Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

08 JUN, 2025 | 11:17 AM

image

அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

los_angeles_pro2.jpg

பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள ஷெரீவ் ரொபேர்ட் லூனா, இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை சட்டவிரோதமான ஒன்றுகூடல் என அறிவித்து அனைவரையும் அமைதியாக கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் உயிராபத்தை ஏற்படுத்தாத வெடிபொருட்களை பயன்படுத்தி அவர்களை கலைக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் காயவிபரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாரமவுண்டின் வீதிகளில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் சட்டஅமுலாக்கல் பிரிவினரின் பேருந்துகளில் ஏற முயன்றனர், சிலர் கற்களையும் ஏனைய பொருட்களையும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் வாகனங்களை நோக்கி எறிந்தனர் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

los_angeles_pro_1.jpg

பாரமவுண்டிலும் கொம்டன் நகாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கார் ஒன்றின் அருகில் கூடிநின்று அதனை தீயிட்டு கொழுத்தினார்க்ள் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தூரத்திலிருந்து பார்த்தனர், அவர்களில் சிலர் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான உடைகளை அணிந்திருந்தனர், அந்த கார் தீப்பிடித்த பத்து நிமிடங்களிற்கு பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன என சிபிஎஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வெளியே மீண்டும் சிறிய கூட்டமொன்று கூடியது, 8.30 மணிவரை அவர்கள் அங்கேயே நின்றனர், பின்னர் திடீரென அங்கு தோன்றிய சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுபிரயோகத்தில் ஈடுபட்டனர் என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது.

los_angeles_pro.jpg

https://www.virakesari.lk/article/216911

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை: மூன்றாவது நாளாக போராட்டம், ஆயுதப்படை வீரர்களை குவித்த டிரம்ப் - என்ன நடக்கிறது?

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கிறிஸ்டல் ஹேய்ஸ்

  • பதவி, பிபிசி செய்திகள்

  • 9 ஜூன் 2025, 07:44 GMT

    புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள லாஸ் ஏஞ்சலிஸுக்கு அருகே உள்ள ஒரு வன்பொருள் கடையின் கார் நிறுத்துமிடத்தில், ஜுவானும் அவரது நண்பர்களும் கூடியிருந்தனர்.

பொதுவாக, தினக்கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் அங்கு கூடியிருப்பர். அந்தக் கூட்டத்தில் உள்ள ஆவணமற்ற குடியேறிகள் பலர், அங்குள்ள கடைக்காரர்களிடமிருந்தோ அல்லது ஒப்பந்த வேலை தரும் ஆட்களிடமோ வேலை தேடுகிறார்கள்.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை, பாரமவுண்ட் புறநகரில் உள்ள ஹோம் டிப்போவுக்கு (கட்டுமானப் பொருட்கள் உள்ளிட்ட வன்பொருட்களை விற்பனை செய்யும் கடை) வெளியே, கூரை போடுதல், பழுதுகளை சரி செய்வது மற்றும் வண்ணம் பூசுதல் போன்ற வேலைகளுக்கு உதவுவதாக அறிவித்துக் கொண்டு இரண்டு சிறிய வாகனங்கள் மட்டுமே நின்றிருந்தன. இந்த பகுதியில் 82% க்கும் மேற்பட்டோர் ஹிஸ்பானிக் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இங்கு தினக்கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டதாக பரவிய வதந்திகள் காரணமாக, அந்தக் கடை குடியேற்றப் போராட்டத்தின் மையமாக மாறியது. அதன் மறுநாள் முதலில் மேற்கூறிய சம்பவம் நடந்தது.

அந்த சமூகத்தில் வசிக்கும் பலர், அப்பகுதியில் குடியேற்ற அமலாக்கத் துறையின் வாகனங்களைக் கண்டதாக பிபிசியிடம் கூறினர்.

அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது.

பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது.

அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது.

"தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) 'ரெய்டு' எதுவும் நடக்கவில்லை," என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

அதனால் அப்பகுதியில் உடனடியாக பயமும் குழப்பமும் ஏற்பட்டது.

பிறகு, அமெரிக்கா முழுவதும் ஆவணமின்றி வாழும் குடியேறிகள் வேலை தேடிச் செல்லும் ஹோம் டிப்போவில், தினக்கூலி தொழிலாளர்கள் சோதனை செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதனைத் தொடர்ந்து, ஹிஸ்பானிக் மக்கள் அதிகம் வசிக்கும் இந்த நகரத்தில் போராட்டங்கள் வெடித்தன. சிலர் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியதால் வன்முறையாக மாறியது. கூட்டத்தை அடக்க அதிகாரிகள் பெப்பர் ஸ்பிரே, ரப்பர் தோட்டாக்கள் மற்றும் புகை குண்டுகளைப் பயன்படுத்தினர்.

ஆனால் பாரமவுண்டில் நடந்த ஆர்ப்பாட்டங்கள் தவறான தகவல்களால் உருவானதாகத் தெரிகிறது.

அப்பகுதியில் உள்ள பிற இடங்களில் பல்வேறு குடியேறிகள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தாலும், அந்த வன்பொருள் கடையில் சோதனை நடந்ததாக பரவிய செய்தி உண்மையல்ல என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) விளக்கியது.

"தவறான தகவல்கள் இருந்தபோதிலும், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஒரு ஹோம் டிப்போவில் குடியேற்ற மற்றும் சுங்கப் பாதுகாப்புத் துறையின் (ICE) 'ரெய்டு' எதுவும் நடக்கவில்லை," என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

"உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. எல்லோரும் பயப்படுகிறார்கள்" என தனது இரண்டு நண்பர்களுடன் ஒரு சிறிய டொயோட்டா பிக்அப் டிரக்கின் உள்ளே சாய்ந்தபடி, ஜுவான் கூறினார்.

பாரமவுண்டில் ஒரு கார் தீக்கிரையாக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்ட போது ஏற்பட்ட பரபரப்பான சூழல், லாஸ் ஏஞ்சலிஸ் முழுவதும் கலவரங்கள் பரவுவதற்கு காரணமானது என்று பெடரல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனிக்கிழமை, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை பயன்படுத்தி கலிபோர்னியா தேசிய காவல்படையை அழைத்தார். இது வழக்கமாக மாநில ஆளுநரால் முடிவு செய்யப்படும் ஒன்று. அந்த நேரம், நகரத்தில் இரண்டாவது நாளாக போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தன.

மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் போராட்டங்கள் வெடித்ததால், அந்த வன்பொருள் கடைக்கு எதிரே உள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட வணிகப் பூங்காவை தேசிய காவல்படை வீரர்கள் பாதுகாத்தனர்.

அந்த பகுதியில், ஹம்வீ வாகனங்களை (ராணுவ பாணியிலான) நிறுத்தி, போராட்டக்காரர்களை நேரடியாக எதிர்கொண்டது தேசிய காவல்படை. மோதலின் போது மெக்சிகன் கொடிகள் மற்றும் பதாகைகளை அசைத்து போராட்டக்கார்கள் கூச்சலிட்டனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அதிபர் டிரம்ப் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு தேசிய காவல்படையை அனுப்பினார்.

"உங்களுக்கு இங்கே வரவேற்பு இல்லை!' என்று லாஸ் ஏஞ்சலிஸ் அணியின் தொப்பி அணிந்த ஒருவர் வீரர்களை நோக்கி கத்தினார். அதே நேரத்தில், மற்றொரு போராட்டக்காரர் ஸ்ப்ரே பெயிண்டால் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையை பற்றி ஆபாசமாக எழுதினார்.

பாதுகாக்கப்பட்ட அந்தப் பகுதியில் தங்களுடைய அலுவலகங்களில் ஒன்று உள்ளது. அதிகாரிகள் அதை "செயல்பாட்டுத் தளமாகப் பயன்படுத்தி வந்தனர். ஆனால், அந்த பகுதியை போராட்டக்காரர்கள் கண்டுபிடித்துள்ளனர்" என்று அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

இந்த குடியேறிகளில் சிலர் மீது போதைப்பொருள் கடத்தல், தாக்குதல் மற்றும் கொள்ளை போன்ற முந்தைய குற்றச்சாட்டுகள் இருந்ததாகவும் அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை குறிப்பிட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சலிஸில் "வன்முறையாளர்கள்" சிலர் உள்ளனர், அவர்கள் தப்பிக்க முடியாது என்று, ஞாயிற்றுக்கிழமை நியூ ஜெர்சியின் மோரிஸ்டவுனில் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் ஏறத் தயாராகும் போது, அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முந்தைய இரவில் தனது நகரத்தை மாற்றிய அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நம்ப முடியாமல், டோரா சான்செஸ் குழம்பி இருந்தார்.

ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பகுதியைச் சேர்ந்த மற்றவர்களுடன் இணைந்து 'சேப்பல் ஆஃப் சேஞ்ச்' தேவாலயத்தில் அவர் கூடியிருந்தார். அந்த தேவாலயம் முந்தைய நாள் நடந்த போராட்டம் நடந்த இடத்துக்கு வெகு அருகில் இருந்தது.

இந்த ஹிஸ்பானிக் சமூகம் பல ஆண்டுகளாக எப்படி புத்துயிர் பெற்று, அண்டை வீட்டார்கள் ஒருவரையொருவர் அறிந்து கவனித்துக் கொள்ளும் நெருக்கமான சமூகமாக மாறியது என்பது குறித்து, டோராவும் தேவாலயத்தில் இருந்த மற்றவர்களும் பேசிக்கொண்டிருந்தனர்.

"இந்தப் போராட்டங்கள் புலம்பெயர்ந்த சமூகத்துக்கு திருப்புமுனையாக இருந்தது," என்று டோரா குறிப்பிட்டார்.

சிறுபான்மை குழுக்களைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி லாஸ் ஏஞ்சல்ஸில்.

வேறு எந்த இனக்குழுவையும் விட ஹிஸ்பானியர்கள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தின் மக்கள்தொகையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளனர். குறிப்பாக மெக்சிகோவில் இருந்து வந்த குடியேறிகள், இங்குள்ள வரலாறு மற்றும் கலாசாரத்தின் முக்கிய பகுதியாக உள்ளனர்.

லாஸ் ஏஞ்சலிஸ் வன்முறை, அமெரிக்கா, டிரம்ப்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நகரம் "புகலிட நகரம்" என்ற அந்தஸ்தைக் கொண்டுள்ளது. அதாவது, குடியேற்றம் குறித்த அமெரிக்க பெடரல் அரசின் நடவடிக்கைகளுடன் (federal immigration enforcement) இந்த நகர நிர்வாகம் ஒத்துழைக்காது.

பல நாட்களாகக் கொந்தளித்துக் கொண்டிருந்த பதற்றம், லாஸ் ஏஞ்சலிஸில் உள்ள ஆவணமற்ற குடியேறிகளை டிரம்ப் நிர்வாகம் குறிவைத்தபோது வெடித்தது போல தோன்றியதாக அங்குள்ள சிலர் கூறினர்.

"எழுந்து நிற்க வேண்டிய நேரம் இது", "இவர்கள் என் மக்கள்"என்று பாரமவுண்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மரியா குட்டியர்ரெஸ் கூறினார்.

மரியா மெக்சிகோவில் பிறந்ததாகவும், ஆனால் சிறுமியாக இருந்ததிலிருந்து இங்கு வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள பலரைப் போலவே, அவரும் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கும் குடும்ப உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறுகிறார்.

"இது லாஸ் ஏஞ்சலிஸ்", என்று கூறிய மரியா, "இது நம் அனைவரையும் பாதிக்கிறது.",

"இங்கே, ஏறக்குறைய அனைவருக்கும் குடும்பம் இருக்கிறது, அல்லது அவர்கள் ஆவணமில்லாத ஒருவரை அறிந்திருக்கிறார்கள்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c15n12097yyo

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஏராளன் said:

இந்த வாரம் லாஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் 118 சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை பிபிசியிடம் தெரிவித்துள்ளது.

ட்ரம்ப் ஆட் களை பிடித்து மெக்சிக்கோவுக்கு அனுப்ப தயங்க மாட்டார். கலவரத்தை ஏற்படுத்தியவர்களை அனுப்புவதாக கூறுவார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சட்டவிரோத குடியேற்றம் : தொடரும் வன்முறை சம்பவங்கள்; அமெரிக்க கடற்படையினர் கட்டுப்பாட்டில் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம்!

Published By: DIGITAL DESK 3

10 JUN, 2025 | 01:07 PM

image

போராட்டங்கள் நான்காவது நாளை எட்டியுள்ள நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸில் அமெரிக்க கடற்படையினர் 700 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், சட்டவிரோதமாக குடியேறிய 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக உருவெடுத்தது. போராட்டத்தை கட்டுப்படுத்த என்.ஜி., எனப்படும் தேசிய காவல் படை பொலிஸாரை அனுப்பி வைத்து ட்ரம்ப் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

1.jpg

இந்நிலையில் ஜனாதிபதி ட்ரம்ப் அரசின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்த கலிபோர்னிய ஆளுநர் கவின் நியூஸ்கம் உள்ளூர் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். ஆனாலும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த, நூற்றுக்கணக்கான அமெரிக்க கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

700 கடற்படையினர் லொஸ் ஏஞ்சல்ஸிற்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அமெரிக்காவின் வடக்கு கட்டளைப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த கடற்படையினர், ஏற்கனவே அங்குள்ள தேசிய பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3.jpg

கலிபோர்னியா கவர்னர் கவின் நியூசம் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் ஆளுநர் கரேன் பாஸ் ஆகியோர், கடற்படையினரின் வருகை தேவையற்றது என்றும், இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் வன்மையாக கண்டித்துள்ளனர்.

இதேவேளை, போராட்டத்தைச் செய்தியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ஊடகவியலாளர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

10.jpg

https://www.virakesari.lk/article/217075

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஊரை, லாஸ் ஏஞ்சலீஸ், போன்ற ஊர்கள் உலகில் மிகச்சிலவே இருக்கும். அடிக்கடி எரிந்தும் போகின்றது. ஆனாலும் இந்த ஊர் இங்கு வந்து தங்கும் மனிதர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துக் கொண்டேயிருக்கின்றது.

இதுவரை அதிபர் ட்ரம்பின் நிர்வாகம் அமெரிக்காவை விட்டு வெளியேற்றிக் கொண்டிருக்கும் சட்டரீதியற்ற குடியேற்றவாசிகளின் நாளாந்த எண்ணிக்கை முன்னைய அதிபர் பைடனின் காலத்தில் வெளியேற்றப்பட்ட அதே அளவு தான் என்பது நம்ப முடியாத ஒரு தகவல். அரச நிர்வாகத்தின் இவ்வளவு அதிவேக நடவடிக்கைகளும் எண்ணிக்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் எதற்குத்தான் இந்த ஆள் அம்பு சேனை என்ற கேள்வி வரும்.

மிக அதிகமாக சட்டரீதியற்று தங்கியிருப்பவர்கள் லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றி தான் இருக்கின்றார்கள் என்று இங்கே பிடிக்க வந்திருக்கின்றார்கள் போல.

வீட்டருகே ஒரு ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பெரிய மைதானம் ஒன்று இருக்கின்றது. பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வருவார்கள். பல விளையாட்டுகள் ஒரே நேரத்தில் போய்க் கொண்டிருக்கும். வீட்டிலிருந்து நடந்து தான் போவேன். எல் சால்வடோர் போய் வரும் பலன் இருக்கின்றதோ தெரியவில்லை................🤣.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

காலத்துக்கு காலம் இப்படி ஏதும் வரத்தானே வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு உத்தரவு

Freelancer   / 2025 ஜூன் 11 , மு.ப. 08:18

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவு லொஸ் ஏஞ்சல்ஸ் நகர மையத்தின் ஒரு சிறிய பகுதியான 1 சதுர மைல் பரப்பளவில் பொருந்தும் என்றும், உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி முதல் புதன்கிழமை காலை 6 மணி வரை அமலில் இருக்கும் எனவும் லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் அறிவித்துள்ளார். (a)

image_33051a3a2e.jpg

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/லொஸ்-ஏஞ்சல்ஸில்-ஊரடங்கு-உத்தரவு/50-358984

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கப் பூர்வீக குடிமக்கள் செவ்விந்தியரே. அவர்களைவிட இன்று அங்குள்ள அனைவரும் குடியேறிகளே.

நான் சொல்லவில்லை அமெரிக்க சரித்திரமே சொல்கிறது.

https://yarl.com/forum3/topic/302931-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.