Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கைக் கடற்றொழில் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய விசைப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டு பின்னர் இலங்கைச் சட்டப்படி அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.

அந்த விசைப் படகுகளை மீன் பெருக்கத் திட்டத்தின் கீழ் நடுக்கடலுக்கு எடுத்துச் சென்று மூழ்கடிக்க கடற்றொழில், நீரியல்வளத்துறை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

கடற்றொழில் சங்கங்கள் வலியுறுத்து

இதற்காக யாழ்ப்பாணம், மன்னார் பகுதிகளில் பிடிக்கப்பட்டு, மாவட்டக் கடற்றொழில் திணைக்களங்கள் மூலம் நீதிமன்றங்கள் ஊடாக அரசுடைமையாக்கப்பட்ட படகுகளே நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்படவுள்ளன.

இரண்டு மாவட்டங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய விசைப் படகுகள் சேதமடைந்து, படகுகளின் உள்ளே மழை நீரும் கடல் நீரும் உட்புகுந்து காணப்படுவதனால் அவற்றை அவை தரித்துள்ள கரையோரப் பகுதிகளில் இருந்து அப்புறப்படுத்துமாறு கடற்றொழில் சங்கங்கள் வலியுறுத்துகின்றன.

இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு | Government Decides To Sink Indian Boats

மயிலிட்டித் துறைமுகத்தில் காணப்படும் இத்தகைய படகுகளை அகற்றுமாறு கடற்றொழிலாளர்களுடன் துறைமுக அதிகார சபையும் கோரிக்கை விடுத்து வருகின்றது.

இவற்றைச் சீர்செய்யும் வகையிலும் மீன் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று கடற்றொழில் திணைக்களம் சுட்டிக்காட்டுகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ் நடுக் கடலில் மூழ்கடிக்கப்படவுள்ள படகுகளைக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கடந்த 21ஆம் திகதி யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் நேரில் பயணித்து அவதானித்து அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளார்.

மேலும் விரிசல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வந்து திரும்பியதும் இந்தப் பணி முன்னெடுக்கப்படவுள்ளது. அதுவரை இது தொடர்பில் இரகசியம் காக்கப்படுவதாகவும் கூறப்படுகின்றது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இலங்கை போக்குவரத்து சபையால் கை விடப்பட்ட 15 பேருந்துகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையினரின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நடுக்கடலில் இப்படி மீன் பெருக்கும் நோக்கத்துக்காக இறக்கப்பட்டன.

இந்திய படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு | Government Decides To Sink Indian Boats

இலங்கையில் சிறைப்பிடிக்கப்பட்ட தமது படகுகளை மீட்டுத் தருமாறு இந்தியாவின் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றபோது, நடுக்கடலில் அவற்றை மூழ்கடிக்கும் இலங்கையின் திட்டம் இந்திய கடற்றொழிலாளர்களின் மனநிலையில் மேலும் விரிசலை ஏற்படுத்தக்கூடும் என்றே கருதப்படுகின்றது.

ஏனெனில், இலங்கையில் இந்திய கடற்றொழிலாளர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகள், 2022ஆம் ஆண்டு இதேபோன்று ஏலம் விடப்பட்ட சமயம் இந்தியாவில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. தற்போது யாழ்ப்பாணத்தில் 57 படகுகளும், மன்னாரில் 7 படகுகளும், கிளிநொச்சியில் 10 படகுகளும் அரசுடைமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளாக உள்ளன.

இவற்றையே நடுக்கடலில் மூழ்கடிக்க நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதற்கிடையில் இந்தப் படகுகளில் சிலவற்றைத் தங்கள் பாவனைக்குத் தருமாறு இலங்கைக் கடற்படை இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகின்றது என்று மற்றொரு வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது. 

https://tamilwin.com/

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கைக் கடற்றொழில் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு.

அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு.

அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.

டக்கியும் இப்படித்தான் ஓடாத பஸ்களை கொண்டு போய் கடலில் பேருக்கு கொட்டி விட்டு இந்திய ரோலர் முதலாளி களின் பண பெட்டியை வாங்கி கொண்டு அமைதியாகினார் .

அனுரா அரசு சொல்லிக்கொண்டு இருக்குதே தவிர செயலில் பின்னுக்கு இருக்கினம் அப்படி கொண்டு போய் கடலில் போடுவதுக்கு முன் இஞ்சின் பகுதிகளில் உள்ள கழிவு ஒயில் களை எடுத்து விட்டு போடட்டும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு.

அவர்களுக்கே தெரியும் தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பார்கள் .

அதே போலத்தான் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழில் 7௦ களில் செய்ய வைத்த மிளகாய் சின்ன வெங்காயம் உற்பத்தி கடைசியில் மிஞ்சியது கான்சர் தான் அதிலும் தப்பினால் நிற மாறும் வேடம் பிரான்சில் இப்படியான நபரை கண்டு கொண்டேன் ஊரில் இருக்கும் மட்டும் தோட்டத்துக்கு மருந்து அடிப்பது அவரின் தொழில் இங்கு பிரான்ஸ் வந்த பின் உடம்பு முழுக்க வெள்ளை என்ன வெள்ளைகாரனே அவர்தான் .

அவர் வரணி பகுதியை சேர்ந்தவர் .

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் 74 படகுகளை நடுக்கடலில் மூழ்கடிக்க இலங்கைக் கடற்றொழில் திணைக்களம் திட்டமிடப்பட்டுள்ளது.

செய்ய மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஏற்பாட்டில் இலங்கை போக்குவரத்து சபையால் கை விடப்பட்ட 15 பேருந்துகள் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து கடற்படையினரின் கப்பல்களில் ஏற்றிச் செல்லப்பட்டு நடுக்கடலில் இப்படி மீன் பெருக்கும் நோக்கத்துக்காக இறக்கப்பட்டன.

மீன்குஞ்சுகளை வளர்த்து மீண்டும் இந்தியர்கள் வந்து மீன்பிடிக்க உதவி செய்யினம் போல ...இரண்டு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.... இதில மாட்டுப்பட்டு தவிப்பது அப்பாவி தொழிலாளிகள் ...

1 minute ago, nunavilan said:

செய்ய மாட்டார்கள்.

இந்திய பிரதமர் நாட்டில நிற்கும் பொழுதே இப்படி அறிக்கை விடுகிறோம் பார்த்தீங்களா என மக்களை உசுப்பேத்தி வாக்கு கேட்க இந்த நாட்கம் ..போல‌

7 hours ago, ஈழப்பிரியன் said:

மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு.

அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.

அப்படி செய்தால் இரண்டு பகுதியைனரின் ரகசிய ராஜதந்திர நகர்வு அமபலப்பட்டு விடும்...

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, பெருமாள் said:

அவர்களுக்கே தெரியும் தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பார்கள் .

அதே போலத்தான் சிறிமாவோ பண்டாரநாயக்கா யாழில் 7௦ களில் செய்ய வைத்த மிளகாய் சின்ன வெங்காயம் உற்பத்தி கடைசியில் மிஞ்சியது கான்சர் தான் அதிலும் தப்பினால் நிற மாறும் வேடம் பிரான்சில் இப்படியான நபரை கண்டு கொண்டேன் ஊரில் இருக்கும் மட்டும் தோட்டத்துக்கு மருந்து அடிப்பது அவரின் தொழில் இங்கு பிரான்ஸ் வந்த பின் உடம்பு முழுக்க வெள்ளை என்ன வெள்ளைகாரனே அவர்தான் .

அவர் வரணி பகுதியை சேர்ந்தவர் .

பலர் பாதிப்படைந்துள்ளனரா? சிறிமா ஆட்சியை நிலை நிறுத்தியவர்கள் இடதுசாரிகள் ...

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

மோடி வரும்போது அவரது கையாலேயே மூழ்கடித்தால் இன்னும் சிறப்பு.

அப்புறம் இந்தியாவில் இருந்து எவனும் கதைக்க மாட்டான்.

மோடியை யார் கேட்பது ??? ஒரு பெயரை சொல்லுங்கள் பார்ப்போம்

பஞ்சம் வந்த போது,.....சாப்பிட உணவுகள் இல்லாத போது இந்த சாப்பிடு. என்று இலவசமாக உணவுகள் கொடுத்தது இந்தியா தான் தமிழ்நாட்டு படகுகள். என்ற படியால். இலங்கை கடற்படை கைப்பற்றியது வேறு மாநிலங்கள் என்றால் கை வைப்பார்களா?? இல்லை இந்தியா தான் சும்மா பார்த்து கொண்டிருக்குமா. ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, putthan said:

மீன்குஞ்சுகளை வளர்த்து மீண்டும் இந்தியர்கள் வந்து மீன்பிடிக்க உதவி செய்யினம் போல ...இரண்டு நாடுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தம்.... இதில மாட்டுப்பட்டு தவிப்பது அப்பாவி தொழிலாளிகள் ...

உலகில் தடை செய்யப்பட்ட இந்த கடலடி ரோலிங் மூலம்அவர்களின் வலைகளை கடலில் போடப்படும் வாகனம்களோ அல்லது அவர்களின் படகுகளோ அறுத்து நாசம் பண்ணி விடும் அதனால் மறுபடியும் இலங்கை வடகிழக்கு கடல் பகுதிக்குள் ரோலிங் பண்ணி மீன் பிடிக்க வரமாட்டார்கள் நமது வடகிழக்கு மீனவர் பாரம்பரிய மீன்பிடி முறை அவர்களுக்கு பாதிப்பு பெரிதாக கிடையாது .

இப்படி கடலில் போடப்படும் படகுகளால் தமிழ்நாட்டு பத்து ரோலர் களின் உலகில் தடை செய்ய பட்ட கடலடி வலைகள் அறுக்க பட்டால் மறுபடியும் வடகிழக்கு கடல் எல்லைக்குள் வரவே மாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படகுகள் நல்ல நிலையில் தானே காண்ப்படுகின்றன ..இலங்கை மீனவருக்கு கொடுக்கலாம்தானே....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.