Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-260.jpg?resize=750%2C375&ssl

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த இலங்கையர்கள் இந்தோனேசியாவில் கைது!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 06 பேர் இந்தோனேசிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு (CID) மற்றும் இன்டர்போல் இணைந்து மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களில் பாணந்துறை நிலங்க, பேக்கோ சமன் மற்றும் அவரது மனைவி மற்றும் மற்றொரு நபரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் திட்டங்கள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1444938

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

539112356_24733377496257928_353049657790 539806850_24733377896257888_295905845407

538613649_24733378169591194_509979032737 540878786_24733378779591133_656593308103

539774228_24733378509591160_300991203491 539699447_24733379049591106_242960645551

இந்தோனசியாவில் கைது செய்யப்பட்ட தென்னிலங்கையின் நம்பர் 1 பாதாள உலக கும்பலின் தலைவர் ஹெகல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சாலிந்த குழுவினரும் இலங்கைக்குகொண்டு வரப்படுகின்றனர்.

பாதாள குற்றக் கும்பல் முக்கியஸ்தர்களான கெஹெல்பத்தர பத்மே, பெக்கோ சமன், நிலங்க, கமாண்டோ சலிந்த மற்றும் பலர் இந்தோனேசியாவில் இலங்கை பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.!

Kunalan Karunagaran

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-266.jpg?resize=750%2C375&ssl

வரலாற்று சிறப்புமிக்க பொலிஸ் நடவடிக்கை குறித்து பொலிஸ்மா அதிபர் பெருமிதம்!

இந்தோனேசியாவில் ஐந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஒரே நேரத்தில் கைது செய்யப்படுவது வரலாற்றில் இதுபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட முதல் முறை என்று பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வது தொடர்பாக இன்று (28) காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைக் கூறினார்.

கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் தற்போது இன்டர்போலால் வெளியிடப்பட்ட சிவப்பு அறிவிப்புகளுக்கு உட்பட்டவர்கள்.

இலங்கை பொலிஸாரின் ஒருங்கிணைப்பு மற்றும் இன்டர்போலின் உதவியுடன் இந்தோனேசிய பொலிஸாரினால் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையில், இந்த நாட்டில் அரசியல் திட்டமிட்ட குற்றங்களில் ஈடுபட்ட வரலாறு இருப்பதாகவும், தற்போது அந்த சூழல் மாறிவிட்டதாகவும், குற்றவாளிகளுக்கு அரசியல் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த நாட்டில் செய்யப்படும் பல குற்றங்கள் வெளிநாடுகளில் இருந்து வரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

அரசியல் செல்வாக்கு இல்லாமல் அத்தகைய நபர்கள் தொடர்பாக சட்ட முடிவுகளை எடுக்க பொலிஸாருக்கு தற்போது அறிவுறுத்தல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

துபாய், ஓமன், ரஷ்யா, பெலாரஸ் மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் அதிகமாக இருப்பதாகவும், அவர்கள் குறித்து விரைவில் ஒரு முடிவு எடுக்கப்படும் என்றும்.

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக மாற்றுவதற்கு ஆதரவளித்த இந்தோனேசிய தூதரகத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1444998

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அய்யா இப்படி சொல்லுவாரு ...இவைக்கு பிணைகொடுக்க நீதவானும் ...பிணைகேட்க 10 சட்டத்தரணிகளும், போதாக்குறைக்கு வருத்தம் சொல்ல வைத்தியரும் இருக்க அச்சம் ஏன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் கைதான குற்றவாளிகள் இன்று நாட்டிற்கு

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவரும் இன்றிரவு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

அவர்களை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு இன்று (30) காலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றது.

இந்நிலையில், கைது செய்யபட்ட ஐவரையும், இலங்கையில் இருந்து சென்ற பொலிஸ் குழு பொறுப்பேற்ற நிலையில், அவர்கள் விமானத்தில் இலங்கை நோக்கி புறப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த விமானம் இன்றிரவு இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசிய தலைவர் ஜகார்த்தாவில் வைத்து கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐந்து குற்றவாளிகள் அண்மையில் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmey32e1k0044o29n48og2bhu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-315.jpg?resize=750%2C375&ssl

கைதான குற்றவியல் கும்பல் உறுப்பினர்களை நாளை நட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை!

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இலங்கையிலிருந்து ஒரு சிறப்பு பொலிஸ் குழு இன்று (30) அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்தோனேஷியா புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் உள்ள சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களாகக் கருதப்படும் இவர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் ஒன்றிணைந்த சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்களில் கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, தெம்பிலி லஹிரு மற்றும் பேக்கோ சமன் ஆகியோர் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவ‍ேளை, இவர்களுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் நாட்டை வந்தடைந்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அவர்களை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445284

அனுர அரசின் சிறப்பு நடவடிக்கையில் இதுவும் ஒன்று. பாராட்டுகள்.

இந்த கேடிகளின் கைது பல முன்னாள் இந்நாள அரசியல்வாதிகளின் கைதுகளுக்கு மேலும் வாய்ப்பளிக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அனுர அரசின் சிறப்பு நடவடிக்கையில் இதுவும் ஒன்று. பாராட்டுகள்.

இந்த கேடிகளின் கைது பல முன்னாள் இந்நாள அரசியல்வாதிகளின் கைதுகளுக்கு மேலும் வாய்ப்பளிக்கலாம்.

பெரிய மரங்களை தறிக்க வேண்டும் என்றால் முதலில் பக்க வேர்களை வெட்ட வேண்டும் . ....... அதுதான் இப்ப நடக்குது போல .......!

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் புறப்பட்டது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

30 Aug, 2025 | 04:45 PM

image

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்ட “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் இந்தோனேஷியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாதாள உலக கும்பலை அழைத்து வருவதற்காக விசேட பொலிஸ் குழு ஒன்று இன்றைய தினம் இந்தோனேசியாவுக்கு சென்றிருந்தது.

இந்நிலையில், “கெஹெல்பத்தர பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை ஏற்றி வரும் விமானம் இன்றைய தினம் பிற்பகல் இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரான பக்கோ சமனின் மனைவி மற்றும் மகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வெள்ளிக்கிழமை (29) மாலை அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223788

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இவை எல்லொருக்கும் சொகுசு கட்டிலுடன் ஆசுப்பத்திரியும் ...தெரிந்த டாக்குத்தரும்...வீட்டுச் சாபாடும்...ரெடியாகிவிடும்

  • கருத்துக்கள உறவுகள்

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 முக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர்!

30 Aug, 2025 | 09:25 PM

image

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை (30) பிற்பகல் 3.30 மணியளவில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பாதாள உலகக் குழுவினரை அழைத்துவந்த விமானம், மாலை 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. 

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வுட்லர், விசேட அதிரடிப் படையினர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திரணக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் குழுவும் இதனை கண்காணிக்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்.  

மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவிற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஓலுகல மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த ஜயசுந்தர ஆகிய அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியாவின் விசேட பொலிஸ் குழுவும் இணைந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/223796

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

fe-3.jpg?resize=750%2C375&ssl=1

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவினரை கைது செய்த இந்தோனேசிய பொலிஸாருக்கு பாராட்டு!

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கை பாதாள உலகக் குழுத் தலைவர்களைக் கைது செய்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

கடந்த 27ஆம் திகதி இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இலங்கைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவர்கள் ஐவர் நேற்று இரவு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களைக் கைது செய்து நாட்டிற்கு கொண்டு வருவதில் முன்னிலை வகித்த இந்தோனேசிய பொலிஸ் அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிறப்பாக  வரவேற்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1445298

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

540386477_1226316146177908_6559212493229

540925873_1226316129511243_9011260607825

540731114_1226316716177851_8864840869537

541218055_1226316309511225_6243129293821

540907177_1226316696177853_8055980001169

539846343_1226314242844765_6808401502035

540046569_1226316626177860_2573727751821

கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 6 குற்றவாளிகளை வெற்றிக்கரமாக கைது செய்து இலங்கைக்கு கொண்டுவந்து சேர்த்த பொலிஸ் குழுவினர் கௌரவிப்பு!

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்

பத்மே உள்ளிட்ட ஐவரும் 72 மணிநேரம் தடுப்பு காவலில்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 5 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும் இரண்டு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலும், மேற்கு மாகாண வடக்கு குற்றப் பிரிவிலும் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்பு காவல் உத்தரவின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 27 ஆம் திகதி இந்தோனேசியாவில் கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட 5 பேர் அந்த நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை பொலிஸார் பொறுப்பேற்று நேற்று (30) இலங்கைக்கு விமானம் ஊடாக அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmeznpb5r004zo29ns6su6xd2

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

541343891_2933448480378854_5300982182777

  • கருத்துக்கள உறவுகள்

பாதாள உலகக் குழுவினரை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து பகிரங்கமாகக் கையாள்வது ஆபத்து - பிரேம்நாத் சி தொலவத்த

31 Aug, 2025 | 08:37 PM

image

(எம்.மனோசித்ரா)

பாதாள உலகக் குழுவினர் கைது செய்யப்படுவது சிறந்த விடயமாகும். ஆனால் அதனை ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல. மிகவும் சூட்சுமமாகவும் இரகசியமாகவும் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயமுமாகும். அரசாங்கத்தின் இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். கே.பி.பத்மநாதன் மற்றும் மாகந்துரே மதுஷ் போன்றவர்களும் கடந்த ஆட்சி காலங்களில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அந்த சந்தர்ப்பங்களில் இவ்வாறான விளையாட்டுக்களை நாம் பார்க்கவில்லை. சந்தேகநபர்களை அழைத்து வரும் போது அமைச்சரும் பொலிஸ்மா அதிபரும் எதற்காக விமான நிலையத்துக்குச் செல்கின்றனர்?

கேலிக் கூத்து காண்பித்துக் கொண்டிருக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த போது இவர்கள் ஆட்சியில் இருந்திருந்தால் 159 பேரும் நந்திக்கடலுக்குச் சென்று குளித்து நடனமாடியிருப்பர்.

கொண்டாடப்பட வேண்டிய விடயங்களை விடுத்து பாதாள உலகக் குழுவினரை கைது செய்வதை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் கைது செய்யப்பட்மை சிறந்த விடயம். ஆனால் அது இந்தளவுக்கு கொண்டாடப்பட வேண்டியதல்ல.

இது மிகவும் சூட்சுமமாக கையாளப்பட வேண்டிய விடயமாகும். விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகளின் முகங்களை ஊடகங்களில் பகிரங்கமாகக் காண்பிக்கின்றனர்.

இவ்வாறான நடவடிக்கைகள் எஞ்சியிருக்கும் பாதாள உலகக் குழுக்குழுவினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள இலகுவாக இருக்கும். பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்துவற்கான நகர்வுகள் இரகசியமானவையாக இருக்க வேண்டும். ஏனையோர் மீது குறை கூறிக் கொண்டிருக்காமல் தமது பொறுப்பினை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம்.

எமது ஆட்சி காலத்தில் பெருமளவான பாதாள உலக் குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த அரசாங்கமானாலும் பாதாள உலகக் குழுக்களை கட்டுப்படுத்தவே முயற்சிக்கும். மாறாக அவர்களை நிர்வகிக்க நினைப்பதில்லை. இந்த நாடகங்களை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர் என்றார்.

https://www.virakesari.lk/article/223865

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

540598300_1199564135541890_4183661345984

  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பல் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை!

03 Sep, 2025 | 11:32 AM

image

இந்தோனேசியாவில் கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலக கும்பல் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தார பத்மே', 'கொமாண்டோ சலிந்த' மற்றும் 'பாணந்துறை நிலங்க' உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த பக்கோ சமனின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி  இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பலை தொடர்ந்தும் 90 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/224077

  • கருத்துக்கள உறவுகள்

கெஹல்பத்ர குழுவை இந்தோனேசியாவில் கைது செய்த அதிகாரிகள்! வெளியாகிய முழுமையான காணொளி

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழு தலைவர், கெஹல்பத்ர குழு தொடர்பிலான மற்றுமொரு காணொளி வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய பாதுகாப்பு தரப்புகள், இன்டர்போல் உள்ளிட்ட குழு எவ்வாறு அவர்களை கைது செய்தனர் என்பதை குறித்த காணொளி ஜாக்லின்_சாப்பர்ஸ் என்ற எக்ஸ் தள பதிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த குழுவை பாதுகாப்பு குழு கைது செய்தமை இதன்மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

https://tamilwin.com/article/full-video-the-arrest-of-the-kehalbhadra-indonesia-1757401423#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

545100537_1206924921472478_2658099444110

545840372_1206924531472517_2987993063472

545373663_1206901711474799_7750976954545

545576856_1206896138142023_4600714413995

  • கருத்துக்கள உறவுகள்

கமாண்டோ சலிந்தவுக்கு தோட்டாக்களை வழங்கிய இராணுவ அதிகாரி கைது

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கமாண்டோ சலிந்துவுக்கு T56 வெடிமருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லுதினன் கேர்னல் ஒருவர் இன்று (11) மேல்மாகாண வடக்கு குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவின் மல்லாவியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார்.

கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவில் பணியாற்றிய காலத்தில் T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 260 தோட்டாக்களை குற்றவாளியான கமாண்டோ சலிந்தவுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு அவர் விற்பனை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகளும் உள்ளதாக கூறப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmffbyfoe00ddo29njrhb1egp

  • கருத்துக்கள உறவுகள்

கமாண்டோ சாலிந்தா தனக்கு 1.5 கோடி ரூபாய் தருவதாக வாக்குறுதி அளித்து எல்எம்ஜி துப்பாக்கியை கோரியதாக அவர் கூறினார்.

பல்வேறு காரணங்களுக்காக இராணுவ சேவையிலிருந்து நீக்கப்பட்ட மற்றும் தலைமறைவான உறுப்பினர்களின் விவரங்களை இந்த இராணுவ அதிகாரி கமாண்டோ சாலிந்தாவுக்கு வழங்கியதாகவும், சமூக ஊடகங்கள் மூலம் அவர்களை ஒன்றிணைத்து ஒரு தனி குழுவை உருவாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த இராணுவ அதிகாரி இரண்டு கிளேமோர் குண்டுகளையும் குற்றவியல் கும்பல் உறுப்பினர்களுக்கு வழங்கியதாக பாதுகாப்புப் படையினரிடையே சில சந்தேகங்கள் உள்ளன.

இந்த இராணுவ அதிகாரி அதிக அளவில் குடிப்பழக்கம் கொண்டவர் என்றும், அடிக்கடி இரவு விடுதிகளுக்குச் செல்வது வழக்கம் என்றும் தெரியவந்துள்ளது.

மல்லாவியில் கைதான இராணுவ அதிகாரியிடமிருந்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ஏராளன் said:

யார் யாரைப் போட்தென்ற விபரங்கள் இல்லையோ?

அதையும் சொல்லுங்க.

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கெஹல்பத்தர பத்மேவின் தாயார் ரிட் மனு தாக்கல்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் தனது மகன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

மகனுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட தடுப்பு உத்தரவு சட்டவிரோதமானது என அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஆட்கொணர்வு மற்றும் ரிட் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் உத்தரவு ஒன்றைக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கின் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, கைதியை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வெளியே உள்ள எந்த இடத்திற்கும் மாற்றுவதைத் தடுக்க, இடைக்கால நிவாரணத்தைக் அவர் கோரியுள்ளார்.

அதன்படி, இந்த விவகாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கின் விடயங்கள் ஆராயப்பட்டு உறுதிப்படுத்தப்படும் வரை கைதி வேறு இடத்திற்கு மாற்றப்பட மாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களத்தைச் சேர்ந்த சட்டத்தரணி நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.

கைதியை திணைக்கள வளாகத்தில் தடுத்து வைத்திருக்கும் போது, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் அனைத்து விசாரணைகளும் அங்கேயே நடத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.

https://adaderanatamil.lk/news/cmgawabc200snqplpog9ybsvl

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.