Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

64acc981-dbb9-4b3a-a21f-9f8f89ab0cbb.jpg

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்துவைப்பு!

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று(01) திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களால் இன்று திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ,வடக்குமாகாண ஆளுனர் கௌரவ நாகலிங்கம் வேதநாயகன் ,பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல. நாடாளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சி.வி.கே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மேலும், குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் , பிரதியமைச்சர்கள் ,யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, யாழ் மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

New-Project-1-1.jpg?w=600&ssl=1

38a93d63-0467-41b5-aa5c-36471d178116.jpg

e486a539-9e8b-4b94-b057-1856a68824be.jpg

ec18e68f-9de1-4365-98f0-8dd43de20783.jpg

00df9220-667a-46ea-8d85-903b556da52a.jpg

New-Project-2-1.jpg?w=600&ssl=1

https://athavannews.com/2025/1445545

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

542937370_1227128762763313_6927873224683

மாற்றத்தின் முன்னுதாரணம்! வாசிக்க: “பொதுமக்களின் நிதியை பயன்படுத்தி” மற்றும் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படவில்லை!

மக்கள் பணத்தில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் சிறு சிறு அரசியல்வாதிகள் முதற்கொண்டு ஜனாதிபதிகள் வரையிலும் தமது பெயரை பொறித்தலும் இடங்களுக்கு தம் சுயப்பெயரை சூட்டுதலும் இருந்த கலாசாரத்தில் எத்தனை மாற்றம்… இன்று திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாண கடவுச்சீட்டு அலுவலகத்தில் இந்த மாற்றம் கண்கூடாக காணக்கூடியதாக உள்ளது.

Vaanam.lk

################# ################## ################

நல்லவைகளை பாராட்டுவோம்.

யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள பிராந்திய அலுவலகத்துக்கான திரைநீக்க பலகையில் தமிழ் மொழியை முதல் மொழியாகவும், எந்தவொரு எழுத்துப்பிழைகளும் இன்றி, சனாதிபதி பெயர் குறிப்பிடாது அமையப்பெற்றுள்ளமை நாட்டின் தலைவர் ஓர் கல்வியாளன் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டுகிறது.

Prashanthan Navaratnam

தமிழ் அரசியல்வாதிகளுக்கு வடக்கில் கிஞ்சித்தும் அரசியல் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகின்றது.

உளுத்துப் போன பழைய அரசியல் செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் மக்கள முற்றாக நிராகரிக்கப்பட போகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

தமிழ் அரசியல்வாதிகளுக்கு வடக்கில் கிஞ்சித்தும் அரசியல் செய்ய முடியாத சூழ்நிலை உருவாகி வளர்ந்து வருகின்றது.

உளுத்துப் போன பழைய அரசியல் செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் மக்கள முற்றாக நிராகரிக்கப்பட போகின்றனர்.

உண்மை. இப்படியே போனால் அடுத்த முதலமைச்சர் அந்தப் பக்கம் இருந்துதான்.

IMG-8989.jpg

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

உளுத்துப் போன பழைய அரசியல் செயற்பாடுகளை இனியும் தொடர்வார்களாயின் மக்கள முற்றாக நிராகரிக்கப்பட போகின்றனர்.

2 hours ago, Kavi arunasalam said:

உண்மை. இப்படியே போனால் அடுத்த முதலமைச்சர் அந்தப் பக்கம் இருந்துதான்

இன்னும் நாலு சுமந்திரர்களும் மூன்று ஸ்ரீதரர்களும் இரண்டு சாணக்கியர்களும் உருவாகினால் விரைவில் நடக்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமது தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் முரண்பட்ட வண்ணம் ஆவேச அரசியலை கையில் எடுத்து தமது பிழைப்பை பார்த்தார்களே ஒழிய வேறேதும் இன்றுவரை இல்லை.

மாறுபட்ட அரசியல் ஒன்று வருகின்றது போல் இருக்கின்றது.பார்க்கலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

540681422_1228198269323029_3706785134464

541488509_1228198312656358_5845386827144

542762798_1228198199323036_7470821045273

541476017_1228198319323024_1268401785825

542084883_1228198375989685_5506193000485

542718100_1228198265989696_7583874423704

540841168_1228202915989231_6614747972251

542688127_1228202889322567_6198178589333

541796537_1228198205989702_3320393915888

🔴 வடக்கில் தொடரும் AKD’க்கான அன்பு!
தனது ஜனாதிபதி பதவியின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பிக்கவும், அங்குரார்ப்பணம் செய்யவும் செப்டம்பர் 1, 2 திகதிகளில் இலங்கையின் வடக்கு பகுதிக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி அநுரவுக்கு மக்களின் நெருக்கமான அன்பும் மரியாதையும் கிடைத்திருப்பதை அங்குள்ள பல்வேறு புகைப்படக்கருவிகள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Vaanam.lk

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் கட்சிகள் ரூம் போட்டு யோசிக்கப் போகிறார்கள்.

இதே மாதிரி போனால் மாகாணசபை தேர்தலிலும் என்பிபி முதலமைச்சராகி விடுவார்களோ?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.