Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-1-11.jpg?resize=600%2C300&ss

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு, இலகுவான முறையில் விமான நிலையத்திலேயே குறித்த தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த புதிய சேவை ஒகஸ்ட் 3ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் , இதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பு கருமபீடம் ஒன்று அமைக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

தற்போது, இந்த அனுமதி பத்திரத்திற்காக வெரஹெரவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறை அலுவலகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை காரணமாக ஏற்படும் சிரமம் குறித்து எதிர்மறையான கருத்துகள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1439685

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்களை விமான நிலையத்தில் வழங்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதுபற்றி முன்னரும் கூறியிருந்தார்கள்.

ஆனாலும் நடைமுறையில் எதையும் காணவில்லை.

இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது.

ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் இன்ரநசினல் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டே போகிறேன்.

சிலர் இதை இலங்கையில் பாவிக்க முடியாது என்கிறார்கள்.

இந்தமுறை கொழும்புதுறைக்கு மீன்வாங்க சென்றபோது மாம்பழம் சந்தியில் பொலிசார் நிற்பாட்டினார்கள்.

அருகில் சென்று நிற்பாட்டும்போது போகச் சொல்லி சைகை காட்டினார்கள்.

அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிளிலேயே திரிந்தோம்.

  • கருத்துக்கள உறவுகள்

சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தத் திட்டம் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும், தேவையான சட்ட நடைமுறைகள் முடிவடைந்த பின்னர் இது அமுலுக்கு வரும் எனவும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ், சுற்றுலாப் பயணிகளுக்கு 14 நாட்கள் அல்லது 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படும். 

மேலும், நாட்டில் நீண்ட காலம் தங்கியிருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு 8 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் வழங்கப்படும் என அவர் கூறினார். https://adaderanatamil.lk/news/cmd9oa0qu01cgqp4kd8tck58h

  • கருத்துக்கள உறவுகள்

இது நல்ல விடயம். விமான நிலையத்தில் கார் வாடகைக்கு எடுக்க ஏற்கனவே முன்பதிவு செய்து செல்பவர்களுக்கு இந்த நடைமுறை வசதியாக இருக்கும். அரச சேவைகளை மக்கள் பெறும் நடைமுறை இலகுவாக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதே.

Edited by island

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் திட்டம் 2025 ஓகஸ்ட் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கான கட்டணங்களையும் தெரிவித்தால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
On 18/7/2025 at 08:18, ஈழப்பிரியன் said:

இதுபற்றி முன்னரும் கூறியிருந்தார்கள்.

ஆனாலும் நடைமுறையில் எதையும் காணவில்லை.

இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது.

ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் இன்ரநசினல் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டே போகிறேன்.

சிலர் இதை இலங்கையில் பாவிக்க முடியாது என்கிறார்கள்.

இந்தமுறை கொழும்புதுறைக்கு மீன்வாங்க சென்றபோது மாம்பழம் சந்தியில் பொலிசார் நிற்பாட்டினார்கள்.

அருகில் சென்று நிற்பாட்டும்போது போகச் சொல்லி சைகை காட்டினார்கள்.

அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிளிலேயே திரிந்தோம்.

Kings Rent a Car எனும் பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. உங்கள் சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை அனுப்பினால் போதும். விமானநிலையத்தில் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்துடன் வாகனமும் நிற்கும். இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என நினைக்கின்றேன். இவர்கள் கட்டணம் நியாயமானது. வாகனத்தின் தரமும் பரவாயில்லை.

https://www.kingsrentacar.com/

நான் பல தடவைகள் இவர்களிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். நல்ல சேவை.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நியாயம் said:

Kings Rent a Car எனும் பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. உங்கள் சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை அனுப்பினால் போதும். விமானநிலையத்தில் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்துடன் வாகனமும் நிற்கும். இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என நினைக்கின்றேன். இவர்கள் கட்டணம் நியாயமானது. வாகனத்தின் தரமும் பரவாயில்லை.

https://www.kingsrentacar.com/

நான் பல தடவைகள் இவர்களிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். நல்ல சேவை.

தகவலுக்கு நன்றி.

இலங்கையில் இதுவரை வாகனத்தை வாடகைக்கு எடுத்ததில்லை.

ஊரிலே மோட்டார் சைக்கிள் இருப்பதால் அதிலேயே சகல இடங்களுக்கும் போய் வருவோம்.

குடும்ப சகிதம் கோவில் குளம் போக வேண்டுமென்றால் வான் பிடித்து தான் போவதுண்டு.

வாடகைக்கார் எடுப்பமா என்று பார்க்கிறது தான்

ஆனாலும் இலங்கையில் அதற்கான கட்டணங்கள் மிகவும் கூடுதலாகவே இருந்தது.

அத்தோடு குறிப்பிட்ட அளவு மைல்களே ஓடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

மோட்டார் சைக்கிளை யார் ஓடுவது? நீங்களா? மோட்டார் சைக்கிளில் திரிவதை விட ஆட்டோ பிடிப்பது பாதுகாப்பானது. ஊபர் மிகவும் வசதி. கட்டணம் பரவாயில்லை.

உண்மையில் வாடகைக்கு வாகனம் இலங்கையில் எடுப்பது கிட்டத்தட்ட் வெளிநாட்டில் தினம் ஆகும் செலவுக்கு ஒப்பானது. அல்லது அதைவிட கொஞ்சம் குறைவு என கூறலாம். உங்களுக்கு பொதுவாக மைல் பிரச்சனை வராது. ஏன் என்றால் ஒரு நாளைக்கு வெளிநாடு போல் 700/800 அல்லது 1000/1200 கிலோமீற்றர் நாங்கள் இலங்கையில் ஓடப்போவது இல்லை. அப்படி ஓடினால் இலங்கை தெரு நிலவரங்களை பொறுத்தவரை ஆபத்தானதும் கூட.

நிதானமாக, ஆறுதலாக வாகனம் ஓடக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால் வாடகைக்கு எடுத்து ஓடலாம். அவசரப்படுவது என்றால் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடுவது ஆபத்தானது.

நீண்ட தூரங்களுக்கு ஹயரை விட புகையிரதம் அதிகம் பாதுகாப்பானது. ஹயர் ஓடும் சாரதிகள் போதுமான அளவு தூங்கி, ஓய்வெடுத்து வாகனத்தை ஓட்டுகின்றார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நியாயம் said:

மோட்டார் சைக்கிளை யார் ஓடுவது? நீங்களா?

ஆம் ,முந்திய துடிப்பு இப்போது இல்லை என்றபடியால் மெதுவாகவே ஓட்டுவேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஈழப்பிரியன் said:

ஆம் ,முந்திய துடிப்பு இப்போது இல்லை என்றபடியால் மெதுவாகவே ஓட்டுவேன்.

ஓ....அப்ப பழைய நினைப்பு இப்பவும் இருக்கோ? 😎

  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்படும் : பிமல் ரத்நாயக்க

20 AUG, 2025 | 05:59 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து அதிகரிக்கப்படும் என சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில்  புதன்கிழமை (20) அமைச்சு அறிவிப்பை வெளியிட்டு குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாட்டவர்களுக்கான தற்காலிக வாகன அனுமதிப்பத்திரம் முன்னதாக, பிலியந்தலை-வேரஹெரவிலுள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் காரியாலயத்தில் மட்டுமே வழங்கப்பட்டுவந்தது. இந்த நடவடிக்கையினால் வெளிநாட்டவர்களுக்கு நேர விரயம் உள்ளிட்ட பல சிரமங்கள் ஏற்பட்டிருந்தன.

குறித்த தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்காக 2ஆயிரம் ரூபா மட்டுமே கட்டணமாக அறவிடப்படும் நிலையில், உதவி செய்யும் போர்வையில் சில இடைத்தரகர்கள் 60 முதல் 100 அமெரிக்க டொலர் வரை வசூலிக்கும் செயற்பாடுகள் அதிகரித்ததுள்ளன. 

இது சுற்றுலாத் துறைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் நாட்டின் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் விடயமாகும். நாட்டுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளில் அதிகமானவர்கள், எமது நாட்டின் இயற்கையை ரசித்து மகிழ்ச்சியாக அவர்களது விடுமுறை காலத்தை களிக்கவே வருகிறார்கள். 

இவ்வாறு வரும் சுற்றுவா பயணிகளில் அதிகமானவர்கள் சாதாரண தரத்தில் இருப்பவர்களாகும். அதனால் அவர்கள் தங்களின் கைகளில் இருக்கும் பணத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தி வருவதால், இடைத்தரகர்களின் செயற்பாடுகள், எதிர்காலத்தில் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே, இந்த சுரண்டலைக் குறைப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/222973

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஏராளன் said:

வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்துக்கான கட்டணம் 2 ஆயிரம் ரூபாவிலிருந்து அதிகரிக்கப்படும் என சபை முதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான பிமல் ரத்நாயக்க  தெரிவித்தார்.

இங்கு எடுத்துக் கொண்ட அனுமதிப் பத்திரத்துக்கு(படத்துடன் சேர்த்து )35 டாலர்கள் கொடுத்தேன்.

படம் நாம் கொண்டு போனால் 20 டாலர்கள்.

இலங்கைக்கு மட்டும் போவதாக இருந்தால் இலங்கையில் எடுப்பது மலிவு.

பல நாடுகளுக்கு போவதாக இருந்தால் இங்கிருந்து எடுத்துக் கொண்டு போவது சிறந்தது.

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

548045434_1331319041709984_1809232732522

விமான நிலையத்தில், 2000 ரூபாய்க்கு வாகன அனுமதி பத்திரம் பெற்ற வெளி நாட்டவர். 😂 🤣

ELETTRONIKA

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.