Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-4-1.jpg?resize=600%2C300&ssl

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று(01) ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ்ப்பாணம் மண்டைதீவில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் ஷாமி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ச.ஶ்ரீபவானந்தராஜா வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தில் கிரிக்கெட்டின் மேம்பாட்டிற்கும், இளம் வீரர்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த மைதானம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த மைதானம் தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கான வழிவகையை ஏற்படுத்தி, இலங்கையின் விளையாட்டுத் துறையில் புதிய கட்டத்தை ஆரம்பிக்க உள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து, நாடு முழுவதும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும், அனைத்துப் பகுதிகளிலும் உள்ள திறமையான வீரர்களுக்குச் சர்வதேசத் தரத்திலான வசதிகளை அளிப்பதற்கும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, எதிர்வரும் 3 வருடங்களில் இங்கு சர்வதேச போட்டிகள் இடம்பெறும் என ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடடதக்கது.

a7a39e94-6056-43ae-8848-a7e14bdebfe2.jpg

https://athavannews.com/2025/1445596

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துவைத்தார் ஜனாதிபதி!; இவ்வாண்டு இறுதிக்குள் முதல் போட்டி நடைபெறுமென தெரிவிப்பு

01 Sep, 2025 | 06:21 PM

image

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படவுள்ள யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று திங்கட்கிழமை (1) பிற்பகல் ஆரம்பித்துவைத்தார்.

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பு என்பதையும் இதன்போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 3 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். 

அத்துடன், விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை ஜனாதிபதி பாராட்டினார்.

WhatsApp_Image_2025-09-01_at_5.47.05_PM.

WhatsApp_Image_2025-09-01_at_5.47.14_PM.

WhatsApp_Image_2025-09-01_at_5.47.39_PM.

https://www.virakesari.lk/article/223967

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

540336375_1256702473171163_5514208911244

யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானம்... 138 ஏக்கர் நிலப்பரப்பளவில் 40,000 இருக்கைகளுடன் கட்டப் படவுள்ளது. 3 ஆண்டுகளில் கட்டடப் பணியை நிறைவேற்றத் திட்டம்.

#################### ##################

முதலில் ஒரு தமிழனுக்கு தேசிய அணியில் விளையாட சந்தர்ப்பம் குடுங்க.

Dushy Fly

  • கருத்துக்கள உறவுகள்

விளையாட்டு அனைத்து இன மக்களையும் ஒன்றிணைக்கும்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

விளையாட்டு அனைத்து தடைகளையும், வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும், ஆயிரம் அடிகள் முன்னோக்கி எடுத்து வைக்கும் நோக்கத்துடன், தேசிய மக்கள் சக்தியுடன் வடக்கு மக்கள் ஒரு அடியை முன்னோக்கி எடுத்து வைத்தனர்.

அனைவரும் அரசாங்கம் மீது வைத்த அந்த நம்பிக்கையைப் பாதுகாத்து, இலங்கை தேசம் கட்டியெழுப்பப்படும் வரை அந்தக் கைகளை விட்டுவிடப் போவதில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மண்டைதீவில் நிர்மாணிக்கப்படும் யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் நிர்மாணப்பணிகளை இன்று (01) பிற்பகல் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

நீண்டகால திட்டத்தின் கீழ், மண்டைதீவை சர்வதேச அளவிலான வசதிகளுடன் கூடிய 'விளையாட்டு நகரமாக' மாற்றுவதற்கான வேலைத்திட்டமும் இங்கு முன்வைக்கப்பட்டது.

நீச்சல் தடாகம், ஏனைய விளையாட்டுகளுடன் கூடிய இந்த விளையாட்டு நகரம் முழுமையான வசதிகளுடன் கூடிய உள்ளக விளையாட்டு வளாகம், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களைக் கொண்டிருக்கும்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நான்கு கட்டங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளதுடன் முதற்கட்டமாக போட்டிகளை நடத்தும் வகையில் மைதானம் மற்றும் விளையாட்டு அரங்கு அமைக்கப்படவுள்ளது.

பிரதான பார்வையாளர்கள் அரங்கம் மற்றும் ஊடக அரங்கம் இரண்டாம் கட்டத்திலும், மீதமுள்ள பார்வையாளர்கள் அரங்குகள் மூன்றாம் கட்டத்திலும் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இறுதி கட்டத்தில் மின்விளக்கு கட்டமைப்பு நிறுவப்படவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் வேலணை பிரதேச சபையால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்படும் இந்த சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில், சுமார் 40,000 பார்வையாளர்களுக்கு போட்டிகளை பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம், சர்வதேச அளவிலான பகல்/இரவு போட்டிகளை நடத்த வசதிகளுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் ஐந்தாவது மைதானமாகவும், சர்வதேச போட்டிகளை நடத்தக்கூடிய ஏழாவது மைதானமாகவும் வரலாற்றில் இடம்பிடிக்கும்.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் கூறுகையில், கிரிக்கெட் என்பது இலங்கையின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு விளையாட்டு என்று தெரிவித்தார்.

விளையாட்டு அனைத்து தடைகளையும் வேறுபாடுகளையும் கடந்து மக்களை ஒன்றிணைக்கும் என்பதை வலியுறுத்திய ஜனாதிபதி, இன்று நிர்மாணப் பணிகள் தொடங்கும் யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வெறும் ஒரு மைதானம் மட்டுமல்ல, நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான ஒரு வாய்ப்பாகும் என்று சுட்டிக்காட்டினார்.

எதிர்காலத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தேசிய கிரிக்கெட் அணியையும், அனைத்து இன மக்களும் ஒரே அரங்கில் ஆரவாரம் செய்யும் ஒரு நாட்டையும் உருவாக்குவதே தமது கனவு என்று கூறிய ஜனாதிபதி, அதை நனவாக்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த ஆண்டு இறுதிக்குள், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதல் கிரிக்கெட் போட்டி நடைபெறும் என்றும், முதல் சர்வதேச போட்டி 03 ஆண்டுகளுக்குள் நடைபெறும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி, விளையாட்டில் ஒரு திருப்புமுனையைக் குறிக்கும் வகையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எடுத்த இந்த நடவடிக்கையை பாராட்டி அதற்கு நன்றியும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmf18gnkd0060o29nzt3gx8mr

  • கருத்துக்கள உறவுகள்

மண்டைதீவில் கிரிக்கட் மைதானவேலைகளுக்கு கிடங்கு கிண்டும்போது அவதானமாக கிண்டுங்கள்.

அங்கும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம்.

நீங்கள் கொன்றுபுதைக்காத இடமே இல்லை...


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, alvayan said:

மண்டைதீவில் கிரிக்கட் மைதானவேலைகளுக்கு கிடங்கு கிண்டும்போது அவதானமாக கிண்டுங்கள்.

அங்கும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம்.

நீங்கள் கொன்றுபுதைக்காத இடமே இல்லை...

ஒட்டுக் குழுத் தலைவன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு…. கடத்தி, கொன்று, புதைத்த இடங்கள் எல்லாம் விபரமாக தெரியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, alvayan said:

மண்டைதீவில் கிரிக்கட் மைதானவேலைகளுக்கு கிடங்கு கிண்டும்போது அவதானமாக கிண்டுங்கள்.

அங்கும் எலும்புக்கூடுகள் வெளிவரலாம்.

நீங்கள் கொன்றுபுதைக்காத இடமே இல்லை...

541486141_1200315172133453_2632891428876

541148662_1200315725466731_5530828777650

540578901_1200316142133356_1892471897513

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணொளி: 👉 https://www.facebook.com/watch?v=1099335105203292 👈

ஜனாதிபதி செம்மணி மனித புதைகுழியையும் பார்வையிட்டு சென்றிருக்கலாம்.😔
யாழிலிருந்து செம்மணி வீதியூடாக ஜனாதிபதி கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு சென்றபோது
காணொளி - யாழ்.தீபன்

540695893_1199902178841419_5747441435553

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 1/9/2025 at 15:05, தமிழ் சிறி said:

New-Project-4-1.jpg?resize=600%2C300&ssl

யாழ்ப்பாணம் மண்டைதீவில் ஜனாதிபதி தலைமையில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

ஆரோ ஒரு தம்பி மணியாத்தான் யோசிச்சிருக்கிறார்.

Gz3j-YVGXc-AAa-IO0.jpg

X தளத்தில் சுட்டது 😎

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரச பதவியில் அல்லது தனியார் பதவியில் உள்ள இலங்கை தமிழன் சிங்களத்தில் சரளமாக பேசுவான்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகும். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் சரளமாக சிங்களம் பேசக்கூடயவர்கள். இவர்கள் அனைவரும் சிங்கள பகுதியில் சிங்களத்தில் கதைப்பர். தமிழர் பகுதிகளில் தமிழில் கதைப்பர். ஆனால் சிங்களவர்களோ எங்கும் தமது மொழியையே முதன்மைப்படுத்துவர். இங்குதான் இனவாதம் காலூன்றி நிற்கின்றது.

அமைதி சூழலை விரும்பும் நாட்டு தலைவர்கள் அந்நாட்டு முக்கிய மொழிகளில் பேசும் தன்மையாகவாவது இருக்க வேண்டும்.அது இங்கு அறவே இல்லை.

நீ உன்னை தமிழர் பிரதேசங்களில் சிங்களவனாக முன்னிலைப்படுத்த நினைக்கும் போது தமிழருக்கு தனித்தாயகம் வேண்டுமென்பது சிறு குழந்தைக்கும் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்


சில மரணப் புதை குழிகளை மூட சர்வதேச கிரிக்கெட் ஸ்ரெடியமும் சர்வதேச விமான நிலையமும் அவசரமாக தேவை படுகிறது

21 hours ago, குமாரசாமி said:

அரச பதவியில் அல்லது தனியார் பதவியில் உள்ள இலங்கை தமிழன் சிங்களத்தில் சரளமாக பேசுவான்.இது தமிழ் அரசியல்வாதிகளுக்கும் தகும். தமிழ் அரசியல்வாதிகளில் பலர் சரளமாக சிங்களம் பேசக்கூடயவர்கள். இவர்கள் அனைவரும் சிங்கள பகுதியில் சிங்களத்தில் கதைப்பர். தமிழர் பகுதிகளில் தமிழில் கதைப்பர். ஆனால் சிங்களவர்களோ எங்கும் தமது மொழியையே முதன்மைப்படுத்துவர். இங்குதான் இனவாதம் காலூன்றி நிற்கின்றது.

அமைதி சூழலை விரும்பும் நாட்டு தலைவர்கள் அந்நாட்டு முக்கிய மொழிகளில் பேசும் தன்மையாகவாவது இருக்க வேண்டும்.அது இங்கு அறவே இல்லை.

நீ உன்னை தமிழர் பிரதேசங்களில் சிங்களவனாக முன்னிலைப்படுத்த நினைக்கும் போது தமிழருக்கு தனித்தாயகம் வேண்டுமென்பது சிறு குழந்தைக்கும் வரும்.

47 minutes ago, alvayan said:


சில மரணப் புதை குழிகளை மூட சர்வதேச கிரிக்கெட் ஸ்ரெடியமும் சர்வதேச விமான நிலையமும் அவசரமாக தேவை படுகிறது

அது தானே!

எல்லா மரண புதைகுழிகளையும் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்களையும் தண்டித்து, சர்வதேச விசாரணைகளை அனுமதித்து அவற்றின் தீர்ப்பும் வந்த பிறகுதானே தமிழ் மக்கள் வாழும் இடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்? அதுவரைக்கும் ஊர்ச் சனம் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காய்ந்து கருவாடாகத்தானே போகத்தான் வேண்டும்...!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அது தானே!

எல்லா மரண புதைகுழிகளையும் கண்டறிந்து, அதற்கு காரணமானவர்களையும் தண்டித்து, சர்வதேச விசாரணைகளை அனுமதித்து அவற்றின் தீர்ப்பும் வந்த பிறகுதானே தமிழ் மக்கள் வாழும் இடங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும்? அதுவரைக்கும் ஊர்ச் சனம் ஒரு முன்னேற்றமும் இல்லாமல் காய்ந்து கருவாடாகத்தானே போகத்தான் வேண்டும்...!

செம்மணியை கண்டும் கானாமல்போனதும் ...புதுகுழி இருக்குமிடத்தில் அத்திவாரம் போடலையும் சொன்னேன்...இது உங்களுக்கு குத்தினால் நான் என்ன செய்வது...அபிவிருத்தியை யாரும் வேண்டாமென்று சொல்லவில்லை...அநீதிக்கும் தீர்வை காணும்படி சொன்னேன் ....இது என் தனிப்பட்ட கருத்தே...அத்திபாரம் போட்டவுடன் அபிவிருத்தி அடைந்த்ததாக சந்தோசப் படவேண்டாம் என்றுதான் சொன்னேன்....

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணிக்கு வந்த என் பி பி அமைச்சரையும் எம்பிகளையும் அவமதித்து அடிக்காத குறையாக விரட்டிவிட்டு அவர்களின் சப்பாத்துகளை கைப்பறிவிட்டதாக முகநூல்களலும் ஏன் பராளுமன்றத்திலும் கூட வெட்டி வீரம் பேசியவர்கள் ஜனதிபதி பார்கக வரவில்லை என்று புலம்புகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, island said:

செம்மணிக்கு வந்த என் பி பி அமைச்சரையும் எம்பிகளையும் அவமதித்து அடிக்காத குறையாக விரட்டிவிட்டு அவர்களின் சப்பாத்துகளை கைப்பறிவிட்டதாக முகநூல்களலும் ஏன் பராளுமன்றத்திலும் கூட வெட்டி வீரம் பேசியவர்கள் ஜனதிபதி பார்கக வரவில்லை என்று புலம்புகிறார்கள்.

அட இப்பதான் விளங்குது ...அவைக்காகத்தான் இவர் அங்கு வரவில்லையென்று

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, alvayan said:

அட இப்பதான் விளங்குது ...அவைக்காகத்தான் இவர் அங்கு வரவில்லையென்று

அப்படியே அவைக்காக தான் அவர் வரவில்லை என்றாலுமே பரவாயில்லை. எனது முன்னுரிமை விருப்பம் தமிழ் பகுதிகளில் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்களும் தொழிற்குறை முன்னேற்றங்களும் பேச்சளவில் நின்றுவிடாது ஒரளவுக்காகவது நிறைவேற்றப்பட வேண்டும் முன்னேற்றங்கள் காணப்படல் வேண்டும் என்பதே. மற்றவையெல்லாம் இரண்டாம் பட்சமே. இதில் எவரது ஆட்சி என்பதில் கூட எனக்கு அக்கறை இல்லை.

துறைசார் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலை வாய்பபுக்காக ஏங்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் யாழ்பாணத்தில் உள்ளனர். இவ்வாறான விடயங்கள் இனியும் ஏதும் பின்னடைவுகளை காணக்கூடாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

540699724_1202571361907834_6146119621238

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

543539079_1230285379114318_5174107006026

543125637_1230283165781206_1431865328639

543119341_1230283095781213_2043463731358

544359313_1230283062447883_2837415293894

543547619_1230283205781202_1912403756011

543459253_1230283122447877_8395782667384

542761354_1230285372447652_8078669910026

Jaffna International Cricket Stadium, யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானம் இப்படித்தான் அமையப்போகிறது.

3D அமைப்பில் திட்டமிடப்பட்டிருக்கும் மைதானம் மற்றும் புற அமைப்பு.

Vaanam.lk

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.