Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம்

28 MAR, 2025 | 10:25 AM

image

சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது கனடா வாழ்தமிழர்களுக்கு மட்டுமல்ல இனஅழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்

vijay_thanika.jpg

இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது.

இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன்.

கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது.

https://www.virakesari.lk/article/210411

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வரலாற்றை மாற்றி, வீரக்கதைகளையும், மூடக்கதைகளையும் புனையலாம். வெளிநாடு செல்லும் இலங்கையர் உண்மைக்கதைகளை அறியும் வாய்ப்பு ஏற்படுத்தப்படுள்ளது. இதற்காக உழைத்த யாவருக்கும் மனமார்ந்த நன்றி. உலகமே இவர்களின் கோரக்கதைகளை படிக்கும் போது, இவர்கள் தங்களை ஏமாற்றிக்கொள்ளட்டும். எதையும் ஏற்கமாட்டோம் அடிபணிய மாட்டோம் என்று அடம்பிடிக்கும்போது, உலகம், முழு இலங்கை  வரலாற்றை படிக்கும். அங்குள்ள அசிங்க கதைகளை படித்து பிரமிக்கும், இப்படியும் ஒரு மதம் கொண்ட சமூகமா, இனமா என? 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தணிகாசலம் தொடர்ந்து உழையுங்கள். நான் கனடாவில் இருந்து இருந்தால் எனது வாக்கு உங்களுக்கு தான் ......லண்டன் மற்றும் அவுஸ்திரேலிய இலும். இதேபோல் சட்டம் இயற்றப்பட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

வாழ்த்துக்கள் தணிகாசலம் தொடர்ந்து உழையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

வாழ்த்துக்கள் தணிகாசலம் தொடர்ந்து உழையுங்கள். நான் கனடாவில் இருந்து இருந்தால் எனது வாக்கு உங்களுக்கு தான் ......லண்டன் மற்றும் அவுஸ்திரேலிய இலும். இதேபோல் சட்டம் இயற்றப்பட வேண்டும்

ஐயோ, இங்கேயும் அரசியலா? ஒருவரையும் நல்லது செய்ய விடாதேங்கோ. உடனடியாக அரசியலுக்குள் பிடிச்சு போடுங்கோ. அதோடு அவர்களுக்கு வேறு வேலை வந்துவிடும், இதற்கான குரல் முடங்கிப்போய்விடும். விடுங்கோ அவரை, ஏனைய நாடுகளுக்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்துமளவுக்கென்றாலும் . 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஏராளன் said:

தமிழின அழிப்பு அறிவூட்டற் கிழமை மீதான வழக்கை தள்ளுபடி செய்தது கனடா உச்சநீதிமன்றம் - தமிழின அழிப்பிற்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும் - விஜய் தணிகாசலம்

28 MAR, 2025 | 10:25 AM

image

சட்டமூலம் 104ஐ எதிர்த்து தமிழின அழிப்பு மறுப்பாளர்களால் கனடா மேன்முறையீடு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை கனடா உச்சநீதிமன்றம்  தள்ளுபடி செய்துள்ளது.

இதேவேளை இந்த தீர்ப்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஒன்ராறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இது கனடா வாழ்தமிழர்களுக்கு மட்டுமல்ல இனஅழிப்பினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மீளமுனையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்களுக்கும் அவர்களின் தலைமுறையினருக்குமான கல்வி அறிவூட்டலுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும்

vijay_thanika.jpg

இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவு ஒவ்வொரு ஆண்டும் மே 12 முதல் 18 வரை ஒன்ராறியோவில் தமிழின அழிப்பு தொடர்பான அறிவு புகட்டல் வாரமாக அங்கீகரிக்கப்பட்டு பள்ளிகள் கல்வியாளர்கள் தமிழ் சமூகம் மற்றும் அனைத்து ஒன்ராறியோ மக்களும் தமிழின அழிப்பு பற்றி கற்றுக் கொள்ள இச்சட்டம் வழிமைக்கிறது.

இத்தருணத்தில் ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் அவர்களுக்கும் எனது சக சட்டமன்ற உறுப்பனர்களுக்கும் சட்டமூலம் 104ஐ பாதுகாப்பதில் அயராது அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அறுபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளுக்கும் குறிப்பாக தமிழ் இளையோருக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாயுள்ளேன்.

கனடா உச்சநீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பு இழந்த அப்பாவி உயிர்களுக்கான நீதியையும் நடைபெற்ற தமிழின அழிப்புக்கான நீதிகோரலுக்கான செயற்பாட்டுக்கும் வலுச் சேர்க்கிறது.

https://www.virakesari.lk/article/210411

Supreme Court of Canada Rejects Appeal Against Tamil Genocide Bill 104 | MPP Vijay Thanigasalam

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் தணிகாசலத்திற்கு… வாழ்த்துக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஐயோ, இங்கேயும் அரசியலா? ஒருவரையும் நல்லது செய்ய விடாதேங்கோ. உடனடியாக அரசியலுக்குள் பிடிச்சு போடுங்கோ. அதோடு அவர்களுக்கு வேறு வேலை வந்துவிடும், இதற்கான குரல் முடங்கிப்போய்விடும். விடுங்கோ அவரை, ஏனைய நாடுகளுக்கும் இந்தச் சட்டத்தை விரிவுபடுத்துமளவுக்கென்றாலும் . 

அவர் அரசியலில் இருந்து தான் இதை செய்து உள்ளார் ....நான் அவரை அரசியலுக்கு தள்ளவில்லை அவராகவே அரசியலை தெரிவு செய்தார் அதிலிருந்து தன்னால் இயன்றவரை உழைகிறார். நான் அதை ஆதரிக்கிறேன் அவ்வளவு தான்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய உயர்நீதிமன்றத் தீர்ப்பு; இனப்படுகொலை மறுப்பை முறியடிக்கும் முக்கிய மைல்கல் அடைவு - தேசிய கனேடியத் தமிழர் பேரவை வரவேற்பு

08 APR, 2025 | 03:06 PM

image

(நா.தனுஜா)

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் தொடர்பான கனேடிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பானது, தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவாகும் என தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக கனேடிய உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த வாரம் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராரியோ மாகாண பாராளுமன்றத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அச்சட்டத்தின் பிரகாரம் வருடாந்தம் மே மாதம் 12 - 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலம் ஒன்ராரியோ மாகாணத்தில் தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரமாகப் பிரகடனப்படுத்தப்படும்.

தமிழினப்படுகொலை தொடர்பிலும், உலகில் இடம்பெற்ற ஏனைய படுகொலைகள் தொடர்பிலும் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்தவர்கள் அந்த ஒருவாரகாலத்தில் அறிந்துகொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலேயே அச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் 104 ஆம் இலக்க தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக தமிழினப்படுகொலை மறுப்பாளர்களால் மேற்கொள்ளப்பட்ட மேன்முறையீடு கடந்த வாரம் கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கருத்து வெளியிட்டுள்ள தேசிய கனேடியத் தமிழர் பேரவை, 'தமிழினப்படுகொலை இடம்பெறவில்லை என முன்வைக்கப்படும் மறுப்புக்களை முறியடிப்பதை இலக்காகக்கொண்டு உலகளாவிய ரீதியில் வாழும் தமிழர்களால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்டுள்ள மிகமுக்கிய மைல்கல் அடைவு இதுவாகும்' எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேவேளை இந்த உயர்நீதிமன்றத்தீர்ப்பு தொடர்பில் பல்வேறு தவறான தகவல்கள் பகிரப்பட்டுவருவதாகத் தெரிவித்துள்ள அப்பேரவை, குறிப்பாக 'கனேடிய உயர்நீதிமன்றம் உண்மையை நிலைநாட்டியுள்ளது.  இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை' எனும் தலைப்பில் வெளியாகியிருக்கும் கட்டுரையில், இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை கனேடிய உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக பொய்யான விடயம் உள்வாங்கப்பட்டிருப்பதாக விசனம் வெளியிட்டுள்ளது.

'தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச்சட்டத்துக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கான கோரிக்கை கனேடிய உயர்நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அவ்வாறிருக்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்ததாக குறித்த கட்டுரையில் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது சட்ட அடிப்படையில் தவறான கருத்து என்பதுடன் கனேடியத் தமிழர்களின் நீண்டகால முயற்சியின் விளைவாகக் குவிந்திருக்கும் அவதானத்தைக் கலைக்கும் செயலாகும்' எனவும் தேசிய கனேடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/211480

  • கருத்துக்கள உறவுகள்+
11 hours ago, ஏராளன் said:

ஒருபக்கம் சிங்களவருக்கு ஆதரவு... இன்னொரு பக்கம் இப்படி ஒரு அறிக்கை...

பொய் பித்தலாட்டம் என்டு நசல் வேலை எல்லாவற்றிலும் சிறந்த அமைப்பு தான் ctc.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.