Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

14 hours ago, goshan_che said:

ஆக எனக்கு 2 தெரிவுதான் புலப்படுகிறது.

  1. இதை பற்றி நாம் அலட்டி கொள்ளகூடாது. அந்த மக்கள் சந்ததி சந்ததியாக எந்த உரிமையும் அற்ற ஏதிலிகளாகவே இருப்பது அவர்கள் தலைவிதி என விட்டு விடுவதை தவிர வேறு வழியில்லை.

  2. தமிழ் நாட்டு கட்சிகளை லாபி பண்ணி, CAA யில் இவர்களை சேர்க்க கோரிக்கை வைக்க சொல்லலாம்.

இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள்.

குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது.

பாஜக குடியுரிமை கொடுக்கவேமாட்டாது. அவர்களின் தமிழ் இன விரோதம் வெளிப்படையானது கூட. என்றாவது காங்கிரஸ் அல்லது ஒரு கூட்டாட்சி வந்தால், இது நடக்கக்கூடும்.

தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.

  • Replies 64
  • Views 2.9k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • Kandiah57
    Kandiah57

    அது ரூபாய் இல்லை பவுண்டுகள் பிரித்தானியா நாணயம் .....தயவுசெய்து வடிவாக ஆறுதலாக வாசியுங்கள் 🤣🤣. இப்படி கோஷன் கொடுத்தால் நானும் ஊருக்கு போவேன் குமாரசாமி தமிழ் சிறி. கவி. அரு

  • goshan_che
    goshan_che

    சரி 5000 கூட என்றால் 2500£. இந்தியாவில் இருப்பது 20,000 குடும்பங்கள். அதில் அரைவாசி திரும்பி வந்து, அவர்களை நாட்டில் நிலை நிறுத்த தலா £2500 கொடுத்தால் - மொத்த செலவு £25 000 000. இதை உலகளாவிய தமிழ் அம

  • நியாயம்
    நியாயம்

    மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அ

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, vasee said:

குழந்தைகளுக்கான கல்வி உதவி, மற்றும் கூலித்தொழில் தொடர்ந்து நசுங்கி போகாமால் சுயமுயற்சிகளுக்கு உதவினாலும் ஒரு வட்டம் போல மீண்டும் வந்து ஆரம்ப புள்ளியிலேயே நிற்பார்கள்.

நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் பலதும் மிகச் சரியான கவனிப்புகள், வசீ.

சில வேளைகளில் 'என்னடா இது.................' என்று களைத்தும் போயிருக்கின்றேன்.

எதற்கெடுத்தாலும் பிறரை அல்லது பிற நிகழ்வுகளை குற்றம் சொல்லும், காரணமாகக் காட்டும் இயல்பு எங்களிடம் கொஞ்சம் அதிகமாக வந்து விட்டதோ என்றும் தோன்றும்................😌.

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரசோதரன் said:

மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.

எப்படி முடியும்?? அவர்களுக்கு வேலை இல்லை ...ஆகவே கொடுப்பது கடினம் ஜேர்மனியில் பொறியியலாளர்களுக்கும். .......சமையல்காரர். மெக்கானிக் மேசன்.

தச்சு தொழிலாளர்கள் .....போன்றேருக்கு சம்பளம் கிட்டத்தட்ட ஒன்று தான் சமன் ஆகும் வித்தியாசம் உண்டு” ஆனால் பெரிது இல்லை ஆயிரம் இரண்டாயிரம் தான் ஆனால் இலங்கையில் இந்தியாவில் மிகப்பெரிய வித்தியாசம்

இலங்கை இந்தியாவில் குப்பை அள்ளுவோர்,...கழுவி உடைப்போர். ..........கூலித்தொழிலாளர்கள். சம்பளம் இரண்டு மடங்குகள் உயர்ந்த வேண்டும் அவர்களும் கோட். சூட். கார் வீடு,...என்று அரசாங்கம் உத்தியோகத்தர்கள் போல் சமுதாயத்தில் வலம் வர. வேண்டும் ஏன் அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் ????

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரசோதரன் said:

இந்த மக்களை முடிந்த அளவிற்கு அந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியே வரச் செய்வதே எங்களால் செய்யக் கூடியதாக இருக்கும் என்று நினைக்கின்றேன். அங்கேயே இருக்கும் எங்களின் தலைமுறை இந்தச் சூழலுக்கும், இது கொடுக்கும் ஒரு விதமான பெரும் பிரயத்தனங்கள் அற்ற வாழ்க்கை முறைக்கும் நன்கு பழகிவிட்டார்கள். ஆனால் அங்கேயே பிறந்து வளரும் அடுத்த அடுத்த தலைமுறையில் முன்னே போக முயற்சி செய்பவர்கள் இருக்கின்றார்கள். குடியுரிமை இல்லாததால் எம். காம் முடித்தாலும் ஒரு ஆசிரியப் பணி கூட கிடைக்காது என்ற இக்கட்டான நிலையிலும், இந்த இளையவர்கள் பலர் தனியார் துறை நோக்கிப் போக முயல்கின்றார்கள்.

குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது.

பாஜக குடியுரிமை கொடுக்கவேமாட்டாது. அவர்களின் தமிழ் இன விரோதம் வெளிப்படையானது கூட. என்றாவது காங்கிரஸ் அல்லது ஒரு கூட்டாட்சி வந்தால், இது நடக்கக்கூடும்.

தமிழ்நாட்டு மாநிலத்திற்காக நீச்சல் போட்டிகளில் அங்கேயே, மண்டபம் குடியிருப்பில் என்று நினைக்கின்றேன், பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிள்ளை சில வருடங்களாக பங்குபற்றிக் கொண்டிருக்கின்றார். சமீபத்தில் கூட இந்திய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பாக போட்டியிட்டு தங்கங்களை வென்றிருக்கின்றார். இந்தியக் குடியுரிமை இல்லாவிட்டாலும் கூட, மாநிலத்திற்காக விளையாட முடியும் என்றால், மாநிலத்தில் இருக்கும் சில வேலைவாய்ப்புகளையும் தகுதியான எம்மக்களுக்கு தமிழ்நாட்டு அரசால் ஏன் வழங்க முடியாதுள்ளது என்று தெரியவில்லை.

தீர்க்கமான பார்வை, தெளிவான கருத்து.

50 minutes ago, Kandiah57 said:

இலங்கை இந்தியாவில் குப்பை அள்ளுவோர்,...கழுவி உடைப்போர். ..........கூலித்தொழிலாளர்கள். சம்பளம் இரண்டு மடங்குகள் உயர்ந்த வேண்டும் அவர்களும் கோட். சூட். கார் வீடு,...என்று அரசாங்கம் உத்தியோகத்தர்கள் போல் சமுதாயத்தில் வலம் வர. வேண்டும் ஏன் அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் ???

அப்படியே மாடு மேய்ப்பதை அரச தொழிலாக்கவேண்டும்🤣

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, goshan_che said:

அப்படியே மாடு மேய்ப்பதை அரச தொழிலாக்கவேண்டும்🤣

சீமான் முதலமைச்சராக வந்தால் உங்கள் விருப்பம் நிச்சயம் நிறைவேற்றுவர். எனக்கு விருப்பமான தொழில் ஆனால் பசு மாடுகள் தான் இல்லை 😀

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kandiah57 said:

எப்படி முடியும்?? அவர்களுக்கு வேலை இல்லை ...ஆகவே கொடுப்பது கடினம் ஜேர்மனியில் பொறியியலாளர்களுக்கும். .......சமையல்காரர். மெக்கானிக் மேசன்.

தச்சு தொழிலாளர்கள் .....போன்றேருக்கு சம்பளம் கிட்டத்தட்ட ஒன்று தான் சமன் ஆகும் வித்தியாசம் உண்டு” ஆனால் பெரிது இல்லை ஆயிரம் இரண்டாயிரம் தான் ஆனால் இலங்கையில் இந்தியாவில் மிகப்பெரிய வித்தியாசம்

இலங்கை இந்தியாவில் குப்பை அள்ளுவோர்,...கழுவி உடைப்போர். ..........கூலித்தொழிலாளர்கள். சம்பளம் இரண்டு மடங்குகள் உயர்ந்த வேண்டும் அவர்களும் கோட். சூட். கார் வீடு,...என்று அரசாங்கம் உத்தியோகத்தர்கள் போல் சமுதாயத்தில் வலம் வர. வேண்டும் ஏன் அவர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுக்க வேண்டும் ????

போதிய வேலை வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் கூட பல நாடுகளில் ஏதோ ஒரு விதத்தில் சில இட ஒதுக்கீடுகள் இருக்கின்றன. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தப் போக்கை காணலாம். நாட்டில் சில காரணங்களால் பின்தங்கிப் போனவர்களை முன்னோக்கி கொண்டு வரும், சமூகநீதியை வளர்க்கும் சரியான ஒரு நோக்கம் இதன் பின்னால் இருக்கின்றது. தற்காலிகமாக சில வருடங்களுக்காவது அரசதுறைகளில் சில இடங்களை அங்கு நீண்டகாலமாக அல்லது அங்கேயே பிறந்த ஈழத்தமிழ் பின்புலம் கொண்டவர்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கலாம்.

உலகெங்கும் வெவ்வேறு தொழில்களுக்கான ஊதிய வித்தியாசங்கள் அந்தந்த நாடுகளில் இருக்கும் தேவை மற்றும் வழங்கல்களை பொறுத்து தான் அமைகின்றது. அத்துடன் நாட்டின் வருமானமும் இதை தீர்மானிக்கின்றது. சில வரலாற்றுக் காரணங்களும், அவை தவறானவை என்றாலும், இருக்கக்கூடும்.

ஊதிய வித்தியாசங்கள் குறைக்கப்பட்டாலும், வேலைகள் மற்றும் தொழில்களுக்கிடையேயான வேறுபாடுகள் இருந்து கொண்டே இருக்கும். Job versus Career என்று இந்த வேறுபாட்டைச் சொல்லலாம். செய்யும் வேலையில் முன்னே முன்னே சென்று அடுத்த கட்டங்களை, அதன் தொடர்ச்சியாக இன்னொரு வேலையை அடையலாமா, இல்லாவிட்டால் ஒரே இடத்திலேயே தங்கி நின்று விடுகின்றதா என்பது இதன் அடிப்படை வேறுபாடு. மேலும் உடல் உழைப்பு எவ்வளவு அதிகமாக தேவையாகின்றது என்பதும் இங்கே இன்னொரு பிரதான வேறுபாடு. மனிதர்கள் நடுத்தர வயதுகளின் பின் தாங்கள் செய்யும் வேலையை அதே வினைத்திறனுடன், செயல் திறனுடன் செய்ய முடியாமல் போகும் நிலை சில வேலைகளில் ஏற்படலாம்.

இது போன்ற காரணங்களாலேயே ஆரம்ப ஊதியம் குறைவாக இருந்தாலும், அடிப்படையில் தேவையான கல்வித் தகுதி மற்றும் பயிற்சிகள் அதிகமாக இருந்தாலும், இளைய தலைமுறையை ஒரு பக்கம் போக விடாமல் இன்னொரு பக்கமாக போங்கள் என்று காலம்காலமாக சொல்லப்பட்டு வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ரசோதரன் said:

இதில் இன்னொரு விடயமும் உள்ளது.

அதுதான்…வாக்கு.

ஜனநாயகம் என்பதே ஏதோ ஒருவகையில் வாக்குக்காக கையூட்டு கொடுப்பதே.

அதை பணமாக அல்லது லேப்டாப்பாக கொடுக்கும் போது நம்மில் பலருக்கு கண்ணை உறுத்தும். ஆ..ஊ..என கத்துவோம்.

ஆனால்…நாம் வாழும் நாடுகளில், நரை-வாக்கு எனப்படும் grey vote ஐ பெற அரசியல்வாதிகள் என்ன பாடு படுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்.

ஓய்வூதிய வயதினாரகிய இவர்கள் வாக்கு போடும் நிகழ்தகவு அதிகம் என்பதால் - இவர்களுக்கு சாதகமாகவே (அதிகம் வாக்கு போடாத இளையோருக்கு பாதகமாக) கட்சிகளின் கொள்கை முடிவுகள், செலவீன முடிவுகள் இருக்கும்.

இதேதான் தமிழ்நாட்டிலும் நடக்கிறது.

ஆனால் - இந்த ஈழத்தமிழர் எண்ணிக்கையும் மிக சொற்பம், வாக்கும் இல்லை. ஆகவே இவர்களுக்கு கட்சிகள், தலைவர்கள் மனமிரங்கி ஏதாவது செய்தால் மட்டுமே சாத்தியம்.

ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் ஓங்கோல் கருணாநிதி தெலுங்கன் என டிவிட்டரில் அலப்பறை கிளப்பும் புலம்பெயர் மொக்கராசுகள் தலைவர்கள் மனமிரங்க தம்மாலானதை செய்கிறார்கள் என்பதும் உண்மைதான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரசோதரன் said:

நீங்கள் இங்கு சொல்லியிருக்கும் பலதும் மிகச் சரியான கவனிப்புகள், வசீ.

சில வேளைகளில் 'என்னடா இது.................' என்று களைத்தும் போயிருக்கின்றேன்.

எதற்கெடுத்தாலும் பிறரை அல்லது பிற நிகழ்வுகளை குற்றம் சொல்லும், காரணமாகக் காட்டும் இயல்பு எங்களிடம் கொஞ்சம் அதிகமாக வந்து விட்டதோ என்றும் தோன்றும்................😌.

முகாம்கள் என பார்க்கும் போது பெரும்பாலும் பெரிய முகாமான மண்டப முகாமின் அடிப்படையிலேயே பார்க்கப்படுகிறது, ஆனால் பல முகாம்கள் எந்தவித அடிப்படை வசதிகள் அற்றநிலையில் இருக்கின்றது, அதே போலவே பாத்திரிகையில் வரும் முகாம் மக்களின் அவலங்கள் என படித்த மானவர்களின் பிரச்சினையினை முகாம் மக்களின் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது, அந்த ஒரு பகுதியினர் யாழ் அடிமட்ட மக்களின் பிரச்சினையினையே எடுத்து சொல்லப்படுகிறது.

ஆனால் நான் கூறிய மலையக பின்னணி கொண்ட மக்களின் முகாம் வாழ்க்கை மிக மோசம்.

அவர்களின் வாழ்க்கை முகாம்களில் மிக மோசமாக இருந்தாலும் அவர்கள் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் அவர்களின் நிலை ஒப்ப்பீட்டளவில் நன்றாக இருந்தாலும் அவர்களை சமூக அமைப்பில் மனிதர்களாக பார்க்கும் நிலைக்கு வெளியே வைத்திருந்தோம், அதனால் எந்த வித அடையாளமற்ற ஆனால் கடினமான சூழ்நிலை கொண்ட முகாம் வாழ்க்கை அவர்களுக்கு ஒரு மாற்றமாக இருக்கின்றது.

ஐலன்ட் கூறிய கருத்து எனக்கும் பிடிந்திருந்தது அதன் பின்னணியிலேயே.

அவர்களை முகாமிற்கு வெளியே எடுத்து மீண்டும் அதே சேற்றுக்குள் தள்ளுவதனை விட அதே நிலையில் அவர்கள் தம்மை தாமே மேம்படுத்தலாம்.

நான் கூறிய கல்வி என்பது இந்த சமூகத்தின் மாற்றம் தொடர்பான சுய புரிதலுக்கான ஒன்று, அது பிகொம், எம்கொம் அல்லது வேறு துறைசார் கல்வியினை குறிப்பிட்டல்ல.

இந்த புரிதல் யாழ் அடிப்படைவாத பின்னணி கொண்ட எனக்கு முகாம் வாழ்க்கை அனுபவ பாடமாக இருந்தது.

அவர்களின் பிரச்சினையினை விளக்கமாக குறிப்பிடாமல் மேலோட்டமாக கூறியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரசோதரன் said:

குடியுரிமை பெற்றுத் தரும் ஒரே நம்பிக்கையாக இன்றைய திமுக மட்டுமே இருக்கின்றது. ஜெயலலிதா தன் கடைசி நாட்களில் அங்கிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை பெற்றுத் தருவேன் என்று ஆரம்பித்தார். எல்லா இடங்களிலும் சாண் ஏற முழம் சறுக்கிக் கொண்டிருக்கும் எங்கள் இனத்திற்கு இது மட்டும் அமைந்திடுமா என்ன......... அந்த அம்மா திடீரென்று போய்விட்டார். இன்றிருக்கும் அதிமுக மிகவும் பலவீனமானது. அதன் இன்றைய தலைவர்கள் அவர்களின் வாழ்நாள் முழுதும் மாநில அரசியலில் தங்களை ஒரு சக்திகளாக நிலைநிறுத்தவே போராடப் போகின்றார்கள். தமிழ்நாட்டில் திமுகவிற்கு இருக்கும் தீவிர எதிர்ப்பு பிரிவினரின் ஆதரவால் மட்டுமே அதிமுக ஒரு ஓரளவு பலமான கட்சியாக இன்றும் நீடிக்கின்றது. இன்னொரு மாற்றுக் கட்சி வந்தால், அதிமுக பத்தோடு இன்னொன்று ஆகிவிடும். இவர்கள் மத்திய அரசுகளை இனிமேல் கேள்வி கேட்பார்கள் என்ற நம்பிக்கை அற்றுப் போகின்றது.

தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு மத்தி எப்படி வேலை செய்வது என்று தெரியாது.

சிங்களவரின் தலைவர்களுக்கு / தூதுவர்க்ளுக்கு / அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டை விட நன்கு தெரியும்

(உண்மையில் எந்த மாநில அரசியலாதிகளும், மத்தியில் பொறுப்பில் இருந்து இருக்காவிட்டால் இந்த அறிவு, அனுபவம் இல்லை. அதுவே யதார்த்தம்)

ஏனெனில், சிங்கள தலைவர்கள், தூதுவர்கள், அதிகாரிகள் போன்றோரின் , மத்தியோடு உறவு முதலில் அரச - அரச சம மட்டத்தில். அத்தோடு ஒருவரை ஒருவர் அதிகாரப்படுத்தமுடியாது. வேண்டுகோளினால் நோக்கத்துக்கு வேண்டியதை கேட்டு கொள்ளாலாம்.

அப்படி இருக்கும் போது தான் - மற்ற பக்கத்தின் சிந்தனை, முடிவு எடுக்கும் முறை போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும்.

இங்குள்ள பலருக்கு இதெல்லாம் பெரிதான விடயம் இல்லை. (உ.ம். மத்தி அதிகாரிகள் மாநில அரசியல் தலைவரை அதிகாரப்படுத்துவதை - கருணாநிதியில் கண்டோம்)

நீங்களும் அப்படியான பார்வையே எடுப்பதாக எனக்கு தெரிகிறது. அது பெரிது அல்ல. என்னோடு இணங்கவேண்டும் என்பதும் அல்ல

அனல், நீங்கள் கொண்டுள்ள எதிர்பார்புகளை உருவாகும், உள்ள யதார்த்தத்தை தவிர்த்து.

இது சுருக்கமாக.

  • கருத்துக்கள உறவுகள்

சிரித்தவுடன் கிழித்து விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, Kadancha said:

இங்குள்ள பலருக்கு இதெல்லாம் பெரிதான விடயம் இல்லை. (உ.ம். மத்தி அதிகாரிகள் மாநில அரசியல் தலைவரை அதிகாரப்படுத்துவதை - கருணாநிதியில் கண்டோம்)

நீங்களும் அப்படியான பார்வையே எடுப்பதாக எனக்கு தெரிகிறது. அது பெரிது அல்ல. என்னோடு இணங்கவேண்டும் என்பதும் அல்ல

அனல், நீங்கள் கொண்டுள்ள எதிர்பார்புகளை உருவாகும், உள்ள யதார்த்தத்தை தவிர்த்து.

கடஞ்சா, மாநில அரசியலில் இருப்பவர்களுக்கே மத்திய அரசியல் தெரியாது என்று நீங்கள் சொல்லும் போது, எங்கோ உலகின் ஒரு மூலையில் ஒரு வீட்டுக்குள் இருந்து கொண்டு விசைப்பலகையில் மட்டும் வீரம் காட்டும் எனக்கு இவை எப்படித் தெரியும். மத்திய மாநில அரசியலும், அதிகாரமும் என்றல்ல, ஒரு பஞ்சாயத்து சபை எப்படி இயங்குகின்றது என்பதே நடைமுறையில் எனக்குத் தெரியாது.

என்னுடையவை பலவும் ஊகங்கள் தான். ஆனால் அவை என்னுடைய விருப்பங்கள் அல்ல. ஊகங்களுக்கும், விருப்பங்களுக்கும் இடையே பாரிய வேறுபாடு இருக்கின்றன. ஊகங்கள் பொதுவெளியில் கிடைக்கும் தகவல்கள், சக மனிதர்கள் மற்றும் சூழலால் கிடைக்கும் அனுபவங்கள், வரலாறு, உள்ளுணர்வு போன்றவற்றால் ஏறபடுத்தப்படுகின்றது. விருப்பங்களாலும், நம்பிக்கைகளாலும் அல்ல.

கருணாநிதியை மத்திய அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிந்ததிற்கு அவருடைய குடும்பத்தினரின் அல்லது மிகவும் வேண்டப்பட்டவர்களின் பெரிய தவறுகள் காரணமாக இருக்கலாம். இன்றைய பாஜக அரசு அமலாக்கத்துறை மூலம் மாநில அரசுக்களை பணிய வைக்கும் ஒரு முயற்சி போன்றது அது.

ஜெயலலிதா வாஜ்பாய்யின் அரசை ஒன்றுமே இல்லாமல் ஆக்கவில்லையா. மாநிலம் மத்தியை கட்டுப்படுத்திய உதாரணங்களும் ஏராளம் உண்டு.

மாநிலங்களில் இருந்து போவோர் பலரும் மத்திய ஆட்சியில் பங்காளர்களாகவும், மத்தியில் கொள்கை வகுப்பாளார்களாகவும், பொறுப்பிலும் இருந்து கொண்டே வருகின்றார்கள். இது ஒன்றும் கோவில் பூசகர் வேலை போன்றது அல்ல. இது ஒரு பிரிவினருக்கு மட்டுமே சொந்தம் மற்றும் புரியும் என்று சொல்வதற்கு. மாநிலங்களில் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் எது எவை என்று தெரியும்.

இந்தியாவின் தேவையை நிறைவேற்றுபவர்கள் ராஜதந்திரிகள் போன்று தெரிகின்றனர். இலங்கை அரசின் அதிகாரிகள் இந்தியாவின் தேவையை செய்து முடிக்கின்றனர், அதனாலேயே அவர்கள் அப்படித் தோன்றுகின்றார்கள். ஈழத்தமிழ் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்தியாவின் தேவைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு இந்தியாவுடன் இணக்கமாக போகமுடியாது. ஏனெனில் இந்தியாவின் தேவைகள் எங்களின் நலனுக்கு, எங்களின் இருப்பிற்கே பாதகமானவையாக எங்களுக்கு தெரிகின்றது. இதன் அர்த்தம் நாங்கள் ராஜதந்திரிகள் இல்லை என்று அல்ல, மாறாக இருப்பிற்கே போராடும் ஒரு இனம் என்பதே முதற்காரணம்.

இங்கு உங்களுடன் சில நாட்கள் உரையாடிய பின் உங்களின் முதல் மொழி தமிழ் இல்லை என்ற ஒரு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கின்றது. ஒரு குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்புவது போன்றே உங்களின் பதிவுகளை வாசிக்க வேண்டியிருக்கின்றது. ஆனால் இப்படியேயாயினும் தொடருங்கள். மாற்றுக் கருத்துகளும், முரணியக்கங்களுமே முன்கொண்டு செல்லும்.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

ஊமைக்குத்து என கூகிளில் தேடினேன், லிங் - இந்த பக்கத்தில் கொண்டு வந்து விட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதிகள் திபாங்கர் தத்தா, வினோத் சந்திரன் அமர்வு விசாரித்தது..

maxresdefault.jpg

அண்ணைகளுக்கு ரெண்டு ஆளுநர் பதவி பொர்ச்சல்ல்ல்ல்ல்ல்...

  • கருத்துக்கள உறவுகள்

500121738_1234686471353446_4054197697206

  • கருத்துக்கள உறவுகள்
On 23/5/2025 at 18:06, ரசோதரன் said:

இங்கு உங்களுடன் சில நாட்கள் உரையாடிய பின் உங்களின் முதல் மொழி தமிழ் இல்லை என்ற ஒரு சந்தேகம் வர ஆரம்பித்திருக்கின்றது. ஒரு குறுக்கெழுத்துப் போட்டியை நிரப்புவது போன்றே உங்களின் பதிவுகளை வாசிக்க வேண்டியிருக்கின்றது.

முதலே எல்லாம் சொல்லியாகிவிட்டது.

துரோகியாக இருந்தாலும் கட்டுக்கதையாக இருந்தால் தான் பிரச்சனை.

சொல்லுவது யதார்த்தம்.

எந்த போராட்டம் என்றாலும் எமக்கே தவிர அவர்களுக்கு இல்லை.

சிறிலங்கா ராஜா அதிகாரிகள் இஙகிய தேவையை நிறைவேறும் என்பது மிகவும் ... - சிறிமாவில் இருந்தாவது சிந்திக்கவும்,ககஹீஐ விடத்து ... மலையக தமிழரை உள்வாங்கியது ... என் jr சிவயானதை புலிகள் கேட்க ஜேர் இன் பதில் நான் இறைமை உள்ள அரசின் தலைவர் ... இதில் முழு அதிகாரமும் என்னக்கு (ஜேர் க்கு ) உள்ளது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

(வேறு திரியில் சாதாரண தொல்லியல் துறையில் கூட மத்தி எப்படி வேலை செய்வது என்பது தெரியாது. தமிழ் நாடு இவ்வளவு ஆய்வை செய்யும் போது இதை கவனிக்காமல் விட்டது. அப்போதே நான் யோசித்து இருந்தேன் பகுதி பகுதியாக பிரித்து தரவு அடிப்படையில் ஏன் தமிழ்நாடு சர்வதேச peer review க்கு விடவில்லை என்று. கிந்தியா உண்மையில் பாகுபடுத்துவதாக இருந்தாலும். அனால், அதுக்கும் மத்தி அனுமதி வேண்டுமோ தெரியாது. இது சிறு உதாரணத்துக்கு.).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.