Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக்க காத்திருக்கும் ஆளுங்கட்சி!

மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியா புளியங்குளத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வவுனியா வடக்கில் போருக்கு பின்னர் கடும் வேகத்தில் குடியேற்ற செயற்பாடுகள் நடைபெறுகின்றது. வவுனியா வடக்கு பிரதேச சபையில் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழரசுகட்சி ஆட்சியமைப்பதற்காக நாம் பல்வேறு செயற்பாடுகளை எடுத்திருந்தோம்.

இன்று நிலைமை மாறியிருக்கிறது. நாட்டிலே ஆட்சி செய்யும் ஒரு அமைப்பு இந்த பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு போட்டியிடுகின்றது. எனவே மத்தியிலே ஆளும் தரப்பிற்கு இந்த பிரதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள்.

பாராளுமன்றில் எங்களுக்கு அடுத்தபடியாக இருந்த ஒரு கட்சி இன்று தேர்தல் மூலம் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஊழல், துஷ்பிரோயகம் என்று மாறிமாறி ஆட்சி செய்த தரப்பின் மீது மக்களுக்கு வெறுப்பு இருந்தது. எனவே அவர் 42 சதவீதம் வாக்குகளை எடுத்திருந்தாலும், மாற்றம் வருகின்றது என்ற எதிர்பார்ப்பிலே அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்தை மக்கள் கொடுத்தனர்.

அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது. துரதிஷ்டவசமாக வடக்கிலும் அரசாங்கம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால் எப்படியான முடிவு பாராளுமன்ற தேர்தலில் வந்திருந்தாலும் அங்கு மூன்றாவது பெரிய கட்சியாக இருப்பது தமிழரசுக் கட்சியே. ஒரு குடியும் மூழ்கி போகவில்லை. குறைந்திருக்கிறது தான். ஆனாலும் நாங்கள் தான் இன்றும் பிரதான தமிழ்க் கட்சி. அதில் மாற்றம் இல்லை.

தேர்தல் முறைமையினால் ஏற்ப்பட்ட பிரதிபலனை வைத்து தமிழ் மக்களின் ஆணையும் எங்களுக்குத் தான் இருக்கிறது. ஆகவே தமிழ்த் தேசிய பிரச்சனையை தாங்கள் பார்த்து கொள்வோம் என்று கூறும் அவர்கள் அதிகாரப் பகிர்வில் நம்பிக்கை இல்லாதவர்கள். வட- கிழக்கு இணைப்பையும் பிரித்தவர்கள். அவர்கள் தமிழர்களின் ஆணை எங்களிடம் தான் இருக்கிறது என்று சொன்னால் அதைவிட அபத்தம் வேறு எதுவுமில்லை. அதைவிட மோசமான ஆபத்து எதுவும் கிடையாது. அந்த ஆபத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

எனவே பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னரான முதலாவது சந்தர்ப்பம் இந்த உள்ளூராட்சி தேர்தல். இதில் தான் அதனை புறந்தள்ள முடியும். எமக்கு ஒற்றை ஆட்சியிலே இணக்கமில்லை. முறையான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும். என்ற கோரிக்கைகளின் உறுதியான மக்கள் தீர்ப்பு தேர்தல்களில் இருந்தே வருகின்றது.

எனவே, கடந்த தேர்தல் மயக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதனை களையக்கூடிய முதலாவது சந்தர்ப்பமாக இது உள்ளது. உள்ளூரின் ஆட்சியை கூட நாங்கள் தக்கவைக்க முடியாவிட்டால் தமிழ் மக்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளது என்று பரப்புரை செய்யக்கூடும். எனவே நாட்டுக்கும் உலகுக்கும் தெளிவான ஒரு செய்தியை சொல்லக்கூடிய ஒரு சந்தர்ப்பம் இது. அதனை நாம் நழுவ விடக்கூடாது.

எங்களுக்கு தேவை தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசை அப்படியேதான் இருக்கிறது. அதில் மாற்றம் இல்லை. அதை சொல்லுவது எப்படி. வாக்குகளை சிதறடித்துவிட்டு சொல்ல முடியாது.

எனவே அதனை ஒருமுகப்படுத்தி சமஸ்டி என்ற ஒரே நிலைப்பாட்டில் இருக்கும் தமிழரசுகட்சிக்கு அந்த வாக்குகளை கொடுத்தால் எங்கள் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு உறுதி இருக்கும். எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்ற கனமான செய்தி சொல்லப்படும். அது கேட்கப்படும். அதுவே பலமானதாக இருக்கும் என்றார்.

https://www.samakalam.com/இனப்பரம்பலை-மாற்றியமைக்/

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, கிருபன் said:

மத்தியிலே ஆளும் தரப்பிற்கு வவுனியா வடக்கு பிதேச சபையின் ஆட்சி அதிகாரம் போகுமாக இருந்தால் இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வேலையை இலகுவாக நடைமுறைப்படுத்துவார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

சரி போகாமல் பண்ண உங்கள் கட்சி என்ன செய்திருக்க வேண்டும்?

கடந்த தேர்தலில் யாழில் 3 எம் பிகள் வந்ததே தமிழ் கட்சிகளாலேயே.

அவர்களுக்கு சந்தர்பத்தை கொடுத்துவிட்டு

மக்கள் முன்நின்று குய்யோ முறையோ என்று குளறுவதில் பிரயோசனம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தனது இரண்டு பிள்ளைகளையும் சிங்களவருக்கு திருமணம் முடித்து கொடுத்தவர்...

சிங்களவர்களுடன் வாழ்வது பெருமை என்று சொன்ன சுமந்திரன்,

இப்போ... தேர்தல் நேரம், இனப்பரம்பல் பற்றி கதைத்து, மக்களை முட்டாள் ஆக்கப் பார்க்கின்றாரா? உங்களது அரசியல் சித்து விளையாட்டு எல்லாம்... அரதப் பழசு. இப்போ... மக்கள் உசாராகி விட்டார்கள், இனியும் மக்களின் காதில் பூ சுற்றலாம் என நினைத்தால்.... உங்களைப் போன்ற முட்டாள்கள் வேறு எவரும் இருக்க முடியாது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2025 at 02:27, கிருபன் said:

அந்தவகையில் சாணக்கியனின் தனி முயற்சியினால் கிழக்கு தப்பிவிட்டது. துரதிஷ்டவசமாக

இப்போ சாணக்கியன் வடக்கில் பீரங்கி பிரச்சாரம் செய்கிறார். தேர்தலின் பின் பார்க்கலாம் வெற்றியா தோல்வியா என?

  • கருத்துக்கள உறவுகள்

இனப் பரம்பல் சார்ந்து இவர் பேசுவது இது தான் முதல் தடவை என்று நினைக்கிறேன். தமிழர் தேசங்களில் இது போன்ற அரசியல் சித்து விளையாட்டுகள் தான் எம் இனத்தின் இன்றைய இழி நிலைக்கு காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய அரசுகளும் இவற்றை தான் செய்தன. அப்போ இவர் பா.உறுப்பினராக இருந்தார். இப்படியான எந்த கருத்தையும் அரசுக்கு எதிராக அப்போ வைத்ததாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

இப்போ சாணக்கியன் வடக்கில் பீரங்கி பிரச்சாரம் செய்கிறார். தேர்தலின் பின் பார்க்கலாம் வெற்றியா தோல்வியா என?

493521198_695468653005669_51308978053881

493530282_695470579672143_15163726749113

உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சாரத்தில்...

சுமந்திரனுக்கும், சாணக்கியனுக்கும்... திரண்ட மக்கள் வெள்ளம்.

யாழ்.தேர்தல் வரலாற்றில்... இப்படி ஒரு அவமானம்.

ஆள் இல்லாத கடையில்... யாருக்கு ரீ ஆத்துகின்றார்கள்.

சுமந்திரன் செய்த முள்ளமாரி வேலைகளுக்கு கிடைத்த பரிசு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.