Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிகா அணியை தெரிவு செய்ததற்காக ரசோதரன் துண்டுச் சீட்டில் எனது பெயரை எழுதவே மறுத்துவிட்டார்.

பக்கத்திலைதானே ..எட்டி ஒரு குட்டு குட்டவேண்டியதுதானே..

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

தென்னாபிரிகா அணியை தெரிவு செய்ததற்காக ரசோதரன் துண்டுச் சீட்டில் எனது பெயரை எழுதவே மறுத்துவிட்டார்.

16 minutes ago, alvayan said:

பக்கத்திலைதானே ..எட்டி ஒரு குட்டு குட்டவேண்டியதுதானே..

🤣.................

நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2 hours ago, ஈழப்பிரியன் said:

கணனி கடவுச்சொல் மாற்றியாச்சோ?

இல்லை. யாழுக்கும் கடவுட்சொல் மறந்து போட்டேன் என்று முயற்சி செய்து பார்த்தேன். முன்பு மின்னஞ்சல் வரும். இப்ப அதுவுமில்லை

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, கந்தப்பு said:

இல்லை. யாழுக்கும் கடவுட்சொல் மறந்து போட்டேன் என்று முயற்சி செய்து பார்த்தேன். முன்பு மின்னஞ்சல் வரும். இப்ப அதுவுமில்லை

கந்தப்பு மேலுள்ள சுட்டியை அழுத்தி உங்கள் பிரச்சனையை எழுதுங்கள்.

நிச்சயம் சரி செய்வார்கள்.

அக்கா ஒரு வயது வந்தால் இதே பிரச்சனை தான்.இதையும் கடந்து போக நாங்கள் தான் பழக வேண்டும்.அதையோ யோசித்துக் கொண்டிருக்காமல் நல்லதே நடக்கும் என்று மனதை திடமாக வைத்திருங்கள்.

எனது மின்னஞ்சல்:-mkirupananthan@gmail.com

2 hours ago, ரசோதரன் said:

எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ.............

ஆனபடியால் தொடர்ந்தும் கழிவோயிலை எதிர்பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரசோதரன் said:

🤣.................

நான் ஒரு தனித் துண்டில் எழுதி வைப்பதாக நினைத்தேன். அதற்குப் பிறகு விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தென் ஆபிரிக்கா வெற்றி................. வெறுமனே நினைத்ததற்கே இப்படி என்றால், எழுதி வைத்திருந்தால் என்னவாகி இருக்குமோ...............😜.

விளையாட்டு திரிக‌ளில் நீங்க‌ள் ஒரு ஆளே போதும் ப‌ல‌ர‌ சிரிக்க‌ வைக்க ஹா ஹா.....................இந்தியா நேற்று தோக்க‌ நான் நினைச்சேன் , என்னையும் ஜ‌க்க‌ம்மாசையும் ர‌சோத‌ர‌ன் அண்ண‌ போட்டு பில‌க்க‌ போகிறார் என‌ ஆனால் நீங்க‌ள் அப்ப‌டி செய்ய‌ வில்லை ஹா ஹா 😁😁😁

அண்ணோய் உங்க‌ளுக்கு த‌ங்க‌ ம‌ன‌சு🥰😁..............................

  • கருத்துக்கள உறவுகள்

561133713_18503306701068868_864923196566

  • கருத்துக்கள உறவுகள்

560563630_1233588842145493_8154860698510

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

561133713_18503306701068868_864923196566

தென் ஆபிரிக்கா ம‌க‌ளிர் நேற்றையான் விளையாட்டை த‌னி ஒரு பெண்ணாய் நின்று அணிக்கு வெற்றிய‌ பெற்றுக் கொடுத்தா

Nadine சிற‌ந்த‌ All Rounder ப‌ந்தும் நேற்று ந‌ல்லா போட்டா இடையில் ஒரு ஓவ‌ருக்கு கூடுத‌ல் ர‌ன்ஸ்ச‌ விட்டு கொடுத்து விட்டா ம‌ற்ற‌ம் ப‌டி இவான்ட‌ ப‌ந்து வீச்சை குறை சொல்ல‌ முடியாது👍...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ஈழப்பிரியன் said:

அக்கா ஒரு வயது வந்தால் இதே பிரச்சனை தான்.இதையும் கடந்து போக நாங்கள் தான் பழக வேண்டும்.அதையோ யோசித்துக் கொண்டிருக்காமல் நல்லதே நடக்கும் என்று மனதை திடமாக வைத்திருங்கள்.

எனது மின்னஞ்சல்:-mkirupananthan@gmail.com

இது என்ன? ஒன்றும் விளங்கவில்லை 😳🤔

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

இது என்ன? ஒன்றும் விளங்கவில்லை 😳🤔

எனக்கும்தான் விளங்கவில்லை , நான் கேட்டேனா .......! 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, suvy said:

எனக்கும்தான் விளங்கவில்லை , நான் கேட்டேனா .......! 😂

ஈழப்பிரியன் அவர்கள் டாக்டர் மத்ருபூதம் போல ஏதாவது மன ஆலோசனை(Counseling) யாருக்கோ வழங்குகிறாரோ??

Edited by கந்தப்பு

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2025 at 20:21, புலவர் said:

வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!!!முதலமைச்சர் @Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

நன்றி, இது நிரந்தரமில்லை, பிரான்ஸ் பிரதமர் மாதிரி, எந்நேரமும் கதிரை காலியாகலாம்.

On 7/10/2025 at 16:52, ஈழப்பிரியன் said:

@Ahasthiyan க்கு மீண்டும் பாராட்டுக்கள்.

நன்றி, எத்தனை முறை விழுந்தாலும், எழும்பி தூசை தட்டி விட்டு ஓட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

எனக்கும்தான் விளங்கவில்லை , நான் கேட்டேனா .......! 😂

ஈழப்பிரியன் அவர்கள் டாக்டர் மத்ருபூதம் போல ஏதாவது மன ஆலோசனை(Counseling) யாருக்கோ வழங்குகிறாரோ?

நிலாமதி அக்கா சுகவீனமாக இருப்பதாக தனிமடலில் எழுதியிருந்தா.

அவவுக்கு பதில் எழுதிவிட்டு அப்படியே அழுத்திவிட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசம் 69 ஓட்டங்களைத் தாண்டிவார்களா என்ற பதை பதைப்பில்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

வங்கதேசம் 69 ஓட்டங்களைத் தாண்டிவார்களா என்ற பதை பதைப்பில்

நானும் அப்ப‌டி தான் நினைத்தேன் தான்டி விட்டின‌ம்

தென் ஆபிரிக்கா தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் எடுத்த‌ அணியா இருக்கும்.....................

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வீரப் பையன்26 said:

நானும் அப்ப‌டி தான் நினைத்தேன் தான்டி விட்டின‌ம்

தென் ஆபிரிக்கா தான் இந்த‌ உல‌க‌ கோப்பையில் குறைந்த‌ ர‌ன்ஸ் எடுத்த‌ அணியா இருக்கும்.....................

எனது தெரிவு பாகிஸ்தான். இன்னும் நம்பிக்கை இருக்கு 😁

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி அக்கா சுகவீனமாக இருப்பதாக தனிமடலில் எழுதியிருந்தா.

அவவுக்கு பதில் எழுதிவிட்டு அப்படியே அழுத்திவிட்டேன்.

அவர் சுகமாகி நலமாக வரட்டும் . ........!

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி அக்கா சுகவீனமாக இருப்பதாக தனிமடலில் எழுதியிருந்தா.

அவவுக்கு பதில் எழுதிவிட்டு அப்படியே அழுத்திவிட்டேன்.

விசாரித்ததாகச் சொல்லுங்கள். நலமோடு திரும்பி வரவேண்டும்.

உங்கள் உண்மைப் பெயரும் நமக்குத் தெரிந்துவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த மகளிர் கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வரிசை தலைகீழாக இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் இருக்கின்றதா............. முதலில் வருபவர்கள் தத்தித் தத்தி அவுட் ஆகின்றார்கள்............ பின்னால் வருபவர்கள் நிதானமாக நின்று அடித்து விளையாடுகின்றார்கள்..........

வங்கதேசம் 69 க்குள் அவுட் ஆகவில்லயே என்ற ஒரு ஆதங்கம் தான் இப்படிக் கண்டபடி யோசிக்க வைக்குது..................😜.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி அக்கா சுகவீனமாக இருப்பதாக தனிமடலில் எழுதியிருந்தா.

அவவுக்கு பதில் எழுதிவிட்டு அப்படியே அழுத்திவிட்டேன்.

சுகம் விசாரித்தாக சொல்லவும். விரைவில் நலமாக வந்து யாழில் கருத்துக்கள் எழுதவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ரசோதரன் said:

இந்த மகளிர் கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வரிசை தலைகீழாக இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் இருக்கின்றதா............. முதலில் வருபவர்கள் தத்தித் தத்தி அவுட் ஆகின்றார்கள்............ பின்னால் வருபவர்கள் நிதானமாக நின்று அடித்து விளையாடுகின்றார்கள்..........

வங்கதேசம் 69 க்குள் அவுட் ஆகவில்லயே என்ற ஒரு ஆதங்கம் தான் இப்படிக் கண்டபடி யோசிக்க வைக்குது..................😜.

அவுஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா வரிசையில் வங்காளதேசத்திலும் தற்போது ஆடிக்கொண்டு இருக்கும் Rabeya Khan , Fatima ஆகியோர் சிறப்பாக விளையாடிகொண்டு இருக்கினம்

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ரசோதரன் said:

இந்த மகளிர் கிரிக்கெட்டில் துடுப்பாட்ட வரிசை தலைகீழாக இருக்க வேண்டும் என்று ஒரு எழுதாத சட்டம் இருக்கின்றதா............. முதலில் வருபவர்கள் தத்தித் தத்தி அவுட் ஆகின்றார்கள்............ பின்னால் வருபவர்கள் நிதானமாக நின்று அடித்து விளையாடுகின்றார்கள்..........

வங்கதேசம் 69 க்குள் அவுட் ஆகவில்லயே என்ற ஒரு ஆதங்கம் தான் இப்படிக் கண்டபடி யோசிக்க வைக்குது..................😜.

என்னே ஒரு கரிசனை என்று பார்த்தேன்.

முன்னாடி வருபவர்கள், களநிலைமையைக் கணித்து, பின்னாடி வருபவர்களுக்குச் சொல்லுவினம் போல. அதைச் சொல்லுவதற்காகவே, சீக்கிரமாக ஆட்டமிழந்து வேறு செல்கினம் போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 12)

100 ஓட்டங்களினால் நியூசிலாந்து அணி, வங்காளதேசம் அணியை தோற்கடித்தது.

13 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் .

1) அகஸ்தியன் - 23 புள்ளிகள்

2) ஏராளன் - 21 புள்ளிகள்

3) கிருபன் - 21 புள்ளிகள்

4) ரசோதரன் - 21 புள்ளிகள்

5) வீரப்பையன் - 21 புள்ளிகள்

6) ஆல்வாயன் - 19 புள்ளிகள்

7) நியூபலன்ஸ் - 19 புள்ளிகள்

8) சுவி - 18 புள்ளிகள்

9) புலவர் - 17 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 17 புள்ளிகள்

11) வாதவூரான் - 17 புள்ளிகள்

12) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள்

13) வசி - 15 புள்ளிகள்

14) கறுப்பி - 15 புள்ளிகள்

15) வாத்தியார் - 13 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 12, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை இங்கிலாந்தும் இலங்கையும் மோதுகின்றன. இரு அணிகளும் 18 தடவைகள் மோதியிருக்கிறார்கள். ஆனால், இலங்கை ஒரே ஒரு போட்டியிலேயே வென்றுள்ளது.

ஆனால்

அந்த வெற்றி இலங்கை மகளிர் அணியின் போக்கையே மாற்றிவிட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்தில் இலங்கை பெற்ற அந்த வெற்றியின் மூலம், நாங்களும் இருக்கின்றோம் என்று உலகுக்குப் பறைசாற்றி, இவ்வளவு தூரம் வந்துள்ளார்கள். அந்தப் போட்டியில் விளையாடிய சாமரி அத்தப்பத்து, இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

நாளை நம் மகளிர் சரித்திரம் படைப்பார்களா.

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, செம்பாட்டான் said:

நாளை இங்கிலாந்தும் இலங்கையும் மோதுகின்றன. இரு அணிகளும் 18 தடவைகள் மோதியிருக்கிறார்கள். ஆனால், இலங்கை ஒரே ஒரு போட்டியிலேயே வென்றுள்ளது.

ஆனால்

அந்த வெற்றி இலங்கை மகளிர் அணியின் போக்கையே மாற்றிவிட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ணத்தில் இலங்கை பெற்ற அந்த வெற்றியின் மூலம், நாங்களும் இருக்கின்றோம் என்று உலகுக்குப் பறைசாற்றி, இவ்வளவு தூரம் வந்துள்ளார்கள். அந்தப் போட்டியில் விளையாடிய சாமரி அத்தப்பத்து, இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கின்றார்.

நாளை நம் மகளிர் சரித்திரம் படைப்பார்களா.

செம்பாட்டான் இன்று ஒரு தகவல் மாதிரி எப்போதும் ஒரு தகவல் கூறுகிறீர்கள்,

நீங்கள் கூறுவதனை பார்த்தால் இலங்கை ஆண்கள் அணியினை விட பெண்கள் அணி சிறப்பாக ஆடுகின்றனர், சில வேளைகளில் நினைப்பதுண்டு ஏன் இலங்கை அணி விளையாடுகிறது என, போட்டியின் சுவாரசியத்தினை கெடுத்துவிடுவதுடன் என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் மற்றவர்கள் எம்மை இலங்கையராகவே பார்க்கிறார்கள்.

எவ்வளவுதான் இலங்கையினை விட்டு தூரமாக சென்றாலும் இலங்கை எம்மை விடாது துரத்துகிறது🤣.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.