Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1) அகஸ்தியன் - 23 புள்ளிகள்

தொடர்ந்தும் முதலமைச்சர் நாற்காலியை தக்க வைத்துக் கொண்டிருக்கும்

@Ahasthiyan க்கு வாழ்த்துக்கள்.

  • Replies 977
  • Views 26.9k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • கந்தப்பு
    கந்தப்பு

    இதுவரை கலந்து கொண்ட போட்டியாளர்கள் . 1) ஏராளன் 2) ஆல்வயன் 3) வாத்தியார் 4) வசி 5) சுவி 6) கிருபன் 7) புலவர் 8) செம்பாட்டான் 9) வாதவூரான் 10) கறுப்பி 11)அகஸ்தியன் 12)நியூபேலன்ஸ் 13)ரசோதரன் 14)ஈ

  • கந்தப்பு
    கந்தப்பு

    வினா 14) 3 விக்கேற்றுக்களினால் அவுஸ்திரேலியா அணி, இந்தியாவை அணியை தோற்கடித்தது. 6 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் . 1) அகஸ்தியன் - 27 புள்ளிகள் 2) ஏராளன் - 25 புள்ளிகள் 3) ரசோதரன

  • கந்தப்பு
    கந்தப்பு

    தென்னாப்பிரிக்கா 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்து ஒரு வெற்றி 2 வெற்றி தோல்வியுடன் 4 புள்ளிகள் எடுத்திருக்கிறது. நியூசிலாந்துக்கு இன்னும் 2 போட்டிகள் இருக்கிறது. அவற்றை வென்ற

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, vasee said:

செம்பாட்டான் இன்று ஒரு தகவல் மாதிரி எப்போதும் ஒரு தகவல் கூறுகிறீர்கள்,

நீங்கள் கூறுவதனை பார்த்தால் இலங்கை ஆண்கள் அணியினை விட பெண்கள் அணி சிறப்பாக ஆடுகின்றனர், சில வேளைகளில் நினைப்பதுண்டு ஏன் இலங்கை அணி விளையாடுகிறது என, போட்டியின் சுவாரசியத்தினை கெடுத்துவிடுவதுடன் என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் மற்றவர்கள் எம்மை இலங்கையராகவே பார்க்கிறார்கள்.

எவ்வளவுதான் இலங்கையினை விட்டு தூரமாக சென்றாலும் இலங்கை எம்மை விடாது துரத்துகிறது🤣.

பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான்.

இலங்கை ஆண்கள் அணி

உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது.

இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது.

அது ஒரு பொற்காலம்.

Edited by செம்பாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயசூரியா அடிக்காத அடியா. சார்ஜாவில நடந்த இறுதிப்போட்டியில 189 அடிச்சார். ரசல் ஆர்னல்டும் அவரும் சேர்ந்து வெளுத்த வெளு இப்பவும் கண்ணுக்க நிக்குது. அதுவும் வெங்கடேஸ் பிரசாத் என்டா, சனத்துக்கு அல்வா சாப்பிடுறமாதிரி.

இந்தியா அடிச்சது வெறும் 54.

இதுதான் அந்தப் போட்டி

https://www.espncricinfo.com/series/coca-cola-champions-trophy-2000-01-61074/india-vs-sri-lanka-final-65900/full-scorecard

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, செம்பாட்டான் said:

பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான்.

அதுவும் கப்டன் அத்தபத்துவை பற்றி சொல்லி மாளேலாது...அப்படித்தானெ செம்பாட்டான் சார்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, செம்பாட்டான் said:

பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான்.

இலங்கை ஆண்கள் அணி

உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது.

இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது.

அது ஒரு பொற்காலம்.

ச‌ரியான‌ பார்வை.....................

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அணி பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளது, இலங்கை அணீன்று மோசமாக தோற்க போகிறது, வேலையில் இருப்பதால் பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆடுகள அறிக்கை பார்க்கவில்லை, ஆனாஅல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதான ஆடுகள நிலவரத்தினடிப்படையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் இது ஒரு கறுப்பு நிற ஆடுகளம், அதனால் இலங்கை அணி சுழற்பந்து வீச்சிற்கு முன்னுரிமை அளித்தாலும், முதலில் பந்து வீச்சினை தெரிவு செஉதிருப்பட்கு ஆச்சரியமாக உள்ளது.

ஆடுகளம் ஆரம்பத்தில் ஈரமாக இருகக்கும் அத்துடன் மேக மூட்டமான நிலையில் வேக பன்ட்கு வீச்சிற்கும் சாதகமாக இருக்கும், பந்து முதலில் துடுபாடுபவர்களுக்கு இலகுவாக வரும் பின்னர் ஆடுகளம் மெதுவாக தொடங்கும் போது இரண்டாவது இனிங்ஸ் கடினமாக இருக்கும், புதிய பந்தில் இலகுவாக ஓட்டங்களை எடுத்தாலும் பந்து மெட்குவாக தொடங்கும் போது ஓட்டம் எடுப்பட்கு கடினம், இந்த ஆடுகளம் 250 ஆடுகளம் போல இருக்கின்றது ஆனால் இங்கிலாந்து அதனை விட அதிகமாக எடுக்கும் போல உள்ளட்கு இலங்கை அணி இரண்டாவதாக ஆடுவதால் மிக கடினமான சூழ்நிலையினை எதிகொள்ள வேண்டி ஏற்படலாம், பந்தை நேர்கோட்டில் விளையாட வேண்டும் ரிவர்ஸ் சுவீப், சுவீப் போன்ற சுழல் பன்ட்கு வீச்சு அடிகளை இந்த ஆடுகளத்தில் பந்து மெட்குவான பின்னர் விளையாடுவது கடினமாக இருக்கும், அத்துட இரண்டாவட்கு இனிங்ஸிலும் நிலமை பந்தினை குறுக்காக ஆடுவது கடினமாகிவிடும் என க்ருதுகிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, vasee said:

என்னதான் வெளிநாட்டில் இருந்தாலும் மற்றவர்கள் எம்மை இலங்கையராகவே பார்க்கிறார்கள்.

எவ்வளவுதான் இலங்கையினை விட்டு தூரமாக சென்றாலும் இலங்கை எம்மை விடாது துரத்துகிறது🤣.

என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு, வேறு இனத்தவர்களுக்கு நான் இலங்கையில் பிறந்த தமிழராகவே அடையாளப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் என்பதினால் பிறந்த மண்ணில் தமிழர்கள் அடைந்த அவலங்களை ஓரளவு சொல்லி இருக்கிறேன். பலருக்கு நான், இலங்கையில் கிடைக்காத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவு என்பதும் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுது என்ன‌ அழ‌கு எத்த‌னை அழ‌கு

@ரசோதரன்

ர‌சோத‌ர‌ன் அண்ணா இந்த‌ காணொளிய‌ பார்த்தால் உட‌ன‌ ம‌ன‌சை ப‌றி கொடுக்க‌ போகிறார்🥰😁👍.........................

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

இலங்கை அணி பந்து வீச்சினை தெரிவு செய்துள்ளது, இலங்கை அணீன்று மோசமாக தோற்க போகிறது, வேலையில் இருப்பதால் பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

இந்த மைதான‌த்தில் முத‌ல் ம‌ட்டைய‌ தெரிவு செய்யும் அணி தான் ப‌ல‌ முறை வென்று இருக்கு

இல‌ங்கை ம‌க‌ளிர் க‌ப்ட‌ன் ஏன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்தா என்றால் தெரியாது............................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை ம‌க‌ளிர் உட‌ம்பில் ஏற்ப‌ட்ட‌ காய‌ம் கார‌ண‌மாக‌ வெளியில் , அவா இனி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ மாட்டா போல் இருக்கு😞...............

இல‌ங்கை ம‌க‌ளிர் உட‌ம்பில் ஏற்ப‌ட்ட‌ காய‌ம் கார‌ண‌மாக‌ வெளியில் , அவா இனி இந்த‌ உல‌க‌ கோப்பையில் விளையாட‌ மாட்டா போல் இருக்கு😞.................

  • கருத்துக்கள உறவுகள்

வ‌சி அண்ணா

செம்பாட்ட‌ன் அண்ண‌

வாதாவூர‌ன் ச‌கோ

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.............

இல‌ங்கை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்

11 உற‌வுக‌ள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கின‌ம்.....................................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, வீரப் பையன்26 said:

இப்ப‌வே க‌ண்ண‌ க‌ட்டுது என்ன‌ அழ‌கு எத்த‌னை அழ‌கு

@ரசோதரன்

ர‌சோத‌ர‌ன் அண்ணா இந்த‌ காணொளிய‌ பார்த்தால் உட‌ன‌ ம‌ன‌சை ப‌றி கொடுக்க‌ போகிறார்🥰😁👍.........................

🤣...............

வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரசோதரன் said:

🤣...............

வளவுக்குள்ள வாழைக்குலை ஒன்றை பழுத்திட்டுதே என்று இப்ப கிட்டடியில் வெட்டினோம்........... இந்தப் பிள்ளைகளை பார்க்க அந்த பழுத்த வாழைக்குலை தான் ஞாபகத்தில் வருகின்றது............ வர வர என்னுடைய போக்கே சரியில்ல............ காய்களை பார்க்க வேண்டிய இடத்திலும் பழங்கள் தான் கண்ணுக்குத் தெரியுது.............. ஒரு துறவியாக, ஞானியாக மாறிக் கொண்டிருக்கின்றேன் போல..............😜.

நன்றாக இரசிக்கிறீர்கள். 😆

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌டு தோல்வி😋....................

இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இங்லாந்தை இல‌ங்கை ம‌களிர் அணி இரண்டு முறை தோக்க‌டிச்ச‌வை

ஆனால் சொந்த‌ மண்ணில் இல‌ங்கை ம‌க‌ளிரீன் விளையாட்டு ச‌ரி இல்லை

நான‌ய‌த்தில் வென்ற‌ கையோட‌ ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்க‌னும்.................................

4 hours ago, vasee said:

ஆடுகள அறிக்கை பார்க்கவில்லை, ஆனாஅல் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதான ஆடுகள நிலவரத்தினடிப்படையில் எனது தனிப்பட்ட அபிப்பிராயம் இது ஒரு கறுப்பு நிற ஆடுகளம், அதனால் இலங்கை அணி சுழற்பந்து வீச்சிற்கு முன்னுரிமை அளித்தாலும், முதலில் பந்து வீச்சினை தெரிவு செஉதிருப்பட்கு ஆச்சரியமாக உள்ளது.

ஆடுகளம் ஆரம்பத்தில் ஈரமாக இருகக்கும் அத்துடன் மேக மூட்டமான நிலையில் வேக பன்ட்கு வீச்சிற்கும் சாதகமாக இருக்கும், பந்து முதலில் துடுபாடுபவர்களுக்கு இலகுவாக வரும் பின்னர் ஆடுகளம் மெதுவாக தொடங்கும் போது இரண்டாவது இனிங்ஸ் கடினமாக இருக்கும், புதிய பந்தில் இலகுவாக ஓட்டங்களை எடுத்தாலும் பந்து மெட்குவாக தொடங்கும் போது ஓட்டம் எடுப்பட்கு கடினம், இந்த ஆடுகளம் 250 ஆடுகளம் போல இருக்கின்றது ஆனால் இங்கிலாந்து அதனை விட அதிகமாக எடுக்கும் போல உள்ளட்கு இலங்கை அணி இரண்டாவதாக ஆடுவதால் மிக கடினமான சூழ்நிலையினை எதிகொள்ள வேண்டி ஏற்படலாம், பந்தை நேர்கோட்டில் விளையாட வேண்டும் ரிவர்ஸ் சுவீப், சுவீப் போன்ற சுழல் பன்ட்கு வீச்சு அடிகளை இந்த ஆடுகளத்தில் பந்து மெட்குவான பின்னர் விளையாடுவது கடினமாக இருக்கும், அத்துட இரண்டாவட்கு இனிங்ஸிலும் நிலமை பந்தினை குறுக்காக ஆடுவது கடினமாகிவிடும் என க்ருதுகிறேன்.

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியே ந‌ட‌ந்து விட்ட‌து

நான‌ய‌த்தில் வென்றால் உந்த‌ மைதான‌த்தில் ம‌ட்டைய‌ தான் தெரிவு செய்து இருக்க‌னும்

பந்து வீச்சை தெரிவு செய்த‌து த‌வ‌று என‌ நான் நினைக்கிறேன்....................

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை இனி விளையாடும் இர‌ண்டு போட்டிக‌ளில் இல‌ங்கையை தெரிவு செய்து இருக்கிறேன்...............இர‌ண்டு போட்டிக‌ளிலும் முட்டை கிடைக்க‌ அதிக‌ வாய்ப்பு...................

இல‌ங்கை இனி விளையாடும் இர‌ண்டு போட்டிக‌ளில் இல‌ங்கையை தெரிவு செய்து இருக்கிறேன்...............இர‌ண்டு போட்டிக‌ளிலும் முட்டை கிடைக்க‌ அதிக‌ வாய்ப்பு.......................

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஒன்றிரண்டு போட்டிகள் வெல்லும் என்றுதான் நானும் நினைத்து, இன்று வெல்லக்கூடும் என்று நினைத்தேன். முக்கியமாக அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாடினார்கள்.

அதோட, சாமரி ஒரு 100 அடித்தால்தான் ஏதாவது வாய்ப்பு.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, செம்பாட்டான் said:

இலங்கை ஒன்றிரண்டு போட்டிகள் வெல்லும் என்றுதான் நானும் நினைத்து, இன்று வெல்லக்கூடும் என்று நினைத்தேன். முக்கியமாக அவர்கள் சொந்த மைதானத்தில் விளையாடினார்கள்.

அதோட, சாமரி ஒரு 100 அடித்தால்தான் ஏதாவது வாய்ப்பு.

இதுக்கு முத‌ல் ஆண்க‌ளின் ப‌ல‌ போட்டிக‌ள் இந்த‌ மைதான‌த்தில் ந‌ட‌ந்து

பெரிய‌ அணிக‌ள் ஆன‌ இந்தியா ம‌ற்றும் அவுஸ்ரேலியாவை போன‌ ஆண்டும் இந்த‌ ஆண்டும் இல‌ங்கை அணி தொட‌ரை வென்ற‌து..............

நான‌ய‌த்தில் வென்று இல‌ங்கை ம‌க‌ளிர் ஏன் ப‌ந்து வீச்சை தெரிவு செய்தா தெரிய‌ல‌...................

வ‌ய‌தான‌ ம‌க‌ளிர‌ விட‌ இள‌ம் ம‌க‌ளிருக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம் , 19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ ம‌க‌ளிர் ந‌ல்லா விளையாடுகின‌ம்.......................

  • கருத்துக்கள உறவுகள்

29 minutes ago, வீரப் பையன்26 said:

வ‌ய‌தான‌ ம‌க‌ளிர‌ விட‌ இள‌ம் ம‌க‌ளிருக்கு வாய்ப்பு கொடுக்க‌லாம்.................

இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ரசோதரன் said:

இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.

நான் சும்மா சொல்ல‌ வில்லை அண்ணா

19வ‌ய‌துக்கு உள் ப‌ட்ட‌ இல‌ங்கை ம‌க‌ளிர் ந‌ல்லா விளையாடுகின‌ம் , அன்மையில் அவுஸ்ரேலியா ம‌க‌ளிருக்கும் இல‌ங்கை ம‌க‌ளிருக்கும் போட்டி ந‌ட‌ந்த‌து அனைத்து போட்டிக‌ளிலும் இல‌ங்கை ம‌க‌ளிர் அவுஸ்ரேலியா ம‌க‌ளிர‌ வென்ற‌வை......................40வ‌ய‌து ம‌க‌ளிர்க‌ள் இள‌ம் ம‌க‌ளிருக்கு வ‌ழி விட‌னும் அண்ணா......................நான் ஒரு விளையாட்டு பையித்திய‌ம் ஒன்றையும் விட்டு வைக்க‌ மாட்டேன் எல்லாத்தையும் மேல் ஓட்ட‌மாய் பார்ப்பேன் லொள்😁👍...........................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினா 13)

88 ஓட்டங்களினால் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை தோற்கடித்தது.

11 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்து இருக்கிறார்கள் .

1) அகஸ்தியன் - 25 புள்ளிகள்

2) ஏராளன் - 23 புள்ளிகள்

3) கிருபன் - 23 புள்ளிகள்

4) ரசோதரன் - 23 புள்ளிகள்

5) வீரப்பையன் - 23 புள்ளிகள்

6) ஆல்வாயன் - 21 புள்ளிகள்

7) நியூபலன்ஸ் - 21 புள்ளிகள்

8) சுவி - 20 புள்ளிகள்

9) புலவர் - 19 புள்ளிகள்

10) செம்பாட்டன் - 17 புள்ளிகள்

11) வாதவூரான் - 17 புள்ளிகள்

12) கறுப்பி - 17 புள்ளிகள்

13) ஈழப்பிரியன் - 17 புள்ளிகள்

14) வாத்தியார் - 15 புள்ளிகள்

15) வசி - 15 புள்ளிகள்

இதுவரை வினாக்கள் 1 - 13, 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கந்தப்பு said:

@suvy த‌லைவ‌ர் 8வ‌து இட‌த்தில் நிப்ப‌தை பார்க்க‌ ம‌கிழ்ச்சியா இருக்கு

சில‌ பிழைக‌ள் தெரியாம‌ விட்டாலும் ந‌ல்ல‌ புள்ளியோட‌ நிக்கிறீங்க‌ள்👍.....................

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, வீரப் பையன்26 said:

@suvy த‌லைவ‌ர் 8வ‌து இட‌த்தில் நிப்ப‌தை பார்க்க‌ ம‌கிழ்ச்சியா இருக்கு

சில‌ பிழைக‌ள் தெரியாம‌ விட்டாலும் ந‌ல்ல‌ புள்ளியோட‌ நிக்கிறீங்க‌ள்👍.....................

நான் எப்போதும் நடுநிலை தவறாதவன் என்று புரிந்து கொண்டால் மகிழ்ச்சி .........! 😃

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, செம்பாட்டான் said:

பெண்கள் அணிகளைப் பற்றி பெரிதாக இங்கு ஒருவருக்கும் தெரிவதில்லை தானே. அதனால் நமக்குத் தெரிந்ததை, சிலவற்றை அங்கு இங்கு பொறுக்கி, சொல்லுவோம் என்று ஒரு முனைப்பு தான்.

இலங்கை ஆண்கள் அணி

உண்மைதான், கடந்த ஒரு பத்து வருடமாக இலங்கை அணி அவ்வளவு வலிதானதாக இல்லை. அத்தோடு இந்திய அணி இன்னும் வலுப் பெற்றுக் கொண்டே இருக்கின்றது. 90களிலும் 2000 ஆண்டுகளிலும், இலங்கை அணி ஒரு நெருப்பு. ஒரு நாள் போட்டிகளில் வெளுத்து வாங்குவார்கள். பல ஒரு நாள் தொடர்கள், முக்கோணத் தொடர்கள், மற்றும் பலவாறான தொடர்கள் எல்லாவற்றிலும் இலங்கை அணி ஜொலித்திருக்கிறது. முக்கியமாக பல இறுதி போட்டிகளில் இலங்கை அணி இந்தியாவை ஓட விட்டிருக்கிறது. சரியாக ஞாபகமில்லை, நான் நினைக்கிறேன், ஒரு 15-16 இறுதிப் போட்டிகளில், இலங்கை அணி இந்தியாவை அடித்துத் துவைத்திருக்கிறது.

இப்போ எல்லாம் மாறி நடக்கின்றது. இந்திய அணி எப்படி இவ்வளவு வலிவானதாக இருக்கிறதோ, அதேபோல் இலங்கை அணியும் அப்போ இருந்தது.

அது ஒரு பொற்காலம்.

அப்போதிருந்த இலங்கை 83 இல் உலக கோப்பையினை வென்ற இந்தியணி போன்றது என நினைக்கிறேன், ஆனால் இப்போதுள்ள இந்தியணி மிக பலமான அணி ஆனால் இதே இந்தியணியினை 2000 இலிருந்த அவுஸ் அணியுடன் ஒப்பிட முடியாது, 2000 இலிருந்த அவுஸ் அணி போல இந்தியணி உருவெடுக்குமா என தெரியவில்லை.

தற்போதய இலங்கை அணி திறமையான அணி, ஆனால் ஏனோ மோசமாக விளையாடுகிறார்கள் (விளையாட்டு ஒழுக்கமின்மை?), இந்த அணி பழைய அணிக்கு எந்த விதத்திலும் திறமையில் குறைவில்லை, ஒரு போட்டியில் மகேல 77 (முதலாவது போட்டி?) ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்து, வீரர்கள் தங்கும் அறைக்கு செல்லும் போது அவரை ரணத்துங்க அவரது மோசமான அடி தேர்வினால் ஆட்டமிழந்தமைக்காக அவரை திட்டினதாகவும் அவர் உள்ளே போகாமல் படிக்கட்டிலே இருந்ததாகவும் கூறியிருந்தார், அதே போல் ஜெயசூரியாவும் தனது சம்பவம் ஒன்றைனை கூறியிருந்தார்.

7 hours ago, கந்தப்பு said:

என்னுடன் வேலை செய்யும் வெள்ளைக்காரர்களுக்கு, வேறு இனத்தவர்களுக்கு நான் இலங்கையில் பிறந்த தமிழராகவே அடையாளப்படுத்தி இருக்கிறேன். தமிழர்கள் என்பதினால் பிறந்த மண்ணில் தமிழர்கள் அடைந்த அவலங்களை ஓரளவு சொல்லி இருக்கிறேன். பலருக்கு நான், இலங்கையில் கிடைக்காத சுதந்திரத்தை எனக்கு தந்த அவுஸ்திரேலியாவுக்கு ஆதரவு என்பதும் தெரியும்.

இலங்கையிலிருக்கும் போது வெளிநாடு வருவதில்லை என நினைத்திருந்தேன், ஆனால் வெளிநாடு வந்த பின்பு நினைத்தேன் எனது வாழ்வின் பெரும்பகுதியினை இலங்கையில் வீணாக்கிவிட்டேன் என, ஆனாலும் இலங்கை ஒரு நல்ல நாடுதான், முட்டாள் அரசியல்வாதிகளினால் இந்த நிலைக்கு வந்துவிட்டது.

3 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை சொந்த‌ ம‌ண்ணில் ப‌டு தோல்வி😋....................

இங்லாந்தில் ந‌ட‌ந்த‌ ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இங்லாந்தை இல‌ங்கை ம‌களிர் அணி இரண்டு முறை தோக்க‌டிச்ச‌வை

ஆனால் சொந்த‌ மண்ணில் இல‌ங்கை ம‌க‌ளிரீன் விளையாட்டு ச‌ரி இல்லை

நான‌ய‌த்தில் வென்ற‌ கையோட‌ ம‌ட்டைய‌ தெரிவு செய்து இருக்க‌னும்.................................

நீங்க‌ள் சொன்ன‌ மாதிரியே ந‌ட‌ந்து விட்ட‌து

நான‌ய‌த்தில் வென்றால் உந்த‌ மைதான‌த்தில் ம‌ட்டைய‌ தான் தெரிவு செய்து இருக்க‌னும்

பந்து வீச்சை தெரிவு செய்த‌து த‌வ‌று என‌ நான் நினைக்கிறேன்....................

இலங்கை அணி மைதான ஈரலிப்பு வரும் என நினைத்து தவறான முடிவு எடுத்திருப்பார்களோ? நீங்கள் என்ன நினைகிறீர்கள்?

மழை வந்ததால் மைதான ஈரலிப்பு வராது என தெரிந்திருந்தாலும் மழையின் பின்னர் ஏற்படும் ஒரு சூழல் மாற்றத்தினை தவறாக புரிந்து கொள்ளவாய்ப்பு உள்ளது என கருதுகிறேன்.

காற்றின் வெப்பத்திற்கேற்ப அது கொள்ளும் ஈரப்பதன் கொள்ளவில் மாற்றம் ஏற்படும், அதிக வெப்பமான காற்று அதிகமான ஈரப்பதனை கொண்டிருக்கும், இரவு நேரத்தில் காற்று குளிராகும் போது காற்று கொண்டிருந்த ஈரப்பதனில் ஒரு பகுதியினை கைவிடுகிறது (Dew), குளிர்பான போத்தில், டின் இவற்றுக்கு வெளியே நீர்த்துளிகள் தோன்றுவது போல, ஆனால் மழை காற்று ஒடுங்கும் போது (பாரம்) மழை உருவாகிறது, அதனால் மழையின் பின்னர் அந்த மழை கொண்டிருந்த வெப்பம் சுற்றாடலில் மறை வெப்பமாக வெளிவிடப்படும், அது ஒரு வெக்கையான உணர்வினை தரும், ஆனால் காற்றில் அதிகரித்த ஈரப்பதன் மேலதிகமாக ஈரப்பதனை கொள்ள முடியாமல் ஏற்படும் புழுக்கம் போன்ற உணர்வு இரு வேறுபட்ட விடயம் (மழை மற்றும் மைதான ஈரப்பதன்).

இது ஒரு தவறான உள்ளுணர்வு முடிவாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

5 hours ago, வீரப் பையன்26 said:

வ‌சி அண்ணா

செம்பாட்ட‌ன் அண்ண‌

வாதாவூர‌ன் ச‌கோ

ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா.............

இல‌ங்கை வெல்லும் என‌ தெரிவு செய்து இருக்கிறீங்க‌ள்

11 உற‌வுக‌ள் இங்லாந்தை தெரிவு செய்து இருக்கின‌ம்.....................................

எல்லோரும் வைத்தியராகவும் பொறியலாளராகவேணும் என நினைத்தால் மற்ற வேலைகளை யார் செய்வது?🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரசோதரன் said:

இலங்கை அணியில் யார் விளையாடினாலும், அது தோற்கத்தான் போகின்றது.............. ஆனால் 'இளசா போடுங்கோ, இளசா போடுங்கோ ...........................' என்று பையன் சார் கேட்கிறதிலயும் ஒரு நியாயம் இருக்குது....................😜.

அவர் எல்லோரையும் அண்ணா அய்யா என்றழைப்பதிலேயே தெரிகிறது அவர் எவ்வளவு இளசு என்று.

மகளிர் அணிகள் எல்லாம் இன்னும் நீண்டதூரம் போகவேண்டியுள்ளது. கடந்த பத்து வருடத்தில் அவர்களின் வளர்ச்சி அளப்பெரியது. அடுத்த பத்து வருடத்தில் இன்னும் அமர்க்களமாய் இருக்கும். பணம் ஒரு தடையாக இல்லாவிட்டால் சரி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.