Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

18 APR, 2025 | 03:38 PM

image

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (18) பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

மன்னாருக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை (17) தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க காற்றாலை விடயம் சம்பந்தமாக முன்னுக்குப் பின் முரணான தகவலை வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். அவருடைய தகவலை பார்க்கின்றபோது, கொய்யாரக் கொண்டையிலே தாழம்பூவாம் உள்ளே இருப்பது ஈரும் பேனுமாம் என்கிற கிராமத்துப் பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. அவரது கதையும் அவ்வாறே அமைந்துள்ளது.

காற்றாலை மின் உற்பத்தி திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வு போன்ற திட்டங்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன என்கிற செய்தியை அரசாங்கம் அரச  அதிபருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளது.

அது மாத்திரமின்றி 16.01.2025 அன்று மாவட்டச் செயலகத்தில் காற்றாலை திட்டம் சம்பந்தமான கூட்டம் நடத்தப்பட்டு, தற்காலிகமாக அத்திட்டத்தை இடை நிறுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் பின்னர் 28.01.2025 அன்று நடைபெற்ற  மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இந்த தீர்மானங்கள் எவையும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது கூட மன்னார் சௌத்பார் பகுதியில் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

ஆனால் ஜனாதிபதி நேற்றைய கூட்டத்தில் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் பணிகள் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

தற்போது நான்கு காற்றாலைகள் அமைக்கும் திட்டம் இடம்பெற்று வருகிறது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் உள்ளன. தாழ்வு பாட்டில் 10 காற்றாலைகள் அமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. அதற்கான சுற்றாடல் மதிப்பு அறிக்கை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மூன்று தடவை அவர்கள் கள ஆய்வுக்கு வந்தபோது திருப்பி அனுப்பப்பட்ட போதும் கூட அந்த திட்டத்தை அரசு கைவிடுவதாக இல்லை.

மூன்றாவது திட்டமான கரையோரத்தில் இருந்து மணல் அகழ்வு செய்வதற்கான நில அளவீடு செய்வதற்கு அரச திணைக்களங்கள், அனுமதி வழங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. அதனை வழங்குவதற்கான துரித நடவடிக்கை இடம்பெற்று வருவதாக அறிகின்றோம்.

இந்த மூன்று திட்டங்களும் மன்னாரில் நடைபெறுவதற்கும் நடைபெற்றுக் கொண்டிருப்பதற்குமான சூழலையே கொண்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு அவரது கட்சிக்காரர்கள் அல்லது அரச அதிகாரிகள் தவறான தகவல்களை வழங்குகின்றார்கள். அல்லது ஜனாதிபதி இதனை அரசியல் மேடையாக பயன்படுத்துகிறார் என தெரியவில்லை. 

மன்னாரில் வைத்து ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையிலே வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம்.

இடது சாரித்துவத்தில் ஆட்சி நடத்துகின்றோம் என கூறுகின்றவர்கள், களத்தில் ஒன்று இடம்பெற, வார்த்தைகளில் இன்னுமொன்றை உண்மைக்கு மாறாக பேசுவது என்பது ஜனநாயக விரோதம் ஆகும்.

எனவே, இவ்விடயங்களை ஜனாதிபதி உடனடியாக கவனத்தில் எடுத்து, அவர் கூறியது போல் இத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறைத்தபட்ச சூழல் பாதிப்போடு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும் அவர்  கூறியிருந்தார். இவற்றை அரசு ஏமாற்றும் வார்த்தைகளாகவே பார்க்கின்றோம். இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடாது என கடந்த 2 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம். மன்னார் மக்கள் இத்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என  சிவகரன் தெரிவித்தார்.

மேலும், இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதியின் கருத்து தொடர்பாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மீனவ அமைப்புக்களின் பிரதிநிதி என்.எம்.ஆலம் ஆகியோரும் கருத்துக்களை தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/212298

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் விதிமுறைகளை மீறினார் ஜனாதிபதி - தமிழரசு முறைப்பாடு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க  மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் அக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில்,

மன்னார் நகர சபைக்குத் தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நாம் அங்கீகாரம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்வோம். வேறு தரப்பிடம் நிர்வாகம் போனால் அவர்களின் திட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பத்து தடவை பரிசீலித்தே முடிவெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு உரையாற்றி இருக்கின்றார்.

இந்த உரை அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட இருக்கின்றோம்.

மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை. இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம் எனவும் தெரிவித்தார்.

https://seithy.com/breifNews.php?newsID=332174&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

மன்னாரில் ஜனாதிபதி உண்மைக்கு மாறான தகவலையே வழங்கிவிட்டுச் சென்றுள்ளார். தேர்தல் மேடையில் வாக்கு பெறுவதற்காக நடைபெறுகின்ற சம்பவத்தை இல்லை என்று கூறுவது அரசின் ஆட்சி முறைமைக்கான அவமானம் என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

தீபாவளிக்கு தீர்வு என்று சொன்னதை எந்த கணக்கில் சேர்ப்பது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தீபாவளிக்கு தீர்வு என்று சொன்னதை எந்த கணக்கில் சேர்ப்பது.

“நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்”. என்ற கணக்கில் சேர்ககலாம். 😂😂😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

தீபாவளிக்கு தீர்வு என்று சொன்னதை எந்த கணக்கில் சேர்ப்பது.

மோடியின் இந்தியா பயண கணக்கில் சேர்க்கவும் ....என்னதான் இருந்தாலும் இந்த இடதுசாரிகள் துள்ளின துள்ளுக்கு பெரியண்ணனின் ஒரு விசிட்டில் கொஞ்சம் அடங்கி ,அடக்கி வாசிக்கினம் போல உள்ளது ...இதனால் எங்களுக்கு நன்மை என சொல்லவில்லை ...

33 minutes ago, island said:

😅“நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்”. என்ற கணக்கில் சேர்ககலாம். 😂😂😂

நாளை 2050 இலும் வரலாம் .2075 இலும் வரலாம்.🤣.ஆனால் இந்த வருடம் சொன்ன அடுத்த தீபாவளி ...இந்தவருடமே வந்திடும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, island said:

“நம்புங்கள் தமிழீழம் நாளை கிடைக்கும்”. என்ற கணக்கில் சேர்ககலாம். 😂😂😂

எங்களை அழித்தவர்களுக்கு எப்போது தேவையோ

அப்போது தமிழீழம் பிறக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

எங்களை அழித்தவர்களுக்கு எப்போது தேவையோ

அப்போது தமிழீழம் பிறக்கும்.

அப்போதும் அவர்களின் தேவைக்காகவே தமிழீழம் பிறக்குமாம். எமது வெத்து வேட்டு தலைமைகளின் வரட்டு பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இப்போதாவது உணர்தீர்களே!

10 hours ago, putthan said:

நாளை 2050 இலும் வரலாம் .2075 இலும் வரலாம்.🤣.ஆனால் இந்த வருடம் சொன்ன அடுத்த தீபாவளி ...இந்தவருடமே வந்திடும்🤣

இரண்டுமே சாத்தியமாகாது என்று தெரிந்தும், இரண்டையும் நம்பி தேர்தலில் வாக்குகளையும், விலை மதிப்பற்ற இளைஞர்/ யுவதிகளின் இனிய உயிர்களையும் கொடுத்த, விழலுக்கு இறைத்த நீராக்கிய முட்டாள்தனத்தை இனித் தமிழர்கள் செய்யக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அப்போதும் அவர்களின் தேவைக்காகவே தமிழீழம் பிறக்குமாம். எமது வெத்து வேட்டு தலைமைகளின் வரட்டு பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இப்போதாவது உணர்தீர்களே!

இரண்டுமே சாத்தியமாகாது என்று தெரிந்தும், இரண்டையும் நம்பி தேர்தலில் வாக்குகளையும், விலை மதிப்பற்ற இளைஞர்/ யுவதிகளின் இனிய உயிர்களையும் கொடுத்த, விழலுக்கு இறைத்த நீராக்கிய முட்டாள்தனத்தை இனித் தமிழர்கள் செய்யக் கூடாது.

எமது விடிவிற்காக மரணித்தவர்கள் மாவீரர்கள், அவர்கள் அடிமையாக இருக்கவிரும்பவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அப்போதும் அவர்களின் தேவைக்காகவே தமிழீழம் பிறக்குமாம். எமது வெத்து வேட்டு தலைமைகளின் வரட்டு பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது என்பதை இப்போதாவது உணர்தீர்களே!

அதுவரை எமக்கு ஒரு அரசியல் தீர்வை பெற்றுத்தர விரும்ப மாட்டார்கள்.

ஆனாலும் நாங்க முயற்சி செய்யாமல் இருக்கலாமா?

தமிழர்கள் என்ன தமிழீழமா கேட்கிறார்கள்?

ஒரு சிங்களவன் எப்படி என்ன உரிமையுடன் வாழ்கிறானோ

அதே உரிமையுடன் தமிழனும் வாழ வேண்டுமென்று தானே கேட்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, island said:

இரண்டுமே சாத்தியமாகாது என்று தெரிந்தும், இரண்டையும் நம்பி தேர்தலில் வாக்குகளையும், விலை மதிப்பற்ற இளைஞர்/ யுவதிகளின் இனிய உயிர்களையும் கொடுத்த, விழலுக்கு இறைத்த நீராக்கிய முட்டாள்தனத்தை இனித் தமிழர்கள் செய்யக் கூடாது.

காலம் பதில் சொல்லும் ...இலங்கையில் தமிழினம் தனித்துவமானது என்பதை நிலை நாட்ட இவ்வளவு உயிர்களை பலியிட வேண்டியிருந்திருக்கு...இல்லையென்றால் இந்த இனம் எப்பவோ தன‌து தனித்துவத்தை இழந்து இருக்கும்..போராட்டம் நடைபெறவில்லை என்றால் இனக்கலவரங்கள் ஊடாக இனத்தை அழித்திருப்பார்கள் ...

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு சிங்களவன் எப்படி என்ன உரிமையுடன் வாழ்கிறானோ

அதே உரிமையுடன் தமிழனும் வாழ வேண்டுமென்று தானே கேட்கிறான்.

தருவார்கள் நீங்கள் உங்கள் மத மொழி அடையாளங்களை இழந்து சிறிலங்கன் என்ற தேசியத்தினுள் இரண்டர கலந்த பின்பு நிச்சயமாக உரிமைகள் வழங்கப்படும் ...

நீர்கொழும்பு தமிழன் இப்பொழுது சிறிலங்க தேசியவாதி ...பெர்னாடோ புள்ளே...

சந்திர சேகரம்,அ. சாமுவேல்,சா. போல்ராஜ் போல இரண்டர கலந்து உங்கள் அடையாளங்களை இழந்து தமிழ் பேச தடுமாறும் பொழுது உங்களுக்கு சம உரிமை கிடைக்கும்...தேசிய கட்சியில் இருந்து கொண்டு அவர்கள் சொல்வதை கேட்டுகொண்டிருக்க வேணும்...

பிள்ளையான்,புளோட் மோகன் போன்றவர்கள் இன்று சிறிலங்கா தேசிய வீரர்களாக கொண்டாடப்டுகிறார்கள் ...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.