Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2025 at 12:45, goshan_che said:

இருக்கலாம்.

இதற்கு நீலன் தெரிந்தே உடன்பட்டிருக்கலாம்…

அல்லது பயன்படுவது போல் இருந்து, ஒரு தீர்வை முந்தள்ளுவோம் என நீலன் நினைத்திருக்கலாம்..

அல்லது நீலனை பயன்பட அனுமதிப்பது போல் நடித்து, சந்திரிகா, நீலன் இருவரையும் அமெரிக்கா பயன் படுத்தி இருக்கலாம்..

ஆனால் நீலனை கொன்று, சந்திரிக்கா எதிர்பார்க்காத அதீத நற்பலனை அவருக்கு புலிகள் கொடுத்தனர்.

உங்களின் "லாம் " விடைகள் யார் நீலன் என்பதை என்னை மட்டுமில்லை என்போன்றவர்களின் இமையை உயர்த்த வைத்தது. நீலனை சிறிலங்கா அரசு 100 வீதம் பயன்படுத்திக் கொண்டது என்பதைமட்டும் உறுதியாக நம்புகிறேன்.

அவரின் கொலையை எப்போதும் நியாயப்படுத்தவில்லை.

  • Replies 134
  • Views 5.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Thumpalayan
    Thumpalayan

    இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன் 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை ந

  • goshan_che
    goshan_che

    நன்னிக்கு நன்றி. உங்கள் கருத்தும் நியாயப்படுத்தலும் ஏற்றுகொள்ளவே முடியாதது. ஆனால் பல தரவுகளை தந்துள்ளீர்கள். அதற்குதான் நன்றி. இந்த தரவுகளின் அடிப்படையில்: பாலா அண்ணை “ஏற்புடையது” என கூறிய தீர்வைத்தான

  • நிழலி
    நிழலி

    ஆயுத வழியின்றி அரசியல் வழியில் தன்னால் முடிந்த அளவுக்கு தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை பெற முனைந்த ஒரு தமிழர் இன்னொரு தமிழ் தாய் பெற்ற ஒருவரால் தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்ட அவலமும் விடுதலையின் ப

  • கருத்துக்கள உறவுகள்
On 6/5/2025 at 12:25, goshan_che said:

ஓம்…

ஆனால் ஆங்கிலத்தில் all men are equal but some men are more equal than others என்பார்கள் - அதே போல் சில கொலைகள் எம் சரிதிரத்தின் போக்கையே மாற்றின.

இல்லை - வேறு வழியில்லை இப்போதே முடிப்போம் என மேற்கில் இருந்து சொல்லபட்டதால், போனார்கள். இதுதான் உண்மை.

முடிப்போம் என யார் சொன்னார்கள்? இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் ஆனார்கள்?

ஒரு முடிவுக்கு வர எல்லோரும் ஒன்றானார்கள் ஆயின் பிறகென்ன பேச்சுவார்த்தை?அதன் அர்த்தம் என்ன?

பேச்சுவார்தையை புலிகள் குழப்பியதாக நாடகமாடியவர்களில் எத்கனை பேர் இங்குள்ளீர்கள்??

On 6/5/2025 at 12:36, goshan_che said:

இப்படி இருந்தார்கள் என்பது உண்மை ஆனால் இதில் புலிகள் தேவையில்லாமல் ஏனைய பிரதிநிதிகளை மழுங்கடிக்க அதிக சிரத்தை எடுத்து கொண்டார்கள்.

ஏக பிரதிநிதிகளாக எம்மை ஏற்கிறீர்களோ இல்லையோ, தீர்வு வேண்டும் எனில் எம்மோடு தான் பேச வேணும் என சொல்லி விட்டு சும்மா இருந்திருக்கலாம்.

இந்த ஏக பிரதிநிதிகள் விடயத்தில் புலிகள் அழுங்கு பிடியாக நின்றது - அவர்கள் சர்வாதிகாரிகள் என்ற இலங்கையின் பிரச்சாரத்துக்கு துணை போனது.

இப்படியான நொண்டிச்சாட்டுகளை இப்போதும் கூறி ஏனையவர்களை மடையர்கள் ஆக்காதீர்கள்.

புலிகளை பயங்கரவாதிகள் என் கிறீர்கள். எமது அரசியல் கட்சியாக கூட்டமைப்பை அனுப்புகிறோம் என புலிகள் கூறினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
On 5/5/2025 at 10:51, Justin said:

அமிர்தலிங்கத்தையும், நீலனையும் "பதவிக்காக அரசியல் செய்தோர்" என்ற ஒரே பட்டியலில் போட முடியுமென நான் கருதவில்லை. தீர்வு விடயத்தில் உதவுவதற்காக தமிழரசு தேசியப் பட்டியலில் நீலனைக் கொண்டு வந்தார்கள். பின்னர் நீலனே இது பயனில்லாத பா.உ பதவி என்று விலகிக் கொண்டார்

நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். எப்படி சந்திரிக்காவுக்கு மிக நெருங்கினார் என சொன்னால் நன்னா இருக்கும். சிங்களவர்களில் பல கெட்டிக்காரர்கள் உள்ள போது??

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். எப்படி சந்திரிக்காவுக்கு மிக நெருங்கினார் என சொன்னால் நன்னா இருக்கும். சிங்களவர்களில் பல கெட்டிக்காரர்கள் உள்ள போது??

அவரை "உள் வாங்கினார்கள்" என்று ஏன் சொல்ல வேண்டும்? அவராக கல்வியில் உயர்ந்து சட்டத்துறையில் சர்வதேச மட்டத்தில் ஒரு தனித் துறையில் (constitutional law) நிபுணராக வந்தார் (ஹார்வார்ட்டில் fellowship அப்பாவின் பெயரைப் பார்த்துக் கொடுப்பதில்லை). இப்படியானவர்களை தமிழ் சிங்களம் என்று பார்க்காமல் இலங்கைத் தலைவர்கள் தங்கள் நட்பில் வைத்திருந்திருக்கிறார்கள் (பொன்னம்பலம் சீனியர், சிறிமாவின் "கழு புத்தா", எப்படி என்று தேடினீர்களா?). சட்டத்தரணி கனக் ஈஸ்வரன் பற்றிக் கேள்விப் படவில்லையா? அவர் கூட சந்திரிக்காவின் நட்புத் தான். இதற்கெல்லாம் சதித் திட்டம் தேடி, குத்தி முறிந்து...எப்படி நீங்களெல்லாம் யாழ் போன்ற களத்தில் பதவியில் இருக்கிறீர்கள்? ஆச்சரியக் குறிகள்!

  • கருத்துக்கள உறவுகள்
On 7/5/2025 at 02:25, goshan_che said:

இல்லை - வேறு வழியில்லை இப்போதே முடிப்போம் என மேற்கில் இருந்து சொல்லபட்டதால், போனார்கள். இதுதான் உண்மை.

இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன்

  1. 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள்.

  2. நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது.

  3. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை.

  4. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள்.

  5. வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை.

  6. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது.

  7. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது.

  8. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை.

  9. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை.

  10. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

  11. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள்.

  12. மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Thumpalayan said:

ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்

நான் நம்பவில்லை ......இவரது ஒப்பந்தம் புலிகளை அழிக்க உதவியது எப்படி என்று கூறுங்கள் பார்ப்போம் சிங்களத் தலைவர்கள் அனைவரும் தமிழர்கள் விடயத்தில் ஒத்த கருத்துகள் செயல்பாடுகளை உடையவர்கள்

1 hour ago, nunavilan said:

நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். எப்படி சந்திரிக்காவுக்கு மிக நெருங்கினார் என சொன்னால் நன்னா இருக்கும். சிங்களவர்களில் பல கெட்டிக்காரர்கள் உள்ள போது??

அது வந்து இவர்கள் உடல் ரீதியாகவும் தொடர்பில் இருந்தாதக ஒரு கட்டுரை வாசித்து இருக்கிறேன் அவ்வளவு நெருக்கம் அவா. சொன்னால் இவர்கள் எதிர்த்து கதைக்க மாட்டார்கள் இப்படிப்பட்ட அடிமைகளை விரும்பாத மக்கள் உண்டா ??? இந்த உலகில்……………

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, Kandiah57 said:

நான் நம்பவில்லை ......இவரது ஒப்பந்தம் புலிகளை அழிக்க உதவியது எப்படி என்று கூறுங்கள் பார்ப்போம் சிங்களத் தலைவர்கள் அனைவரும் தமிழர்கள் விடயத்தில் ஒத்த கருத்துகள் செயல்பாடுகளை உடையவர்கள்

மகிந்த சகோதர்கள் போல ரணிலால் முப்படைகளையும் கட்டுப்படுத்த முடியாது. ரணில் மகிந்த கம்பனி போல விடாமல் யுத்தத்தை நடத்தி முடிக்கும் திறன் அற்றவர். ரணில் தந்திரமான ராஜ தந்திரி, கனவான் அரசியல் வாதி. ஆனால் மகிந்த குடும்பம் போன்ற சண்டியன் இல்லை. சில இராஜ தந்திர நகர்வுகள் மூலம் ஆளை மடக்கியிருக்கலாம். அத்துடன் ரணில் தெற்கின் ஆதரவு அற்றவர் அதனால் தான் தமிழர்களின் வாக்கு இல்லாமல் தோற்றார்.

யுத்தம் ஆரம்பிப்பதை அந்த நேரத்தில் புலிகளும் விரும்பினார்கள். அவர்களது பலம் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெரிய விம்பம் ஏற்றப்படுத்தப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தை என்ன விலை கொடுத்தும் உடனடியாக பிடிப்பதே அவர்களது திட்டம். முகமாலைப் பகுதிகளில் பல ஆயிரம் மாவீரர்களை இதனால் இழந்தார்கள். பல முனைகளில் ஒரே நேரத்தில் சண்டை தொடங்கும் என அவர்கள் நினைத்தேயிருக்கவில்லை. மன்னாரிலே முன் லைனிலே விடக்கூட போராளிகள் இருக்கவில்லை. ஆமி ஒரு ரவை கூட சுடாமல் சில இடங்களில் முன்னேறியது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Thumpalayan said:

நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது.

சமாதான காலத்தின் ஆரம்ப பகுதியில் ஐரோப்பா வந்திருந்த இளம்பருதி, நீங்கள் கூறிய அதே கருத்தையே இங்கும் மக்கள் சந்திப்புகளில் தெரிவித்திருந்தார். நான் நேரடியாக அக்கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தேன்.

அது மட்டுமல்ல சமாதான காலத்தின் ஆரம்பத்தில் ஐரோப்பா வந்திருந்த அமுதாப் உட்பட இயக்க உறுப்பினர்கள் அனைவருமே அரசியல் தீர்வு, பேச்சுவார்ததை தொடர்பாக அந்தந்த நாடுகளுன் பிரதிநிதிகளை சந்தித்து பேசுவதையோ அது தொடர்பான அறிவு பூர்வமான செயல்களை செய்வதை விட தமிழ் மக்களை சந்தித்து அடுத்த யுத்த தயாரிப்புகளுக்கான நிதி சேகரிப்புக்கான தூண்டுதல்களையே மக்களுக்கு வழங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினர். மக்கள் சந்திப்புகளில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை. மாறாக ஜெயசிக்குறு, ஆனையிறவு சமர் தொடர்பான தமது வீர அனுபவ கதைகளையே பேசிஅடுத்த யுத்தத்திற்கு மக்களின் நிதி பங்களிப்புற்கு தயார்ப்படுத்தும் வேலைகளையே செய்தனர். இவை எல்லாம் ஐரோப்பிய நாடுகளால் நிச்சயம் அவதானிக்கப்பட்டிருக்கும்.

அத்துடன் ஐரோப்பாவில் வேலை செய்த செயற்பாட்டாளர்களும் அதையே சமாதான காலம் முழுவதும் செய்தனர். பின்னர் யுத்தத்தில் சொதப்பியதும்ம் அதே ஆட்கள் யுத்த நிறுத்தம் வேண்டி ஐரோப்பிய வீதிகளில் மக்களை திரட்டி ஆர்பாட்டங்கள் செய்தனர். அப்போது கூட யுத்த நிறுத்த கோரிக்கைகள் மக்களுடம் இருந்து வந்ததாக காட்டாமல் இயக்க கொடிகளுடனும் பிரபாகரனின் படங்களுடனும் புலிகளின் சார்பிலான ஆர்பாட்டங்கள் என்று ஐரோப்பிய நாடுகள் நம்பும்படியான வேலைகளையே பேதைத் தனமாக செய்தனர். இவர்கள் அனைவருமே இறுதி யுத்தத்தில் மக்கள் அழிவுகளுக்கு இலங்கை அரசுடன் இணைந்து கூட்டுப் பொறுப்பு கூற வேண்டியவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, island said:

அறிவு பூர்வமான செயல்களை செய்வதை விட தமிழ் மக்களை சந்தித்து அடுத்த யுத்த தயாரிப்புகளுக்கான நிதி சேகரிப்புக்கான தூண்டுதல்களையே மக்களுக்கு வழங்குவதிலேயே மிகுந்த ஆர்வம் காட்டினர். மக்கள் சந்திப்புகளில் அரசியல் தீர்வு தொடர்பாக பேசவில்லை. மாறாக ஜெயசிக்குறு, ஆனையிறவு சமர் தொடர்பான தமது வீர அனுபவ கதைகளையே பேசிஅடுத்த யுத்தத்திற்கு மக்களின் நிதி பங்களிப்புற்கு தயார்ப்படுத்தும் வேலைகளையே செய்தனர். இவை எல்லாம் ஐரோப்பிய நாடுகளால் நிச்சயம் அவதானிக்கப்பட்டிருக்கும்.

ஓம் இது போன்று தான் நடைபெற்றதாக எனக்கும் பலர் சொல்லியிருக்கின்றார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

உங்களின் "லாம் " விடைகள் யார் நீலன் என்பதை என்னை மட்டுமில்லை என்போன்றவர்களின் இமையை உயர்த்த வைத்தது. நீலனை சிறிலங்கா அரசு 100 வீதம் பயன்படுத்திக் கொண்டது என்பதைமட்டும் உறுதியாக நம்புகிறேன்.

அவரின் கொலையை எப்போதும் நியாயப்படுத்தவில்லை.

நாம் எதையும் காணாத போது…எதையும் ஐயம் திரிபற நிறுவ ஆதாரம் இல்லாதபோதும்…அனைத்தையும் லாம் இல் தான் எழுத முடியும்.

ஆகவே இங்கே ஒன்றுக்கு மேற்பட்ட “லாம்” விடைகள் உள்ளது.

அதன் ஒரு “லாம்” இன் அடிப்படையில் எமக்கு பாரிய பின்விளைவை தந்த ஒரு கொலை நடந்துள்ளது.

9 hours ago, nunavilan said:

முடிப்போம் என யார் சொன்னார்கள்? இவர்கள் எப்படி நடுநிலையாளர்கள் ஆனார்கள்?

ஒரு முடிவுக்கு வர எல்லோரும் ஒன்றானார்கள் ஆயின் பிறகென்ன பேச்சுவார்த்தை?அதன் அர்த்தம் என்ன?

பேச்சுவார்தையை புலிகள் குழப்பியதாக நாடகமாடியவர்களில் எத்கனை பேர் இங்குள்ளீர்கள்??

அவர்கள் எப்போதும் நடுநிலையாளர்கள் அல்ல.

பேச்சுவார்த்தையை இலங்கை அரசும், புலிகளும் தத்தம் நிலையில் இருந்து குழப்ப முனைந்தார்கள்.

இலங்கை உலக நாடுகளின் பரிவு தன்மீது இருக்கும் படி பார்த்து கொண்டு கெட்டித்தனமாக குழப்பியது.

புலிகள் இதற்கு நேர் எதிர் அணுகுமுறையை எடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

இப்படியான நொண்டிச்சாட்டுகளை இப்போதும் கூறி ஏனையவர்களை மடையர்கள் ஆக்காதீர்கள்.

இது நொண்டி சாட்டு அல்ல.

நடைமுறையில் புலிகள் மட்டுமே பிரச்சினையை தீர்க்கும் வலு உள்ள தமிழர் தரப்பு என்பதும் 85-90% மக்கள் ஆதரவு அவர்களிடமே என்பதும் அனைவருக்கும் தெரியும்.

இதில் 100% நாமே ஏக பிரதிநிதிகள் என ஏற்க வேண்டும் என்ற பிடிவாதம் - பன்னுமுகதன்மை அற்ற, ஒற்றை சர்வாதிகார தலைமை என்ற இலங்கையின் பிரச்சாரத்துக்குத்தான் துணை போனது.

நான் புலிகள் பயங்கரவாதிகள் என எங்கும் சொல்லவில்லை.

8 hours ago, Thumpalayan said:

இதை எழுதுவதால் பல விமர்சனங்கள் வரும், ஆனாலும் அந்த சமயம் நடந்த விடயங்கள் எனது கண் முன்னாலேயே நடந்ததால் எழுதுகிறேன்

  1. 2002 O/L படித்துக்கொண்டிருந்தேன். யுத்த நிறுத்தம் ஆரம்பித்து புலிகளின் அரசியல் துறை நெல்லியடியில், மகாவித்தியாலய வீதியில் அலுவலகம் அமைத்திருந்தார்கள்.

  2. நான் உயர்தரம் படிக்கத்த தொடங்கிய காலத்திலேயே (2003) தனியார் கல்வி நிலையங்களுக்கு இளம்பரிதி, பாப்பா, அமிதாப், லோரன்ஸ் போன்றவர்கள் வந்து கூட்டம் வைப்பார்கள். "இந்த சமாதானம் சர்வதேசத்துக்கு நாங்கள் காட்டும் போக்கு. எங்களைப் பலப்படுத்தவே இந்த நேரத்தை நாங்கள் பாவிக்கிறோம். இதன் பின்னர் இறுதிச்சண்டை வரப்போகுது அதுக்கு நீங்கள் வந்து எங்களுடன் இணையுங்கோ, அதுக்கு முதல் எரிமலைக்கு வந்து மக்கள் பயிற்சி எடுத்து ஆயத்தமாக இருக்க வேணும்" என்ற தொனியிலேயே அந்தக் கூட்டங்கள் இருந்தது.

  3. வன்னியிலோ நிலைமை வேறாக இருந்தது. இயக்க உயர் தளபதிகளின் குடும்பங்களுக்கு எப்போதுமே இருந்திராத சந்தர்ப்பங்கள் வாய்த்திருந்தன. பலருக்கு வாகனங்கள் வழங்கப்பட்டன, தொலைபேசி, மின்சாரம், தொலைக்காட்சி போன்ற வசதிகள் கிடைத்தது. புலம்பெயர் நாடுகளில் இருந்து வருபவர்களால் பல பரிசுகளும் கிடைத்தது. மிக நீண்ட வருடங்கள் கடுமையான யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்கு மூச்சு விட சந்தர்ப்பம் கிடைத்தது. தலைவர் வைக்கும் கிழமை கூட்டங்களும் கொஞ்சம் கொஞ்சமாக நின்று போனது. தலைவருக்கும், வரும் புலம்பெயர் முக்கியஸ்தர்களுடனும் வெளிநாட்டு பிரதிநிதிகளுடனும் செலவிடவே நேரம் போதவில்லை.

  4. இந்த கால கட்டத்தில் தான் KP இடம் இருந்து வெளிநாட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு காஸ்ட்ரோவிடம் கொடுக்கப்பட்டது. அவர்களால் ஒரு கிரேனைட் ஐக்கூட வன்னிக்குள் கொண்டு சென்று இறக்க முடியவில்லை. கப்பல் கப்பலாக ஆயுதங்கள் வந்தும் எல்லாமே மூழ்கடிக்கப்பட்டன. பலர் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளின் வலையில் சிக்கினார்கள்.

  5. வெளிநாடுகளை வெட்டி ஓடிக்கொண்டிருந்த அன்டன் பாலசிங்கத்துக்கு இது எப்படி போகப்போகிறது என தெரிந்திருந்தது. ஒரு கட்ட சமாதானப் பேச்சு வார்த்தையில் அவர் சமஸ்டிக்கு ஓம் என்று போட்டு வந்த பின்னரே அவருக்கு கட்டாய ஓய்வு கொடுக்கப்பட்டது. தமிழ்ச்செல்வனால் பாலசிங்கத்தார் போல செயற்பட முடியவில்லை.

  6. இதே காலத்தில் கருணாவின் பிரிவும் தொடங்கி இயக்கத்தை கூறு போட்டது. பல சண்டைகளில் துணிந்து முன்னேறி அடித்து நொறுக்கும் ஜெயந்தன் படையணி பல பாகங்களாக உடைந்தது. பால்றாஜ் அண்ணையையும் புற்றுநோய் கொண்டு போனது.

  7. யாழ்மாவட்டத்தில் இருந்த போராளிகளும் கொஞ்சம் கொஞ்சமாக இராணுவத்தை இலக்கு வைக்கத் தொடங்கினார்கள். கிளைமோர், கிரேனைட், பிஸ்டல் என பல விடயங்களை உயர்தர மாணவர்களை கொண்டே செய்வித்தார்கள். ஹாட்லி காம்ப் கூட இப்படியான விதத்திலே அடித்து உடைக்கப்பட்டது.

  8. தேவையே இல்லாத ஆணியான மாவிலாறை மூடி அவர்களுக்கு கொஞ்சமும் வசதியற்ற தொப்பிகல காட்டிலே சண்டையை ஆரம்பித்து ஆரம்பத்திலேயே பின்வாங்கத் தொடங்கினார்கள். மாவிலாறில் தொடங்கி முள்ளி வாய்க்காலில் முடியுமட்டும் இது நிக்கவில்லை.

  9. பல அரசியல் கொலைகள், தெற்குப் பகுதி தற்கொலைத் தாக்குதல்கள் குறிப்பாக 2006 இல் கதிர்காமரின் சினைப்பர் சூடு போன்றவை சர்வதேசத்திடம் இருந்து வந்திருக்க கூடிய கொஞ்ச நஞ்ச ஆதரவையும் இல்லாமல் ஆகிவிட்டிருந்தது. இயக்கமோ, சர்வதேசம் உதவும், ஏதாவது ஒரு நாடு தலையிடும் என நம்பியிருந்தார்கள். ஆனால் கிடைத்த சந்தர்ப்பங்களில் உறுதியான சர்தேச உறவுகளை வளர்க்க தவறி விட்டார்கள். ஆயுத ரீதியில் தங்களை கட்டமைத்தது போல அரசியல் ரீதியில் வளர்க்கவே இல்லை. இருபது வயது இளைஜன் பத்து வயசு பிள்ளையின் உள வளர்ச்சியுடன் இருப்பது போன்ற நிலை.

  10. 9/11 பின்னர் மாறி விட்ட பூகோள அரசியல் ஆயுத நிலைமைகளை தலைவர் சரியாக எடை போட்டிருக்கவில்லை. தொழில் நுட்ப ரீதியில் அவர்களின் வளர்ச்சி இலங்கை அரசின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.

  11. இறுதிக் காலங்களில் கட்டாய ஆட் சேர்ப்பு, வரிகள் போன்ற காரணங்களால் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போனார்கள்.

  12. மகிந்தவிடம் மிகப்பெரும் தொகை பணத்தை வாங்கி ரணிலை புறக்கணித்தார்கள். ரணில் வெண்டிருந்தால் இயக்கம் இப்பவும் இருக்கும்.

நன்றி.

இருபது வருடம் முந்தியது என்பதால் பலருக்கு பலது மறந்து போய்விட்டது.

தேவையான நினைவூட்டல்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Thumpalayan said:

அவர்களது பலம் பற்றி அவர்களுக்குள்ளேயே ஒரு பெரிய விம்பம் ஏற்றப்படுத்தப்பட்டிருந்தது

இப்போதும் யதார்த்தை உணர மறுக்கும், புலம்பெயர் ஆட்கள் கூட இந்த விம்பத்தை கட்டி எழுப்புவதில் பெரும் பங்காற்றினர்.

கூடவே “மோட்டு சிங்களவன்” stereotype ற்கு மகிந்தவும் பொருந்தி வர - 2005 மாவீரர் தின உரை முடிவில் - எப்படியாவது சண்டையை ஆரம்பிதால் போதும் - அடுத்தது தமிழ் ஈழம்தான் என்ற நிலையிலேயே பலர் இருந்தனர்.

திருநாவுக்கரசு, நிலாந்தன் போன்றோர் டிவியில் தோன்றி அடுத்த பேச்சுவார்த்தை எல்லை நிர்ணயம் தொடர்பாக என்றனர்.

இதேகாலம்தான் என நினைக்கிறேன் குதிரை கஜன் 60,000 சவப்பெட்டி கதை பாராளுமன்றில் சொன்னார் என நினைக்கிறேன்.

ஆனால் திருநாவுக்கரசு, நிலாந்தன், கஜன் எவரும் அதன் பின் வந்த போரில் சாகவில்லை. ஆனால் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் இன்னும் அரசியல் செய்கிறார்கள், பேசுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

நீலன் திருச்செல்வத்தின் மகன் என்பதால் உள்வாங்கப்பட்டிருக்கலாம்

LLB இலங்கை….

Fulbright Scholar….

Yale, Harvard இல் சட்ட மேற்படிப்பு, கலாநிதி, விசிட்டிங் லெக்சரர்….

உலகில் அந்த நேரம் பெயர் சொல்ல கூடிய அரசியல் சட்ட நிபுணர்களில் ஒருவர்…

அப்போ அரசியல் சட்ட உதவி தேவைப்பட்ட கூட்டணி இவரை இதற்க்கா உள்வாங்கி இராது…

திருசெல்வம் மகன் என்பதால்தான் உள்வாங்கி இருக்கும்.

நீலன் சந்திரிகா ஜனாதிபதி ஆக முன்னரே எம்பி ஆகி விட்டார்.

1983 இலேயே நீலன் எம்பி. ஒரு நடப்பு கூட்டணி எம்பி சாக, அந்த இடத்துக்கு சிறையில் இருந்த குட்டிமணியை போட்டு, பின் அவர் பதவி ஏற்க அனுமதிக்காகையால் நீலன் எம்பி ஆகிறார்.

83 கலவரம், 6ம் திருத்த சட்டத்தை எதிர்த்து கூண்டோடு பதவி விலகிய அல்லது பதவி இழந்த எம்பிகளில் நீலனும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நாங்கள் எளிய தமிழ் பிள்ளைகள். இவை எல்லாம் மீம்ஸிலும் வட்ஸ்சபிலும் ரீல்ஸிலும் வந்தால் மட்டுமே நம்புவோம். 😂

  • கருத்துக்கள உறவுகள்

தலைவருக்கு பல உண்மைகளை தளபதிகள் கூறவில்லை. “அண்ணை கோவப்படும், ஆமியை அடிச்சு கலைச்சுப்போட்டு சொல்லுவம்” என்பதே அவர்களது நினைப்பாக இருந்தது. இப்படியான சின்னப் புண்ணை வைத்துக் கொண்டிருக்க அது கால் கழட்டும் நிலைக்கு வந்து விட்டது. அதைவிட அவருக்கு நீரிழிவு நோய் வேறு சிரமத்தை கொடுத்தது.

தலைவர்ஆயதத்திலே அசையாத நம்பிக்கை உடையவர். சமாதான ஒப்பந்தத்திலே விருப்பமின்றித்தான் கையொப்பம் இட்டார். சமாதான ஒப்பந்தம் இடும்போது புலிகள் மிகப் பலமான நிலையிலே இருந்தார்கள். ஓயாத அலைகள் சண்டையிலே அரியாலை மட்டும் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு கிழமையிலே யாழ்ப்பாணம் விழுந்திருக்கும். ஆமி மந்திகை காம்பிலே ஒரு மல்ரி பரலை நிப்பாட்டிப்போட்டு இரவு பகலாக வெழுத்தார்கள், அப்பிடி இருந்தும் இயக்கம் முன்ஏறிக்கொண்டிருந்தது. யாழ் குடாவில இருந்த 40,000 ஆமியும் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலை. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டு யுத்த நிறுத்தத்தை அறிவிக்கச் செய்தார்கள். இயக்கத்திற்கு வேறு வழி இருக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கத்திற்கு சந்திரிகாவுடன் ஒத்துவரவில்லை. சந்திரிக்காவை கேலி செய்து சில இயக்கப்பாட்டுகளும் வந்தன. ஆனால் இதுவரை கிடைத்த தீர்வுத் திட்டங்களில் சந்திரிக்கா முன் மொழிந்த திட்டமே சிறந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Thumpalayan said:

அரியாலை, தென்மராட்சி பின்னடைவுக்கு பாகிஸ்தானில் இருந்து உடனடியாக கொண்டுவரப்பட்ட மல்ரிபரலும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தென்மராட்சி பின்வாங்கலை அடுத்து அக்னி கீலவிற்கு பின்னர் தான் சமாதான ஒப்பந்தத்திற்கு போனது.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஏராளன் said:

அரியாலை, தென்மராட்சி பின்னடைவுக்கு பாகிஸ்தானில் இருந்து உடனடியாக கொண்டுவரப்பட்ட மல்ரிபரலும் ஒரு காரணமாக கூறப்பட்டது. தென்மராட்சி பின்வாங்கலை அடுத்து அக்னி கீலவிற்கு பின்னர் தான் சமாதான ஒப்பந்தத்திற்கு போனது.

எனது ஞாபகப்படி இயக்கம் யாழ்பாணத்தை இந்தா பிடிக்கிறம் எண்டு முற்றுகைக்குள் கொண்டு வந்த பின்னரே வெளிநாட்டுத் தலையீட்டால் பின்வாங்கினார்கள். இதற்கும் சமாதான ஒப்பந்த காலத்திற்கும் இடையிலா அக்கினி கீல சண்டை நடந்தது?

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Thumpalayan said:

எனது ஞாபகப்படி இயக்கம் யாழ்பாணத்தை இந்தா பிடிக்கிறம் எண்டு முற்றுகைக்குள் கொண்டு வந்த பின்னரே வெளிநாட்டுத் தலையீட்டால் பின்வாங்கினார்கள். இதற்கும் சமாதான ஒப்பந்த காலத்திற்கும் இடையிலா அக்கினி கீல சண்டை நடந்தது?

அக்னிகீல முறியடிப்புச் சமர்

https://padippakam.com/padippakam/document/ltte/Book/book00021.pdf

இந்திய தலையீட்டால் தாமதமாக, மல்ரிபரல் வரவோடு தென்மராட்சியில் ஆளணி இழப்பு அதிகரிக்க பின்வாங்கினார்கள். பின்வாங்கலை பின்னடைவாக கருதி அக்னிகீல தொடங்கி இராணுவம் பலத்த இழப்புகளைச் சந்தித்ததோடு இராணுவ சமநிலை ஏற்பட்டதால் ஒப்பந்தம் வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

ஓ இப்ப ஞாபகம் வருகுது (வயசும் வட்டுக்க போகுதெல்லே - இப்ப 39).

சமாதான காலத்தில் இயக்கம் வழங்கிய சொப்பிங் லிஸ்டில் இரண்டு பிரதானமான ஐட்டங்கள் இருந்தது.

1) மல்ரி பரல் - பிற்காலத்தில் சிறியது ஒன்று வைத்திருந்தார்கள்

2) கிபிர் அடிக்கிற மிசைல்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Thumpalayan said:

ஓ இப்ப ஞாபகம் வருகுது (வயசும் வட்டுக்க போகுதெல்லே - இப்ப 39).

சமாதான காலத்தில் இயக்கம் வழங்கிய சொப்பிங் லிஸ்டில் இரண்டு பிரதானமான ஐட்டங்கள் இருந்தது.

1) மல்ரி பரல் - பிற்காலத்தில் சிறியது ஒன்று வைத்திருந்தார்கள்

2) கிபிர் அடிக்கிற மிசைல்

நடந்து ஏறத்தாழ 24 ஆண்டுகளின் பின் எழுதுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Thumpalayan said:

2) கிபிர் அடிக்கிற மிசைல்

https://archives.fbi.gov/archives/newyork/press-releases/2012/two-alleged-operatives-of-the-tamil-tigers-terrorist-organization-extradited-to-brooklyn

இந்த ஆயுதம் வாங்கப் போய்த்தான், 2006 இல் அமெரிக்க உள்ளூர் புலனாய்வுப் பிரிவின் வலையில் இரு தமிழ் அமெரிக்கர்கள் சிக்கினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

யூகேயில் இருந்து வந்த டாக்டர் சத்தியமூர்த்தியும்.

?

2 hours ago, ஏராளன் said:

அக்னிகீல முறியடிப்புச் சமர்

https://padippakam.com/padippakam/document/ltte/Book/book00021.pdf

இந்திய தலையீட்டால் தாமதமாக, மல்ரிபரல் வரவோடு தென்மராட்சியில் ஆளணி இழப்பு அதிகரிக்க பின்வாங்கினார்கள். பின்வாங்கலை பின்னடைவாக கருதி அக்னிகீல தொடங்கி இராணுவம் பலத்த இழப்புகளைச் சந்தித்ததோடு இராணுவ சமநிலை ஏற்பட்டதால் ஒப்பந்தம் வந்தது.

இதுதான் சரியான குறிப்பு.

2 hours ago, Thumpalayan said:

1) மல்ரி பரல் - பிற்காலத்தில் சிறியது ஒன்று வைத்திருந்தார்கள்

கொக்கட்டி சோலையில் ஒன்றை வைத்து வவுணதீவு முகாம் மீதும் தாக்கியதாக நினைவு.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Justin said:

https://archives.fbi.gov/archives/newyork/press-releases/2012/two-alleged-operatives-of-the-tamil-tigers-terrorist-organization-extradited-to-brooklyn

இந்த ஆயுதம் வாங்கப் போய்த்தான், 2006 இல் அமெரிக்க உள்ளூர் புலனாய்வுப் பிரிவின் வலையில் இரு தமிழ் அமெரிக்கர்கள் சிக்கினார்கள்.

மூளையற்ற செயல். யூகோஸ்லாவியா, செக், ஆபிரிக்க நாடுகள் போன்ற சட்ட ஓட்டைகள் உள்ள, அரச அதிகாரிகளை “வாங்கக் கூடிய” நாடுகளில் தான் ஆயுத வியாபாரம் செய்தார்கள். புதியவர்கள், “பழசுகளுக்கு ஒண்டும் தெரியாது” எண்டு எல்லாவற்றையும் கவிழ்ததுக் கொட்டினார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Thumpalayan said:

தலைவர்ஆயதத்திலே அசையாத நம்பிக்கை உடையவர். சமாதான ஒப்பந்தத்திலே விருப்பமின்றித்தான் கையொப்பம் இட்டார். சமாதான ஒப்பந்தம் இடும்போது புலிகள் மிகப் பலமான நிலையிலே இருந்தார்கள். ஓயாத அலைகள் சண்டையிலே அரியாலை மட்டும் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு கிழமையிலே யாழ்ப்பாணம் விழுந்திருக்கும். ஆமி மந்திகை காம்பிலே ஒரு மல்ரி பரலை நிப்பாட்டிப்போட்டு இரவு பகலாக வெழுத்தார்கள், அப்பிடி இருந்தும் இயக்கம் முன்ஏறிக்கொண்டிருந்தது. யாழ் குடாவில இருந்த 40,000 ஆமியும் முற்றுகைக்குள் அகப்பட்ட நிலை. இந்த நிலையில் தான் இந்தியா தலையிட்டு யுத்த நிறுத்தத்தை அறிவிக்கச் செய்தார்கள். இயக்கத்திற்கு வேறு வழி இருக்கவில்லை.

2002 இல் ரணில் சமாத. ஒப்பந்தம் எழுதாமல் இருந்தால் ..புலிகள் தொடர்ந்தும் பலமுடன். இருந்து இருப்பார்கள் ராஜபக்ஷ குடும்பம் புலிகளை வென்றிருக்க. முடியாது இது பற்றி மருத்துவர் மகேஸ்வரன் ஒரு புத்தகம் எழுதி உள்ளார் ...இந்த சமாத காலத்தில் இயக்கத்தில் கீழ் நிலையில் உள்ளவார்கள். அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டு. விட்டார்கள் மேல் நிலையில் உள்ளாவர்கள்.

காணி. வேணடுதல்.

வீடுகள் கட்டுவது

வாகனங்கள் வேண்டுவது .... .....இப்படி பொது வாழ்க்கையில் படிப்படியாக இடுபட. ஆரம்பித்து விட்டார்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட கீழ் நிலையில் உள்ளவர்கள் வெளிநாட்டு போய்விட்டார்கள் அனைவரும் இல்லை ஒரு. பகுதியினர். ரணிலால். தான் புலிகள் பலவீனம் அடைந்தார்கள் ....2002 இல் ராஜபக்ஷ சண்டை இட்டிருந்தால். வெல்ல முடியாது வென்றுயிருக்கமாட்டார். ஆகவே போர் வெற்றிக்கு முதல் காரணம் ரணில் அவரது சமாதான ஒப்பந்தம் ஆகும் இது எனது கருத்துகள் இல்லை அந்த புத்தகம் சொல்கிறது ரணிலுக்கும். ராஜபக்ஷ க்கும். வாக்கு வித்தியாசம் எத்தனை வீதம். ?? ஒரு 5 வீதம்

இருக்குமா ?? சமாத ஒப்பந்தம் கையெழுத்திட்டப்படவில்லை. என்றால் புலிகள் இருந்து இருப்பார்கள் ...ஆனால் ஒப்பந்தம் எழுதிய பின். .....அந்த ஒப்பந்தால். புலிகள் பலவீனமான பின்னர் ரணில் கூட வென்று இருப்பார்

8 hours ago, Thumpalayan said:

இயக்கத்திற்கு சந்திரிகாவுடன் ஒத்துவரவில்லை. சந்திரிக்காவை கேலி செய்து சில இயக்கப்பாட்டுகளும் வந்தன. ஆனால் இதுவரை கிடைத்த தீர்வுத் திட்டங்களில் சந்திரிக்கா முன் மொழிந்த திட்டமே சிறந்தது.

எழுதப்பட்ட திட்டங்கள் அமுல் படுத்த முடியாது இல்லையா??? அமுல் செயய முடியாத

திட்டங்கள் வரைபுகள். எப்படி சிறந்தது ஆகும் ??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.