Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம்

Published By: RAJEEBAN

04 JUN, 2025 | 04:33 PM

image

A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy

malay mail

எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில்.

ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக்கு ஒரு விடயம் நினைவிற்கு வந்தது - எல்லா வீரர்களும் கதாநாயர்களும் எப்போதும் எதனையும் துரத்திக்கொண்டிருப்பவர்கள் இல்லை எதன் பின்னாலும் ஓடிக்கொண்டிருப்பவர்கள் இல்லை.

அது குமுழமுனையில் ஆரம்பமானது. மாரடைப்பு, உண்மையானது அமைதியானது ஆனால் கடும் ஆபத்தானது.

நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எனது தாயார் முழுமையான அடைப்பினால் பாதிக்கப்பட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வலது தமனியில் கிட்டத்தட்ட 99 வீத அடைப்பு காணப்பட்டது.

jaffna_hospital_1.jpeg

அவர் பல நாட்களாக ஆபத்தான நிலையைநோக்கி அமைதியாக சென்றுகொண்டிருந்தார். மருத்துவ நூல்களில் - புத்தகங்களில் தெரிவிக்கப்படும் அறிகுறிகள் எவையும் தென்படவில்லை. ஒரு ஆபத்தான பாறையின் நுனியை நோக்கி அமைதியான பயணம்.

முல்லைத்தீவு மருத்துவமனையின் வைத்தியர்கள் குழுவினர் வேகமாகவும் உறுதியாகவும் செயற்பட்டனர்.

அவர்கள் ஒரு த்ரோம்பொலிடிக்கை அம்மாவிற்கு செலுத்தினர். நாங்கள் இதனை இரத்த ஓட்டத்தை தடுக்கும் இரத்த கட்டிகளை கரைக்க உடைக்க பயன்படுத்தப்படும் மருந்துகள் என இதனை அழைப்போம். அம்மாவிற்கு தேவையாகயிருந்த மிகவும் விலைமதிப்பற்ற் நேரத்தை முல்லைத்தீவு மருத்துவர்கள் வழங்கினார்கள்.

பின்னர் அம்மாவை யாழ்ப்பாண மருத்துவமனைக்கு மாற்றினார்கள்.அங்கு போதுமான கையுறைகள் கூட இல்லாத மருத்துவர்கள் மற்றும் தாதிமார் குழுவினர் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அம்மாவிற்கு அஞ்சியோபிளாஸ்டி சத்திரசிகிச்சையை செய்தனர். ஒரு ஸ்டெண்டை வைத்து உயிரை காப்பாற்றினார்கள். அவர்களின் வாயிலிருந்து 'மருத்துவ சிகிச்சைக்கான கட்டணம்" என்ற வார்த்தையை ஒரு தடவை கூடநான் கேட்கவில்லை. அந்த மருத்துவர்களின் திறமை குறித்து ஒருமுறை கூட எனக்கு சந்தேகம் எழவில்லை.

எனக்கு கடும் ஆச்சரியத்தை அளித்த விடயம் இதுதான் -

கடந்த மூன்றுவருட காலப்பகுதியில் இரண்டாயிரம் மருத்துவர்கள் இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் பிரிட்டன், அவுஸ்திரேலியா மத்திய கிழக்கிற்கு சென்றுவிட்டனர். சிறந்த ஊதியத்தை வழங்கும் சிறந்த நேரத்தை வழங்கும் சிறந்த விடயங்கள் அனைத்தையும் வழங்கும் எல்லா இடங்களிற்கும் அவர்கள் சென்றுவிட்டனர்.

இலங்கையிலிருந்து வெளியேறாமலிருந்த மருத்துவர்கள் - பிடிவாதக்காரர்கள் சுயநலமற்றவர்கள் - ஊதியம் சலுகைகளை விட குறிக்கோளிற்கு முக்கியத்துவம் வழங்குபவர்கள்.

நான் அவர்களுடன் சிறிது நேரத்தை செலவிட்டேன். அவர்கள் தங்கள் பணிகளை இடைநிறுத்தாமல் ஆரவாரம் இல்லாமல் புகார் சொல்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தனர்.

ஒரு இருதயநோய் நிபுணர் ஒருவர் ஒரு நோயாளிக்கு (முதியவர்) அருள்பாலிக்கும் நினைப்பு எதுவுமின்றி சரளமாக தமிழிலில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்ததை பார்த்தேன்.

ஒரு மருத்துவதாதியொருவர் தனது சொந்த குழந்தையை போல தலையணையை கவனமாக சரிசெய்வதை பார்த்தேன்.

குணப்படுத்துதலில் அவர்கள் மகிழ்ச்சியடைவதை பார்த்தேன். உண்மையான மகிழ்ச்சி.

நான் ஒன்றை உணர்ந்தேன் - இந்த மக்கள் எங்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.

நோக்கத்திலேயே அமைதி உள்ளது நோக்கமே அமைதியை ஏற்படுத்துகின்றது. எண்ணிக்கையில் காணமுடியாத செல்வம் ஆனால் கௌரவத்தில் காணக்கூடிய செல்வம்.

அது இங்கு தாரளமாக கிடைக்கின்றது.

jaffna_hospital.jpg

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் எனது தாயார் கனடாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். உயர் இரத்த அழுத்தம் கவலையளிக்கும் அறிகுறிகள். ஆனால் நெறிமுறைகள் மற்றும் அதிகளவான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் சுகாதார கட்டமைப்பு எனது தாயார் மாரடைப்பினால் பாதிக்கப்படலாம் என்பதை தவறவிட்டுவிட்டது.

ஆனால் போரினால் பாதிக்கப்பட்ட நிதிப்பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள அரசமருத்துவமனை ஆபத்தை உடனடியாக இனம் கண்டு ஒரு சத்திரசிகிச்சையின்; துல்லியத்துடன் சிகிச்சையளித்தது.

https://www.virakesari.lk/article/216581

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது வடக்கில் எங்கு(நீண்ட தூரங்களில்) ஆபத்தான நிலையில் நோயாளிகள் இருந்தாலும் யாழ் போதனா வைத்தியசாலைக்கே அனுப்பப்படுகிறார்கள். நீண்டகால நோக்கில் மாங்குளம் பகுதியில் சகல வசதிகளுடன் மற்றும் பிரிவுகளுடன் கூடிய வடமாகாணத்துக்கான பெரிய ஒரு மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும்.

இது வன்னிப்பிரதேச அபிவிருத்தியின் அடிநாதமாக இருக்கும். இது எதிர்கால யாழ்ப்பாணத்திற்குள்ளே மக்களின் வாழ்விட நெருக்கடிகளை குறைக்கலாம் என்பது எனது கருத்து. அத்தோடு காலநிலை மாற்றங்களால்(துருவப்பனிக்கட்டிகள் வேகமாக உருகி கடல்மட்டம் உயரும்போது) யாழ்ப்பாணம் கடலால் மூழ்கடிக்கப்படும்போது எமக்கு கைகொடுக்கும்.

Edited by ஏராளன்
வடக்கில்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஏராளன் said:

தனிய அரசின் உதவியுடன் செய்ய முடியாது புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் இதனை சாத்தியமாக்கலாம் (சிறு துளி பெரு வெள்ளம்).

சிறந்த தலைவர்கள் எப்போதும் நீண்டகால சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஏன் நீங்கள் அங்குள்ள மக்கள் நலனுக்காக அரசியலில் இறங்க கூடாது?

எல்லோரும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருப்பதால் பாதிக்கப்படுவது மக்களே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

நீங்கள் சொல்வது போல் யாராவது எதற்காவது உதவுவோம் என்று பேச முற்பட்டாலும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் (சத்தியமுர்த்தியர்)மற்றவர்களின் முகத்தை முறிப்பது போல் தான் நடந்து கொள்கிறார்.தனக்கு வேண்டப்பட்டவர்கள் யாராவது அங்கிள் அது, இது என்று சொன்னால் அவர்களுக்கு பதில் கொடுக்கிறார்.அதே நேரம் உண்மையாக ஏதாவது ஒரு விதத்தில் உதவ வேண்டும் என்று எழுதினால் அதற்கு பதில் தரப்படுவது இல்லை.முக்கியமாக ஏதும் கேட்டால் , சொன்னால் அந்த வைத்தியருக்கு பிடிப்பதில்லை.ஆனால் ஒரு விடையம் செய்திருக்கிறார்கள்.வார்ட்டுகளுக்கு கேர்ட்டின் போட்டால் நன்று என்பதை சுட்டிக் காட்டியதும் அதை செய்திருக்கிறார்கள்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, யாயினி said:

வைத்தியசாலையில் பணிபுரிந்த, பணிசெய்யும் சிலரிடமிருந்து நான் கேள்விப்பட்ட வரையில், சில அரசியல்வாதிகள் பாதாள உலகில் குண்டர்களை வைத்துத் தங்கள் காரியங்களைச் சாதிப்பதுபோன்று வைத்தியர் சத்தியமூர்த்தியும் வைத்தியசாலையில் பணிபுரிவோரில் சிலரைத் தனக்கு ஆதரவாகச் செயல்பட வைத்துத் தன் காரியங்களைச் சாதிப்பதுபோல் தெரிகிறது.😳

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, vasee said:

தனிய அரசின் உதவியுடன் செய்ய முடியாது புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் இதனை சாத்தியமாக்கலாம் (சிறு துளி பெரு வெள்ளம்).

சிறந்த தலைவர்கள் எப்போதும் நீண்டகால சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஏன் நீங்கள் அங்குள்ள மக்கள் நலனுக்காக அரசியலில் இறங்க கூடாது?

எல்லோரும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருப்பதால் பாதிக்கப்படுவது மக்களே!

அப்ப மாம்பழத்தை யாருக்கு ஏலத்தில் விற்ப்பது.☹️

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, vasee said:

தனிய அரசின் உதவியுடன் செய்ய முடியாது புலம்பெயர் சமூகத்தின் உதவியுடன் இதனை சாத்தியமாக்கலாம் (சிறு துளி பெரு வெள்ளம்).

சிறந்த தலைவர்கள் எப்போதும் நீண்டகால சிந்தனையாளர்களாக இருப்பார்கள், ஏன் நீங்கள் அங்குள்ள மக்கள் நலனுக்காக அரசியலில் இறங்க கூடாது?

எல்லோரும் மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என இருப்பதால் பாதிக்கப்படுவது மக்களே!

உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி அண்ணா.

அரசியல் எனக்கு சரிவராது அண்ணை. உடல்நிலை அதற்கு ஒத்து வராது.

எனது எண்ணங்களை பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி சரியான இடங்களிற்கு தெரியப்படுத்த முயல்கிறேன்.

தனியார் மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவத்தை வழங்கினால் மேற்கு நாடுகளில் தாமதமாகும் மருத்துவ சிகிச்சைகளை இங்கே பெற்று பயனடையலாம்.

இன்று நண்பர்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு கோழிகுறஸ் மருத்துவமனையில் 3.5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனை சுகப்பிரசவத்திற்கு 5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள்.

அரச மருத்துவமனையை ஏன் நாடவில்லை என வினவியபோது அங்குள்ள தாதியர்களின் அணுகுமுறை தவறாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் 5 - 6 அம்மாக்கள் பிரசவத்திற்கு கட்டில்களில் வரிசையாக இருக்க விடப்படுவார்களாம். ஒருத்தரை ஒருத்தர் பார்க்காத வண்ணம் மறைப்பு(தனியுரிமை) இல்லையாம்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

கடந்த காலங்களில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் முகப் புத்தக பக்கத்தில் பகிரப்படும் படங்களை பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது..நோயாளிகளுக்கிடையேயான மறைப்பு (கேர்ட்டின்)முக்கியமல்லவா..நோயாளிகள் ஒருவரை, ஒருவர் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதை படம் பிடித்து முகப் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் போது இவர்களுக்கு பிறைவேசி முக்கியமில்லையா என்று கேட்டேன்... இன்ன மாதிரி செய்தால், போட்டால் நன்றாக இருக்கும் என்று எழுதிய பின் தான் ஒரு சிறிய பகுதிக்கு கேர்டின் போட்டு இருக்கிறார்கள்..பிறகும் எதற்கும் முரண்பட்டு எழுதுவேனோ என்ற எண்ணம் போலும் பணிப்பாளர் பேசவும் மாட்டார், பதில் எழுதவும் மாட்டார்..அப்படி ஒரு தலைக்கணம்.வெளிநாடுகளிலிருந்து போய் கதைப்பவர்களுக்கு நன்றாக தேன் ஒழுக கதைத்து அனுப்புகிறார்.

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு புலத்தில் இருந்து சென்ற நபரின் கட்டுரை. மேலே யாயினியும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது, உள்ளூர் பயனர்களை விட வெளிநாட்டுப் பயனர்களை வித்தியாசமாகக் கவனிக்கிறார்கள் என்ற என் எண்ணம் வலுப்படுகிறது.

வடக்கின் ஒரு அரச மருத்துவ மனையில் தந்தையை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்த வேளையில் என் அனுபவமும் இப்படித் தான் இருந்தது. "மகன் வெளிநாட்டில் இருந்து வருகிறார், மகன் வெளிநாட்டில் டொக்ரர்" (நான் என்ன செய்கிறேன் என்றே என் சிறிலங்கா உறவுகளுக்குத் தெளிவில்லை😂) இப்படி முதல் இரு நாளும் சகோதரிகள் சொல்லியிருக்கிறார்கள். நானும் அங்கே இருந்த ஒரு மருத்துவ நண்பர் மூலமாக நிலைமையை விசாரிக்க வைத்தேன். 3 ஆம் நாள் நான் மருத்துவ மனை போய் அப்பாவைப் பார்த்த போது என்னோடு அக்கறையாக அப்பாவின் நிலைமையைப் பற்றி உரையாடினார்கள். கேள்விகளுக்குப் பதில் சொன்னார்கள். அதே வேளை, ஏனைய 6-7 ICU நோயாளிகள் பற்றிய நிலையை அவர்களின் உறவுகளுக்கு கேட்டாலும் தெளிவாகச் சொல்லாமல் நடந்து கொள்வதை அவதானித்தேன். ஒரேயொரு சிங்கள மருத்துவர் மட்டும் எல்லோரோடும் ஒரே விதமாக பண்பாக நடந்து கொண்டார்.

இளம் மருத்துவர்களாவது எல்லா நோயாளிகள், உறவுகளோடு ஒரே மாதிரிப் பண்பாக நடந்து கொள்ளும் வகையில் பழக்கப் பட வேண்டும். வெளிநாடு, அரச அதிகாரி, விஐபி நோயாளி ஆகியோருக்கு மட்டும் விசேட கவனிப்புகள் கொடுப்பது நல்லதல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
On 6/6/2025 at 02:10, ஏராளன் said:

உங்கள் அபிப்பிராயத்திற்கு நன்றி அண்ணா.

அரசியல் எனக்கு சரிவராது அண்ணை. உடல்நிலை அதற்கு ஒத்து வராது.

எனது எண்ணங்களை பொருத்தமான வகையில் வெளிப்படுத்தி சரியான இடங்களிற்கு தெரியப்படுத்த முயல்கிறேன்.

தனியார் மருத்துவமனைகள் நியாயமான கட்டணத்தில் தரமான மருத்துவத்தை வழங்கினால் மேற்கு நாடுகளில் தாமதமாகும் மருத்துவ சிகிச்சைகளை இங்கே பெற்று பயனடையலாம்.

இன்று நண்பர்களுடன் கலந்துரையாடிய சந்தர்ப்பத்தில் சிசேரியன் மூலமான பிரசவத்திற்கு கோழிகுறஸ் மருத்துவமனையில் 3.5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள். இணுவிலில் உள்ள தனியார் மருத்துவமனை சுகப்பிரசவத்திற்கு 5 லட்ச ரூபா வாங்கியுள்ளார்கள்.

அரச மருத்துவமனையை ஏன் நாடவில்லை என வினவியபோது அங்குள்ள தாதியர்களின் அணுகுமுறை தவறாக உள்ளதாகவும், ஒரே நேரத்தில் 5 - 6 அம்மாக்கள் பிரசவத்திற்கு கட்டில்களில் வரிசையாக இருக்க விடப்படுவார்களாம். ஒருத்தரை ஒருத்தர் பார்க்காத வண்ணம் மறைப்பு(தனியுரிமை) இல்லையாம்.

குறைந்த பட்சம் குறிப்பிட்ட அளவு வைத்தியசாலை படுக்கைகள் என கணிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பிடும் போது அங்கு மிக குறைவான அளவிலே காணப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அந்த குறைவான வசதிகளை பயன்படுத்துவது அங்குள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியினையே உருவாக்கும்.

புலம்பெயர் தமிழர்கள் மருத்துவ காப்புறுதி வைத்திருந்தால் அவர்கள் வாழும் நாட்டிலேயே மிக சிறப்பான சேவையினை பெறமுடியும், குறைந்த பட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த வைத்தியசாலை இருக்கவேண்டும், அதனை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலைதான் அங்குள்ளது, வைத்தியசாலைகளை நிர்வகிப்பதற்கு ஆண்டுதோறும் (இலவச) பெரும் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது அதனால் அரசு கூட அதனை செய்ய தயங்கும் நிலையில் ஒவ்வொரு துறைகளிலும் அங்குள்ள மக்களின் வசதி வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கும் புலம்பெயர் தமிழர்களை முதலில் அடித்து விரட்ட வேண்டும், அதனால் அங்குள்ள மக்களுக்கு குறைந்த பட்ச வசதிகளைசெய்ய முடியும் (ஒரு புலம்பெயர் தமிழர் அங்குள்ள பலரின் அடிப்படை வசதிகளை தனியாளாக உறிஞ்சும் அட்டை).

இந்தக் கோணத்தில் எனது சிந்தனை போகவில்லை. எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்படுபவர்களை விரட்ட முடியாதே அண்ணை.

நான் எதிர்காலத்தில் என்று தான் யோசித்தேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இந்தக் கோணத்தில் எனது சிந்தனை போகவில்லை. எதிர்பாராத விதமாக நோய்வாய்ப்படுபவர்களை விரட்ட முடியாதே அண்ணை.

நான் எதிர்காலத்தில் என்று தான் யோசித்தேன்.

அது மனிதாபிமானமற்ற செயல், ஆனால் இலவச மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு மட்டும் எனும் நிலை வேண்டும், மற்றவர்கள் அங்கு நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியினை நாடுவதில் தவறில்லை, அத்தோடு அதற்கான கட்டணத்தினை அறவிட வேண்டும் (மிக குறைந்த வளங்கள் உள்ள தற்போதய் நிலையில் அட்கு அவசியமாகிறது).

புலம்பெயர் தமிழர்கள் உணவுச்சங்கிலியில் உயரத்தில் இருப்பவர்கள், தமது விளம்பர பொழுது போக்கிற்காக உதவி செய்வது (அனைவரும் அல்ல ஆனால் தாம் செய்த சிறிய செயல்களை கூட பொதுவெளியில் இணையம் போன்றவற்றினூடாக விளம்பரம் செய்பவர்களே இத்தகையானவர்கள்) பின்னர் அதனைவிட பலமடங்கு அனுகூலங்களை கொள்ளை அடிப்பவர்களாக மாறுகின்றனர் (அந்த மக்களை சுரண்டுபவர்கள்).

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

குறைந்த பட்சம் குறிப்பிட்ட அளவு வைத்தியசாலை படுக்கைகள் என கணிப்பிடப்பட்டுள்ள அளவுகளுடன் ஒப்பிடும் போது அங்கு மிக குறைவான அளவிலே காணப்படுகிறது, இந்த நிலையில் புலம்பெயர் தமிழர்கள் அந்த குறைவான வசதிகளை பயன்படுத்துவது அங்குள்ள மக்களுக்கு மேலும் நெருக்கடியினையே உருவாக்கும்.

புலம்பெயர் தமிழர்கள் மருத்துவ காப்புறுதி வைத்திருந்தால் அவர்கள் வாழும் நாட்டிலேயே மிக சிறப்பான சேவையினை பெறமுடியும், குறைந்த பட்சம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறந்த வைத்தியசாலை இருக்கவேண்டும், அதனை கூட நிறைவேற்ற முடியாத சூழ்நிலைதான் அங்குள்ளது, வைத்தியசாலைகளை நிர்வகிப்பதற்கு ஆண்டுதோறும் (இலவச) பெரும் பணம் செலவிட வேண்டிய நிலை உள்ளது அதனால் அரசு கூட அதனை செய்ய தயங்கும் நிலையில் ஒவ்வொரு துறைகளிலும் அங்குள்ள மக்களின் வசதி வாய்ப்புக்களை தட்டிப்பறிக்கும் புலம்பெயர் தமிழர்களை முதலில் அடித்து விரட்ட வேண்டும், அதனால் அங்குள்ள மக்களுக்கு குறைந்த பட்ச வசதிகளைசெய்ய முடியும் (ஒரு புலம்பெயர் தமிழர் அங்குள்ள பலரின் அடிப்படை வசதிகளை தனியாளாக உறிஞ்சும் அட்டை).

நிங்களோ , நானோ யரையும் ஊருக்கு போகாதீர்கள், வராதீர்கள் என்று சொல்ல இயலாது.சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் தங்கள் தனிப்பட்ட விடையங்களுக்காக போய் வருகிறார்கள்..அதனையும் விட புலத்தில் இருப்பவர்களுக்கும் ஊருக்கு போய் செய்து விட்டு வர வேண்டி வேலைகள், தேவைகள் நிறைய இருக்கிறது.அப்படியான ஒரு நிலையில் சந்தர்ப்பம் சூழ் நிலையில் திடிரென்று நோய் வாய் பட்டு விட்டால் வைத்தியசாலைக்கு போகும் யாரும் கட்டில், தலைகணி , பாய், என்று எல்லாம் கொண்டா போக முடியும்..? உதாரணத்திற்கு,,,, என்னை எடுத்து கொண்டால்நான் ஊரை விட்டு வந்ததிற்கு இன்னும் ஊர் பக்கம் போகவே இல்லை..ஆனால் எனக்கும் போக வேண்டிய நிலை இப்போ ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.அப்படியான தருணத்தில் ஊருக்கு போய் திடிரென்று ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு தான் போக வேண்டும்.அந்த தருணத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்....? கொஞ்சம் நடை முறையை யோசித்து பாருங்கள்.எப்போது என்ன மாதிரி மனிதர்களின் உடல் நிலைகள் மாறும் என்று இல்லை..

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, யாயினி said:

23 minutes ago, vasee said:

அது மனிதாபிமானமற்ற செயல், ஆனால் இலவச மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு மட்டும் எனும் நிலை வேண்டும், மற்றவர்கள் அங்கு நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியினை நாடுவதில் தவறில்லை, அத்தோடு அதற்கான கட்டணத்தினை அறவிட வேண்டும் (மிக குறைந்த வளங்கள் உள்ள தற்போதய் நிலையில் அட்கு அவசியமாகிறது).

புலம்பெயர் தமிழர்கள் உணவுச்சங்கிலியில் உயரத்தில் இருப்பவர்கள், தமது விளம்பர பொழுது போக்கிற்காக உதவி செய்வது (அனைவரும் அல்ல ஆனால் தாம் செய்த சிறிய செயல்களை கூட பொதுவெளியில் இணையம் போன்றவற்றினூடாக விளம்பரம் செய்பவர்களே இத்தகையானவர்கள்) பின்னர் அதனைவிட பலமடங்கு அனுகூலங்களை கொள்ளை அடிப்பவர்களாக மாறுகின்றனர் (அந்த மக்களை சுரண்டுபவர்கள்).

வைத்தியசாலை படுக்கைகள் ஒரு சுகாதாரத்துறையின் வளர்ச்சியின் குறியீடாக பயன்படுத்தப்படுகின்றது (குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு எத்தனை வைத்திய்சாலை படுக்கைகள் உள்ளன என)

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, vasee said:

இலவச மருத்துவம் அங்குள்ள மக்களுக்கு மட்டும் எனும் நிலை வேண்டும், மற்றவர்கள் அங்கு நோய்வாய்ப்பட்டால் மருத்துவ உதவியினை நாடுவதில் தவறில்லை, அத்தோடு அதற்கான கட்டணத்தினை அறவிட வேண்டும்

மிகவும் சரி

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, யாயினி said:

நிங்களோ , நானோ யரையும் ஊருக்கு போகாதீர்கள், வராதீர்கள் என்று சொல்ல இயலாது.சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவரவர் தங்கள் தனிப்பட்ட விடையங்களுக்காக போய் வருகிறார்கள்..அதனையும் விட புலத்தில் இருப்பவர்களுக்கும் ஊருக்கு போய் செய்து விட்டு வர வேண்டி வேலைகள், தேவைகள் நிறைய இருக்கிறது.அப்படியான ஒரு நிலையில் சந்தர்ப்பம் சூழ் நிலையில் திடிரென்று நோய் வாய் பட்டு விட்டால் வைத்தியசாலைக்கு போகும் யாரும் கட்டில், தலைகணி , பாய், என்று எல்லாம் கொண்டா போக முடியும்..? உதாரணத்திற்கு,,,, என்னை எடுத்து கொண்டால்நான் ஊரை விட்டு வந்ததிற்கு இன்னும் ஊர் பக்கம் போகவே இல்லை..ஆனால் எனக்கும் போக வேண்டிய நிலை இப்போ ஏற்பட்டுக் கொண்டு இருக்கிறது.அப்படியான தருணத்தில் ஊருக்கு போய் திடிரென்று ஏதாவது நோய் தாக்கம் ஏற்பட்டால் வைத்தியசாலைக்கு தான் போக வேண்டும்.அந்த தருணத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்....? கொஞ்சம் நடை முறையை யோசித்து பாருங்கள்.எப்போது என்ன மாதிரி மனிதர்களின் உடல் நிலைகள் மாறும் என்று இல்லை..

விடுமுறை காப்புறுதி பொதுவாக வெளிநாடுகளில் ஏற்படும் மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்தலாம், தனியார் மருத்துவவமனையில் ஏற்படும் செலவுகளுக்கு கூட அவை காப்புறுதி அளிக்கின்றது, பொது வைத்தியசாலையில் போய் வரிசையில் நிற்காமல் தனியார் வைத்தியசாலையில் சிறந்த சிகிச்சையினை பெறலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.