Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Muthukrishnan Viswanaath 

505264207_24114036841525017_138466397756

பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் எனும்

தமிழர் இனவழிப்பு வஞ்சகச் சதிகாரர் !

மு.க.ஸ்டாலினுக்கே விபூதி அடித்தவர் !!

கண்டுகொள்ளாமல் விட்ட தமிழர்கள்...

எல்லை மீறிய பாலகிருஷ்ணன் !

இனியும் பொறுத்துப் போதல் கூடாது !

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத்

தென்னிந்திய மொழிக்குடும்பம், இந்தோ - ஐரோப்பிய (சமஸ்கிருத) மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டது என்று ராபர்ட் கால்டுவெல்லுக்கு 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவியவர் ஐரோப்பியர் பிரான்சிஸ் ஒயிட் எல்லிஸ்.

ஆனால். திராவிடர் எனும் பெயரில் ஒளிந்து கொண்டு தமிழ் நாட்டில் சுமார் 60 ஆண்டுகாலமாக ஆட்சி அதிகாரத்தை வஞ்சகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும், தெலுங்கைத் தாய் மொழியாகவும், தமிழைப் பேச்சு மொழியாகவும் கொண்டுள்ளவர்கள் ராபர்ட் கால்டுவெல்லை ஏன் தூக்கித் தலையில் வைத்து ஆடுகிறார்கள் என்றால்...அவர்தான் "திராவிட" எனும் சொல்லை முன் நிறுத்தியவர். அவர், திராவிட எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு தென்னிந்திய என்று பொருள் என்பதால் பயன்படுத்தினார். ஆனால், அதை ஒரு இனத்தின் பெயர் போல பொய்யாகக் கட்டமைத்ததில் முக்கியப்பங்கு ஈ.வெ.ராமசாமிக்கே உண்டு.

மேலும், அந்த ராபர்ட் கால்டுவெல் தமிழ், பிற மொழிகளின் துணையின்றித் தனித்து இயங்க வல்ல மொழி என்று கூறினாலும், தமிழும், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் வேறு ஒரு முந்து மொழியில் இருந்து வந்திருக்கலாம் என்று உத்தேசமாகக் கூறி வைக்க அதைப்பிடித்துக்கொண்டு விட்டனர் ஈ.வெ.ராமசாமி வகையறாக்கள்.

இதையடுத்தே ஈ.வெ.ராமசாமி, "திராவிடர்" கழகம் என்று பெயர் சூட்டினார். ஒட்டுமொத்தத் தமிழர்களையும் "திராவிடர்கள்" என்று அடையாளப்படுத்தினார் ஈ.வெ.ராமசாமி.

அவருடைய அமைப்பின் பொதுச் செயலாளாராக இருந்த கி.ஆ.பெ. விசுவநாதம் தமிழர் கழகம் என்றேபெயர் வைக்க வேண்டும் என்று கூறியும், வஞ்சகமாக திராவிடர் கழகம் என்றே பெயர் சூட்டினார் ஈ.வெ.ராமசாமி.

இதற்கு அவர் கூறிய காரணம், தமிழர் என்றால் பார்ப்பனர்களும் உள்ளே வந்துவிடுவார்கள் என்பது. ஆனால், இறுதிவரை ராஜாஜி எனும் கன்னட பார்ப்பனரை "ஆச்சாரியார்" அதாவது, குருவே குருவே என்று அழைத்து நட்புறவில் இருந்தவர் ராமசாமி. அவரைக் கேட்காமல் துரும்பைக்கூட அசைக்காதவர் ராமசாமி. அவருக்கு தமிழ்ப் பார்ப்பனர்கள் மீதுதான் வெறுப்பு போல.

(அயோத்திதாசர்தான் திராவிடர் எனும் பெயருக்கு முதலில் வித்திட்டவர் என்று திராவிடத் திருவாளர் கூட்டம் முழங்கும்......ஆனால் திராவிடர் எனும் பெயரில் அமைப்பு நடத்தியவர் ஜான் ரத்தினம். அவர் நடத்திய பத்திரிகைக்கு எழுத்துப் பங்காற்றியவர் அயோத்திதாசர். இந்த திராவிடர் எனும் சொல் ஆதி திராவிடர் எனும் பெயரில் பறையர் பெருங்குடி மக்களை மட்டுமே குறிக்கும் வகையில்தான் ஜான் ரத்தினம் பயன்படுத்தினாரே தவிர, ஒட்டுமொத்தத் தமிழர்களைக் குறிக்கும் பெயராகப் பயன்படுத்தவில்லை.

மேலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் கிறித்தவர்கள், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை இந்துக்கள் என்று வகைப்படுத்தும் செயல் செய்யப்பட்டது.

அந்த நிலையில், அயோத்திதாசர், பறையர் பெருங்குடி மக்கள் தங்களை "சாதியற்ற தமிழர்கள்" என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பதியவேண்டும் என்றுதான் வலியுறுத்தினார்.

கவனிக்கவும், சாதியற்ற திராவிடர்கள் என்று

அல்ல.

மேலும், தமிழன் எனும் பெயரில்தான் அச்சுப்பத்திரிகை நடத்தி வந்தார். எனவே...அயோத்திதாசரை வைத்து திராவிடம் பெயரை உறுதிப்படுத்த முனைவது குதர்க்கமானது, மூடத்தனமானது. ஏற்றுக்கொள்ள இயலாதது.)

இந்த ராபர்ட் கால்டுவெல்லைப் பொறுத்தவரை தென்னிந்த மொழிகளின் இலக்கணங்களுக்கு இடையேயான ஒப்பீடு குறித்த ஆய்வுத் தகவலைத் தவிர அவர் எழுதியுள்ள 99 விழுக்காடு தகவல்கள் அபத்தமானவை, மூடத்தனமான, அறிவற்ற தகவல்கள்.

சில எடுத்துக்காட்டுகள் சொன்னால் புரியும்...."தமிழர்களுக்கு கலை அறிவியல் கட்டடக் கட்டுமானம் குறித்து ஒன்றும் தெரியாது. இவற்றைக் கற்றுக்கொடுத்தவர்கள் வட வேத பிராமணர்கள். தமிழர்களுக்கு இலங்கைக்கு தெற்கே கடல் குறித்த எந்த அறிவும் இல்லை" என்கிறார் ராபர்ட் கால்டுவெல் ஆனால் "தமிழ் தனித்து இயங்கும் வல்லமை படைத்த சிறப்புத் தனி மொழி" என்கிறார் அவர்.

அது எப்பட்றா....உலக மொழிகளில் குறிப்பாகத் தென்னிந்திய மொழிகளில், பிற மொழிகளின் உதவியின்றித் தனித்து இயங்கவல்ல தொன்மையான மொழி தமிழ் என்று கூறும் ஒரு ஆய்வாளர் ராபர்ட் கால்டுவெல், அந்தத் தமிழ் பேசும் இன மக்களுக்கு கலை, அறிவியல், பண்பாடு, கட்டடக் கலை தெரிந்திருக்கவில்லை" என்று உளறுகிறார் ? எனும் கேள்வி எழுகிறது இல்லையா ?

எவ்வளவு இளித்தவாயர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் ?!

இதனால்தான், ஆட்சி அதிகாரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு தமிழர் வரலாற்றை திரித்து எழுதிக்கொண்டுள்ளது இந்தத் திராவிடக் கூட்டம்.

இது, திராவிடக்கூட்டத்தின் தவறல்ல....கண்டுகொள்ளாமல்விட்டு அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த ஒற்றுமையற்ற தமிழர்களின் மாபெரும் தவறு.

இந்த ராபர்ட் கால்டுவெல்லுக்கு அன்றே உடன் இருந்து இதுபோன்ற அபத்தமான நூல் எழுத ஆலோசனை கொடுத்தவர்கள் அநேகமாக தெலுங்கு பிராமணர்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது.

தம்மை ஆச்சாரமான கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்று அறிமுகம் செய்து கொண்ட ஈ.வெ.ராமசாமிக்கு அடுத்து, வரலாற்றுதுறையில் ராமசாமி வேலை செய்தவர் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட கல்வெட்டு ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன்.

இவர், ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்தை உண்மையாக்க முயன்றவர். அதாவது, திராவிடர் என்பவர்கள் குஜராத் தொடங்கி தென்னிந்தியாவுக்கு வந்தவர்கள் என்றும், இலங்கைக்குத் தெற்கில் தமிழர்கள் சென்றதில்லை என்றும் ராபர்ட் கால்டுவெல் கூறிய அறிவற்ற கருத்தை உண்மையாக்க முயன்றவரே ஐராவதம் மகாதேவன்.

மேலும், சிந்துவெளி நாகரீகத்தைத் திராவிடர் நாகரிகம் என்று முதன்முதலாகக் கட்டுக்கதை எழுதிப் பதியவைத்ததும் இதே ஐராவதம் மகாதேவன்தான். ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல சுமார் 40 ஆண்டுகள் இந்தக் கருத்தில் இருந்து யாரும் நகர்ந்து கொள்ளாதவாறு பார்த்துக்கொள்ளுமாறு ஒரு ஏற்பாட்டை செய்தவரும் இதே ஐராவதம் மகாதேவன்தான்.

இவரது இந்தக் கருத்து, தமிழ்நாட்டில் வாழும்.. வெளியே தமிழும், வீட்டுக்குள் தெலுங்கும் பேசும், பத்திரிகை - ஊடகம், வணிகம், ஆட்சி அதிகாரத்தில் ஈடுபட்டு வருவோருக்கு லட்டு போல இனிக்கத் தொடங்கியது.

இதுதான் தங்கள் வரலாறு என்று இந்தத் திராவிடர்கள் உறுதியாக நம்பத் தொடங்கினார்கள்...தமிழர்களையும் நம்ப வைத்தார்கள்.

ஆக.... தென்னிந்தியப் பொருளில் உள்ள திராவிட எனும் சொல்லை, ஒரு இனத்தின் பெயராகப் பொய்யாக மாற்றி, அதை நம்பவைத்து அந்த இனத்தின் நாகரிகம்தான் சிந்துவெளி நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் போன்ற வரலாறு எழுதியோரும் பதிவு செய்ய.....தமிழர்களும் தங்களைத் திராவிடர்கள் என்றே மிக மிகத் தவறாக உறுதியாக நம்ப வைக்கப்பட்டனர்.

ஆனால், அடிப்படையில் ஒரு இனம் என்றால் அதற்கு ஒரு மொழிதான் இருக்கும். ஒரு மொழி கொண்ட, ஒரே இடத்தில் நீண்ட காலம் வாழ்ந்த, கலை, இலக்கியம், பண்பாடு கொண்ட மொழி பேசுவோர் உள்ள ஒரு சமூகத்தைத்தான் இனம் என்று அளவிடுவது உலக அளவில் வரையறை உள்ளது.

ஆனால், இங்கே தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட சுமார் 8 மொழிகள் பேசுவோரை ஒரே இனம் என்று உருட்டிய ஒரே கரகாட்டக் கோஷ்டி இந்த ஐராவதம் மகாதேவன் வகையறா தெலுங்கை வீட்டிலும், தமிழை வெளியேயும் பேசும் திராவிடக் கோஷ்டிதான்.

ராபர்ட் கால்டுவெல்லின் அபத்தமான கருத்துக்களைக் கைப்பற்றி ஈ.வெ.ராமசாமி, ஐராவதம் மகாதேவன் ஆகிய இரண்டு பேர் ஒருவழியாக பட்டி டிங்கரிங் பார்த்து தமிழ்நாட்டில் வாழும் அனைவரும் திராவிடர்கள் என்று நம்பவைத்து விட்டனர்.

ஆனால், இவர்களுக்கு இருந்த ஒரே சிக்கல், தடை...தமிழர்களின் சங்க இலக்கிய நூல்கள்.

காரணம், இவர்களின் இந்த திராவிட உருட்டு தவிடு பொடியாகும் இடம் சங்க இலக்கிய நூல்கள் எனும் தமிழர் வரலாற்று ஆவணங்கள்.

இதுகுறித்து மறைந்த கரிசல் காட்டு எழுத்தாளர் கி.ரா எனும் கி.ராஜநாராயணனை முன்பொருமுறை சந்திக்கச் சென்று சிலரிடம் வெளிப்படையாகவே சொன்னது..."சங்க இலக்கியங்களை மட்டும் அழித்துவிட்டால் மொத்தமா முடிஞ்சிடும். மண்ணும், வரலாறும் நமதாகிவிடும்" என்று கி.ரா கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டனர் சென்றவர்கள். காரணம், இவர்கள் தமிழர்கள். கி.ரா தெலுங்கு.

இதனால்தான், 2021 மு.க.ஸ்டாலின் ஆட்சிக்குவந்தபிறகு சட்டமன்றத்திலேயே "சங்க இலக்கியங்கள் இனி திராவிடக் களஞ்சியங்கள்" என்று அழைக்கப்படும் என்று அறிவித்துக் கடும் எதிர்ப்பு வந்தவுடன் அது திரும்பப் பெறப்பட்டது.

அதாவது, தமிழ் சங்க இலக்கியங்களை அழிக்க முடியாது...சரி அடுத்து என்ன செய்யலாம் ?! அந்த இலக்கியங்களுக்கும் திராவிட முகமூடி மாட்டிவிட்டுவிட வேண்டியதுதான். சோ...சிம்பிள்.

தமிழ் என்றாலே திராவிடம் என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர்களும் திராவிடர்களே என்று நம்ப வைத்தாயிற்று, தமிழர் இலக்கியங்களும் திராவிட இலக்கியங்கள் என்று நம்ப வைத்தாயிற்று, சிந்து வெளியும் திராவிட நாகரிகம் என்று நம்ப வைத்ததாயிற்று ....அடுத்து என்ன ?!

அடுத்த பணிதான் ஐராவதம் மகாதேவனின் சீடர் தெலுங்கரான பாலகிருஷ்ண ஐ ஏ எஸ் செய்தது, செய்து கொண்டிருப்பது !

இந்தப்பணி, முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதி, தமிழர் இனவழிப்பின் கிட்டத்தட்ட இறுதிக் கட்டம்.

சிந்துவெளி நாகரிகம் திராவிடர் நாகரிகம் என்று ஐராவதம் மகாதேவன் பொய்யாகக் கட்டுக்கதை கட்டி கட்டமைத்தார் இல்லையா...அந்த சிந்துவெளியில் இருந்து தெற்கே வைகை - கீழடி வரையிலான நாகரிகம் அனைத்தும் திராவிட சிந்து வெளி நாகரிகமே என்று கட்டுக்கதை கட்டும் வேலையைத்தான் பாலகிருஷ்ணன் கடந்த 15 ஆண்டுகளாகச் செய்து வருகிறார்.

அதிலும், ஏற்கனவே குறிப்பிட்டபடி முந்தைய சதிகளையெல்லாம் தூக்கி அப்படியே விழுங்கிவிடும் பெருஞ்சதியாக, தமிழர் இனவழிப்பின் இறுதிக் கட்டமாக, சங்க இலக்கிய சான்றுகள் அனைத்தும் குஜராத் முதல் (தற்போது) பாகிஸ்தான் வரையிலான சிந்துவெளி நாகரிகப் பகுதிகளுக்கே பொருந்துகின்றன, அவை, தமிழ்நாட்டிற்குப் பொருந்தவில்லை என்று நூல் எழுதியதுடன், பாண்டிய அரசன் குஜராத் மற்றும் மராட்டியத்தில்தான் இருந்தான், தெற்கில் இல்லை என்று மரண மகா உருட்டு உருட்டுகிறார் பாலகிருஷ்ணன்.

அதாவது, கன்னியாகுமரிக்குத் தெற்கே ஒன்றுமில்லை, குமரிக்கோடு, பஃறுளி ஆறு, குமரிக்கண்டம் என்பது தெற்கில் இல்லை வடக்கே குஜராத் மஹாராஷ்டிரா பகுதியில் இருந்தவை என்று திருப்பி உருட்டுகிறார்.

வஞ்சி எனும் தலைநகரம் பாகிஸ்தானில் உள்ளது என்றும், சங்க இலக்கியம் கூறும் துவரை எனும் பெயர் துவாரகையைக் குறிக்கிறது என்றும் தமது நூலில் எழுதி வைத்திருக்கிறார்.

ஆக....குஜராத் கடலில் கடல் கோள் ஏற்பட்டு அந்த மக்கள் சிந்து வெளியான பாகிஸ்தான், பலுச்சிஸ்தான், குஜராத் ஆகிய இடங்களில் வாழ்ந்து அதற்குப் பிறகு தெற்கு நோக்கி வந்து கீழடிக்கு வந்தனர் என்கிறார்.

நகைச்சுவை நடிகர் சந்தானம் நடித்த படத்தில் "என்னையை இன்னும் பைத்தியகாரன்னே நினைச்சுட்டிருக்கதானே" எனும் வசனம் மனதில் எழுகிறது இல்லையா...எமக்கும் அதே உணர்வுதான்.

இது தமிழர்களைப் பைத்தியமாக்கும் வஞ்சகச் செயல்.

ஆக...இந்தத் தெலுங்கு திராவிட கூட்டத்தின் சுமார் 70 ஆண்டுகால செயல்திட்டம் வெளிப்படையாகவே தமிழ், தமிழர்களை அழித்தொழிப்பது அல்லது அவர்களின் மொழி, இலக்கியம், தொன்மம், பண்பாடு, நிலம், மண்,ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி தமிழர்களை கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வது.

இதற்கான வரலாறு எனும் பெயரில் பொய்யாக ஃபோர்ஜரி வேலை செய்து புரட்டு வரலாற்றை உருவாக்கும் பித்தளை மாத்தி வேலை செய்வதுதான் ஐராவதம் மகாதேவன், பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் ஆகியோரின் வேலைத்திட்டம்.

இத்தகைய மாபெரும் "தமிழின உணர்வாளரைத்தான்" தமிழ்நாடு அரசின் "உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்" அதற்குத் தலைவர் பொறுப்பில் இருந்த அமைச்சரைத் தூக்கி விட்டு அந்தத் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இதில் என்ன கொடுமை என்றால்...அந்த உலகத்தமிழாராய்ச்சி மையத்தின் மாணவர்கள் Phd பயிலுவோர். இவர்...M A தமிழ் அஞ்சல் வழியில் பயின்றவர். அவர்களுக்கு இவர் தலைவர். மேலும், இவர் கல்வெட்டு ஆய்வாளரோ, ஓலைச்சுவடி ஆய்வாளரோ...அல்லது அகழ்வாய்வு ஆய்வாளரோ அல்ல.

ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார்.

இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட...

வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ?????

என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?!

ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார்.

அது.....

சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம்.

வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?!

சிந்துவெளி முதல் வைகை வரை என்று புரட்டு நூல் ஒன்றை எழுதிய பாலகிருஷ்ணன் இப்போது மாற்றி வகை முதல் சிந்துவெளி வரை என்று உண்மை நூல் எழுதுவாரா ?!

வெளியே இருந்தபோதே வரலாற்றை இப்படி புரட்டி உருட்டி திரிக்கும் பாலகிருஷ்ணனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பில் அமரவைத்திருக்கிறார்கள்....அங்கே என்னென்னெ புரட்டு வேலைகளைச் செய்து தமிழர் வரலாற்றை எப்படியெல்லாம் மேலும் திரிக்கப்போகிறாரோ யாருக்குத் தெரியும் ?!

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம். 8/6/2025

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, nunavilan said:

வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், பத்திரிகை ஊடகவியலாளர், நிறுவனர் : தமிழியல் நடுவம்.

நனைந்த பிஸ்கோத்து🤣

தொல்லியல் பற்றிய தெளிவில்லாத ஒருவரால் காழ்புணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை இது. பாலகிருஷ்ணன் அவர்களது கட்டுரை, காணொலிகளைப் பார்த்துள்ளேன். சிறந்த ஆய்வாளர்.

10 hours ago, nunavilan said:

வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?!

தமிழ்நாட்டில் உலாவும் 5000 வருடங்களுக்கு முன் இரும்பு பாவிக்கப்பட்டிருக்கும் தகவல் சரியான ஆதாரமற்றது என்று நினைக்கிறேன். இதுவரை உலகில் 3500 வருடங்களுக்கு முன்பே இரும்பு பாவிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரும்பின் பயன்பாடு கிமு 3000 முதல் கிமு 1200 வரையிலான காலத்தில் தொடங்கியது. இது இரும்பு யுகம் (Iron Age) எனப்படும், ஆனால் இரும்பு முதலில் வெண்கல யுகத்திலேயே (Bronze Age) சிறிய அளவில் பயன்படுத்தப்பட்டது.

  • மெசொப்பொத்தேமியா மற்றும் அனத்தோலியா (தற்கால துருக்கி) போன்ற பகுதிகளில் கிமு 3000க்கு முன்பே இரும்பு பயன்பாட்டில் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.

  • இந்தியாவில், இரும்பு யுகம் கிமு 1800 முதல் கிமு 1200 வரை தொடங்கியது.

  • தமிழகத்தில், இரும்பு பயன்பாடு சங்க காலத்திற்கு முன்னர் (கிமு 600 - கிமு 300) இருந்ததற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.

எனவே, தோராயமாக 5000 வருடங்களுக்கு முன்பு இரும்பு பயன்பாட்டில் இருந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/6/2025 at 07:27, nunavilan said:

Muthukrishnan Viswanaath 

ஆய்வாளரோ...அல்லது

ஆக...மொத்தம் பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ்-ஐப் பொறுத்தவரை வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனிதர்கள் வந்தார்கள், நாகரிகம் வந்தது என்று நம்ப வைக்கும் வேலையை உருண்டு புரண்டு செய்து வருகிறார்.

இவரது வாதத்தின்படியே பார்த்தாலும் கூட...

வடக்கே இருந்து மனிதர்கள் மற்றும் நாகரிகம் தெற்கு நோக்கி வர 100 க்கணக்கான ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். அதுவரை தென்னிந்தியா முழுதும் காடாக இருந்ததா. மனித நடமாட்டமே இல்லாதிருந்ததா ?????

என்ன பைத்தியக்காரத்தனமான பார்வை ?!

ஆனால்...இவ்வளவு மெனக்கெட்ட பாலகிருஷ்ணன் தற்போது வசமாக மாட்டியிருக்கிறார்.

அது.....

சில வாரங்களுக்கு முன்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், முன்னதாகத் தமிழ்நாட்டின் சிவகளை எனும் இடத்தில் கிடைக்கப்பெற்ற இரும்பைக் கால அளவு சோதனை செய்தபோது அது ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமையானது என்று நிரூபிக்கப் பட்டுள்ளதாக அறிவித்தார்.

அதாவது பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் தலையில் தூக்கிக் கொண்டாடுகிற பாகிஸ்தானின் சிந்துவெளியின் சான்றுகளின் கால அளவுக்கு முற்பட்டது இந்த சிவகளை இரும்பு நாகரிகம்.

வடக்கில் இருந்துதான் தெற்கு நோக்கி மனித நாகரிகம் வந்தது என்று பாலகிருஷ்ணன் சொல்வது உண்மை என்றால்....இந்த சிவகளையில் 5,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்து இரும்பைப் பயன்படுத்தியவர்கள் யார்....? வேற்று கிரக மனிதர்களா....இல்லை பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்-சின் முன்னோர்களா ?!

தமிழ் நாட்டில் 5000 ஆண்டுகள் முன்னர் இரும்பு பாவனை இருந்தால், தமிழ் நாட்டில் இருந்து தான் நவீன மனிதர்கள் உருவாகி வடக்கே போனார்கள் என்பதை நிரூபிப்பதாகுமா? எப்படி? ஆதி மனிதர்களின் கண்டு பிடிப்புகளில் பல ஒரே காலத்தில், அல்லது சிறிது கால இடைவெளிகளில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் நிகழ்ந்திருக்கின்றன. நெருப்பு முதல், சக்கரம் வரை இப்படியாக உதாரணங்கள் இருக்கும் போது, தென்னிந்தியாவின் இரும்புப் பாவனை Out of Asia தியரியை நிறுவப் போதுமானதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டுக்கு (சர்வதேச) தொல்லியல் துறை எப்படி வேலை செய்கிறது என்பது தெரியாதை நடப்பவைகளை படம் போடு காட்டுகிறது.

பாலகிரிஷ்ணனோ அல்லது எவரோ, இதில் துறை சார் நிபுணத்துவம் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு இந்த விடயத்தை கையாளத் தெரியவில்லை என்பதை நடப்பவைகள் படம் போட்டு காட்டுகிறத்து.

சிங்களம் இதை விட நன்றாக கையாளும், ஏனெனில் சிங்களத்துக்கு சர்வதேச (பல நாடுகளின்) தொல்லியல் துறையின் சேர்நது ஆயு செய்த, மற்றும் சர்வதேச தொழில் துறையால் சவாலுக்கு உட்பட அனுபவமும்.

(எவற்றுக்கும் அரசியல் நியமனம் செய்யும் சிங்களம், தொல்லியலில் அந்த தலையீடு செய்வது இல்லை)

பாலகிருஷ்ணன் தொல்லியல் துறைசார் நிபுணர் அல்ல. அவரின் அனுபவமும் அது அல்ல. அவர் சொல்லுவது எடுபடாது.

மாறாக, இந்திய தொல்லியல் துறையின் தலைவர் / பொறுப்பானவர் தொல்லியல் துறைசார் நிபுணர், Dr. Yadubir Singh Rawat.

தமிழ்நாட்டில் ஆய்வு சவாலுக்கு உட்பட்ட அனுபவம் உள்ளவர்கள் இல்லை என்பதே யதார்த்தம்.

அனால், முதலே சிந்தித்து இருந்தால், சவாலை குறைத்து இருக்கலாம், பகுதி பகுவதியாக சர்வதேச மீள்பார்வைக்கு ஆய்வுகள் முடிந்து அறிக்கை வந்த கையுடன் உட்படுத்தி இருப்பதன் வழியாக.

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் ஏற்றுக்கொண்ட தமிழ்ப்பிராமி கல்வெட்டு அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள். அசோகப்பிராமியையும், தமிழ்ப்பிராமியையும் வேறுபடுத்தியவரே இவர்தான். தமிழ்நாட்டில் இருந்த கல்வெட்டுகளை வரலாற்று மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு தெரிந்திருந்த பிராமி எழுத்துக்களை கொண்டு வாசிக்க முடியாதிருக்கும் போது, அவை இன்னொரு வகை பிராமி எழுத்துருக்கள் என்றும், அவர் அதை தமிழ்ப்பிராமி என்றும் வகைப்படுத்தி கல்வெட்டுகளை வாசித்து தொகுத்தார்.

தினமணியில் ஆசிரியராகவும் இருந்தார். அன்று தான் தமிழ் இலக்கிய உலகில் ஒரு மாற்றம் வந்தது. பத்திரிகைகளில் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்ததும் மகாதேவன் அவர்களே. புதுமைப்பித்தனும், அசோகமித்ரனும் அவருடைய முயற்சியால் தான் தமிழர்களுக்கு ஓரளவாவது தெரியவந்தனர். இன்று கூட இவர்களை எங்களின் சமூகத்தில் பலருக்கும் தெரியாது. புனைவு உலகில் உலகில் எவருக்கும் இணையான இரு மேதைகள் இவர்கள்.

இன்னும் மகாதேவன் அவர்கள் பற்றி நிறையவே எழுதலாம். அவர் அன்றே வெளிநாடுகள் போய் இருக்கலாம். ஆனாலும் தமிழ்நாட்டிலேயே தங்கி அரசுப் பணியுடன் குகைகளையும், கல்வெட்டுகளையும் ஆராய்ந்தார். இதில் அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஒரு புத்தகம் உலகெங்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கின்றது. ஒரு ஆராய்ச்சியாளின் அடிப்படையே நேர்மை என்பதில் எந்த விட்டுக்கொடுப்பும் செய்யாதவர். இவரின் சில புத்தகங்கள்:

  • The Indus Script: Texts, Concordance and Tables (1977)

  • Early Tamil Epigraphy, from the Earliest Times to the Sixth Century A.D (2003)

  • Corpus of Tamil-Brahmi inscriptions (1966)

  • The Indus Script: Texts, Concordance and Tables (1977)

  • Early Tamil Epigraphy: From the Earliest Times to the Sixth Century A.D. (Harvard Oriental Series, 62) (2003)

  • Early Tamil Epigraphy: Tamil-Brahmi Inscriptions. Revised and Enlarged Second Edition: Volume 1 (en: Central Institute of Classical Tamil) (2014)

  • Akam and Puram: 'Address' Signs of the Indus Script (2010)

  • Dravidian Proof of the Indus Script via the Rig Veda: A Case Study (2014)

  • Toponyms, Directions and Tribal Names in the Indus Script (Archaeopress) (2017)

2018ம் இவர் ஆண்டு இறந்த பொழுது தான் இவரையோ, இவரின் பணிகளையோ அறிந்தவர்கள் மிகச்சொற்பமே என்று தெரிந்தது. முக்கியமாக ஈழத்தமிழர்களில் இவரை அறிந்திருந்தவர்களை எண்ணி விடலாம் என்ற நிலையே இருந்தது. இன்றும் அதுவே தான் நிலை. இவர் மறைந்தது தமிழ் பேசும் உலகத்திற்கு ஒரு மிகப்பெரிய, நிரப்பவே முடியாத இழப்பாகப் போனது.

அவர் விட்ட இடத்திலிருந்து முயன்று கொண்டிருக்கும் ஒருவர் பாலகிருஷ்ணன்.

தமிழின் வரலாற்றில் நிற்கப் போகும் இன்னொரு மேதை கி.ரா.

இவர்களை எல்லாம் தமிழர்களே இல்லை என்றும், வசவு வார்த்தைகளாலும் பொதுவெளிகளில் எழுதும் சிலர் தமிழுக்கு என்ன தான் செய்திருக்கின்றார்கள்...............

  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, ரசோதரன் said:

இவர்களை எல்லாம் தமிழர்களே இல்லை என்றும், வசவு வார்த்தைகளாலும் பொதுவெளிகளில் எழுதும் சிலர் தமிழுக்கு என்ன தான் செய்திருக்கின்றார்கள்...............

என்ன இப்பிடிக் கேட்டு விட்டீர்கள்? "பேச்சுக்கு "ஸ்" போட்டு speech வந்தது, "பேரீடு என்பதில் இருந்து தான் எகிப்தின் பிரமிட் வந்தது" என்று அவர்களும் தமிழின் பெருமையை உயர்த்திப் பிடித்தபடி தான் இருக்கிறார்கள்😎?

உண்மையான ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டும் இணையத் தளங்களில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான பொருட்களின் கரிமத் தேதியிடல் ஆய்வு முடிவுகள் 2600 வருடங்களையே காட்டுகின்றன.

நான் நினைக்கிறேன் 4000 - 5000 ஆண்டுகள் என புரளியைக் கிழப்புபவர்கள் குமரிக்கண்ட கோஸ்டியாகத்தான் இருக்கும். ஆய்வு ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஊகங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/6/2025 at 00:25, இணையவன் said:

தொல்லியல் பற்றிய தெளிவில்லாத ஒருவரால் காழ்புணர்வுடன் எழுதப்பட்ட கட்டுரை இது.

நானும் இவரது சில உரைக்காணொளியைப் பார்த்துவிட்டு, யாழில் இணைக்கலாமே என்ற நோக்கோடு வந்தால் இப்படியொரு விமர்சனம் உள்ளது. உங்களது பார்வையே எனது பார்வையும். காழ்ப்புணர்வு வரலாற்று உண்மைகளைத்தரா.இப்படி எழுதுவோர் ஆதாரங்களுடன் நிறுவ வேண்டும்.

கீழடி அகழ்வாராய்ச்சி தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியம்? - ஓய்வுபெற்ற IAS அதிகாரி பாலகிருஷ்ணன்

இந்தத் திரியோடு தொடர்புடையதால் இணைத்துள்ளேன்.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஐராவதம் மகாதேவனோ, பாலகிருஷ்ணனோ பயிற்றப்பட்ட, அனுபவப்பட்ட துறைசார் தொல்லியல் ஆய்வாளர்கள் அல்ல.

ஐராவதம் மகாதேவன் மொழியியல், எழுத்தியல் (epigraphy) ஆய்வாளர். அதில் தான் அவர் தமிழ் பிராமி பற்றிய ஆய்வு.

வேறுபடுத்தியது அசோக பிராமியில் இருந்து.

(திஸ்ஸமகராகமவில் கண்டெடுத்து (பின் சிங்களத்தால் காணாமல் ஆக்கப்பட்ட) கல்லில் இருந்தது தமிழ் பிராமி என்று அறிந்தது மகாதேவன் குறிப்பில் இருந்து தான்)

இவை தொல்லியல் ஆதாரத்தின் ஒவ்வோரு பகுதியாக இருக்கலாம் அல்லது அப்படி இல்லாது விடலாம்.

அனால் இப்போதைய தொல்லியல் துறை மிகவும் சிக்கலானது. forensic archaeology ஆல். அத்துடன் பொதுவாக மானிடவியலும் (குறிப்பாக biological anthropology) உள்ளடக்கம், forensic anthropology ஆல்.

சில உப விஞ்ஞான (/மருத்துவ) துறையும் (உ.ம். anthropometry, osteology, metallurgy, ecology போன்றவை) தொல்லியல் துறைக்குள் வரும்.

தொல்லியல் துறை இப்போது விஞ்ஞான பக்கம் சாய்ந்த, interdisciplinary, multi-disciplinary துறை.

எனவே துறைசார் பயிற்சியும், அனுபவமும் இல்லை என்றால், அப்படி துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களால் இலகுவாக நிராகரிக்கலாம், அதுவும் இந்திய தொல்லியல் துறை தமிழரின் நாகரிகத்துக்கு வரும் போது.

ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது, இந்த தொல்லியல் ஆய்வு செய்தவர்கள் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

ஐராவதம் மகாதேவனோ, பாலகிருஷ்ணனோ பயிற்றப்பட்ட, அனுபவப்பட்ட துறைசார் தொல்லியல் ஆய்வாளர்கள் அல்ல.

ஐராவதம் மகாதேவன் மொழியியல், எழுத்தியல் (epigraphy) ஆய்வாளர். அதில் தான் அவர் தமிழ் பிராமி பற்றிய ஆய்வு.

வேறுபடுத்தியது அசோக பிராமியில் இருந்து.

எனவே துறைசார் பயிற்சியும், அனுபவமும் இல்லை என்றால், அப்படி துறை சார் நிபுணத்துவம் உள்ளவர்களால் இலகுவாக நிராகரிக்கலாம், அதுவும் இந்திய தொல்லியல் துறை தமிழரின் நாகரிகத்துக்கு வரும் போது.

ஆனால் ஒரு கேள்வி இருக்கிறது, இந்த தொல்லியல் ஆய்வு செய்தவர்கள் எங்கே?

கடஞ்சா, இந்த திரியின் நோக்கம் கீழடி தொல்லியல் ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் நிறுவும் அல்லது மறுக்கும் ஒன்றல்ல. மாறாக இது தமிழர் - திராவிடர் என்ற பேதத்தின் மூலம் பல துறைகளில் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பெரும் பணியாற்றிய சிலரை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என்றும் சிலர் அபாண்டமாகக் குற்றம் சுமத்துவதும், வேறு சிலர் அந்தக் குற்றங்களை ஆதாரங்களுடன் நிராகரிப்பதும் ஆகும்.

கி.ராஜநாராயணன் அவர்களுக்கும் தொல்லியியல் துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அவர் தமிழ் கண்ட ஆகச் சிறந்த கரிசல் காட்டு கதைசொல்லி. அவர் கரிசல் கதைகளை மட்டும் எழுதவில்லை, கரிசல் வட்டார அகராதியையும் அவரே உருவாக்கினார். இன்றும், என்றும் எழுதுபவர்களுக்கு இவர் ஒரு முன்னோடி. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவரால் இப்படியும் எழுத முடியும் என்பது எவ்வளவு ஒரு நம்பிக்கையை இந்த உலகத்திற்கு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராக அறிவிக்கப்பட்ட கவிஞர் எழுத்தாளர் சல்மா எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கின்றார் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டும்.

கி.ராவை ஒரு தமிழர் அல்ல என்றும், அவர் ஒரு கன்னடர் என்று சொல்லப்படுவதையும், அவர் மேல் விழும் பழிகளையுமே நான் மறுதலிக்க முற்படுகின்றேன். கோவில்பட்டியில் பிறந்து, வளர்ந்து, தன் நிலத்துக்கும் தமிழுக்கும் என்றும் நிலைத்து நிற்கும்செயல்களை செய்து முடித்து, அந்த மண்ணிலேயே மறைந்து போன ஒரு ஆசான் அவர்.

இதுவே தான் மேலே குறிப்பிடப்பட்டிருந்த மற்றவர்களின் நிலைமையும் கூட. இவர்கள் மேல் சுமத்தப்படும் பழிகள் அன்றாட அரசியல் சார்ந்தது. தமிழோ அல்லது வரலாறோ சார்ந்தது அல்ல. மிகவும் குறு நோக்குகள் கொண்டவை.

ஐராவதம் மகாதேவனோ அல்லது பாலகிருஷ்ணனோ தொல்லியல் நிபுணர்கள் என்று நான் சொல்லவில்லை. இங்கே தொல்லியல் நிபுணர்கள் அமர்நாத் ராமகிருஷ்ணன் மற்றும் அவருடன் தமிழ்நாட்டு தொல்லியல்துறையில் பணிபுரியும் இன்னும் சிலர்.

நீங்கள் வழமை போலவே 'மத்தி எப்படி வேலை செய்கின்றது என்று மாநிலத்திற்கு தெரியாது............' என்று மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றீர்கள். அமர்நாத்தை மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலத்திற்கு, மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு, மீண்டும் மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு என்று மாற்றி மாற்றி நியமிக்கும் போது, அமர்நாத் போன்றோர் எதையும் அறியாமலா ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய் வந்து கொண்டிருப்பார்கள்?

** தமிழ்நாட்டில் சூடை மீனை மத்தி என்று சொல்லுவார்கள். மத்தி என்னும் சொல்லை பார்க்கும் போதெல்லாம் வலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சூடை மீன்கள் தான் மனதில் வருகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, இணையவன் said:

உண்மையான ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டும் இணையத் தளங்களில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மிகத் தொன்மையான பொருட்களின் கரிமத் தேதியிடல் ஆய்வு முடிவுகள் 2600 வருடங்களையே காட்டுகின்றன.

நான் நினைக்கிறேன் 4000 - 5000 ஆண்டுகள் என புரளியைக் கிழப்புபவர்கள் குமரிக்கண்ட கோஸ்டியாகத்தான் இருக்கும். ஆய்வு ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஊகங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை.

தமிழ் நாட்டின் 5 இடங்களில் இருந்து எடுக்கப் பட்ட சான்றுகளின் வயதுக் கணிப்பின் படி, இரும்புப் பாவனை 5000 வருடங்கள் முன்பு ஆரம்பித்ததாக அண்மையில் தகவல் வெளியிடப் பட்டது உண்மை. இதைப் பற்றிய பிபிசி கட்டுரை கீழே.

Earliest iron use found in India...
No image preview

Earliest iron use found in India? Tamil Nadu digs spark d...

Tamil Nadu’s iron artefacts may predate Turkey's Anatolia, reshaping early Iron Age history.

ஆனால், இந்த உண்மையான ஆய்வுக் கண்டு பிடிப்பை "தமிழ் நாட்டில் தான் மனித இனமே தோன்றியது" என்று வியாக்கியானம் செய்வது தொல்லியலாளர்கள் அல்ல, திராவிட - தமிழ் என்று பிரிப்பரசியல் செய்யும் முகநூல் பதிவர்கள் தான் இந்தத் திரிப்பைச் செய்கிறார்கள். அந்த பிபிசி கட்டுரையிலேயே ஒரு தொல்லியலாளர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:

"..Parth R Chauhan, a professor of archaeology at the Indian Institute of Science Education and Research (ISSER), urges caution before drawing broad conclusions. He believes that iron technology likely emerged "independently in multiple regions".

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

கடஞ்சா, இந்த திரியின் நோக்கம் கீழடி தொல்லியல் ஆய்வுகளையும், அதன் முடிவுகளையும் நிறுவும் அல்லது மறுக்கும் ஒன்றல்ல. மாறாக இது தமிழர் - திராவிடர் என்ற பேதத்தின் மூலம் பல துறைகளில் தமிழுக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பெரும் பணியாற்றிய சிலரை துரோகிகள் என்றும், வஞ்சகர்கள் என்றும், தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் என்றும் சிலர் அபாண்டமாகக் குற்றம் சுமத்துவதும், வேறு சிலர் அந்தக் குற்றங்களை ஆதாரங்களுடன் நிராகரிப்பதும் ஆகும்.

அது தான் சொல்கிறேன், மொழியியல், எழுத்தியல் போன்ற ஆய்வாளரை தொல்லியலுக்கு பொறுப்பாக நியமிக்க, அந்த மொழியியல், எழுத்தியல் தான் தொல்லியல் என்று, மொழியியல், எழுத்தியல் ஆய்வாளரை வசைபாடுபவர்ளுக்கு,

அரங்கு ஏற்படுத்தி கொடுத்தது யார்? திமுக.

துறை சார் தொல்லியல் ஆய்வாளரை பொறுப்பாக நியமித்து இருந்தால், இதுக்கு இடம் இல்லை / குறைவு.

6 hours ago, ரசோதரன் said:

நீங்கள் வழமை போலவே 'மத்தி எப்படி வேலை செய்கின்றது என்று மாநிலத்திற்கு தெரியாது............' என்று மீண்டும் ஆரம்பிக்கப் போகின்றீர்கள். அமர்நாத்தை மத்திய அரசுப் பணியிலிருந்து மாநிலத்திற்கு, மாநிலத்தில் இருந்து மத்திய அரசுப் பணிக்கு, மீண்டும் மத்திய அரசிலிருந்து மாநிலத்திற்கு என்று மாற்றி மாற்றி நியமிக்கும் போது, அமர்நாத் போன்றோர் எதையும் அறியாமலா ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு போய் வந்து கொண்டிருப்பார்கள்?

நான் சொல்லியதே (கிட்டத்தட்ட அதை போல) நடத்தது என்பதை, இருபக்கமும் எவ்வாறு அணுகியது என்பதை பொதுவெளிக்கு அறிவித்ததில் இருந்து வெளிப்படையாக தெரிவது. கவனிக்காதது அவரவரின் பிரச்சனை.

அமரநாத்தை மாறி, மாறி, விட்டு, விட்டு நியமித்தாலும், இறுதியில் ஆய்வின் அறிக்கை வந்துள்ளது தானே. அதிலே தானே கேள்விகள்.

அமரநாத்தை (அல்லது அவரை போன்ற நிபுணத்துவம் உள்ள ) பொதுவாக தொடர்ச்சியாக ஒருமாநிலத்துக்கு நியமிக்க முடியாது. ஏனெனில் தொல்லியல் துறையில் எந்த நாட்டிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பது மிகப் பெரிய குறைபாடு, அமெரிக்காவில் கூட. இந்தியாவில் (அதை போன்ற பெரிய நிலப்பரப்பு நாடுகளில்) ஒரே நேரத்தில் பல மாநிலங்களில் தொல்பொருள் ஆய்வு நடப்பது, எனவே எது மிக கூட வாய்ப்பாக தெரிகிறது என்பதை பொறுத்து தான் நியமனம்.

இப்படியே (சர்வதே) தொல்லிய துறைகள் குறிப்பிட்ட நாடு உடன், குறித்த capacity இல் சேர்ந்து ஆய்வு செய்யும் போதும் நடப்பது. இந்திய தொல்லியல் துறை ஒவொரு மாநிலத்துக்கும், (சர்வதேச) தொல்லியல் ஆய்வு நடப்பதை போலவே செயற்படுகிறது, ஏனெனில் பெரிய நிலப்பரப்பு. எல்லாவற்றிலும் அடிப்படை பிரசனை நிபுணத்துவம், அனுபவம் பெற்றவர்கள் என்பவ்வர்களை விரல்விட்டு எண்ணலாம்.

ஆக குறைந்தது இந்த விடயத்தில், தமிழ் நாடு அதிர்ச்சியான ஆச்சரியம் அடைந்தது. தமிழ்நாடு அப்படியே ஏற்றுக்கொள்ளப்படும் என்று நம்பியது. தமிழ்நாடு சொல்வதில் இருந்து தெரிவது.

(தமிழ்நாடு நம்பியதுக்கு ரொமிலா தபர் காரணமாக இருக்கலாம். அவர் சொல்லியது தமிழ் நாடு இலக்கியங்களில் தங்கி இராது, துறைசார் (தொல்லியல்) ஆய்வை கீழடியில் செய்து உள்ளது என்று. அப்படி நடந்து இருந்தால் தமிழ்நாட்டுக்கு தெரியாது என்பதே அர்த்தம்)

எனவே தொல்லியல் துறை அரங்கேறுவது தமிழ்நாட்டுக்கு தெரியாது என்பதே அடையக் கூடிய முடிவு.

அதை அரசியல் ஆகிக் கொண்டு இருக்கும் வேளை, இதை உணர்ந்த இந்திய தொல்லியல் துறை, கேட்கப்பட்டது அரசியல் அல்ல, துறைசார் சம்பந்தமான விடயம் என்பதை அறிக்கை விட்டு தெளிவு படுத்தியது.

கேட்கப்படத்துக்கு, பாலகிருஷ்ணனின் பதில் அரசியல் ஆக இருந்தது, எவரோ இந்த கீழடி ஆய்வு அறிக்கை வெளிவருவதை விரும்பவில்லை என்று.

குறிப்பு:

(தொல்லியலில் இவ்வளவு விஞ்ஞானம் இருந்த்தும் எம்மவர்கள் அல்லது வேறு நாடுகளிலோ, அது அவ்வளவு கவர்ச்சி இல்லை. (மிக) கூடிய பரந்த அறிவும் (விஞ்ஞானம், மருத்துவம், சமூக விஞ்ஞானம், humanities, கணிதமும்), திறமையும் வேண்டிய துறையில், மிக குறைந்த சம்பளம், அத்துடன் புழுதியில், கணிசமான சந்தர்ப்பங்களில் இரவு வேலை, வேலையும் ஏற்ற இறக்கம் மிக கூட. மறுவளமாக, எமது / தென்னாசிய / ஏன் மேற்கு சமூகத்தில் கூட தொல்லியல் என்றால் தோண்டுதல் என்பதே. அப்படி இருப்பவரை எவராவதும் இப்போதும் கணக்கில் எடுப்பது இல்லை. தொல்லியல் கிட்டத்தட்ட thankless career. எனவே ஒருவரையும் குறை சொல்லவும் முடியாது தொல்லியலை தொழிலாக எடுக்காததற்கு. ஆனால், தொல்லியலில் BSc செய்தவர்களுக்கு பலவேறு துறைகள் கதவை திறக்கும்.)

Edited by Kadancha

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

அது தான் சொல்கிறேன், மொழியியல், எழுத்தியல் போன்ற ஆய்வாளரை தொல்லியலுக்கு பொறுப்பாக நியமிக்க, அந்த மொழியியல், எழுத்தியல் தான் தொல்லியல் என்று, மொழியியல், எழுத்தியல் ஆய்வாளரை வசைபாடுபவர்ளுக்கு,

அரங்கு ஏற்படுத்தி கொடுத்தது யார்? திமுக.

துறை சார் தொல்லியல் ஆய்வாளரை பொறுப்பாக நியமித்து இருந்தால், இதுக்கு இடம் இல்லை / குறைவு.

ஆர். பாலகிருஷ்ணனை தலைவராக நியமித்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே. தொல்லியல்துறைக்கு அல்ல. தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பதற்கு பாலகிருஷ்ணன் தகுதியுடையவரே.

கீழே உள்ளவை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்கள். இது அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கின்றது:

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
On 11/6/2025 at 16:42, ரசோதரன் said:

ஆர். பாலகிருஷ்ணனை தலைவராக நியமித்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே. தொல்லியல்துறைக்கு அல்ல. தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பதற்கு பாலகிருஷ்ணன் தகுதியுடையவரே.

கீழே உள்ளவை தமிழாராய்ச்சி நிறுவனத்தின் நோக்கங்கள். இது அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் இருக்கின்றது:

தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன.

தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றின் அடிப்படையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பல்வேறு திட்டங்களின் வழிச் செயலாற்றி வருகிறது.

இவ்வாறு கூறி விட்டு வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டது.

தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்…..

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ரசோதரன் said:

ஆர். பாலகிருஷ்ணனை தலைவராக நியமித்தது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கே. தொல்லியல்துறைக்கு அல்ல. தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருப்பதற்கு பாலகிருஷ்ணன் தகுதியுடையவரே.

இதில் முக்கிய பிரச்சனை தமிழ்நாடு (தொல்லியல் துறை) நிலைப்பாட்டை அறிவிக்காதது.

அந்த இடத்தில், பாலகிருஷ்ணன் போன்றோர் அதை அரசியல் ஆக்க முயன்றது. அவரின் நிலையில் அதை செய்து இருக்க கூடாது.

தமிழ்நாடு ஒரு போதும் எதிர்பார்க்காத, ஆனால் சர்வசாதரணமாக சர்வதேச தொல்லியல் ஆய்வில் நடக்கும் விடயம்.

இந்திய தொல்லியல் துறை சர்வதேச தொல்லியல் விதிமுறைகளை பின்பற்றுகிறது.

(நீங்கள் சொல்லும் தமிழ்நாட்டுக்கு தெரியும் என்றால், ஏன் இந்த நிலை?).

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.