Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்



காலையில் எழுந்ததும் மைதிலி பர பர ப்பானாள். பிள்ளைகளை பள்ளிக்கு   பஸ் வண்டியில் ஏற்றி விட்டு,  அவசர அவசரமாக சமையலை முடித்து விட்டு  அந்த தொடர் மாடிக் கட்டிடத்தின்  நாலாம் மாடிக்கு செல்ல கையில் சொக்கலேருக்கள் அடங்கிய சிறு பையுடன்  மின் தூக்கி   முன்  காத்திருந்தாள் . இரவு கணவரிடம்  தனது   இரண்டாவது அண்ணா  இத்தாலியில் இருந்து வந்திருப்பதாகவும் (அண்ணாவின் மனைவி அண்ணி இவளது வகுப்பு த்தோழி ) அவரைப் பார்க்க செல்வதாகவும் கூறி இருந்தாள்.  மின் தூக்கி வரும் வரை காத்திருந்தாள் , மனமெல்லாம்  பத்து வருடங்கள் பின்னாடி  சென்றது. இரவிரவாக தலையணை நனைய உறக்கமற்று இருந்தவள்,  இன்று வாழ்க்கையின் ஒரு பெரும் திருப்பம்

அந்த கட்டிட தொகுதியில் வாழும் அண்ணாவின் வகுப்பு தோழன்      சென்ற வாரம் செய்தி சொல்லி இருந்தா.  .நண்பன் விடுமுறைக்காக வரப்போவதாக , அவள் செய்த ஒரு  பிழை  இவ்வளவு பிரச்சனை வரும் என்று எண்ணவில்லை. அவள்  பள்ளிக்கால காதல னை  அந்தஸ்து வேறுபாட்டினால்  வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து  விட்டாள். விஷயம் ஊரில் தெரியவரவே  வீட்டுப்பக்கம் வரக் கூடாது என்று கண்டிப்பாக சொல்லிவிட்டனர். 

அவளும் அதே ஊரில் வெளிநாட்டில்  வந்த காதலனை முறைப்படி கோவிலில் திருமணம் செய்து  இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி பின்னும்,  அவளது  பெற்றோர்களும் இப்படி செய்து   விட்டால்  எனும் கோபத்தில் ,   காலப் போக்கில் நாட்டு பிரச்சனையும்   வரவே  அண்ணா வேறு நாட்டுக்கு சென்றுவிட்டார்.  ஊர் எள்ளிநகையாடும் என எண்ணி இவளது உறவை பெற்றோர் தவிர்த்தாலும் இவள் அம்மா வீட்டுக்குபோய் வருவாள். தாயார் பேசுவார். பிறந்தநாளில் குழந்தைகளைக் கொண்டு போய்க் காட்டுவாள்.  ஊரில் மிகவும் பெரிய  ராணுவ ஆக்கிரமிப்பால் ஊர் விட்டு ஊர் மாறிச் சென்ற போது கடைசியாக பெற்றோரைப் பார்த்து குழந்தைகளை காண்பித்து  தாயருடன் கண்ணீரோடு விடை பெற்றுக் கொண்டாள்.

சில சமயம் அவசரப்பட்டு பதிவு திருமணம் செய்து   விட்டோமோ   என்று எண்ணியதுண்டு. மறுபக்கம் அவன் வெளிநாடு போக வேண்டிய நிர்பந்தம் அவளை அந்த முடிவு எடுக்க தூண்டியது . பின்னர் பெண்கள் விடுதியில் தங்கி   ஆசிரியையாக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். 

மின்தூக்கி வரவே நாலாம் மாடியை அடைந்து , அண்ணி வரவேற்றார்.  நீண்ட நேரம் பார்த்துக்   கொண்டிருந்த அவர்  கைகளைப் பற்றினாள் .  . பொலபொலவென கண்கள் தாரையாக கொட்டியது. 

அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். எழு வயது ஐந்து வயது.சின்னவன் சொக்கலேற் பையை  வாங்கி கொண்டு  அத்தை மடியில் உட்கார்ந்து   கொண்டான். எங்கிருந்து அவனுக்கு அந்த பாச உணர்வு வந்தது ?....சிலமணி நேரம் பேசிய பின் , அவர்களையும் வீட்டுகார அண்ணா   குடும்பத்தினரையும்  சனிக்கிழமை இரவு தன் வீட்டுக்கு   வர அழைத்து விட்டு  தன் இருப்பிடம் சென்றார்

.
மறுநாள்  அவர்கள் வந்தது கணவனையும் தன் குழந்தைகளையும் பேச விட்டு விருந்துண்டு  திங்கட்கிழமை  அவர்கள் உறவுக்கார   மூதாட்டியை   பார்க்க   நேசிங் ஹாம் க்கு செல்ல திட்டம் போட்டார்கள்  .  மைதிலியின் கணவனுக்கு உடனே லீவு   எடுக்க முடியாது. குழந்தைகளும் பள்ளிக்கு   செல்ல வேண்டும். அவர்கள் பள்ளிக்கு அனுப்பிவிட்டு இவளும் அவர்களுடன்   இணைந்து. அது ஒரு முப்பது நிமிட பஸ் பயணம். 

பஸ் தரிப்பு அருகே உள்ள தமிழ்க்கடையில் கிறீம் கிரக்கர்   பிஸ்கட்டும்  நெஸ்டமோல்ட் டின் உம் அண்ணா வாங்கினார். நான் ஏதும் வாங்க என்று அவள் மணிபர்சை திறக்க " நாங்க வேறு நீ வேறா   " என்றார் அண்ணா . பளீர் என முகத்தில் அறைந்தது   வார்த்தைகள்.

பஸ் உம் வரவே  முண்டியடித்து  ஏறிக்கொண்டார்கள். சின்னவர் மீண்டும் அத்தை மடிக்கு வந்து உட்கார்ந்தான்
சில நிமிடங்களில் இறங்கி அவ்விடத்தை அடைந்து   மூதாட்டியைப் பார்த்தும் அவர் மிகவும் சந்தோஷப் பட டார். என்னிடம் திரும்ப திரும்ப உனக்கு எத்தனை பிள்ளைகள்   என கேட்டுக் கொண்டிருந்தார். பேசிக்கொண்டு இருக்கும் போது அங்குள்ள ஒருவர்   கா தில் கையை வைத்துக் கொண்டு

" கலோ"  "கலோ "   என அழைத்துக் கொண்டிருந்தார். இன்னொருவர்  "என்னை வீட்டுக்கு போக விடு"  என  தமிழில் ஆங்கில உதவியாளரிடம் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார்.வயோதிபத்தில் வாழ்க்கை இப்படித்தான் போலும். தமிழ் தெரிந்த உதவி ஆல் சிறார்களை இங்கு கூடிக் கொண்டு வருவது நல்லதல்ல என்றார். அதற்கு அண்ணா சாகும் முன்னர் அவரை பார்த்துவிடவேண்டும்.   இவர்களை விட்டு விட்டு வர முடியாது ,எனவும்  விடுமுறையில் வந்ததாகவும்  சொல்லிக் கொண்டார்.  மீளவும்  பஸ் பயணம்.  வரும் வழியெங்கும் "  நான் வேறு நீ வேறா ? என ஒலித்து கொண்டே இருந்தது.   

மறுபடி வீட்டை அடைந்ததும் அன்று  முழுவதும் என்ன இருந்தாலும்  அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று.  "நீரடித்து நீர் விலகுமா ? "

இனி என் பெற்றோர் ஆன்மா  மகிழ்வோடு நீள் துயில் கொள்ளும்.   Blood is thicker than Water

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

அண்ணாவின்" ரத்தபாசம் "மனம் முழுவதும் நிறைந்து கொண்டது. அண்ணவுடன் சொந்தம் கொண்டாடி ஆயிற்று.  "நீரடித்து நீர் விலகுமா ? "

செம்மண்ணிலே தண்ணீரைப்போல் உண்டான சொந்தம் இது

சிந்தாமணி ஜோதியைப்போல் ஒன்றான பந்தம் இது

தங்கை அல்ல தாயானவள்

கோடி பாடல் அண்ணன் பாட பொருளானாள்

ஒரு தங்க ரதத்தில் பொன்மஞ்சள் நிலவு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

பள்ளிக்கால காதல னை  அந்தஸ்து வேறுபாட்டினால்  வீட்டிற்கு தெரியாமல், பதிவு திருமணம் செய்து  விட்டாள்.

இரத்த பாசம் ...நல்ல கதை ...

இன்றைய காதல் என்றால் முக்கியமாக வெளிநாடுகளில் வீட்டுக்கு காதலனை அழைத்து வந்து நான் இவரை லவ் பண்ணுகிறேன் ...என காதலர்கள் சொன்னால் l...பெற்றோர்கள் சொல்வார்கள் உனக்கு பிடிச்சிருந்தா சரி நீ தானே வாழப்போறவள் என டயலோக் பேசுவோர்கள் ..இடத்துக்கு ஏற்ற வகையில் கலாச்சாரம்,பண்பாடு, ஏற்ற தாழ்வுகள் எல்லாம் மாறுபடும்...🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

வெளிநாடுகளில் வீட்டுக்கு காதலனை அழைத்து வந்து நான் இவரை லவ் பண்ணுகிறேன் ...என காதலர்கள் சொன்னால் l...பெற்றோர்கள் சொல்வார்கள் உனக்கு பிடிச்சிருந்தா சரி நீ தானே வாழப்போறவள் என டயலோக் பேசுவோர்கள் ..இடத்துக்கு ஏற்ற வகையில் கலாச்சாரம்,பண்பாடு, ஏற்ற தாழ்வுகள் எல்லாம் மாறுபடும்...🤣

யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம்

வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விளங்க நினைப்பவன் said:

யாழ்பாணத்திலோ கவரிமான் பரம்பரை என்று வீர வசனம்

வெளிநாட்டில் தக்கன பிழைக்கும் என்று scientific theory யை தான் பவ்வியமாக தங்களுக்கு கடைபிடிப்பார்கள்

உஷ் ,உஷ் கிடுகு வேலிக்குள்ள இருக்கிற எங்கன்ட கலாச்சார,பண்பாடுகளை...வெளியில சொல்லாதையுங்கோ ...

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இப்போதுதான் கவனித்தேன் .........."இரத்த சொந்தம்" நல்லதொரு சிறுகதை . .......... எந்தக் காயங்களையும் காலம் மாற்றிவிடுவதுண்டு . ........! 👍

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.