Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

savukku.jpg?resize=730%2C375&ssl=1

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: எச்சரிக்கை விடுத்த எடப்பாடி பழனிசாமி.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஊடகவியலாளர்  சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது வீட்டில் கழிவு நீர்  ஊற்றி வீட்டை சூறையாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  குறித்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-”ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றுள்ளனர்.

அத்துடன் அவரது  படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடை நீரைக் கொட்டி உள்ளார்கள்.   இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது.

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாரும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம். அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் திமுக-வின் மு.க.ஸ்டாலின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியதுஇ மனசாட்சி உள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.

இக் கொடுமையான செயலை செய்த கும்பலையும், பின்னணியில் உள்ள அனைவரையும் சட்டத்தின் முன்பு நிறுத்தி கடுமையாக தண்டிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். சட்டப்படி நடவடிக்கை எடுக்க தவறும்பட்சத்தில், அ.தி.மு.க. பதவியேற்றவுடன், தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1426274

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

486310384_633813622617841_24534895814161

முகநூலில் நேரலை வீடியோ போட்டு ஊர்வலமா போய்....

சவுக்கு சங்கர் வீட்ல மனித மலத்தை கொட்டிருக்கானுங்க.

கிட்டத்தட்ட மூணு மணி நேரமாக...

ஆனா பாருங்க இது காவல்துறைக்கு தெரியலையாம்??

கட்டெறும்பு

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

486310384_633813622617841_24534895814161

முகநூலில் நேரலை வீடியோ போட்டு ஊர்வலமா போய்....

சவுக்கு சங்கர் வீட்ல மனித மலத்தை கொட்டிருக்கானுங்க.

கிட்டத்தட்ட மூணு மணி நேரமாக...

ஆனா பாருங்க இது காவல்துறைக்கு தெரியலையாம்??

கட்டெறும்பு

ஊரில் பீமுட்டி அடிப்பது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் இந்த கலாசாரம் அழியாமல் இருக்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

ஊரில் பீமுட்டி அடிப்பது என்று கேள்விப்பட்டுள்ளேன்.

இப்போது எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

ஆனால் தமிழ்நாட்டில் இன்னமும் இந்த கலாசாரம் அழியாமல் இருக்கிறது.

மனிதர் குடிக்கும் நீரில்... மலம் கலந்தவர்களுக்கு, இது எம்மாத்திரம்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

மனிதர் குடிக்கும் நீரில்... மலம் கலந்தவர்களுக்கு, இது எம்மாத்திரம்.

உந்த மல மொடல் சிஷ்டம் அடுத்து பரவப்போறது நம்ம மண்ணுக்குத்தான்....😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

உந்த மல மொடல் சிஷ்டம் அடுத்து பரவப்போறது நம்ம மண்ணுக்குத்தான்....😂

ஓம். நிச்சயமாக நமது ஊருக்கும் வரும். அதை நினைக்க… இப்பவே அருவருப்பாக உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு வேற லெவல்.. இந்திய அளவில் எடுத்து செல்றாப்ள இந்த பிரச்சினையை.. சவுக்கின் நல்ல ஆங்கில புலமையும் உம் அதற்கு உதவுகிறது.. ஒரு பத்தாம் வகுப்பு மட்டுமே பாஸ் ஆன சாதாரண கிளார்க்கின் சட்டப்புலமை,மொழிப்புலமை, விடய அறிவுகள் பிரமிக்கவைப்பவை.. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது இவை எவற்றையும் அவர் பாட்சாலையோ பல்கலைக்கழகமோ சென்று கற்கவில்லை.. தானாக புத்தகங்களை படித்து கற்றுக்கொண்டது.. இது பல்கலை போகவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு inspiring story..

Edited by பாலபத்ர ஓணாண்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

486376426_674095571957614_38774054705515

ஒரு ஊடகவியலாளரின் வீட்டில் அதுவும் அவரது வயதான தாயார் தனியாக இருந்தபோது மலம் வீசி தாக்கியுள்ளனர்.

சீமானுக்கு எதிராக அறிக்கைவிட்ட ஊடக அமைப்புகள் இது குறித்து மௌனமாக இருப்பது ஏன்?

சீமானுக்கு எதிராக போராடிய அந்த 32 முற்போக்கு திராவிட அமைப்புகள் இதற்கு ஒரு கண்டனம்கூட தெரிவிக்காமல் இருப்பது ஏன்?

திராவிடத்தின் இந்த “மல அரசியல்” வன்மையான கண்டனத்திற்குரியது.

தோழர் பாலன்

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல் நடத்திய கும்பல்! பரபரப்பு சிசிடிவி காட்சிகள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.