Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.. போட்டு உடைத்த ராமதாஸ்!

Yogeshwaran MoorthiUpdated: Thursday, May 29, 2025, 12:40 [IST]

PMK Founder Ramadoss Alleges Anbumani s Suicide Threat to Push for BJP Alliance

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாமக - பாஜக கூட்டணி அமைந்தது. பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிட்டது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை. தர்மபுரி தொகுதியில் அன்புமணி மனைவி செளமியா அன்புமணி மட்டும் கடுமையான சவால் அளித்து, கடைசியில் தோல்வியை அடைந்தார்.

ராமதாஸ் பேட்டி

இந்த நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற முடிவை அன்புமணியே எடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், தகப்பனிடம் தோற்பது மானக்கேடு அல்ல.

அதிமுக கூட்டணி

அன்புமணி கூசாமல் பொய் பேசுவார்.. கூட்டத்திற்கு நிர்வாகிகள் வருவதை அன்புமணி தடுத்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி பற்றி பேசினோம். நான் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி, எடப்பாடி பழனிசாமியுடன் பேசுமாறும் அறிவுறுத்தினேன். அதன்பின் அவரும் பேசினார். எடப்பாடி பழனிசாமியும் சிவி சண்முகம் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

கதறிய அன்புமணி

ஆனால் திடீரென ஒருநாள் பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் முடிவு செய்தார். அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால், குறைந்தது 3 தொகுதிகளில் வென்றிருப்போம். அவர்களும் 6 முதல் 7 தொகுதிகளில் வென்றிருப்பார்கள். அதிமுக - பாமக இயல்பான கூட்டணி. ஆனால் எனது ஒரு காலினை அன்புமணி பிடித்து கொண்டார்.

தற்கொலை மிரட்டல்

இன்னொரு காலினை அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி பிடித்து கொண்டு கதறினார். எதற்கு அழுதார்கள் என்றால், பாஜகவுடன் கூட்டணி செல்ல வேண்டும் என்றார்கள். என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின், அன்புமணி வாயில் இருந்து, இதற்கு நீங்கள் ஒத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி வைக்க வேண்டும்.

பாரத் மாதா கி ஜே

பாஜக கூட்டணிக்காக ஏற்பாடுகளை செளமியா செய்துவிட்டார். அண்ணாமலையுடன் அவர்களே பேசிவிட்டார்கள். அடுத்த நாள் காலையிலேயே பாரத் மாதா கி ஜே என்று ஒரு கோஷம் கேட்கிறது. காலையிலேயே அண்ணாமலையும் வந்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே இது நடந்தது. இப்படிதான் கூட்டணி அமைந்தது என்று தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/villupuram/pmk-founder-ramadoss-alleges-anbumani-s-suicide-threat-to-push-for-bjp-alliance-708047.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=Home-Page-Carousel

பிகு

அரசவை புலவர் பாலபத்ர ஓணாண்டி க்கு யாராவது @ போட்டு விடுங்கப்பா.

பெரிய மாங்கா- சின்ன மாங்கா மோதலுக்கு பிஜேபி காரணம் அல்ல, அது குடும்ப உட்பூசல், நான் “பிஜேபி-நோயால் பீடிக்கப்பட்டு உளறுகிறேன்” என சொன்னவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பாஜக கூட்டணி வேண்டும் என அன்புமணி தற்கொலை மிரட்டல் விடுத்தார்

சின்ன மாங்காவ அப்பவே சாகவிட்டிருக்கலாம். சவுமியா ஆன்டிக்கு புதுவாழ்க்கை ஒண்டு கிடைச்சிருக்கும்!!

  • கருத்துக்கள உறவுகள்

ராமதாஸ் - அன்புமணி மோதலால் பாமகவில் குழப்பம் - கட்சி இரண்டாக பிளவுறுகிறதா?

இரண்டாவது நாளாக நீடிக்கும் உட்கட்சி பூசல் - பாட்டாளி மக்கள் கட்சியில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம்,@DRARAMADOSS/X

30 மே 2025

புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்

பாட்டாளி மக்கள் கட்சிக்குள் இரண்டாவது நாளாக உட்கட்சிப் பூசல் நிலவி வருகிறது. நேற்று (மே 29) பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதைத் தொடர்ந்து, இன்று (மே 30) சென்னை சோழிங்கநல்லூரில் இருந்து அன்புமணி ராமதாஸும், விழுப்புரம் தைலாபுரத்தில் இருந்து பா.ம.க நிறுவனர் ராமதாஸும் பா.ம.க நிறுவனர் ராமதாஸும் பரஸ்பரம் அறிக்கைகள் விடுத்துள்ளனர். மேலும் கட்சிப் பொருளாளரை நீக்கியும் இணைத்தும் வெளியாகி வரும் அறிவிப்புகள் உட்கட்சிப் பூசலை வெளிப்படையாக்கியுள்ளது.

கட்சி இரண்டாகப் பிளவுறும் சாத்தியக் கூறுகள் ஏற்படும் பட்சத்தில், கட்சியின் வாக்கு வங்கி பலவீனம் அடைந்துவிடும் என்று அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர். மேலும் இத்தகைய போக்கு தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தவொரு கட்சியுடனான பேச்சுவார்த்தையிலும் பாமக ஒரு பலவீனமான இடத்தில்தான் இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

பாமகவில் என்ன நடக்கிறது? பொருளாளராக நீடிப்பது யார்? உள்கட்சி பிரச்னைக்குப் காரணம் என்ன?

ஒரே நேரத்தில் நடைபெற்ற இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள்

தைலாபுரத்தில் ராமதாஸும், சென்னை சோழிங்கநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் கல்யாண மண்டபத்தில் அன்புமணி ராமதாஸும் தனித்தனியாக மே 30ஆம் தேதி ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களுக்கான பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் சேர்க்கை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் நடத்தி வந்தார்.

பாமக பொருளாளர் திலகபாமா தவிர இதர மூத்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் யாரும் அன்புமணியின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அதே நேரத்தில் விழுப்புரத்தில் நடைபெற்ற ராமதாஸின் கூட்டத்தில், பாமகவின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி, எம்.எல்.ஏ. அருள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அன்புமணி ராமதாஸ், ராமதாஸ், பாமக, பாட்டாளி மக்கள் கட்சி,

பட மூலாதாரம்,@PSMFOFFICIAL/X

தலைவர் அன்புமணி ராமதாஸ்?

ராமதாஸ், கட்சியின் பொருளாளராகச் செயல்பட்டு வந்த திலகபாமாவை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவித்து, சையத் மன்சூர் உசேனை கட்சியின் புதிய பொருளாளராக நியமித்து உத்தரவு பிறப்பித்தார். மே 29 அன்று அன்புமணி மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை அடுக்கிய நிலையில், ராமதாஸ் இன்று அதிரடியாக சில கட்சி உறுப்பினர்களை கட்சியில் இருந்து நீக்கியது கட்சியில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால் சில நிமிடங்களில், அன்புமணி, திலகபாமா பாமகவின் பொருளாளராக நீடிப்பார் என்று பதில் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் என்றும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம், பாமகவின் தலைவராகத் தொடர்ந்து "நானே செயல்படுவேன்" என்று ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராகச் செயல்படுவார் என்றும் அறிவித்திருந்தார்.

தன்னை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கியது குறித்து வருத்தம் தெரிவித்து தருமபுரியில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய அன்புமணி, "நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். நான் என்ன தவறு செய்தேன்" என்றும் பேசியிருந்தார். ஆனால் தற்போது அவர் கட்சியின் தலைவர் என்று தன்னை முன்னிலைப்படுத்தி வருவதும் பேசுபொருளாகியுள்ளது.

இன்று சென்னையில் இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய அன்புமணி, "கட்சியின் பொறுப்பில் இருந்து யாரும் யாரையும் நீக்க இயலாது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களான நீங்கள் எங்களைத் தேர்வு செய்தீர்கள். உங்களால் தேர்வு செய்யப்பட்டவர்களை யாராலும் நீக்க இயலாது," என்று குறிப்பிட்டார்.

'எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான்'

அன்புமணி ராமதாஸ், ராமதாஸ், பாமக, பாட்டாளி மக்கள் கட்சி,

பட மூலாதாரம்,@DRARAMADOSS/X

படக்குறிப்பு,கடந்த ஏப்ரல் மாதம், பாமகவின் தலைவராகத் தொடர்ந்து தானே செயல்படுவதாகவும், அன்புமணி ராமதாஸ் கட்சியின் செயல் தலைவராகச் செயல்படுவார் என்றும் ராமதாஸ் அறிவித்திருந்தார்

மே 29ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பகிரங்கமாகப் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதில் பொங்கல் நேரத்தில், வீட்டில் முகுந்தனுக்கு கட்சிப் பொறுப்பு கொடுத்தது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், பாட்டில் ஒன்றை எடுத்து தனது தாயார் மீது அன்புமணி வீசினார் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தார்.

இன்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அதற்கு பதிலளித்த அன்புமணி, "உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மாதான். உலகிலேயே அவருக்கு மிகவும் பிடித்த நபர் நான்தான். அவர் மீது சிறு துரும்புகூடப் பட விடமாட்டேன்," என்று தெரிவித்தார்.

ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைக்க நிர்பந்திக்கப்பட்டதாக நேற்று ராமதாஸ் முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக எந்தவொரு விளக்கத்தையும் அவர் அளிக்கவில்லை.

டிசம்பர் முதல் அதிருப்தி

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுவில் ராமதாஸ் தனது மகள் வழிப் பேரனான முகுந்தனை இளைஞரணிச் செயலாளராக அறிவித்தார். அதில் அதிருப்தியடைந்த அன்புமணி மேடையில் மைக்கை வீசிவிட்டுச் சென்றார்.

இந்தச் சூழலில் கடந்த ஏப்ரல் மாதம், ராமதாஸ் தானே கட்சியின் தலைவராக நீடிக்கப் போவதாகவும் செயல் தலைவராக அன்புமணி தொடர்வார் என்றும் கூறினார்.

இதையடுத்து, நேற்று (மே 29) செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய ராமதாஸ், அன்புமணி மீது பல பகிரங்மாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். 35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி தான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய ராமதாஸ், பாஜகவுடன் பாமக கூட்டணியில் இணைய அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும், ராமதாஸை நிர்பந்தித்ததாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ராமதாஸின் குற்றச்சாட்டுகள் தொடர்பான கட்டுரையை பிபிசி தமிழ் நேற்று வெளியிட்டிருந்தது. 'பாஜக கூட்டணி வேண்டி அழுதார் அன்புமணி' - ராமதாஸ் அடுக்கிய குற்றச்சாட்டுகள் என்ன?

உட்கட்சிப் பூசல் பாமகவை எப்படி பாதிக்கும்?

அன்புமணி ராமதாஸ், ராமதாஸ், பாமக, பாட்டாளி மக்கள் கட்சி,

பட மூலாதாரம்,X/GK MANI

படக்குறிப்பு,மே 29ஆம் தேதியன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராமதாஸ், அன்புமணி மீது பகிரங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்

இந்த உட்கட்சிப் பூசல் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, "ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடானது சரியாகிவிடும் என்றே தோன்றியது. ஆனால் தற்போது இரு தரப்பிலும் நடைபெறும் நிகழ்வுகள், இனி இந்த இரண்டு பிரிவினரும் இணைந்து ஒரே கட்சியாகப் பணியாற்றுவார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது," என்று தெரிவித்தார்.

"ராமதாஸ், நேற்று அன்புமணியின் தலைமைப் பண்பை கேள்விக்கு உள்ளாக்கியது மட்டுமின்றி, அவர் மீது அடுக்கடுக்காகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது கட்சியில் வெளிப்படையான பிளவை ஏற்படுத்தியுள்ளது.

இன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் பலர் பங்கேற்றுள்ளனர். அதே நேரத்தில் மூத்த தலைவர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் ராமதாஸுடன் கைகோர்த்து நிற்பதை இன்று நடந்த சம்பவங்கள் தெளிவாக்குகின்றன. வன்னியர் சமூகத்தினரும், கட்சித் தொண்டர்களும்கூட ராமதாஸுடன் கை கோர்க்கும் சூழல் வரலாம்," என்று கூறினார் ரவீந்திரன் துரைசாமி.

"கட்சியின் தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் பாமகவை இந்தப் பிளவு பலவீனப்படுத்தும். மேலும் ராமதாஸின் உதவியின்றி தனியாகவும் அன்புமணியே வேட்பாளர்களை நிறுத்தி தேர்தலில் களம் காண்பதும் கடினம். தொடர் தோல்வியில் இருக்கும் கட்சியில் ஏற்படும் பிளவு என்பதால், கூட்டணி வைக்க எந்தக் கட்சி முன்வந்தாலும் குறைவான தொகுதிகளையே இக்கட்சிக்கு வழங்குவார்கள்," என்று குறிப்பிட்ட அவர், அதிமுகவில் பிளவு ஏற்பட்ட பிறகு வாக்கு வங்கி சரிந்ததைப் போன்று, தற்போது பாமக தனது வாக்கு வங்கியை இழக்க நேரிடும் என்றும் எச்சரித்தார்.

அன்புமணி ராமதாஸ் தன்னை இக்கட்சியின் தலைவர் என்று கூறிக் கொள்ளும் போக்கு சரியானதா என்று கேள்வி எழுப்பியபோது, "கட்சியின் நிறுவனர் யாராக இருந்தாலும், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றவர்களே தலைவராகத் தொடர இயலும் என்பதுதான் நிதர்சனம். எனவே அன்புமணி கூறியது சரியானதே," என்றும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c80kx0z4ddjo

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல்சமயங்களில் திமுக அதிமுகவை கூட்டணிபேரத்தில்கதறவிடும் கட்சி இன்று கதறிக்கொண்டிருக்கிறது. கட்சி தொடங்கி தனித்துப் போட்டியிட்டு மாநிலங்களவை உறுப்பினர்களைப்பெற்ற கட்சி. வன்னிய மக்களின் வாக்குகளை கொத்தாக அள்ளும்கட்சி இன்று அன்புமணியின் பதவி ஆசையால் உடைந்து கிடக்கிறது. அன்பு மணிக்கு கட்சியைப்பற்றியோ அதன் உறுப்பினர்களைப்பற்றியோ எந்த அக்கறையும் இல்லை. அவருக்கு எம்பிப்பதவி அதுவும் ராஜ்ய சபா உறுப்பினராக வேண்டும். அதுதான் அவரது கொள்கை. அதற்கு யாரின் காலையும் பிடிக்கத்தயார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாங்காய் சின்னத்தை பாதியாக அரிந்து ஐயா ஒரு பாதி மாங்காய் சின்னத்திலும், சின்னைய்யா இன்னொரு பாதி மாங்காய் சின்னதிலும் போட்டியிடலாம்🤣.

இப்போ நான் முன்பு சொன்ன 2 விடயம் புரிகிறதா ?

  1. வாரிசு அரசியல் லேசுபட்ட விடயம் அல்ல. பால்தாக்ரே, ராஜீவ் காந்தி. ராமதாஸ் என பல ஜாம்பவான்கள் சறுக்கிய இடம் இது.

  2. பிஜேபி கூட்டணி கட்சிகளையே உடைத்து விழுங்கும்.

    நேற்று - சிவசேனா, அகாலிதளம், பிஜு ஜனதா தள்,

    இன்று - பாமக.

    நாளை - அதிமுக.

  • கருத்துக்கள உறவுகள்


பாமக பொருளாளர் திலகபாமா பதவி பறிப்பு.. புதிய அட்டாக்கை தொடங்கிய ராமதாஸ்.. பதிலடி கொடுத்த அன்புமணி!

By Yogeshwaran Moorthi

விழுப்புரம்: சென்னையில் பாமக மாவட்டச் செயலாளர் கூட்டத்தை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமகவின் பொருளாளர் திலகபாமாவை பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அந்த பதவிக்கு சையது மன்சூர் என்பதை நியமனம் செய்துள்ளார். இந்த நிலையில், ராமதாஸ் நியமனத்திற்கு எதிராக அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையில் உச்சக்கட்ட மோதல் வெடித்துள்ளது. நேற்று செய்தியாளர்களை சந்தித்து ராமதாஸ் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று கால்களை பிடித்து அன்புமணியும், செளமியாவும் கதறி அழுதார்கள். எனக்கு தெரியாமலேயே பாஜக உடன் கூட்டணி அமைக்க செளமியா பணிகளை செய்தார்.

Ramadoss PMK Anbumani Ramadoss Politics Thilagabama

ராமதாஸ் குற்றச்சாட்டுகள்

தனது தாயையே பாட்டிலால் அடிக்க சென்றவர் அன்புமணி. அவருக்கு கொஞ்சம் கூட தலைமைப் பண்பே இல்லை. நான் செய்த சத்தியத்தையும் மீறி அன்புமணியை 35 வயதில் மத்திய அமைச்சராக்கியதே தவறு. சீனியர்கள், நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொஞ்சம் கூட மதிப்பு அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

திலகபாமா நீக்கம்

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சென்னை சோழிங்கநல்லூரில் பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் திலகபாமா பங்கேற்றிருந்தார். அவருக்கு அன்புமணிக்கு அருகே இருக்கை போடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பாமக பொருளாளார் பதவியில் இருந்து திலகபாமா நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார்.

ராமதாஸ் அறிவிப்பு

அவருக்கு பதிலாக பாமக துணைத் தலைவராக செயல்பட்டு வந்த சையது மன்சூர் என்பதை பொருளாளராக நியமனம் செய்து உத்தரவிட்டார். இதுகுறித்து சையது மன்சூர் பேசுகையில், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் ஒருமுறை கட்சியின் பதவிகள் மாற்றி அமைக்கப்படும். அந்த விதிகளின் அடிப்படையிலே எனக்கு பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. பாமக பதவி நியமனங்கள் ராமதாஸால் மட்டுமே செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

https://tamil.oneindia.com/news/villupuram/pmk-shocker-s-ramadoss-removes-treasurer-thilagabama-signals-new-attack-ahead-of-2026-708339.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

சீனியர்கள், நிர்வாகிகளுக்கு அன்புமணி ராமதாஸ் கொஞ்சம் கூட மதிப்பு அளிப்பதில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

இது உண்மைதான். வன்னியர் சங்க காலத்து உறுப்பினர், பாமகவின் முதலாவது ஊராட்சி சேர்மன் - ஜி கே மணியை மேடையில் வைத்து, சட்டசபைக்கு நேரம் ஆனா போங்களேன், அங்க போய் என்ன பேசி கிழிக்கவா போறீங்க எண்ட ரீதியில் அவமானப்படுத்தியவர் சின்ன மாங்கா.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, goshan_che said:

மாங்காய் சின்னத்தை பாதியாக அரிந்து ஐயா ஒரு பாதி மாங்காய் சின்னத்திலும், சின்னைய்யா இன்னொரு பாதி மாங்காய் சின்னதிலும் போட்டியிடலாம்

நல்ல ஆலோசனைகள். ஆனால் ஐயாவின். மாங்காய். ஏது??? சின்னைய்யாவின் மாங்காய். ஏது என்று எப்படி மக்கள் பிரித்து அறிவது 🤣🤣🤣🤣 இரண்டுமே ஒரே மாதிரி இருக்கும் இல்லையா???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Kandiah57 said:

நல்ல ஆலோசனைகள். ஆனால் ஐயாவின். மாங்காய். ஏது??? சின்னைய்யாவின் மாங்காய். ஏது என்று எப்படி மக்கள் பிரித்து அறிவது 🤣🤣🤣🤣 இரண்டுமே ஒரே மாதிரி இருக்கும் இல்லையா???

மாங்கொட்டை (அடிமட்ட தொண்டர்கள்) ஐயாவோடுதான் என நினைக்கிறேன். அதைவைத்து கண்டு பிடிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை-மகனை பகையாக்கிய பாஜக அரசியல்!

சாவித்திரி கண்ணன்

333-anbumani-vs-ramadoss.jpg

எத்தனையோ கட்சிகளை பிளந்த பாஜக, பாமகவில் தந்தையும், மகனையும் பிரித்து, பிளவுவாத அரசியலில் ஒரு பிரளயத்தையே உருவாக்கி உள்ளது. சாணக்கியன் காட்டிய துரோக அரசியல் சரித்திரத்தில் துகில் உரியப்பட்டது தந்தையின் தியாகம்..! சோரம் போனது மகனின் வீரம்! என்னவாகும் பாமக..?

இப்படியும் கூட நடக்குமா, நாட்டில்?

மகனிடமிருந்து அப்பாவின் உயிரை பாதுகாக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாம் தைலாபுரத்தில்!

அப்பாவின் உயிரை பாதுகாக்கவே போலீஸ் வேண்டும் என்றால், அந்த மகன் எவ்வளவு ஆபத்தானவராக  இருப்பார்…? இவரிடம் இருந்து வன்னிய சமூகத்தை பாதுகாக்கப் போவது யார்?

இதைவிட பேரவலம் வேறு என்ன இருக்க முடியும்?

கொள்கைக்காக உயிரை கொடுக்கும் இயக்கமாக உருவெடுத்து, இன்று கொள்ளையை பங்கு போடுவதில் குடும்பத்திற்குள் சண்டையிடும் நிலை வந்தான பிறகு இதுவும், நடக்கும், இன்னமும் நடக்கும்.

ஒடுக்கப்பட்ட இந்த சமூகத்திற்கு என்று ஒரு உத்தமனை கண்டெடுப்போம் என வன்னிய சமூகத்தின் நாற்பது பெருந்தலைவர்கள் ஒன்று சேர்ந்து ராமதாஸை உருவாக்கினர். ஏ.கே. நடராஜன், எம்.பி.சுப்பிரமணியம், எம்.என்.மணிவர்மா..உள்ளிட்ட பலரது தியாகத்தில், பெருந்தன்மையில் உருவானவர் தான் ராமதாஸ்.

தன்னை பெருந்தலைவராக்கி அழகு பார்த்தவர்களையே பின்பு அழ வைத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் தான் ராமதாஸ்.

அடுத்த நிலையில் கட்சியை கட்டமைக்க பட்டிதொட்டியெங்கும் பயணப்பட்டு வேர்வை சிந்திய முன்னணி மூத்த நிர்வாகிகளால் எங்கே தன் பதவிக்கு பங்கம் வருமோ என்ற கோழைத்தனத்தில் அதிரடியாய் இராம. நாகரத்தினம், டி.என்.ராமமூர்த்தி, முருகேசன் உள்ளிட்ட 13 மூத்த நிர்வாகிகளை அதிரடியாக கட்சியில் இருந்து விலக்கியவர் தான் ராமதாஸ். இப்படியாக பற்பலரை காவு கொடுத்து தான் தன்னை தனிபெரும் சக்தியாக்கிக் கொண்டார் ராமதாஸ்.

இதில் ராமதாஸ் வளர்ச்சிக்கு வாரி, வாரி வழங்கி, டெல்லியிலும் தொடர்புகளை உருவாக்கிக் கொடுத்தும் கொடூரமாக வஞ்சிக்கப்பட்ட தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியார்.

ramadoss.png

தற்போது 35 வயதில் மகனை கேபினெட் அமைச்சராக்கியது நான் செய்த மிகப் பெரிய தவறு என்கிறார் ராமதாஸ். ஆனால், தன் மகன் எப்படிப்பட்டவர் எனத் தெரிந்தே அவரை கேபினெட் அமைச்சராக்கியவர் தான் ராமதாஸ் என்பதற்கு வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் வெளியிட்ட அயோக்கிய சிகாமணி ராமதாஸ் என்ற நூலில் இவ்வாறு கூறியுள்ளார்;

”வாஜ்பாய் அமைச்சரவையில் பாமக சார்பில் பொன்னுசாமியும், சண்முகமும் அமைச்சர்களாக இருந்தனர். இவர்கள் இலாகா சம்பந்தப்பட்ட கோப்புகள் மாதக் கணக்கில் முடங்குகிறது. காரணம் உங்கள் மகன் அன்புமணியின் உத்தரவு உடனே கிடைகாதது தான்! அன்புமணி பைல் பார்த்து, பைல் தொடர்பான நபரை பார்த்து, அந்த நபரிடம் பேரம் நடத்தி, கைக்கு விஷயம் வந்து சேர்ந்தால் தான் கோப்பு நகர்கிறது. இதனால், அந்த இலாகா தொடர்பான செயலாளர்கள் மனம் உடைந்து, பிரதமருக்கு புகார் கூறினார்களே.., பிரதமர் வாஜ்பாய் இது தொடர்பாக உங்களை நேரில் அழைத்துக் கடிந்து கொண்டாரே நினைவு இருக்கிறதா..?’’

ஆக, தன் வினைத் தன்னை சுடும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.. என்பதெல்லாம் தான் ராமதாஸ் வாழ்க்கையில் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார். இதை அன்புமணியும் நாளை பார்ப்பார்.

அதே சமயம் தன்னை இழிவுபடுத்தினார், பொய் சொன்னார், அநாகரீகமாக நடந்து கொண்டார், தன் தாயின் மீதே தண்ணீர் பாட்டிலை வீசி எறிந்தார். பா.மக என்ற கட்சியை கண்ணாடியை போல ஒரே நாளில் நொறுக்கினார், வளர்த்தகிடா மார்பில் பாய்ந்தது,..எக்ஸட்ரா…எக்ஸட்ரா என எவ்வளவோ சொன்னாலும், தன் மகனே தலைவன் என்பதில் ராமதாஸுக்கு மாற்று சிந்தனை வரவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். எனவே, அன்புமணி வன்னிய  சமூகத்திற்கு தலைமை தாங்கும் தகுதியற்றது என ஏன் அவரால் சொல்ல முடியவில்லை…? இவ்வளவு சுயநலமும், அராஜகமும் உள்ள மகன் அன்புமணியை ஏன் மீண்டும், மீண்டும் நம்புகிறார்? ராமதாஸை பொறுத்த வரை இந்த சமூகத்தின் நலனைவிட தன் மகனின் நலனே மேலானது என்பதில் உறுதியானவர்.

333355.jpg

இன்னொரு தகுதியான தலைமை தன் குடும்பத்திற்கு வெளியே கிடையவே கிடையாது. தலை எடுக்கவும் கூடாது.,,என்பதில் அப்பாவிற்கும்,பிள்ளைக்கும் எந்த கருத்து மாறுபாடும் வருவதில்லை.

பாஜகவுடன் கூட்டணி கண்ட கட்சிகள் யாவும் பிளவு கண்டுள்ளன. அதில் இது வரை எந்தக் கட்சியும் விதிவிலக்கில்லை. நிதீஸ்குமார் கட்சியை பிளந்தனர். சிவசேனாவை பிளந்தனர். தேசியவாத காங்கிரசை பிளந்தனர். அதிமுகவை பிளந்தனர், தற்போது பாமகவை பிளக்க அப்பாவையும், மகனையும் ஒருவருக்கொருவர் எதிரியாக்கி உள்ளனர்.

அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு அப்பா பேசி முடிவெடுக்க இரவோடு இரவாக பாஜக தலைவர்கள் கூடிப் பேசி , அதிகாலை வருவோம். கூட்டணி அறிவிப்பு முடிவு பெற வேண்டும். உன் அப்பாவை தயார்படுத்தி வை எனக் கூறுவதும், மகனும் மருமகளும் ராமதாஸ் காலில் விழுந்து பாஜக கூட்டணி இல்லையென்றால், அப்பா நீ தான் எனக்கு கொள்ளி வைப்பாய் என மகன் கதறி அப்பாவின் மனதை மாற்றியதும் நடந்திருக்கிறது என்பதை ராமதாஸே வாய் திறந்து சொல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

தன் மருமகளின் அதிகாரம் கட்சியில் எப்படி கொடிகட்டிப் பறக்கிறது. தலைமை பொறுப்பை ராமதாஸிடம் இருந்து பறிப்பதில் செளமியா காட்டிய அவசரம் என எல்லாவற்றையும் கொட்ட வேண்டிய நிலைமை ஏன் வந்தது, ராமதாசுக்கு..? ஒருவேளை தன்னை கட்சியில் இருந்து மகன் நீக்குவதற்கு முன்பே அனைத்தையும் முன்கூட்டியே சொல்லி விடுவதன் மூலம் அதனை தடுக்கலாம் என சொல்லி இருப்பாரோ என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது.

எது எப்படியாயினும் இவ்வளவு சுயநலமிக்க ஒரு குடும்பத்திடம்  உழைக்கும் வர்க்கமான வன்னியர் சமூகம் சிக்கி இருக்கிறதே..அது எப்போது விடுபட்டு இயல்பு நிலைக்கு மீண்டு வரும் என்ற கவலை தான் ஏற்படுகிறது.

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/21686/ramadoss-anbumani-pmk-bjp/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.