Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ட்றம்பரின் ஊழித்தாண்டவம்

Trumps-America.jpeg

சிவதாசன்

அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் ‘டவுண்ரவுண்கள்’ எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோஞ்சான் ஒருவனுக்கு இயக்கத்தில் சேர ஆசை. ஒரு முக்கிய இயக்கத்தின் நாயகர் ஒருவரிடம் தன் விருப்பத்தைத் தெரிவித்திருக்கிறார். நோஞ்சானின் புஜபல பராக்கிரமத்தை நன்றாக அறிந்த அந்த நாயகர் இதர தோழர்களிடம் இதைக்கூறி அந்நோஞ்சானை விடுப்புப் பார்வையாளர் முன்னால் எள்ளி நகையாடிவிட்டார். மனமுடைந்துபோன நோஞ்சான் “இப்ப உங்களுக்குக் காட்டிறன் நான் ஆரெண்டு” என்றபடி அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். அதற்கும் அந்த நாயகர் கூட்டம் அவரை எள்ளிநகையாடி உரத்துச் சிரித்து வழியனுப்பி வைத்தது. சற்று நேரத்தில் அந்த நோஞ்சான் வீட்டிலிருந்து ஒரு கோடரியுடன் வந்து அச்சந்தியில் விடுப்புப் பார்த்துக்கொண்டு நின்ற ஒரு மெலிந்த முதியவரைத் தள்ளி நிலத்தில் வீழ்த்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது கைகளையும் கால்களையும் கோடரியால் துண்டிது விட்டு “இப்ப என்னை இயக்கத்துக்கு எடுப்பீங்களா?” எனக் கேட்டது.

நம்ம அமெரிக்கட் ட்றம்பரைப் பார்க்கும்போது இந்த நோஞ்சானின் ஞாபகம் வந்து போகிறது. உளவியல் ரீதியாக இருவருக்கும் ஒரே நிலை இருக்கலாமோ? இருவருமே தமது பலவீனங்களையும் இயலாமைகளையும் மறைக்க இப்படியான அநாகரீக தந்திரங்களைப் பிரயோகிக்கின்றனரோ?

ட்றம்பர் கல்வியில் போதாமை கொண்டவர். எவ்வளவு தான் பணமிருந்தாலும் வால் ஸ்ட்றீட் நாயகர்களால் எள்ளி நகையாடப்படுபவர். மோசடிகளாலும், மிரட்டல்களாலும் அவர் சேர்த்த கோடிகளே அவரைச் சுற்றிய அரக்கு மாளிகையைஅ எழுப்ப உதவி செய்தன. அழகிய மனைவி சகிதம் அவர் அங்கு தன்னை முடிசூட்டிக்கொண்ட பின்னர் தான் தன்னை ஒதுக்கிய நாயகர்களை நோக்கி கோடரியுடன் வந்தார். இனிமேல் அவர்தான் ‘இயக்கம்’ என்றளவுக்கு நிலைமையை மாற்றிக்கொண்டார். இந்த ‘இயக்கத்தின்’ மூலம் அவர் அமெரிக்காவுக்கு ‘விடுதலை’ வாங்கித் தருவேன் எனச் சூளுரைக்கிறார்.

ட்றம்பரின் முதலாவது ஆட்சியின் போது அவருக்கு அனுபவம் போதாது. அவரது வழிப்பறிச் சகாக்களே அவரது ஆலோசகர்களாக இருந்தனர். வால்ஸ்ட்றீட்டின் வெள்ளைச் சேட்டு வீரவான்கள் ட்றம்பரை மதிக்கவில்லை. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது தனது மக்கள் ‘சிவப்புக் கழுத்துக்காரர்கள்’ என அழைக்கப்படும் வெள்ளைக் கூலிக்காரர். அவரது இரண்டாவது வருகையைச் சாத்தியமாக்கியது இவர்கள் தான். ட்றம்பரை உசுப்பேத்திவிட்டுத் தமது காரியங்களைச் சாதிக்கலாமென்று நினைத்த மஸ்க் போன்றவர்களும், ட்றம்பர் போடும் எலும்புத் துண்டுகளுக்காக ஓடித்திரியும் மார்க்கோ ரூபியோ போன்றவர்களும் அவருக்கு ஆலவட்டம் வீசுகிறார்கள்.

ட்றம்பர் ஒரு விடயத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறார். இப்போது அவராடும் ஊழித்தாண்டவத்தின் அசைவுகளை அவர் தேர்தலுக்கு முன்னரே கூறியிருந்தவர். “அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகளுக்கு நான் ஒரு பாடம் படிப்பிப்பேன்; திருட்டுத்தனமாக நாட்டில் புகுந்தவர்களை நாடு கடத்துவேன்; போர்களை நிறுத்துவேன்; அமெரிக்க உற்பத்தி நிறுவனங்களை மீண்டும் இங்கு கொண்டுவருவேன்” என அப்போது உரக்கக் கூவியிருந்தார். அவரது வரவை எதிர்பார்க்காத ஜனநாயகக் கட்சியினதும், குடியரசுக் கட்சியினதும் வெள்ளைச் சேட்டு வீரவான்கள் அவரைத் தொடர்ந்து ஏளனம் செய்து அவரது ஓர்மத்தை உச்சிக்குக் கொண்டுசென்றுவிட்டனர். வந்ததும் வராததுமாக அவர் தன் கோடரியை விசுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சொல்லாததைச் செய்யவில்லை.

அவரது முதலாவது கோடரி வீச்சு இறக்குமதித் தீர்வை என்ற பெயரில் அமெரிக்காவின் நண்பர்களான கனடா, மெக்சிக்கோ மீது விழுந்தது. இருவருமே ஓடிப்போய் அவரது கால்களில் வீழ்ந்து ‘மன்னிப்புக் கோரினர்’. இன்னுமொரு தென்னமெரிக்க நாடான கொலம்பியா “நாடகற்றப்பட்டவர்களைத் தான் எடுத்துக்கொள்கிறேன்” எனப் பேரம் பேசி தீர்வையைக் குறைத்துக்கொண்டு ஓரமாக ஒதுங்கிக்கொண்டது. எல் சல்வடோர் ‘அமெரிக்க பயங்கரவாதிகளை’ இன்னமும் இறக்குமதி செய்து விபச்சாரம் செய்துகொண்டிருக்கிறது. இன்னும் 75 நாடுகள் ஓடோடி வந்து ட்றம்பரின் கால்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு கதறுகின்றன. இதில் ‘அனுரதீப’ வும் ஒன்று. நியூசீலந்திற்கு அருகேயுள்ள பென்குவின்கள் வாழும் தீவொன்றுக்கும் தீர்வை விதிக்கப்பட்டதெனவும் விரைவில் அவையும் கதறிக்கொண்டு ஓடிவரலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவையெல்லாம் ட்றம்பரின் ஊழித்தாண்டவத்தின் வெற்றிகள். “சொன்னேன், செய்தேன், பார்த்தீர்களா” என அவர் கர்ச்சிப்பதற்கான அத்தனை காரணங்களுமுண்டு. அவரது வெற்றியைப் பறைசாற்றுமாப்போல் சந்தைகள் ஓலமிட்டுக்கொண்டு சரிகின்றன. சீனா, இந்தியா, ஐரோப்பா போன்ற பெரிய சந்தைகள் “நாங்களும் சண்டியர்கள்” என்ற கணக்கில் வாணங்களை விட்டாலும் சரிவடையும் சந்தைகள் இவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கி விட்டன. மேற்கின் பொருளாதாரத் தடைகளால் முற்றுகையிடப்பட்ட ரஸ்யா, ஈரான், வெனிசுவேலா போன்ற நாடுகள் வாய்களைப் பொத்திக்கொண்டு சிரிக்கின்றன. இந்த ஊழிக்காலங்களுக்கு அவை பழகிப்போய்விட்டவையாக இருக்கலாம்.

ட்றம்பரின் இந்த ஊழித் தாண்டவம் பொருளாதாரம் சார்ந்தது அல்ல. “நான் ஆரெண்டு காட்டுறன் பார். என்ர கால்களில உங்களை விழச்செய்கிறேன்” என்ற அவரது பழிவாங்கலே இது. ஆனால் அவர் கிளப்பிவிட்ட இந்த உலகப் புயலின் பின்னால் ஒரு அமைதி வரத்தான் போகிறது. அதற்கு முதல் சந்தைகள் புரளும், எண்ணை விலைகள் இறங்கும். உலகம் தன் கால்களில் மட்டும் நிற்பதற்கான முயற்சிகளில் இறங்கும். மொத்தத்தில் நாரதர் கலகம் நன்மையில் தான் முடியப்போகிறது.

அமெரிக்க முதலாளிகளான மூட்டைப் பூச்சிகள் வறிய நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக் கொழுத்து விட்டன. அவை தாமாகக் கழரும் நிலை இப்போது. “வேண்டுமானால் வந்து நம்ம வீட்டுக் காரரைக் கடி” என்கிறார் ட்றம்பர். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் அப்பிள் நிறுவனம், வியட்நாமின் இரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் நைக்கி நிறுவனமும் அமெரிக்கா மீள வேண்டும். ட்றம்பர் இதில் பாரபட்சம் காட்டவில்லை. சீனாவின் இரண்டு டொலர் ரீ சேட்டை இனிமேல் இருபது டொலர்களுக்கு அமெரிக்கர்கள் வாங்கப்போகிறார்கள். அமெரிக்கர்களுக்கு இனிமேல் தான் வியர்க்கப்போகிறது. இதுவே தான் ட்றம்பர் சொன்ன அமெரிக்க விடுதலை.

நேற்று அமெரிக்காவிலிருந்து நண்பர் ஒருவர் கூறினார். சுப்பர் மார்க்கட்டுகளில் பழ்ங்கள், காய்கறிகள் தட்டுப்பாடு என. பழங்களைப் பிடுங்குவதற்கு வரிசையில் நின்ற தென்னமெரிக்க குடிமக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டுவிட்டார்கள். தோட்டக்காரர் கூலிகள் கிடைக்காமல் அல்லல் படுகிறார்கள். இவர்கள் தான் ட்றம்பரை ஆட்சியில் அமர்த்தியவர்கள். அவர்களால் தான் ட்றம்பர் தூக்கியெறியப்படவேண்டும். ட்றம்பருக்கு எதிரான ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் களை கட்ட ஆரம்பித்துவிட்டன. மூன்றாவது தடவையாக ட்றம்பரை உள்ளே தள்ளுவதற்கான முயற்சிகளும் ஆரம்பித்து விட்டன. 2026 இல் நடைபெறவிருக்கும் நடுத்தவணைத் தேர்தலில்களில் குடியரசுக் கட்சி படுதோல்வியடைய வாய்ப்புக்கள் ஏராளம்.

கட்சிக்குள் குத்துக்களும் முறியல்களும் ஆரம்பித்து விட்டன. குடியரசுக் கட்சியின் செனட்டர் ரெட் குறூஸ் இரத்தக்களரி பற்றிப் பேச ஆரம்பித்து விட்டார். “ட்றம்பரின் பொருளாதார ஆலோசகர் பீட்டர் நவாரோ ஒரு முட்டாள், ஒரு உருளைக்கிழங்கு மூட்டையை விட மொக்கர்” என இலான் மஸ்க் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இவ்வர்த்தகப் போர் தோல்வியில் முடியும் என்பது மஸ்க் உட்படப் பலருக்குத் தெரியும். அதே வேளை ட்றம்பரின் உளநிலை / குணாதிசயம் பற்றியும் அவர்களுக்குத் தெரியும். இத் தோல்வியையும் அவர் வெற்றியெனவே மாற்ற முற்படுவார். இந்த வணங்காமுடியின் குணத்தை அறிந்து அவரது பரிவாரங்கள் “வெற்றி வேல், வீரவேல்” ஒலிக்கத்தான் வேண்டும். “எனது தீர்வை அறிவிப்பைத் தொடர்ந்து 75 நாடுகள் என்னுடன் பேசிவிட்டன. அவர்களது தீர்வையை 10% மாகக் குறைத்தது மட்டுமல்லாது 90 நாட்கள் அவகாசமும் கொடுத்திருக்கிறேன்” என இந்த வணங்காமுடி வீரவசனம் பேச ஆரம்பித்திருக்கிறது. அவர் பேசிக் களைத்து அடுத்த காரியத்தை ஆரம்பிக்கும்வரை ஒத்தூதவேண்டிய அவசியம் இருக்கிறது. ‘வெற்றி’ ஒன்றே அவரைத் திருப்திப்படுத்தும். அது போலியாகவிருந்தாலுங்கூட.

இக்கலகத்தை முடிவுக்குக் கொண்டுவர இரண்டே வழிகள் தானுள்ளன. “அமெரிக்காவின் வர்த்தகப் பங்காளிகள் எல்லோரும் தமது கால்களில் வீழ்ந்துவிட்டார்கள் அதனால் அவர்களுக்கு நான் சலுகையைக் கொடுத்திருக்கிறேன்” என ட்றம்பருக்கு வெற்றிக் கேடயத்தைக் கொடுத்து விடுவது. இதைப் பெற்றுக்கொண்டு அவர் யூக்கிரெய்னுடனோ, பாலஸ்தீனத்துடனோ அல்லது ஈரானுடனோ விளையாடப் போய்விடுவார். அல்லது அமெரிக்காவை அவர் விடுதலை செய்வதற்கு முதல் அவரிடமிருந்து மக்கள் அமெரிக்காவை விடுதலை செய்தல்.

எல்லாம் அமெரிக்கர்கள் கைகளில்தான்.

|
No image preview

ட்றம்பரின் ஊழித்தாண்டவம் |

சிவதாசன் அது இயக்கங்கள் வானம் தொட்ட காலம். கிராமங்களின் 'டவுண்ரவுண்கள்' எனப்படும் கடைச் சந்திகளில் இயக்கக்காரர் ஆள்பிடிகளில் ஈடுபட்டிருந்த அக்காலத்தின் ஒருநாளில் இச்சம்பவம் நடந்தது. அவ்வூரிலுள்ள நோ...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ட்றம்பரின் ஊழித்தாண்டவம் முதல் நான்கு வருட ஆட்சியின் போதும் இருந்தது.இந்த கட்டுரையாளரப் போல் அன்றைய கட்டுரையாளர்களும் ஊடகவியாளர்களும் ட்றம்பர் மீது சீறிச்சினந்தார்கள்.மூக்கால் அழுதார்கள்.வெடித்தார்கள். இருந்தும் பைடனனுடன் போட்டியிட்ட போதும் மிக இறுக்கமான நிலையிலேயே பைடன் வெற்றி பெற்றார். அதன் பின் பைடனின் நல்லாட்சியில் நடந்த விடயங்கள் அனைவருக்கும் தெரிந்ததே.

இப்போது விடயம் என்னவென்றால் முதல் ஆட்சியில் அவ்வளவு ஊழித்தாண்டவம் ஆடிய ட்றம்பரை ஏன் அமெரிக்க மக்கள் பெரும்பான்மையாக வெற்றியடைய வைத்தார்கள்?

அமெரிக்க மக்கள் உதறித்தள்ளுமளவிற்கு பைடனார் என்ன தவறுகளை செய்தார்? அல்லது கமலா அக்காவின் தேர்தல் வீரியம் போதுமானதாக இல்லையா?

இல்லை அமெரிக்க மக்களுக்கும் மறதிக்குணம் எக்கச்சக்கமா? 😎

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, குமாரசாமி said:

இல்லை அமெரிக்க மக்களுக்கும் மறதிக்குணம் எக்கச்சக்கமா? 😎

அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்ல, மேற்கு நாடுகளில் பிறந்து வாழும் மக்களுக்கும், வந்தேறி வாழும் மக்களுக்கும் கூட அறியாமை தான் பெரும் பிரச்சினை. அந்த அறியாமையில், "வரலாறு அறியாமை" என்ற பகுதி தான் ட்ரம்ப் மீண்டும் வரக் காரணம்.

ஆனால், கோசான் ஒரு தடவை சொன்னது போன்ற "பெரும் சேதமுடனான வெற்றி-pyrrhic victory" ட்ரம்ப் விடயத்தில் எங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்: வாக்குப் போட்ட முஸ்லிம் அமெரிக்கர்களின் பலஸ்தீன கூட்டாளிகளுக்கு ஏற்கனவே இந்த "வெற்றிக் கனி" கிடைத்து விட்டது. அதே போல, பச்சை மட்டையில் காத்திருக்கும் இந்தியர்களுக்கும் வெற்றிக் கனி நெருங்கி வருகிறது.

சிறிலங்கன் அமெரிக்கன் ட்ரம்ப் விசிறிகளுக்கும் நிச்சயம் சில விடயங்கள் நடக்கும், ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Justin said:

ஆனால், கோசான் ஒரு தடவை சொன்னது போன்ற "பெரும் சேதமுடனான வெற்றி-pyrrhic victory" ட்ரம்ப் விடயத்தில் எங்களுக்குக் கிடைக்க வேண்டுமென விரும்புகிறேன்:

சிறிலங்கன் அமெரிக்கன் ட்ரம்ப் விசிறிகளுக்கும் நிச்சயம் சில விடயங்கள் நடக்கும், ஆவலுடன் எதிர் பார்த்திருக்கிறேன்😎!

உலகம் பூராவும் அரிவாளும் சுத்தியலும் ஆட்சி நடத்தும் பொழுது உங்கள் ஆசை நிறைவேறும்🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.