Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுன்னாகத்தில் கோர விபத்து; இரண்டு இளைஞர்கள் பலி! முதல்நாள் வாங்கிய மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபரீதம்

349944414.jpg

புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் அதிவேகமாகப் பயணித்த இரண்டு இளைஞர்கள், வேகக்கட்டுப்பாட்டை இழந்து மின்சாரக்கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

து.திசாளன் (வயது-19), க.பிரவீன் (வயது-18) என்ற இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்தவர்களாவர். விபத்துத் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதிவேக மோட்டார் சைக்கிளொன்றை நேற்றுமுன்தினம் கொள்வனவு செய்து விட்டு, அதில் நேற்றுப் பயணித்த நிலையிலேயே இந்தக் கோரவிபத்து சம்பவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://newuthayan.com/article/சுன்னாகத்தில்_கோர_விபத்து;_இரண்டு_இளைஞர்கள்_பலி!_முதல்நாள்_வாங்கிய_மோட்டார்_சைக்கிளில்_சென்றபோது_விபரீதம்

  • கருத்துக்கள உறவுகள்

18, 19 வயதுகளில் உள்ளவர்களுக்கு.... அதிவேக மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த பெற்றோரை என்னவென்று சொல்வது.

  • கருத்துக்கள உறவுகள்

514770766_1157539556391429_6462785013075

514955889_1157539653058086_1115161242624

515126033_1157575793054472_7325794390861

🟥 இரு இளைஞர்கள் உயிரிழப்பு!
புன்னாலைக்கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்கள், இன்று பிற்பகல் நேரத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் அமைந்திருந்த மின்கம்பத்தில் மோதி இந்தத் துயரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் கந்தரோடையை சேர்ந்த 17 மற்றும் 18 வயதுடைய இளைஞர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
🕯️ இளம் உயிர்கள் பிரிந்தது வேதனை!
⚠️ இளைஞர்களுக்கு பாதுகாப்பான பயணம் குறித்து விழிப்புணர்வு மிகவும் அவசியம் எனும் செய்தியையும் இந்த விபத்து எடுத்துக்காட்டுகிறது.

புதிய விடியல் யாழ்ப்பாணம்

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று புன்னாலைக்கட்டுவனில் இருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சுன்னாகத்தில் விபத்தில் சிக்குண்டு அகால மரணமடைந்தார்கள்.

இந்த இளைஞரும் புன்னாலைக்கட்டுவனில் இருந்து சுன்னாகம் வந்து நெஞ்சுவலி ஏற்பட்டு மரணமாகி உள்ளார்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இள வயது. இளம் இரத்தம். பயமறியா வயது அவர்களுக்கு. நாமும் அதே வயதை தாண்டி வந்தவர்கள் தான்.அனுபவப்பட்டவர்கள் தான். அனுபவிக்க வேண்டிய வயதில் அனுபவிக்க வேண்டும் எனும் கொள்கையுடையவன் நான்.

வாழ்க்கை என்பதே கரணம் தப்பினால் மரணம். அது இந்த இளைஞர்களுக்கு நடந்துள்ளது.

ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலிகளும்.

எனது இடத்தில் யாழ்மாவட்டத்தை பிறப்பிடமாக கொண்ட தம்பி ஒருவர்(40) 10 நாட்களுக்கு முன் சிறு குளத்தில் மனைவியுடன் நீந்தி விளையாட சென்றிருக்கின்றார். இருவரும் சேர்ந்து நீந்திக்கொண்டிருக்கும் போது மூச்செடுக்க முடியாமல் தத்தளிக்க மனைவி தாங்கி பிடித்திருக்கின்றார்.அவலக்குரல் எழுப்பியிருக்கின்றார். அது மற்றவர்களுக்கு கேட்கவில்லை.கால் நிலத்தில் படாத நீர் நிலையில் மனைவியாலும் தாங்கி பிடிக்க முடியவில்லை. இயலாத கட்டத்தில் கையை விட்டுவிட்டார்.அப்படியே போனது போனது தான் இன்றும் உடலை கண்டு பிடிக்க முடியவில்லை.

இத்தனைக்கும் காணாமல் போன அந்த தம்பி உதைபந்தாட்டம்,நீச்சல் என பல விளையாட்டுக்களில் ஈடுபாடு உள்ளவர். உடம்பில் கவனம் உள்ளவர். இவ்வளவு இருந்தும் என்ன பயன்/பலன்?

விதி வலிமையானது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆம் ஐயா இதுதான் உண்மை.

எப்ப மரணம் வந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலை ஏற்பட்டு விட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.