Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அமெரிக்க மூத்திரம்.

இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை

நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை.

அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் :

வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு,

மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான

அரவணப்பு,

தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள்,

சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம்.

அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது.

அதன் நிலம் பறிக்கப்பட்டது.

பசியையும் தாகத்தையும் புறக்கணித்து

கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒரு பிரபஞ்சத்தைத் தேடி அது நடக்கிறது.

நெடும் பாலைவனம் அதற்கு வழிவிடுகிறது.

பெரும் பருந்தின் நிழலில் ஒட்டகங்களை வளர்க்கும் மன்னர்களின் கூடாரங்களுக்குள் தேநீர்க் கலசம் கொதிக்கிறது. பேரீச்சம் பழக் கூடை கனக்கிறது.

இரந்துண்ணாக் குழந்தை.

வழிநெடுகிலும்

ஒட்டகங்களை மேய்க்கும் கறுத்துலர்ந்த மானுடர்,

முக்காடு இட்டு முகம் மூடிய பெண்கள்.

சாவீடுகளின் ஒப்பாரி.

கொலைத் தொழிலை வரிந்து கொண்ட நெத்தன் யாகு கொக்கரிக்கிறான்.

பாரசீக நிலத்தின் கலாசாரச் காவலர்கள் யூரானியத்தைக் கொண்டு மலை முகடுகளுக்கிடையில் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

வண்ணக் கம்பளங்கள் மூடிய நகரத்தில் மரணவீடுகளும் சிதறுகின்றன.

கணைகளின் மொழியொன்றே பழம்பெரும் தேசத்தில எஞ்சுகிறது.

கணிதமும் கவிதையும் பிரபஞ்சமும் அறிந்தவனின் புதை மேட்டில் தடக்கிய குழந்தை சொல்கிறது:

தந்தையே உனது கல்லறையின் மீது ஒவ்வொரு ஆண்டும் மரங்கள் இரு முறை மலர்களைச் சொரியும் என்றாய்

உன் மீது பூச் சொரிவதற்கு எப் பிணம் தின்னியும் தருவொன்றையும் உயிருடன் விடமாட்டான்.

உன் மீது ஒலிவம் பழங்களைச் சொரிவதற்கு என்னிடமும் ஒரு மரம் கூட இல்லை.

ஆனால்,

ஒரு நாள் உன் கல்லறை மீது பிணந் தின்னிகளின் மனித முகமூடி கழன்று விழும்.

பெண்களின் முக்காடுகளும் உருமறைப்புக்களும் உதிரும்.

சிதறிய நகரங்களின் மேல்

உன் பிள்ளைகள் வண்ண வண்ணக் கம்பளங்களால் கூடாரம் அமைப்பர்

எனக்குக் கைகளும் கால்களும் முளைக்கும்

பசியும் தாகமும் எடுக்கும்.

நேத்தன் யாகுவின் கல்லறை மீது ஒவ்வொரு வருடமும் இரு முறை மானுடம் காறி உமிழும்.

சொல்லிய கணத்தில் பாரசீக முகட்டில் குண்டுகள் பெரும் துளைகளை இட்டன.

அத்துளைகளில் அமெரிக்க மூத்திரம் நிரம்பியது.

தேவ அபிரா

23-06-2025

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை நிழழி! இணையத்தில் தேடியபோது கிடைத மேலதிக தகவல்.

அம்ருதா இணைய இதழ் - Amrutha E-Ma...
No image preview

யுத்தத்தின் காயங்களும் அவற்றின் வடுக்களும் - தேவ அபிரா

ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டம், புலம் பெயர்வு இரண்டு மையங்களிலும் இருந்து எழுந்த கருக்களில் இருந்துதான் இக்கதைகள் பிறந்திருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

பால் சுரக்காத …,

முலைகளைத் தேடும்,

பச்சிளம் பாலகர்கள் மீது,

விழுகின்றன,

தாயொருத்தியின் இயலாமை சிந்துகின்ற கண்ணீர்த் துளிகள்..!

என்று தான் இந்தச் சுமைகள் இறங்கும் என,ஏங்குகின்றன…,

பாலஸ்தீனத்தின் கழுதைகள்..!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று இணையத்தில் படிக்க முடிந்த மற்றுமொரு கவிதையொன்று..🖐👇


தொடர் : 3 - கனடாவிலிருந்து சில கவிதைகள் (Some poems from Canada) - நா.வே.அருள் - Tamil Kavithaikal - BookDay Kavithaikal

Posted inPoetry Series

தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

Posted byb3859e7d7d51687ce989542ecb0cc7755ef15e61Bookday23/06/2025No CommentsPosted inPoetry Series

தொடர் : 3 – கனடாவிலிருந்து சில கவிதைகள் – நா.வே.அருள்

வேடிக்கை மனிதர்கள்
******************************

ஆயுதங்கள்
உங்கள் கைகளில்
விரல்களாக முளைக்கத் தொடங்கிவிட்டன

பொதுஜன முகமூடி
எங்கள் மூளையை அழுத்துகிறது

உங்கள் தொழில்நுட்ப
அதிநவீனத் தோட்டத்தில்
நாங்கள்
வெறும் செயற்கைப் புற்கள்

உங்கள் சொற்களின் செய்நேர்த்தியில்
எங்கள் சித்தாந்தங்கள் எல்லாம்
அரதப் பழசாகிவிட்டன

எங்கள் உடலுறுப்புகள்
இனி
உபயோகிக்கப் பட முடியாத
உலோக பாகங்களாய்
உதிர்ந்து கிடக்கின்றன

எவ்வளவு நவீனமயப்படுத்தப்பட்டாலும்
எங்கள் வயிறுகள்
பசியின் பழைய மொழியை
மறந்தபாடில்லை

எங்கள் சஹாராத் தாகம் தணிக்க
வற்ற வற்றக் குளித்த
உங்கள் நீச்சல் குளங்களில்
ஒரு சொட்டுத் தண்ணீரும் மிச்சமில்லை

நாங்கள் தாகம் என்கிறோம்
குடிக்கக் குருதி கொடுக்கிறீர்கள்
நாங்கள் பசி என்கிறோம்
ஒடுக்கு விழுந்த எங்கள் உணவுத் தட்டுகளில்
பதுங்குகுழி தகர்க்கிற வெடிப் பொருள்களையும்
இலக்கு மாறாத ஏவுகணைகளையும் பரிமாறுகிறீர்கள்

போர் என்பது
பங்குச் சந்தைகளில் விற்கப்படுகிற
இன்னொரு சூதாட்டப் பத்திரம்!

பெரு முதலாளிகளின் சதுரங்கத்தில்
நிராதரவு அறிவுஜீவிகள்
ராணியைவும் ராஜாவையும் காப்பாற்ற
வெட்டுப்படப்போகிற
வெறும் சிப்பாய்கள்!

ஜனநாயகம்
சர்வாதிகாரம்
கேபிடலிசம்
சோசலிசம்
கம்யூனிசம்
எல்லாச் சொற்களுமே
உங்கள் அகராதிகளில்
அர்த்தங்கள் மாற்றப்படுகின்றன

எல்லாம் தெரிந்தும் எதுவும் செய்யமுடியாது
எங்கள் அரிச்சுவடிகள்
உங்கள் ஆலைகளில் தயாரிக்கப்படுகின்றன

எல்லைத் தகராறு வயல்களில்
பூக்களை வளர்க்கப் போகிறீர்கள் என்று
இன்னும் நம்பிக் கொண்டிருக்கும்
உங்களின்
பழைய
சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள் நாங்கள்!

பொதுஜன முகமூடி
எங்கள் மூளையை அழுத்துகிறது

நவீன கட்டுமானமான
செயற்கை நுண்ணறிவு மாளிகையை
எங்களுக்கான சிறைச்சாலைகளாக
மாற்றி வருகிறீர்கள்

கேலிக்குரிய முரண் என்னவெனில்
எங்களுக்காக நீங்கள் ஏற்பாடு செய்யும்
‘நவீன அடிமை’ பெயர் சூட்டுவிழாவில்
அலைமோதி அலைமோதி
இடம்பிடிக்கப் போகும்
ஆடியன்ஸ்களும் நாங்கள்!

எழுதியவர் : 

– நா.வே.அருள்

https://bookday.in/series-3-some-poems-from-canada-written-by-na-ve-arul/

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனித இனம் ஒருபோதும் திருந்தப் போவதில்லை . ........ முன்னாளில் தாம் பட்ட துன்பங்களை மறந்து அதே கூத்தை இந்நாளில் வரிந்து கட்டிக்கொண்டு செய்கின்றார்கள் .......... !

பகிர்வுக்கு நன்றி நிழலி ........ !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.