Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அது பெண் பூனைக்குட்டியை பொறுத்தது. :lol::D

  • Replies 1.2k
  • Views 208.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    முதல் நீ, முடிவும் நீ மூன்று காலம் நீ... கடல் நீ, கரையும் நீ காற்று கூட நீ... மனதோரம் ஒரு காயம் உன்னை எண்ணாத நாள் இல்லையே நானாக நானும் இல்லையே...   கவிஞர் தாமரையின் வரிகளில் ஒரு அழகான பாடல

  • nunavilan
    nunavilan

    பாடல்: இதுவும் கடந்து போகும் படம்: நெற்றிக்கண் பாடியவர்: சிட் சிறிராம் இசை: கிறிஸ்    

  • nunavilan
    nunavilan

    நீ என் பக்கம் ( calm down tamil version)  

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் ...

படம்: சாரதா

வெளியீடு: 1962

குரல்: P. சுசீலா - PB. ஸ்ரீநிவாஸ்

வரிகள்: கவியரசு கண்ணதாசன்

இசை: KV. மகாதேவன்

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: அந்த ஒருவன் ஒருத்தியை மணந்து கொண்டால்

அந்த உரிமைக்குப் பெயர் என்ன?

அவன்: குடும்பம்

அவள்: நினைத்தவன் அவளை மறந்துவிட்டால்

அந்த நிலமையின் முடிவென்ன?

அவன்: துயரம்

அவள்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்துவிட்டால்

அங்கு பெண்மையின் நிலையென்ன?

அவன்: மௌனம்

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: இரவும் பகலும் உன் உருவம்

அதில் இங்கும் அங்கும் உன் உருவம்

அவன்: அடக்கம் என்பது பெண் உருவம்

அதை அறிந்தால் மறையும் என் உருவம்

அவள்: மறைக்க முயன்றேன் முடியவில்லை

உன்னை மறக்க முயன்றேன் நடக்கவில்லை

அவன்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை

உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

அவள்: கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை

என்னைக் கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை

அவன்: வாதம் செய்வது என் கடமை

அதில் வழியைக் காண்பது உன் திறமை

அவள்: கண்டேன் கண்டது நல்ல வழி

அது காதலனுடனே செல்லும் வழி

அவன்: சொன்னேன் பலமுறை யாசிக்கிறாய்

நீ சொன்னதை நானும்.. யோசிக்கிறேன்

அவள்: ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்

அந்த உறவுக்குப் பெயரென்ன?

அவன்: காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: விழியில்

படம்: கிரீடம்

ஜி. வி. பிரகாசின் இசையில்

என் தனிமைக்கு தனிமைகள் நீ வந்து கொடுத்தாய்..

 என் கனவுக்கு கனவுகள் நீ வந்து கொடுத்தாய்.. 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிலா காய்கிறது நேரம் தேய்கிறது யாரும் ரசிக்கவில்லையே

இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்

தென்றல் போகின்றது சோலை சிரிக்கின்றது யாரும் சுகிக்கவில்லையே

இந்தக் கைகள் மட்டும் உன்னைத் தீண்டும்

காற்று வீசும் வெய்யில் காயும் காயும் அதில் மாற்றம் ஏதும் இல்லையே

ஆஆஆ...வானும் மண்ணும் நம்மை வாழச் சொல்லும் அந்த வாழ்த்து ஓயவில்லை

என்றென்றும் வானில்

.......... நிலா காய்கிறது .........

அதோ போகின்றது ஆசை மேகம் மழையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இதோ கேட்கின்றது குயிலின் பாடல் இசையைக் கேட்டுக் கொள்ளுங்கள்

இந்த பூமியே பூவனம் உங்கள் பூக்களைத் தேடுங்கள்

இந்த வாழ்க்கையே சீதனம் உங்கள் தேவையைத் தேடுங்கள்

.......... நிலா காய்கிறது .........

படம் : இந்திரா

இசை : ஏ.ஆர். ரஹ்மான்

பாடியவர் : ஹரிணி / ஹரிஹரன்

வரிகள் : வைரமுத்து

http://www.youtube.com/watch?v=M6--E17NI6k

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நதியே நதியே காதல் நதியே

குரல்: உன்னி மேனன், குழுவினர்

வரிகள்: வைரமுத்து

இசை: ஏ.ஆர். ரகுமான்

படம்: ரிதம்

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ

சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்

ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்

நீரின் அருமை அறிவாய் கோடையிலே

வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்

நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ

தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு

உங்கள் வளைவுகள் அழகு

ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே

அது நங்கையின் குணமே

சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்

...

கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்

...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே

தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே

பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே

அடி நீயும் பெண்தானே

ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே

நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா

தீம்தனனா தீம்தனனா திரனா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான றீமிக்ஸ் பாடல் ஒன்று

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரைப்படம்: பள்ளிக்கூடம்

இசை: பரத்வாஜ்

பாடியவர்கள்: சுபிக்ஷா, டாக்டர் நாராயணன்

ஆரம்ப நாட்களிலிருந்தே பரத்வாஜ் பாடல்கள் மீது எனக்கு ஓர் இனம்புரியாத ஈர்ப்பு உண்டு. உணர்வுபூர்வமாக பாடல்களுக்கு இசையமைப்பவர்களில் பரத்வாஜிற்கு எப்போதும் இடம் உண்டு. பல பாடல்களை உதாரணமாகக் குறிப்பிடலாம். காதல் மன்னனில் இடம் பெற்ற 'வானும் மண்ணும் பாடல்', பூவேலியில் இடம் பெற்ற 'இதற்கு பேர் தான் காதலா', வசூல்ராஜாவில் இடம் பெற்ற 'காடு திறந்து கிடக்கின்றது' ஆட்டோகிராபில் இடம் பெற்ற 'நினைவுகள் நெஞ்சினில்' உள்ளிட்ட பல பாடல்களைக் குறிப்பிடலாம்.அவ்வகையில் 'பள்ளிக்கூடம்' படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடலையும் சேர்த்துக்கொள்ளலாம்.

நாராயணன், ரகுமான் குழுவில் சில ஆண்டுகளாக பாடி வருகிறார். தனியாக வித்யாசாகருக்கு சில பாடல்களையும் பாடியுள்ளார். 'பொய்'-ல் மூச்சு விடாமல் ஒரு பாடலையும் பாடியுள்ளார் என்று நினைக்கிறேன். ஒரிரு முறை கேட்ட ஞாபகம். பாடல் நிச்சயமாக வெற்றி பெற்று இவருக்குப் புகழ் தேடி தரும் என்பது எனது எண்ணம்.

http://www.shyju.com/index.php?act=mlite&CODE=showdetails&s_id=22549

எதுக்கு தெரியலை

விவரம் புரியலை

....

மனசு மருகுதே

எதுக்கு தெரியுமா?

எனக்கு தெரியலை...

அற்புதமான ராகம்.

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:அழகிய கண்ணே உறவுகள் நீயே

இந்த யூட்யூப் வீடியோவைப் பார்த்தேன். நடிகர் விஜயனின் மரணம், இந்தப் பாடல், பழைய நினைவுகள்.... இப்படி எதேதோ நினைவில். கண்ணில் ஓரம் வரமுயலும் நீர்த்துளியை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.

Edited by nunavilan

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இரகசிய கனவில்

படம்: பீமா

பாடியவர்கள்: மதுஸ்ரீ, ஹரிஹரன்

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பல்லவி

=======

பெ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்

என் இமைகளைக் கழுவுது சொல் சொல்

இளமையில் இளமையில் ஜில் ஜில்

என் இருதயம் நழுவுது செல் செல்

ஆ: முதல்பிழை போல் மனதினிலே விழுந்தது உனதுருவம்

ஓ உதடுகளால் உனைப்படிப்பேன் இருந்திடு அரைநிமிடம்

தொலைவது போல் தொலைவது தான் உலகில் உலகில் புனிதம்

குழு: இறகே இறகே மயிலிறகே வண்ண மயிலிறகே வந்து தொடுஅழகே

தொடத் தொடக் குழைகிற சுகம் சுகமே

கண் படப் படப் புதிர்களும் அவிழ்ந்திடுமே (இறகே இறகே)

சரணம்-1

========

பெ: மறுபடி ஒருமுறை பிறந்தேனே

விரல்தொடப் புருவமும் சிவந்தேனே

ஓ.. இல்லாத வார்த்தைக்கும் புரிகின்ற அர்த்தம் நீ

சொல்லாத இடமெங்கும் சுடுகின்ற முத்தம் நீ

ஆ: சுடும் தனிமையை உணர்கிற மரநிழல் போல எனை சூட

நரம்புகளோடு குறும்புகள் ஆடும் எழுதிய கணக்கு

எனதிரு கைகள் தழுவிட நீங்கும் இருதய சுளுக்கு

பெ: ரகசிய கனவுகள் குழு: ஜல் ஜல்

பெ: என் இமைகளைக் கழுவுது குழு: சொல் சொல்

பெ: இளமையில் இளமையில் குழு: ஜில் ஜில்

பெ: என் இருதயம் நழுவுது செல் செல்

சரணம்-2

=========

ஆ: உயிரணு முழுவதும் உனைப் பேச உனைப்பேச

இமை தொழும் நினைவுகள் அனல் வீச அனல் வீச

ஓ நெனச்சாலே செவப்பாகும் மருதாணித் தோட்டம் நீ

தலைவைத்து நான் தூங்கும் தலகாணிக் கூச்சம் நீ

பெ: எனதிரவினில் கசிகிற நிலவொளி நீயே படர்வாயே

நெருங்குவதாலே நொறுங்கி விடாது இருபது வருடம்

ஓ தவறுகளாலே தொடுகிற நீயும் அழகிய மிருகம்

ஆ: ரகசிய கனவுகள் ஜல் ஜல்…..

பெ: குயிலினமே குயிலினமே எனக்கொரு சிறகு கொடு

முகிலினமே முகிலினமே முகவரி எழுதிக் கொடு

அவனிடமே அவனிடமே எனது கனவை அனுப்பு

குழு: இறகே இறகே … (இறகே இறகே)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு பட பாடல்

D. இமானால் இசையமைத்து பாடப்பட்ட பாடல்

காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு - தெய்வப்பிறவி

http://www.youtube.com/watch?v=VhW6k3bwpHQ

செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை

http://www.youtube.com/watch?v=9aIsbc2L39w

தேன் உண்ணும் வண்டு - அமர தீபம்

http://www.youtube.com/watch?v=pysavg47Sfs...feature=related

மடி மீது தலை வைத்து - அன்னை இல்லம்

http://www.youtube.com/watch?v=B-uTJgjcgWA...feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெய்வம் இருப்பது எங்கே அது இங்கே என்ற பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேட்டையாடு விளையாடு படத்திலிருந்து ஒரு துள்ளிசை பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏ.ஆர். ரகுமானால் இசை அமைக்கப்பட்டு, லோறன்ஸ் அவர்களால் நடனமாடப்பட்ட(குழுவும்) படம் பார்த்தாலே பரவசம்.

">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ ரசிக்கும் சீமானே

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பளிங்கினால் ஒரு மாளிகை

http://youtube.com/watch?v=cU5ZTDPDcT4

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

something something

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் ஒரு தொடர்கதை படத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ்

தெய்வம் தந்த வீடு

http://www.youtube.com/watch?v=yagEqY3RLQs

தெய்வம் தந்த வீடு வீதி இருக்கு (2)

இந்த ஊரென்ன சொந்த வீடென்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன? (2)

நான் கேட்டுத் தாய்தந்தை படைத்தாரா? (2)

இல்லை என் பிள்ளை எனை கேட்டு பிறந்தானா?

தெய்வம் செய்த பாவம் இது போடி தங்கச்சி

கொன்றால் பாவம் தின்றால் போச்சு இதுதான் என் கட்சி

ஆதி வீடு அந்தம் காடு

இதில் நான் என்ன அடியே நீ என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

வெறும் கோவில் இதில் என்ன அபிஷேகம்?

உன் மனம் எங்கும் தெரு கூத்து பகல் வேஷம்

கள்ளிகென்ன முள்ளில் வேலி போடி தங்கச்சி

காற்றுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

கொண்டதென்ன கொடுப்பதென்ன?

இதில் தாய் என்ன மணந்த தாரம் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

தெளிவாகத் தெரிந்தாலே சித்தாந்தம்

அது தெரியாமல் போனாலே வேதாந்தம்

மண்ணைத் தோன்றி தண்ணீர் தேடும் அன்புத் தங்கச்சி

என்னை தோன்றி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி

உண்மை என்ன பொய்மை என்ன

இதில் தேன் என்ன கடிக்கும் தேள் என்ன ஞானப் பெண்ணே?

வாழ்வின் பொருள் என்ன நீ வந்த கதை என்ன?

................தெய்வம் தந்த வீடு.......................

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை இந்த வேளை பார்த்து

படம்:உயர்ந்த மனிதன்

படல்: வாலி

இசை: எம்.எஸ்.வி

http://www.youtube.com/watch?v=wikWKGd7YH4...feature=related

பால் போலவே வான் மீதிலே

யார் காணவே நீ காய்கிறாய் ?

நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா

இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா..

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு.. ஆ...

தென்றலே என் தனிமை கண்டு நின்று போய்விடு

வண்ண விழியின் வாசலில் என் தேவன் தோன்றினான்

எண்ணம் என்னும் மேடையில் பொன்மாலை சூடினான்

கன்னியழகைப் பாடவோ அவன் கவிஞனாகினான்

பெண்மையே உன் மென்மை கண்டு கலைஞனாகினான்..

கலைஞனாகினான்..

( நாளை )

சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதேன்

சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நாணம் ஏன்

மன்னன் நடந்த பாதையில் என் கால்கள் செல்வதேன்

மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..

மயக்கம் கொண்டதேன்..

( நாளை )

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

படம்: தீபாவளி

பாடியவர்: அனுராதா

இசை: யுவன் சங்கர் ராஜா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நம்ம காட்டிலே

படம்:பட்டியல்

http://www.youtube.com/watch?v=dQm_WWW6hIQ

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A.R.Rahuman இன் காதல் ஒன்றல்லவா என்ற பாடல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மயக்கமென்ன இந்த மௌனம் என்ன

படம்:வசந்த மாளிகை

பாடல்: கண்ணதாசன்

இசை: கே.வி.மகாதேவன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலா இயக்கிய நந்தா படம் (2001) சூர்யாவுக்கு நல்ல திருப்புமுனையைத் தந்த படம். தந்தையைக் கொன்றுவிட்டுச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டு வாய்பேசமுடியாத காது கேளாத தாயையும் சகோதரியையும் பிரிந்திருந்து, திரும்ப வந்து லைலாவைச் சந்தித்துக் கடைசிக் காட்சியில் தாய் கொடுக்கும் விஷம் கலந்த சோற்றை வாங்கித் தின்றுவிட்டு வாயோரம் ரத்தம் வழியச் செத்துப் போகிறார். அருமையான ஒளிப்பதிவும் காட்சியமைப்பும் சிரத்தையுடன் நடித்துள்ள நடிகர்களும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும் சேர்ந்து படத்தைத் தூக்கி நிறுத்தின.

துக்கங்கள், துன்பங்கள் நிறைந்த ரணமாகிப் போன வாழ்க்கைக்கிடையே தென்றல் வருடுவது போல வந்து ஆசுவாசப்படுத்துவது லைலா சூர்யா தொடர்பான காட்சிகள். இந்தப் பாடல் உண்மையிலேயே ஒரு மருந்து மாதிரி உள்ளத்திற்கு ஒத்தடம் கொடுக்கிறது. சிநேகம் இருந்த மனங்களில் காதல் பூத்ததை வெளியே சொல்லாமல் இருவரும் தவிப்பை அடக்கிக்கொண்டு இருப்பதை சூர்யாவும் (உணர்ச்சியேயில்லாத இறுகிய முகம் ஒரு வசதி) லைலா(லூசுச் சிரிப்பு இல்லாமல் படம் முழுக்க அடக்கி வாசிக்க வேண்டிய கோபத்தை பிதாமகனில் பழி தீர்த்துக்கொண்டார்! அப்படியும் சரணத்திற்கு முன்பாக வரும் சுபா குழுவினரோடு பாடியிருக்கும் "மனசில் எதையோ" வரிகளில் சூர்யா பார்க்காத தருணத்தில் அவரது ட்ரேட் மார்க் சிரிப்பை எடுத்துவிடுவார்!) இருவரும் நன்றாகச் செய்திருப்பார்கள். வசனங்களுக்குத் தேவையில்லாத காட்சியமைப்பு அற்புதமாக இருக்கும். பின்னணிப் பாடலாக வரும் இந்தப் பாடலே மனதில் ஓடும் சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருப்பது சிறப்பு. ஆரம்பத்தில் இதமாய் நம்மைத் தழுவும் புல்லாங்குழல் இடையிடையேயும் தனது இனிய இசையை வெளிப்படுத்தியிருக்கும்.

மிகமிக அடங்கிய மெல்லிய குரலில் பாடத் தொடங்கும் பாலு பின்பு அப்படியே உச்ச ஸ்தாயிக்குக் குரலைக் கொண்டு சென்று அட்டகாசமாகப் பாடியிருப்பார். பாடுவதற்கும் கடினமான பாடல். "விழுகிறதே" "நனைகிறதே" என்ற வார்த்தைகளை அவர் அலையலையாய் பாடியிருப்பது கடற்கரைக் காட்சிகளுக்குப் பொருத்தமாக இருக்கிறது. பாலுவின் குரலுக்கு வயதாகவில்லை என்பதை நிரூபிக்கும் மற்றுமொரு பாடல்.

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீ தானே

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஹோ

மனசில் எதையோ மறைக்கும் விழியே

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

என் இதயத்தை... என் இதயத்தை வழியில்

எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்

உன் விழியினில்... உன் விழியினில் அதனை

இப்போது கண்டுபிடித்துவிட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்

அதை நான் கண்டேன் உன் புன்னகையில்

வாழ்கிறேன்..... நான் உன் மூச்சிலே...

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே ஏஏஏஏ

சலங்கை குலுங்க ஓடும் அலையே

சங்கதி என்ன சொல்லடி வெளியே

கரையில் வந்து நீ துள்ளுவதெதுக்கு

நினைப்ப புடிச்சுக்க நெனப்பது எதுக்கு

ஏலோ ஏலோ ஏலே ஏலோ

என் பாதைகள் என் பாதைகள் உனது

வழிபார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள் உனது

முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே....

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நள தமயந்தி பாடல்: என்ன இது என்ன இது

இசை அமைத்து பாடியவர்: ரமேஸ் விநாயகம்

Edited by nunavilan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.