Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-207.jpg?resize=750%2C375&ssl

மற்றுமோர் ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை கண்டுபிடிப்பு!

ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இயங்கும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலையை களுத்துறை குற்றப்பிரிவு கண்டுபிடித்துள்ளது.

இந்த சோதனையின் போது, ஐஸ் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் போதைப்பொருட்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஒரு வாகனம் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மொத்தம் 52 லிட்டர் இரசாயனங்கள் அடங்கிய 14 கேன்களையும், போதைப்பொருள் உற்பத்தி செயல்முறையின் ஒரு பகுதியாக நம்பப்படும் பல்வேறு உபகரணங்களையும் அதிகாரிகள் இதன்போது கண்டுபிடித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வெல்லவாயவைச் சேர்ந்த 20 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர் சுரங்காவின் சகா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும்.

முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1447215

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இந்தோனேசியாவில் அண்மையில் பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட அண்மைய ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும்.

முன்னதாக, நுவரெலியா, மித்தேனியா, நெட்டோல்பிட்டிய மற்றும் கந்தான ஆகிய இடங்களில் இதுபோன்ற ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொழிற்சாலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அன்று பல பேய்கள் அரசு செய்தன, சாத்திரங்கள் பிணம் தின்றன.🫣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அன்று பல பேய்கள் அரசு செய்தன, சாத்திரங்கள் பிணம் தின்றன.🫣

உண்மைதான் https://www.zocalopublicsquare.org/the-world-war-ii-wonder-drug-that-never-left-japan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

550364627_25852268314374087_126489810363

550831652_25852268511040734_362194269935

551017673_25852268704374048_710371605303

🚨தங்காலை வீதியில் உள்ள மற்றொரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு லொறியில் 200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள், ஒரு T-56 துப்பாக்கி மற்றும் ஐந்து நவீன ரிவோல்வர்கள் ஆகியவை பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தர்பூசணிகளை கொண்டு செல்வது என்ற போர்வையில் சிறப்பு பெட்டியில் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகள் கொண்டு செல்லப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Nirujan Selvanayagam 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

Published By: Digital Desk 1

22 Sep, 2025 | 11:01 AM

image

மித்தெனியவில் சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான காணியில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானது என சந்தேகிக்கப்படும் 9மில்லிமீற்றர் கைத்துப்பாக்கி, இரண்டு டி-56 மேகசின்கள், 115 சுற்றுகள் டி-56 வெடிமருந்துகள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மித்தெனியவில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கண்டுபிடிக்கப்பட்ள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சம்பத் மனம்பேரி கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பத் மனம்பேரியை ஏழு நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு செப்டெம்பர் 17ஆம் திகதியன்று வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

பாதாள உலகக் குழுத் தலைவர் கெஹல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரசாயனங்களை இரண்டு கொள்கலன்களில் மறைத்து வைத்ததாக சம்பத் மனம்பேரி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மித்தெனியவில் அண்மையில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சம்பத் மனம்பேரியிடம் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/225721

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

552515400_25851552504445668_736332253729

🚨 தங்காலையில் உள்ள வீடு ஒன்றில் ஐஸ் போதைபொருள்? இரு சடலங்கள் மீட்பு.
தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அங்கு சோதனை செய்த போது, வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பொதிகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nirujan Selvanayagam

  • கருத்துக்கள உறவுகள்

தங்காலையில் லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள், துப்பாக்கிகள் தொடர்பில் வெளியான தகவல்!

22 Sep, 2025 | 04:59 PM

image

அம்பாந்தோட்டையில் தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றுக்கு அருகில் இருந்த மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த நிறை சுமார் 624 கிலோ கிராம் என பொலிஸார் தெரிவித்தனர்.

245 கிலோ கிராம் ஐஸ் மற்றும் 380 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.

தங்காலை - சீனிமோதர பகுதியில் புனரமைக்கப்பட்டு வரும் பழைய வீடொன்றில் இருந்து இன்று திங்கட்கிழமை (22) இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டன.

இதன்போது வீட்டிற்கு அருகில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மூன்று லொறிகளில் இருந்து ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் அடங்கிய 10 பொதிகள் மற்றும் 6 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

5 பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும் ஒரு ரி - 56 ரக துப்பாக்கியே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் இருந்த மற்றுமொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இந்த லொறியின் சாரதி என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/225781

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த ஐஸ் போதைப்பொருள் முதலில் இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனிய போர் வீரர்களுக்காக உற்பத்திசெய்யப்பட்டது என கேள்விப்பட்டுள்ளேன். இது பசி,சோர்வை கட்டுப்படுத்தி செயற்திறன் மற்றும் போர் விகாரத்தை ஊக்குவிக்கும் என சொல்கிறார்கள்.

இந்த இரசாயன போதைப்பொருள் தொழிற்சாலை ஏன் எப்படி இலங்கைக்குள் நுழைந்தது என்ற கேள்வி வரும்போது..... ஸ்ரீலங்கா அரசின் போர் குற்றவாளிகளுக்கு இது அவசியம் தேவைப்பட்டிருக்கலாம். அது இப்போது பொதுமக்கள் பாவனைக்கு வந்து விட்டது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-298.jpg?resize=750%2C375&ssl

தங்காலையில் மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி 9,888 மில்லியன் ரூபா என தகவல்!

தங்காலை பகுதியில் பொலிஸாரால் மீட்கப்பட்ட போதைப்பொருள் தொகையின் மொத்த பெறுமதி சுமார் 9,888 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மொத்த போதைப்பொருட்களின் அளவு 705.91 கிலோ கிராம் என்றும், அதில் 284.94 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் 420.976 கிலோ கிராம் ஐஸ் ஆகியவை அடங்கும் என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

மேலும், போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறிகளின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், தங்காலை பகுதியில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள், வெளிநாட்டில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியுடையது என்பது தற்போது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ள ‘உனகுருவே சாந்த’ என்ற குற்றவாளியால், சம்பந்தப்பட்ட போதைப்பொருள் கப்பல் இந்நாட்டிற்கு அனுப்பப்பட்டது என்பது பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தங்காலை, சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மூன்று பேர் மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (22) சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ், ஹெராயின் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.

நாட்டில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகையாகவும் இது கருதப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருட்களுக்கு மேலதிகமாக, ஒரு T-56 துப்பாக்கி மற்றும் 5 பிஸ்டல் வகை துப்பாக்கிகளையும் பொலிஸார் மீட்டனர்.

சீனிமோதர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இரண்டு சடலங்கள் காணப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து பொலிஸார் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு சிறிய லொறியில் 10 கிலோ கிராம் ஐஸ் என்ற போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த வீட்டில் இருந்த மற்றொரு நபரும் திடீர் சுகவீனம் காரணமாக தங்காலை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், தங்கலையின் கடுருபோகுனா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியை சோதனை செய்தபோது, அதற்குள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பல துப்பாக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறியை பொலிஸார் மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர்.

மேலும், இதன்போது 400 கிலோ கிராம் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருட்கள், சம்பந்தப்பட்ட வீட்டிலிருந்து விநியோகிக்க தயாரிக்கப்பட்ட போதைப்பொருட்கள் என்று பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இறந்த மூன்று நபர்களும் போதைப்பொருள் விநியோக வலையமைப்புடன் தொடர்புடையவர்கள் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவர்களின் இறப்புக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

ஆனால், பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முந்தைய இரவு அவர்கள் வேறொரு குழுவுடன் மது அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று (23) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் தொடர்புடைய போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட லொறியின் சாரதி மற்றும் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோசடியில் தொடர்புடைய மேலும் பல சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

மேலும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கித்சிறி ஜெயலத்தின் அறிவுறுத்தலின் பேரில் இது தொடர்பாக மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

550431150_1222597213225472_3559497183813

552699586_1222597093225484_3191395132580

550519070_1222597143225479_1528270330038

550243300_1222597123225481_3897895749395

550658490_1222597126558814_6452148427062

550086528_1222597166558810_6241716095210

https://athavannews.com/2025/1448147

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

550537312_1218305660334404_3228750751109

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


552434243_24945067711755571_796897107626

551980076_24945068931755449_478320793159

550999718_24945069308422078_522296985555

அண்மையில் கைதுசெய்யப்பட்ட போதைப் பொருள் கடத்தல் குற்றவாளி சம்பத் மனம்பேரி என்பவர் தமிழ்த்தேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் படுகொலையுடன்( 2006 ம் ஆண்டு ) தொடர்புடையவர் என்று தென்னிலங்கை இணையத்தளமாகிய Debasa.lk தெரிவித்துள்ளது.

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி செயற்பட்டபோது மாமனிதர் ரவிராஜ் MP கொழும்பில் அவரது வாகனத்தில் வைத்து நடுவீதியில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுவரை கொலையாளிகளுக்கான தண்டனை கிடைக்கப்பெறவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

ராஜபக்ச குடும்பத்தின் கட்சியான பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகர் சம்பத் மனம்பேரி தடுப்பு விசாரணையில் வழங்கிய தகவலுக்கமைய ராஜபக்சவின் சொந்த ஊரான அம்பாந்தோட்டை தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருள் 9,888 மில்லியன் ரூபாய் பெறுமதியானவை என பொலிஸ் ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

3 லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 705.91 கிலோகிராம் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டது. அதில் 284.94 கிலோ ஹெரோயின், 420.976 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த 3 லொறிகளினதும் பதிவு செய்யப்பட்ட உரிமையாளர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Kunalan Karunagaran

  • கருத்துக்கள உறவுகள்

தங்காலை போதைப்பொருள் விவகாரத்தில் கைதான லொறி உரிமையாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்!

23 Sep, 2025 | 03:28 PM

image

தங்காலை, சீனிமோதரவில் நேற்று (22) ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்ட லொறியின் உரிமையாளரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில் சந்தேக நபரான லொரியின் உரிமையாளரை விசாரிக்க கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு அனுமதி அளித்து கல்கிசை நீதவான் பசன் அமரசேன இந்த உத்தரவை பிறப்பித்தார்.

சந்தேக நபர் இரத்மலானையைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

தங்காலையில் சீனிமோதரயில் உள்ள வீடொன்றிற்கு அருகில், இரண்டு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்ட இடத்தில், குறித்த லொறியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லொறியின் உரிமையாளர் என கூறப்படும் சந்தேக நபரை 11 கிராம் மற்றும் 140 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர். 

பின்னர், அவர் கல்கிஸ்ஸை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று (23) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே  நீதிமன்றம் அவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது.

தங்காலை போதைப்பொருள் விவகாரத்தில் கைதான லொறி உரிமையாளர் பொலிஸ் தடுப்புக் காவலில்! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி சண்டைகளில் ஆமி விழ விழ தொடர்ந்து வந்த மர்மம் இன்னும் தொடருகிறது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-319.jpg?resize=750%2C375&ssl

தங்காலை போதைப்பொருள் விவகாரம்; காணி உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு!

தங்காலையில் அண்மையில் ஒரு தொகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய விசேட பொலிஸ் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

தங்காலை பகுதியில் ஏற்பட்ட சந்தேகத்துக்கிடமான மரண சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, 705 கிலோ கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த போதைப்பொருள்கள் காணப்பட்ட காணிகளின் உரிமையாளரை கண்டறிய ஒரு விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.

இதேவ‍ேளை, தங்காலை சீனிமோதர பகுதியில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் மர்மமான முறையில் இறந்த மூன்று பேரின் உடல்களின் பிரேத பரிசோதனையில், அவர்கள் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக தெரியவந்துள்ளது.

அவர்களின் உடல்கள் தொடர்பான பிரேதப் பரிசோதனையில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

பிரேதப் பரிசோதனைகளை தங்காலை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ருவன் நாணயக்கார நடத்தினார்.

இறந்தவர் ஹெரோயின் மற்றும் பீர் கலவையை அதிகமாக உட்கொண்டதால் இறந்ததாக இதன்போது தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2025/1448304

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

25-68d36313dadaf.jpg?resize=600%2C375&ss

தங்காலையில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் – வெளியான அதிர்ச்சி தகவல்!

ஹம்பாந்தோட்டை தங்காலை, சீனிமோதர பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கடந்த 21ஆம் திகதியன்று இரண்டு கப்பல்கள் மூலம் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

குடவெல்ல, மாவெல்ல ஆகிய கடற்கரைகளில் தரையிறக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த போதைப்பொருள் அங்கிருந்து, கடற்கரைக்கு அருகிலுள்ள வீடொன்றிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, சிறிய ரக பாரவூர்தியில் ஏற்றப்பட்டு, சீனிமோதர மற்றும் கொடெல்லவெல பகுதிகளுக்கு இரண்டு சந்தர்ப்பங்களில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

மாவெல்ல கடற்கரையிலிருந்து சீனிமோதர வீட்டிற்குப் போதைப்பொருட்களைக் கொண்டு சென்ற குழுவினர், அந்த வீட்டில் மது அருந்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் கண்டெடுக்கப்பட்ட உடலங்களுக்கு அருகில் ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும் பொலிசார் குறிப்பிட்டிருந்தனர்.

முன்னதாக, தங்காலை – சீனிமோதர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மூன்று சிறிய ரக பாரவூர்த்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் மற்றும் ஹெரோயின் உள்ளிட்ட 705 கிலோகிராம் போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, குறித்த போதைப்பொருள் கையிருப்பின் சந்தை மதிப்பு, சுமார் 988 கோடி ரூபா என்றும் பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

இந்த கண்டுபிடிப்பு தரைப்பகுதியில் ஒரே நாளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பாரியளவிலான போதைப்பொருள் தொகையாக பொலிசார் வரையறுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1448426

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

MediaFile-2.jpeg?resize=750%2C375&ssl=1

பத்மேவுக்கு தகவல் வழங்க பொலிஸ் குழுவில் உளவாளிகள்!

கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த உள்ளிட்ட குற்றவாளிகளை கைது செய்ய சூழ்ச்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அதற்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹன் ஒலுகல இந்தோனேசியாவுக்கு வந்துள்ளதாக கெஹல்பத்தர பத்மேவுக்கு பொலிஸாரின் ஊடாகவே தகவல் வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குழுவிரை தடுத்து வைத்து தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போது இந்த விடயம் அறியக்கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கெஹல்பத்தர பத்மேவைக் கைது செய்வதற்காக சர்வதேச குற்றவியல் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையும் இலங்கை பொலிஸாரின் ஊடாக பத்மேவுக்கு ரகசியமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெஹல்பத்தர பத்மே , கமாண்டோ சலிந்த மற்றும் இந்தோனேசியாவில் உள்ள பிற குற்றவாளிகளைக் கைது செய்ய ஒரு பெரிய சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் உதவி பொலிஸ் அத்தியட்சகரான ஒலுகல கடந்த சில நாட்களாகவே தென்படவில்லை என தருண் என்ற குற்றவாளிக்கு பொலிஸாரின் ஊடாக ரகசியமாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவரது தொலைபேசி இலக்கத்தின் ஐ.பி எண்ணை வைத்து தருண் ஆராய்ந்ததாகவும், அதன் மூலம் ஒலுகல இந்தோனேசியாவில் இருப்பது அறிந்து அந்த தகவல் பத்மேவுக்கு வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அதன்படி, இது குறித்து தகவல் கிடைத்த கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்த மற்றும் குடு நிலங்க ஆகியோர் அதுவரை அவர்கள் தங்கியிருந்த விடுதியில் இருந்து தப்பிச் சென்றதாகவும் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கெஹல்பத்தர பத்மேவை கைது செய்ய சர்வதேச பொலிஸார் மூலம் பிறப்பிக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கையின் படம் கெஹல்பத்தர பத்மேவின் கைப்பேசியில் இருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பொலிஸ்துறையில் உள்ள சில ஊழல் அதிகாரிகள் கெஹல்பத்தர பத்மேவின் பிரிவினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருவதாகவும், இந்த வழியில் அவர்களுக்கு தகவல்களை வழங்கி வருவதாகவும் பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன.

https://athavannews.com/2025/1448753

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-21.jpg?resize=750%2C375&ssl=

தங்காலை போதைப்பொருள் மீட்பு; மற்றொரு நபர் கைது!

தங்காலை சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் தொகையுடன் தொடர்புடைய மற்றொரு நபர் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘பெலியட்டா சனா’ என்று அழைக்கப்படும் சந்தேக நபர் நேற்று (01) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அண்மையில், சீனிமோதரவில் மூன்று லொறிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 700 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போன்ற போதைப்பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர். 

இந்த போதைப்பொருள் சரக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ‘உனகுருவ சாந்த’ என்ற கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக, இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரின் நெருங்கிய சகா என்று கூறப்படும் ‘பெலியட்டா சனா’ கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், போதைப்பொருள் பதுக்கி வைக்க கடத்தல்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படும் மற்றொரு வீட்டை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தங்காலை – மாரகொல்லிய பகுதியில் அமைந்துள்ளஇந்த வீடு போதைப்பொருட்களை மறைத்து வைக்க பயன்படுத்தப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

https://athavannews.com/2025/1449301

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.