Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாத்தளை வதைமுகாம்களுக்கு கோட்டா பொறுப்புக்கூற வேண்டும்!

நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்தில் இடம்பெற்ற நபர்களை காணமலாக்கிய பல்வேறு சம்பவங்களில், அப்போது இராணுவத்தின் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாளராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொறுப்புக் கூற வேண்டும் என்று காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் ஒன்றியம் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்ப ஒன்றியத்தின் செயலாளர் மரீன் நிலாஷானி கருத்து தெரிவிக்கையில், “2012 ஆம் ஆண்டு மாத்தளை மாவட்ட வைத்தியசாலையில் மனித புதைகுழியொன்று தோற்றம் பெற்றது.

அதுதொடர்பில் முன்னெடுக்கப்பட்ட வைத்திய பரிசோதனைகளில், 1986 – 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வெளியேற்றப்பட்ட சடலங்கள் என்பது அதில் உறுதிபடுத்தப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே இதுதொடர்பான பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதுதொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து இதனை மூடிமறைத்து விட்டார்கள்.

1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டபாய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராக இருந்தமையினாலேயே இந்த விடயம் மூடி மறைக்கப்பட்டது.

கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி காலப்பகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்திலிருந்த சகல பொலிஸ் நிலையங்களுக்கும், ஐந்து வருடங்களுக்கு மேல் பழைமையான சகலரது ஆவணங்களையும் நீக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, பட்டலந்த வதைகூடத்தை ரணில் முன்னெடுத்துச் சென்ற காலத்தில், மாத்தளை முன்னெடுக்கப்பட்டு வந்த சகல வதைகூடங்களையும் செயற்படுத்தியது, வழிநடத்தியது கோட்டாபய ராஜபக்ஷ ஆவார்” -ன்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

https://seithy.com/breifNews.php?newsID=331299&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சும்மா கதைத்து கொண்டிருக்காமல் செயல் படுங்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

சும்மா கதைத்து கொண்டிருக்காமல் செயல் படுங்கள். சட்டத்தின் முன் அனைவரும் சமன்

இல்லை ..கந்தையா...இவையின் விளையாட்டு..எமது இனத்தின் அழிப்பை நீர்த்துப்போகச் செய்வதே..

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, alvayan said:

இல்லை ..கந்தையா...இவையின் விளையாட்டு..எமது இனத்தின் அழிப்பை நீர்த்துப்போகச் செய்வதே..

உண்மை ...சிங்கள இளைஞர்களின் புதைகுழி விவகாரங்களை விசாரணை செய்ய என ஆணைக்குழுவை அமைத்து உள்ளக பொறிமுறையை பிரபல படுத்த முயற்சி எடுக்கின்றனர்...மேலும் இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அநேகர் இறந்து விட்டார்கள் ..உயிருடன் இருப்பவர்களும் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் ...விசாரணைக்குழு ஆரம்பித்து விசாரணை முடியும் முன்பே குற்றவாளிகள் முதியோர் இல்லத்துக்கு சென்று விடுவார்கள் அல்லது இயற்கை அரவணைத்து கொள்ளும்....

சல்வேந்திரா சில்வா ஜனாதிபதியாக வரவேண்டும் என சில சக்திகள் செயல் படுகின்றன அதில் ஒன்று தான் அவருக்கான தடை ...

இனவாத கூட்டு ...பெளத்த மதம் இர்ண்டையும் சில்வா எடுத்து சென்றால் ...மக்கள் வாக்கு அவருக்கே ..

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

இது நேர்சரி குழந்தைக்கும் தெரியும் ... கண்ணை மூடிகொண்டு நாடகம் ஆடுகினம்

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாத்தளை மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பு அதிகாரியாக கோட்டபாய ராஜபக்ஷ

9 hours ago, nunavilan said:

கோட்டாபய ராஜபக்ஷ கடமையாற்றி காலப்பகுதியில் மாத்திரம் மாத்தளை மாவட்டத்தில் 720 வரையிலானவர்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.

அட பாவி இவற்றை தொழிலே இது தானா

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, alvayan said:

இது நேர்சரி குழந்தைக்கும் தெரியும் ... கண்ணை மூடிகொண்டு நாடகம் ஆடுகினம்

நீங்கள் என்னை நேர்சரி குழந்தை என சொல்லவில்லை தானே ..🤣

நான் யாழ்களத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பி.ஹெச்.டி எடுத்த ஆள் ...சர்டிவிகேட் தேவை என்றால் நிர்வாகத்திடம் கேளுங்கள் ..அவர்களிடம் இல்லை என்றால் நான் மீண்டும் தீசிஸ் எழுதி எடுத்து காட்டுவேன்.. ...🤣

ஒரு நாட்டின் முன்னாள் சபாநாகர் போன்று

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நீங்கள் என்னை நேர்சரி குழந்தை என சொல்லவில்லை தானே ..🤣

நான் யாழ்களத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பி.ஹெச்.டி எடுத்த ஆள் ...சர்டிவிகேட் தேவை என்றால் நிர்வாகத்திடம் கேளுங்கள் ..அவர்களிடம் இல்லை என்றால் நான் மீண்டும் தீசிஸ் எழுதி எடுத்து காட்டுவேன்.. ...🤣

ஒரு நாட்டின் முன்னாள் சபாநாகர் போன்று

அய்யோ புத்தன் சாரு நான் அப்படி சொல்லவில்லை...நான் நீங்கள் எழுதிய விடையத்தை தான் சொன்னேன் ...மன்னித்துவிடுங்கள்.... தயவு செய்து...கொஞ்சநாளா .. நான் யாழில் எழுதுவதெல்லாம் தப்பான அர்த்தங்களாக மாறுகின்றதுபோல எனக்குப் படுகுது...இனி எழுதுவதிலும் ..கருத்திலும் கவனமாக இருப்பென் ...உங்களின் சகல் கருத்துக்களையும் நான் பெரு மனத்துடன் வரவேற்பவன்.. மன்னித்துவிடவும்

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, alvayan said:

🙏சீ சீ இதுக்கு எல்லாம் மன்னிப்பு என்று ...நான் சும்மா பகிடிக்கு எழுதினேன் ...நம்ம முன்னாள் சபாநாயகர் ஞாபகம் வந்தது அது தான் வேறு ஒன்றுமில்லை...சிரிப்பு குறி போட்டுள்ளேன்

🙏

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, alvayan said:

நேர்சரி

இதன். கருத்து என்ன??? எந்த மொழி சொல்???

தமிழ் ஈழம் தர முடியாது ......போங்க” 🤣😂🤪

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

நான் யாழ்களத்தில் அரசியல் விஞ்ஞான துறையில் பி.ஹெச்.டி எடுத்த ஆள் ...சர்டிவிகேட் தேவை என்றால் நிர்வாகத்திடம் கேளுங்கள் ..அவர்களிடம் இல்லை என்றால் நான் மீண்டும் தீசிஸ் எழுதி எடுத்து காட்டுவேன்.. ...🤣

புத்தன் அண்ணா இப்போ து அரசியல் விஞ்ஞான துறையில் மேலும் பட்டம் பெறுவதற்காக தமிழ் சிங்கள பாட்டாளிகள் தலைவன் அநுரகுமார திசாநாயக்க என்ற நூலை ஆய்வு செய்து எழுதி கொண்டிருக்கின்றார் என்பது தற்போதைய தகவல்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kandiah57 said:
  2 hours ago, alvayan said:

நேர்சரி

யோசிச்சு பிடிக்க 2 மணித்தியாலம் எடுத்திட்டுது.....சிறுவர் முன் பள்ளி...சரிதானோ... ( சின்ன முதல்)

30 minutes ago, விளங்க நினைப்பவன் said:

புத்தன் அண்ணா இப்போ து அரசியல் விஞ்ஞான துறையில் மேலும் பட்டம் பெறுவதற்காக தமிழ் சிங்கள பாட்டாளிகள் தலைவன் அநுரகுமார திசாநாயக்க என்ற நூலை ஆய்வு செய்து எழுதி கொண்டிருக்கின்றார் என்பது தற்போதைய தகவல்

ஐயா..அவரை தெரியாமல் ...ஆழமறியாமல் காலை விட்டுவிட்டேன்...காப்பாத்துங்கையா...🤣

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, alvayan said:

யோசிச்சு பிடிக்க 2 மணித்தியாலம் எடுத்திட்டுது.....சிறுவர் முன் பள்ளி...சரிதானோ... ( சின்ன முதல்)

ஆமாம் இரண்டு மணித்தியாலம். ..கூடி போச்சு ...பலர் பாடசாலைகள். என்றும் வரும் என்று நினைக்கிறேன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.