான பராமரிப்பு கிடைக்காமல் போகலாம். குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மாதங்களில். மகப்பேறுக்கு முற்பட்ட பராமரிப்பு தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் மருத்துவ பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

குழந்தையின் வளர்ச்சியை கண்காணிப்பதால் சிக்கல்கள் இருந்தாலும் விரைவாக சமாளிக்க உதவுகிறது. மேலும் ஃபோலிக் அமிலத்துடன் கூடிய முந்தைய வைட்டமின்கள், கர்ப்பம் தரிப்பதற்கு முன்பு எடுத்துகொள்வது நரம்பு குழாய் குறைபாடுகள் போன்ற சில பிறப்பு குறைபாடுகளை தடுக்க செய்கிறது. ஆனால் இத்தகைய அபாயங்கள் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு இல்லாமையால் இளவயது கர்ப்பத்தில் அதிகமாக எதிர்கொள்கிறார்கள்.

டீனேஜ் கர்ப்ப சிக்கல்கள் - உயர் ரத்த அழுத்தம்

20 அல்லது 30 வயதுக்குட்பட்ட கர்ப்பிணி பெண்களை விட பதின்ம வயதில் கருத்தரிக்கும் பெண்களுக்கு உயர் ரத்த அழுத்த அபாயம் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. கர்ப்பத்தால் தூண்டப்பட்ட உயர் ரத்த அழுத்தம் அவர்களுக்கு ப்ரீக்ளாம்ப்சியா ஏற்படும் அபாயத்தை உண்டாக்கலாம். இது ஆபத்தான நிலை.

இதனால் சிறுநீரில் அதிகப்படியான புரதம் வெளியேறும். தாயின் கைகள், கால்கள் மற்றும் முகம் வீக்கம் அடைந்து உடலில் மற்ற உறுப்புகளும் சேதத்தை உண்டாக்க செய்கிறது. இந்த மருத்துவ அபாயங்கள் சிறு வயது கர்ப்பிணிகளுக்கு பாதிப்பை உண்டு செய்கின்றன. இது பிறக்காத குழந்தையின் வளர்ச்சியை சீர்குலைக்கும். முன்கூட்டிய பிறப்பு சிக்கல்களை உண்டாக்கும்.

டீனேஜ் கர்ப்பங்கள் - முன் கூட்டிய பிறப்பு

முழு கர்ப்பம் என்பது 40 வாரங்கள் வரை நீடிக்கும். 37 வாரங்களுக்கு முன்பு பிரசவிக்கும் குழந்தை குறைமாத குழந்தை என்று அழைக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் கர்ப்பத்தின் ஆரம்பத்திலேயே தொடங்கும் முன்கூட்டிய பிரசவம் மருந்துகளால் தடுக்கபடலாம். மற்ற நேரங்களில் தாய் அல்லது குழந்தையின் ஆரோக்கியத்திற்காக குழந்தையை முன்கூட்டியே வெளியே எடுக்க மருத்துவர் திட்டமிடலாம்.

சுவாசம் செரிமான,, பார்வை, அறிவாற்றல் என மற்ற பிற பிரச்சனைகளுக்கான ஆபத்து உண்டாகலாம்.

டீனேஜ் கர்ப்பங்கள் - குறைந்த எடை

பதின்ம வயதில் கருத்தரிக்கும் போது அது குறைந்த எடை கொண்ட குழந்தைகளை பெறுவதற்கான ஆபத்தை உண்டு செய்கிறது. முன்கூட்டிய குழந்தைகளின் எடையை விட குறைவாக இருக்கும். காரணம் கருப்பையில் வளரும் நேரத்தை குறைவாக கொண்டிருப்பதே இதற்கு காரணம்.

குறைந்த எடை கொண்ட குழந்தை 3.3. முதல் 5.5. பவுண்டுகள் மட்டுமே எடையை கொண்டிருப்பார்கள். குறைவான பிறப்பு எடை கொண்ட குழந்தை 3.3. பவுண்டுகளுக்கும் குறைவான எடை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுவாசிக்க வெண்டிலேட்டரில் வைக்க வேண்டியிருக்கும்.

டீனேஜ் கர்ப்பங்கள் -எஸ்டிடி (பாலியல் நோய்கள்)

கர்ப்பகாலத்தில் உடலுறவு கொள்ளும் பதின்ம வயதினருக்கு கிளமிடியா மற்றும் ஹெச் ஐவி போன்ற எஸ்டிடிக்கள் வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உடலுறவின் போது லேடக்ஸ் ஆணுறையை பயன்படுத்துவது STD களை தடுக்க உதவும். இது கருப்பை மற்றும் வளரும் குழந்தைக்கு பாதிப்பை உண்டு செய்யலாம்.

டீனேஜ் கர்ப்பங்கள் - மகப்பேறுக்கு பிறகு மனச்சோர்வு

Centers for Disease Control படி பதின்ம வயது பெண் கருவுற்றால் பிரசவத்துக்கு பிறகான மனச்சோர்வு ஆபத்தை கொண்டிருக்கிறார்கள். கர்ப்பமாக இருக்கும் போது அல்லது பிரசவத்துக்கு பிறகு மனச்சோர்வடைந்த மற்றும் சோகமாக இருக்கும் பெண்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக பேச வேண்டும். புதிதாக பிறந்த குழந்தையை கவனித்துகொள்வதில் மனச்சோர்வு தலையிடலாம். மற்றும் ஆரோக்கியமான டீனேஜ் வளர்ச்சியுடன் சிகிச்சையளிக்க முடியும்.

சிறுவயதில் திருமணம் 16 அல்லது 17 வயதில் கர்ப்பம் என்றால் முதலில் மகப்பேறு மருத்துவரை அணுகுங்கள்.

மது, புகைப்பழக்கம் இருந்தால் அதிலிருந்து விலகி இருங்கள். இது கருவிலிருக்கும் குழந்தைக்கு அதிக தீங்கை உண்டு செய்யும்.

பிறப்பு குறைபாடுகளை தடுக்க ஒவ்வொரு நாளும் குறைந்தது 0.4 மில்லிகிராம் ஃபோலிக் அமிலத்துடன் கூடிய வைட்டமின் மருத்துவர் அறிவுரையுடன் எடுத்துகொள்ளுங்கள். இயன்றவரை சிறு வயது திருமணம் உடன் குழந்தைப்பேறு தவிர்ப்பதே நல்லது.

Samayam Tamil
No image preview

Teenage pregnancy: டீன்ஏஜ் வயசுலேயே கர்ப்பமா.. அச்சச்சோ....

கர்ப்பகால அசெளகரியங்கள் பொதுவானவை. ஆனால் கர்ப்பிணி பெண்ணின் வயதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறு வயதில் கர்ப்பம் அடையும் போது இந்த பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும். அது என்ன என்பதை பார்க்கலாம்.
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிழம்பு said:

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சமீபகாலமாக பதின்ம வயது கர்ப்பம் என்பது இலங்கையை பொறுத்தளவில் சற்று அதிகரித்துள்ளது. பதின்ம வயது கர்ப்பம் என்பது நிகழும்போது தாய்க்கும், சேய்க்கும், சமூகத்துக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் என  யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணருமான எஸ்.ரகுராம் தெரிவித்துள்ளார்.

ஸ்பானிய குட்டிகள் கூடுதலானோர் பதின்ம வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள்.

அம்மம்மா என்பார்கள் பார்த்தா அவவுக்கே 30-35 வயது தான் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிழம்பு said:

பதின்ம வயது பெண்கள் திருமணமாகியோ அல்லது திருமணம் ஆகாமலோ இருக்கும்போது குழந்தைக்காக அவர்கள் முயற்சிப்பதை தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அதற்கான குடும்ப கட்டுப்பாட்டை பயன்படுத்த முடியும்.

அதாவது மருத்துவர் சொல்லுறார் அந்த வயசில கலவியில் ஈடுபடுலாம் கர்ப்பம் வேண்டாம் என்று ....பாதுகாப்பான கலவி...

3 hours ago, ஈழப்பிரியன் said:

ஸ்பானிய குட்டிகள் கூடுதலானோர் பதின்ம வயதிலேயே குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள்.

அம்மம்மா என்பார்கள் பார்த்தா அவவுக்கே 30-35 வயது தான் இருக்கும்.

நீங்கள் அம்மம்மாவின் வயசையும் அறிந்து வைத்திருக்கின்றீர்கள் பலே கில்லாடி😅

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிந்திய கருத்தரிப்பும் ஆரோக்கியமானதில்லை தானே?

20- 30 வயதிற்குள் பெற்றெடுக்க வேண்டிய பிள்ளைகளை பெற்றெடுத்து விட்டால் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் ஆரோக்கியம் என்பது என் கருத்து.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.